>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 4 பிப்ரவரி, 2017

அன்பாசிரியர் 32: கண்மணி- தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் உள்கட்டமைப்பை உருவாக்கியவர்!

''இன்றைய காலகட்டத்தில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதற்குக் காரணம், அதன் உட்கட்டமைப்பு வசதிகளும், பாடம் தவிர்த்துக் கற்பிக்கப்படும் கூடுதல்
திறன் பயிற்சிகளும்தான். இதை அரசுப்பள்ளிகளிலேயே இலவசமாக அளித்தால் மக்கள் ஏன் தனியாரை நாடப்போகிறார்கள் என்று யோசித்து அவற்றைச் செயல்படுத்தினேன்'' என்கிறார் அன்பாசிரியர் கண்மணி.
அவரின் ஆசிரியப் பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியரில்...
''படிக்கும் காலத்திலேயே சொல்லிக்கொடுப்பது பிடிக்கும் என்பதால், ஆசிரியப் பணியில் சேர்ந்தேன். தனியார் பள்ளியில் படித்த நான், அரசு வேலை கிடைக்கும்வரை தனியார் பள்ளியில் பணிபுரிந்தேன். பணி கிடைத்து அரசுப் பள்ளிக்குச் சென்றபோது, பெரு மகிழ்ச்சியைவிட என்னை அதிகம் ஆட்கொண்டது பேரதிர்ச்சி. காரணம்.. நான் பார்த்த அரசுப் பள்ளியின் உட்கட்டமைப்பு நிலை, சுகாதாரம்.
22 வருடங்களுக்கு முன்.. 1995-ல் கரூர் அருகே சாலப்பட்டி என்ற கிராமத்தின் ஆரம்பப்பள்ளியில் என் பயணத்தைத் தொடங்கினேன். தனியார் பள்ளியில் 300 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்கும்போது கொடுத்த உழைப்பை விட, இங்கு அதிகம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். மூடப்படாமல் இருந்த பள்ளி குடிநீர்த்தொட்டியை தன்னார்வலர்களின் நிதி கொண்டு மூடினோம். பள்ளிக்கு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. இதற்கிடையே பதவி உயர்வோடு வேறு ஊருக்கு மாற்றலானது. ஒரு வருடம் கழித்து ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து மாவட்டக் கல்வி அலுவலருக்குக் கடிதம் எழுதி என்னைத் திரும்பவும் சாலப்பட்டிக்கே அழைத்து வந்தனர். தலைமை ஆசிரியராகத் திரும்பியதால் பள்ளியில் செய்ய நினைத்த செயல்பாடுகளை சுதந்திரமாகச் செய்ய முடிந்தது.
பள்ளியின் வெள்ளி விழாவைக் கொண்டாடினோம். தொடர்ந்து எல்லா வருடங்களும் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ஒட்டுமொத்த கிராம மக்களும் கூடும் நிகழ்வு என்பதால் கவனத்துடன் நடத்தினோம். படிப்பு பாதிக்காதவாறு மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் ஒத்திகை பார்க்கப்பட்டது. ஒவ்வொரு நிகழ்வுக்கும் பழக்கன்றுகளைப் பரிசாக அளிப்பதை (பழக்கன்று என்பதால் மக்கள் ஆர்வத்துடன் வளர்ப்பார்கள் என்று நினைத்து) பழக்கப்படுத்தினோம்.
ஆண்டு விழா, மரக்கன்றுகள் வழங்குவதோடு மாற்றத்துக்கான முயற்சிகள் முடிந்துவிடவில்லை. இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு 3 கணினிகளைப் பெற்றோம். ரோட்டரி மற்றும் ஸ்பான்சர்கள் மூலம் பள்ளியில் கரடுமுரடாக இருந்த தரை சமப்படுத்தப்பட்டது. சிமெண்ட் தரை அமைத்தோம். அடிப்படைத் தேவைக்கு கழிப்பறை கட்டப்பட்டது. அறிவுத் தேவைக்கு கணினி அறை உருவாக்கப்பட்டது. 1 முதல் 5-ம் வகுப்பு குழந்தைகளுக்கு பெஞ்சுகள் வாங்கப்பட்டன. மாணவர்களுக்கு புதிய சீருடை, பெல்ட், ஷூக்களை அறிமுகப்படுத்தினோம். மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன.
சொந்த ஊர் அருகிலேயே வேலை பார்ப்பதால் பெற்றோர்களுக்கும் எனக்குமான பிணைப்பு அதிகமாக இருந்தது. இதனாலேயே பிள்ளைகளின் கல்வி ரீதியாக உரிமையாக அவர்களிடம் பேசமுடிந்தது. ரேஷன் அட்டை வாங்க, உதவித்தொகை பெற, அரசு அலுவலகங்கள் செல்ல என அதிகக் கல்வியறிவு இல்லாத பெற்றோர்களுக்கு உதவுவதை ஆசிரியரின் கடமை. பள்ளியில் சேரும்போது 35 பேராக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை நான் வெளியே வரும்போது 60-ஆக உயர்ந்திருந்தது.
2009-ல் ஆண்டாங்கோவில்புதூர் என்னும் ஊருக்கு மாற்றலானது. அங்கிருந்த பள்ளிக் கட்டிடம் ஒழுகியவாறு இருந்தது. அருகிலிருந்த கரூர் வைஸ்யா வங்கியை அணுகி நிலையைச் சொன்னேன். அவர்கள் அளித்த நன்கொடையைக் கொண்டு அதைச் சரிசெய்தோம்.
சத்துணவு அறை சரியாக இல்லை என்பதால் அதையும் மறுசீரமைக்க வேண்டியிருந்தது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது. சொந்த வீடு கட்டிய அனுபவம் இருந்ததால், நானே கட்டிட ஒப்பந்தத்தை எடுத்தேன். பள்ளிக்கென குறைவான இடமே இருந்ததால், மாடிக்கட்டிடத்துக்கு அனுமதி பெற்றோம். சொந்தமாகக் கட்டியதால் மிச்சமான பணத்தில் மாடியில் கூடுதலாக ஒரு கழிப்பறையும், மாடிப்படிகளுக்கு அடியில் ஒரு கிடங்கு அறையையும் கட்டினோம். பள்ளித்தரை முழுக்க டைல்ஸ் ஒட்டப்பட்டது.
முன்னதாக பள்ளியில் மாணவர்கள் திறந்தவெளியில் கழிவறைக்குச் சென்று கொண்டிருந்தனர். மாணவிகளின் நிலையை யோசித்துப் பழைய சத்துணவு அறையைப் பெண்கள் கழிப்பறையாக மாற்றினோம். அதற்கு 50 ஆயிரம் ரூபாய் செலவானது. 32 ஆயிரத்தை அரசு அளிக்க, 8 ஆயிரத்தைத் தன்னார்வலர்கள் தந்துதவினர். மீதி 10 ஆயிரத்தை நான் கொடுத்து விட்டேன். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மீண்டும் ரூ.50 ஆயிரம் வாங்கினோம். சிமெண்ட், ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளை ஸ்பான்சர் பெற்று, அப்துல் கலாம் நினைவரங்கம் அமைக்கப்பட்டது. அதில் காலை வழிபாடு, முக்கிய சந்திப்புகள், உணவருந்துவதைச் செய்துவருகிறோம்.
மதிய உணவுக்குப் பிறகு கைகழுவ அண்டாவில் நீரை மொண்டு பயன்படுத்தியது சிரமமாக இருந்ததால், வாஷ்பேசின் வசதி செய்யப்பட்டது. கழிப்பறையில் தண்ணீர்ப் பிரச்சனை ஏற்பட்டதால், ஊர்த்தலைவரிடம் பேசி பள்ளிக்கென தனி நீர் இணைப்பைப் பெற்றோம். கணினிகள் வாங்கி, கணினி அறை அமைத்தோம். புரொஜெக்டர், ஸ்பீக்கர் பெறப்பட்டு சுவரில் பொருத்தப்பட்டன. அடுத்ததாக என்ன தேவை என்று யோசித்தேன். பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தினோம். தற்போது 4-ம் வகுப்பு வரை ஆங்கிலவழிக் கல்வி உள்ளது. பள்ளியில் பெஞ்சுகள் இல்லை என்று மாணவர்கள் சொல்ல, ஸ்பான்சர்கள் மூலம் சாய்வு இருக்கைகளைப் பெற்றோம்.
உள்கட்டமைப்பு வசதிகளோடு, மாணவர்களின் திறன்களை வளர்க்கும் பயிற்சிகளை அளிக்க முடிவு செய்தோம். செஸ், கராத்தே, சிலம்பம், அபாகஸ், கணினி, தியானம் மற்றும் இந்தி வகுப்புகள் தொடங்கப்பட்டன. தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் நூலகங்களைத் தனித்தனியாக நிறுவினோம். மாணவர்களுக்கு ஐடி, பெல்ட், ஷூக்கள் வழங்கப்படுகின்றன. டைரி முறையும் பின்பற்றப்படுகிறது. மாணவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம். தேவையிருப்பின் மருத்துவர் குழுவே பள்ளிக்கு வந்துசெல்கிறது.
நாம் கேட்டால் செய்வதற்கு நிறையப் பேர் இருக்கின்றனர். ஆனால் நாம்தான் உரிய முறையில் கேட்கப்பழக வேண்டும். பள்ளியின் முன்பு குப்பைத்தொட்டி வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஊர்மக்களின் குப்பை மொத்தமும் கொட்டப்படும். முறையாக எடுத்துச் சொன்னவுடன் மக்கள் அதை நிறுத்திக்கொண்டனர். அவர்கள் செலவில் பள்ளியின் முன் வேகத்தடையும் போடப்பட்டது.
பள்ளியில் சீரிய முறையில் ஆண்டு விழாக்கள் நடத்தப்பட்டன. ஆண்டுவிழா அறிக்கைகளை புரொஜெக்டர் மூலம் காண்பிக்க ஆரம்பித்தேன். தனியார் பள்ளிகளுக்குச் செல்ல நேரும்போது, அவர்களின் செயல்பாடுகளைக் கவனிப்பேன். பள்ளியில் மைதானம் இல்லாததால் மாணவர்கள் விளையாடுவதில் சுணக்கம் ஏற்பட்டது. அருகில் இருந்த தனியார் கல்யாண மண்டப உரிமையாளரை அணுகி விவரத்தைச் சொன்னேன். அவரும் நிகழ்ச்சிகள் இல்லாத நாட்களில் கார் பார்க்கிங்கைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தார். ஒவ்வொரு வாரமும் வியாழனன்று அங்கு சென்று விளையாடுவோம்.
அரசுப் பள்ளியின் புதுமையான விளம்பரம்
ஆண்டு விழாவில் முன்னாள் மாணவர்களையும் பங்குகொள்ள வைப்போம். ஆரம்பக் கல்வியை இங்கு முடித்துச் சென்ற மாணவர்கள் 12-ம் வகுப்பை முடிக்கும் வரை அவர்களுடன் தொடர்பில் இருந்து தேவையான கல்வி ஆலோசனைகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். சிறுசேமிப்புத் திட்டம் தொடங்க, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் வாங்க என பல்வேறு தேவைகளுக்காக பெற்றோர்களுடன் அரசு அலுவலகங்களுக்குச் செல்வேன்.
ஆட்சியர், வட்டாட்சியர், அஞ்சல் அலுவலகங்கள், நீதிமன்றத்துக்கு மாணவர்களை அழைத்துச் செல்கிறோம். இடம் இல்லாததால் பள்ளியில் மாடித்தோட்டம் போட்டிருக்கிறோம். அதில் காய்கறித்தோட்டம் மற்றும் மூலிகைத் தோட்டத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் கவனித்துக் கொள்கின்றனர். விளையும் காய்களைச் சத்துணவுக்காகப் பயன்படுத்துகிறோம். ஆசிரியர்களும் இங்கேதான் சாப்பிடுகிறோம். கராத்தே மற்றும் கணினி வகுப்புக்காக எனது ஊதியத்திலிருந்து மாதாமாதம் ரூ. 2,500 ஐ பள்ளிக்கு அளித்துவிடுகிறேன்.
அத்தனையையும் பார்த்துப் பார்த்துச் செய்தாலும் தனியார் பள்ளி மோகம் மட்டும் குறைவதே இல்லை. அதைப்போக்கவே தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறேன். பணமில்லாமல் அரசுப்பள்ளியில் படிக்கிறோம் என்ற உணர்வு எந்நாளும் மாணவர்களுக்கு வந்துவிடக்கூடாது. தாயாக இருந்துமாமியாரே குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதில் பள்ளியின் மீது அதிக அக்கறையோடு செயல்பட முடிகிறது. கடமையே எனப் பணிபுரியாமல் கனிவோடு பணியாற்றினாலே அரசுப்பள்ளிகளின் தரம் தானாய் உயரும்'' என்கிற அன்பாசிரியர் கண்மணியில் வார்த்தைகளில் வழிந்தோடுகிறது புன்னகையும் நம்பிக்கையும்.

மின்வாரியத்தில் உதவிப்பொறியாளர் பணிக்கான தேர்வு நடைமுறை மேற்கொள்ள அனுமதி: உயர்நீதிமன்றம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தில் உதவிப்பொறியாளர் பணிக்கான தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள எலக்ட்ரிக்கல்,மெக்கானிக்கல், சிவில் உள்ளிட்ட துறைகளில் 750 உதவிப்பொறியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு, கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் அறிவிப்பாணை வெளியிட்டது.
இந்தப் பணியிடங்களுக்கு மின்வாரியத்தில் ஏற்கெனவே -அப்ரன்டீஸ்- ஆக பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், எழுத்து மற்றும் நேர்முக தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பயிற்சி முடித்தவர்கள் தங்களுக்கு எழுத்து தேர்வில் இருந்து விலக்களிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.ரமணி உள்பட 51 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், மற்ற தகுதிகள் சமமாக இருந்தாலும், பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அந்த அடிப்படையில் மற்ற தகுதிகளும் மனுதாரர்களுக்கு சமமாக இருக்க வேண்டும். மாறாக எந்த சிறப்புரிமையும் கோர முடியாது. எனவே, இந்த மனுக்களை தள்ளுபடி செய்வதாகக் கூறிய நீதிபதிகள், பணிக்கான தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

NEET EXAM - 2017- ம் ஆண்டு நீட் தேர்வே முதல் தேர்வாக கருதப்படும்: சிபிஎஸ்இ விளக்கம்.

மூன்று முறை நீட் எழுதுவதற்கான அளவீடு 2017 முதல் தொடங்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
மேலும்
2017-க்கு முன்பு எழுதப்பட்ட தேர்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.2017- ம் ஆண்டு நீட் தேர்வே முதல் தேர்வாக கருதப்படும் என சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. 

காவலர் பணியிடத்துக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம் .

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான தேர்வில், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 5 சதவிகித பணி இடங்களுக்கு தருமபுரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினரும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் அழைப்புவிடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் 15,664 காலிப் பணியிடங்கள் உள்ளன.இதில் 5 சதவிகித இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்ற, 45 வயதுக்குள்பட்ட, பணியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் ஓய்வுபெற்ற ராணுவத்தினர் இப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். அஞ்சல் நிலையத்தில் கிடைக்கும் விண்ணப்பங்களை வாங்கி நிரப்பி, உரிய சான்றுகளுடன் வரும் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
  விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் தருமபுரி மாவட்ட நல அலுவலகத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இத்தேர்வுக்கான முன்பயிற்சி வரும் பிப். 13ஆம் தேதி ஒட்டப்பட்டியிலுள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் வழங்கப்படும்.

TNTET- ஆசிரியர் தகுதி தேர்வு - ஒரு சிறப்பு பார்வை

ஆசிரியர்  தகுதி தேர்வு - சிறப்பு பார்வை
முதல் தேர்வு (1 முதல் 5-ம் வகுப்பிற்கானது)
இரண்டாவது தேர்வு (6 முதல் 8 ம் வகுப்பிற்கானது)
இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் (RTE ) 2009 ன் பிரிவு 23, உப பிரிவு (1) ல் குறிப்பிட்டுள்ளபடி, ஆசிரியக் கல்விக்கான தேசியக் குழுமம் (NCTE ) 2010 – ஆகஸ்டு 23 –ம் தேதி வெளியிட்ட குறிப்பாணையில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை கற்றுக் கொடுக்க ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்ச தகுதிகளாக சிலவற்றை வரையறுத்துள்ளது.
RTE சட்டம் பிரிவு 2 ன் படிஆசிரியராக நியமிக்கப்படும் ஒருவருக்கு மிக முக்கிய தகுதியாக எதிர்ப்பார்க்கப்படுவது என்னவென்றால் அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET ) தேர்ச்சியடைந்திருப்பது அவசியம்.
ஆசிரியராக நியமிக்கப்பட இருக்கும் ஒருவருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வை (TET ) குறைந்தபட்சத் தகுதியாக வைத்திருப்பதன் காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தகுதியான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் ஒரு தேசிய தரத்தையும் அடையாளத்தையும் கடைப்பிடிக்க.
ஆசிரியப் பயிற்சி நிறுவனங்களும், மாணவர்களும் தங்களுடைய செயல்திறனை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்வுபூர்வமாக உணர்த்த.
அரசானது ஆசிரியர்களின் தரத்தில் மிகவும் கவனமாக இருக்கிறது என்பதை அனைவருக்கும் உணர்த்த. அந்தந்த அரசால் நியமிக்கப்படும் வல்லுநர் குழுவால் இந்தத் தேர்வானது நடத்தப்படும்.
கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களின்படி இத்தேர்வானது நடத்தப்படும்.
தகுதி:-
கீழ்க்கண்ட நபர்கள் இந்த TET தேர்வை எழுதத் தகுதியானவர்கள்:
ஆசிரியப் பயிற்சிக்கான தேசியக் குழுமம் 2010 ஆகஸ்ட் 23 –ந் தேதி வெளியிட்ட குறிப்பாணையின்படி, ஒரு நபர் தேவையான கல்வித் தகுதியையும், தொழிற்கல்வித் தகுதியையும் பெற்றிருக்க வேண்டும்.
ஆசிரியப் பயிற்சிக்கான தேசியக் குழுமம் 2010 ஆகஸ்ட் 23 –ந் தேதி வெளியிட்ட குறிப்பாணையின்படி, ஒரு நபர் (NCTE) குழுமம் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு ஆசிரியப் பயிற்சியை முடித்திருக்க வேண்டும்.
RTE சட்டம் பிரிவு 23 உப பிரிவு 2 –ன் கீழ் ஒரு மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச அரசு, இந்த TET தேர்வை எழுதுவதற்கான தகுதிகளிலிருந்து சில விலக்குகளை அளிக்க விரும்பினால் RTE சட்டம் பிரிவு 23 உப பிரிவு 2 –ன் கீழ் அளித்துக் கொள்ளலாம். இந்த விதிவிலக்குகள் மத்திய அரசினால் உப பிரிவின் கீழ் ஒரு குறிப்பாணையாக வெளியிடப்படும்.
TET-ன் அமைப்பு மற்றும் பொருளடக்கம்:-
ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) அமைப்பு மற்றும் பொருளடக்கம் கீழ்வரும் பத்திகளில் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாக் கேள்விகளும் சரியான பதிலை தேர்ந்தெடுத்து எழுதும் வகைக் கேள்விகளே. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் தரப்பட்டிருக்கும்.
அவற்றில் ஒன்று மட்டுமே சரியான பதில். தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைப்பது இல்லை.
தேர்வு நடத்தும் குழு கட்டாயமாக பின்வரும் அமைப்பு மற்றும் பொருளடக்கத்தை பின்பற்ற வேண்டும்.
TET இரண்டு தேர்வுகளைக் கொண்டது.
முதல் தேர்வு 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது.
 இரண்டாவது தேர்வு 6 முதல் 8 ஆம் வகுப்பிற்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது.
 ஒருவர் 1 முதல் 5 ம் வகுப்பிற்கு கற்பிக்க இருந்தாலும், 6 முதல் 8 ம் வகுப்பிற்கு கற்பிக்க இருந்தாலும் கட்டாயமாக இரண்டு தேர்வுகளையும் எழுத வேண்டும்.
முதல் தேர்வு (1 முதல் 5-ம் வகுப்பிற்கானது)
கேள்விகள்: 150
அமைப்பு மற்றும் பொருளடக்கம் (அனைத்தும் கட்டாயம்)
(i) குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறை 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(ii) மொழிப்பாடம் – 1 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(iii) மொழிப்பாடம் – 2 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(iv) கணிதம் 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(v) சூழ்நிலை அறிவியல் 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
கேள்விகளின் தரமும் இயல்பும்:
முதல் தேர்வுக்கான கேள்வித்தாளை தயாரி்க்கும்போது, தேர்வு நடத்தும் குழு கீழ்க்கண்ட காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்:
6 முதல் 11 வயது வரம்புள்ள குழந்தைகளின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் குழந்தை உளவியலை மையப்படுத்தி குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறைப் பகுதி கேள்விகள் இருக்க வேண்டும். மேலும் கற்போர்களின் புரிதல் நிலை, பல்வகைப்பட்ட கற்போர், கற்போரிடம் உரையாடுதல், ஒரு நல்ல தொகுப்பாளரின் தன்மை மற்றும் குண நலன்களையும் மையப்படுத்தி இருக்க வேண்டும்.
கற்பிக்கும் மொழியில் ஒருவருக்கு இருக்கும் புலமையை மையப்படுத்தி மொழிப்பாடம் – 1 ல் கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மொழிகளில் தேர்வு எழுதுபவர் தேர்ந்தெடுத்த மொழிக்கானது.
மொழிப்பாடம் – 2 என்பது மொழிப்பாடம் – 1ஐ தவிர்த்து மற்றுமொரு மொழிக்கான தேர்வாகும். இது மொழியின் கூறுகளைப் பற்றியும், தொடர்புகொள்ளும் மற்றும் புரிந்து கொள்ளும் திறமைகளைக் கண்டறியும் தேர்வாகும்.
கணிதம் மற்றும் சூழ்நிலை அறிவியல் பகுதி கருத்துருக்களையும், பிரச்சினைகளைத் தீர்க்கும் மற்றும் புரிந்து செயல்படுத்துதல் திறமைகளையும் சோதிக்கும் பகுதியாகும். இவையனைத்துப் பாடங்களிலும் கேள்விகள் வகுப்பு 1 முதல் 5 வரையுள்ள அனைத்துப் பிரிவிலிருந்தும் கேட்கப்படும்.
முதல் தேர்வின் கேள்விகள், அந்தந்த மாநில அரசு வகுத்துள்ள பாடத்திட்டத்தில் 1 முதல் 5 வகுப்புகள் வரை இருந்தாலும், அதன் தொடர்புக் கேள்விகளும் கடினத் தன்மையும் நடுநிலை வகுப்பு வரை இருக்கலாம்.
இரண்டாவது தேர்வு (6 முதல் 8 ம் வகுப்புகளுக்கானது)
கேள்விகள்: 150
அமைப்பு மற்றும் பொருளடக்கம் அனைத்தும் கட்டாயம்
(i) குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறை(கட்டாயம்) 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(ii) மொழிப்பாடம்–1(கட்டாயம்) 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(iii) மொழிப்பாடம்–2(கட்டாயம்) 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
a. கணிதம் மற்றும் ஆசிரியர்களுக்கானது: கணிதம் மற்றும் அறிவியல் 60 கேள்விகள் 60 மதிப்பெண்கள்
b. சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கானது: சமூக அறிவியல் 60 கேள்விகள் 60 மதிப்பெண்கள்
c. மற்ற ஆசிரியர்களுக்கானது: 4 (a) அல்லது 4(b)
இரண்டாம் தேர்வுக்கான கேள்வித்தாளை தயாரிக்கும்போது தேர்வு நடத்தும் குழு கீழ்க்கானும் காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறைப் பகுதி கேள்விகள் 11 முதல் 14 வயது வரம்புள்ள குழந்தைகளின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் குழந்தை உளவியலை மையப்படுத்தி குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறைப் பகுதி இருக்க வேண்டும். மேலும் கற்போர்களின் புரிதல் நிலை, பல்வகைப்பட்ட கற்போர், கற்போரிடம் உரையாடுதல், ஒரு நல்ல தொகுப்பாளரின் தன்மை மற்றும் குண நலன்களையும் மையப்படுத்தி இருக்க வேண்டும்.
கற்பிக்கும் மொழியில் ஒருவருக்கு இருக்கும் புலமையை மையப்படுத்தி மொழிப்பாடம் – 1 ல் கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மொழிகளில் தேர்வு எழுதுபவர் தேர்ந்தெடுத்த மொழிக்கானது.
மொழிப்பாடம் – 2 என்பது மொழிப்பாடம் – 1ஐ தவிர்த்து மற்றுமொரு மொழிக்கான தேர்வாகும். இது மொழியின் கூறுகளைப் பற்றியும், தொடர்புகொள்ளும் மற்றும் புரிந்து கொள்ளும் திறமைகளைக் கண்டறியும் தேர்வாகும்.
கணிதம், சூழ்நிலை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பகுதி கருத்துருக்களையும், பிரச்சினைகளைத் தீர்க்கும் மற்றும் புரிந்து செயல்படுத்துதல் திறமைகளையும் சோதிக்கும் பகுதியாகும். இவையனைத்துப் பாடங்களிலும் கேள்விகள் வகுப்பு 6 முதல் 8 வரையுள்ள அனைத்துப் பிரிவிலிருந்தும் கேட்கப்படும்.
இரண்டாம் தேர்வின் கேள்விகள், அந்தந்த மாநில அரசு வகுத்துள்ள பாடத்திட்டத்தில் 6 முதல் 8 வகுப்புகள் வரை இருந்தாலும், அதன் தொடர்புக் கேள்விகளும் கடினத் தன்மையும் உயர்நிலை வகுப்பு வரை இருக்கலாம்.
கேள்வித்தாள் இரண்டு மொழிகளில் இருக்க வேண்டும்:
முதல் மொழி அந்தந்த அரசுகள் தீர்மானிக்க வேண்டும்
இரண்டாம் மொழி ஆங்கிலம்..

விளையாட்டுகளில் தமிழகம் முன்னேற்றம் பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமிதம்

காரைக்குடி, :''தேசிய அளவில் 12-வது இடத்தில் இருந்த தமிழகம், கடந்த ஆண்டு ஐந்தாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது,'' என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் பேசினார்.
பள்ளிகளுக்கான மாநில குடியரசு தின விழா குழு போட்டிகள் காரைக்குடியில் நேற்று துவங்கின.துவக்கி வைத்து இயக்குனர்  கண்ணப்பன் பேசியதாவது:  
மூன்று ஆண்டுக்கு முன் பள்ளிகளுக்கான விளையாட்டுக்கள் குறுவட்ட அளவில் நடந்தன. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கி மாநில அளவில் நடத்தச் செய்தார். கடந்த 2012--13-ல் பள்ளி கல்வித்துறைக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது; 2016--17ல் 24 ஆயிரத்து 121 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.மாணவர் தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்தை தாண்டி உள்ளது. தேர்ச்சி விகிதத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. பள்ளி அளவில் 14 விளையாட்டுக்கள் மட்டுமே பல ஆண்டுகளாக இருந்தன. அதில், 15 புதிய விளையாட்டுகளை புகுத்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. செஸ் போன்ற விளையாட்டுகளிலும் கிராம மாணவர்கள் சாதனை படைத்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த தேசிய போட்டியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 57 தங்கம், 58 வெள்ளி, 64 வெண்கல பதக்கங்களை வென்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் பள்ளி கல்வித்துறையில், விளையாட்டு போட்டிகளுக்கு 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2012--13-ல் தேசிய அளவில் 12-வது இடத்தில் இருந்த தமிழகம், கடந்த ஆண்டு ஐந்தா-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.
இவ்வாறு பேசினார்.அழகப்பா பல்கலை துணைவேந்தர் சுப்பையா, இணை இயக்குனர் பொன்னையா, முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சந்திரன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியன் பங்கேற்றனர்.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

TRB சார்பில் இன்று (பிப்.,3) நடக்க இருந்த சி.இ.ஓ.,க்கள் கூட்டம் திடீர் ரத்து 'காணொளிகாட்சி'யாக மாற்றம்.

சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் இன்று (பிப்.,3) நடக்க இருந்த அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) கூட்டம், திடீரென நேற்று ரத்து செய்யப்பட்டது.இதற்கு மாற்று நடவடிக்கையாக, 'வீடியோகான்பரன்சிங்' மூலம் சி.இ.ஓ.,க்களிடம் ஆலோசனை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.இதுகுறித்து கடும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், ஏப்.,29 மற்றும் 30ல் டி.இ.டி., தேர்வு நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கல்வி அமைச்சர் பாண்டியராஜனும்,"ஏப்., கடைசியில் தேர்வு நடத்தப்படும்," என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிப்.,20 முதல் இதற்கான விண்ணப்பங்களை வழங்க டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்த சென்னையில், பிப்.,3ல் மாவட்ட சி.இ.ஓ.,க்கள் கூட்டத்திற்கு டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. ஆனால், 'தற்போது பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் நடந்து வருவதால் மாவட்டத்தில் இருந்து யாரும் சென்னையில் டி.ஆர்.பி., கூட்டத்திற்கு செல்லக் கூடாது,' என சி.இ.ஓ.,க்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டள்ளது.இதனால் வேறு வழியில்லாமல் அந்தந்த மாவட்டத்தில் இருந்தே 'வீடியோகான்பரன்ஸ்' மூலம் சி.இ.ஓ.,க்கள் கூட்டம் நடத்த டி.ஆர்.பி., ஏற்பாடு செய்துள்ளது.
இப்பிரச்னை குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:கல்வித் துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. மாவட்ட அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவும் செயலர், இயக்குனர் (புரொட்டாகால்) வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால் டி.ஆர்.பி.,யின் உத்தரவுகள் நேரடியாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பிறப்பிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு காரணம் இரண்டு உயர்அதிகாரிகளுக்கு இடையே நீடிக்கும் 'ஈகோ பிரச்னை' தான் என்கின்றனர்.இதனால் 'டி.ஆர்.பி., கூட்டத்திற்கு யாரும் சென்னைக்கு வரவேண்டாம். பிளஸ் 2செய்முறை தேர்வு முடியும் வரை அந்தந்த மாவட்டங்களில் தான் சி.இ.ஓ.,க்கள் இருக்க வேண்டும்,' என தேர்வுத் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது. இத்தகவலால் சி.இ.ஓ.,க்கள் குழப்பமடைந்தனர். டி.ஆர்.பி.,க்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 'வீடியோகான்பரன்ஸ்' மூலம் சி.இ.ஓ.,க்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது, என்றனர்.

EMIS இல் புகைப்படம் பதிவேற்ற ஓர் ஆண்ட்ராய்டு ஆப் !!

மாணவர்களின் புகைப்படத்தை உங்கள் போனில் எடுத்து,Edit optionஇல் சென்று தோராயமாக சதுரமாக Crop செய்து கொள்ளுங்கள்.
🖌பின்னர் கீழ்கண்ட App இல் போய் புகைப்படங்களை (பல படங்களை ஒரே 
நேரத்தில்) resize optionஇல் custom optionஇல் சென்று 200×200 தந்தால் புகைப்படங்கள் தயார்.https://play.google.com/store/apps/details?id=com.simplemobilephotoresizer

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள புதிய வாக்காளர்கள் இ-சேவை மையங்களில் இலவசமாக அடையாள அட்டை பெறலாம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 2017ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 92 லட்சத்து 71 ஆயிரத்து 593 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 93 லட்சத்து 50 ஆயிரத்து 264 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 99 லட்சத்து 16 ஆயிரத்து 289 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 5040 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 66 ஆயிரத்து 25 பேர் கூடுதலாக உள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்த 15 லட்சத்து 26 ஆயிரத்து985 பேரின் பெயர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 15ம் தேதிக்கு மேல் வீடு வீடாக வண்ண புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக விண்ணப்பித்தபோது, 2 லட்சத்து 32 ஆயிரத்து 974 பேர்தங்களது செல்போன் எண்களை தந்துள்ளனர். இப்படி செல்போன் எண் அளித்த 2.33 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் மூலம் நேற்று முதல் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த எஸ்எம்எஸ் தகவலில் ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்ட் எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை, தமிழகத்தில் உள்ள எந்த இ-சேவை மையங்களில்காட்டினாலும், அவர்களுக்கு இன்று முதல் இலவசமாக புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படும்.
 புதிதாக விண்ணப்பம் செய்தவர்கள் செல்போன் எண்கள் இதுவரை வழங்கவில்லை என்றாலோ அல்லது எஸ்எம்எஸ் வரவில்லை என்றாலோ தலைமை தேர்தல் அலுவலகத்தில் உள்ள கால்சென்டருக்கு 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, தங்களது செல்போன் எண்களை பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்கு தேர்தல் ஆணையம் மூலம்எஸ்எம்எஸ் அனுப்பி வைத்து, அவர்களுக்கும் இலவசமாக வாக்காளர் அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ப்ளஸ்
செல்போன் எண்களை அளிக்காத வாக்காளர்கள் சுமார் 12.50 லட்சம் உடனடியாக அடையாள அட்டை வேண்டும் என்றால், இ-சேவை மையத்தில் பெயர், விலாசம் உள்ளிட்ட தகவலை கொடுத்து ரூ.25 கட்டணம் செலுத்தி வாக்காளர் அடையாள அட்டை பெறலாம்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்பு அங்கீகாரம் ரத்து: சட்ட மசோதா நிறைவேறியது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்பு அங்கீகாரம் ரத்து: சட்ட மசோதா நிறைவேறியது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்புக்கு அங்கீகாரம் வழங்கியதை நீக்கம் செய்து பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 
இதற்கான சட்டத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் புதன்கிழமை கொண்டு வந்தார். அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:- 2012-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகச் சட்டமானது திருத்தம் செய்து பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தொலைதூரக் கல்வி முறை மூலமாக பயிலும் படிப்புகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நடத்துவதற்கும், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அல்லது இந்தியாவுக்கு வெளியேயும் கல்வி பயிலும் மையங்களை ஏற்படுத்துவதற்கான அதிகாரத்தை பல்கலைக்கழகத்துக்கு அளிக்க அந்த சட்டத் திருத்தம் வகை செய்திருந்தது. 
இந்த நிலையில், தொலைதூரக் கல்வி முறை மூலமாக பயிலும் படிப்புகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்வது என 2012-இல் முடிவு செய்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டத்தை நீக்கம் செய்திருந்தது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது.

INCOME TAX - 2016-17 FORMS AND EXCEL FILE ... 

          www.kalvicikaram.blogspot.in  
                                                                                                                                                   CLICK HERE TO DOWNLOAD - IT TAX EXCEL FILE | PART 1 |   
   
                             P.MANIMARAN (Thanks sir)

வியாழன், 2 பிப்ரவரி, 2017

எந்த பிரேக்ஃபாஸ்ட் பெஸ்ட்? எனர்ஜி தரும் 8 காலை உணவுகள்!


அன்றாடப் பணிகள்' என்கிற அசுரன் நம் தினத்தைக் காவு வாங்கக் காத்திருக்கும் காலைப் பொழுதில் பலருக்கும் மார்னிங் டிபன் என்பது எதையோ அவசரமாகக் கொறிப்பது மட்டுமே. பிரேக்ஃபாஸ்ட்டைத் தவிர்க்காதீர்கள்!', ஒன்பது மணிக்குள் சாப்பிட்டுவிடுங்கள்!', காலை உணவுதான் அன்றைக்கு முழுமைக்குமான சக்தியை உடலுக்குக் கொடுக்கும்!'... திரும்பத் திரும்ப மருத்துவர்கள் வலியுறுத்தும் விஷயங்கள். அப்படிச் சாப்பிடுபவை சத்தானவையாக இருப்பது சிறந்தது. காலையில் சாப்பிட ஏற்ற சில சத்தான உணவுகளைப் பட்டியலிடுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஜெயந்தி...

இட்லி, சாம்பார்:

இட்லி, சாம்பாரில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் இருப்பதால், இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.


பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த உணவு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். சர்க்கரை நோயாளிகள்கூட காலையில் சாப்பிடலாம்.

தோசை, தேங்காய் சட்னி:

தோசை-தேங்காய் சட்னி காம்பினேஷன் அன்றைய நாளையே நமக்கு உற்சாகமாக வைத்திருக்க உதவும். புரோட்டீன், தாதுக்கள், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, டி ஆகிய சத்துக்கள் தேங்காயில் உள்ளன. கால்சியம் சத்து குறைவாக உள்ள பெண்கள் தேங்காய் சாப்பிட்டால், அந்தக் குறை நீங்கும். எனவே, தேங்காய் சட்னி நமக்கு ஆரோக்கியமான உணவே. குழந்தைகளுக்கு இதைக் கொடுப்பதால் எலும்பு பலம் பெறும்; வளர்ச்சி பெறும்.

பொங்கல், சாம்பார், சட்னி:

பொதுவாக பொங்கல் சாப்பிட்டால் மந்தமாக இருக்கும் என்ற உணர்வு நாம் அனைவர் மத்தியிலும் இருக்கிறது. உண்மையில் பொங்கல் மிக மிக ஆரோக்கியமான உணவு. நாம் சேர்க்கின்ற வனஸ்பதி போன்றவற்றினால்தான் மந்தத்தன்மை, தூக்கம் வருவது போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றன. புரோட்டீன் சத்துக்கள் பொங்கலில் அதிக அளவில் இருப்பதால் இது குழந்தைகளுக்கு ஏற்றது.

பூரி, உருளைக்கிழங்கு:

பூரி செய்ய மைதா மாவைத் தவிர்ப்பது நல்லது. பூரியை கோதுமை மாவிலேயே செய்வது நல்லது. ஏனெனில், கோதுமையில் உள்ள கார்போஹைட்ரேட்டும் புரோட்டீனும் நம் உடலுக்குச் சக்தியை கொடுப்பவை. உருளைக்கிழங்கில் உள்ள புரோட்டீன் சத்து, குழந்தைகளை ஆரோக்கியமாகவும் புத்துணர்வோடும் வைத்திருக்கும்.

சப்பாத்தி, சப்ஜி:

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சப்பாத்தி சிறந்த உணவு. டயட்டில் இருப்பவர்களும் சப்பாத்தியை தேர்வு செய்வது சிறந்தது. சப்ஜியில் சேர்க்கும் பருப்பில் உள்ள புரோட்டீன் சத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. எனவே எல்லோருமே சப்பாத்தி, சப்ஜி சாப்பிடலாம்.

காய்கறிகள் சேர்த்த உப்புமா, தேங்காய் சட்னி:

சர்க்கரை நோயாளிகளுக்கு, காய்கறிகள் சேர்த்த உப்புமா ஏற்ற உணவு. புரோட்டீன், தாது, கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, டி ஆகிய சத்துக்கள் தேங்காயில் உள்ளன. அனைவருக்கும் ஏற்றது.

புட்டு, கொண்டக்கடலை:

கொண்டக்கடலையில் உள்ள புரோட்டீனும் புட்டில் உள்ள கார்போஹைட்ரேட்டும் அனைவருக்கும் ஏற்றவை. காலையில் சாப்பிடவேண்டிய அருமையான உணவு இது. சத்தான இந்த டிபன் நம்மைச் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.

சத்துமாவு கஞ்சி மற்றும் பழங்கள்:

குழந்தைகள் எந்த உணவையும் சாப்பிட மறுக்கிறார்கள் என்றால், சத்துமாவுக் கஞ்சியைக் கொடுக்கலாம். இதுவே அவர்களுக்குத் தேவையான எனர்ஜியை வழங்கப் போதுமானது. .ஏனெனில் மற்ற உணவுகளில் உள்ள சத்துகள் அனைத்தும் சத்துமாவுக் கஞ்சியில் உள்ளன. வாழைப்பழத்தை, வாழ்வதற்கான பழம்' என்று கூறுவார்கள். தினசரி உணவோடு வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டால், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

இந்த பிரேக்ஃபாஸ்ட் பட்டியலில் சிறந்த காலை உணவாக இருப்பது...

1. இட்லி, சாம்பார்

2. புட்டு, கொண்டைக்கடலை

3. தோசை, தேங்காய் சட்னி

4. பொங்கல், சாம்பார் மற்றும் சட்னி

5. சப்பாத்தியுடன் சப்ஜி

6. பூரி, உருளைகிழங்கு

7. உப்புமா

8. சத்துமாவு கஞ்சி மற்றும் பழங்கள்.

பெரும்பாலும் அவித்து உண்பதே சிறந்த உணவு. இதை மனதில் கொள்வோம். காலை உணவை தவிர்க்காமல், ஆற அமர பொறுமையாக, நொறுங்கச் சாப்பிடுவோம். இந்த இயந்திர வாழ்வில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு நோய் நொடி இல்லாமல் வாழ்வோம்.

28 தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 3,781 பணியிடங்களை நிரப்ப, இந்தாண்டு, 28 தேர்வுகள் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கான, தோராய தேர்வு அட்டவணை பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டில், 28 தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதில், எட்டு தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவை; 20 தேர்வுகள் புதியவை. இதன் மூலம், 28 வகை பணிகளில், 3,781 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

IT - 12C FORM

INCOME TAX INSTRUCTION & TAMIL FORM - 2017

2016-2017 நிதி ஆண்டு- வருமான வரியின் சில தெளிவான விளக்கங்கள் மற்றும் தமிழ் வருமான வரி படிவமும்.....



Emisல் மாணவர்களின் விவரங்கள் சரிப்பார்க்க கீழ்காணும் முறையைப் பயன்படுத்தவும்.



Step-1. 
ஒரு பள்ளியை Open செய்த பிறகு அதில் வகுப்பு வாரியாக மாணவர்களின் Total இருக்கும்.

Step-2.
அதில் ஒரு வகுப்பை Click செய்யவும்.
Open ஆன வகுப்பிற்கு மேலே Download Child Profile என்று இருக்கும்.

 Step-3.
அதை Click செய்யவும்.
Save செய்யவா என்று கேட்கும் பிறகு OK கொடுக்கவும்.

Step-4.
Save ஆன File யை Open செய்யவும் Excel Format இருக்கும். அதில் ஒரு வகுப்பில் நாம் செய்த அனைத்து மாணவர்களின் தகவல்களும் இருக்கும். அதை சரி பார்த்து மீண்டும் Update செய்யலாம். இதேபோல் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு வகுப்பையும் Print எடுத்து சரிபார்த்து Update செய்தால் நம்மால் சரியான புள்ளி விவரங்களை கொடுக்க முடியும்.

பட்ஜெட் முக்கிய அம்சங்கள்...

புதுடில்லி: வரும், 2017 - 18 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், சாமானிய மக்களுக்கு சந்தோஷம் அளிக்கும் வகையில், 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கான வரி, பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.



கிராம கட்டமைப்பு, விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில், விவசாயக் கடனுக்கான ஒதுக்கீடு உயர்வு, மூத்த குடிமக்களின் மருத்துவத்துக்கு, 'ஸ்மார்ட் கார்டு' என, ஏழை, எளிய, சாதாரண மக்களுக்கான பட்ஜெட்டாக, பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது.

ஊழலை ஒழிக்கும் வகையில், அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைக்கு கடிவாளத்தை போட்டுள்ள இந்த பட்ஜெட்டில், குற்றவாளிகள் வெளிநாடு தப்பினால், சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிரடி அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது.

முதல் ஒருங்கிணைந்த பட்ஜெட்

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின் வெளியாகும் முதல் பட்ஜெட் என்பதால், மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பட்ஜெட், வழக்கமான, பிப்., 28க்கு பதிலாக முன்னதாகவே தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என, பல்வேறு வகைகளில், இந்த பட்ஜெட் வரலாற்றில் இடம் பெறுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்த பின், அதன், நான்காவது பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார்.
ரயில்வேக்கு என, தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. மற்ற துறைகளைப் போல ரயில்வேக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால், வழக்கமான புதிய ரயில்கள் போன்ற அறிவிப்புகள் இடம்பெறவில்லை.

பட்ஜெட் முக்கிய அம்சங்கள்


வரும், 2017 - 18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
* வருமான வரி வரம்பில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே நேரத்தில், 2.5 லட்சம் ரூபாய் முதல், 5 லட்சம் ரூபாய் வரையிலான வரம்புக்கான வரி விகிதம், 10 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது
* 50 லட்சம் ரூபாய் முதல், ஒரு கோடி ரூபாய் வரையிலான வரம்புக்கு, 10 சதவீதம் வருமான வரி விதிக்கப்படும்

* ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்டவருமானத்திற்கு, 15 சதவீதம் வரி செலுத்த வேண்டும்

* ஐந்து லட்சம் ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ளவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் விண்ணப்பம், ஒரு பக்கமாக குறைக்கப்படும்

* அனைத்து பரிவர்த்தனைக்கும், மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பயன்படுத்த தடை

* மூத்த குடிமக்களுக்கு, ஆதார் அடிப்படையிலான சுகாதார அட்டை வழங்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கு, ஆண்டுக்கு, 8 சதவீதம் உறுதியான வருவாய் கிடைக்கும்

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு, 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது

* வரும் நிதியாண்டில், 10 லட்சம் கோடி ரூபாய் வேளாண் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது

* பயிர் காப்பீட்டு திட்டம், மேலும், 40 சதவீத நிலங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இதற்கான ஒதுக்கீடு, 1.41 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது

* பாசன திட்ட நிதி தொகுப்பு, இரட்டிப்பாக்கப்பட்டு, 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது
* வாங்கக் கூடிய விலையிலான வீடுகளுக்கு, அடிப்படை கட்டமைப்பு அந்தஸ்து அளிக்கப்படுகிறது

* வீடில்லாத, ஒரு கோடி பேருக்கு, 2019க்குள் சொந்த வீடு
* வரும், 2018, மே மாதத்திற்குள், 100 சதவீத கிராமங்களுக்கு மின்சார வசதி

* அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீடு, 3.96 லட்சம் கோடிரூபாயாக இருக்கும்

* அரசியல் கட்சிகள், 2,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை பெறுவதற்கு தடை

* அரசியல் கட்சிகள், செக், மின்னணு முறைகள், ரிசர்வ் வங்கி வெளியிடும் தேர்தல் பாண்டுகள் மூலம், நன்கொடைகளை பெறலாம்

* பொருளாதார குற்றம் செய்துவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி செல்பவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையில், சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்

* மோசடி, 'டிபாசிட்' திட்டங்கள் பிரச்னையை தடுக்கும் வகையில், மசோதா கொண்டு வரப்படும்

* பணமில்லாமல் செக் திரும்பும் வழக்குகளை எதிர்கொள்ளும் வகையில், செலாவணி சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்

* சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களுக்கான உற்பத்தி வரி உயர்த்தப்படுகிறது. 


'எக்சலன்ட்' பட்ஜெட்:பிரதமர் மோடி பாராட்டு


'நிதியமைச்சர் அருண் ஜெட்லி மிகச்சிறந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்,'' என, பிரதமர், நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.மத்திய பட்ஜெட் குறித்து, பிரதமர் மோடி கூறியதாவது:கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் வகையில், பழைய, 500 - 1,000 ரூபாய் செல்லாது என அறிவித்தோம்; அதற்கு ஊக்கம் தரும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டு வரும் பல மாற்றங்களை பட்ஜெட் உணர்த்துகிறது. விவசாயிகள், கிராம மக்கள், பெண்கள் பலன் பெறும் வகையில் பட்ஜெட் உள்ளது; விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.
முதன்முறையாக, ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது; போக்குவரத்து துறையின் வளர்ச்சி பட்ஜெட்டில் எதிரொலிக்கிறது. ரயில்வே பாதுகாப்பு நிதி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது, சிறந்த நடவடிக்கை. சர்வதேச தரத்திற்கு நிகராக, தங்கள் தொழில்களை உயர்த்த, வர்த்தகர்களுக்கு வாய்ப்பு ஏற்படும். இந்த பட்ஜெட் மூலம், சிறு வர்த்தகர்கள், உடனடியாக பலன் பெறுவர்; வீடு கட்டுமான துறை வளர்ச்சியடையும். இவ்வாறு அவர் கூறினார். 

தமிழகத்தில் 'நீட்' தேர்வு கிடையாது-சட்டசபையில் மசோதா நிறைவேறியது

சென்னை,:''நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும், சட்ட முன்வடிவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் பெறப்படும்.           பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை, மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:தி.மு.க., - பொன்முடி: மருத்துவக் கல்லுாரிகளில், தற்போதுள்ள நடைமுறைப்படி, மாணவர் சேர்க்கை தொடர்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ள, சட்ட முன்வடிவு, அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்கது; இச்சட்டம் நிரந்தரமாக்கப்பட வேண்டும்.
புதிய கல்விக் கொள்கை மூலம், மத்திய அரசு, மாநில உரிமையை பறிக்க பார்க்கிறது. இதை, தடுத்து நிறுத்த வேண்டும். இந்த சட்டத்திற்கு, ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும். பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை, மாநிலப்பட்டியலுக்கு மாற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்., - விஜயதாரணி: இந்த சட்ட முன்வடிவை, காங்கிரஸ் வரவேற்கிறது. அதேநேரம், அகில இந்திய நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், நமது கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும்
அமைச்சர் விஜயபாஸ்கர்: சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 'நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம்; தேவைப்பட்டால், தனி சட்டம் கொண்டுவருவோம்' என, மறைந்த முதல்வர் அறிவித்தார். அதன்படி, தற்போது சட்ட முன்வடிவு கொண்டு வந்துள்ளோம்.
முதல்வர் பன்னீர்செல்வம்: நீட் தேர்வை ஆரம்பத்திலேயே, ஜெயலலிதா எதிர்த்தார். அவர் வழியில் செயல்படும் தமிழக அரசு,நீட் தேர்வை அனுமதிக்காது. தற்போது கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு, ஜனாதிபதி ஒப்புதல் பெறப்படும்.
மேலும், பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை, மாநிலப் பட்டியலுக்கு மாற்ற, சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
பின், மருத்துவக் கல்லுாரிகளில், பொது நுழைவுத் தேர்வு இல்லாமல், தற்போதுள்ள, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்களை சேர்ப்பதற்கான, புதிய சட்டமுன்வடிவு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION - ANNUAL RECRUITMENT PLANNER - 2017


SPF -G.O. No. 504 Fin 2.11.2000


பட்ஜெட் -2017-18 முழு விவரம் !!

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் விவரம்:
-பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் அருண் ஜேட்லி
-சுமார் 2 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றினார் ஜேட்லி
-நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது
-ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு ஊதியம் பெருவோருக்கான வருமான வரி 10%ல் இருந்து 5% ஆக குறைப்பு
-ரூ. 3 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வருமான வரி விலக்கு
-வருமான வரி சலுகையால் அரசுக்கு ரூ.15500 கோடி வருவாய் இழப்பு
-வருவாய் இழப்பை ஈடு செய்ய அதிக ஊதியம் பெறுவோருக்கு அதிக வரி
-ஆண்டு வருவாய் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலுள்ளவர்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி-ஜேட்லி
-தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை
-ரூ.250000 முதல் ரூ.5 லட்சம் வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவீத வரி
-தற்போது இந்த பிரிவினருக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டு வருகிறது
-தனி நபர் வருமான வரி கணக்கு தாக்கல் படிவம் இனி ஒரே பக்கமாக இருக்கும்
-அரசியல் கட்சிகளின் வெளிப்படைத்தன்மையை பாதுகாக்க ஜேட்லி அதிரடி அறிவிப்பு
-அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக ஒரு மூலத்திடமிருந்து ரூ.2000 மட்டுமே நன்கொடை பெற முடியும்
-அரசியல் கட்சிகள் நன்கொடையை டிஜிட்டல் முறை அல்லது காசோலையில்தான் பெற வேண்டும்
-ரிசர்வ் வங்கி சட்டத்தில் மாற்றம் செய்யப்படும்
-கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை
-அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால்தான் அரசியல் கட்சிகளுக்கு வருமான வரியில் விலக்கு
-ரொக்கமாக ரூ.

3 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் பணம் எடுக்க தடை
-ஊழலுக்கு எதிரான சிறப்பு விசாரணை குழு இப்பரிந்துரையை செய்தது
-இந்த பரிந்துரையை அரசு ஏற்கிறது; இதற்காக வருமான வரி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்
-2015-16ல் மொத்த வரி வருவாய் 17 சதவீதம் அதிகரித்துள்ளது
-ரூ. 50 கோடி வரை ஆண்டு வருவாய் உள்ள நிறுவனங்களுகக்கான வருமான வரி 30%ல் இருந்து 25% ஆக குறைக்கப்படும்
-ஆண்டுக்கு 50 கோடிக்கு குறைவாக வர்த்தகம் நடைபெறும் சிறு நிறுவனங்களுக்கு 5 சதவீத வரி குறைப்பு
-6.94 லட்சம் நிறுவனங்கள் வருமான வரி செலுத்துகின்றன
-இதில் 96 சதவீத நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள்தான்
-சிறு நிறுவனங்கள் வளர்ச்சிக்கு வரி குறைப்பு உதவும்
-கடந்த ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் 3.7 கோடி பேர் மட்டுமே. இதில் ஆண்டு வருமானத்தை ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக காட்டியவர்கள் 24 லட்சம் பேர் தான்
-கடந்த ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் 3.7 கோடி பேர் மட்டுமே. இதில் ஆண்டு வருமானத்தை ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக காட்டியவர்கள் 24 லட்சம் பேர் தான்
-பண மதிப்பிழப்பால் அட்வான்ஸ் வருமான வரி கட்டுவது 34.8% அதிகரித்துள்ளது
-இந்தியாவில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது
-3.7 கோடி தனி நபர்களில் வருமான வரி தாக்கல் செய்தோர் 97 லட்சம் பேர் குறைந்த வருவாய் பிரிவினர்
-52 லட்சம் பேர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டுகிறார்கள்
-1.72 லட்சம் பேர் மட்டுமே 50 லட்சத்துக்கு மேல் வருவாய் பெறுவதாக அறிவித்துள்ளனர்
-பணமதிப்பிழப்புக்கு பிறகு இந்த வரி ஏய்ப்பு அம்பலமானது
-1.09 கோடி வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள் சராசரி மதிப்பு 5.3 லட்சம்
-8 லட்சத்துக்கு மேல் 1.48 லட்சம் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது
-நாட்டில் பெரும்பாலானவர்கள் வருமான வரியே கட்டுவதில்லை. இதனால் நியமாயமாக வரி கட்டுவோர் மீது சுமை கூடுகிறது
-2017-18ல் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும்
-கடந்த ஆண்டில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிததி ரூ. 4.11 லட்சம் கோடி
-பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 2.74 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்
-2017-18ம் ஆண்டு பட்ஜெட்டில் மொத்த செலவீனங்கள் ரூ. 21.47 லட்சம் கோடியாக இருக்கும்
-மொத்த உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும்-ஜேட்லி
-தலைமை தபால் நிலையங்கள் பாஸ்புக் அலுவலக பணிகளையும் மேற்கொள்ளும்
-பாதுகாப்பு படையினர் போக்குவரத்து டிக்கெட் எடுக்க தனி வசதி ஏற்படுத்தப்படும்
-மத்திய எண்ணெய் நிறுவனங்களை ஒருங்கிணைத்து மாபெரும் பொதுத்துறை நிறுவனத்தை உருவாக்க திட்டம்
-பல்கலைக்கழக மானிய குழுவில் மாற்றம் கொண்டுவரப்படும்
-வெளிநாடுகளுக்கு தப்பியோடி தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் சொத்துக்கள் முடக்கப்படும்
-குற்றவாளிகள் சொத்துக்களை முடக்க சட்டத்திருத்தம், தேவைப்பட்டால் புது சட்டம்-ஜேட்லி
-ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.2லட்சத்து 74 ஆயிரத்து 114 கோடி-ஜேட்லி
-இதில் ராணுவ ஓய்வூதிய செலவீனங்கள் சேர்க்கப்படவில்லை-ஜேட்லி
-வறட்சியை சமாளிக்க புதிதாக 5 லட்சம் குளங்கள் வெட்டப்படும்
-செக் மோசடிகளை தவிர்க்க மாற்றுமுறை ஆவணச் சட்டத்தில் திருத்தம்
-உர விற்பனை நிலையங்கள், கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை
-ஆதார் அடிப்படையிலான பண பரிவர்த்தனை திட்டம் அறிமுகம்
-மொபைல் வாலட், டெபிட் கார்டுகள் இல்லாதவர்களுக்காக இத்திட்டம்
-இந்த நிதியாண்டில் 2500 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இலக்கு
-பிரதமர் மோடியின் குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் புதிதாக 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும்
-தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்துக்கு ரூ. 64,000 கோடி ஒதுக்கீடு
-புதிய அன்னிய முதலீட்டுக் கொள்கை கொண்டு வரப்படும்
-போக்குவரத்து துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2,41,387 கோடி
-நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 3,96,135 கோடி செலவிடப்படும்
-உள்கட்டமைப்பு துறைக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.3,96,135 கோடி
-100 திறன் மேம்பாட்டு மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும் - அருண் ஜேட்லி
-மூத்த குடிமக்களுக்கு 8% வருவாயுடன் எல்.ஐ.சி திட்டம் - அருண் ஜேட்லி
-மருத்துவ மேற்படிப்புகளில் 5000 சீட்கள் அதிகரிக்கப்படும்
-அன்னிய முதலீடு வளர்ச்சி வாரியம் (Foreign Investment Promotion Board) மூடப்படும்
-கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராண்ட் பேண்ட் இண்டர்நெட் வசதிகள் செய்து தரப்படும்
-அதிவிரைவு பிராட்பேண்ட் இணைப்புக்காக 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்
-150000 கிராமங்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் பிராட்பேண்ட் வசதி கிடைக்கும்
-எலக்ட்ரானிக் பொருள் உற்பத்தி மையமாக இந்தியா மாற்றப்படும்
-எலக்ட்ரானிக் துறைக்கு ரூ.745 கோடி ஒதுக்கீடு
-நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 3,96,135 கோடி செலவிடப்படும்
-அன்னிய முதலீடுகள் 36% அதிகரித்துள்ளது. 361 பில்லியன் டாலர்கள் கையிருப்பு
-2019க்குள் அனைத்து ரயில்கள் கழிவறைகளும் பயோ டாய்லெட்டாக மாற்றப்படும்
-மூத்த குடிமக்கள் ஆரோக்கிய மேம்பாட்டுக்காக ஆதார் அட்டை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு
-முதல்கட்டமாக இந்த திட்டம் 15 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்படும்
-தாழ்த்தப்பட்டோருக்கான நிதி ஒதுக்கீடு ரூ.38 838 கோடியிலிருந்து ரூ.52393 கோடியாக உயர்வு-ஜேட்லி
-மருத்துவ உபகரணங்கள் துறையில் முதலீடு ஈர்க்கப்படும்
-மருத்துவ உபகரண விலை குறைக்க நடவடிக்கை
-தொழிலாளர் நலனை காக்க அரசு நடவடிக்கை எடுக்கும்
-குஜராத் ஜார்கண்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை மையங்கள்
-கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி
-பயிர் காப்பீட்டு 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக விரிவு படுத்தப்படும் : அருண் ஜேட்லி
-பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி: ஜேட்லி
-உயர் கல்வி நுழைவு தேர்வு நடத்துவதற்காக தேசிய டெஸ்டிங் ஏஜென்சி தொடங்கப்படும்-ஜேட்லி
-உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்த தனி அமைப்பு
-நுழைவுத் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது
-நாட்டில் 2019ஆம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும்: ஜேட்லி
-2018 மே 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களிலும் மின்வசதி
-கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.187223 கோடி ஒதுக்கீடு
-கடந்த பட்ஜெட்டை ஒப்பிட்டால், இது 24 சதவீத உயர்வு-ஜேட்லி
-1 கோடி குடும்பங்களை வறுமையிலிருந்து நீக்க இலக்கு
-2018 மே 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்கப்படும்
-கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ சாலை அமைக்க இலக்கு
-ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு சாதனை அளவாக ரூ.48000 கோடி ஒதுக்கீடு
-விவசாயிகளுக்கு 60 நாள் வட்டி தள்ளுபடி
-பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகள் அதிக அளவு கடன் வழங்க முடியும்
-பயிர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.13000 கோடி ஒதுக்கீடு-ஜேட்லி
-கடந்த ஆண்டு பயிர் காப்பீடுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.5500 கோடியாக இருந்தது-ஜேட்லி
-விவசாய உற்பத்தி வளர்ச்சி இவ்வாண்டில் 4.1 சதவீதமாக இருக்கும்-ஜேட்லி
-2017-18ல் விவசாயிகளுக்கு இதுவரை இல்லாத சாதனையாக 10 லட்சம் கோடி கடன் வழங்க முடிவு-ஜேட்லி
-நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ல் 7.7 சதவீதம் அதிகரிக்கும்
-அமெரிக்காவின் நிதிக்கொள்கையால் வளரும் நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு: அருண் ஜெட்லி
-விவசாயிகள் வருமானம் இரட்டை மடங்காக்கப்படும்-ஜேட்லி
-கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
-இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்
-ஏழைகளுக்கு வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும்
-டிஜிட்டல் பொருளாதாரம் வளர்க்கப்படும்-ஜேட்லி
-வரி வசூல் நேர்மையானதாக இருக்கும்-ஜேட்லி
-வங்கிகளின் கடன் வட்டி விகிதத்தை குறைக்கப்படும்
-உலக பொருளாதாரத்தின் இன்ஜினாக உள்ளது இந்தியா-ஜேட்லி
-ஊரக வளர்ச்சிக்கு அதிக நிதி செலவிடப்படும்
-வறுமை நீக்கம், அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்
-வேலை வாய்ப்பை உருவாக்குவதே மத்திய அரசின் முக்கிய நோக்கம்- ஜேட்லி
-பண மதிப்பிழப்பு நடவடிக்கை பலன் படிப்படியாக கிடைக்கும்-ஜேட்லி
-பண வீக்கம் 3.4 என்ற அளவில் குறைந்துள்ளது-ஜேட்லி
-பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது
-வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி இந்த ஆண்டு 1.6%-1.9% ஆக இருக்கும்
-வளரும் நாடுகளின் வளர்ச்சி 4.1%-4.5% ஆக இருக்கும்
-உலக அளவில் நாடுகளின் சராசரி வளர்ச்சி 3.4% ஆக இருக்கும்
-ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு நன்றி-ஜேட்லி
-பண மதிப்பிழப்பு என்பது தைரியமான முடிவு-ஜேட்லி
-உலக வர்த்தக வர்த்தகத்தின் என்ஜினாக இந்தியா விளங்குகிறது- ஜேட்லி
-அடுத்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதாக வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்
-கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரம்
-வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், இளைஞர்களுக்கு அதிக பலன்கள் போய் சேர செய்வதும் மத்திய அரசின் திட்டம்
-எதிர்க் கட்சிகளின் அமளிக்கு இடையே பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டுள்ளார் அருண் ஜேட்லி
-ஏழைகள், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் தொடரும்-ஜேட்லி.

பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் - குறையும் பொருட்கள்

நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்த மத்திய பட்ஜெட்டில் புதிய வரிவிதிப்பினால் மொபைல் போன்கள் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொபைல் போன் தயாரிப்பில் முக்கிய பணியாற்றும் பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் மீது 2% கூடுதல் சுங்கத்தீர்வை விதிக்கப்படவுள்ளதால் மொபைல் போன்கள் விலை அதிகரிக்கவுள்ளது.
இந்த புதிய வரிவிதிப்பினால் பிரிண்டட் சர்க்யூட் போர்டுகளின் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பயன் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இறக்குமதி செய்யப்பட்ட போர்டுகளைப் பயன்படுத்தும் மொபைல் போன்களின் விலை 1% வரை இதனால் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 
தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் இறக்குமதிசெய்யப்பட்ட சர்கியூட் போர்டுகள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 
இது செல்போன்கள் தயாரிப்பு செலவில் 25-30% தாக்கம் செலுத்துவதாகும். 
மத்திய பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரி காரணமாக புகையிலை உள்ளிட்ட சில பொருட்கள் விலை உயர உள்ளன. அதேநேரம் சூரிய மின்சக்தி தகடுகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான விலை குறைய உள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:
விலை உயரும் பொருட்கள்:
சிகரெட், பான் மசாலா, பீடி, சுருட்டு, புகையிலை.
எல்.இ.டி. விளக்குகள்
வறுத்த முந்திரி பருப்பு
அலுமினிய தாதுக்கள்
பாலிமர் எம்.எஸ். டேப்புகள்
வெள்ளி நாணயங்கள், பதக்கங்கள்
செல்போன் சர்க்கியூட் போர்டுகள்
விலை குறையும் பொருட்கள்
ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகள்
வீட்டு உபயோக ரிவர்ஸ்டு ஆஸ்மாசிஸ் தகடுகள்.
திரவ எரிவாயு
சூரிய மின் சக்தி தகடுகள்
காற்றாலை ஜெனரேட்டர்
பி.ஓ.எஸ். இயந்திரங்கள், விரல் ரேகை பதிவு இயந்திரங்கள்
பாதுகாப்பு துறை சேவைகளுக்கான குழு காப்பீடு

சிறுபான்மையினர் பள்ளிகளில் TET தேர்வு தேர்ச்சி பெறாமல் நியமன ஒப்புதல் கோரி தொடரப்பட்ட வழக்குகள் - அறிவுரை

பள்ளிக்கல்வி செயல்முறைகள் நாள்:20/01/17- TET - சிறுபான்மையினர் பள்ளிகளில் TET தேர்வு தேர்ச்சி பெறாமல் நியமன ஒப்புதல் கோரி தொடரப்பட்ட வழக்குகள் - ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்பு 

முதல்வரின் நிவாரண நிதிக்கும் வரி விலக்கு: பட்ஜெட்டில் அறிவிப்பு

பிரதமரின் நிவாரண நிதிக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வரி விலக்கானது முதல்வர் மற்றும் துணைநில ஆளுநரின் நிவாரண நிதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது: பிரதமரின் நிவாரண நிதிக்கு தற்போது வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மாநில முதல்வர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் நிவாரண நிதிகளுக்கு அத்தகைய வரி விலக்கு அளிக்கப்படுவதில்லை.
பிரதமரின் நிவாரண நிதியின் பயன்பாடும், முதல்வர் மற்றும் துணைநிலை ஆளுநரின் நிவாரண நிதியின் பயன்பாடும் ஒன்றேயாகும். மக்களுக்காக வழங்கப்படும் இத்தகைய நிதிகளில் வரி பாரபட்சம் காட்டப்படுவது சரியல்ல.
எனவே, பிரதமரின் நிவாரண நிதியைப் போலவே முதல்வர் மற்றும் துணைநிலை ஆளுநரின் நிவாரண நிதிகளுக்கும் வரி விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, வருமான வரிச் சட்டத்தில் விரைவில் திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசு திட்டமிட்டுள்ளது என்றார் அருண் ஜேட்லி.

TNPSC-ன் 2017 கால அட்டவணை - விரிவான செய்திகள்.

டி.என்.பி.எஸ்.சி. தனது வருடாந்திர (2017) கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த அட்டவணையின் கீழ் டி.என்.பி.எஸ்.சி. நடப்பாண்டில் நடத்தும் தேர்வுகள் தேதி, காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தப்பட்டியலில்  3781 காலிப்பணியிடங்களை உள்ளடக்கிய 28 பணிகள் / பதவிகளுக்கான அறிவிக்கை மற்றும் தேர்வு நாள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பட்டியலிடப்பட்ட பணிகள் / பதவிகளில் ஏதேனும் ஒரு சில பதவிக்க்களுக்குத் தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக அட்டவணைக்குரிய காலத்திற்குள் நடத்தப்படமுடியாமல் போகும் தருணங்களில், அடுத்து வரும் ஆண்டுக்கு நீண்டு செல்லக் கூடும்.
தேவை ஏற்படும் தருணங்களில் பட்டியலில் குறிப்பிடப்படாத பணிகள் / பதவிகளுக்கும் அறிவிக்கை வெளியிட வாய்ப்புள்ளது. இந்தக் காலிப்பணியிட எண்ணிக்கை தேர்வுக்கு முன்னரோ அல்லது தேர்விற்குப் பிறகும் கூட மாறுதலுக்குட்பட்டது.
இக்கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டு நடத்தப்படவுள்ள அனைத்துத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிட விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படும். தேவை ஏற்படின், இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் சார்ந்த எந்த ஒரு மாற்று அறிவிப்பையும் வெளியிடுவதற்கான உரிமையைத் தேர்வாணையம் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை காணவும்" எனக் கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்பு அங்கீகாரம் ரத்து: சட்ட மசோதா நிறைவேறியது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்புக்கு அங்கீகாரம் வழங்கியதை நீக்கம் செய்து பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கான சட்டத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் புதன்கிழமை கொண்டு வந்தார். அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:-2012-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகச் சட்டமானது திருத்தம் செய்து பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தொலைதூரக் கல்வி முறை மூலமாக பயிலும் படிப்புகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நடத்துவதற்கும், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அல்லது இந்தியாவுக்கு வெளியேயும் கல்வி பயிலும் மையங்களை ஏற்படுத்துவதற்கான அதிகாரத்தை பல்கலைக்கழகத்துக்கு அளிக்க அந்த சட்டத் திருத்தம் வகை செய்திருந்தது.
இந்த நிலையில், தொலைதூரக் கல்வி முறை மூலமாக பயிலும் படிப்புகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்வது என 2012-இல் முடிவு செய்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டத்தை நீக்கம் செய்திருந்தது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது.

புதன், 1 பிப்ரவரி, 2017

EMIS -LATEST NEWS.....

உயிரைப் பறிக்கும் பிளாஸ்டிக் முட்டைகளை கண்டுபிடிப்பது எப்படி?


இன்றைய காலத்தில் நாம் கடைகளில் வாங்கும் அனைத்து விதமான உணவுப் பொருட்களிலும் கலப்படம் கலந்து விற்கப்படுகிறது என்பது தான் உண்மை. நாம் எவ்வளவு தான் உஷாராக இருந்தாலும், பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதில் நிறைய கலப்பட பொருட்கள் வியாபாரத்திற்கு வருகின்றன.

குறிப்பாக முட்டைகளில் போலியாக பிளாஸ்டிக் முட்டைகள் களமிறங்கியுள்ளன. இதனை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றி கட்டாயம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதற்கான சில வழிமுறைகளைப் பார்ப்போம்.

பிளாஸ்டிக் முட்டைகளைக் கண்டுபிடிப்பது எப்படி?
முட்டையை ஒரு துணியில் நன்றாக பலமுறை உரசி, சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட காகிதங்களுக்கு அருகில் கொண்டு சென்றால், பிளாஸ்டிக் உராய்வின் காரணமாக அவை முட்டையின் ஓட்டில் ஒட்டிக் கொண்டால், அது பிளாஸ்டிக் முட்டை.முட்டையின் உட்புறம் உள்ள மெல்லிய ஜவ்வு போன்ற பகுதியை தனியே பிரித்து வைக்க வேண்டும். ஒருவேளை அந்த முட்டை பிளாஸ்டிக்காக இருந்தால், சிறிது நேரத்தில் அந்த ஜவ்வு பகுதி கடினத் தன்மையை அடைந்து இருக்கும்.முட்டையை உடைத்து உள்ளே உள்ள மஞ்சள் மற்றும் வெள்ளைக் கருவை ஊற்ற வேண்டும். அது நல்ல முட்டையாக இருந்தால், முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு தனித்தனியே தெளிவாக இருக்கும்.