>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 7 ஜூலை, 2017

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறதா?... ஆசிரியர்கள் கருத்து

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த, தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தி.மு.க எம்எல்ஏ., சேகர்பாபு, தமிழக அரசுப் பள்ளிகளின் நிலைகுறித்து எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். 
மேலும், ‘ஆங்கில மொழியின் மீதான மோகத்தால்தான் மக்கள் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்கின்றனர். அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவோம். தற்போது, தனியார் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது’ என்று உறுதியாகப் பேசியுள்ளார் செங்கோட்டையன்.
சட்டப்பேரவையில், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தது எந்த அளவுக்கு உண்மை... அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறதா? தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரு கிறதா. .. போன்ற கேள்விகளுக்கு, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இருவர் கூறிய பதில் பின்வருமாறு...
வசந்த், கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, கடலூர்:
’அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்துவருவது உண்மைதான். பள்ளிகளின் தரத்தை உயர்த்த,  அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுடன், கிராம மக்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, அரசுத் தரப்பில் கணினிப் பயிற்சி தரப்படுகிறது, ஆனால், தொடக்கப்பள்ளிகளில் கணினி கிடையாது. கணினிகூட இரண்டாவதுபட்சம்தான். தமிழக அரசு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தாலே போதுமானது’
மு.தென்னவன், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி :
’அரசுப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்துவிட்டது. தமிழக அரசு, இலவச லேப்டாப் கொடுத்துவருவது வரவேற்கத்தக்கது. தற்போது அரசுப் பள்ளிகளில் வைஃபை வசதி ஏற்படுத்தித் தருவதாகவும் அரசு அறிவித்துள்ளது. தொழில்நுட்ப வசதிகள் மட்டுமே பள்ளிகளின் தரத்தை நிர்ணயிக்காது. அடிப்படை வசதிகள்தான் முக்கியம். பாதுகாப்பான குடிநீர், கழிவறை, இவை இரண்டும்தான் பள்ளிகளின் தரத்தை நிர்ணயிக்கும். ஒரு சின்ன உதாரணம்.. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், எத்தனை பள்ளிகளில் நாப்கினுக்கு தனி டஸ்ட்பின் வைக்கப்பட்டுள்ளது?’ என்றனர்.

B.Ed கற்பித்தல் பயிற்சியை ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே மேற்கொள்ளலாம் என்பதற்கான அண்ணாமலை பல்கலைக்கழக செய்தி....

மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு விதித்த அரசாணை ரத்து: உயர்நீதிமன்றம்...

மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு விதித்த தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 
பஞ்சாப் அசோசியேஷன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விசாரித்து உத்தரவிட்டுள்ளார். அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்துக்கு விரோதமாக அரசாணை உள்ளது என்றும் மனுதாரர் வாதம் செய்துள்ளார்.
மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 5 வரை வகுப்புக்கு தலா 30 மாணவர் தான் சேர்க்க முடியும் என அரசாணை வெளியிட்டிருந்தது. 6 முதல் 8 வரை வகுப்புக்கு 35 மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதித்திருந்தது. ஒவ்வொரு வகுப்பிலும் 4 பிரிவுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் அரசாணையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுப்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

11.07.2017 அன்று ஜாக்டோ - ஜியோ கூட்டம் - அனைத்து சங்கத்திற்கும் அழைப்பு கடிதம்....

DSE PROCEEDINGS- அரசு/ நிதியுதவி பெறும் பள்ளிகள் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவுதல்- அறிவுரை வழங்குதல் சார்பு.....


CRC பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களிடம் விளக்கமளிக்க வலியுறுத்திய முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!..


வேலூர் புத்தகக் கண்காட்சி 2017"* ஜுலை 7 முதல் 16 வரை....

நண்பர்களே வணக்கம்,
வரலாற்று சிறப்பு மிக்க நமது வேலூர் மாவட்டத்தில், இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்ட
முதல் சுதந்திர போரான வேலூர் சிப்பாய் புரட்சி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும்
*" வேலூர் புத்தகக் கண்காட்சி 2017"* ஜுலை 7 முதல் 16 வரை
நாளை 7/7/17, காலை 9.30 மணிக்கு  வேலூர் நகர அரங்கத்தில் இனிதே துவங்குகிறது
*வேலூர்  மாவட்ட ஆட்சியர் திரு.S.A.ராமன் அவர்கள்  திறந்து வைக்கின்றார்கள்*
க.பூபாலன், 
மாவட்ட செயலாளர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம். 9944274858

English Phonetic Sounds it is very useful for All students...

English Phonetic Sounds it is very useful for All students
THANKS TO PUPS THITUPPUTKUZHI





ஆசிரியர்கள் சொத்து விவரத்தை சமர்ப்பிக்க என்சிடிஇ உத்தரவு''...

ஆசிரியர் கல்வி தேசிய கவுன்சில் (என்சிடிஇ), ஆசிரியர்கள் தங்கள் சொத்து விவரக் கணக்குகளை
சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் ஆசிரியர் கல்வி (டிடிஇ), கல்வியியல் கல்வி (பி.எட்.,) கல்லூரிக்கான அனுமதியை அளிக்கும் அதிகாரம் என்சிடிஇ-க்கு மட்டுமே உள்ளது. என்சிடிஇ-யின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் கல்வி மற்றும் கல்வியியல் (பி.எட்.,) கல்லூரிகள் அனுமதி பெற்று செயல்படுகின்றன. புதிதாகவும் கல்லூரியைத் தொடங்க ஏராளமான விண்ணப்பங்கள் வந்த வண்ணம் உள்ளது. என்சிடிஇ-யில் அனுமதி பெற்ற கல்லூரிகளில் போதுமான கட்டுமான வசதிகள், மாணவர்களுக்கான இடவசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இந்தியா முழுவதும் பல்வேறு கல்லூரிகள் செயல்படுகின்றன.
அனுமதி வழங்குவதில் என்சிடிஇ-யில் பணிபுரிபவர்கள் லஞ்சம் வாங்குவதாக என்சிடிஇ-க்கு புகார்கள் வருகின்றன. அதேபோல பி.எட்., சீட்டுக்காக ஏராளமான லஞ்சம் பெறப்படுவதாகவும் கவுன்சிலுக்கு அதிகளவில் புகார்கள் வந்துள்ளன. புகார்களை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்சிடிஇ எடுக்க இருக்கிறது. அதன் முதல்கட்டமாக என்சிடிஇ, ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் முழு சொத்துப்பட்டியலை வெளியிட வேண்டும் என உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 6 ஜூலை, 2017

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் நாளை கடைசி நாள்

சென்னை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் பெற நாளை கடைசி நாள்.
தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், மாநில ஒதுக்கீட்டுக்கு, 2,594; சுயநிதி கல்லுாரிகளில், 1,300 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.
அரசியில், பி.டி.எஸ்., படிப்புக்கு, 170; சுய நிதி கல்லுாரிகளில், 1,710 இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோம், 22 அரசு மருத்துவ கல்லுாரிகளிலும் நடந்து வருகிறது. சுகாதாரத்துறை இணைய தளத்திலும், பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப வினியோகம் துவங்கிய, ஒன்பது நாட்களில், கல்லுாரிகள் மூலம், 41 ஆயிரத்து, 264 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை, 17ல் நடைபெற உள்ளது. இதுகுறித்து, மாணவர் சேர்க்கை குழு செயலர், செல்வராஜ் கூறுகையில், ''மருத்துவ கல்லுாரிகள் மற்றும் இணையதளத்தில் விண்ணப்பம் பெற, நாளை கடைசி நாள்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளை மறுநாள், மாலை, 5:00 வரை பெறப்படும்,'' என்றார்.

விண்ணப்பங்களை சமர்ப்பித்தோர் விண்ணப்ப படிவத்தின் தற்போதைய நிலை குறித்து www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது நீட் தேர்வு பதிவு எண்ணை பதிவு செய்து, தெரிந்து கொள்ளலாம். சென்னை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் பெற நாளை கடைசி நாள். தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், மாநில ஒதுக்கீட்டுக்கு, 2,594; சுயநிதி கல்லுாரிகளில், 1,300 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அரசியில், பி.டி.எஸ்., படிப்புக்கு, 170; சுய நிதி கல்லுாரிகளில், 1,710 இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோம், 22 அரசு மருத்துவ கல்லுாரிகளிலும் நடந்து வருகிறது. சுகாதாரத்துறை இணைய தளத்திலும், பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப வினியோகம் துவங்கிய, ஒன்பது நாட்களில், கல்லுாரிகள் மூலம், 41 ஆயிரத்து, 264 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை, 17ல் நடைபெற உள்ளது. இதுகுறித்து, மாணவர் சேர்க்கை குழு செயலர், செல்வராஜ் கூறுகையில், ''மருத்துவ கல்லுாரிகள் மற்றும் இணையதளத்தில் விண்ணப்பம் பெற, நாளை கடைசி நாள்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளை மறுநாள், மாலை, 5:00 வரை பெறப்படும்,'' என்றார். விண்ணப்பங்களை சமர்ப்பித்தோர் விண்ணப்ப படிவத்தின் தற்போதைய நிலை குறித்து www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது நீட் தேர்வு பதிவு எண்ணை பதிவு செய்து, தெரிந்து கொள்ளலாம்.

பி.ஆர்க்., கவுன்சிலிங் பதிவு இன்று நிறைவு : 'ஈகோ' பிரச்னையால் மாணவர்கள் திணறல்,..

பி.ஆர்க்., கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்றுடன் முடிகிறது. நீதிமன்றம் உத்தரவிட்டும், ஜே.இ.இ., நுழைவு தேர்வு முடித்தவர்களிடம், அண்ணா பல்கலை விண்ணப்பங்களை பெறவில்லை.
தமிழகத்தில், 53 பி.ஆர்க்., கல்லுாரிகளில், 2,720 இடங்கள் உள்ளன. இதில், 2,000க்கு மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும், தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் மூலம், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தமிழக இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டியினர், இந்த பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கிற்கு, ஜூன், 25ல் துவங்கிய ஆன்லைன் பதிவு துவங்கி, இன்றுடன் முடிகிறது. இதில், நாட்டா என்ற தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சிலின் திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என, கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., நடத்திய, ஜே.இ.இ., நுழைவு தேர்வில், ஆர்கிடெக்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும் சேர்த்து கொள்ளலாம் என, தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவித்துள்ளது. இதை, அண்ணா பல்கலையின் கவுன்சிலிங் கமிட்டி ஏற்று கொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர், உயர்நீதிமன்றம் சென்று, தங்கள் விண்ணப்பத்தையும் ஏற்க அனுமதி பெற்றுள்ளனர். நீதிமன்ற உத்தரவு பெற்ற, மாணவரின் விண்ணப்பத்தை மட்டும், நீண்ட இழுபறிக்கு பின், கவுன்சிலிங் கமிட்டியினர் நேரில் பெற்றுள்ளனர். ஆன்லைனில் பதிவு செய்ய முடியவில்லை. யாராக இருந்தாலும், தனித்தனியே நீதிமன்ற உத்தரவை பெற்று வர, கவுன்சிலிங் கமிட்டியினர் அறிவுறுத்துகின்றனர். அதனால், மாணவர்களுக்கு வழக்குக்காக கூடுதல் செலவும், அலைக்கழிப்பும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, உயர்கல்வித் துறையினர் கூறியதாவது: தமிழக இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டியும், உயர்கல்வித் துறையும் இணைந்து செயல்படுவதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அதிகாரிகள், தாங்கள் முடிவு எடுப்பதை மட்டுமே செயல்படுத்த வேண்டும் என, கவுன்சிலிங் கமிட்டியினரை கட்டாயப்படுத்துகின்றனர். இந்த, 'ஈகோ' பிரச்னையால், ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை ஏற்பது குறித்து, கவுன்சிலிங் முடிவு எடுப்பதில் இழுபறி நீடிக்கிறது. அதனால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பி.ஆர்க்., கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்றுடன் முடிகிறது. நீதிமன்றம் உத்தரவிட்டும், ஜே.இ.இ., நுழைவு தேர்வு முடித்தவர்களிடம், அண்ணா பல்கலை விண்ணப்பங்களை பெறவில்லை. தமிழகத்தில், 53 பி.ஆர்க்., கல்லுாரிகளில், 2,720 இடங்கள் உள்ளன. இதில், 2,000க்கு மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும், தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் மூலம், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தமிழக இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டியினர், இந்த பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கிற்கு, ஜூன், 25ல் துவங்கிய ஆன்லைன் பதிவு துவங்கி, இன்றுடன் முடிகிறது. இதில், நாட்டா என்ற தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சிலின் திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என, கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., நடத்திய, ஜே.இ.இ., நுழைவு தேர்வில், ஆர்கிடெக்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும் சேர்த்து கொள்ளலாம் என, தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவித்துள்ளது. இதை, அண்ணா பல்கலையின் கவுன்சிலிங் கமிட்டி ஏற்று கொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர், உயர்நீதிமன்றம் சென்று, தங்கள் விண்ணப்பத்தையும் ஏற்க அனுமதி பெற்றுள்ளனர். நீதிமன்ற உத்தரவு பெற்ற, மாணவரின் விண்ணப்பத்தை மட்டும், நீண்ட இழுபறிக்கு பின், கவுன்சிலிங் கமிட்டியினர் நேரில் பெற்றுள்ளனர். ஆன்லைனில் பதிவு செய்ய முடியவில்லை. யாராக இருந்தாலும், தனித்தனியே நீதிமன்ற உத்தரவை பெற்று வர, கவுன்சிலிங் கமிட்டியினர் அறிவுறுத்துகின்றனர். அதனால், மாணவர்களுக்கு வழக்குக்காக கூடுதல் செலவும், அலைக்கழிப்பும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, உயர்கல்வித் துறையினர் கூறியதாவது: தமிழக இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டியும், உயர்கல்வித் துறையும் இணைந்து செயல்படுவதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அதிகாரிகள், தாங்கள் முடிவு எடுப்பதை மட்டுமே செயல்படுத்த வேண்டும் என, கவுன்சிலிங் கமிட்டியினரை கட்டாயப்படுத்துகின்றனர். இந்த, 'ஈகோ' பிரச்னையால், ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை ஏற்பது குறித்து, கவுன்சிலிங் முடிவு எடுப்பதில் இழுபறி நீடிக்கிறது. அதனால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான ஆசிரியர்கள் தேர்வு அறிவிப்பு ரத்து....

சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,000த்துக்கும் மேல் ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இரண்டு வாரங்களில், புதிய அறிவிப்பை வௌியிடவும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.


சேலம் மாவட்டத்தை சேர்ந்த செல்லமுத்து, வெங்கடேசன், ஆனந்தன் ஆகியோர் தாக்கல் செய்த மனு: பொறியியல் படிப்பில், முதுகலை பட்டம் பெற்றுள்ளோம். தொழில் கல்லுாரிகளில் பணிபுரிய, ஆசிரியர்களுக்கான கல்வி தகுதியை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துஉள்ளது. தமிழகத்தில், பாலிடெக்னிக் கல்லுாரிகளில், ஆசிரியர்களுக்கான கல்வி தகுதியை நிர்ணயித்து, விண்ணப்பங்களை வரவேற்று, ஆசிரியர் கல்வி வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள தகுதியை பின்பற்றினால், நாங்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுகிறோம். ஆனால், ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்த தகுதியை, ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றவில்லை.பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பணி யாற்றும் ஆசிரியர்களுக்கான தகுதி யாக, பொறியியல் பட்டத்தில் முதல் வகுப்பு அல்லது முதுநிலை பொறியியல் படிப்பில் முதல் வகுப்பு என, ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ளது. தற்போது, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், பொறியியல் படிப்பில் முதல் வகுப்பு என நிர்ணயித்துள்ளது. முதுநிலை பொறியியல் படிப்பு பற்றி, அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை.ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்த தகுதியை பின்பற்றியிருந்தால், முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றுள்ள நாங்கள், விண்ணப்பிக்க தகுதி பெற்றிருப்போம். எனவே, பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில், 2017 ஜூனில் வெளியிடப்பட்ட அறிவிப்பை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்து, இரண்டு வாரங்களில் புதிய அறிவிப்பை வெளியிடும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,000த்துக்கும் மேல் ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இரண்டு வாரங்களில், புதிய அறிவிப்பை வௌியிடவும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த செல்லமுத்து, வெங்கடேசன், ஆனந்தன் ஆகியோர் தாக்கல் செய்த மனு: பொறியியல் படிப்பில், முதுகலை பட்டம் பெற்றுள்ளோம். தொழில் கல்லுாரிகளில் பணிபுரிய, ஆசிரியர்களுக்கான கல்வி தகுதியை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துஉள்ளது. தமிழகத்தில், பாலிடெக்னிக் கல்லுாரிகளில், ஆசிரியர்களுக்கான கல்வி தகுதியை நிர்ணயித்து, விண்ணப்பங்களை வரவேற்று, ஆசிரியர் கல்வி வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள தகுதியை பின்பற்றினால், நாங்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுகிறோம். ஆனால், ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்த தகுதியை, ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றவில்லை.பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பணி யாற்றும் ஆசிரியர்களுக்கான தகுதி யாக, பொறியியல் பட்டத்தில் முதல் வகுப்பு அல்லது முதுநிலை பொறியியல் படிப்பில் முதல் வகுப்பு என, ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ளது. தற்போது, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், பொறியியல் படிப்பில் முதல் வகுப்பு என நிர்ணயித்துள்ளது. முதுநிலை பொறியியல் படிப்பு பற்றி, அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை.ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்த தகுதியை பின்பற்றியிருந்தால், முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றுள்ள நாங்கள், விண்ணப்பிக்க தகுதி பெற்றிருப்போம். எனவே, பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில், 2017 ஜூனில் வெளியிடப்பட்ட அறிவிப்பை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்து, இரண்டு வாரங்களில் புதிய அறிவிப்பை வெளியிடும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.

இக்னோவில் படிக்க கூடுதல் அவகாசம்

சென்னை : இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையான, 'இக்னோ'வில் படிக்க, கூடுதல் கால அவகாசமும், கட்டண சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது.

இக்னோ சென்னை மண்டல இயக்குனர் எஸ்.கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையின், ஜூலை மாத மாணவர் சேர்க்கைக்கு, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆறு மாத சான்றிதழ் படிப்புகளுக்கு, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், ஜூலை, 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு, ஜூலை, 31 வரை, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்.
இக்னோவின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார பட்டய படிப்பு முடிப்பவர்களை, சுகாதார கல்வியாளர் பதவியில் நியமிக்க, தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. எனவே, இந்த படிப்பிலும் மாணவர்கள் சேரலாம். மேலும், இக்னோ பாடத்திட்டத்தில் சேர்ந்து படிக்க, திருநங்கையருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருநங்கையர் பாடக் கட்டணம் செலுத்தாமல், இக்னோ படிப்புகளில் சேரலாம். 
படிப்பில் சேர விரும்புவோர், www.onlineadmission.ignou.ac.in என்ற இணையதளத்தில் விபரங்கள் பெறலாம். மேலும், rcchennai@ignou.ac.in என்ற இ - மெயில் முகவரி மற்றும் 044 - 243127662979 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சென்னை : இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையான, 'இக்னோ'வில் படிக்க, கூடுதல் கால அவகாசமும், கட்டண சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது. இக்னோ சென்னை மண்டல இயக்குனர் எஸ்.கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையின், ஜூலை மாத மாணவர் சேர்க்கைக்கு, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆறு மாத சான்றிதழ் படிப்புகளுக்கு, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், ஜூலை, 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு, ஜூலை, 31 வரை, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம். இக்னோவின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார பட்டய படிப்பு முடிப்பவர்களை, சுகாதார கல்வியாளர் பதவியில் நியமிக்க, தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. எனவே, இந்த படிப்பிலும் மாணவர்கள் சேரலாம். மேலும், இக்னோ பாடத்திட்டத்தில் சேர்ந்து படிக்க, திருநங்கையருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருநங்கையர் பாடக் கட்டணம் செலுத்தாமல், இக்னோ படிப்புகளில் சேரலாம். படிப்பில் சேர விரும்புவோர், www.onlineadmission.ignou.ac.in என்ற இணையதளத்தில் விபரங்கள் பெறலாம். மேலும், rcchennai@ignou.ac.in என்ற இ - மெயில் முகவரி மற்றும் 044 - 243127662979 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'டுபாக்கூர்' கல்லூரிகளில் பி.எட்., சேராதீர்! : : ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரிக்கை'டுபாக்கூர்' கல்லூரிகளில் பி.எட்., சேராதீர்! : : ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரிக்கை....

'தேசிய கல்வியியல் கவுன்சில் அங்கீகாரம் பெறாத, 'டுபாக்கூர்' ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகளில், பி.எட்., பட்டப்படிப்பில் சேர வேண்டாம்' என, கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது.

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, ஆசிரியர் படிப்புக்கான, பி.எட்., பட்டப்படிப்பு, கல்வியியல் கல்லுாரிகள் மூலம் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும், கல்வியியல் கல்லுாரிகளுக்கு, தேசிய கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ., மூலம் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. 
தமிழகத்தில், கல்வியியல் கல்லுாரிகளுக்கு, தேசிய கல்வி கவுன்சிலின் அங்கீகாரத்துடன், தமிழக கல்வியியல் பல்கலையின் சார்பில், இணைப்பும் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே, ஒரு ஆண்டு மட்டும் நடத்தப்பட்ட, பி.எட்., படிப்பு, ஒவ்வொரு கல்லுாரியிலும், கடந்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, வகுப்பறை, ஆய்வகம், பயிற்சி மையம் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில், 790 கல்லுாரிகளில் ஆய்வு நடத்தி, படிப்படியாக அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. அரசின், ஏழு கல்லுாரிகள், அரசு உதவி பெறும், 14 கல்லுாரிகளுக்கு, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர கவுன்சிலிங்கில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
மற்ற கல்லுாரிகளில், நேரடியாக நிர்வாக ஒதுக்கீட்டில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதில், பல கல்லுாரிகள் அடிப்படை உள் கட்டமைப்பை சரிசெய்யாமலும், தகுதியான முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களை நியமிக்காமலும், மாணவர்களை சேர்ப்பதாக புகார்கள் உள்ளன.

இதையடுத்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் தங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய கல்வி கவுன்சிலான, என்.சி.டி.இ., மூலம், அங்கீகாரம் வழங்கப்பட்ட கல்லுாரிகளில் மட்டும், பி.எட்., படிப்பில் மாணவர்கள் சேர வேண்டும். சட்டப்படி அனுமதியில்லாத கல்லுாரிகளிலும், படிப்புகளிலும் சேர்ந்தால், அதற்கான இழப்புகளுக்கு பல்கலையோ, தேசிய கல்வி கவுன்சிலோ பொறுப்பல்ல. இதுகுறித்து, http://www.ncte-india.org/ என்ற இணையதளத்தில், கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
'தேசிய கல்வியியல் கவுன்சில் அங்கீகாரம் பெறாத, 'டுபாக்கூர்' ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகளில், பி.எட்., பட்டப்படிப்பில் சேர வேண்டாம்' என, கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, ஆசிரியர் படிப்புக்கான, பி.எட்., பட்டப்படிப்பு, கல்வியியல் கல்லுாரிகள் மூலம் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும், கல்வியியல் கல்லுாரிகளுக்கு, தேசிய கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ., மூலம் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், கல்வியியல் கல்லுாரிகளுக்கு, தேசிய கல்வி கவுன்சிலின் அங்கீகாரத்துடன், தமிழக கல்வியியல் பல்கலையின் சார்பில், இணைப்பும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே, ஒரு ஆண்டு மட்டும் நடத்தப்பட்ட, பி.எட்., படிப்பு, ஒவ்வொரு கல்லுாரியிலும், கடந்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, வகுப்பறை, ஆய்வகம், பயிற்சி மையம் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில், 790 கல்லுாரிகளில் ஆய்வு நடத்தி, படிப்படியாக அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. அரசின், ஏழு கல்லுாரிகள், அரசு உதவி பெறும், 14 கல்லுாரிகளுக்கு, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர கவுன்சிலிங்கில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மற்ற கல்லுாரிகளில், நேரடியாக நிர்வாக ஒதுக்கீட்டில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதில், பல கல்லுாரிகள் அடிப்படை உள் கட்டமைப்பை சரிசெய்யாமலும், தகுதியான முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களை நியமிக்காமலும், மாணவர்களை சேர்ப்பதாக புகார்கள் உள்ளன. இதையடுத்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் தங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய கல்வி கவுன்சிலான, என்.சி.டி.இ., மூலம், அங்கீகாரம் வழங்கப்பட்ட கல்லுாரிகளில் மட்டும், பி.எட்., படிப்பில் மாணவர்கள் சேர வேண்டும். சட்டப்படி அனுமதியில்லாத கல்லுாரிகளிலும், படிப்புகளிலும் சேர்ந்தால், அதற்கான இழப்புகளுக்கு பல்கலையோ, தேசிய கல்வி கவுன்சிலோ பொறுப்பல்ல. இதுகுறித்து, http://www.ncte-india.org/ என்ற இணையதளத்தில், கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் நாளை கடைசி நாள்....

சென்னை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் பெற நாளை கடைசி நாள்.
தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், மாநில ஒதுக்கீட்டுக்கு, 2,594; சுயநிதி கல்லுாரிகளில், 1,300 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.
அரசியில், பி.டி.எஸ்., படிப்புக்கு, 170; சுய நிதி கல்லுாரிகளில், 1,710 இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோம், 22 அரசு மருத்துவ கல்லுாரிகளிலும் நடந்து வருகிறது. சுகாதாரத்துறை இணைய தளத்திலும், பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப வினியோகம் துவங்கிய, ஒன்பது நாட்களில், கல்லுாரிகள் மூலம், 41 ஆயிரத்து, 264 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை, 17ல் நடைபெற உள்ளது. இதுகுறித்து, மாணவர் சேர்க்கை குழு செயலர், செல்வராஜ் கூறுகையில், ''மருத்துவ கல்லுாரிகள் மற்றும் இணையதளத்தில் விண்ணப்பம் பெற, நாளை கடைசி நாள்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளை மறுநாள், மாலை, 5:00 வரை பெறப்படும்,'' என்றார்.

விண்ணப்பங்களை சமர்ப்பித்தோர் விண்ணப்ப படிவத்தின் தற்போதைய நிலை குறித்து www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது நீட் தேர்வு பதிவு எண்ணை பதிவு செய்து, தெரிந்து கொள்ளலாம். சென்னை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் பெற நாளை கடைசி நாள். தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், மாநில ஒதுக்கீட்டுக்கு, 2,594; சுயநிதி கல்லுாரிகளில், 1,300 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அரசியில், பி.டி.எஸ்., படிப்புக்கு, 170; சுய நிதி கல்லுாரிகளில், 1,710 இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோம், 22 அரசு மருத்துவ கல்லுாரிகளிலும் நடந்து வருகிறது. சுகாதாரத்துறை இணைய தளத்திலும், பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப வினியோகம் துவங்கிய, ஒன்பது நாட்களில், கல்லுாரிகள் மூலம், 41 ஆயிரத்து, 264 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை, 17ல் நடைபெற உள்ளது. இதுகுறித்து, மாணவர் சேர்க்கை குழு செயலர், செல்வராஜ் கூறுகையில், ''மருத்துவ கல்லுாரிகள் மற்றும் இணையதளத்தில் விண்ணப்பம் பெற, நாளை கடைசி நாள்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளை மறுநாள், மாலை, 5:00 வரை பெறப்படும்,'' என்றார். விண்ணப்பங்களை சமர்ப்பித்தோர் விண்ணப்ப படிவத்தின் தற்போதைய நிலை குறித்து www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது நீட் தேர்வு பதிவு எண்ணை பதிவு செய்து, தெரிந்து கொள்ளலாம்.

TEACHERS FORMS


1.     M.L FORMS
4.     E.L SURRENDER FORM
7.     FESTIVAL ADVANCE
8.     C.P.S.FORM
9.     GPF CLOSURE FORMAT