புதன், 17 மே, 2017
RTE - 25% Reservation Intake Capacity (2017-2018) - District and School wise Details (Nursery, Primary & Matriculation)
Right of Children to Free and Compulsory Education Act, 2009 - 25% Reservation Intake Capacity (2017-2018) - District and School wise Details...
S.No | District | Nursery & Primary Schools | Matriculation Schools |
1. | ARIYALUR | Download | Download |
2. | CHENNAI | Download | Download |
3. | COIMBATORE | Download | Download |
4. | CUDDALORE | Download | Download |
5. | DHARMAPURI | Download | Download |
6. | DINDIGUL | Download | Download |
7. | ERODE | Download | Download |
8. | KANCHEEPURAM | Download | Download |
9. | KANYAKUMARI | Download | Download |
10. | KARUR | Download | Download |
11. | KRISHNAGIRI | Download | Download |
12. | MADURAI | Download | Download |
13. | NAGAPATTINAM | Download | Download |
14. | NAMAKKAL | Download | Download |
15. | PERAMBALUR | Download | Download |
16. | PUDUKOTTAI | Download | Download |
17. | RAMANATHAPURAM | Download | Download |
18. | SALEM | Download | Download |
19. | SIVAGANGAI | Download | Download |
20. | THANJAVUR | Download | Download |
21. | THE NILGIRIS | Download | Download |
22. | THENI | Download | Download |
23. | THOOTHUKUDI | Download | Download |
24. | TIRUNELVELI | Download | Download |
25. | TIRUPPUR | Download | Download |
26. | TIRUVALLORE | Download | Download |
27. | TIRUVANNAMALAI | Download | Download |
28. | TIRUVARUR | Download | Download |
29. | TRICHY | Download | Download |
30. | VELLORE | Download | Download |
31. | VILLUPURAM | Download | Download |
32. | VIRUDHU NAGAR | Download |
பிளஸ் 2 சான்றிதழ் வெளியானது முதன்முதலாக தமிழுக்கு முக்கியத்துவம்
பிளஸ்2தேர்வில், மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் நேற்று வெளியானது. இதில், முதன்முதலாக, தமிழில் விபரங்கள் இடம் பெற்றுள்ளன. பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுகளில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. முதன்முதலாக, மாநில, மாவட்ட அளவிலான, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டது. இதற்கு, பல தரப்பிலும் ஆதரவுகள் குவிந்துள்ளன.இந்நிலையில், பிளஸ் 2 தேர்வுக்கான தற்காலிக சான்றிதழ், நேற்று, தேர்வுத்துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றை பதிவு செய்து, மாணவர்களே, மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். நாளை முதல் பள்ளிகளில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.இந்த ஆண்டு சான்றிதழில், முதன்முதலாக மாணவரின் பெயர், பள்ளியின் பெயர் போன்ற விபரங்கள், தமிழில் இடம் பெற்றுள்ளன. சான்றிதழில், தமிழுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, தமிழிலும், அதையடுத்து ஆங்கிலத்திலும், விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.மாணவர்களின் தேர்வு எண், அவர்கள் படித்த பாடப்பிரிவின் குறியீட்டு எண், சான்றிதழுக்கான நிரந்தர பதிவு எண், பயிற்று மொழி, தேர்வு முடிவு தேதி போன்றவை இடம் பெற்றுள்ளன. தற்காலிக சான்றிதழ், தேர்வு முடிவு வெளியான தேதியிலிருந்து, 90 நாட்களுக்கு மட்டுமே செல்லும்.
உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் : கலெக்டர்களுடன் ஆலோசனை
உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட கலெக்டர்களுடன், மாநில தேர்தல் கமிஷன் ஆலோசிக்க உள்ளது. தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலை, ஜூலை மாதத்திற்குள் நடத்தி முடிப்பதாக, உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் கமிஷன் உறுதி அளித்துள்ளது.
இது குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில், மாநில தேர்தல் கமிஷனுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அரசிடம் இருந்து, இட ஒதுக்கீடு பட்டியல் இன்னும் கிடைக்கவில்லை; வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளும் முடியவில்லை. ஏப்., 4ல், திருச்சி சென்ற, மாநில தேர்தல் கமிஷனர் மாலிக் பெரோஸ்கான், திருச்சி, அரியலுார், பெரம்பலுார் மாவட்ட, உள்ளாட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, ஏப்., 20க்கு பின், மண்டல வாரியாக, மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
பிழை திருத்தும் தமிழ் சாப்ட்வேர் 'சிடி' வெளியீடு
சென்னை: இலக்கண பிழைகளை திருத்தும், 'அம்மா மென்தமிழ் சொல்லாளர்' என்ற, தமிழ் சாப்ட்வேர், 'சிடி'யை, முதல்வர்பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
கம்ப்யூட்டரில், ஆங்கில மொழியில், பிழை திருத்த, சொல் திருத்த வசதி உள்ளது. அதேபோல், தமிழில், ஒற்றுப்பிழை, சந்தி உள்ளிட்ட இலக்கண பிழைகள் இல்லாமல் எழுதவும், தவறுகளை தானே சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ளவும், எழுத்துருக்களை மாற்றிக் கொள்ளவும், 'அம்மா மென்தமிழ் சொல்லாளர்' என்ற பெயரில், புதிய தமிழ் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் விலை, 300 ரூபாய். இது, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த சாப்ட்வேர், 'சிடி'யை, நேற்று,தலைமைச்செயலகத் தில், முதல்வர் பழனிசாமி வெளியிட, அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.
24 வயதை தாண்டினால் கல்லூரியில் சேர முடியாது
'கலை, அறிவியல் கல்லுாரிகளில், 24 வயதுக்கு மேலானோரை பட்டப்படிப்பில் சேர்க்கக்கூடாது' என, கல்லுாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளன. கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான வழிமுறைகளை, கல்லுாரிகளுக்கு, இயக்குனர், மஞ்சுளா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
* இட ஒதுக்கீடு மற்றும் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்க வேண்டும்
* இளநிலை பட்டப்படிப்பில், மாணவர்களை சேர்க்க, 21 வயது அதிகபட்ச வயது நிர்ணயிக்கப் படுகிறது. பொது பிரிவினர் தவிர மற்றவர்களுக்கு,
மூன்றாண்டுகள் வரை கூடுதல் சலுகை உண்டு. அதன்படி, 24 வயது வரையுள்ளோரை, கல்லுாரிகளில் நேரடி பட்டப்படிப்புக்கு சேர்க்கலாம்
* மாற்று திறனாளிகளுக்கு, ஐந்து ஆண்டு சலுகை வழங்கி, 26 வயது வரை, மாணவர்களை சேர்க்கலாம். இதில், எந்த விதி மீறலும் இருக்க கூடாது. மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
பள்ளி பதிவேடுகளில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான வழி....
பள்ளி பதிவேடுகளில் பெயர் மாற்றம் / திருத்தம் செய்வது எப்படி? அரிய தகவல்கள் :
பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோரும் விண்ணப்பங்கள் பரிந்துரை செய்வது தொடர்பாக அரசு கீழ்க்கண்ட விளக்கங்களை அளித்துள்ளது.
மாணவரின் பெற்றோரால் சரியாக விவரங்கள் கொடுக்கப்பட்டு பள்ளி பதிவின்போது பள்ளி நிர்வாகத்தால் தவறு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது காலண்டரில் இல்லாத தேதி பிறந்த தேதியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு பிறந்த தேதியை திருத்தம் செய்யுமாறு உரிமையியல் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்திருந்தாலோ பள்ளிப்படிப்பை முடித்து மதிப்பெண் சான்றுகளையும் பெற்றுக் கொண்ட பின் பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் மேற்கொள்வது என்பது பிரிவு 5 ன்படி ஏற்கத்தக்கதல்ல.
பத்தாம் வகுப்பு அரசு தேர்விற்கு பெயர்ப்பட்டியல் அனுப்பப்படுவதற்கு முன்னர் உரிய சான்றுகளின் அடிப்படையில் பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தங்களை செய்வதற்கு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிப்படிப்பை முடித்து மதிப்பெண் சான்றுகளையும் பெற்றுக் கொண்ட பின் தந்தை பெயர் மற்றும் முகப்பெழுத்து திருத்தம் கோரி தொடரப்பட்ட வழக்கில் (வழக்கு எண் - W. P. NO - 25677/2010 in M. P. NO - 1 & 2 /2011, R. Yoga Priya Vs Director of School Education) சென்னை உயர்நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.
"Since the petitioner has already published her name change in the Govt. Gazette as stated Supra, the name is sufficient for all purposes ans everybody is bound to accept the same as the changed name of the petitioner. Hence there is no error in the order passed by the respondent i. e) Director of School education refusing top carry our the name (or) Initial Change in the Certificates in the Certificates as requested by the petitioner ".
சாதித் திருத்தம் கோரும் நிகழ்வுகளில் முதலில் தவறான சாதி குறிப்பிடப்பட்டு பின்னர் வருவாய்த்துறை வழங்கும் சாதிச் சான்றிதழின் படி திருத்தம் கோரப்பட்டால் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் அவ்வாறான திருத்தம் மேற்கொள்ளப்படாது. ஏனெனில் வருவாய்த்துறை வழங்கும் சாதிச் சான்றிதழே இறுதியானதும், ஏற்றுக்கொள்ளதக்கதும் ஆகும்.
பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோருவோர் கல்வித்துறையில் பணிபுரிபவர்கள் என்றால் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்குள் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதர அரசு துறைகளில் மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோர் பிறந்த தேதி /தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோரி தங்கள் நியமன அலுவலர் மூலம் வருவாய் நிர்வாக அலுவலர், பேரிடர் மேலாண்மை, சேப்பாக்கம், சென்னை - 600005 மூலம் நேரடியாக அரசு தேர்வுத்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறைக்கு கருத்துக்கள் அனுப்பக்கூடாது.
உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளின் அடிப்படையில் பிறந்த தேதி /தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோருவோர் இருதரப்பு வாதங்களின் அடிப்படையிலான தீர்ப்பின் அசல் மற்றும் அசல் கல்விச் சான்றுகளுடன் அன்னார் 10 ஆம் வகுப்பு பயின்ற பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கருத்துக்களை பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.
ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது என்பதால், அத்தகைய தீர்ப்புகள் பெறப்பட்டால் சார்ந்த மேல்முறையீட்டு மனு உடன் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ஒருதலைப்பட்ச தீர்ப்பின் அடிப்படையில் திருத்தம் கோரும் கருத்துக்களை பரிந்துரைக்கக்கூடாது.
வழக்குகளில் தலைமைச் செயலாளர் / கல்வித்துறை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஒரு தரப்பினராக இருந்தால் (One of the Department) அவர்களை நீக்கம் செய்திட (Deletion) மனு செய்திட வேண்டும். ஏனெனில் கல்விச் சான்றுகளில் திருத்தம் செய்யும் அதிகாரம் பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் இதர துணைத்தலைவர்களின் பரிந்துரையின் பேரில் அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு மட்டுமே உள்ளது.
பள்ளி நிர்வாகத்தால் தவறு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது காலண்டரில் இல்லாத தேதி பிறந்த தேதியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு பிறந்த தேதியை திருத்தம் செய்யுமாறு உரிமையியல் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்திருந்தாலோ கீழ் குறிப்பிட்ட ஆவணங்களுடன் மாணவர் 10 ஆம் வகுப்பு பயின்ற பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கருத்துக்களை பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.
மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பயின்றவர்கள் சார்ந்த மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் / ஆங்கிலோ இந்திய பள்ளி ஆய்வாளர் மூலம் மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர் மூலம் அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். ஆதிதிராவிடர் பள்ளிகளில் பயின்றவர் என்றால் ஆதிதிராவிட இயக்குனருக்கு அனுப்பக்கூடாது. இத்தகைய கருத்துக்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கக்கூடாது.
முற்றிலும் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள் நேரிடையாக அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவர்களது கருத்துக்களையும் முதன்மை கல்வி அலுவலர்கள் / மாவட்ட கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கக்கூடாது.
மாணவர் சேர்க்கை தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் தலைமையில் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் உடன் சென்னையில் நேற்று (16.05.2017) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முக்கிய முடிவுகள்!!.
1. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த முடிவு. இதில் ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளையும் ஈடுபடுத்த முடிவு.
2. தொடக்க , நடுநிலைப்பள்ளிகளில் பதிவுத்தாள் (RECORD SHEET) பதில் மாற்றுச்சான்றிதழ் (TC) வழங்கப்படும் ( ஓரிரு நாளில் அரசாணை வெளியீடு).
3. வரும் ஆண்டுமுதல் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் சிறப்பான திட்டமிடலுடன் வழங்கப்படும்.
பிளஸ் 2 'மார்க் ஷீட்' பள்ளிகளில் கிடைக்கும்
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், இன்று முதல், பள்ளிகளில் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவு, 12ல் வெளியானது. நேற்று முன்தினம் முதல், தேர்வுத்துறையின், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்டது.
இன்று முதல், மாணவர்களுக்கு அவர்களின் பள்ளிகளிலும், தனித் தேர்வர்களுக்கு, தேர்வு மையங்களிலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது
RTE சேர்க்கை கூடுதல் அவகாசம் தர அரசுக்கு கோரிக்கை
மத்திய அரசின் கட்டாயக் கல்வி சட்டத்தில், தனியார் மெட்ரிக் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணம், நன்கொடை இன்றி மாணவர்கள் சேர்க்கப்படுவர். இந்த சட்டத்தில், எல்.கே.ஜி.,யில் சேரும் மாணவர்களுக்கு, எட்டாம் வகுப்பு வரை, எந்த வித கட்டணமும் இன்றி, பாடங்கள் நடத்தப்படும்.
பொருளாதாரத்தில் நலிந்த, அனைத்து குடும்பத்தினரும், குழந்தைகளை சேர்க்கலாம்.தமிழகத்தில், எல்.கே.ஜி., என்ற நுழைவு வகுப்பில், 10 ஆயிரம் பள்ளிகளில், 1.26 லட்சம் இடங்கள், இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப் பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில், 'ஆன்லைனில்' பதிவு செய்ய வேண்டும்.
இதுவரை, 40 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பதிவு செய்துள்ளனர்; நாளை விண்ணப்ப பதிவு முடிகிறது. இன்னும், ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் அளிக்கலாம்.
இது குறித்து, பெற்றோர், மாணவர்கள் மேம்பாட்டு நலச் சங்க பொதுச்செயலர், வி.பி.வில்லியம்ஸ் கூறுகையில், ''பெரும்பாலான மாணவர்களுக்கு, எப்படி விண்ணப்பிப்பது என, தெரியவில்லை. தனியார் பள்ளிகள் இதற்கு வழிகாட்ட வேண்டும். விண்ணப்பிக்கும் அவகாசத்தை, இந்த மாத இறுதி வரை, தமிழக அரசு நீட்டிக்க வேண்டும்,'' என்றார்.
யாருக்கு தகுதி? : இலவச கல்வி திட்டத்தில், ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்கு குறைவான அனைவரும் விண்ணப்பிக்கலாம். அரசு வருவாய் துறை வழங்கும், வருமானச் சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும். மாணவர்களின் விண்ணப்பங்கள், அரசு அதிகாரிகள் முன் பரிசீலிக்கப்பட்டு, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். மாணவரின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், இருப்பிட சான்றும் அவசியம்.
பொறியியல் கல்லூரிகளுக்கும் 'நீட்' : மத்திய அரசு ஆலோசனை...
மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லுாரிகளுக்கு, நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வான, 'நீட்' கொண்டு வரப்பட்டதைபோல், பொறியியல் கல்லுாரிகளுக்கும் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை, 'நீட்' எனப்படும் பொது நுழைவுத் தேர்வு மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு இந்த நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது நாடு முழுவதும், 3,300க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு ஆண்டும், 16 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
நீட் பாணியில், பொறியியல் கல்லுாரிகளுக்கும், பொது நுழைவுத் தேர்வு நடத்த, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துஉள்ளது. இதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மூன்றாண்டுகளை நிறைவு செய்வது குறித்து, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
நீட் தேர்வு என்பது, நுழைவுத் தேர்வை வெற்றிகரமாக நடத்தி, அதன் முடிவுகளை வெளியிடுவதுடன் முடிவடையாது. கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். மாணவர்களின் திறமை வெல்கிறதா, பணம் வெல்கிறதா என்பதை, இந்த நுழைவுத் தேர்வு முடிவு செய்யும்.இதுபோலவே, பொறியியல் கல்லுாரிகளிலும், திறமையுள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், பொது நுழைவுத் தேர்வு கொண்டு வர, ஏற்கனவே கொள்கை அளவில் தீர்மானித்து, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இருப்பினும், மருத்துவக் கல்வியில் மாணவர் சேர்க்கை முடிவடையும் வரை காத்திருக்க உள்ளோம். வரும், ஜூலைக்கு பிறகு, பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்....
மத்திய அரசு திடீர் உத்தரவு சித்தா, ஆயுர்வேத படிப்புக்கும் அடுத்த ஆண்டு நீட் கட்டாயம்....
எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பிற்கு ‘நீட்’ தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்நிலையில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இயற்கை மருத்துவ படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்த வேண்டும் என்று ஆயுஸ் எனப்படும் மத்திய ஆயுர்வேதா, யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தாண்டு சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில் ஆயுஸ் நடத்தும் பட்டப்படிப்புகள் சேர்க்கப்படவில்லை. மருத்துவக் கல்வியின் தரத்தை கருத்தில் கொண்டு ஆயுஸ் வழங்கும் மருத்துவ பட்டப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு அடிப்படையில் ஏற்கனவே உள்ள இன சுழற்சியின் படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். எனினும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் இந்த ஆண்டு ஆயுஸ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் அந்தந்த மாநில அரசே பொது நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தலாம்.
அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையிலேயே ஆயுஸ் வழங்கும் அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் மாணவர்களை சேர்க்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த மாதம் 26ம் தேதியே அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பாளையங்கோட்டை, சென்னையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. நாகர்கோவிலில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த சித்தா, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதல்வர்களின் கூட்டம் சென்னையில் 22ம் தேதி நடக்கிறது. அந்த கூட்டத்தில் இந்த உத்தரவு குறித்து விவாதிக்கப்படுகிறது.
10ம் வகுப்பு தேர்வில் 'ரேங்க்' அறிவிக்க தடை
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, நாளை மறுநாள் வெளியாகும் நிலையில், 'ரேங்க் அறிவிக்க கூடாது' என, பள்ளிகளுக்கு, கல்வித்துறை எச்சரித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில், பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த, 'ரேங்க்' முறை, இந்த ஆண்டு அதிரடியாக ஒழிக்கப்பட்டது. இதற்காக, பள்ளிக்கல்வி அமைச்சர், செயலர் மற்றும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன. தனியார் பள்ளிகளும், தங்கள் பள்ளிகளின், 'டாப்பர்ஸ்' பட்டியலை வெளியிடவில்லை.
இந்நிலையில், 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகளை, பள்ளிக்கல்வித் துறை, நாளை மறுநாள் வெளியிடுகிறது. இதிலும், மாநில, மாவட்ட அளவில், 'ரேங்க்' பட்டியல் முறை கிடையாது என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில பள்ளிகள், அதிகபட்ச மதிப்பெண் பெற்ற மாணவர்களை, 'டாப்பர்ஸ்' ஆக அறிவிக்க, முடிவு செய்துள்ளன. இதற்கு, தமிழக பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது. மெட்ரிக் பள்ளி இயக்ககம் அனுப்பிய சுற்றறிக்கையில், 'எந்த தனியார் பள்ளியும், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறும், தங்கள் மாணவர்களுக்கு, முதல் மூன்று, 'ரேங்க்' வைத்து, அவர்களின் பட்டியலை பிரபலப்படுத்தக் கூடாது; அரசின் அறிவிப்புக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு வெயிலில் பயிற்சி
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் விளையாட்டு ஆசிரியர்களுக்கு(பிஇடி) 3 நாள் பயிற்சியை நடத்த முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் நடத்த உத்தரவிட்டுள்ளார். இதன்படி நேற்று முதல் 18ம் தேதி வரை இந்த பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சிக்காக அந்தந்த மாவட்டத்தில் உள்ள விளையாட்டு ஆசிரியர்களுக்கு செல்போன் மூலம் அவசர அழைப்பு விடுக்கப்பட்டது.
நேற்று காலை மாவட்ட அலுவலகங்களில் குவிந்த விளையாட்டு ஆசிரியர்களுக்கு திறந்தவெளி மைதானத்தில் புதிய விளையாட்டுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதாவது, பீச் வாலிபால், உள்ளிட்ட விளையாட்டுகள் பயிற்சி அளிக்கப்பட்டது. கோடையில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் விளையாட்டு ஆசிரியர்கள் வெயிலில் பயிற்சி எடுத்து அவதிப்பட்டனர். இது குறித்து பள்ளிக்் கல்வி இயக்குநருக்கு புகார்கள் அனுப்பியும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என விளையாட்டு ஆசிரியர்கள் புலம்புகின்றனர். மேலும், இந்த பயிற்சியை பள்ளி திறந்த பிறகு அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
கால்நடை மருத்துவப் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்
கால்நடை மருத்துவப் படிப்பு களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது தொடங்கியது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி,ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 320 இடங்கள் இருக்கின்றன.கால்நடை மருத்துவப் படிப்பு களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. வரும்31-ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றிதழ்களுடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை-600 051 என்ற முகவரிக்கு ஜூன் 7-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.இரண்டு படிப்புகளுக்கு விண் ணப்பிப்பவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 320 இடங்கள் இருக்கின்றன.கால்நடை மருத்துவப் படிப்பு களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. வரும்31-ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றிதழ்களுடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை-600 051 என்ற முகவரிக்கு ஜூன் 7-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.இரண்டு படிப்புகளுக்கு விண் ணப்பிப்பவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தரவரிசைப் பட்டியல் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்படும். ஜூலை 19, 20, 21-ம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கும்.இத்தகவல்களை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.திலகர் தெரிவித்தார்.
11ஆம் வகுப்புக்கு மாநில அளவில் பொதுத்தேர்வு - தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு........
பிளஸ் 1 மாணவர்களுக்கு இனி பொதுத்தேர்வு… செங்கோட்டையன் தகவல்
பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
'தமிழகத்தில், அடுத்த ஆண்டு முதல் ப்ளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும்' என்று சென்னையில் பேட்டி அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதிவரும் நிலையில், அடுத்த ஆண்டு முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களும் பொதுத்தேர்வு எழுதுவார்கள்.
அண்மையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னர், பொதுத் தேர்வுகளுக்கு இனி ரேங்க்கிங் முறை இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி இந்த ஆண்டு முதல் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் இந்த முடிவுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே நல்ல வரவேற்புக் கிடைத்தது. இந்நிலையில் தற்போது 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்னும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் செங்கோட்டையன்!
பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பதை குறித்து பரிசீலிக்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
வெயில் அதிகமாக உள்ளதால் பள்ளி திறப்பு தள்ளிவைக்கப்படுமா என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர்
"இதுகுறித்து பெற்றோர், நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து தேவைபட்டால் பள்ளி திறப்பு தள்ளிவைப்பது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)