>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

நீட்' தேர்வின் முக்கியத்துவம் : மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்'


'நீட்' போராட்டத்திற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, கவுன்சிலிங் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 'ஜாக்டோ - ஜியோ' போராட்டம், 'நீட்' தேர்வுக்கு எதிராக சில அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் என, அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
இது தவிர, அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னையும், கூடுதல் நெருக்கடியை உருவாக்கி உள்ளது. 'நீட்' போராட்டத்தில் இருந்து, மாணவர்களை விலக்கி, அவர்களுக்கு முறையாக வகுப்பு களை நடத்த, தலைமை ஆசிரியர்கள் வழியே, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.'நீட்' போராட்டத்தில் பெரும்பாலும், அரசு பள்ளி மாணவர்களே பங்கேற்று உள்ளனர். தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்கா மல், படிப்பில் கவனம் செலுத்துகின்றனர். இவர்கள் தான், மருத்துவப் படிப்புகளில், பல ஆண்டுகளாக, பெரும்பாலான இடங்களை பெறுகின்றனர். இதை சுட்டிக்காட்டி, அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு கவுன்சிலிங் வழங்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.அரசு பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து, நீட், ஜே.இ.இ., போன்ற தேர்வுகள் எழுதுவதால், நாடு முழுவதும், மருத்துவ இடத்தை பெற முடியும். அதற்கு, மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.  
பள்ளிகள் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும். மாறாக, போராட்டத்திற்கு சென்றால், பிளஸ் 2 தேர்ச்சி பெறுவது கூட கடினமாகி, எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என, ஆலோசனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள், நீட், ஜே.இ.இ., பயிற்சியில் தீவிர ஆர்வம் காட்டுவது போல், அரசு பள்ளி மாணவர்களும்ஆர்வம் காட்ட வேண்டும் என, உளவியல் ஆலோசனை அளிக்கப்படஉள்ளது.

மெட்ரிக், மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு : செப்.15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்


'மெட்ரிக், மழலையர் பள்ளிகளில் பி.எட்., படித்து பணியாற்றும் ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் பங்கேற்க, புதிய கல்வி திட்டத்தில் செப்.15ம் தேதிக்குள் பதிவு செய்வது அவசியம்' என, கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு பி.எட். படித்தவர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாற்றுகின்றனர். ஆனால் தனியார் மெட்ரிக் மற்றும் மழலையர் பள்ளிகளில் பட்ட படிப்புடன், பி.எட். படித்து, தகுதி தேர்வின்றி பணியாற்றுகின்றனர்.இவர்கள் மழலையர் பள்ளி மற்றும் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்த அரசு அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனாலும் அவர்கள் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர்..
புதிய பாடத்திட்டம்: இந்தியா முழுவதும் பல லட்சம் பேர் பள்ளிகளில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களை முறைப்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை, ஆசிரிய பணியாற்றுவோரின் கற்பித்தல் திறனை மேம்படுத்த துவக்க கல்வியில் டிப்ளமோவை (டிப்ளமோ இன் எலிமென்ட்ரி எஜூகேஷன்) தபால்வழியில் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதற்கான பாடத் திட்டங்களை 'நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூல்' (என்.ஐ.ஓ.எஸ்.) வழங்குகிறது. இத்திட்டத்தில் செப்.15க்குள் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவோர் சேர வேண்டும். இவர்களுக்கு அக்டோபர் முதல் பயிற்சி அளிக்கப்படும். அதன்பின் தகுதித் தேர்வு எழுத வேண்டும்.ஆன்-லைன் விண்ணப்பம்: இக்கல்வியில் சேர விரும்புவோர் dled.nios.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் சேர்ந்து படிப்பவர்கள் மட்டுமே மெட்ரிக், மழலையர் பள்ளிகளில் அடுத்த ஆறு மாதங்களுக்கு வேலை செய்யலாம். இக் கல்வி திட்டத்தில்சேராமல், பணி செய்வது கண்டறியப்பட்டால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி அதிகாரிகள் மெட்ரிக் பள்ளிகளை எச்சரித்துள்ளனர்.

திங்கள், 11 செப்டம்பர், 2017

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 85 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் - சந்திக்க தயார் என ஆசிரியர்கள் பேட்டி

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜாக்டோ ஜியோ சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் 85 ஆயிரம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அனைத்து துறைகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
7-வது ஊதிய குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 7ஆம்தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 60 சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இவர்கள் தங்களது போராட்டத்தை அக்டோபர் 15ஆம்தேதி வரை ஒத்திவைத்தனர்.
இதனால் ஜாக்டோ ஜியோ சங்கம் 2 ஆக உடைந்தது. இதில் 17 சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டம்- மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களது போராட்டத்துக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்திருந்தாலும் தடையை மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னையில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் இதனை, ஜக்டோ-ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர். கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்து மாவட்டங்களிலும் நாளை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
செப்டம்பர் 12ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என குறிப்பிட்ட ஜக்டோ-ஜியோ நிர்வாகிகள், தமிழக அரசிடம் இருந்து சாதகமான அறிவிப்பு வரவில்லை எனில், வரும் 13ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தலைமை செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனாலும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் நேற்று எடுத்த கணக்கெடுப்பு படி 43 ஆயிரத்து 450 ஆசிரியர்கள், 41 ஆயிரத்து 550 அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில் போராட்டத்தில் ஈடுபட்டால் நோட்டீஸ் அனுப்புவதும் சம்பளத்தை நிறுத்துவதும் அரசு எடுக்கும் வழக்கமான நடைமுறைதான். நாங்கள் அதை எதிர் கொண்டு எங்கள் கோரிக்கை நிறைவேற போராடுகிறோம்.
எங்களை பொறுத்தவரை எந்தவித நடவடிக்கை மேற்கொண்டாலும் அதை எதிர்கொள்ள தயார். எங்கள் உரிமைகளை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தி இந்து: தலையங்கம்:: புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா??

Cps திட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டியது (CPS வரலாறு) - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு
அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது. அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது.
ஆனால், தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப் பிடித்து, அதை பங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை முக்கியமான கோரிக்கையாக வைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) போராடியது. ஆனால், மாநில அமைச்சர் “மத்திய அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசால் திரும்பப் பெற முடியாது. அது சாத்தியமில்லாத விஷயம்’’ என்று விளக்கியுள்ளார். அவரின் விளக்கம் சரியானதல்ல.
அமைச்சர்களின் உறுதிமொழி
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பிப்ரவரி 10-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். அவர்களின் முக்கியமான கோரிக்கையும் இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான்.
அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். முதலமைச்சரின் கவனத்துக்கு கோரிக்கைகளைக் கொண்டுசெல்வதாகவும், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப் பதற்காகக் கூடுகிற சட்டசபை கூட்டத்தொடரின்போது பிப்ரவரி 16-ம் தேதி இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் உறுதியளித்தனர். ஆகவே, வேலைநிறுத்தத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். அமைச்சர்களின் உறுதிமொழியைச் சில சங்கங்கள் ஏற்றுக்கொண்டன.
ஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதிய ஓய்வூதியத் திட்டம் திரும்பப் பெறப்படும் என்பதை எழுத்துபூர்வமான உடன்பாடாக ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டது. அப்படிச் செய்துகொண்டால், வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்தது. அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் வேலைநிறுத்தம் நீடிக்கிறது.
எப்படி வந்தது?
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம்தான் இதை முதலில் அறிவித்தது. தனது ஆட்சியின் கடைசி ஐந்து மாதங்களுக்கு முன்பாக ஒரு நிர்வாக உத்தரவைப் போட்டது. அதன் மூலம்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் 1.1.2004 முதல் அமலாகியது.
இதற்கான சட்டம் செப்டம்பர் 2013-ல்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இந்தச் சட்டத்தை நிறை வேற்றியது. பாஜக இதை ஆதரித்ததில் ஆச்சரியமில்லை. 2014 பிப்ரவரி 1-ல்தான் இந்தச் சட்டம் அதிகாரபூர்வமாக அரசின் கெஜட்டில் அறிவிக்கப்பட்டது.
தமிழகம்தான் எல்லாவற்றிலும் முன்னோடி ஆயிற்றே? இந்தப் புதிய ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமலாக்கப்பட்டதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே
தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.4.2003 முதல் அப்போதைய அதிமுக அரசு அமல்படுத்திவிட்டது. 6.8.2003-ல் அரசாணையும் வெளியிட்டது. எனவே, தமிழக அரசு நினைத்தால் அதனைத் திரும்பப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.
ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டம் - 2013 (Pension Fund Regulatory and Development Authority Act - 2013) என்பது மத்திய அரசின் சட்டத்துக்குப் பெயர். இந்தச் சட்டத்தின்3(4) வது பிரிவில், ‘எந்த மாநில அரசும் அல்லது எந்த யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒரு அறிவிக்கை மூலம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அதன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் என்று பெயர். எனவே, மாநிலஅரசு விரும்பினால்தான், அந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம். விரும்பாவிட்டால், தன் ஊழியர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்திலேயே வைத்துக்கொள்வதைச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.
எனவே, இந்தச் சட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாகப் பொருந்தும். ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கோ வேறு தனியார், பொதுத்துறை அமைப்புகளுக்கோ நேரடியாகப் பொருந்தாது, கட்டுப்படுத்தாது என்பதுதான் உண்மையான நிலை.
தமிழகத்தால் முடியும்
பல மாநிலங்களில் நவம்பர் 2015 வரை 28 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் திரிணமூல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டமே நீடிக்கிறது. திரிபுராவும் அப்படியே. இந்த மாநிலங்களில் பழைய திட்டம் தொடர்வதை மத்திய சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை
 எனவே, தமிழக அரசு உண்மையாகவே விரும்பினால், ஒரு மறு அறிவிக்கையை வெளியிட்டு, அனைத்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்பக் கொண்டுவர முடியும். மொத்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் என்ணிக்கையில் 60% பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டனர். மீதியுள்ளோர் பழைய ஓய்வூதிய திட்டத்திலேயே நீடிக்கின்றனர்.
புதிய ஓய்வூதிய சட்டத்தில் இணைந்த ஊழியர்களின் பணம் ரூ.4,661 கோடி. அரசின் பங்களிப்பு ரூ.3,791 கோடி. மொத்தம் ரூ.8452 கோடி. இந்த தொகையை மாநிலத்தை ஆண்ட திமுக, அதிமுக அரசுகள் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்துக்கு பங்குச் சந்தையிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய கடந்த 12 ஆண்டுகளாக அனுப்பிவைக்கவில்லை. இந்தக் காலத்தில் 3,404 பேர் ஓய்வுபெற்றுள்ளனர். 1,890 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு எந்தப் பணமும் தரப்படவில்லை.
விருப்பம் இல்லையா?
மத்திய அரசுக்கு அனுப்பிவைக்காத அந்தத் தொகை மாநில அரசின் கையில் இருக்கிறது. அரசு விரும்பினால், தன் பங்களிப்புத் தொகையான ரூ.3,797 கோடியை எடுத்துக்கொள்ளலாம். மீதியை அரசு ஊழியர்களின் சேமநல நிதியில் சேர்க்கலாம்.
புதிய ஓய்வூதியத்துக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, இடதுசாரிகளுடன் இணைந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். திமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று 2011 சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று ஜெயலலிதா சென்னையில் அறிவித்தார். ஆனால், இப்போது அதிமுக அமைச்சர் ‘‘இது மத்திய சட்டம். அதனைத் திரும்பப் பெற மாநில அரசால் முடியாது’’ என்று கூறுவது இந்த விஷயத்தில் அரசுக்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது.
சமீபத்தில் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. 3 லட்சம் கோடி ரூபாய்களுக்கும் மேலான முதலீட்டாளர்களின் பணம் பறிபோனது. இத்தகைய நிலையில்லாத, சூதாட்டம் போன்ற பங்குச் சந்தை விளையாட்டுகளில் ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்பைப் போட்டு அரசு விளையாட வேண்டாம் என்றுதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதை நிறைவேற்றுவதே சிறந்த தீர்வு

பாரம்பரிய விளையாட்டை மறந்ததால் பரிதவிக்கும் மாணவர்கள்

மாணவர்கள் மத்தியில் செல்போன் பயன்பாட்டை குறைக்க அவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவதில் ஊக்கப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாணவ, மாணவிகள் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர்களில் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி உள்ளதுடன், தற்போது ப்ளூவேல் விளையாட்டால் தற்கொலை செய்யும் அளவிற்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதை தவிர்க்க பள்ளிகளில் மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும். கோ கோ, கபடி, சிலம்பம், களரி, வாலிபால், புட்பால் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும்.
இதன் விளைவாக அவர்களின் மூளை செயல்பாட்டு திறன் அதிகரிக்கும். அதோடு கல்வியில் சிறந்து விளங்குவதோடு எதிர்காலத்தில் நல்ல அறிவார்ந்த சமூகம் உருவாகும் நிலை ஏற்படும். இந்த பணியை பள்ளி பருவத்தில் ஊக்குவிக்கவில்லை என்றால் எந்த நிலையிலும் செய்ய முடியாது. இதனால் தொடக்க கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:வேலூர் மாவட்டத்தில் தற்போது மாணவர்கள் விளையாட தயாராக உள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் ஊக்குவிப்பதில்லை. விளையாட்டு நேரங்களில் பாடம் நடத்துகின்றனர். மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் மாணவர்கள் இருக்கும் ஒரு சில விளையாட்டு மைதானங்களில் விளையாடுவதை தவிர்த்து செல்போன், கம்ப்யூட்டர்களில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். 
இதனால் அவர்கள் மனரீதியாக மிகுந்த பாதிப்பு அடைகின்றனர். இதற்கு பெற்றோர்களும் ஒரு காரணமாக அமைகின்றனர். அவர்கள் போதிய அளவு சலுகை கொடுக்காமல் மாலை நேரத்தில் விளையாட கட்டாயப்படுத்த வேண்டும். பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டிற்கு கண்டிப்பாக திரும்புவார்கள் என்பதில் சந்தேகமில்லை. நேற்று முன்தினம் ஆம்பூரில் ப்ளூவேல் கேம் விளையாடிய பிளஸ் 2 மாணவி கண்டுபிடிக்கப்பட்டு ஆசிரியர்கள் கவுன்சில் வழங்கினர். இதேபோல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் ப்ளூவேல் கேம் விளையாடி வருகிறார்களா என்று ஆசிரியர்கள் கண்டுபிடித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீட்' வினா - விடை புத்தகம் வெளியீடு தள்ளி வைப்பு

நீட்' தேர்வு, வினா - விடை புத்தகம் வெளியிடுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரியலுார் மாணவி அனிதா தற்கொலையை அடுத்து, 'நீட்' தேர்வுக்கு எதிராக, பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. பல இடங்களில் மாணவர்களும் போராடி வருவதால், தலைமை ஆசிரியர்களும், போலீசாரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், 'நீட்' தேர்வுக்கான, 59 ஆயிரம் மாதிரி வினா, விடைகள் அடங்கிய, தொகுப்பு புத்தகம் வெளியிடுவது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், அதை வெளியிட்டால், தமிழக அரசு, 'நீட்' தேர்வை ஏற்றதாக, மாணவர்களின் போராட்டம் திசை மாறும் என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதனால், போராட்டம் முடிவுக்கு வரும் வரை, 'நீட்' புத்தக வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

ஆசிரியர்கள், 'ஸ்டிரைக்' அறிவிப்பு: பாடங்கள் பாக்கி - இன்று தேர்வு துவங்குவதால் மாணவர் அச்சம்...

ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால், பாடங்கள் நடத்தி முடிக்கப்படவில்லை. இந் நிலையில், காலாண்டு தேர்வு இன்று துவங்குவதால், மாணவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர், ௭ முதல், காலவரையற்ற போராட்டம் நடந்து வருகிறது.
ஆசிரியர்கள், 'ஸ்டிரைக்', அறிவிப்பு, பாடங்கள் ,பாக்கி - இன்று தேர்வு, துவங்குவதால் ,மாணவர் ,அச்சம்
வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, சமீபத்தில், தடை விதித்தது. இதை, சட்டப்படி எதிர்கொள்வதாக அறிவித்துள்ள, ஜாக்டோ - ஜியோ, இன்று முதல் போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், இன்று முதல் காலாண்டு தேர்வு துவங்குகிறது. இதற்கான பாடங்களை, தனியார் பள்ளிகள் ஏற்கனவே முடித்து விட்டன. ஆனால், அரசு பள்ளிகளில் இன்னும், 25 சதவீத பாடங்கள் பாக்கி உள்ளன. பட்டதாரி மற்றும் 
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆகஸ்ட் முதலே, போராட்ட ஏற்பாடுகளிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டு உள்ளதால், பாடங்கள் முழுமையாக நடத்தப்படவில்லை.
பாடங்களே நடத்தி முடிக்காத நிலையில், இன்று காலாண்டு தேர்வு துவங்க உள்ளது. இதற்கான வினாத்தாள்களை, அரசு தேர்வுத்துறை தயாரித்து, மாவட்ட வாரியாக அனுப்பி உள்ளது. பிளஸ்1க்கு, புதிய விதிகளின்படி, பாடத்துக்கு, 100 மதிப்பெண் வீதம், வினாத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவானால், பெற்றோர்கள் வருத்தப்படுவர் என்ற, அச்சத்தில் மாணவர்கள் உள்ளனர்.
பிளஸ் 1 வகுப்புக்கு புதிய வினாத்தாள்
மத்திய அரசு நடத்தும், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்களால் ஜொலிக்க முடியவில்லை. அதற்கு, பள்ளிகளில், பிளஸ் ௨வுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்ததும், பிளஸ் ௧ பாடத்தை நடத்தாமல் விட்டதுமே காரணம் என, தெரியவந்தது. அதனால், பிளஸ் 1 வகுப்புக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரனின் தலைமையிலான குழுவினர், இதற்காக புதிய விதிகளை உருவாக்கினர். இந்தவிதிகளின்படி, பிளஸ் 1 வகுப்புக்கு, பாட வாரியாக, தலா, 100 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், இன்று முதன்முதலாக, காலாண்டு தேர்வு துவங்குகிறது.தேர்வு நேரமானது, மூன்று மணி என்பதிலிருந்து, 2:30 மணி நேரமாக குறைக்க பட்டு உள்ளது. தமிழ், ஆங்கிலம்ஆகிய மொழி
பாடங்களுக்கு, தலா 2 தாள்களுக்கு தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு தாளுக்கும், தலா, 90 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் தயாரிக்க படுகிறது. 10 மதிப்பெண் அக மதிப்பீடாக வழங்கப்படும்.
தேர்வு கண்காணிப்பில் சத்துணவு பணியாளர்கள்?
பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, பாடம் எடுக்கும் முதுநிலை ஆசிரியர்கள், ௧௦ம் வகுப்புக்கு பாடம் நடத்தும், பட்டதாரி ஆசிரியர்களில் பெரும்பாலானோர், போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஆசிரியர்கள் பற்றா குறையால், சத்துணவு அமைப் பாளர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்கள், தேர்வு கண் காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படலாம் என, தெரிகிறது.

பி.எட்., மாணவர்கள் மூலம் அரசு பள்ளிகளில் பாடம் நடத்த அரசு அறிவுறுத்தல்...

ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் துவக்கி உள்ளனர். செப்., 7 முதல் போராட்டம் துவங்கி உள்ளது.
உயர் நீதிமன்ற தடை, அரசின் அறிவுரையை மீறி, போராட்டம் தொடரும் என, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ளது.இதனால், பள்ளிகளில் வகுப்புகள் நடத்துவது பாதிக்கப்படாமல், மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற பின்தங்கிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில், சத்துணவு வழங்கப்படுவது பாதிக்கக்கூடாது என, தலைமை ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.காலாண்டு தேர்வில், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், தொடக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கவும், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் கல்வியியல் கல்லுாரி மாணவர்களை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 
பி.எட்., படிக்கும் மாணவ மாணவியர், பள்ளி களுக்கு சென்று, பாடம் எடுக்க, தலைமை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யவும், வழிகாட்டுதல் வழங்கப்பட்டு உள்ளது.

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

காலாண்டு தேர்வு மாற்றம்.

காலாண்டு தேர்வு அட்டவணையில், திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, காலாண்டு தேர்வு நடக்கிறது. 23ம் தேதி, தேர்வு முடிகிறது.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, ௧,௩௨௫ இடங்களில், ஆசிரியர் சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க உள்ளதால், தேர்வு வாரியம், 23ம் தேதி கலந்தாய்வு
நடக்கிறது. இதனால், அந்த நாளில் நடக்கும் தேர்வு, 22ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் சுற்றறிக்கையாக வெளியிட்டு உள்ளார்.

காலாண்டு தேர்வு மாற்றம்.

காலாண்டு தேர்வு அட்டவணையில், திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, காலாண்டு தேர்வு நடக்கிறது. 23ம் தேதி, தேர்வு முடிகிறது.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, ௧,௩௨௫ இடங்களில், ஆசிரியர் சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க உள்ளதால், தேர்வு வாரியம், 23ம் தேதி கலந்தாய்வு
நடக்கிறது. இதனால், அந்த நாளில் நடக்கும் தேர்வு, 22ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் சுற்றறிக்கையாக வெளியிட்டு உள்ளார்.

JACTTO-GEO : ஆசிரியர்களுக்கு 2 நாள் சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவு......

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில் 7 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனால் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை வெளியிட்டார்.

ஆனாலும், கோர்ட் தடையை மீறி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 7, 8ம் தேதிகளில்  வேலைக்கு வராத அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் யார், யார் என்று அலுவலகம் வாரியாக கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அன்றைய தினங்களில் பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்து அதற்கான அறிக்கையை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்டிரைக்கில் பங்கேற்கும் ஆசிரியர் மீது அரசு பணியாளர் நன்னடத்தை விதிப்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையின் இந்த நடவடிக்கை, ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

JACTTO-GEO : ஆசிரியர்களுக்கு 2 நாள் சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில் 7 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனால் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை வெளியிட்டார்.

ஆனாலும், கோர்ட் தடையை மீறி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 7, 8ம் தேதிகளில்  வேலைக்கு வராத அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் யார், யார் என்று அலுவலகம் வாரியாக கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அன்றைய தினங்களில் பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்து அதற்கான அறிக்கையை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்டிரைக்கில் பங்கேற்கும் ஆசிரியர் மீது அரசு பணியாளர் நன்னடத்தை விதிப்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையின் இந்த நடவடிக்கை, ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'NEET ' க்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய அரசு பள்ளி மாணவிகள், 'TC கொடுத்திடுவேன்'‍ மிரட்டிய தலைமையாசிரியர்!

நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் அரசுப் பள்ளி மாணவிகளைக் காலாண்டுத் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டேன் என்று பள்ளி தலைமையாசிரியர் மிரட்டியுள்ளார். இதனால் கொந்தளித்த மாணவிகள் பள்ளி வளாகத்திலேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் மாநகராட்சி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சனிக்கிழமையான இன்று பள்ளி செயல்பட்டது. திடீரென ப்ளஸ் டூ மாணவிகள் 20-க்கும் மேற்பட்டவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்டபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து வந்த காவல்துறையினர் மாணவிகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். 2 மணி நேரத்துக்கும் மேல் மாணவிகளின் போராட்டம் நீடித்ததால் காவல்துறை துணை ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மாணவிகள் பள்ளிக்குள் சென்றனர்.

அப்போது, போராட்டம் நடத்திய ப்ளஸ் டூ வகுப்பு மாணவிகளுக்குத் தலைமையாசிரியர் பொன்னியம்மாள் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து, கொந்தளித்த மாணவிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு படையெடுத்தனர். மாணவிகளுடன் பெற்றோர்களும் சேர்ந்துகொண்டதால் பரபரப்பு நிலவியது. 

அப்போது, "போராட்டம் நடத்திய மாணவிகளைக் காலாண்டுத் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டேன். அவர்களுக்கு டி.சி கொடுத்துவிடுவேன்" என்று தலைமையாசிரியர் பொன்னியம்மாள் மிரட்டியுள்ளார். இதனால் கொந்தளித்த மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஒருவர், காலாண்டு தேர்வு எழுத அனுமதிக்க மாட்டேன் என்று தலைமையாசிரியர் கூறினார். 

நீங்கள்தான் (பத்திரிகையாளர்கள்) நியாயம் செல்லுங்கள். நாங்கள் நீட் தேர்வுக்கு எதிராகத்தான் போராட்டம் நடத்தி வருகிறோம். நியாயமான எங்களது போராட்டத்தைத் தடுக்க பார்க்கிறார்கள். நீட் தேர்வு தடை செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும்" என்றார்.

இதனிடையே, கல்வித்துறை அதிகாரி பள்ளிக்கு விரைந்து வந்தார். அவரும், தலைமையாசிரியர் பொன்னியம்மாளும் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டுள்ளோம். 

உங்களது கோரிக்கைகளை அரசிடம் கொண்டுசெல்வோம். மாணவிகள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அது குறித்து விசாரிக்கப்படும்" என்றனர். இதையடுத்து மாணவிகள் அமைதி காத்தனர். பெற்றோர்களும் வீட்டுக்குச் சென்றனர். மாணவிகளின் திடீர் போராட்டத்தால் நுங்கம்பாக்கம் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

25 வருடங்களாகப் பணியாற்றிய தலைமைசிரியர், 

ஆசிரியைகள் திடீர் இடைநீக்கம்!

விருதுநகர் அல்லம்பட்டியில் தேவாங்கர் சமூகத்துக்குப் பாத்தியப்பட்ட அரசு உதவிபெறும் சௌடாம்பிகா ஆரம்பப் பள்ளியில் 25 வருடங்களாகப் பணியாற்றியத் தலைமையாசியர் தங்கமணியையும், உதவி ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, நாகஜோதி  ஆகியோரையும் பள்ளி நிர்வாகம் இடை நீக்கம் செய்துள்ள சம்பவம், விருதுநகர் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



இதுபற்றி தலைமைஆசிரியை தங்கமணி சார்பாகப் பேசியவர்கள், ''25 வருஷங்களாக இப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து, தற்போது தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகிறார் தங்கமணி. இதுவரை இப்பள்ளியை நிர்வாகம் செய்தவர்கள் இவர்மீது எந்தப் புகாரும் தெரிவித்ததில்லை, அந்தளவுக்கு இப்பள்ளியைச் சிறப்பாக நடத்திவந்தார். 

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் பள்ளியில் தலைமையாசிரியராக இருப்பது பள்ளி நிர்வாகத்துக்குப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், பணம் வாங்கிக்கொண்டு வேறு ஒருவரை நியமிக்கத் திட்டமிடுகிறார்கள். அதனால், அவர்மீது தேவையற்ற புகார்களைக் கூறுகிறார்கள். சாதிரீதியாகவும் இழிவுபடுத்தி பேசியிருக்கிறார்கள். 

இதுபற்றி அதிகாரிகளுக்கு தங்கமணி அனுப்பிய புகாருக்கு, அங்கு பணிபுரியும் இரண்டு ஆசிரியைகள் சாட்சி கூறியதால், அவர்களையும் இப்போது இடைநீக்கம் செய்துள்ளனர். இதற்கு கல்வித்துறை அதிகாரிகளும் ஒத்துழைக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கின்றனர்.

பள்ளிக்குள் செல்ல முடியாமல் தலைமையாசிரியருடன்  மற்ற இரண்டு ஆசிரியர்களும் வெளியில் நின்றது பார்ப்போரைக் கலங்க வைத்தது.

வெளிமாநில பேராசிரியர்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...

வேலூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதற்காக வரலாற்று புகழ்பெற்ற வேலூர் கோட்டை மைதானத்தில் பிரம்மாண்டமான பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டிருந்தது.
விழாவின் தொடக்கமாக காலை 9 மணி அளவில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை திறந்து வைத்தார்.
தொடர்ந்து மாணவ- மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சியும் நடந்தது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.வீரமணி, நிலோபர்கபில் மற்றும் கலெக்டர் ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-
மாணவ- மாணவிகளின் மன அழுத்தத்தை போக்கவும், எவ்வாறு கல்வி போதிப்பது என்பது குறித்தும் இந்த புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவ- மாணவிகள் போட்டி தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் 412 பயிற்சி மையங்கள் இம்மாத இறுதிக்குள் ஏற்படுத்தப்பட உள்ளது.
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் கொள்கை முடிவு. இந்த அரசு ஏழை, எளிய மக்களுக்கான அரசு. எனவே எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்பட தேவையில்லை.
மத்திய அரசு கொண்டு வரும் எந்த போட்டிதேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு ஆந்திரா, ராஜஸ்தான், டெல்லி போன்ற மாநிலங்களை சேர்ந்த சிறந்த பேராசிரியர்களை கொண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் பயிற்சி அளிக்க இம்மாத இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கப் படும். கற்றல் திறன் குறைவுடைய மாணவ-மாணவிகள் தமிழகத்தில் 10 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்காக புதிய திட்டம் தீட்டப்பட்டு அந்த திட்டத்தின் மூலம் கற்றுக்கொடுக்கப்படும்.
மாணவ- மாணவிகள் படித்ததை மறந்து விடுவதை தவிர்க்க வழிவகைகள் செய்யப்பட உள்ளன. இதற்காக முதல்கட்டமாக 3 ஆயிரம் பள்ளிகளில் ‘ஸ்மார்ட் வகுப்பு’ திட்டம் கொண்டு வரப்படுகிறது. 9, 10, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு திட்டம் தீட்டப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் கணினி மயமாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட மாணவ -மாணவிகளுக்கு சென்னை மனநல மருத்துவர் கண்ணன் கிரீஷ் உளவியல் ஆலோசனை வழங்கினார்.

ஆதார் எண் இணைக்கப்படாத சிம் கார்டுகள், வரும் 2018 பிப்ரவரி மாதத்துக்குப் பின் செயலிழப்பு செய்யப்படும்: மத்திய அரசு அறிவிப்பு.

செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படாத சிம் கார்டுகள், வரும் 2018 பிப்ரவரி மாதத்துக்குப் பின் செயலிழப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வங்கி கணக்கு, எரிவாயு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் உட்பட பல விஷயங்களில் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. இதேபோல, செல்போன் எண்ணையும் ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அப்படி இணைக்கபடாத சிம் கார்டுகள் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின் படி 2018 பிப்ரவரியில் செயலிழப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10 அளித்துள்ள புதிய வசதிகளை தெரிந்து கொள்ள வேண்டுமா?

    விண்டோஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமான 'விண்டோஸ் 10, தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய சலுகைகளை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மேலும் சில வசதிகளை செய்துள்ளது. 



இதமூலம் விண்டோஸ் 10 ஓஎஸ் உள்ள கம்ப்யூட்டர்களில் டெக்ஸ்டாப் பேக்ரவுண்ட், கலர், சவுண்ட் மற்றும் லாக் ஸ்க்ரீனை நாம் புதியதாக விருப்பப்படி செட்டப் செய்து கொள்ளலாம்

மேலும் இந்த ஓஎஸ்-இல் நாமாகவே புதிய தீம் செய்து அதை டெக்ஸ்டாப்பில் சேமித்து வைத்து கொள்ளும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் பேக்ரவுண்ட் கலர், பார்டர், ஸ்டார்ட்மெனுவில் கலர் ஆகியவைகளை செட்டிங் மூலம் மாற்றி அமைத்து கொள்ளலாம். அதற்குரிய ஸ்டெப்களை தற்போது பார்போம்

ஸ்டெப் 1: ஸ்டார்ட் மெனுவை கிளிக் செய்து பின்னர் செட்டிங் செல்ல வேண்டும்

ஸ்டெப் 2: பின்னர் Personalization என்ற பகுதிக்கு சென்று அதை கிளிக் செய்ய வேண்டும்

ஸ்டெப் 3: பின்னர் அதில் உள்ள தீம்ஸ் என்ற பகுதிக்கு சென்று தீம் செட்டிங் செல்ல வேண்டும்.

ஸ்டெப் 4: உங்களுக்கு பிடித்தமான தீம் ஒன்றை செலக்ட் செய்து அதன் ஐகானை கிளிக் செய்தால் உங்களுடைய விருப்பத்திற்கு தீம் அப்ளை ஆகிவிடும்

இதில் உள்ள தீம்ஸ்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விண்டோஸ் ஸ்டோர் சென்று அதில் உள்ள எந்த தீம்ஸ் வேண்டுமானாலும் செலக்ட் செய்து உங்கள் கம்ப்யூட்டரின் டெக்ஸ்டாப்பில் வைத்து கொள்ளலாம். அதற்குறிய ஸ்டெப்களை பார்ப்போம்

ஸ்டெப் 1: முதலில் Start menu -> Settings -> Personalization, அதன் பின்னர் click Themes என்பதை க்ளிக் செய்ய வேண்டும்

ஸ்டெப் 2: இதில் உள்ள கூடுதல் தீம்ஸ் என்ற பிரிவை கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் மைக்ரோசாப்ட் அக்கவுண்டில் லாக் இன் செய்திருந்தால்தான் இந்த ஸ்டோருக்குள் சென்று தேவையான தீம்ஸ்களை டவுன்லோடு செய்ய முடியும்

ஸ்டெப் 3: இந்த பக்கத்தில் உள்ள பல தீம்களில் ஒன்றை நீங்கள் செலக்ட் செய்ய வேண்டும்

ஸ்டெப் 4: பின்னர் செலக்ட் செய்த தீம்ஸ் ஐகான் மீது கிளிக் செய்ய வேண்டும்

ஸ்டெப் 5: கிளிக் செய்தவுடன் அது டவுன்லோடு ஆகும். டவுன்லோடு முடிந்தவுடன் லான்ச் என்பதை கிளிக் செய்தால் உங்கள் டெக்ஸ்டாப்பில் நீங்கள் தேர்வு செய்த தீம் வந்துவிடும்

12th New Study Materials - Computer Science

12th New Study Materials:
  • Computer Science | Study Material | Mr.R.Ramesh - English Medium
  • Computer Science | C++ Study Material | Mr.R.Ramesh - English Medium
  • Computer Science | Star Office - Study Material | Mr.R.Ramesh - English Medium

உண்ணாவிரதத்தை தொடங்கினார் ஆசிரியை சபரிமாலா

நீட் தேர்வை எதிர்த்து ஆசிரியர் பணியை ராஜினாமா செய்த சபரிமாலா உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.
அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு பின் தமிழகத்தில் நீட் எதிர்ப்பு போராட்டம் வலுத்துள்ளது. அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ச்சியாக மாணவர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நீட் தேர்வுக்கு எதிராக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வைரபுரம் அரசுப்பள்ளி ஆசிரியையான சபரிமாலாவும் தனது 7 வயது மகனுடன் போராடி வந்தார். இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று சபரிமாலா தனது அரசுப் பணியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து ஜக்காம்பேட்டையிலுள்ள தனது இல்லத்தில் சபரிமாலா உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முன்னதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சபரிமாலாவை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தார். நீட் தேர்வுக்கு எதிராக பள்ளியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து சபரிமாலா தனக்கு தேசமே முக்கியம் என்றும் வேலை அல்ல என்றும் கூறி ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

Special Teachers TRB - Drawing Teachers Exam - Study Materials...

  • Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 1 | Adithya Academy, Kanchipuram - Click Here
  • Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Unit 2 | Adithya Academy, Kanchipuram - Click Here
  • Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer | Adithya Academy, Kanchipuram - Click Here
  • Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 2 | Master Books - Click Here
  • Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 23 | Master Books - Click Here
  • Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 12 | Master Books - Click Here
  • Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 15 | Master Books - Click Here
  • Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 11 | Master Books - Click Here
  • Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 16 | Master Books - Click Here
  • Drawing Teacher - Special TRB Exam Study Material-1 | Teachers Care Academy, Kanchipuram - Click Here
  • Drawing Teacher - Special TRB Exam Study Material-2 | Teachers Care Academy, Kanchipuram - Click Here
  • Drawing Teacher - Special TRB Exam Study Material-3 | Teachers Care Academy, Kanchipuram - Click Here
  • Drawing Teacher - Special TRB Exam Study Material-4  | Teachers Care Academy, Kanchipuram - Click Here
  • Drawing Teacher - Special TRB Exam Study Material-5  | Teachers Care Academy, Kanchipuram - Click Here
  • Drawing Teacher - Special TRB Exam Study Material-6  | Teachers Care Academy, Kanchipuram - Click Here
  • Drawing Teacher - Special TRB Exam Study Material-7  | Teachers Care Academy, Kanchipuram - Click Here
  • Drawing Teacher - Special TRB Exam Study Material-8  | Teachers Care Academy, Kanchipuram - Click Here
  • Drawing Teacher - Special TRB Exam Study Material-9 | Teachers Care Academy, Kanchipuram - Click Here
  • Special Teachers Exam - Drawing Model Question-10 | Teachers Care Academy - Tamil Medium Download Here
  • Special Teachers Exam - Drawing Model Question-11 | Teachers Care Academy - Tamil Medium Download Here
  • Special Teachers Exam - Drawing Model Question-12 | Teachers Care Academy - Tamil Medium Download Here
  • Special Teachers Exam - Drawing Model Question-13 | Teachers Care Academy - Tamil Medium Download Here
  • Drawing Teacher - Special TRB Exam Study Material-1 | Arivukkadal Publications - Tamil Medium Download Here
  • Drawing Teacher - Special TRB Exam Study Material-2 | Arivukkadal Publications - Tamil Medium Download Here
  • Drawing Teacher - Special TRB Exam Study Material-3 | Arivukkadal Publications - Tamil Medium Download Here
  • Drawing Teacher - Special TRB Exam Study Material-4 | Arivukkadal Publications - Tamil Medium Download Here
  • Drawing Teacher - Special TRB Exam Study Material-5 | Arivukkadal Publications - Tamil Medium Download Here

Special Teachers TRB - Tailoring Teachers Exam - Study Materials

  • Tailoring Teacher - Special TRB Exam Study Material-1 | Teachers Care Academy, Kanchipuram - Click Here
  • Tailoring Teacher - Special TRB Exam Study Material-2  | Teachers Care Academy, Kanchipuram - Click Here
  • Tailoring Teacher - Special TRB Exam Study Material-3  | Teachers Care Academy, Kanchipuram - Click Here
  • Tailoring Teacher - Special TRB Exam Study Material-4  | Teachers Care Academy, Kanchipuram - Click Here
  • Tailoring Teacher - Special TRB Exam Study Material-5  | Teachers Care Academy, Kanchipuram - Click Here
  • Special Teachers Exam - Sewing Model Question-6 | Teachers Care Academy - Tamil Medium Download Here
  • Special Teachers Exam - Sewing Model Question-7 | Teachers Care Academy - Tamil Medium Download Here

PET Teacher TRB Exam 2017 - Study Materials | Full Collection....

Special Teacher PET (Physical Education) TRB Exam 2017 - Study Materials


  • PGTRB | PET Study Material - 1 | Olympic
  • PGTRB | PET Study Material - 2 | Olympic
  • PGTRB | PET Study Material - 3 | Olympic
  • PGTRB | PET Study Material - 4 | Olympic
  • PGTRB | PET Study Material - 5 | Olympic
  • PGTRB | PET Study Material - 6 | Olympic
  • PGTRB | PET Study Material - 7 | Olympic
  • PGTRB | PET Study Material - 8 | Olympic
  • PGTRB | PET Study Material - 9 | Olympic
  • PGTRB - UGTRB - PET | Study Material 1 | Arivukkadal Publication
  • PGTRB - UGTRB - PET | Study Material 2 | Arivukkadal Publication
  • PGTRB - UGTRB - PET | Study Material 3 | Arivukkadal Publication
  • PGTRB - UGTRB - PET | Study Material 4 | Arivukkadal Publication
  • PGTRB - UGTRB - PET | Study Material 5 | Arivukkadal Publication
  • PGTRB - UGTRB - PET | Study Material 6 | Arivukkadal Publication
  • PGTRB - UGTRB - PET | Study Material 7 | Arivukkadal Publication
  • PGTRB - UGTRB - PET | Study Material 8 | Arivukkadal Publication
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 1 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 2| G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 3 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 4 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 5 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 6 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 7 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 8 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 9 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 10 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 11 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 12 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 13 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Unit 14 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material- Unit 15 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Test 16 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Test 17 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Test 18 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Test 19 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Test 20 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Test 21 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Test 22 | G.Saravanan
  • PGTRB - UGTRB - PET | Study Material - Test 23 | G.Saravanan