தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்.
தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 23-ம் தேதி தொடங்கியது.
அன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து கவர்னர் உரை மீதான விவாதம் பிப்ரவரி 1-ம்தேதி வரை நடைபெற்றது.
அன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து கவர்னர் உரை மீதான விவாதம் பிப்ரவரி 1-ம்தேதி வரை நடைபெற்றது.
இதன் பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் எடப்பாடி பழனிசாமி புதிய முதல்வரானார். புதிய அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தின் மீது கடந்த பிப்ரவரி 18-ந்தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2017-18 ஆம் ஆண்டின் தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. மேலும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். ஆனாலும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சட்டப் பேரவை செயலகத்தில் இருந்து ஓரிரு நாளில் வெளியாகும்.