வியாழன், 9 மார்ச், 2017
நீட் தேர்வு தமிழகத்திற்கு விலக்கு : அமைச்சர் உறுதி ??
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மத்திய அமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த மசோதா மனிதவள மேம்பாடு, மருத்துவ நலம், சட்டம் மற்றும் நீதி ஆகிய துறைகள் சம்பந்தப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மத்திய அரசின் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. இன்று தமிழக முதல்வர் அனுமதியுடன் நானும், உயர் கல்வித்துறை அமைச்சரும் அரசு செயலாளர்களுடன் மத்திய அமைச்சரை சந்தித்தோம். அவரிடம் தமிழகத்திற்கு விலக்கு வேண்டி எடுத்துரைத்து வலியுறுத்தினோம். இதைப் பரிசீலனை செய்வதாக மத்திய அமைச்சர் எங்களிடம் உறுதி அளித்துள்ளார்’ எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த விஜயபாஸ்கர் கூறுகையில், "அரசு மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்கு மட்டுமே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சட்டரீதியான எங்கள் போராட்டம் தொடர்கிறது. அதே நேரத்தில் நாங்கள் மத்திய அரசையும் வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.
மருத்துவத்தைப்போல், பொறியியல் கல்விக்கும் பொது நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. அதற்கும் தமிழகத்திற்கு விலக்களிக்க தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறுகையில், "ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக நுழைவுத்தேர்வை நடத்தி தமிழகத்தின் பொறியியல் கல்விக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இதை அமைச்சரிடம் எடுத்துக் கூறி எங்களுக்கு மற்றொரு நுழைவுத்தேர்வு தேவை இல்லை என வலியுறுத்தி உள்ளோம். இதையும் அவர் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்" எனத் தெரிவித்தார்.
சிபிஎஸ்இ 10, +2-ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் 10, +2-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் வியாழக்கிழமை (மார்ச் 9) தொடங்குகின்றன.
நாடு முழுவதும் மொத்தம் 8.86 லட்சம் மாணவ-மாணவிகள் 10-ஆம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். இந்த ஆண்டு 10-ஆம் வகுப்புத் தேர்வுக்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை கடந்த முறையைக் காட்டிலும் 15.73 சதவீதம் அதிகரித்துள்ளது. 12-ஆம் வகுப்புத் தேர்வை மொத்தம் 10.98 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இந்தத் தேர்வுக்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இந்த முறை 2.82 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் 16,363 மையங்களில் 10-ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற உள்ளது. 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மொத்தம் 10,678 மையங்களில் நடைபெற உள்ளது. சில வளைகுடா நாடுகளில் 58 தேர்வு மையங்களும், மற்ற நாடுகளில் 6 தேர்வு மையங்களும் சிபிஎஸ்இ தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ளன.

மார்ச் 16-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்:
தமிழக சட்டப்பேரவை அடுத்த கூட்டத்தொடர் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே, 2017- 2018 நிதி
ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இது குறித்து தமிழக சட்டப்பேரவை செயலர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை 16.3.2017-ஆம் நாள் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை-9, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். மேலும், அன்று காலை 10.30 மணிக்கு 2017-2018-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர், கடந்த ஜனவரி 23-ம் தேதி தொடங்கியது. அன்று பேரவை யில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை யாற்றினார். பிப்ரவரி 1-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடந்தது. அப்போது முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்தார்.
அதன்பிறகு அதிமுகவில் எழுந்த பிரச்சினைகளால் தமிழக அரசிய லில் பரபரப்பும் குழப்பமும் நிலவி யது. பின்னர் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அப்போது, முதல்வரிடமே நிதித் துறை இருந்தது. கடந்த 23-ம் தேதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல்வரிடம் இருந்த நிதித்துறை, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஜெயக்குமாரிடம் நிதித் துறை ஒப்படைக்கப்பட்ட பிறகு பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இந்நிலையில், வரும் 16.03.2017 அன்று காலை 10.30 மணிக்கு 2017-2018-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு வயது உயர்த்தப்படுமா?
இந்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
இது தொடர்பாக, அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியுள்ளது. தற்போது அரசு ஊழியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரை ஊதியத்தை நம்பியுள்ளனர். இதை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரையை ஏற்று செயல்படுத்தினாலும், அடுத்த 4 மாதங்களில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு நிதி தேவைப்படும்.
ஏற்கெனவே தமிழக அரசுத் துறைகளில் 3.5 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவை நிரப்பப்படாத சூழலில், தமிழக அரசின் இந்த முடிவு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என அரசு ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ராணுவ கல்லூரி சேர்க்கைக்கு தகுதி தேர்வு
ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லுாரியில், 8ம் வகுப்பில் சேர, மாணவர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு நடக்க உள்ளதாக, தமிழக அரசு தலைமை செயலக பொது (ராணுவம்) துறை மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கலெக்டர் பிரபாகர் வெளியிட்ட அறிக்கை:ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லுாரியில், 8ம் வகுப்பில் சேர்வதற்கான தகுதித்தேர்வு, மாணவர்களுக்கு மட்டும் நடக்க உள்ளது. நடப்பு, 2017 ஜன., 1 அன்று, ஏழாம் வகுப்பில் பயில்பவராக அல்லது, ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்கலாம்; 11.5.17 முதல், 13 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், 'தி கமாண்டன்ட், ஆர்.ஐ.எம்.சி., - டேராடூன் - 248 003, உத்தரகண்ட்' என்ற முகவரியில் விண்ணப்பம் பெறலாம்.

விண்ணப்பபடிவம், விரைவு அஞ்சலில், பொதுப்பிரிவினர், 490 ரூபாய்க்கும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், 435 ரூபாய்க்கும் செலுத்த வேண்டும். ஜூன், 1, 2ல் தேர்வு நடக்கவுள்ளது. ஆங்கிலம் - 125 மதிப்பெண்; இரண்டு மணி நேரம் தேர்வு, கணிதம் - 200 மதிப்பெண்; 1:30 மணி நேரம்தேர்வு, பொது அறிவு - 75 மதிப்பெண் - ஒரு மணி நேரம் தேர்வு நடக்கும்.'தி கன்ட்ரோலர் ஆப் எக்சாமினேஷன்ஸ், டி.என்.பி.எஸ்.சி., சென்னை - 3' என்ற முகவரிக்கு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 31க்குள் அனுப்ப வேண்டும். மேலும், 50 மதிப்பெண்ணுக்கான நேர்முகத் தேர்வு, அக்., 4ல் நடக்கவுள்ளது. நேர்முக தேர்வு உட்பட அனைத்து பாடங்களிலும், 50 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு,www.rimc.orgஎன்ற இணைய தளம் வாயிலாக அறியலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது
வெளிநாட்டு வேலை கிடைத்தும் சேர முடியலை - அண்ணா பல்கலை மாணவர்கள் தவிப்பு.
அண்ணா பல்கலையில் பட்ட சான்றிதழ் கிடைக்காமல், லட்சக்கணக்கான இன்ஜினியர்கள், வெளிநாடு வேலை வாய்ப்பைஇழந்துள்ளனர்.சென்னை, அண்ணா பல்கலையின் இணைப்பில், அரசு கல்லுாரிகள், அரசு உதவி பெறும் கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகள் என, 600க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் மற்றும் ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
இவை அனைத்தும், அண்ணா பல்கலை பாடத்திட்டத்தையே பின்பற்றுகின்றன. தன்னாட்சி கல்லுாரிகள் மட்டும், சிலபாடங்களுக்கு தாங்களே பாடத்திட்டம் தயார் செய்து, பல்கலை அனுமதி பெற்று, பாடம் நடத்துகின்றன.இந்த கல்லுாரிகளில், ஆண்டுதோறும், ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட இளநிலை பட்டதாரிகள் சேர்கின்றனர். ஐந்து லட்சத்துத்துக்கும் மேற்பட்டோர், படிப்பை முடிக்கின்றனர். அவர்களுக்கு அண்ணா பல்கலை, பட்ட சான்றிதழை வழங்கும்.அதற்கு முன், பல்கலையில் பட்டமளிப்பு விழா முடிந்து, சிண்டிகேட் ஒப்புதல் வழங்கியதும், கல்லுாரிகளில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு துணைவேந்தர் இல்லாததால், பட்டமளிப்பு விழா நடத்த தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், பட்டம் கிடைக்காமல், படிப்பு முடித்தோர் காத்திருக்கின்றனர்.இவர்களுக்கு பல கல்லுாரிகளில், நேரடி கேம்பஸ் தேர்வு நடத்தப்பட்டு, வெளிநாடுகளில், வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்தந்த நாட்டு துாதரகம் மூலம், பட்ட சான்றிதழை காட்டி, அனுமதி பெற்றால் மட்டுமே, வெளிநாட்டு நிறுவனங்களில், வேலையில் சேர முடியும்.தற்போது பட்ட சான்றிதழ் இல்லாததால், இந்த வேலைகளில் சேர முடியாமல், புதிய பட்டதாரிகள் தவிக்கின்றனர். எனவே, மாற்று ஏற்பாடுகளை செய்து, பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிக்க, மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேல்நிலைப் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும்பணி தொடக்கம்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் பணி தொடங்கியுள்ளதாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதன்கிழமை தொடங்கியது. இதில், ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டார்.பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 3,371 தேர்வு மையங்களில் 5 லட்சத்து 27,152 மாணவர்கள், 5 லட்சத்து 6,756 மாணவிகள் என மொத்தம் 10 லட்சத்து 33,908 பேர் எழுதுகின்றனர்.ஈரோடு மாவட்டத்தில், தேர்வு நடைபெறும் போது முறைகேடு நடைபெறுவதை தடுக்கும் வகையில், 176 பறக்கும் படை உறுப்பினர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 10 மொழிகளில் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. கன்னடம், உருது, மலையாளம் என பல்வேறு மொழிகளில் 7,327 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேல்நிலைப் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.மாநிலத்தில், தமிழ் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது தவறான தகவலாகும். தேவையான தமிழ் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
பங்களிப்பு ஓய்வூதிய(CPS) தொகைக்கு 8 சதவீதம் வட்டி
தமிழக அரசு ஊழியர்களுக்கான, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில், 2003 ஏப்., 1ல் இருந்து, அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில்,10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.அதற்கு இணையானத் தொகையை, தமிழக அரசு வழங்குகிறது. இந்தத் தொகை ஊழியரின் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்தொகைக்கு, 2017 ஜன., 1 முதல் மார்ச், 31 வரை, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

TNTET : 1,111 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் : நாளை TRB., பட்டியல்.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான, 'டெட்' தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை பட்டியல், நாளை வெளியாகிறது. ஆசிரியர் தகுதிக்கான, டெட் தேர்வு, ஏப்., 29, 30ல் நடத்தப்படுகிறது.
ஏற்கனவே டெட் முடித்தவர்கள், தங்களுக்கு பணி நியமனம் கிடைக்குமா என, கவலையில் இருந்தனர்.இந்நிலையில், 1,111 காலியிடங்களுக்கு, ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் தற்போதைய காலியிடங்கள், 286; பின்னடைவு காலி இடங்கள், 623; அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், 202 காலி இடங்கள் என, 1,111 இடங்களுக்கு, ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம், பதிவு மூப்பு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.

இந்த தரவரிசை பட்டியலுக்கு, முந்தைய மதிப்பெண் பட்டியல், டி.ஆர்.பி.,இணையதளத்தில், நாளை வெளியாகிறது.அதை,http:/www.trb.tn.nic.in/என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தில் பார்க்கலாம். இதில் சுயவிபரங்கள் தவறாக இருந்தால், 'ஆன்லைனில்' நாளை காலை, 10:00 மணி முதல், மார்ச் 20 இரவு, 10:00 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதில், எழுத்துபூர்வமான விண்ணப்பங்கள் எதுவும் ஏற்கப்படாது; மறுவாய்ப்பு இனி தரப்படாது.
TNPSC - VAO இரண்டாம் கட்ட, சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு.
வி.ஏ.ஓ., பதவிக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிராம நிர்வாக அலுவலரான, வி.ஏ.ஓ., பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, டி.என்.பி.எஸ்.சி., 2016, பிப்., 28ல், எழுத்து தேர்வை நடத்தியது.இதில், தேர்வானவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, காலியிடங்கள் நிரப்பப்பட்டன.இன்னும், காலியாக உள்ள, 147 இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, மார்ச், 13 முதல், 15 வரை நடக்க உள்ளது. இதற்கான பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர தவறினால், பட்டியலில் உள்ளோருக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலரான, வி.ஏ.ஓ., பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, டி.என்.பி.எஸ்.சி., 2016, பிப்., 28ல், எழுத்து தேர்வை நடத்தியது.இதில், தேர்வானவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, காலியிடங்கள் நிரப்பப்பட்டன.இன்னும், காலியாக உள்ள, 147 இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, மார்ச், 13 முதல், 15 வரை நடக்க உள்ளது. இதற்கான பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர தவறினால், பட்டியலில் உள்ளோருக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதிய(CPS) தொகைக்கு 8 சதவீதம் வட்டி
தமிழக அரசு ஊழியர்களுக்கான, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில், 2003 ஏப்., 1ல் இருந்து, அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில்,10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.அதற்கு இணையானத் தொகையை, தமிழக அரசு வழங்குகிறது. இந்தத் தொகை ஊழியரின் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்தொகைக்கு, 2017 ஜன., 1 முதல் மார்ச், 31 வரை, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 2003 ஏப்., 1ல் இருந்து, அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில்,10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.அதற்கு இணையானத் தொகையை, தமிழக அரசு வழங்குகிறது. இந்தத் தொகை ஊழியரின் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்தொகைக்கு, 2017 ஜன., 1 முதல் மார்ச், 31 வரை, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)