>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 13 பிப்ரவரி, 2017

INCOME TAX - 2016-17 FORMS AND EXCEL FILE ...
  
            www.kalvicikaram.blogspot.in                                                                                                                                                              CLICK HERE TO DOWNLOAD - IT TAX
                       EXCEL FILE   | PART 1 |                                                          P.MANIMARAN (Thanks sir)

மாணவர்களை தேடிச்சென்று பாடம் தன்னம்பிக்கை தரும் ஆய்வாளர்

மதுரை பைகாரா பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 70. ஓய்வுபெற்ற மீன்வளத்துறை ஆய்வாளர். சீர்காழியில் பணிபுரிந்த போது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பாராட்டை நேரில் பெற்றார். கலாமின் கொள்கை யில் அதிக பற்று கொண்டார். அதனால் அப்துல்கலாமின் அறிவுரைகள் மற்றும் தன்னம்பிக்கை வாசகங்களை கணினியில் டைப் செய்து கலர் அட்டையில் ஒட்டுகிறார். 

தினமும் கிராமப்புற அரசு பள்ளிகளுக்கு சென்று அட்டைகளை கரும்பலகையில் ஒட்டி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பாடம் நடத்தி வருகிறார். பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்களையும் வாங்கி கொடுக்கிறார். பலன் தரும் மரக்கன்றுகளையும் நட்டு வருகிறார்.

தவிர, படித்து விட்டு வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் சிறை கைதியாக இருந்து விடுதலை பெறுவோர் அரசு மானியத்துடன் மீன் வளர்ப்பு பண்ணை அமைக்கவும் வழிகாட்டு கிறார். பாடம் நடத்த செல்லும் பள்ளிகளில் மருத்துவ குணம் நிறைந்த மரங்களை நட்டு பராமரித்து வருகிறார்.
தினமலர் நாளிதழில் சட்டம் சார்ந்து வரக்கூடிய செய்திகளை சேகரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 

மேலும் அரசு மானியத்துடன் பண்ணை குட்டை அமைக்க ஏற்பாடு செய்து வருகிறார். ஓய்வு பெற்ற பிறகு வீட்டில் முடங்காமல் மாணவர்களை தேடி சென்று தன்னம்பிக்கை வளர்த்து வரும் இவரை பாராட்ட 
                     CELL NO:98656 22602.

Gmail Alert - நாளை முதல் இந்த ஃபைல்களை ஜி மெயில் மூலம் அனுப்ப முடியாது!

ஜி-மெயிலில் கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? நாளை முதல் ஒரு சில ஃபைல்களை உங்களால் ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாது என்று கூகுள் அறிவித்துள்ளது.

இந்த ஃபைல்கள் மட்டுமின்றி ஏற்கெனவே சில ஃபைல்களை ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாது என கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜி-மெயில் தற்போது .js என்ற அமைப்பில் உள்ள ஃபைல்களை பிப்ரவரி 13ம் தேதி முதல் அனுப்ப முடியாது என தெரிவித்துள்ளது. இந்த ஃபைல்களை அனுப்ப முயற்சித்தால் அதனை அனுப்ப முடியாது என்ற தகவலையும், ஏன் இந்த மெயில் அனுப்ப இயலவில்லை என்ற செய்தியையும் உங்கள் ஜி-மெயிலுக்கு கூகுள் அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏன் அனுப்ப முடியாது?

இந்த ஃபைலை ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஜி-மெயிலில் இருக்கும் பாதுகாப்பு காரணங்களுக்காக எளிதில் வைரஸ்களை பரப்பக்கூடிய ஃபைல்களின் வரிசையில் இது இருப்பதால் இந்த வகையான ஃபைல்களை ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாது என அறிவித்துள்ளது கூகுள்.

இது மட்டுமின்றி சமீபத்தில் கூகுள் .ade, .adp, .bat, .chm, .cmd, .com, .cpl, .exe, .hta, .ins, .isp, .jar, .jse, .lib, .lnk, .mde, .msc, .msp, .mst, .pif, .scr, .sct, .shb, .sys, .vb, .vbe, .vbs, .vxd, .wsc, .wsf  மற்றும் .wsh வகை ஃபைல்களையும் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஃபைல்களை எப்படி அனுப்பலாம்?

இந்த ஃபைல்களை ஒரு தனிப்பட்ட நபருடைய ஜி மெயில் கணக்கிற்கு தான் மெயில் மூலமாக அனுப்ப முடியாது என கூகுள் அறிவித்துள்ளது. ஆனால் ஒருவருக்கு இதே ஃபைல்களை கூகுள் ட்ரைவ் மற்றும் க்ளவுட் ஸ்டோரேஜ் மூலமாக அனுப்ப முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

அதனால்  .js  ஃபைல்கள் இருந்தால் அவற்றை  இன்றைக்கே யாருக்காவது அனுப்புங்கள். இல்லையெனில் ட்ரைவ் மூலமாக அனுப்புங்கள்.

இது தவிர ஜி-மெயிலில் சில சுவாரஸ்யமான விஷயங்களும் உள்ளன.

1. உங்கள் மெயில் ஐடிக்கு யார் வேண்டுமானாலும் டாட் வைத்தோ அல்லது வைக்காமலோ அல்லது வேறு ஒரு இடத்தில் டாட் வைத்தோ அனுப்ப முடியும். இதில் எப்படி அனுப்பினாலும் உங்கள் மெயிலுக்கு மெயில் வரும் என்பது தான் ஜி மெயிலின் ட்ரிக்.

2. நீங்கள் அனுப்பிய மெயில் ஏதோ தவறுதலாக இருக்கிறது என்றால் அதனை திரும்ப பெறும் வசதியும் ஜி-மெயிலில் உள்ளது. இதற்கு ஒருவர் தனது ஜி-மெயில் செட்டிங்கில் உள்ள அன்டூ ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும்.

3. கூகுளின் பூமராங் எக்ஸ்டென்ஷன் மூலம் ஜி-மெயில்களை ஸ்கெட்யூல் செய்துகொள்ள முடியும்

4. Checker Plus for Gmail என்ற எக்ஸ்டென்ஷன் மூலம் ஜி-மெயில்களை திறக்காமலேயே படிக்க முடியும்.  சில சமயம் மாஸ் மெயில் அனுப்பும் நிறுவனங்கள் எத்தனை பேர் இந்த மெயிலை திறந்துள்ளார்கள் என்ற டேட்டாவையெல்லாம் எடுக்கும்.

5. உங்கள் ஜி-மெயில் ஓப்பன் செய்து வலது கை ஓரத்தில் இருக்கும் கமென்ட்டை கவனியுங்கள். கடைசியாக எப்போது உங்கள் கணக்கு பயன்படுத்தப்பட்டது என்ற விவரம் இருக்கும் அதன் மூலம் உங்கள் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்துகிறார்களா? என்பதையும் ஆராய முடியும்.

HOW TO GET CPS ALLOTMENT LETTER?

         தற்பொழுது தங்களுடைய பணிப் பதிவேடுகள் (SR) கணினி மயமாக்கப்பட
(Computer   Digital) உள்ளதால் அனைவரும் தங்களுடைய SR ல் அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கும் பணியினை ஆசிரியர்கள் செய்துகொள்ள வேண்டும்,  அவ்வாறு செய்யும் பொழுது CPS பற்றிய தகவலுக்கு வருவோம் CPS பிடித்தம் செய்ய நமக்கு Allotment Letterஒன்று உள்ளது அதனை தங்களுடைய SR ல் பதிவுசெய்யப்பட வேண்டும்.

அந்த Allotment Letter எங்கு கிடைக்கும் என்ற கேள்வி உங்கள் அனைவருக்கும் எழும் அதனை தேடி எங்கும் அலைய தேவையில்லை, கீழ்காணும் link ஐ Google ல் type செய்யவும்,



என்று type செய்தால் தங்களுடைய CPS எண் மற்றும் Date of Birth கேட்கும் அதனைப் பதிவு செய்து  Login என்பதை கிளிக் செய்தால் உங்கள் cps accountpage க்குள் செல்லும், அந்த பக்கத்தில் இடது புறம் பார்த்தால் Allotment Letter என்று இருக்கும் அதனை கிளிக் செய்தால் தங்களுடைய Allotment Letter கிடைத்துவிடும் அதனை download செய்து print எடுத்து அதனை பார்த்து SR ல் பதிவு செய்துகொள்ளுங்கள், மேலும் இப்பக்கத்தில் CPS statement ஐ யும் பார்த்துக்கொள்ளலாம், நன்றி

நீட் மசோதாவுக்கு ஒப்புதல் தேவை: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

"நீட்' தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி விரைந்து பெற்றுத் தர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை எழுதிய கடிதம்:-
நாடு முழுவதும் மே 7-இல் நடைபெறும் நீட் தேர்வுக்கு விண்ணப்பப் படிவத்தைப் பெறுவதற்கு மார்ச் 1-இல் கடைசி நாளாகும்.
இந்த நிலையில் மாணவர்களின் நலனைப் பாதுகாக்க இந்த விவகாரத்தில் பிரதமர் அவசரமாகத் தலையிட வேண்டும்.
மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் கிராமப்புற மாணவர்களின் நலனை நீட் தேர்வு நிச்சயம் பாதிக்கும். அறிவார்ந்த மருத்துவர்கள் தேவை என்பதை மறுப்பதற்கில்லை.
அதேசமயம் சிறந்த பொது சுகாதாரத்துக்காகவும், மருத்துவ சேவைகளை கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்லவும் எளிய மருத்துவர்கள் தேவை என்பதும் மிக முக்கியமானது.
மாணவர்களின் விருப்பத்துக்கு மதிப்பளித்து, தமிழக அரசால் அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதா திமுகவின் முழு ஆதரவுடன் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேர்வுத் தேதி நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல், அரசியல் சாசன நெருக்கடியால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. இதனால் மசோதாவின் எதிர்காலம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.
எனவே, இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தர பிரதமரின் ஒத்துழைப்பைக் கோருகிறேன். மேலும், கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

+2 வணிகவியல் பாடத்திற்கு இலவச டிவிடி மெட்டிரியல்- அசத்தும் கரூர் மாவட்ட ஆசிரியர் கார்த்திகேயன்

+2 வணிகவியல் பாடப்பொருளை மாணவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் டிவிடி வடிவில் தயாரித்து கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வணிகவியல் ஆசிரியர் கார்த்திகேயன் என்பவர்  வெளியிட்டுள்ளார்.இது ஆசிரியர்கள், மாணவர்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 வணிகவியல் பாட ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சியும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் வணிகவியல் பாடத்திற்கான இந்த
டிவிடி மெட்டிரியல் வெளியிடப்பட்டது.
இந்த வீடியோ மெட்டிரியலை தயாரித்து வழங்கிவரும் கரூர் மாவட்டம் ஈசநத்தம் அரசுமேல்நிலைப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் கார்த்திகேயன் இது குறித்து நம்மிடையே பேசுகையில்..,
"கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் 100% தேர்ச்சியும், பல மாணவர்களை 200க்கு 200 மதிப்பெண்கள் பெறவைத்தும் வருகிறேன்.முன்பு கோடைபண்பலை வானொலியில் அறிவிப்பாளராகவும், தூர்தர்ஷனின் பொதிகை தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராகவும் பணியாற்றிய அனுபவத்தோடு புதிய தொழில்நுட்பங்களோடு  புதிய அணுகுமுறைகளைக் கையாண்டு பாடங்களை நடத்திவருகிறேன்.
எனது மாணவர்களுக்கு  வணிகவியல் பாடம் தொடர்பாக எனது குரலில் பேசி நானே தயாரித்த வீடியோக்கள் மூலமாக பாடங்களை நடத்தி , தேர்ச்சி விழுக்காட்டிலும் நல்ல முன்னேற்றம் கண்டேன்.அதை  ஒரே டிவிடி தொகுப்பாக்கி அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வண்ணம் இலவசமாக வழங்கவேண்டும் என்ற எண்ணத்தில் பாடப்பொருளை உள்ளடக்கிய இந்த டிவிடியை சேவை நோக்கோடு  வழங்கி வருகிறேன்.
பாடப்பொருளை படமாக பார்ப்பதால்  படிப்பதில் மாணவர்களின் ஆர்வம் கூடும் என்பதோடு பாடத்தையும்  அவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள் என்பது எனது பள்ளி மாணவர்கள் மூலம் கிடைத்த அனுபவம்.
அனைத்து அரசுபள்ளி மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்பதற்காகவே இந்த டிவிடியை எனது சொந்த செலவில் தயாரித்து வழங்கிவருகிறேன்.இந்த டிவிடி தேவைப்படுவோர் 9943149788 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் எனது கல்வி தொடர்பான வீடியோக்களை Karthikeyancommerceஎன்ற யூடியூப் சேனலை Subscribe செய்வதன் மூலமாக பார்க்கலாம். விரைவில் கணக்குப்பதிவியல் பாடத்திற்கும் இதே   போன்று டிவிடி மெட்டிரியலை வெளியிடவுள்ளேன்"
என்றார்.

பள்ளிக்கல்வி இயக்குனரகம் தான் டெட் தேர்வு தாமதத்திற்கு காரணம்

பள்ளிக்கல்வி இயக்குனரகம் தான் டெட் தேர்வு தாமதத்திற்கு காரணம்

திட்ட வேலையை மாற்றி, நிரந்தரப் பணி வழங்க, பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை.

திட்ட வேலையால் வாழ்வாதாரத்தை இழக்கும், 16549 பகுதிநேர ஆசிரியர்களை (பயிற்றுநர்களை), தமிழக அரசு நிரந்தரப் பணிக்கு
மாற்ற வேண்டும்.
தமிழக அரசானது,  மத்திய அரசின் திட்ட வேலையை, மத்திய-மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் 2012-ஆம் ஆண்டு 16549 பகுதிநேர ஆசிரியர்களை (உடற்கல்வி, ஓவியம், கணினி, தோட்டக்கலை, இசை, தையல், வாழ்வியல்திறன், கட்டிடவியல்) ஒப்பந்த அடிப்படையில், ரூ.5000/- தொகுப்பூதியத்தில் பகுதிநேரமாக பணியாற்றும் வகையில் நியமித்தது. 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு 3 அரைநாள்கள் வீதம், மாதத்தில் 12 அரைநாள்கள் பணியாற்ற உத்தரவிடப்பட்டது. இவர்களுக்கு தொகுப்பூதியம் முதலில் கிராமக் கல்விக்குழு மூலமாகமாகவும், தற்போது பள்ளி மேலாண்மைக்குழுவாலும் வழங்கப்பட்டு வருகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் அனைத்து வகைப் பணிப் பிரிவினருக்கும் ஊதிய உயர்வு வழங்கியபோது, முதல் முறையாக பகுதிநேர ஆசிரியர்களுக்கும் (2014 ஏப்ரல் முதல்) ரூ.2000/- ஊதியம் உயர்த்தப்பட்டு ரூ.7000/- வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் டாஸ்மாக், ஊரக வளர்ச்சி துறை வட்டார வளர்ச்சி அலுவலக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட கணினி இயக்குபவர்களைப் போல பல்வேறு துறைகளில் உள்ள தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஆண்டு வாரியாக ஊதிய உயர்வு வழங்கப்பட்டுவருகிறது. எனவே, பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு 2011-12ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு ஆண்டு வாரியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
14வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 16549 பகுதிநேர ஆசிரியர்களுக்கும் ஓராண்டுக்கு 12 மாதங்களுக்கான ஊதியத்தைக் கணக்கிட்டு அறிவித்ததை அமுல்படுத்த வேண்டும். 2012ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒவ்வொரு வருடமும் 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மே மாதங்களின் தொகுப்பூதியத் தொகையான ரூ.51 கோடியே 30 இலட்சத்து 19 ஆயிரத்தை பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்க துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2015, 2016ஆம் ஆண்டுகளில் ஜாக்டோ அமைப்பின் போராட்டங்களின்போது பள்ளிகளை இயக்க அரசின் உத்தரவுப்படி முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட 15000க்கும் மேற்பட்ட பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு, தொடர் கோரிக்கையான முழுநேரப் பணி வழங்கவில்லை.
கோவா மாநிலத்தில் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மாதம் ரூ.15000/-, ஹரியானாவில் ரூ.10000/- வீதம் வழங்கப்படுகிறது. மேலும், கேரளம், கர்நாடகம் மாநிலங்களில் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் வேலை வழங்கப்பட்டு, கூடுதல் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. எனவே, மற்ற மாநிலங்களில் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு  10000/- முதல் 15000/-வரை தொகுப்பூதியமும், ஒன்றுக்கும் அதிகமான பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்புகளும் இதுவரை தமிழகத்தில் அமுல்படுத்தப்படவில்லை. எனவே பொருளாதார சிக்கல்களால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும், பகுதிநேர பயிற்றுநர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த ஆண்டுக்கு ரூ.400/- கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து, அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
சமவேலை – சம ஊதியம் என்ற தத்துவத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.ஹெகர், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் பஞ்சாப் மாநில ஒப்பந்த தொழிலாளிக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பை, மத்திய – மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒப்பந்த வேலையில் உள்ளதால் பண்டிகை கால ஊக்கத்தொகை, பணியின்போது உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு ஆகியவை வழங்கப்படவில்லை. பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் மறுக்கப்பட்டுவருகிறது. மகளிர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு அனுமதிக்கப்படுவதில்லை. பணி நியமனம் மற்றும் பணி நிரவலின்போது தொலைதூரப் பள்ளிகளுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டவர்களுக்கு இதுவரை அருகிலுள்ள பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், ஒரே கல்வித் தகுதியில் உள்ளவர்களில் இருவேறு நிலைகளில் பணிமர்த்தி, ஒரு பிரிவினர் அரசு சலுகைகளுடன் சிறப்பாசிரியர்களாகவும், மறு பிரிவினர் ரூ.7000/- தொகுப்பூதியத்தில் மத்திய அரசின் திட்ட வேலையில், ஒப்பந்த அடிப்படையில் பகுதிநேரப் பயிற்றுநர்களாகவும் பணியாற்றி வருவதை தமிழக அரசு தீர்வு காண வேண்டும். ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றிய ஆசிரியர் பயிற்றுநர்களை, பணிநிரந்தரம் செய்தது போல 16549 பகுதிநேரப் பயிற்றுநர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்.

இன்று முதல் செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் !!

பேராசிரியர் பணியில் சேர்வதற்கு தகுதித் தேர்வான ‘செட்’ தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 12 ஆம் வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி,பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு, முதுநிலை பட்டப் படிப்புடன் "நெட்' (பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு)
அல்லது "செட்' (மாநில அளவிலான தகுதித் தேர்வு) தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். அகில இந்திய அளவில் "நெட்' தேர்வை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. அதேபோல், மாநில அளவில் ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் சார்பில் ‘செட்’ தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில்,2017 ஆம் ஆண்டிற்கான ‘செட்’ தேர்வு கொடைக்கனலில் உள்ள அன்னைத் தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு,ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்வை ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதலாம். இந்த தேர்வுக்கு பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பிக்கத் தவறியாதவர்கள், அபராதமாக ரூ.300 செலுத்தி மார்ச் 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
"செட்' தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 1,500 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு ரூ.1,250-ஆகவும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500-ஆகவும் தேர்வுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்,நெட் தேர்விற்கு 500 ரூபாயாக இருந்த தேர்வு கட்டணம் 600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டுக்கான செட் தேர்வு அன்னைத் தெரசா பல்கலைகழகம் சார்பில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்டிரிமிங் வீடியோக்களை பதிவிறக்க எளிய வழி!

சமூக வலைத்தளங்களில் தற்போது அதிக அளவில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்திய கணக்கீட்டின்படி,10ல் 6 பேர் இணையம் வழியாக விடீயோக்களைப் பார்த்துக்கொண்டுள்ளனர்.மேலும் 60நொடிகளுக்குள்ளாக 400
மணிநேரங்கள் ஓடக்கூடிய விடியோக்கள் யூட் யூப்பில் அப்லோட் செய்யப்படுகிறது.
இணையத்திலோ அல்லது சமூகவலைத்தளங்களிலோ இவ்வாறு ஒளிபரப்படுகிற ஸ்ட்ரீமிங் விடியோக்கள் பயனுள்ளவையாகவோ அல்லது பொழுதுபோக்குக்காகவோ இருக்கலாம்.அவற்றை டவுன்லோட் செய்துகொள்ள பின்வரும் எளிய வழிகளைப் பின்பற்றினால் போதும். உங்கள் கம்ப்யூட்டரில் ஜே டவுன்லோடர் 2 என்ற செயலியை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு டவுன்லோட் செய்ய வேண்டிய வலைதளத்தின் யுஆர்எல் லிங்க்கை ஜே டவுன்லோடர் 2 ஆப்பில் பதிவிட்டு இதன் வழியாக நமக்கு அந்த தளத்தில் தேவையான விடீயோக்களை டவுன்லோட் செய்துகொள்ளலாம்..

சசிகலாவின் கூடாரம் சரிவு – அங்கு மொத்தமே 95 எம்.எல்.ஏக்கள் தான். அதிலும் 30 அதிருப்தியில்?



சசிகலா வசம் மொத்தமே 95 எம்.எல்.ஏக்கள்தான் இருப்பதாக ஒரு பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் 30 பேர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அவர்கள் தங்களைத வீடு திரும்ப அனுமதிக்குமாறு சசிகலாவிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சசிகலாவின் கூவத்தூர் பயணம் பெரிய அளவில் வெற்றி இல்லை என்றுதான் கூற வேண்டும் என்று உள் நிலவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். அவர் எதிர்பார்த்தது போல சுமூகமான பயணமாக இது அமையவில்லை என்று கூறப்படுகிறது.
சசிகலாவின் கூவத்தூர் பயணத்தின் உண்மை நிலவரம் குறித்து கீழ்க்கண்டவாறு தகவல்கள் கூறுகின்றன.
பதவியேற்பு மேலும் தாமதமானால் ஆதரவு மேலும் குறையும் என்ற அபாய நிலையில் சசிகலா தரப்பு உள்ளதாம்.

ஓ.பி.எஸ். பக்கம் மேலும் 10 அமைச்சர்கள்? மெஜாரிட்டியை இழக்கிறார் சசிகலா?


மாஃபா பாண்டியராஜனை தொடர்ந்து மேலும் 10 அமைச்சர்களும், சில எம்.எல்.ஏக்களும் சசிகலா பக்கம் தாவ தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தால் சசிகலாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. ஆக, தற்போது 233 சட்டமன்ற உறுப்பினர்கள் இவர்களில் சபாநாயகர் வாக்களிக்க முடியாது. 232 பேர் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள்.
(அ.தி.மு.க.: 135 , தி.மு.க.: 89, காங்கிரஸ்: 8, முஸ்லீம் லீக்:1 )
பெரும்பான்மை பெற ஆட்சியமைக்க 117 பேரின் ஆதரவு தேவை.
135 அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் தனக்கு உள்ளதாக ஆட்சியமைக்க கோரினார் சசிகலா. இது பிறகு படிப்படியாக குறைந்து தற்போது 111 ஆக மாறி இருக்கிறது. இதனால் சசிகலா தரப்புக்கு அதிர்ச்சி அடைந்துள்ளது.
அதே நேரம், பன்னீர்செல்வத்தாலும் 117 உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி கிடைக்காத பட்சத்தில் அவர் தி.மு.க., காங்கிரஸ் உதவியை நாட வேண்டி இருக்கும்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ .நடராஜ், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதால் அ.தி.மு.க. கட்சி உறுப்பினராக சட்டப்படி கணக்கில் கொள்ளப்படும் தமீமும் அன்சாரி உட்பட 16 பேர், இன்னமும் தாங்கள் யார் பக்கம் என்பதை தெரிவிக்கவில்லை. இவர்களை தங்கள் பக்கம் இழுத்துவிடலாம் என்று ஓ.பி.எஸ். பக்கம் தீவிரமாக நம்புகிறது. இவர்களை வளைக்க சசி தரப்பும் தலையால் தண்ணீர் குடித்து வருகிறது.
ஆகவே குதிரை பேரம் தீவிரமாக நடைபெற ஆரம்பித்துவிட்டது.

ஓபிஎஸ் அணியில் கல்வி அமைச்சர் பாண்டியராஜன்: எல்லா எம்எல்ஏக்களும் வருவார்கள் என நம்பிக்கை


முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் நேற்று நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஓபிஎஸ்ஐ ஆதரிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால், அக்கட்சியில் அடுத் தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. ஓபிஎஸ்-க்கு கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சென்னை ஆர்.ஏ.புரம் கிரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு நேற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வந்து ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம்வரை சசிகலாவுக்கு ஆதரவு அளித்து வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டிய ராஜன், நேற்று காலை திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வாக்காளர்களின் குரலுக்கு செவி சாய்ப்பேன்’ என பதிவு செய்திருந்தார். கட்சியின் ஒற்று மைக்காகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழையும் கருத்தில் கொண்டு முடிவெடுப் பேன் என்றும் அவர் தெரி வித்திருந்தார். இதைத் தொடர்ந்து நேற்று பகல் 1 மணி அளவில் சுமார் 500க்கும் மேற்பட்டோருடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத் துக்கு வந்த பாண்டியராஜன், தனது ஆதரவை தெரிவித்தார். திடீரென கூட்டம் கூடியதால், அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஓபிஎஸ் அணிக்கு வந்த அமைச்சர் பாண்டியராஜனை தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். பின்னர், நிருபர்களிடம் கே.பாண் டியராஜன் கூறியதாவது: 3 வருடம் 6 மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா தலைமையில் என்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டேன். அதிமுக எஃகு கோட்டையாக இருக்க வேண்டும் என்றால் ஓபிஎஸ் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அங்குள்ள ஒவ்வொரு எம்எல் ஏக்களும் இதைத்தான் எதிர்பார்க் கிறார்கள். அவர்கள் எல்லோரும் இங்கு வருவார்கள். எந்த வகையிலாவது அதிமுகவில் பிளவு ஏற்படும் என எதிர்பார்க்கும் திமுகவுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். வாக்களித்த மக்கள் எல்லோரும் ஓபிஎஸ் ஆட்சி அமைய வேண்டு மென விரும்புகின்றனர். அந்த வகையில் மக்களை சந்தித் தோம். மக்களின் ஆதரவு ஓபிஎஸ்-க்கு இருக்கிறது. எனவே, அவரது தலைமையிலான ஆட் சிக்கு ஒருங்கிணைந்து நிற்போம். அதற்காக பாடுபடுவோம். இவ் வாறு அவர் கூறினார். 2 எம்.பி.க்கள் ஆதரவு

முன்னதாக கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக எம்பி அசோக் குமார், நாமக்கல் தொகுதி எம்பி பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் நேற்று காலை 10 மணியளவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். அசோக்குமார் எம்.பி. கூறும்போது, ‘‘முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி, அதிமுக தொண் டர்களை கொண்டதாகும். மற் றொரு அணி தொண்டர்கள் அல்லாமல் இருக்கிறது. அதி முகவில் சில கருங்காலிகள் நுழைந்துள்ளனர். அதை தூள் தூளாக்க வந்தவர் ஓபிஎஸ். குறுக்கு வழியில் ஆட்சியில் அமர அவரை கட்டாயப்படுத்தி, மிரட்டியும் கையெழுத்து வாங்கி யுள்ளனர். இதற்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள். அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களுக்கு ஓபிஎஸ்-ஐ ஆதரிக்கின்றனர்’’ என்றார். பி.ஆர்.சுந்தரம் கூறும்போது, ‘‘ஓ.பன்னீர்செல்வத்தின் துணிச்சலான முடிவை வரவேற்கிறேன். அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் வரவேற்கிறார்கள். தற்போது முதல்கட்டமாக நாங்கள் 2 பேர் வந்துள்ளோம். அடுத்த 2, 3-ம் கட்டமாக மற்ற எம்பிக்களும் இங்கு வருவார்கள். தம்பிதுரையை தவிர மற்ற எம்பிக்கள் வந்து ஓபிஎஸ்-க்கு ஆதரவு தருவார்கள். முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு 15 பேர் கொண்ட குழுவினர் ஜேம்ஸ்பாண்ட் அணியைபோல செயல்பட்டனர். எங்களை ஜெயலலிதாவின் உடலை பார்க்கக்கூட அனுமதிக்க வில்லை. அந்த இரவே யாரை முதல்வராக்குவது, எப்படி ஆட் சியை பிடிப்பது என சதிதிட்டம் தீட்டினார்கள். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திய பெருமை ஓபிஎஸ்-ஐ சாரும். முதல்வர் ஜெய லலிதாவின் இறப்பில் உள்ள மர்மத்தை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

15 ஆண்டு காலமாக சசிகலாவிடம் சித்திரவதையை அனுபவித்தேன்.. ஓபிஎஸ் குமுறல்



சசிகலாவிடம் 15 வருடமாக நான் சித்திரவதையை அனுபவித்து வந்தேன் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவு தனது இல்லத்தில் செய்தியாளர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்றுதான் மக்கள் வாக்களித்தனர் சசிகலா முதல்வராவதை எம்.எல்.ஏக்கள் விரும்பவில்லை 2 நாட்களாக ஏன் கூவத்தூர் சென்று வருகிறார் சசிகலா. ஏன்? கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏக்கள் என்னுடன் பேசிக் கொண்டுள்ளனர் ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் 4 பேரை காவலுக்கு நிறுத்தியுள்ளனர் அம்மா ஏற்படுத்திய ஆட்சியைக் காப்பாற்ற வேண்டிய எண்ணம் மட்டுமே என்னிடம் உள்ளது. பொதுச் செயலாளராக மதுசூதனைத்தான் தேர்வு செய்வோம் என்று சொன்னார்கள். இப்போது செய்தியாளர்களைச் சந்திக்கும் சசிகலா, அம்மா மருத்துவமனையில் இருந்தபோது சந்திக்காதது ஏன் எங்கள் யாரையும் அம்மாவைப் பார்க்க அனுமதிக்கவில்லை சசிகலா ரத்த சொந்தமான தீபாவையும் அனுமதிக்கவில்லை ஜெயலலிதா இதுவரை என்னை கடுஞ்சொல் கொண்டு பேசியதில்லை ஜெயலலிதா என்னை கடுமையாக பேசாததே இவர்களுக்குக் கோபம் 15 வருடமாக சசிகலாவிடம் சித்திரவதையை அனுபவித்தேன் இப்போது நீலிக் கண்ணீர் வடித்து ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறார்.

நான் ஒரு சிங்கம்- அதிமுக, ஆட்சியை எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது: கூவத்தூரில் சசிகலா

தாம் ஜெயலலிதா எனும் சிங்கத்திடம் இருந்த குட்டி சிங்கம்; தாம் உயிருள்ளவரை அதிமுகவையும் ஆட்சியையும் காப்பாற்றுவேன் என சிறைவைக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களிடையே பேசிய சசிகலா கண்ணீருடன் தெரிவித்துள்ளார். கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள 129 எம்.எல்.ஏக்களிடையே இன்று சசிகலா பேசியதாவது: ஜெயலலிதா எனும் சிங்கத்துடன் இருந்த குட்டி சிங்கம் நான். ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள் அனனவருமே சிங்கங்கள்தான்.

அதிமுகவில் ஒரு குட்டி சிங்கம் வந்துவிட்டதே என எரிச்சலடைந்துள்ளனர். எத்தனை வலை விரித்தாலும் அதை எதிர்கொண்டு இந்த சிங்கம் வெளியே வரும். அதிமுக ஆட்சியை எப்படியாவது கலைத்துவிடலாம் என நினைக்கின்றனர். இதற்காக எட்டப்பர்களை வைத்து ஆட்சியை கலைக்கவும் முயற்சிக்கின்றனர். இங்கே 129 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். நீங்கள்தான் அரசாங்கம். நீங்கள் 129 பேரும் சிங்கங்கள். நானும் ஒரு சிங்கம். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் ஆட்சியை எதுவும் செய்துவிட முடியாது. நான் ஜெயலலிதா நினைவிடத்தில் நின்றபோது என்னை நகரவிடாமல் ஒரு ஈர்ப்பு சக்தி தடுத்தது. அப்போது அங்கே அதிமுகவையும் ஆட்சியையும் உயிருள்ளவரை காப்பாற்றுவேன் என உறுதி எடுத்துக் கொண்டேன். என் உயிருள்ளவரை அதிமுகவையும் ஆட்சியையும் காப்பாற்றுவேன். எந்த கொம்பனாலும் அதிமுகவையும் ஆட்சியையும் அசைத்துவிட முடியாது; என் உயிரை கொடுத்து ஆட்சியையும் அதிமுகவையும் கைப்பற்றுவேன். நம் கையாலே நம் கண்ணை குத்துகிறார் ஓ. பன்னீர்செல்வம். நாம் ஒற்றுமையாக இருந்தால் டெல்லி வரை யாரும் எதுவும் செய்ய முடியாது. எம்.எல்.ஏக்கள் என்னுடன் இருந்தால் எதையும் சாதிப்பேன்; என்னைப் பொறுத்தவரையில் நான் எடுத்த முடிவில் பின்வாங்க மாட்டேன். அதிமுகவையும் ஆட்சியையும் தக்க வைக்க எந்த முடிவையும் தெளிவாக எடுப்போம்; நானும் ஜெயலலிதாவும் சென்னை, பெங்களூர் சிறைகளைப் பார்த்தவர்கள்; சிறையில் இருந்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறோம். பெண் என்றுதானே அச்சுறுத்தப் பார்க்கிறார்கள். அது நடக்காது. சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்கவிடாமல் சதி செய்கிறார்கள். நாம் சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க வேண்டும்; ஜெயலலிதா படத்தை திறப்பதுதான் என் வாழ்நாள் பாக்கியம். நாம் நிச்சயம் ஆட்சி அமைப்போம். 129 பேரும் ஜெயலலிதா நினைவிடத்தில் நின்று புகைப்படமெடுத்து அங்கிருந்து கோட்டைக்கு செல்வோம் என ஜெயலலிதா படம் முன்பாக சபதமெடுப்போம். இவ்வாறு சசிகலா கூறினார்.

CPS திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் ALLOTMENT LETTER ஐ பதிவிறக்கம் செய்து பணி பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது

       CPS | பணிப் பதிவேடுகள் (Service Register) கணினிமயமாக்கப்பட உள்ளதால் CPS

திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின்
ALLOTMENT LETTER ஐ பதிவிறக்கம் செய்து பணி பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது | தற்பொழுது தங்களுடைய பணிப் பதிவேடுகள் (SR) கணினி மயமாக்கப்பட (Computer Digital) உள்ளதால் அனைவரும் தங்களுடைய SR ல் CPS ONLINE MISSING CREDIT, ALLOTMENT LETTER, STATEMENTS என அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கும் பணியினை செய்துகொள்ள வேண்டும், அவ்வாறு செய்யும் பொழுது CPS பற்றிய தகவலுக்கு வருவோம் CPS பிடித்தம் செய்ய நமக்கு Allotment Letter ஒன்று உள்ளது அதனை தங்களுடைய SR ல் பதிவுசெய்யப்பட வேண்டும். அந்த Allotment Letter எங்கு கிடைக்கும் என்ற கேள்வி உங்கள் அனைவருக்கும் எழும் அதனை தேடி எங்கும் அலைய தேவையில்லை, கீழ்காணும் link பயன்படுத்தி DOWNLOAD செய்ய வேண்டும். தங்களுடைய CPS எண் மற்றும் Date of Birth பயன்படுத்தி Login என்பதை கிளிக் செய்தால் உங்கள் cps account page க்குள் செல்லும், அந்த பக்கத்தில் இடது புறம் பார்த்தால் Allotment Letter என்று இருக்கும் அதனை கிளிக் செய்தால் தங்களுடைய Allotment Letter கிடைத்துவிடும் அதனை download செய்து print எடுத்து அதனை பார்த்து SR ல் பதிவு செய்துகொள்ளுங்கள், மேலும் இப்பக்கத்தில் CPS statement ஐ யும் பார்த்துக்கொள்ளலாம்.

http://218.248.44.123/auto_cps/public/index.php

CPS | பணிப் பதிவேடுகள் (Service Register) கணினிமயமாக்கப்பட உள்ளதால் CPS திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் ALLOTMENT LETTER ஐ பதிவிறக்கம் செய்து பணி பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது | தற்பொழுது தங்களுடைய பணிப் பதிவேடுகள் (SR) கணினி மயமாக்கப்பட (Computer Digital) உள்ளதால் அனைவரும் தங்களுடைய SR ல் CPS ONLINE MISSING CREDIT, ALLOTMENT LETTER, STATEMENTS என அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கும் பணியினை செய்துகொள்ள வேண்டும், அவ்வாறு செய்யும் பொழுது CPS பற்றிய தகவலுக்கு வருவோம் CPS பிடித்தம் செய்ய நமக்கு Allotment Letter ஒன்று உள்ளது அதனை தங்களுடைய SR ல் பதிவுசெய்யப்பட வேண்டும். அந்த Allotment Letter எங்கு கிடைக்கும் என்ற கேள்வி உங்கள் அனைவருக்கும் எழும் அதனை தேடி எங்கும் அலைய தேவையில்லை, கீழ்காணும் link பயன்படுத்தி DOWNLOAD செய்ய வேண்டும். தங்களுடைய CPS எண் மற்றும் Date of Birth பயன்படுத்தி Login என்பதை கிளிக் செய்தால் உங்கள் cps account page க்குள் செல்லும், அந்த பக்கத்தில் இடது புறம் பார்த்தால் Allotment Letter என்று இருக்கும் அதனை கிளிக் செய்தால் தங்களுடைய Allotment Letter கிடைத்துவிடும் அதனை download செய்து print எடுத்து அதனை பார்த்து SR ல் பதிவு செய்துகொள்ளுங்கள், மேலும் இப்பக்கத்தில் CPS statement ஐ யும் பார்த்துக்கொள்ளலாம்.

http://218.248.44.123/auto_cps/public/index.php

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

    INCOME TAX CALCULATION EXCEL SHEET- 


     KALVICIKARAM.BLOGSPOT.IN

    BEST IT EXCEL SHEET RELEASED.....



          INCOME TAX
            2016-2017
         EXCEL FILES-FORMS


           FEATURES:- IT 2016 FOR CPS TEACHERS....

         BASIC SALARY, GRADE PAY,PP AND HRA   ENTRY ARE MANUAL .............
        DA CALCULATED AUTOMATICALLY....
       CPS  CALCULATED AUTOMATICALLY...
       DA ARREAR AND SURRENDER ARE MANUAL....

குறைகள் இல்லாத படி இதனை நானே வடிவமைத்துள்ளேன் பயன்படுத்திவிட்டு கூறுங்கள் தோழர்களே ......

உங்கள் கருத்துகள் வரவேர்க்கப்படுகின்றன ....நன்றி.....

IT Tax Form 2017


Tax Forms - 2017
  1. IT Tax Form 2017 (Excel) | Mr. Thomas Antony
  2. IT Tax Form 2017 (Excel) | Mr. Tamilarasan
  3. IT Tax Form 2017 (Excel) | Mr.Arunagiri
  4. IT Tax Form 2017 (Excel) | Mr. Manogar
  5. IT Tax Form 2017 (Excel) | Mr. Fayaz Basha
  6. IT Tax Form 2017 (Excel) | Mr. P. Manimaran
  7. IT Tax Form 2017 (Excel) | Mr. Senthilkumar 
  8. IT Tax Form 2017 (Excel) | Mr. S. Manohar 
  9. IT Tax Form 2017 (Excel) | Mr. S. Samuel Selvaraj
  10. IT Tax Form 2017 (PDF) | Tamil Form
  11. RTI Letter 1 About NHIS Deduction
  12. RTI Letter 2 About NHIS Deduction


BREAKING NEWS:-முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் ஆதரவு!!







முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரிப்பார்கள் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

*முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்த பின் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி..

*முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

*மக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே முதலமைச்சருக்கு ஆதரவு - மாஃபா பாண்டியராஜன்.

*அதிமுகவில் பிளவு ஏற்பட நினைக்கும் திமுகவின் கனவு பலிக்காது - மாஃபா பாண்டியராஜன்.

12th Maths - New Mobile App For Students...


IT - 80CCD (1B) யில் CPS தொகையினை பதிவு செய்யக்கூடாது விருதுநகர் மாவட்ட கருவூலத்துறை தகவல்...


IT - 80CCD (1B) யில் CPS தொகையினை பதிவு செய்யக்கூடாது விருதுநகர் மாவட்ட கருவூலத்துறை தகவல்...

cppcp

INCOME TAX CHALLAN FORM - BANK | TREASURY..

விண்வெளிக்கு செல்லும் இந்திய 

வம்சாவளி பெண்!

         இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஷாவ்னா பாண்டியா என்ற பெண் விண்வெளிக்குச் செல்ல இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
 
         2018- ஆம் ஆண்டில் நடைபெற உள்ள இந்த விண்வெளி பயணத் திட்டத்தின் கீழ் பங்கேற்கவுள்ள நபர்களை நாசா அண்மையில் வெளியிட்டது. அதில், இந்திய

வம்சாவழியை சேர்ந்த ஷாவ்னா பாண்டியாவும் இடம்பெற்றுள்ளார். இதனால் விண்வெளி செல்லும் மூன்றாவது இந்திய வம்சாவழி பெண் என்ற பெருமையும் ஷாவ்னாவை சேரும்.கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை தொடர்ந்து ஷாவ்னா பாண்டியா விண்வெளி செல்லவிருக்கிறார்.
நன்கு பயிற்சி பெற்ற விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள நபர்களை மட்டுமே, விண்வெளிக்கு அனுப்புவது வழக்கம். ஆனால் ஷாவ்னா ஒரு மருத்துவர். எனவே இதற்கான சிறப்பு பயிற்சியை நாசா மையத்தில் ஷாவ்னா பாண்டியா மேற்கொண்டு வருகிறார்.இது குறித்து ஷாவ்னா பாண்டியா முக நூலில் எழுதியிருக்கிறார். ' இதற்கான ஊக்கமும், நம்பிக்கையும் கொடுத்த அனைத்து நலம் விரும்பிகளுக்கும் நன்றி. விண்வெளிக்கு செல்வதை பற்றியும் அங்கு தெரிந்து கொள்ளும் விஷயங்கள் பற்றியும் மிக ஆர்வமாக இருக்கிறேன். என்னை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. நரம்பியல் நிபுணருக்கான பயிற்சியை சில காலம் எடுத்துள்ளேன். ஆனால் எனக்கு வழங்கப்பட்ட லைசன்ஸ் படி நான் பொது மருத்துவர் மட்டுமே என தெரிவித்துள்ளார். அதே போல நான் ஒபேரா பாடகியும் அல்ல. ஒரே முறை ஒபேரா மேடையில் பாடியிருக்கிறேன். ஒரே ஒரு குத்து சண்டை போட்டியில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் நான் பாக்சர் இல்லை. ஒரு மருத்துவராகவும், விண்வெளி ஆரய்ச்சியாளராகவும் தொடர்ந்து இயங்குவேன்' என்றுள்ளார்.

டிஜிட்டலில் வாழ்க்கை சான்று சமர்ப்பிக்க பிப்., 28 கடைசி

ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற, ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர், வைப்பு நிதி அலுவலகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும்,
ஆதார் சேர்க்கை செயல்முறை முகாமில், பிப்., 28க்கு முன், 
தங்களது, ஆதார் எண் மற்றும் ஜீவன் பிரமாண பத்ரம் என்ற, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த சான்றிதழை, வங்கியில் சமர்ப்பிக்காத ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்புநிதி அலுவலகத்திற்கு நேரில் வந்தோ அல்லது அருகில் இருக்கும் பொது சேவை மையத்திற்கோ சென்று பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு அட்டை, பி.பி.ஓ., எண், மொபைல் எண் ஆகிய தகவல்கள் தேவைப்படும்.
வரும், 28க்குள் பதிவு செய்யாத ஓய்வூதியதாரர்களுக்கு, மார்ச் 1 முதல், ஓய்வூதியம் வங்கி கணக்கில், வரவு வைக்கப்பட மாட்டாது என, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி முதன்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

அரசு பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை ஓய்வூதியதாரர் மருத்துவ செலவுக்கு காப்பீட்டு பணம் தர வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு

காப்பீட்டு திட்ட அங்கீகார பட்டியலில் இடம்பெறாத தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஓய்வூதியரின் மருத்துவ செலவுக்கு காப்பீட்டு பணத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த ஏ.முனியாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றினேன். 31.5.1996ல் ஓய்வு பெற்றேன். எனது பென்ஷன் பணத்திலிருந்து மாதம் ₹150 புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக பிடித்தம் செய்யப்படுகிறது. நடந்து சென்றபோது திடீெரன மயங்கி விழுந்தேன். நினைவிழந்து சிவகங்கை ரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். ₹92,535க்கு மருத்துவ செலவு ஏற்பட்டது. இதை வழங்கக்கோரி விண்ணப்பித்தேன்.
நான், சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனையில், அங்கீகார பட்டியலில் இல்லையெனக்கூறி என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து மாநில அளவிலான குழுவிடம் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை கடந்த 26.10.2016ல் நிராகரித்து நிதித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். அதை ரத்து செய்து, பணத்தை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.விமலா விசாரித்து பிறப்பித்த உத்தரவு: 
காப்பீட்டு திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி ஊழியர்களுக்கு மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தரப்படுகிறது. ஆனால், ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்குவதில்லை. காப்பீட்டு திட்டங்களில் தனியார் மருத்துவமனைகள் காட்சி பொருளாக இருக்கக்கூடாது. எனவே, மனுதாரரின் மருத்துவ செலவை வழங்க மறுத்த நிதித்துறை (பென்ஷன்) செயலர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் கோரும் மருத்துவ செலவுக்கான பணத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

பள்ளிகளின் அங்கீகாரம், ஆசிரியர் களின் கோரிக்கை, ஓய்வூதியம் தொடர்பான கோப்புகளை, தேவையின்றி கிடப்பில் போட்டால், ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' - பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை.

பள்ளிகளின் அங்கீகாரம், ஆசிரியர் களின் கோரிக்கை, ஓய்வூதியம் தொடர்பான கோப்புகளை, தேவையின்றி கிடப்பில் போட்டால், ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.
தமிழக பட்ஜெட், அடுத்த மாதம் தாக்கலாக உள்ளது. 
அதனால், கல்வித் துறை உட்பட அனைத்து துறைகளிலும், முன்னேற்பாடுகள் துவங்கி உள்ளன. இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியம், பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பித்தல்,
அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்புதல், தேர்வு பணிகள் உள்ளிட்டவற்றில், தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களுக்கு, புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மாவட்ட கல்வி அதிகாரிகளான,
டி.இ.ஓ.,க்களும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களும், பல கோப்புகளை, மாதக் கணக்கில் கிடப்பில் போட்டுள்ளது தெரிய
வந்தது. அதுபற்றி, சி.இ.ஓ.,க்களிடம், பள்ளிக்கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.இதையடுத்து, ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் தொடர்பான கோப்புகளை, தேவையின்றி கிடப்பில் போட்டு, நிர்வாகத்தில் சிக்கலை ஏற்படுத்தினால்,
சம்பந்தப்பட்ட ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது. அதே போல, டி.இ.ஓ., மற்றும் சி.இ.ஓ.,க்கள் புகார்களுக்கு இடமின்றி செயல்படவும், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.

EMISதொடர்பான Tirupur CEO proceeding,முன்னரே பதிவுசெய்திருந்தாலும் சரிபார்க்க வேண்டியவை !!

சனி, 11 பிப்ரவரி, 2017

TET - TRB தேர்வு அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகிறது. தமிழகத்தில், நான்கு ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, நடத்தப்படவில்லை. நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதால், இத்தேர்வை நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 
இதற்காக, 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இந்நிலையில், சி.இ.ஓ.,க்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவது தொடர்பாக, டி.ஆர்.பி., அதிகாரிகள், நேற்று ஆலோசனை நடத்தினர். தேர்வு தொடர்பாக, அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது. 

கல்வியாளர்கள் சங்கமம் ஆசிரியர்களால் மாணவர்களுக்காக இன்று கடலூரில் தொடக்கம்

சென்னை மண்டல குழந்தை நேயப் பள்ளிகளுக்கான கூட்டமைப்பு "பன்முக அறிவுத்திறனும் கற்றல் குறைபாடும்" எனும் தலைப்பில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இன்று சென்னையில் தொடக்கம்