>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 8 மார்ச், 2017

CPS வல்லுநர் குழு மேலும் மூன்று மாதங்கள் நீட்டிப்பு.


TRB -TET Important Announcement Regarding 2nd List

 TET ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் ஒரு குறிப்பிட்ட காலி பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது இன்று (7-3-2017) TRB அறிவிப்பு
TET இரண்டாவது பட்டியல் தொடர்பான அறிவிப்பு வெளியீடு. 

TET எழுதுவோர் கவனத்திற்கு துறை அனுமதி கண்டிப்பாக பெற வேண்டும். மாதிரி விண்ணப்பம்

இடைநிலை ஆசிரியர்கள்TET எழுதுவோர் கவனத்திற்கு...இடைநிலை ஆசிரியர்கள்TET எழுதுவோர் கவனத்திற்கு
துறை அனுமதி கண்டிப்பாக பெற வேண்டும்.
மாதிரி விண்ணப்பம்
அனுப்புநர்:
...............................
ஊ.ஒ.தொ/நடுநிலை பள்ளி,
..............................,
பெறுநர்:
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள்,
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம்,
வழி:
1)உ.தொ.க.அலுவலர் அவர்கள்,
2)தலைமை ஆசிரியர்
...,.,.......................
ஐயா,
பொருள் (தகுதி தேர்வு எழுத துறை அனுமதி வேண்டுதல் சார்பு)
நான் மேற்கண்ட பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். நான் ஏப்ரல் 2017ல் நடைபெறும் பட்டதாரிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வெழுத (தாள்-2) விண்ணப்பித்து உள்ளேன்.அதனால் எனக்கு ஆசிரியர் தகுதித் தேர்வெழுத துறை அனுமதி வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
                                                                                                                             இப்படிக்கு,
                                                                                                                                  ......................
இடம்:
நாள்:
இணைப்பு.
1)ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் நகல்-2
2)உயர்கல்வி Convocation சான்றிதழ் நகல்-2.
3)பணிநியமன ஆணை நகல்
(DEEO, AEEO, பள்ளி சேர்க்கை அறிக்கை
மூன்றும் இணைக்க வேண்டும்.
உயர் கல்வி பயில முன்னனுமதி வாங்கியிருந்தால் அதன் நகலையும் இணைக்க வேண்டும்)
*முக்கிய குறிப்பு*
Covering letter இரண்டு எழுத வேண்டும்

TRB B.T.ASST RECRUITMENT 2017 |ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 1111 பட்டதாரி ஆசிரியர்கள் உடனடி நியமனம்.

TRB B.T.ASST RECRUITMENT 2017 |ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 1111 பட்டதாரி ஆசிரியர்கள் உடனடி நியமனம்.

2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சிபெற்று தகுதிபெற்றுள்ள நாடுநர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன. இதற்கான பட்டியல் 10.03.2017 அன்று வெளியிடப்படவுள்ளது. விரிவான விவரங்கள்... ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 286 பட்டதாரி ஆசிரியர்கள், பின்னடைவுப் பணியிடங்கள் 623 மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் 202 பட்டதாரி ஆசிரியர் & (IEDSS) பணியிடங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு 2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சிபெற்று தகுதிபெற்றுள்ள நாடுநர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன. இந்நிலையில் (i) ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் (ii) ஏற்கனவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருகை தராதவர்கள் (iii) பி.எட்., பயின்ற ஆண்டே ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி அந்த கல்வியாண்டே பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் (vi) சான்றிதழ் சரிபார்ப்பின்போது பணித்தெரிவுக்கு உரிய தகுதி பெறாமல் தற்போது தகுதிபெற்றவர்கள் ஆகியோர்கள், மீளவும் வாய்ப்பு வழங்கவேண்டி விண்ணப்பித்துள்ளார்கள். எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வு 2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் (தாள்- II ல்) தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிப்பட்டியல் (Merit List) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in.) 10.03.2017 அன்று வெளியிடப்படவுள்ளது. நாடுநர்கள் மேற்கண்ட விவரங்களை இணையதள வழிமூலம் (online)சரிபார்த்துக் கொள்ளலாம். ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்- II பதிவு எண் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். பதிவெண் நினைவில் கொள்ளாதவர்கள் பெயர் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். மேற்கண்ட நாடுநர்கள் தங்களின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் சரிபார்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. நாடுநர்கள் (Candidates) தங்களின் ஒருசில விவரங்களை திருத்தம் மேம்படுத்தவேண்டும் எனில் online -லேயே மேற்கொள்ளலாம். நாடுநர்கள் தங்களின் அசல் ஆவணங்களைக்கொண்டு விவரங்களை மீள சரிபார்த்து புகைப்படம் மற்றும் கையொப்பமிட்டு உறுதிச் சான்றினை தரவேண்டும். மேற்கண்ட விவரங்களை 10.03.2017 காலை 10.00 மணி முதல் 20.03.2017 இரவு 10.00 மணிவரை இணையதளத்தில் சரிபார்த்து, திருத்தம் தேவை எனில் டிடேiநே-ல் மேற்கொள்ளலாம். இணையதளம் மூலமாகவே திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எக்காரணம் கொண்டும் மீளவும் இதுபோன்று வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது. கால நீட்டிப்பும் செய்யப்படமாட்டாது. மேற்கண்டவாறு சரிபார்க்கப்பட்ட விவரங்களைக்கொண்டு இறுதி தகுதிப்பட்டியல் (Final Merit List) தயார் செய்யப்படும். மேற்கண்ட இறுதி தகுதிப்பட்டியல் கொண்டுதான் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவிக்கலாகிறது. தகவல் : தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-6

ஆசிரியர் தகுதி தேர்வு காரணமாக 3 தேர்வுகளின் தேதி மாற்றம் : TNPSC

ஆசிரியர் தகுதி தேர்வு காரணமாக 3 தேர்வுகளின் தேதியைமாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது விடுதி கண்காணிப்பாளர்  மற்றும் உடற்பயிற்சி   அலுவலர்  பணிக்கான  தேர்வுமே 20ம் தேதிக்கு மாற்றியும், செயல் அலுவலர் நிலை - 3 தேர்வு ஜூன்10ம் தேதிக்கும்,செயல் அலுவலர் நிலை - 8க்கான தேர்வு ஜூன் 11ம் தேதிக்கும் மாற்றிடிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

உலக மகளிர்தினக் கவிதை (மார்ச் 8 மகளிர் தினம்)

தோழி
உன்னைத் தொட்டிலிலே போட்டுத்
தாலாட்டுப் பாடி தூக்கத்திலே
வைக்கும் புலன் கெட்ட மாந்தர் மத்தியில்
உன் விழிப்பு அவசியமானதொன்றே !
பெண்ணென்பார் ... பாவியர் அவரே உன்னைப்
பேதையென்றும் பழிப்பார்
பூவென்பார் பெண்ணே பின்னர்
பூவுக்குள் புகுந்த நாகம் என்றும்
புண்ணாக்கும் வகையில் பேசிடுவார்
தாயாகச், சேயாக, தங்கையாக, தாரமாக‌
தரைமீது பொறுமை மிக்க பூவையாக‌
பெண்ணே நீ படைக்கும் பாத்திரங்கள்
பாரினில் பரிசுத்தம் ஆனவை
அன்றொரு நாள் முப்பாட்டன் பாரதி
அடுக்களையில் பால்காய்ச்ச முடியாமல்
அண்ணந்து படுத்தபடியே சிந்தித்தான்
அருமையான் பெண்களின் அற்புத சேவைகளை
விடிந்ததும், வானம் வெளுத்ததும்
பிறந்தது அவ்னது பெண்ணடிமை ஒழிக்கும்
பொன்னான கவிதைகள்
சிங்கார வனிதையரின் கால்களில்
சமுதாய வரம்புகள் எனும்
சிறைபிடிக்கும் விலங்குகளை பிணைத்து
சிறுமதிபடைத்தோரே ஏன் கேட்கிறீர் உமக்கோர் விடிதலி ?
சீறினான் எமது சிங்கக் கவிஞன் பாரதி
பாரெங்கும் புகழ் பறக்க எம் தமிழ்ப் பெண்களே !
தேரோடி படைத்திடுவீர் புதுச் சாதனைகள்
பெண்புத்தி பின்புத்தி என்றெல்லாம்
பொய்வார்த்தை சொல்லி உமை ஏய்த்திடும்
புல்லுருவிக் கூட்டத்தின்
முகத்திரையைக் கிழித்திடுவீர்
அரைகுறை ஆடையணிந்து
அவமானச் சின்னங்களாய்
ஆடித் திரியும் சில பெண்களால்
எம் பாரதி சொன்ன புதுமைப் பெண்களின்
எழுச்சியைத் தடுத்து விட முடியாது
எனும் உண்மையை சமுதாய வரம்புகளின்
நியாயமான வரையறையை வகுத்து
முன்னேறி நிரூபிக்கும் திறமை ! தோழியரே,
சோதரியரே உங்கள் கைகளில் தான் உள்ளது
உங்களால் முடியும் ............
படையுங்கள் புது இலக்கியங்களை ......
நிகழ்த்துங்கள் புதிய கண்டு பிடிப்புகளை ........
வாழுங்கள் விஞ்ஞானத் தாய்களாய் .......
வளருங்கள் புதியதோர் எழுச்சி மிக்க‌
தமிழர் சமுதாயத்தை ........
ஆம் நீங்கள் விழித்துக் கொண்டு விட்டீர்கள்
இனி உங்களைத் தூங்க வைக்க முடியாது.

செவ்வாய், 7 மார்ச், 2017

ஆங்கிலத்தில் பேசினால் தமிழில் கேட்கலாம்: விரைவில் அறிமுகமாகிறது ‘பேச்சுணரி தொழில்நுட்பம்

ஆங்கிலத்தில் பேசினால் தமிழில் கேட்கும் ‘பேச்சுணரி தொழில்நுட் பத்தை’ (Speach recognition real-time translation technology) விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக இந்திய மொழித் தரவுகள் ஒருங் கிணைப்பு, சேகரிப்பு ஆராய்ச்சி நிலையத் தலைவர் எல்.ராமமூர்த்தி தெரிவித்தார்.
திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்துக்கு அண்மையில் வந் திருந்த அவர், ‘தி இந்து’விடம் கூறியதாவது: ‘‘மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் இந்திய மொழித் தரவுகள் சேகரிப்பு ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. தொழில்நுட்பத்தை மொழிகளுக்குள் கொண்டு வரு வதுதான் இந்த மையத்தின் நோக்கம்.
22 இந்திய மொழிகளில்
அதற்காக மத்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து அங்கீகரிக்கப்பட்ட 22 இந்திய மொழிகளின் தரவுகளைக் கணினி மயமாக்குவதும், அதனை இயந்திர மொழிபெயர்ப்பு வாயி லாக ஒரு மொழியில் உள்ள இலக்கண, இலக்கியம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை மற்றொரு மொழியைப் பேசுவோரிடம் கொண்டு சேர்ப்பதையும் முக்கிய பணியாக இந்த அமைப்பு செய்து வருகின்றது.
அந்தவகையில் கணினியில் தட்டச்சு செய்யப்படும் வார்த்தைகளை, வேண்டிய மொழிகளில் மொழிபெயர்த்து தட்டச்சாகச் செய்வது போன்ற எழுத்துணரி தொழில்நுட்பத்தையும், பேசுகின்ற மொழியை தேவையான மொழி களில் மொழிபெயர்த்துக் கேட்பது (ஆங்கிலத்தில் பேசுவதை தமிழ் உட்பட அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் கேட்பது) போன்ற பேச்சுணரி தொழில்நுட்பத்தையும் உருவாக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.80 சதவீத தரவுகள் கணினிமயம்இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் 80 சதவீதம் தரவுகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக தமிழ் மொழியில் பெரும்பான்மையான தரவுகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இன்னும் மூன்றாண்டுகளில் இந்த மூன்று மொழிகளிலும் பேச்சுணரி தொழில்நுட்பம் அறிமுகமாக வாய்ப்புள்ளது.இந்த தொழில்நுட்பம் முழுமை யாக நடைமுறைக்கு வந்தால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் எந்த மொழி தெரிந்தவர்களாக இருந்தாலும் பேச்சுணரி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தனது தாய் மொழியிலேயே பேசி விளக் கங்களைப் பெறமுடியும். உதார ணத்துக்கு, ரயில் நிலையத்தில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத் தும்போது ரயில் எத்தனை மணிக்கு வரும், ரயில் எங்கு செல்கிறது போன்ற தகவல்களைத் தனது வட்டார மொழியிலேயே பேசி, கணினி வாயிலாக புரியவைத்து, தேவையான மொழியில் பதிலைப் பெறமுடியும்.300 பேருக்கு மேல் பயிற்சிஇந்தப் பணியை விரைவாக மேற்கொள்வதற்குத் தேவைப்படும் மொழியியலாளர்கள் குறைவாக உள்ளனர். தமிழ் மொழியில் மொழி யியலாளரை அதிகப்படுத்த தற் போது பயிற்சிகள் வழங்கப்படு கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர் களுக்கு இந்த பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.இவ்வாறு பயிற்சி பெற்றவர் களில் ஆர்வமிக்கவர்களுக்கு கூடுதலாகப் பயிற்சியளித்து, சிறந்த மாணவர்களை ஆராய்ச்சிமையத்தில் மொழித்தரவுகள் உருவாக்குதல் மற்றும் மொழி யியல் தொழில் நுட்பத்தை புகுத் தும் பணியில் பயன்படுத்தவுள்ளோம்’’ என்றார்.
விவசாயம் சுற்றுலாத் துறையில் விரைவில் அறிமுகம்
“இந்த பேச்சுணரியின் முன்னோட்டமாக ஓரிரு மாதங்களில் விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறையில் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளோம். விவசாயத் துறையில் உற்பத்திப் பொருட்களின் விலையை தொலைபேசியில் தினமும் அறிந்துகொள்ள விவசாயிகளுக்கு ஒரு தொலைபேசி எண் கொடுக்கப்படும். அதில், தனது தாய்மொழியில் பேசினால் அதைப் புரிந்துகொண்டு, பொருளின் விலையைச் சொல்லும் பேச்சுணரியாக அது செயல்படும். எனவே, தமிழ் மொழியைத் தேர்வுசெய்து படிப்போர் எதிர்காலத்தில் நல்ல மொழியியலாளராக வருவார்களேயானால் நல்ல எதிர்காலம் உள்ளது” என்றார் ராமமூர்த்தி.

TNTET - Paper 1 & 2 - NEW WEIGHTAGE கணக்கிடும் முறை !!

TNTET - Paper 1 & 2 - New weightage கணக்கிடும் முறை
New weightage கணக்கிடும் முறை
Paper 2 Calculation
முதலில் உங்களின் +2 மதிப்பெண் உதாரணமாக 1050,
Plus 2
1050/1200*100=87.5 87.5/100*10=8.75
Degree
52% so 52/100*15=7.8
BEd
86% 86/100*15=12.9
TET 102 102/150*100=68 68/100*60=40.80
TOTAL Weightage: 70.25.
Paper 1 - க்கான வழிமுறை
+2 - மதிப்பெண் 1050
1050/1200*100=87.5 87.5/100*15=13.25
DTEd
86% 86/100*25=21.5
TET 91 91/150*60=36.4
TOTAL 71.15

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டணங்கள் அதிகரிப்பு: ஆன்-லைன் முன்பதிவுக் கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150 ஆக உயர்வு !!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டண விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான ஒரு முறை ஆன்-லைன் முன்பதிவுக்கான கட்டணம் ரூ.30-லிருந்து 5 மடங்கு அதிகரித்து ரூ.150-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட உத்தரவு:
நேரடி எழுத்துத் தேர்வுகள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), அரசுத் துறைகளுக்கு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. அதன்படி, நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படும் தமிழ்நாடு மாநிலப் பணிகளுக்கு நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் இப்போது ரூ.125-ஆக உள்ளது. இது, ரூ.200-ஆக உயர்த்தப்படுகிறது.
சார்புப் பணிகளுக்கு நடத்தப்படும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சார்புப் பணிகள், அமைச்சுப் பணிகள், நீதி அமைச்சுப் பணிகள், தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி ஆகியவற்றுக்கான எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வு: அனைத்து வகையான பணிகளுக்கு நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100-ஆகவும் ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான ஒருமுறை ஆன்-லைன் பதிவுக்கான கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் பட்டப் படிப்புப் படித்திருந்தால், அவர்களுக்கு மூன்று முறை கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
மார்ச் 1 முதல்....இந்தப் புதிய கட்டண மாற்றங்கள் அனைத்தும் மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
..பகிா்வு..எம்.விஜயன்..

பள்ளிக் கல்வித்துறையில் இருந்து செயலாளர் சபிதா மாற்றம் .


தமிழக அரசு அறிவித்துள்ள பணியிட மாற்ற அறிக்கையின் படி, பள்ளிக் கல்வித்துறையில் இருந்து செயலாளர் சபிதா மாற்றம் செய்யப்பட்டு தமிழக சிமிண்ட் கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  அதற்கு பதிலாக உதயச் சந்திரன் ஐ.ஏ.எஸ் பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. நீண்ட காலமாக பள்ளிக் கல்வித் துறையில் இருந்த சபிதா மீது பல குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

பள்ளிகளை மூடிய செயலர்
இவர் கல்வித் துறைக்கு செயலாளராக பணியாற்றிய காலத்தில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் பல மூடப்பட்டன என்றும், அரசு பள்ளிகள் பல மூடப்பட்டுள்ளன என்றும் ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டுக்களை வைத்தன. என்றாலும், யாராலும் அசைக்க முடியாத சக்தியாக சபிதா கல்வித்துறையில் விளங்கி வந்தார்.

மாற்றுத்திறனாளிகள் வயிற்றில்...
விரிவுரையாளர் பணிக்கு பார்வையற்றோரை நியமிப்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய வரலாறுக்கு சொந்தக்காரரும் இவர்தான். ஆசிரியர்கள் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்காக 6-10-2009 அன்று விளம்பரம் வெளியிட்டது. அதில் பார்வையிழந்த, காதுகேளாதவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிபந்தனையற்ற மன்னிப்பு
இது தொடர்பாக தமிழ்நாடு பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளான இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மேலும், பார்வையற்றோருக்கான இடஒதுக்கீடுகளை முறையாக பின்பற்றுவதாக கோர்ட்டில் உறுதி அளித்த பெருமை மிக்கவர் சபிதா.

தப்பியது கல்வி
இவர் மீது இடமாற்றம், பணி நியமனம் உள்ளிட்ட செயல்பாடுகளில் பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் இவர் மீது எடுக்கவில்லை. தற்போது இந்தத் துறையில் இருந்து மாற்றப்பட்டுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் நிம்மதியை அளித்துள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

ஊராட்சி / நகராட்சி ஆசிரியர்களின் 2014 -15 ஆம் ஆண்டு பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாளை ஏப்ரல் மாதம் தான் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு.

👉 2014 -2015 கணக்கீட்டுத் தாள் ஏப்ரல் மாதத்தில் தான் வெளிவர வாய்ப்பு.


👉ஊராட்சி / நகராட்சி ஆசிரியர்களின் 2014 -15 ஆம் ஆண்டு பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாளை ஏப்ரல் மாதம் தான் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு.


👉 நகராட்சி /மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் GPF கணக்காணது AG ஆல் ஏற்கனவே பராமரிக்கப் பட்டு வருவதால் அவர்களின் எண்ணை தனியாக வகைப்படுத்த வேண்டியுள்ளதால் சம்பந்தப்பட்ட கல்வி அலுவலகங்களில் விபரம் கோரப் பட்டுள்ளது.

🌷 தற்போது மேல்நிலைத் தேர்வுகள் நடைபெறுவதால் ஏப்ரல் மாதம் தான் விபரம் கிடைக்கப் பெறும்.

🌲அதன் பின்பே NIC இல் பதிவேற்றம் செய்யப்படும்.
அதன் பின்பே பதிவிறக்கம் செய்ய இயலும்..

தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்.

தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 23-ம் தேதி தொடங்கியது.
அன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து கவர்னர் உரை மீதான விவாதம் பிப்ரவரி 1-ம்தேதி வரை நடைபெற்றது.
இதன் பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் எடப்பாடி பழனிசாமி புதிய முதல்வரானார். புதிய அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தின் மீது கடந்த பிப்ரவரி 18-ந்தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2017-18 ஆம் ஆண்டின் தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. மேலும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.  ஆனாலும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சட்டப் பேரவை செயலகத்தில் இருந்து ஓரிரு நாளில் வெளியாகும்.

ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பம்! பூர்த்தி செய்வோருக்கு சில டிப்ஸ்....

நீண்ட நாளாக எதிர்பார்த்த ஆசிரியர் தகுதித்தேர்வு மூன்று வருடத்திற்குப் பிறகு கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.
      
நேற்று முதல் தேர்வுக்கான விண்ணப்பம் வழங்க ஆரம்பித்து இருக்கிறது தமிழக அரசின் ஆசிரியர் தேர்வாணையம். தேர்வுக்கான விண்ணப்பம் மார்ச் 6-ம் தேதியில் இருந்து மார்ச் 22-ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 23-ம் தேதிக்குள் சமர்ப்பித்துவிட வேண்டும். முதல் தாளுக்கான தேர்வு ஏப்ரல் 29 -ம் தேதியும், இரண்டாவது தாளுக்கான தேர்வு ஏப்ரல் 30-ம் தேதியும் நடைபெறும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே தேர்வுக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. எந்தெந்தப் பள்ளிகளில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது என்ற தகவலை ஆசிரியர் தேர்வாணைய இணையதளத்தில் trb.tn.nic.in பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
50 ரூபாய் கொடுத்து விண்ணப்பத்தினைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தைத் தபாலில் அனுப்புவதற்குப் பதிலாக, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் அல்லது குறிப்பிட்ட பள்ளியில் வழங்க வேண்டும்.
விண்ணப்பத்தில் எந்தக் கல்வி மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடி பிரிவைச் சார்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வுக்கட்டணமாக 250 ரூபாயும், பிற பிரிவினரைச் சேர்ந்தவர்கள் 500 ரூபாயும் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு விண்ணப்பத்தில் இணைப்புத்தாள் (சலான்) இருக்கும். தேர்வுக்கான கட்டணத்தை அருகில் உள்ள இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அல்லது கனரா வங்கியில் செலுத்தி சலான் சீட்டினை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த கவனத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும். சரியான கட்டத்துக்குள் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத்தை மடிக்கக்கூடாது. தபால் வழியாக அனுப்பாமல் நேரடியாக அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் சேரும் வகையில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் போன்றவற்றை நினைவில் கொள்ளவும்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் 1-ல் பட்டயப்படிப்பு படித்தவர்கள் எழுதலாம். இந்த ஆண்டு பட்டயப்படிப்பிற்கான தேர்வினை முடிக்க உள்ளவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பார்வைத் திறன் குறைந்தோர் முதல் தாள் விண்ணப்பிக்க முடியாது. இரண்டாவது தாளை ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து அதன் பின்பு பி.எட் படித்து முடித்தவர்கள் எழுதலாம். தற்போது பி.எட் முடிக்கும் தருவாயில் உள்ளவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இரண்டு தாளுக்கான தேர்வினையும் எழுத இருப்பவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தாள் 1 குழந்தைகள் மேம்பாட்டு மற்றும் கற்பித்தல் முறை, தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் சுற்றுச்சுழல் அறிவியல் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது தாளில் குழந்தைகள் மேம்பாட்டு மற்றும் கற்பித்தல் முறை, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் அல்லது சமூக அறிவியல் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணி நேரத் தேர்வாகவும், 150 கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையிலும் இருக்கும்.
மூன்று வருடங்களாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்கவில்லை என்பதால் போட்டி கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும், இன்னும் எவ்வளவு காலிப் பணியிடங்கள் இருக்கின்றன என்ற தகவலும் உறுதியாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் 4000த்துக்கு மேற்பட்ட காலி இடங்கள் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் தற்போது ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் 3000 பணியிடங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், பள்ளிக் கல்வித்துறையில் ஐந்நூறு பணியிடங்கள் மட்டுமே காலியிடங்களாக இருக்கின்றன என்ற தகவலும் இருக்கிறது. ஆனால், ஒரு முறை தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றால் ஏழு ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்பதால் அதனடிப்படையில் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.
குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றவராகக் கருதப்படும் என்பதால் 90 மதிப்பெண்ணைப் பெற வேண்டும். சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வு நாளுக்கும் குறைவான நாட்களே இருப்பதால் மிகுந்த திட்டமிட்டுப் படிப்பது அவசியம்.

அன்பாசிரியர்' தொடர் எதிரொலி: சிலம்பு, யோகா ஆடை, பரிசுப் பொருள் - அரசுப் பள்ளிக்கு உதவிய 'தி இந்து' வாசகர்கள்!

சிலம்பாட்ட பயிற்சி மேற்கொள்ளும் மாணவிகள்.
மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும், அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை அடையாளப்படுத்துவதும், அறிமுகம் செய்து வைப்பதுமே 'அன்பாசிரியர்' தொடரின் நோக்கம்.
இந்தத் தொடரில் அரசுப் பள்ளிகளின் தற்போதைய நிலையையும் தவறாமல் குறிப்பிடுகிறோம். இதைத் தொடர்ந்து படித்துவரும் 'தி இந்து' வாசகர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.
அன்பாசிரியர் 31: பழனிக்குமார்- ஃபேஸ்புக் வழியே கற்றலுக்கான களம் கண்ட ஆசிரியர்! தொடரில் தங்கள் பள்ளியில் நடைபெறும் சிறப்பு யோகா பயிற்சிகள் குறித்தும், ஆங்கிலத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்குவது குறித்தும் ஆசிரியர் பழனிக்குமார் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் 'அன்பாசிரியர்' தொடரைப் படித்த 'தி இந்து' வாசகர்கள் கிருஷ்ணாபுரம் பள்ளிக்கு ஏராளமான உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து நம்முடன் பெரு மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறார் அன்பாசிரியர் பழனிக்குமார். ''லண்டனில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத 'தி இந்து' வாசகர், அனைத்து மாணவர்களின் யோகா ஆடைகளுக்கும் சேர்த்து ரூ.59,000 அளிப்பதாக வாக்களித்துள்ளார். முதற்கட்டமாக அவர் அளித்த 15,000 ரூபாயில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு யோகா ஆடை வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி வாசகர் மகாராஜன், ரூ.1000 மதிப்பில் மாணவர்களுக்கு பேனா, பென்சில், ஸ்கெட்ச் அடங்கிய பெட்டிகளை அளித்துள்ளார். போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாதாமாதம் இதுபோன்ற பெட்டியை அனுப்புவதாகவும் உறுதியளித்துள்ளார்.
'அன்பாசிரியர்' தொடரைப் படித்த 'விதை' அறக்கட்டளையினர், 6000 ரூபாய்க்கு நாவல் மரக்கன்றுகள் மற்றும் பாதுகாப்புக் கூண்டுகளை அளித்தனர். எங்கள் மாணவர்கள் அவற்றை புன்னையாபுரம் முந்தல் சாலையில் நட்டுப் பாரமரித்து வருகின்றனர். இதைப்பார்த்து நெகிழ்ந்த அருகிலிருந்த கோயில் நிர்வாகத்தினர் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு வேளை உணவை அளித்தனர்.
உயிர்த்தெழுந்த சிலம்பாட்டம்
கத்தாரில் வசிக்கும் 'தி இந்து' வாசகர் முகமது அக்பர், சிலம்பு போட்டிக்காக சிலம்புகள் வாங்க ரூ.2,500 அனுப்பினார். துபாயைச் சேர்ந்த சுரேஷ் சொக்கலிங்கம் மற்றும் ஓசுரைச் சேர்ந்த செந்தமிழன் இருவரும் தலா ரூ.3,000 அனுப்பினர். இதைக்கொண்டு சிலம்பு ஆசிரியர் ஒருவரை நியமித்துள்ளோம்.
அத்தோடு, 'அன்பாசிரியர்' தொடரைப் படித்த கிருஷ்ணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் சண்முகநாதன், மாலை 4.30 - 6 மணி வரை எங்கள் மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பு கற்றுத்தருகிறார்.
இதைத் தொடர்ந்து சங்கரன்கோவிலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்புப் போட்டியில் மதன் முத்து மற்றும் பாலசுப்ரமணியன் இருவரும் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளைப் பெற்றனர். அவர்களுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த 'தி இந்து' வாசகர் அன்பு பிரணவ் கைக்கடிகாரத்தைப் பரிசாக அளித்தார்.
அன்பு பிரணவ், ஆங்கிலத்தில் சிறந்துவிளங்கும் மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கும் திட்டத்திலும் இணைந்து ரூ.10,000 அனுப்பியுள்ளார். அதில் 6,000 ரூபாய்க்கு 3 தங்க நாணயங்கள் வாங்கிக்கொண்டு மீதி 4 ஆயிரத்துக்கு மாணவர்களுக்கு ஆங்கில அகராதிகளும், வாய்ப்பாடுகளும் வாங்கினோம்.
மரக்கன்று நட்டவர்களின் அனுபவங்களைக் கட்டுரையாக எழுதச்சொல்லி அதில் முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கு புத்தகப்பை, வண்ணத் தூரிகைகள், கைக்கடிகாரம் ஆகியவற்றையும் அன்பு பிரணவ் அமேசானில் ஆர்டர் செய்துவிட்டார்.
இதேபோல துபாயைச் சேர்ந்த முருகன் வேலு 2000 ரூபாயும், மதுரையைச் சேர்ந்த சியாமளா கிருஷ்ணமூர்த்தி 10,000 ரூபாயும் அனுப்பினர். புளியங்குடியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் மாணவர்களுக்கு டிஃபன் பாக்ஸ் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறி ரூ.500 அளித்தார். துபாய் வாசகர் ரவி சொக்கலிங்கம் ரூ.5000 அனுப்பியுள்ளார். ராம் சுரேஷ் என்பவர் ரூ.10,000 அனுப்பியுள்ளார்.
ஆயக்குடியைச் சேர்ந்த வீரபாகு ரத்ததானக் கழகத்தினர் 'அன்பாசிரியர்' தொடரைப் படித்துவிட்டு ரூ.3000 மதிப்பில் வயர்லெஸ் மைக்கை அளித்தனர். அதே கழகத்தைச் சேர்ந்த மாணிக்கராஜ் மற்றும் முருகேசன் என்னும் இருவரும் ரூ.8000 செலவில், அனைத்து மாணவர்களுக்கும் ஒரு வேளை உணவளித்தனர்.
இன்னும் ஏராளமானோர் உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர். இவை அனைத்துக்கும் காரணமாக இருந்த 'தி இந்து'வுக்கு என் நன்றிகளும், பாராட்டுகளும்'' என்கிறார் அன்பாசிரியர் பழனிக்குமார்.
இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் 'தி இந்து' பெருமிதம் கொள்கிறது.
க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
ஆசிரியர் பழனிக்குமாரின் தொடர்பு எண்:9976804887

பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஆங்கிலம் முதல்தாள் வினாக்களில் குளறுபடி

பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆங்கிலம் முதல்தாளில் 3 மதிப்பெண் வினாக்களில் குளறுபடி இருந்ததால் விடை எழுத முடியாமல் மாணவர்கள் குழப்பமடைந்தனர். 
 தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 2ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று ஆங்கிலம் முதல்தாள் தேர்வு நடந்தது. தேர்வு அறையில் வினாத்தாள்களை மாணவர்களுக்கு கொடுத்தவுடன் விடை எழுத தொடங்கினர்.
இதில் எளிமையான கேள்விகளை மாணவர்கள் முதலில் எழுத தொடங்கினர். கேட்கப்பட்ட கேள்விகளில் வினாத்தாளில் 8வது பக்கம் (B) read the following sets lines and answer the questions given below என்ற பிரிவில் கேள்வி எண் 61, 62, 63 என்ற ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.
வழக்கமாக இந்த கேள்விகளுக்கு விடை எழுத போயம் லைன் கொடுத்துவிட்டு, அதற்கான பதிலை எழுத சொல்வார்கள். ஆனால் இந்த ஆண்டுக்கான வினாத்தாளில் 61வது கேள்விக்கு மட்டுமே போயம் லைன் கொடுத்துள்ளனர். 62வது கேள்விக்கு தரவில்லை. இதனால் மாணவர்கள் விடை எழுத முடியாமல் குழப்பமடைந்தனர். இதுகுறித்து ஆங்கில ஆசிரியரிடம் கேட்டபோது, `61வது கேள்விக்கு போயம் லைன் கொடுக்கப்பட்டது. 62வது கேள்விக்கு போயம் லைன் கொடுக்கவில்லை. இதையடுத்து 63வது கேள்விக்கு போயம் லைன் கொடுக்கப்பட்டது. இந்த போயம் லைன் 62வது கேள்விக்கா அல்லது 63வது கேள்விக்கா என தெரியாமல் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். 
வழக்கமாக இந்த இலக்கியத்திற்கான கேள்விகள் எளிமையாக இருக்கும். இதற்கு மாணவர்கள் விடை எழுதி முழுமையாக 3 மதிப்பெண்களை பெற்றுவிடுவர். இந்த ஆண்டு இந்த கேள்விகளில் குளறுபடி உள்ளது. இதற்கு தேர்வுத்துறை மதிப்பெண் அளிக்குமா என்று தெரியவில்லை'' என்றார்

பள்ளிக்கல்வித்துறை செயலர் திரு. D. உதயசந்திரன் IAS !!

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னை, காஞ்சிக்கு புதிய கலெக்டர்கள் நியமனம்

சென்னை: தமிழகத்தில் 17 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்ட கலெக்டராக அன்புசெல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
இடமாற்ற விவரம்:
1. சுனில் பாலிவால் - உயர்கல்வித் துறை முதன்மை செயலர்
2. காமராஜ் - பால் உற்பத்தி கழக மேலாண் இயக்குநர்
3. உதயசந்திரன் - பள்ளி கல்வித் துறை செயலாளர்
4. வள்ளலார் - சிறுபான்மை நலத்துறை இயக்குநர்
5. தயானந்த் கட்டாரியா - போக்குவரத்து துறை கமிஷனர் 
6. விக்ரம் கபூர் - எரிசக்தி துறை முதன்மை செயலர்
7. அடூலியா மிஷ்ரா - தொழில் துறை முதன்மை செயலர்
8. பழனிக்குமார் - தமிழ்நாடு சுற்றுலா துறை மேலாண் இயக்குநர்
9. நசிமுதீன் - சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர்
10. அன்புசெல்வன் - சென்னை மாவட்ட கலெக்டர்
11. மகேஸ்வரி - வணிக வரித்துறை இணை கமிஷனர்
12. பொன்னையா - காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்
13. சபிதா - தமிழக சிமிண்ட் கழக மேலாண் இயக்குநர்
14. வெங்கடேசன் - கனிம வளத்துறை மேலாண் இயக்குநர்
15. சத்யபிரதா சாஹீ - தொழில் முதலீட்டு கழக மேலாண் இயக்குநர்
16.ஹர் சகாய் மீனா - உப்பு கழக மேலாண் இயக்குநர்
17. கஜலெட்சுமி - சென்னை பெருநகர மாநகராட்சி துணை கமிஷனர்.

திங்கள், 6 மார்ச், 2017

2016-17ஆம் ஆண்டிற்கு உயர் தொடக்கநிலை வரலாறு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு "வரைப்படங்கள் வழியாக வரலாற்றை அறிந்துகொள்ளல்" என்ற தலைப்பில் 13.03.2017 அன்று வட்டார மைய அளவில் நடைபெறவுள்ளது!!

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா மாற்றம் !!!

உயர்கல்வித்துறை செயலாளர் சபீதா  சிமெண்ட் கழக எம்.டி.யாக மாற்றம்

உயர்கல்வித்துறை முதன்மைச் செயலராக சுனில் பாலிவல் நியமனம்

சிறுபான்மை நலத்துறை செயலாளராக வள்ளலார் நியமனம்

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க மேலாண்மை இயக்குநராக காமராஜ் நியமனம்

போக்குவரத்துத்துறை ஆணையராக தயானந்த கட்டாரியா நியமனம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பி.பொன்னையா நியமனம்

சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புச்செல்வன் நியமனம்

சென்னை ஆட்சியராக இருந்த மகேஸ்வரி , வணிக வரி இணை ஆணையராக நியமனம்