>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

தூய்மை இந்தியா... ஓவியப்போட்டிக்கான படங்கள் ... வரைந்து பாருங்கள்... வரையக் கற்றுக் கொடுங்கள் (NEW PICS UPDATED)






























திங்கள், 4 செப்டம்பர், 2017

குறைதீர்ப்பார் குருபகவான் - இன்று குருபெயர்ச்சி

நவக்கிரகங்களில் சுபகிரகமான குருபகவான் கன்னி ராசியில் இருந்து இன்று காலை 9.31 மணி்க்கு துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.


திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி, தஞ்சாவூர் அருகே தென்குடிதிட்டை, மதுரை அருகே குருவித்துறை, சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில் , திருச்சி அருகே உத்தமர் கோயில், சென்னை பாடி வலிதாயநாதர்,
காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் குருகோவில், திருச்செந்தூர் உள்ளிட்ட தலங்களிலும், சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதிகளிலும் பெயர்ச்சியை முன்னிட்டு அபிேஷகம், ஆராதனை நடக்கும்.

இந்த பெயர்ச்சியால், மேஷம், மிதுனம், கன்னி, தனுசு, கும்பம். ராசியினருக்கு நற்பலனும், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம் ராசியினருக்கு மிதமான பலனும் உண்டாகும். கடகம், துலாம், மீனம் ராசியினர் கோயில்களுக்கு சென்று பரிகாரம் செய்யவேண்டும்.

குறைதீர்க்கும் குரு ஸ்லோகம்

தேவனாம்ச ரிஷிணாம்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்த பூதம் த்ரிலோகேசம்
தம் நமாமி ப்ஸகஸ்திபம்

பொருள் : தேவர்கள், ஞானிகளுக்கு குருவாக திகழ்பவரே! பொன் போல பிரகாசிப்பவரே! ஞானமே வடிவானவரே! மூவுலகங்களுக்கும் தலைவனாக விளங்குபவரே! பிரகஸ்பதியே! உம்மை வணங்குகிறோம்.

இந்த ஸ்லோகத்தை பக்தியுடஜன் 12 முறை படித்தால் குருபகவான் அருளால் குறையனைத்தும் நீங்கி வாழ்வில் குதூகலம் உண்டாகும்.

JACTTO - GEO பேச்சு வார்த்தை நிறைவு...

1.பள்ளிக் கல்வித் துறையில் உள்ள குறைபாடுகளை களைய விரைவில் குழு அமைத்து பதவி உயர்வு முரண்பாடுகள் களையப் படும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு வார்த்தையில் அறிவிப்பு.


2.📌Cps புதிய குழு தலைவர் ஸ்ரீதர் அறிக்கை நவம்பரில்கிடைத்ததும் நடவடிக்கை.

3.📌ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பர் 30 2017 கண்டிப்பாக ப்பெறப்பட்டு புதிய ஊதியம் அமல்படுதப்படும்.எனவே இடைக்கால நிவாரணம் இல்லை.

4.முதல் அமைச்சர்,துணை முதல்வருடன் பேசி முடிவுகள் அறிவிக்கப்படும்.

5.CPS குழு தலைவர் திரு. ஸ்ரீதர் தலைமையில் நாளை கூட்டம்.

*பேச்சுவார்த்தை நிறைவு*

CM உடன் ஆலோசித்து 7ம் தேதிக்குள் சாதகமான முடிவு அறிவிக்கப்படும் என அரசு தரப்பு அறிவிப்பு.

*அதுகுறித்து விவாதிக்கவும் ஆலோசிக்கவும்*

*இன்று மாலை 5 மணிக்கு அரசு ஊழியர் சங்கத்தில் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூடுகிறது.

BREAKING NEWS : JACTTO-GEO அமைப்பினர் வேலைநிறுத்த முடிவை கைவிட வேண்டும் - முதல்வர் வேண்டுகோள்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த முடிவை கைவிட வேண்டும், வேலைநிறுத்த முடிவை கைவிட்டு மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டும் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், 'ஊதிய விகிதத்தை திருத்தியமைப்பது தொடர்பாக ஊதியக்குழு பரிசீலித்து வருகிறது. அவசியம் ஏற்படும் நிலையில் இடைக்கால நிவாரணம் குறித்த அறிவிப்பை உரிய நேரத்தில் அரசு வெளியிடும், என்றார்.

CLICK HERE ...Statement of the Honble Chief Minister on the indefinite strike announced by JACTO-GEO

தூய்மை இந்தியா...ஓவியப்போட்டிக்கான படங்கள் ...வரைந்து பாருங்கள்...வரையக் கற்றுக் கொடுங்கள்...




PAY COMMISSION : மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. இனி குறைந்தபட்ச சம்பளமே 21,000 ரூபாயாம்..!

7வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் மத்திய அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளத்தினை 18,000 ரூபாயில் இருந்து 21,000 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சக வட்டார தகவல்கள் கூறுகின்றன.

நுகர்வோர் விலை குறியீட்டு அளவைச் சரிசெய்வதற்குச் சட்டம் தேவைப்படும் என்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுக்கும் என்று கூறப்படுகின்றது.

குறைந்தபட்ச சம்பள உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் குறைந்தபட்ச சம்பளத்தினை உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்த்து வருகின்றனர். செலவு செய்வது உயரும் போது பொருளாதாரம் உயரும் என்று ஊழியர்கள் சங்கங்கள் கூறுகின்றன. செலவு செய்வது உயரும் போது அது இந்தப் பொருளாதாரத்திற்கு நல்லது.


எப்போது முதல் இந்த உயர்வு
குறைந்தபட்ச சம்பளம் உயர்வு என்பது 2016-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் கணக்கிட்டு மத்திய அரசு வழங்கும் என்று கூறப்படுகின்றது.



ஊழியர்கள் சங்க கோரிக்கை
ஊழியர்கள் சங்கங்கள் குறைந்தபட்ச சம்பளத்தினை 18,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளன.


மத்திய அரசு எண்ணம்
குறைந்த அளவு சம்பளம் வாங்குபவர்கள் நன்றாக வேலை செய்கின்றார்கள் என்றால் அவர்களுக்குச் சம்பளத்தினை உயர்த்துவதில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று அரசு என்னுகின்றது. இதனால் ஊழியர்களின் பொருளாதாரச் சிக்கல் தீரும், வறுமை விலகி பொருளாதாரம் செழிக்கும்.


ஃபிட்மெண்ட் சூத்திரம்
அடிப்படை சம்பளம் 7,000 ரூபாயில் இருந்து 18,000 ரூபாயாக 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையின் கீழ் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 7000 ரூபாய்ச் சம்பளமாக வாங்கிய ஊழியர்களுக்கு 18,000 ரூபாயாகவும், 80,000 ரூபாய் வரை சம்பளம் வாங்கிவந்த அதிகாரிகளுக்கு 2.5 லட்சம் ரூபாய் வரை சம்பள உயர்வு கிடைத்துள்ளது. அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில் குறைந்தபட்ச சம்பளத்தினை 26,000 ஆக உயர்த்த கோரிக்கை வைக்கும் போது 2.57 மடங்கு என்பது 3.68 மடங்காக அதிகரிக்கும்.


7வது சம்பள கமிஷன் உடனான மத்திய அரசின் ஒப்படைப்பு
7வது சம்பள கமிஷன் பரிந்துரைத்த கொடுப்பனுவுகள் குறித்த ஆலோசனையினை ஏற்ற மத்திய அரசு ஜூலை 29-ம் தேதி அனுமதி அளித்ததன் பேரில் 48 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 52 லட்சம் ஓய்வூதியதார்கள் பயன் அடைந்துள்ளனர்.


நிதி அமைச்சர்
மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச்ச சம்பளத்தினை 18 ரூபாயில் இருந்து உயர்த்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.


எப்படி உயர்வு முடிவு செய்யப்படும்?
முறையான விசாரணை மற்றும் அதன் அனைத்துப் பங்குதாரர்களின் பெரும்பான்மை வாக்கெடுப்புக்குப் பின்னர் அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயில் இருந்து 21,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

காப்பியடித்தால் ரூ.50 ஆயிரம் : சென்னை பல்கலை எச்சரிக்கை...

'மாணவர்களை காப்பியடிக்க அனுமதித்தால், கல்லுாரிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, சென்னை பல்கலை எச்சரித்துள்ளது.சென்னை பல்கலையின் கீழ் உள்ள கல்லுாரிகளில், மாணவர்களை, ஒரு சில கல்லுாரி நிர்வாகமே காப்பியடிக்க அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில் நடந்த தேர்வில், ஒரு கல்லுாரியைச் சேர்ந்த, நான்கு மாணவர்களின் கையெழுத்து, ஒரே மாதிரியாக இருந்துள்ளது.ஒரு மாணவர், விடைத்தாளுடன், 500 ரூபாயை இணைத்துள்ளார். அத்துடன், மொபைல் போன் எண்ணையும் தெரிவித்துள்ள அந்த மாணவர், 'எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்' என, தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சிண்டிகேட் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டு, மாணவர்களை காப்பியடிக்க அனுமதித்தாக, நான்கு கல்லுாரிகளுக்கு, 50 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.'இது போன்ற குற்றச்செயலில் ஈடுபடும் கல்லுாரிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதோடு, தேர்வு மையங்கள் அமைக்க அனுமதி ரத்து செய்யப்படும்' எனவும், சென்னை பல்கலை எச்சரித்துள்ளது.

ஜாக்டோ - ஜியோவுடன் அரசு தரப்பு இன்று பேச்சு...

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினருடன், அரசு இன்று பேச்சு நடத்துகிறது. 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஊதிய முரண்பாடுகளைக் களையும் வரை, 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். 'சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாவட்ட தலைநகரங்களில், ஜூலை, 18ல், ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆகஸ்ட், 5ல், கோட்டையை நோக்கி பேரணியும், ஆக., 22ல், அடையாள வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்தினர். ஆனால், அரசு கண்டு கொள்ளாததால், வரும், 7ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.வேலை நிறுத்தம் தொடர்ந்தால், அரசு பணிகள் பாதிக்கும் என்பதால், ஜாக்டோ - ஜியோ அமைப்பினருடன் பேச்சு நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இன்று பகல், 12:30 மணிக்கு, தலைமை செயலகத்தில், பேச்சு நடக்கிறது. இதில்,அரசு தரப்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், உதயகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். ஜாக்டோ - ஜியோ அமைப்பு நிர்வாகிகள்,ஒருங்கிணைப்பாளர், கணேசன் தலைமையில் பங்கேற்கின்றனர்.'அரசு பேச்சு நடத்த முன் வந்துள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. இதில், நீண்ட கால பல பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது' என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கல்வி - மாணவர்கள் இணையத்தளம் பயன்படுத்தல் - அனைத்து வகை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அறிவுரைகள் - இயக்குனர் செயல்முறைகள்



JACTO - GEO இன்றைய பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்:

பேச்சுவார்த்தை நிறைவு

CM உடன் ஆலோசித்து 7ம் தேதிக்குள் சாதகமான முடிவு அறிவிக்கப்படும் என அரசு தரப்பு அறிவிப்பு.
அதுகுறித்து விவாதிக்கவும் ஆலோசிக்கவும் இன்று மாலை 5 மணிக்கு 5 மணிக்கு அரசு ஊழியர் சங்கத்தில் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூடுகிறது.
இன்றைய பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்:
1.பள்ளிக் கல்வித் துறையில் உள்ள குறைபாடுகளை களைய விரைவில் குழு அமைத்து பதவி உயர்வு முரண்பாடுகள் களையப் படும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சுவார்த்தையில்அறிவிப்பு.
2.Cps புதிய குழு தலைவர் ஸ்ரீதர் அறிக்கை நவம்பரில்கிடைத்ததும் நடவடிக்கை.
3.ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பர் 30 2017 கண்டிப்பாக ப்பெறப்பட்டு புதிய ஊதியம் அமல்படுதப்படும்.எனவே இடைக்கால நிவாரணம் இல்லை.
4.முதல் அமைச்சர்,துணை முதல்வருடன் பேசி முடிவுகள் அறிவிக்கப்படும்.
5.CPS குழு தலைவர் திரு. ஸ்ரீதர் தலைமையில் நாளை கூட்டம்.

NTSE EXAM - மாணவர்களது விபரங்களை ONLINE -ல் பதிவேற்றம் செய்தல் குறித்து தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள்...



நவம்பர் 17-க்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்த வேண்டும் - சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவு....

நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் தொடர்பான அறிக்கையை செப்டம்பர் 18-க்குள் இணையதளத்தில் வெளியிட மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை 2 வாரத்தில் வெளியிடவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரிய வழக்கில் இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. 
வேட்பாளர்களின் தகவல்களை இணையதளத்தில் பதிவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 2016 அக்டோபரில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. தி.மு.க. அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்தது.
உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் நியமனத்தை எதிர்த்தும், அவர்களது பதவிக் காலத்தை நீட்டிக்க கூடாது எனவும் மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர், நாராயணன் மனு தாக்கல் செய்தார். உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்தக் கோரி, தி.மு.க., தரப்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் படி நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதன்கிழமை முதல் அசல் ஓட்டுநர் உரிமம்: கட்டாயம் சென்னை உயர்நீதிமன்றம்...

வரும் புதன்கிழமை முதல் வாகன ஓட்டிகள் அசல் உரிமத்தை வைத்திருப்பது கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்.1 முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. 
லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. மேலும் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை மற்றும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

SSA-கற்றல் விளைவுகள் - பயிற்சி அட்டவணை- தொடக்க நிலை மற்றும் உயர் தொடக்க நிலை | வேலூர் மாவட்டம்.


நாகையில் வரும் 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு...

மயிலாடுதுறையில் காவிரி புஷ்கர விழா வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது.காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு வரும்12-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

உண்டு உறைவிடப் பள்ளிகள்: பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கப்படுமா?

ஆதி திராவிட நலத் துறையின்கீழ் இயங்கும் உண்டு, உறைவிடப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்திய மக்கள் தொகையில் சுமார் 8 சதவீதம் பழங்குடியினர் உள்ளனர். தமிழக மக்கள் தொகையில் இது சுமார் ஒரு சதவீதம். ஆனால், எண்ணிக்கையில் இவர்கள் சுமார் எட்டு லட்சம் பேர். தமிழ்நாட்டின் வெவ்வேறு மலைகளில் வெவ்வேறு சமூக, கலாசார, பொருளாதார சூழ்நிலையில் வாழும் இம்மக்களின் எழுத்தறிவு 54 சதவீதம் மட்டுமே. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் 3 கி.மீ.க்குள் தொடக்கப் பள்ளி இருக்க வேண்டும் என்றாலும் மலைப் பகுதிகளில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பழங்குடி மக்களும் பிழைப்புத் தேடி அவ்வப்போது சமவெளிப் பகுதிகளில் கரும்பு வெட்டுதல், மூங்கில் வெட்டும் பணி, செங்கல் சூளை என பணிகளுக்குச் செல்கின்றனர்.
அப்போது குழந்தைகளையும் அழைத்துச் செல்வார்கள். சில சமயங்களில் அவர்களை வேலைக்கும் அனுப்புகின்றனர்.
பள்ளி இடைநிற்றலும் மலைப் பகுதிகளில் அதிகம். இதனால் குழந்தைத் தொழிலாளர் முறை, குழந்தைத் திருமண முறை, கொத்தடிமை முறை, இடம்பெயர்வு போன்ற பிரச்னைகள் பெருகி வருகின்றன.
மலைப் பகுதிகளில் இக்குழந்தைகளுக்கு கல்வி வழங்க 17 மாவட்டங்களில் 314 அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் சுமார் 30,000 பேர் பயில்கின்றனர். கல்வித் துறை அதிகாரிகள் இப்பள்ளிகளைக் கண்காணிப்பதில்லை.
ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட ஓராசிரியர்கள் உண்டு உறைவிடப் பள்ளிகள் உள்ளன. தாளவாடி வட்டாரத்தில் உள்ள ஆசனூர் மேல்நிலைப் பள்ளியில் மொழிப் பாடங்களுக்கு 30 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்களே உருவாக்கப்படவில்லை.
1952-ஆம் ஆண்டில் தொடக்கப் பள்ளியாக இருந்து 1988-ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அப்போது, ஆங்கிலப் பாடத்துக்கான ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. அடுத்து 1997-இல் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும்போது, தமிழ் பாடத்துக்காக ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படாமலேயே ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுவரை பணியிடமே உருவாக்கப்படாமல் இந்நிலை நீடிக்கிறது. பிற பாடங்களை நடத்தும் ஆசிரியர்களே இப்பாடங்களையும் நடத்துகின்றனர். மொழிப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இன்றி 30 ஆண்டுகளாக இந்தப் பழங்குடி மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதி வருகின்றனர்.
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் 2010-இல் கடும் கண்டனத்தை தெரிவித்தது.ஆனாலும், இன்னும் இந்த அவலம் நீடிக்கிறது. 255 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் தற்போது மேல்நிலை வகுப்புகளுக்கு இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். நான்கு பணியிடங்கள் காலியாக உள்ளன.
பர்கூரில் 1961-இல் தொடங்கப்பட்ட பள்ளி 1981-இல் நடுநிலைப் பள்ளியாகவும், 2008-இல் உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்படும்போது, சமூக அறிவியல் பாடத்துக்காக ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படவில்லை. மேல்நிலைப் பள்ளியாகி 2 ஆண்டுகளாகியும் ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. 125 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளார்.
மலைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் குறிதக்த நேரத்துக்குப் பள்ளிக்கு வருவதில்லை. காலை 11 மணிக்கு பள்ளிக்கு வந்து 3 மணிக்கு வீட்டுக்கு கிளம்பும் ஆசிரியர்களே அதிகம். விடுதி காப்பாளர்கள் விடுதிகளில் தங்குவதே இல்லை.
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட மலைப் பகுதிகளில் கல்வி சேவை அளித்து வரும் சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.சி.நடராஜ் கூறியதாவது:
உண்டு உறைவிடப் பள்ளிகள் என இருந்தாலும் பெரும்பாலான பள்ளிகள், உண்டு செல்லும் பள்ளிகளாகவே விளங்குகின்றன. விடுதி வசதியும், அதற்கான கட்டடங்களும் ஏற்படுத்தி தரப்படவில்லை.
எனவே, குழந்தைகள் உணவை உண்டுவிட்டு தங்களது வீட்டுக்கு சீக்கிரமே திரும்புகின்றனர். இப்பள்ளிகளில் நூலகங்களோ, செய்தித்தாள்களோ இல்லை. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, குழந்தைகளின் பெற்றோர்கள் அடங்கிய ஒரு கண்காணிப்புக் குழுவை பள்ளி மேலாண்மைக் குழு எனும் பெயரில் அமைத்துள்ளது. இது ஒரு சட்டப்பூர்வ அமைப்பு. ஆனால், இதுவும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது.
ஒரு பெண்ணைத் தலைவராக நியமித்து, கையொப்பம் மட்டும் பெற்று தங்களது வசதிக்கேற்ப சட்டத்தை வளைக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப் பகுதியில் ஒசூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் 135 மாணவர்களுக்கு எட்டு ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், ஒசூரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பர்கூர் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் 253 மாணவர்களுக்கு நான்கு ஆசிரியர்களே உள்ளனர். ஏன் இந்த பாகுபாடு?.
பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் அனைத்தையும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க வேண்டும். திட்ட செயலாக்கத்தையும், தொடர் கண்காணிப்பையும் பள்ளிக் கல்வித் துறை உறுதி செய்வதும் இன்றைய அவசியத் தேவையாக உள்ளது.
பழங்குடியின மக்களின் வாழ்வியலை நன்கு அறிந்த, இவர்களின் நலனில் அக்கறையுள்ள அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களை தேர்வு செய்து அமர்த்துதலே முதன்மையான சீர்திருத்தமாகும். விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் விடுதிகளில் தங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இடைநிற்றலைத் தடுக்க தொடர்ந்து பள்ளிக்கு வரும் குழந்தைகளின் வங்கிக் கணக்கில் ஒரு தொகையை கல்வி ஊக்கத் தொகையாக வழங்கலாம். விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஐம்பது என நிர்ணயம் செய்வதைத் தவிர்த்து பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இருக்க வேண்டும்.
பழங்குடி மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அவர்களது சமூகப் பொருளாதார, கலாசார வாழ்நிலையில் இருந்து மதிப்பீடு செய்து கீழ்காணும் தீர்வை நோக்கிச் செல்ல வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும்.
பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு இலவச, சமமான, கட்டாய தரமான கல்வி உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். பழங்குடி பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதம் சமவெளிப் பகுதியில் உள்ளதுபோல் அல்லாமல் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்.
பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு ஏற்ற கற்றல், கற்பித்தல் முறைகள் உருவாக்கப்படவேண்டும். போதுமான கட்டடங்கள், கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி, ஆய்வக நூலக வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
பழங்குடி மக்களின் பாரம்பரிய அறிவு ஆவணப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு அவற்றை மலைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் கற்பிக்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இயற்கையோடு இணைந்த நீண்ட நெடிய வாழ்வியல் வழிமுறையில் கண்டறியப்பட்ட குன்றா வளர்ச்சிக்கான அடிப்படையாக கூறுபாடுகளை எப்படி பிற பகுதி மக்கள் பின்பற்ற முடியும் என்பதற்கான ஆய்வுகள் வேண்டும்.
பழங்குடியினர் நலனில் அக்கறையுள்ள கல்வியாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், தன்னார்வ அமைப்புகள், மக்கள் அமைப்புகள் ஆகியோரைக் கொண்ட மாநில அளவிலான ஒரு பொது மேடையை பழங்குடியினர் கல்வி உரிமை கூட்டமைப்பு எனும் பெயரில் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

ஓட்டுநர் உரிமம் - தொலைந்தால் பூர்த்தி செய்யவேண்டிய படிவம்

நாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டுக்கான -தேசிய நல்லாசிரியர் விருது (National Award ) பெற்றவர்களின் முழு விவரம்

நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய தமிழக மாணவி அனிதா தற்கொலை!

உச்ச நீதிமன்றத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய தமிழக மாணவி அனிதா இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


நாடு முழுவதும் மருத்துவக் கல்வி சேர்க்கையானது இனி 'நீட்' தேர்வு மூலமாகத்தான் நடைபெறுமென்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மாநில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு என்று 85% சிறப்பு இட இதுக்கீடு அளித்து  அரசாணை வெளியிட்டது.

ஆனால் இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அத்துடன் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஒரு வருடத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வரைவினை மத்திய அரசு அனுமதியுடன் நிறைவேற்றவும் தமிழக அரசு முயன்று வந்தது.   

அதே நேரத்தில் 'நீட்'  தேர்வு மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் குழுமூர் என்ற கிராமத்தினைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தன்னை எதிர் மனுதாரராக சேர்த்துக் கொண்டார். அங்கு நீட் தேர்வுக்கு எதிராக மாநில மாணவர்களின் தரப்பினை முன்வைத்து வாதாடினார்.

ஆனால் தமிழக அரசின் வழக்கும், அனிதா தொடர்ந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையானது நீட் அடிப்படையில் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாணவி அனிதா குழுமூரில் உள்ள தனது இல்லத்தில் இன்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாயினை இழந்து விட்ட அனிதாவின் தந்தை மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி ஆவார். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரான அனிதா +2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அத்துடன் மருத்துவ சேர்க்கைக்கான 'கட் ஆப்பாக' 196.75 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

மருத்துவராக வேண்டும் என்ற தனது லட்சியத்தை நிறைவேற்ற, உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்திய ஒரு  ஏழை மாணவியின்      வாழ்வானது, ஒரு தூக்கு கயிறில் முடிந்து போன சோகம் நிகழ்ந்துள்ளது

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்!!

நீட் தேர்வில், அரசுப்பள்ளியில் பயின்றதமிழகத்தைச் சேர்ந்தஇரட்டை சகோதரிகள்வெற்றி பெற்றுள்ளனர்.மிகவும் எதிர்பார்க்கப்பட்ட,மருத்துவப்

படிப்பில் மாணவர்சேர்க்கைக்கான தேசியதகுதி மற்றும் நுழைவுத்தேர்வு ( நீட் தேர்வு ) முடிவுகள்இன்று (வெள்ளிக்கிழமை)காலை 10.30 மணியளவில்வெளியிடப்பட்டது.
 நிலா பாரதி (இடது), அன்பு பாரதி (வலது)
நீட் தேர்வில் முதல் 25இடங்களைப் பிடித்தமாணவர்கள் பட்டியலில்தமிழகத்தைச் சேர்ந்த எந்தஒரு மாணவ மாணவியும்இடம்பெறவில்லை என்பதுவேதனையானவிஷயம்தான். ரேங்க்பட்டியலில்இல்லாவிட்டாலும் நீட்தேர்வில் தமிழகத்தைச்சேர்ந்தவர்களும் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.
வந்தவாசியைச் சேர்ந்தஅன்புபாரதி, நிலாபாரதிசகோதரிகள். வந்தவாசிஅரசு மேல்நிலைப்பள்ளியில்தான் அன்புபாரதியும் நிலா பாரதியும்பயின்றனர். நடந்து முடிந்தபிளஸ் 2 தேர்வில் அன்புபாரதி 1165மதிப்பெண்களும்,நிலாபாரதி 1169மதிபெண்களும் பெற்றனர்.இதனையடுத்து அவர்கள்நீட் தேர்வுக்குஆயத்தமாகினர்.
நீட் தேர்வைஎதிர்கொண்டது குறித்துஅவர்கள் 'தி இந்து'விடம்கூறும்போது, "பிளஸ் 2தேர்வு முடிந்தவுடன் ஐந்துநாட்கள் ஓய்வு எடுத்தோம்.பின்னர் நீட் தேர்வுக்காகதிட்டமிட்டோம். நீட் 2014தேர்வு வினாத்தாள், எய்ம்ஸ்முந்தையவினாத்தாள்களை வாங்கிபயிற்சி மேற்கொண்டோம்.பள்ளியில் நல்லமதிப்பெண் எடுத்திருந்தும்எங்களுக்கு அந்தக்கேள்விகள் புதிதாகஇருந்தன. அதனால்,சிபிஎஸ்இ 11, 12 வகுப்புபுத்தகங்களை வாங்கிப்படித்தோம்.
அதன் பின்னரே எங்களால்அந்தக் கேள்வித்தாளில்இருந்த வினாக்களுக்குபதில் அளிக்க முடிந்தது. நீட்தேர்வை சிறப்பாகஎதிர்கொள்ளவேண்டுமானால் சிபிஎஸ்இதரத்துக்கு பாடத்திட்டம்மாற்றப்பட வேண்டும்"என்றனர்.
நீட் தேர்வில் அன்பு பாரதி151 மதிப்பெண்களும்நிலாபாரதி 146மதிப்பெண்களும்பெற்றுள்ளனர்.

இந்தாண்டு 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன

திருப்புவனம்:தமிழகம் முழுவதும் கிராமப்புறத்தில் குறைந்த மாணவர் எண்ணிக்கை உள்ள அரசு
பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கிராமப்புற மாணவ, மாணவியர் கல்வி அறிவு பெற அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்காக மதிய உணவும் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் கவனக்குறைவு, கற்பிக்கும் திறன் உள்ளிட்டவை காரணமாக பலரும் தனியார் பள்ளிகளின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கிராமப்புற பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை விட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்பது விதி, ஆனால் பல இடங்களில் ஆறு மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள் என்ற விகிதத்தில் செயல்பட்டு வருகின்றன. இவற்றால் செலவினங்கள் அதிகரித்து வருவதாக அரசு கருதி 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் கணக்கிடப்பட்டு வருகின்றன. இந்தாண்டு 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன.
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க மாணவர்களை அருகில் இணைக்கப்படும் பள்ளிகளுக்கு அழைத்து செல்ல வேன் வசதி ஏற்படுத்தப்பட உள்ளன. இந்தாண்டு 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளும் அடுத்தாண்டு 20 மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளும் மூடப்பட்டு அருகில் உள்ள மற்ற பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன.
திருப்புவனம் ஒன்றியத்தில் 62 தொடக்கப்பள்ளிகள், 33 நடுநிலைப்பள்ளிகள், 5 அரசு உதவி பெறும் பள்ளிகள் என 100 பள்ளிகளில் 387 ஆசிரியர்,ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். இதில் 6 ஆயிரத்து 414 மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர். இந்தாண்டு திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள அழகுடையான் ( 6 மாணவ, மாணவியர்கள்) புளியங்குளம் (9 மாணவ, மாணவியர்கள்), மேலசொரிகுளம் ( 4மாணவ, மாணவியர்கள்) ஆகிய மூன்று பள்ளிகள் அருகில் உள்ள மற்ற பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஆசிரியர்களின் சம்பளம், சத்துணவு ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்டவை மிச்சமாகும் என கருதப்படுகிறது.
இதற்கான முதல் கட்ட ஆய்வு பணிகள் முடிந்து தமிழக அரசுக்கு முடிவு அனுப்பட்டுள்ளன. ஒவ்வொரு தாலுகாவிலும் இதுபோன்ற கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்

ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம் காலாண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல்?

ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால், செப்., 1௧ல் திட்டமிட்டபடி காலாண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
தமிழகத்தில், பழைய 'பென்ஷன்' திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 
ஆகஸ்ட், 22ல் நடந்த வேலைநிறுத்த போராட்டத்தில், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றதால், பள்ளிகளில் திறந்திருந்தாலும், வகுப்புகள் நடைபெறவில்லை.
தற்போது செப்., 11 முதல், பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் ௧௦ம் வகுப்புகளுக்கு, காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், செப்., 7 முதல், தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால், திட்டமிட்டபடி காலாண்டு தேர்வு நடக்குமா என்பது குறித்து, மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இது குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆண்டு துவங்கிய போராட்டம் இது. 
தேர்தல் அறிக்கையில் அறிவித்தும், தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்காததால், தொடர் வேலைநிறுத்தம் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளோம். 
அரசு சார்பில், நாளை பேச்சு நடத்த அழைக்கப்பட்டிருப்பினும், கோரிக்கை ஏற்காவிட்டால், வேலைநிறுத்தம் தொடரும். பெரும்பாலான ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் நிலையில், தேர்வுகளை நடத்த முடியாது.இவ்வாறு அவர்கள் கூறினர்....

ஆசிரியர்களுக்கு வாழ்த்து மடல்! அசத்தும் மாவட்டக் கல்வி அதிகாரி!

செப் 5-ம் தேதி டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாள், ஆசிரியர் தின விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. முதன் முறையாக சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி. மகேஸ்வரி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துச் செய்தி மடல் அனுப்பி வருகின்றார்.
அந்த வாழ்த்து மடலில், "வல்லரசு இந்தியாவை வடிக்கின்ற சிற்பிகளாய் மாணவ சமூகத்தை மாட்சியுடன் உருவாக்க அர்ப்பணிப்பு உணர்வோடு உழைக்கின்ற அறிவாற்றல் மிகுந்த ஆசிரியர்களே" என்கிற வாசகங்கள் அடங்கிய வாழ்த்துமடல் அனுப்பப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரைக்கும் பணியாற்றி வந்துள்ள கல்வித்துறை அதிகாரிகள் யாரும் வாழ்த்துச் செய்தி ஆசிரியர் தின விழாவிற்கு அனுப்பியது இல்லை. இதுவே முதல் முறை என்கின்றனர் இம்மாவட்டத்தின் ஆசிரியர்கள் ." எங்களுக்கு இதுபோன்ற வாழ்த்துக்கடிதம் கிடைப்பது அரிது.
நல்லாசிரியர் விருது, சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர் வழங்கும் விருது என ஒரு சிலருக்குத்தான் கிடைக்கும். இந்த வாழ்த்து மடலையும் அதுபோன்றுதான் நினைக்கின்றோம்" என்கிறார்கள் ஆசிரியர்கள்

பள்ளிகளில்' ஹைடெக்' மாற்றம் ரூ.300 கோடியில் அதிரடி திட்டம்!

பள்ளி குழந்தைகளுக்காக எளிய முறையில் கணிதம் கற்பிக்கும் Rubi math வெளியீடு!


பள்ளிக் கல்வித்துறை செயலர் திரு. உதயச்சந்திரன் IAS வெளியிட்டார். உடன்திருமதி.ரூபி தெரசா , திரு. ஐயன் கார்த்திகேயன் , youturn.
திருமதி.ரூபி தெரசா அவர்களின் முயற்சி அனைத்து மாணவர்களும் கணிதத்திலும் , போட்டித் தேர்விலும் வெற்றி பெற வேண்டும் என்பது ஆதலால் இலவசமாக கட்டணம் இன்றி ஒரே இடத்தில் அவரது வீடியோக்களை வெளியிட நினைத்தவருக்கு youturn இலவசமாக app உருவாக்கி கொடுத்து இதை மக்களுக்கு சேர்க்கும் முயற்சியிலும்..
இணைப்பு :
Click Here