>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 27 பிப்ரவரி, 2017

பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு போலீஸ்...பாதுகாப்பு! பறக்கும் படை குழு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இந்த கல்வி ஆண்டுக்கான மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி முதல் தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. கடலுார் மாவட்டத்தில் 200 பள்ளிகள் மூலம் 14 ஆயிரத்து 649 மாணவர்கள், 16 ஆயிரத்து 878 மாணவிகள் என மொத்தம் 31 ஆயிரத்து 527 பேர் மேல்நிலை தேர்வு எழுதுகின்றனர்.
இவர்களுக்காக 83 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், 7 மையங்களில் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். மேல்நிலை தேர்விற்கு 10 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல 20 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இத்தேர்விற்கு 83 முதன்மைக் கண்காணிப்பாளர், 83 துறை அலுவலர்கள், 20 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களும், தேர்வறை கண்காணிப்பு பணிக்கு 1621 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தேர்வறையில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க 240 ஆசிரியர்களை கொண்டு பறக்கும்படை மற்றும் நிலைப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், கல்வித்துறை அலுவலர்கள் தலைமையில் பணி மேற்கொள்ளவுள்ளனர்.
10ம் வகுப்பு தேர்வுஎஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் 8 ம் தேதி தொடங்கி மார்ச் 30ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வில் கடலுார் மாவட்டத்தில் 410 பள்ளிகளில் இருந்து 18 ஆயிரத்து 722 மாணவர்கள், 18 ஆயிரத்து 553 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 275 மாணவ மாணவியர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுக்காக 118 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எஸ்.எஸ்.எல்.சி., வினாத்தாள் கட்டுகளை பாதுகாக்க 12 கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்கட்டுக்காப்பு மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வினாத்தாட்களை தேர்வு நாளன்று தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல 28 வழித்தட அலுவலர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் காவலர் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறை கண்காணிப்பாளர்கள் தங்களுடைய பணியில் எவ்வித குந்தகமும் ஏற்படாத வகையில் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு அருகில் மைக் மற்றும் ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்களின் குறைகளை தீர்க்க ஆன்லைன் வசதி விரைவில் உருவாக்க ஏ.ஐ.சி.டி.இ. அறிவுறுத்தல்

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்ததை தொடர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தால் ஒருநபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா கடந்த ஆண்டு தற்கொலை செய்ததை தொடர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தால் ஒருநபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மாணவர்களின் புகார் மற்றும் குறைகளை களைவதற்கான வழிமுறையை கல்லூரிகளில் உருவாக்க வேண்டும் என பரிந்துரைத்தது.
இதைத்தொடர்ந்து என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் குறைகளை தீர்ப்பதற்கான வழிமுறை ஒன்றை உருவாக்க அனைத்து இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ.யின் அங்கீகாரம் பெற்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
அதில் மாணவர்களின் குறைகள் மற்றும் புகார்களை பதிவு செய்யவும், அதற்கான தீர்வு காண்பதற்குமான ஆன்லைன் வழிமுறையை உடனே உருவாக்குமாறு கல்லூரி தலைமைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாணவர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்வதற்கான ஆன்லைன் முகவரி, குறைதீர்ப்பு குழு உறுப்பினர்களின் தொலைபேசி எண் மற்றும் இ–மெயில் முகவரி உள்ளிட்டவற்றை கல்லூரி நிர்வாகத்தின் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
மேலும் மாணவர்களின் புகார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள புகார்கள் உள்ளிட்ட நிலவர அறிக்கையும் மாதந்தோறும் ஏ.ஐ.சி.டி.இ.க்கு அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் அமைச்சர் கந்தசாமி தகவல்

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற ரூ.15 கோடி செலவில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் கந்தசாமி கூறினார்.
தகுதித்தேர்வு
புதுவை அரசின் தொழிலாளர்துறை சார்பில் வேலைவாய்ப்புக்கான போட்டி தேர்வுகளை எழுத தயாராவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கு தகுதித்தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பயிற்சி வகுப்பில் சேருவதற்கான தகுதி தேர்வு செல்லபெருமாள்பேட்டையில் உள்ள விவேகானந்தா பள்ளியில் நேற்று நடந்தது. இந்த தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்தவர்களில் 754 பேர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள்.
கந்தசாமி ஆய்வு
தேர்வு மையத்தில் அமைச்சர் கந்தசாமி ஆய்வு நடத்தினார். அப்போது தொழிலாளர்துறை ஆணையர் வல்லவன், தேர்வு ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு, திறன் மேம்பாட்டு இயக்குனர் சாராங்கராஜூ ஆகியோர் உடனிருந்தனர்.
தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. தேர்வு எழுதியவர்களில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
ரூ.15 கோடியில்...
இதுகுறித்து அமைச்சர் கந்தசாமி கூறியதாவது:–
தொழிலாளர்துறை சார்பில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற பயிற்சி அளிக்கும் வகுப்பில் சேர தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.
அதேபோல் கிராமப்புறத்தில் 2 இடங்களில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். மத்திய அரசை அணுகி ரூ.15 கோடி நிதிபெற்று பயிற்சி மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளிலும் இதேபோல் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். இந்த சிறப்பு பயிற்சிகள் மூலம் இளைஞர்கள் எளிதாக வேலைவாய்ப்பினை பெறுவார்கள்.
இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

Flash News: TET 2017 - ஆசிரியர் தகுதி தேர்வு 6.3.2017 முதல் 22.3.2017 வரை விண்ணப்பம் விநியோகம்.. (Official Notification published in today தினத்தந்தி

NEW IT FORM - 80 CCD (1B) DEDUCTION இணைப்புடன்

CLICK HERE DOWNLOAD IT NEW 80 CCD(1b) DEDUCTION FORM

குறிப்பு; 
page 1 sheet ல் 80 CC யில் CPS முழுத்தொகையினை பதிவு செய்து Total 80 ccயில் 1,50,000 தவிர்த்து மீதி தொகையினை  80 CCD(1B) பகுதியில் தொகையை தட்டச்சு செய்யவேண்டும். கணக்கீடு தானாக மாறும்.

ஆசிரியர்களுக்கான அனைத்து படிவங்கள்

ஆசிரியர்களுக்கான அனைத்து படிவங்கள் 


1.     M.L FORMS
2.     C.L FORMS(H.M)
3.     C.L FORMS(GENERAL)
4.     E.L SURRENDER FORM
7.     FESTIVAL ADVANCE
8.     C.P.S.FORM
9.     GPF CLOSURE FORMAT

தேர்வுகால பதற்றத்தை தவிர்ப்பது எப்படி

மாணவர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நெருங்குகின்றன. தேர்வு காலங்களில் மாணவர்கள் தங்களை எப்படி, தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்து, நிபுணர்கள் அளிக்கும் பயனுள்ள ஆலோசனைகள் இதில் இடம் பெறுகின்றன.
மாணவர்கள் உடல், மன ரீதியாக எந்தவித பாதிப்பும் இன்றி படிப்பது குறித்து ஆலோசனை அளிக்கிறார் மதுரை டாக்டர் முருகன் ஜெயராமன்.தேர்வுகள், காலத்தின் கட்டாயமாகி விட்டது. அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொண்டு தயாராவதே சிறந்தது. தேர்வினை வாழ்வா, சாவா நிலையாக எடுத்துக்கொள்ளாமல் மன அழுத்தம், அச்சமின்றி கையாண்டால் வெற்றி நிச்சயம். தேர்வு கால 'டென்ஷன்', குழந்தைகளுக்கு கோபம், உடல் படபடப்பு, ஆர்வமின்மை, துாக்கமின்மை, செரிமான பிரச்னைகளாக வெளிப்படுகிறது.
அவர்களை அரவணைத்து, தேவையான உதவிகளை செய்வது பெற்றோர் கைகளில் உள்ளது. தேர்வு என்பது வாழ்க்கையில் ஓர் அங்கம்தானே தவிர, அதுவே வாழ்க்கையாகி விடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்; பெற்றோர் புரிய வைக்க வேண்டும்.மாணவர்களின் உணவுபழக்க முறைகளில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். சாப்பிடாமல் படிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். தொடர்ந்து 12 மணி நேரம் உடலுக்கு தேவையான உணவு கிடைக்காத போது,
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைகிறது.இதனால் படிப்பில் கவனக்குறைவு ஏற்படு
கிறது. படித்ததெல்லாம் மறந்து விடும் நிலை ஏற்படுகிறது.அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது துாக்கம் ஏற்படுகிறது. இதனால், மிதமான அளவு உணவை எடுத்துக் கொள்வது நல்லது.
என்னென்ன சாப்பிடுவதுஉணவில் பழம், காய்கறி, கீரை வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். திரவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். பொரித்த மற்றும் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். இவற்றால் கெட்ட கொழுப்புகள் உடலில் சேருவதுடன், செரிமானமும் பாதிக்கப்படும்.
மதியம் அரைமணி நேரம் வரை துாங்குவது நல்லது. இரவில் 6 - 8 மணி நேர துாக்கம் அவசியம். துாங்காமல் இருப்பதால் தேர்வில் கவனம் செலுத்த
முடியாது.
விளையாட்டும் அவசியம்
எந்நேரமும் குழந்தைகளை படிக்குமாறு பெற்றோர் வற்புறுத்தக்கூடாது. இடையிடையே விளையாட்டு, யோகா, உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்வதால், நுரையீரல் செயல்பாடு மேம்பட்டு, இருதய ரத்த ஓட்டம் சீராகும். இவை காபி, டீ போன்றவற்றை விட அதிக புத்துணர்ச்சி தரும். இதனால் படிப்பில் அதிக கவனம் ஏற்படுகிறது என்பதை பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
கால அட்டவணை ஏற்படுத்தி படிப்பதால் மன அழுத்தம் தவிர்க்கப்படும். சொல்லிக் கொடுப்பதன் மூலம் படித்தல், எழுதி வைத்து படித்தல், குறிப்பு எடுத்து படித்தல் போன்ற முறைகளை பின்பற்றலாம். வெவ்வேறு இடங்களில் அமர்ந்து படிப்பது நல்லது. இதனால், படித்த பாடங்களை எளிதில் நினைவுகூர முடியும்.
குழந்தைகளை பள்ளி மற்றும் டியூஷனுக்கு அனுப்புவதுடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாக பெற்றோர் கருதாமல், அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும்.
அவர்களின் அச்சத்தை போக்கி தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும். மற்ற குழந்தைகளுடன் தங்கள் குழந்தைகளை ஒப்பிடக்கூடாது. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவம் கொண்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
குடும்பச்சூழல் குழந்தையின் படிப்பை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோர், மாணவர்களிடையே மதிப்பெண் குறித்த அதிக எதிர்பார்ப்புகள் வேண்டாம். இதனால், தேர்வுக்கு பின் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்கலாம்.
இவ்வாறு கூறினார்

நாடு முழுவதும் 15 லட்சம் ஊழியர்கள்..வேலையிழப்பு? ஐ.டி., தகவல் தொடர்பு, வங்கி துறை முடங்கும்.

இந்தியாவில், கடந்த, 20 ஆண்டு களாக, வேலைவாய்ப்பை அள்ளி வழங்கிய, ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும் வங்கித்துறை களில், 15 லட்சம் பேர் வேலையிழக்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில், 1991க்கு பின் பொருளாதார சீர்த்திருங்கள் மேற்கொள்ளப்பட்ட பின், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு மற்றும் வங்கித்துறைகளில், பெருமளவு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
'ஒயிட் காலர் ஜாப்' எனப்படும், உயர் கல்வி கற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் துறை கள் வளர்ச்சி கண்டன; இதனால் படித்து பட்டம் பெற்ற லட்சக்கணக்கான இளைஞர்கள், தனியார் துறைகளில் அதிக அளவில் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர்.
உற்பத்தித்துறை
எனினும், உலகளாவிய பொருளாதார சூழ லால், இந்தியாவில் சில ஆண்டுகளாக வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது.
குறிப்பாக உற்பத்தித் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள், கடந்த இரண்டு ஆண்டுகளில்
குறைந்துள்ளன; இதனால், ஆயிரக்கணக் கானோர் வேலையிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐ.டி., தொலைத்தொடர்பு, வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த சேவை பணிகளில் பெருமளவு வேலைவாய்ப்புகள் குறையும் என தெரிய வந்துள்ளது. பெரிய அளவில் பாதிப்புமத்திய புள்ளி விபரங்கள் அமைப்பின் தகவலை சுட்டிக் காட்டி, வேலைவாய்ப்பு ஆய்வறிக்கை கூறியுள்ளதாவது:
மக்களிடையே செலவு செய்யும் வாய்ப்பு குறைந்து வருவதால், சேவை துறைகளில் அதன் பாதிப்பு எதிரொலிக்கிறது; இதனால், சேவை சார்ந்த, ஐ.டி., வங்கி சேவை உள்ளிட்டவை, மிகப் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றன.இதனால், ஏராள மானோர் வேலையிழக்கும் சூழல் தற்போது உரு வாகி வருகிறது. வருங்காலத்தில், இத்துறை சார்ந்த, 15 லட்சம் பேர் வேலையிழக்கும் ஆபத்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

96 சார் - பதிவாளர்கள் விரைவில் நியமனம்

புதிதாக, 96 சார் - பதிவாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.பத்திரப் பதிவுக்காக, தமிழகம் முழுவதும், 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. பெரும்பாலான அலுவலகங்களில், சார் - பதிவாளர்கள் இல்லை.
அவர்களுக்கு பதிலாக, உதவியாளர்கள் தான், சார் - பதிவாளர்களாக கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர்.
இந்நிலையில், பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில், மாவட்ட பதிவாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுப்படி, உதவியாளர்களுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
இது குறித்து, பதிவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
சார் - பதிவாளர் அலுவலகங்களில், உதவியாளர்களாக உள்ளவர்களில், பதவி உயர்வுக்கு தகுதி யானவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் இருந்து, 96 பேர் பதவி உயர்த்தப்பட்டு, சார் - பதிவாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான பணியிடங்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது; விரைவில், அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

'ஸ்மார்ட் வாட்ச், பெல்ட், ஷூ' அணிய...தடை ..! பிளஸ் 2 தேர்வுக்கு வந்தது கட்டுப்பாடு.

பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவ, மாணவி யர், 'பெல்ட், வாட்ச்' அணிந்து வர தடை விதிக் கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, 'மொபைல் போன், ஷூ' ஆகியவற்றுடன், தேர்வு அறைக்கு செல்வதற் கான தடையும் அமலில் உள்ளது.
மறுதேர்வு எழுதும் நோக்கில், விடைகளை தாமே அடித்தால், தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 2ல் துவங்கு கிறது. இதில், 6,737 பள்ளிகளைச் சேர்ந்த, 9.30 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இவர்களில், 4.18 லட்சம் மாணவர்கள்; 4.81 லட்சம் மாணவியர் மற்றும் ஒரு திருநங்கையும் அடங்குவர்.
மேலும், தமிழ் வழியில் படிப்போரில், 5.69 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கின்றனர். இந் நிலையில், தேர்வு எழுதுவோருக்கு கடும் ,
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அவைவருமாறு: தேர்வு மையவளாகத்திற்குள், மொபைல் போன் எடுத்துவரக் கூடாது. எடுத்து வந்தால்அதை தங்கள் உடைமைகளுடன், வளாக அறையில் தான் வைக்க வேண்டும். அதற்கு, கல்வித்துறை பொறுப்பேற்காது
* தேர்வறைக்குள் வரும் போது, காலணிகளை, வளாகத்திலேயே கழற்றி விட்டு வர வேண்டும். தேர்வறைக்குள் காலணி, உடைக்கான இடுப்பு பெல்ட் அணிய அனுமதி இல்லை. இதனால், மாணவ, மாணவியர் தொள தொள என, பெரிய சைஸ் உடைகளை, பெல்ட் மூலம் இறுக்கி அணிந்து வருவதை, தவிர்ப்பது நல்லது
* தேர்வு அறையில் கடிகாரம் கண்டிப்பாக இருக்கும். அவை இயங்கும் வகையில், புதிய பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கும். அதிலுள்ள நேரத்தின் படியே, தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படும்.
எனவே, தேர்வறைக்குள் மாணவர்கள், வாட்ச் அணிய தேவையில்லை. எந்த கூடுதல் வசதியும் இல்லாத, சாதாரண வாட்ச் மட்டும் கட்டலாம். 'ஸ்மார்ட் வாட்ச், ப்ளூ டூத் வாட்ச்' போன்றவை அனுமதிக்கப்படாது
* தேர்வு அறைக்குள், மாணவர்கள் ஒருவருக் கொரு வர் பேசிக் கொள்ளவோ, விவாதிக்கவோ அனுமதி
கிடையாது
* தேர்வு முடியும் நேரத்தில், தாங்கள் எதிர் பார்த்தமதிப்பெண் கிடைக்காது என தெரிந்து, மறு தேர்வு எழுதுவதற்காக,இந்த தேர்வில் தோல்வி அடையும் வகையில், விடைத்தாள் களில் எழுதிய விடைகளை, தாங்களே அடிக்க கூடாது. மீறினால், சம்பந்தப்பட்ட தேர்வர்கள், அடுத்து வரும் இரண்டு பருவத்திற்கான தேர்வுகளை எழுத முடியாது
* தேர்வறையில் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுடன், தேர்வர்கள் வாக்கு வாதங் களில் ஈடுபடக் கூடாது.
* 'ஹால் டிக்கெட்' இல்லாதவர்கள், எக்காரணத்தை கொண்டும், தேர்வு எழுத அனுமதிக்கபட மாட்டர்.இவ்வாறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

TNPSC உறுப்பினர் கூடாரம் காலி போட்டி தேர்வுகள் அறிவிப்பதில் சிக்கல்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யில், உறுப்பினர்கள் கூடாரம், ஒட்டுமொத்தமாக காலியாகி விட்டதால், போட்டி தேர்வுகளை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., அமைப்பானது, தலைவர் மற்றும், 14 உறுப்பினர்களை கொண்டது. கல்வி, சட்டம், பொருளாதாரம் உட்பட, பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்றவர்கள், உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர்.
முந்தைய, அ.தி.மு.க., ஆட்சியில், டி.என்.பி.எஸ்.சி., தலைவராக, அருள்மொழி நியமிக்கப்பட்டார். பின், 11 உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., சார்பில், வழக்கு தொடரப்பட்டது. விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனக்கூறி, 11 உறுப்பினர்கள் நியமனத்தை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்நிலையில், ஆறு ஆண்டுகளாக, குப்புசாமி, பன்னீர்செல்வம் என்ற இருவர் மட்டுமே, உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களின் பதவிக்காலமும் நேற்று முடிந்தது. தற்போது, டி.என்.பி.எஸ்.சி.,யில், ஒரு உறுப்பினர் கூட இல்லை.
தற்போது, தலைவர் அருள்மொழி, செயலர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர் மட்டுமே, தேர்வாணைய செயல்பாடுகளை நிர்வகித்து வருகின்றனர்.
உறுப்பினர்கள் இல்லாத தால், டி.என்.பி.எஸ்.சி., யில் ஆணைய கூட்டத்தை கூட்டி, புதிய தேர்வுகளை அறிவிப்பதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது

TET Exam : 15 லட்சம் விண்ணப்பங்கள் வீண்!புதிய விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணிகள் தீவிரம்.

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' நுழைவுத் தேர்வுக்கு, 15 லட்சம் விண்ணப்பங்கள், தவறாக அச்சிடப்பட்டு, குப்பைக்கு சென்றுள்ளன. அதனால், பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
'டெட்' தேர்வு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு, இரு மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, மூன்றாண்டுகளுக்கு பின், 'டெட்' தேர்வை மீண்டும் நடத்த, டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, தமிழக அரசு
உத்தரவிட்டது.டெட் தேர்வு குறித்து ஆலோசனை நடத்த, பிப்., முதல்வாரத்தில், சென்னைக்கு வருமாறு, சி.இ.ஓ.,க்களான மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, டி.ஆர்.பி., தலைவராக இருந்த விபுநய்யர் உத்தரவிட்டார்.
ஆனால், பள்ளிகளில் செய்முறைத் தேர்வு நேரமாக இருந்ததால், சி.இ.ஓ.,க்கள் வர, பள்ளிக்கல்வித் துறை தடை விதித்தது.இந்நிலையில், டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யர், தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனமான, 'டான்சி'க்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவை கழக மேலாண் இயக்குனர் காகர்லா உஷாவுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
விபு நய்யர் இருந்த போது, 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிட்டு, அவற்றில் முதல் கட்டமாக, 50 சதவீத விண்ணப்பங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தன.
அவற்றை, காகர்லா உஷா மற்றும் அதிகாரி கள் ஆய்வு செய்ததில், விண்ணப் பங்களில் இடம்பெற வேண்டிய, டி.ஆர்.பி., விதிகள் மற்றும் சில முக்கிய அம்சங்கள் இல்லாதது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்ட, டெட் விண்ணப்பங்கள், ஈரோட்டில் உள்ள, அரசு காகித அச்சகத்திற்கு திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மீண்டும், புதிய விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
இந்த குளறுபடியால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. 

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 3ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், வரும் கல்வி ஆண்டு முதல், மூன்றாம் வகுப்பு வரை, தமிழ் பாடம் கட்டாயமாகிறது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், சமச்சீர் மற்றும் சி.பி.எஸ்.இ., என, பல பாடத் திட்டங்களையும், ஆங்கிலம், தமிழ், ஹிந்தி என, பல பயிற்று மொழிகளும் பின்பற்றப்படுகின்றன. 
கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, தேனி, கோவை போன்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், மற்ற மாநில மாணவர்களும் படிக்கும் வகையில், பிற மாநில மொழிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், அனைத்து பள்ளிகளிலும், தமிழை கட்டாய பாடமாக்கி, 2006ல், தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன்படி, அனைத்து பிற மொழி பள்ளிகளிலும், கடந்த கல்வி ஆண்டு முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் கட்டாய பாடமானது. இதேபோல், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், தமிழை கட்டாய பாடமாக கற்பிக்க, 2014ல், தமிழக அரசு உத்தரவிட்டது. 
இதன்படி, முதலில், ஒன்றாம் வகுப்புக்கும், பின், இரண்டாம் வகுப்புக்கும் தமிழ் கட்டாயமானது. வரும் கல்வி ஆண்டில், மூன்றாம் வகுப்புக்கும், தமிழ் பாடம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.இதற்கான தமிழ் புத்தகங்களை, தமிழக பாடநுால் கழகத்தில், பள்ளிகள் கொள்முதல் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாதச் சம்பளம் 27ஆம் தேதியே வழங்க உத்தரவு...

இம்மாதம் 28ஆம் நாடு தழுவிய வேலை நிறுத்தம் காரணமாக இம்மாத சம்பளத்தை 27ஆம் தேதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

நீட் தேர்வு: பிரதமருடன் பிப்ரவரி 27-இல் சந்திப்பு.

தமிழகத்துக்கு "நீட்' தேர்வு தேவையில்லை என்பதை, பிரதமர் மோடியை வரும் 27-ஆம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்த  இருப்பதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக கோவைக்கு வெள்ளிக்கிழமை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு என்னென்ன திட்டங்களை வழங்க வேண்டும் என்று நினைத்தாரோ, அத்தனை திட்டங்களும் எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்படும்.
புதுக்கோட்டையில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டம், முழுவதும் மத்திய அரசினுடையது. இருப்பினும், இந்த விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு செயல்படும். பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம், முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்பதற்காகத் தொடரப்பட்டுள்ள வழக்குகளுடன் சேர்த்து இந்த மனுவையும் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நதி நீர் விவகாரங்களில் தமிழகத்தின் உரிமைகளை யாரும் பறித்துவிடக் கூடாது என்பதற்காகவே வழக்கு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்துக்கு மருத்துவ பொது நுழைவுத் தேர்வு ("நீட்') தேர்வு தேவையில்லை என்பதால் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. பிறகு, அந்த மசோதா மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வரும் 27-ஆம் தேதி (திங்கள்கிழமை) நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்.
தமிழகத்தில் சாலைத் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்துவதற்காக மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு சுமுகமான முறையில் செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சிலர் வேண்டுமென்றே புரளியைக் கிளப்பி வருகின்றனர். அதனால், அவரது மரணம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடும் அவசியம் எதுவுமில்லை என்றார்.

EMIS Open ஆக வில்லையா ? இப்படி முயற்சித்து பாருங்கள் !!

சிலர்  முயற்சிக்கையில் EMIS வெப்சைட் ஓப்பன் ஆகவில்லை என்று அடிக்கடி கூறுவதால் இதை பதிவிடுகிறேன்*
*செல்லில் முயற்சிப்பவர்கள் கூகுள் குரோமில் back to safety என காட்டினால் அதற்குமேல் இருக்கும் டிக்கை எடுத்துவிட்டு அந்த டிக்குடன் வரும் வரியை செலக்ட் செய்து சென்றால் பிரச்சினை சரி ஆகிடும்.
*சில பேர்களுக்கு பூட்டுப்போல் காட்டுகிறது முயற்சி செய்தாலும் போகவில்லை என்பவர்களுக்கும் அல்லது பேக் டூ சேப்டி காட்டுபவர்களுக்கும் மேலும் ஒரு எளிய வழி*
*வேறு வகையான பிரவுசர்களில் முயற்சிக்கவும்*
*உதாரணமாக மொசில்லா பயர் பாக்ஸ், யூசி புரவுசர், ஓப்ரா*
*இவ்வாறு கையாண்டால் இந்த பிரச்சினைகள் வராமல் நீங்கள் EMIS வெப்சைட்டில் log in ஆகலாம்*

கேந்திரிய பள்ளிகளில் விரைவில் 6 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: மத்திய அமைச்சர் தகவல் !!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6000க்கும் அதிகமான ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டில்லியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க செயல்பட்டுவரும் மத்திய அரசு, தரமான கல்விதான் நல்ல குடிமகனை உருவாக்கும் என நம்புவதாக ஜவடேகர் கூறினார்.
மேலும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தரமான கல்வியை வழங்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கல்வியைப்போல் விளையாட்டும் மாணவர்களுக்கு முக்கியம் என்றும் வியர்வை சிந்தி விளையாடும் மாணவர்கள் சிறந்த மாணவர்களாக விளங்குவார்கள் என்றும் ஜவடேகர் தெரிவித்தார்.
மேலும் கேந்திரிய வித்யாலயாவில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்த ஜவடேகர், விரைவில் காலியான அந்த இடங்கள் நிரப்பப்படும் என்றார்.

கேந்திரிய பள்ளிகளில் விரைவில் 6 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: மத்திய அமைச்சர் தகவல் !!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6000க்கும் அதிகமான ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டில்லியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க செயல்பட்டுவரும் மத்திய அரசு, தரமான கல்விதான் நல்ல குடிமகனை உருவாக்கும் என நம்புவதாக ஜவடேகர் கூறினார்.
மேலும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தரமான கல்வியை வழங்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கல்வியைப்போல் விளையாட்டும் மாணவர்களுக்கு முக்கியம் என்றும் வியர்வை சிந்தி விளையாடும் மாணவர்கள் சிறந்த மாணவர்களாக விளங்குவார்கள் என்றும் ஜவடேகர் தெரிவித்தார்.
மேலும் கேந்திரிய வித்யாலயாவில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்த ஜவடேகர், விரைவில் காலியான அந்த இடங்கள் நிரப்பப்படும் என்றார்.

பெட்ரோலுக்கு மாற்று - வந்துவிட்டது தண்ணீர் பைக்.. ஒரு லிட்டருக்கு 500 கிமீ மைலேஜ் !!

தண்ணீரில் இயங்கும் பைக்கா? என நம்ம சற்று கடினமாகத் தோன்றலாம், ஆனால் அதை தன் வீட்டு பின்னால் உள்ள சிறிய கேரேஜிலேயே உருவாக்கி சாதித்துக்காட்டியுள்ளார் பிரேசில் நாட்டு முதியவர் ஒருவர்.
பிரேசில் நாட்டு முதியவர் உருவாக்கிய 'தண்ணீர் பைக்கின்" செயல்பாடு பற்றிய விளக்கம்:
புதிய வரவான கேடிஎம் ஆர்சி 390 பைக்கின் படங்கள்:
தண்ணீரில் இயங்கும் பைக்கா? என நம்ம சற்று கடினமாகத் தோன்றலாம், ஆனால் அதை தன் வீட்டு பின்னால் உள்ள சிறிய கேரேஜிலேயே உருவாக்கி சாதித்துக்காட்டியுள்ளார் பிரேசில் நாட்டு முதியவர் ஒருவர்.
Ricardo Azevedo என்ற பிரேசில் நாட்டுக்காரர், தனது 1993 மாடலான ஹோண்டா என்எக்ஸ்200 பைக்கினை தண்ணீரை கொண்டு இயங்கும் வகையில் முற்றிலும் உருமாற்றியுள்ளார். இதற்கு 'டி பவர் ஹச்20 மோட்டார்பைக்' என பெயரிட்டுள்ளார் அவர்.
இந்த பைக் எலெக்ட்ரோலைசிஸ் எனப்படும் மின்னாற்பகுப்பு என்ற முறையின் அடிப்படையில் செயல்படுகிறது. இந்த பைக்கில் ஒரு கார் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. கார் பேட்டரியின் சக்தியானது தண்ணீரில் உள்ள ஹைட்ரோஜன் மூலக்கூறுகளை பிரித்தெடுக்கிறது, இப்படி பிரித்தெடுக்கப்படும் ஹைட்ரோஜன் மூலக்கூறுகள் அதிகளவில் வெளியேற்றப்படுகிறது. இந்த மூலக்குறுகளை வைத்து தான் பைக் இஞ்சின் இயங்க தேவையான ஆற்றல் கிடைக்கிறது.
பொதுவான பைக்குகளில் பெட்ரோல் எரித்து வெளியாகும் புகை வெளியேர எக்சாஸ்ட் பைப் உள்ளது போல இதில் வெளியேறும் கழிவான நீராவி வெளியேறுவதற்கு ஒரு பைப் அமைத்துள்ளார் இவர்.
இதில் ஒரு சுவாரஸ்யமாக நல்ல தண்ணீருக்கு பதிலாக தன் வீட்டருகே இருக்கும் ஒரு மாசடைந்த ஆற்றிலிருந்து எடுக்கும் தண்ணீரையே பயண்படுத்துகின்றார். நல்ல தண்ணீரை விட மாசடைந்த தண்ணீர் உபயோகப்படுத்தும் போது தான் அதிக தூரம் பைக் பயணிக்கிறதாம்.
இந்த பைக்கில் ஒரு லிட்டர் தண்ணீரை எரிபொருளாக செலுத்தினால் 300 மைல்களுக்கும் மேலாக, அதாவது கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர்கள் பயணிக்குமாம்.
இவரின் கண்டுபிடிப்பானது ஆட்டோமொபைல் துறையையே முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் அமைந்துள்ளது. இவரின் பைக் புகையை வெளியேற்றாது என்ற காரணத்தினால் முற்றிலும் ஒரு பசுமை தொழில்நுட்பமாகவே இது அமைந்துள்ளது.
அதிக விலை கொடுத்து பெட்ரோல் உபயோகிக்கத் தேவையில்லை என்பதால் இது மக்களுக்கும், புகையை வெளியேற்றாததால் சுற்றுச்சூழலுக்கும் சேர்த்தே நன்மையைத் தருகிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
ஒரு சாமானியரால், தன் வீட்டு கேரேஜிலேயே இப்படிஒரு அற்புத கண்டுபிப்பை அரங்கேற்றியிருக்க முடியும் என்றால் இந்த தொழில்நுட்பத்தை புகுத்தி இவ்வாறான பைக்குகளை பெரிய அளவில் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் போது மக்களுக்கும், சுற்றுச்சூழலிற்கும் பெரும் நன்மை ஏற்படும்.

சனி, 25 பிப்ரவரி, 2017

CPS :காலாவதியானது ஓய்வூதிய திட்ட கமிட்டி : 5 லட்சம் ஊழியர், ஆசிரியர்கள் தவிப்பு.

பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான, தமிழக அரசின் நிபுணர் குழு காலாவதியாகி, இரண்டு மாதமாகிறது. அதனால், ஐந்து லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் கேள்விக்குறி ஆகியுள்ளது.
தமிழகத்தில், 2003 ஏப்ரல் முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமல்படுத்தினார். இதில், அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், தர ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில், 10 சதவீதத்தை, ஓய்வூதிய திட்டத்திற்கு, அரசு பிடித்தம் செய்கிறது.இதற்கு சமமான தொகையை, அரசு தன் பங்காக செலுத்தும். ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, இந்த தொகையில், 60 சதவீதம் திருப்பி தரப்படும். மீதித்தொகை, பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டு, குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். ஆனால், திட்டம் செயல்பாட்டுக்கு வந்து, 14 ஆண்டுகள் ஆன நிலையில், 90 சதவீதம் பேருக்கு, ஓய்வூதிய சலுகைகள் கிடைக்கவில்லை. எனவே, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, ஆசிரியர் அமைப்புகள், 2016ல் போராட்டம் நடத்தின.
நிலைமையை சமாளிக்க, 2016, பிப்., 26ல், பழைய ஓய்வூதிய திட்ட ஆய்வுக்கான நிபுணர் குழுவை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். குழு சார்பில், ஊழியர்கள், ஆசிரியர் களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆனால், இதுவரை அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், குழுவின் ஆயுள் காலம், 2016 டிச., 25ல் முடிந்து விட்டது. இரண்டு மாதமாகி விட்ட நிலையில், குழு தலைவர் சாந்தஷீலா நாயரும், சில வாரங்களுக்கு முன் விலகி விட்டார். அதனால், குழுவின் ஓராண்டு செயல்பாடுகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ''பழைய ஓய்வூதிய திட்டம் தான், புதிய திட்டத்தால் பாதிக்கப்பட்ட, ஐந்து லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு. மீண்டும் புதிய குழு அமைப்பதற்கு பதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,'' என்றார். 

" TET " தேர்வை தள்ளி வையுங்க! : ஆசிரியர்கள் கோரிக்கை

'ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வை, தள்ளி வைக்க வேண்டும்' என, தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ன்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் களாக பணியில் சேர, மாநில அரசின், 'டெட்' அல்லது மத்திய அரசின், 'சிடெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தமிழகத்தில், வழக்குகள் காரணமாக, 2013க்கு பின், 'டெட்' தேர்வு நடக்கவில்லை.
அமைச்சர் அறிவிப்பு : சமீபத்தில் வழக்குகள் முடிவுக்கு வந்ததால், ஏப்ரல், 29 மற்றும், 30ல், 'டெட்' தேர்வு நடக்கும் என, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஆனாலும், அதிகார பூர்வ அறிக்கையை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிட வில்லை. இந்நிலையில், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
அவகாசம் தேவை : இது குறித்து, தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: போட்டி தேர்வுக்கு தயாராக, மூன்று மாதம் அவகாசம் வேண்டும். தற்போது, 'டெட்' தேர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகளில் பலர், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளிலும், பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர் களாகவும் பணியாற்றுகின்றனர். பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட அனைத்து வகுப்பு களுக்கும், ஏப்., 30 வரை தேர்வுகள் நடக்க உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான முன் தயாரிப்பு பணிகளும் நடந்து வருகின்றன. அதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள், 'டெட்' தேர்வுக்கு தயாராக அவகாசம் இல்லை.
இந்த குறுகிய கால அவகாசத்தில், பள்ளி பணிகளை விட்டு விட்டு, 'டெட்' தேர்வுக்கு தயாராவது மிக கடினம். எனவே, தேர்வு தேதியை, ஜூலைக்கு தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

கரூர் CEO மாற்றம்

கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மு.இராமசாமி அவர்கள் திருச்சி, முதன்மைக் கல்வி அலுவலராக மாற்றம்
சென்னை, மாற்றுத்திறனாளிகள் பள்ளி துணை இயக்குநராகப் பணிபுரிந்து வந்த திருமதி.அருண்மொழி தேவி கரூர் முதன்மைக் கல்வி அலுவலராக நியமனம் .

அவசரமான நிலையில் ஒரு அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு !!!

பொதுமக்களுக்கு பயன்படும் முக்கிய தீர்ப்பு :- ஓர் அரசு ஊழியர், அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியலில் குறிப்பிட்டுள்ள மருத்துவமனை அல்லாத ஒரு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்து கொண்டால், அதற்கான மருத்துவ செலவை காப்பீடு நிறுவனம் வழங்க மறுக்க முடியாது. நிதித் (ஊதியம்) துறையின் சார்பில் ஒரு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து 2012 ஆம் ஆண்டில் G. O. Ms. No - 243 என்கிற எண்ணில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அந்த
அரசாணையின் படி அரசு துறையில் பணிபுரிந்து வருபவர்களுக்கு ரூபாய் 4,00,000/- வரை மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. அந்த திட்டத்தை நிறைவேற்ற சென்னையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நியமிக்கப்பட்டது. மேற்படி அரசாணையில் எந்தெந்த நோய்களுக்கு, எந்த விதமான சிகிச்சைகளுக்கு எந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்ற விபரங்கள் கூறப்பட்டுள்ளது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே அரசு ஊழியர்கள் மேற்கண்ட பட்டியலில் கண்ட மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற வேண்டும். அப்படி அல்லாமல் வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் மருத்துவ காப்பீட்டு திட்டப்படி மருத்துவ செலவு தொகையை வழங்க முடியாது என காப்பீடு நிறுவனம் கூறுவதை ஏற்க முடியாது. ஆனால் இந்த சங்கதியை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு அரசு ஊழியருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில், அவருடைய உறவினர்கள் காப்பீடு நிறுவனம் குறிப்பிட்டுள்ள மருத்துவமனையை தேடி அலைந்து கொண்டிருக்க முடியாது. 
ஓர் அவசரமான நிலையில் ஒரு அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றிருக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. ஒரு அரசு ஊழியர் அவருக்கு சிகிச்சை செய்த பொழுதோ அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதோ அவருக்கு ஏற்படும் மன வேதனை குறித்து பல வழக்குகளில் உயர்நீதிமன்றம் விவாதித்துள்ளது. 
ஏற்கனவே K. Srinivasan Vs State of Tamilnadu and Others (W. P. NO - 13594 & 29192/2013 என்ற வழக்கில் மனுதாரருக்கு ஏற்பட்ட மருத்துவ தொகையை அரசு வட்டியுடன் செலுத்த வேண்டும் என 4.9.2014ம் தேதியில் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு மருத்துவ விதிகளில் (Tamilnadu Medical Attendance Rules) சார்ந்திருப்பவர்களுக்கு மருத்துவ சலுகை அளிப்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விதிகளின்படி அரசு ஊழியர் மருத்துவ செலவை ஈடு செய்யும் படி அரசாங்கத்திடம் கோரலாம் என Star Health And Alaid Insurance company Ltd Vs Sokkan And Others (2010-2-LW-90) என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. தமிழ்நாடு மருத்துவ விதிகளில் யார் யாரெல்லாம் அந்த விதிகளின்படி மருத்துவ சலுகை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. 
அதில் யார் நல்ல வசதியான நபர் என்பதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறா விட்டால் மருத்துவ சலுகை பெற முடியாது என்பது உண்மை தான் என்றாலும் காப்பீட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் அரசு ஊழியருக்கு மருத்துவ செலவை அரசு கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. W. P. NO. - 1408/2016, DT - 5.4.2016, ராஜா Vs 1)செயலாளர், ஆதிதிராவிடர் நலத்துறை 2) மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர் மாவட்டம் 3) நிர்வாக இயக்குநர், ஹெல்த் கேர் சர்வீசஸ் பி. லிட் (2016-3-CTC-394)

TN GOV EMPLOYED NHIS-2016 card !!

NHIS-2016 card for the period 01.07.2016 to 30.06.2020 can be downloaded online in the above link by entering your NHIS-2012 card No. & password. Password is date of birth in (DD/MM/YYYY)format

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளிகல்வி அமைச்சர் !!

தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளிகல்வி அமைச்சர் !!
ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்: அமைச்சர் செங்கோட்டையன்*
*ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கல்வி துறையில் சிறந்து விளங்க அரசு அனைத்து 
நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.