ஆசிரியை, மாணவிகள் படங்களை வலை தளங்களில் பதிவிடக் கூடாது : பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
Saturday, September 7, 2019
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டு விழா, விளையாட்டு விழா உள்ளிட்ட பல்ேவறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவ்விழாக்களில் பங்கு பெறும் பெண் ஆசிரியைகள், மாணவிகள் சார்ந்த புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
தற்போதைய காலகட்டத்தில் இதுபோன்ற படங்களை பதிவிடுவதால் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பெண் ஆசிரியைகள், மாணவிகளின் புகைப்படத்தை பாதுகாப்பு கருதி சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் ஆசிரியைகள், மாணவிகளின் அனுமதி இன்றி பதிவிடுவது சட்டப்படி குற்றமாகும். இதனை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை தக்க கட்டுப்பாடுகளுடன் சுய கோப்புகளாக சேமிக்கலாம். பதிவிறக்கம் செய்ய இயலாத பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிளாக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
.......................................