>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
SCHOOL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SCHOOL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 அக்டோபர், 2021

பள்ளி திறக்கும் போது தேவையான பதிவேடுகள் - SCHOOL REOPENING RECORDS 2021..

 பள்ளி திறக்கும் போது தேவையான பதிவேடுகள் -   SCHOOL REOPENING RECORDS 2021


BEO's Visit Check List Form - Download here


* SOP Instructions ( Tamil ) - Download here



* 1 TO 5th Reduced Syllabus 2021 - 22 | Tamil Medium - Download here


* 1 TO 5th Reduced Syllabus 2021 - 22 | English Medium - Download here


* 6 TO 8th Reduced Syllabus 2021 - 22 | Tamil Medium - Download here


* 6 TO 8th Reduced Syllabus 2021 - 22 | English Medium - Download here


* 2nd Term Syllabus ( I TO V ) - Download here


* 2nd Term Syllabus ( VI TO VIII ) - Download here


* 1 TO 5th - New Pedagogy Method Time Table - Download here


* 6 TO 8th - New Pedagogy Method Time Table - Download here


* Kalvi TV - Teacher Maintenance Records - Download here


* Students Tempreture Check And Fill Format - Download here



என்றும் ஆசிரியர் நலனில்  PM.ஏழுமலை ப.ஆ. PUMS கலத்தம்பட்டு. மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டம்    CELL NO. 9865763717. 

****************************************-***--*************************************

வெள்ளி, 20 நவம்பர், 2020

*2-12th Std All Subject Kalvi Tv Videos கல்வி தொலைக்காட்சி வீடியோக்கள்

 *2-12th Std All Subject Kalvi Tv Videos கல்வி தொலைக்காட்சி வீடியோக்கள் - நேற்று வரை ஒளிபரப்பப்பு செய்யப்பட்ட அனைத்து வீடியோக்களும் கீழே உள்ளது - மாணவர்கள் வீட்டிலிருந்து படிக்க பயன்படும் - உங்கள் வாட்ஸ்அப் குழுவில் பகிருங்கள்*


CLIK HEARE VIDEOS



.......................

புதன், 18 மார்ச், 2020

DETAILS NEED FOR GENERATE ONLINE TRANSFER CERTIFICATE IN EMIS









DETAILS NEED FOR GENERATE ONLINE TRANSFER CERTIFICATE IN EMIS

Note:

1. Verify All Details in Student Profile before Generating TC 2 Scan QR Code And Verify All Details Before Printing TC

1.Personal Mark of identification 1.

Personal Mark of Identification 2

2.Details of Scholarship or Educational Concession Received

3.Date of Medical Inspection during the last academic year

4.Student's conduct and character

5. Student is Promoted to the Next class

6.Student studying in the school from (Std)

7.Date of Joining

8.Last date on which Student attended school

9.First Language

10.Medium of instruction

11.D.O.B In Words

12.Student's Nationality

13.School Recognition Number (For Private Schools only)

14.Caste / Community/ Religion





............................................................

வியாழன், 13 பிப்ரவரி, 2020

பள்ளியில் PRINT எடுத்து பராமரிக்கவேண்டியவை PDF




பள்ளியில் PRINT எடுத்து பராமரிக்கவேண்டியவை PDF : Click Here To Download - PDF





..........................................

புதன், 20 நவம்பர், 2019

ஆசிரியர்களுக்கு விருப்ப ஓய்வூதிய திட்டம் மற்றும் மாற்றுப் பணி வழங்க அரசு முடிவு?


Wednesday, November 20, 2019




தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் விகிதத்தை விட, 12 ஆயிரம் ஆசிரியர்கள் அதிகமாக உள்ளதால், விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமனத்துக்கு தனித்தனி விதிகள் பின்பற்றப்படுகின்றன. தொடக்க பள்ளிகளுக்கு, ஒவ்வொரு வகுப்பிலும், மாணவர் எண்ணிக்கைக்கு விகிதத்துக்கு ஏற்ப, ஆசிரியர்கள்நியமிக்கப்படுகின்றனர்.

பட்டியல் தயாரிப்பு

நடுநிலை முதல் மேல்நிலை பள்ளிகள் வரையிலும், மாணவர் எண்ணிக்கை மட்டுமின்றி, பாட வாரியாகவும் கணக்கிட்டு, ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பள்ளிகளில், நிரந்தர பணி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து, பள்ளி கல்வித்துறை பட்டியல் தயாரித்து உள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும், பள்ளிகள், பாட வாரியாக மற்றும்வகுப்புகள் வாரியாகவும், மாணவர்களின் எண்ணிக்கை விகிதத்தின் படியும், இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும், 12 ஆயிரம் ஆசிரியர்கள், தேவைக்கு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதால், ஆசிரியர்களின் தேவை குறைந்து, ஆசிரியர்கள் உபரியாக இருப்பது அதிகரித்து உள்ளது. இந்த எண்ணிக்கையால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.

நடவடிக்கை

உபரி ஆசிரியர்களால், அரசுக்கு பல கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டு வருகிறது.எனவே, செலவை ஈடுகட்டும் வகையில், இந்த ஆசிரியர்களை, பள்ளி கல்வியின் நிர்வாக பணிகள், ஒருங்கிணைந்த கல்வி திட்டம் உள்ளிட்டவற்றில், மாற்று பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

திருச்சியில் தகவல்

அதேபோல, ஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ள ஆசிரியர்களுக்கு, வி.ஆர்.எஸ்., என்ற விருப்ப ஓய்வு திட்டம் வர உள்ளது. திருச்சியில், விளையாட்டு துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற, அமைச்சர் செங்கோட்டையன், இதை அறிவித்துஉள்ளார்.பள்ளி கல்வியில், 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி விட்டு, சுய விருப்பத்துடன் ஓய்வுபெற விரும்பினால், அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என, தெரிகிறது. இதற்கான உத்தரவு, விரைவில் வர உள்ளது.
.....................................

திங்கள், 18 நவம்பர், 2019

மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள் - Tamil (1 - 8 Std)



 மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள் - Tamil (1 - 8 Std)


...................................

புதன், 13 நவம்பர், 2019

குழந்தைகள் தின விழா- குழந்தைகள் அவசியம் பார்க்க வேண்டிய 10 திரைப்படங்கள்!


திரைப்பட வகைகளில், குழந்தைகளுக்கான திரைப்படங்களுக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உள்ளது. இவை குழந்தைகளுக்கான படங்களாக மட்டும் இல்லாமல், எல்லோருக்குமான திரைப்படங்களாகவே இருந்திருக்கின்றன. ஒரு பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படத்தைக் காட்டிலும், மிக சிறந்த அறிவியல் புனைவு (science fiction), மற்றும் வேறு வகை திரைப்படங்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் அனைத்து வயதினரையும் தொட்டு, மொழிகளைக் கடந்து, மதங்களைக் கடந்து அன்பையும், ஆனந்தத்தையும் பரவச்செய்து, பார்வையளனின் மனதில் குழந்தைப் பருவ கண்ணோட்டத்தையும் விதைத்து விடுகிறது. உங்கள் வீட்டுக் குழந்தைகள் அவசியம் பார்க்க வேண்டிய 10 திரைப்படங்கள் இதோ:
ஹோம் அலோன் ( Home Alone)

என் பள்ளியில் படிக்கும்போது, ஹாஸ்டல் நாட்களில் நான் பார்த்து ரசித்து, வியந்த முதல் திரைப்படம், சென்ற ஆண்டு தன் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 25 வருடங்களுக்கு பின் மீண்டும் திரையிடப்பட்ட ‘ஹோம் அலோன். 1990 ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி, ஹோம் அலோன் படத்தின் முதல் பாகம் வெளிவந்தது. இதன் அமெரிக்கத் திரைப்படத்தின் வசூல் சாதனை சுமார் 20 வருடங்கள் முறியடிக்கப்படவில்லை. இது பெற்ற வெற்றியைத் தொடர்ந்து ‘ஹோம் அலோன்’ வரிசையில் ஹோம் அலோன் – 2, ஹோம் அலோன் – 3, ஹோம் அலோன் – 4, ஹோம் அலோன் – 5 வெளியாகி  ரசிகர்களைப் பரவசப்படுத்தின. கெவின், எட்டு வயது சிறுவன், அவரது குடும்பத்தினர் பாரிஸ்க்கு செல்லும்போது தவறுதலாக அவனை வீட்டிலேயே விட்டுவிட்டு கிளம்பிவிடுகிறார்கள். தனி சிறுவனாய் வீட்டில் இருக்கும் கெவின், வீட்டிற்கு திருட வந்த இரு திருடர்களுக்கு தன் சாமர்த்தியத்தைக் காட்டிக் திருடர்களை வீட்டினுள் வர விடாமல் அசர வைக்கும் கெவினின் சாகசம்தான் இந்தத் திரைப்படம். குழந்தைகளும் பெரியவர்களும் சேர்ந்து பார்த்து ரசிக்க நல்ல படம். குழந்தைகள் திரைப்படத்தில் இது Comdey, Adventure வகையைச் சார்ந்தது .


ஈ.டி. (ET extra terrestrial)

ஸ்டீவன் ஸ்பில்பெர்க் இயக்கிய இந்தத் திரைப்படம். பூமிக்கு வந்த ஏலியனுக்கு, சிறுவர்களுக்கும் இடையேயான நட்பையும் அன்பையும் பேசுகிறது. குழந்தைகளின் கற்பனை வளத்தை மெருகேற்றுகிற பல காட்சிகளையும் அற்புதமான கதையையும் கொண்ட இந்தப் படத்தை ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகளுடன் பார்க்க வேண்டும். 1982 இல் வெளியான இந்தப் படம் நான்கு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றிருக்கிறது. குழந்தைகள் திரைப்படத்தில் இது அறிவியல் புனைவு (science fiction) வகையைச் சார்ந்தது. குழந்தைகளின் மிக விருப்பமான திரைப்படம் இது.

வேர் ஸ் த பிரண்ட்ஸ் ஹோம்  (Where Is the Friend's Home?)

அப்பாஸ் கியரஸ்தமி எனும் உலகப் புகழ்பெற்ற இயக்குனரின் கலை படைப்பில் உருவான குழந்தைகளுக்கான திரைப்படம்தான் வேர் இஸ் த பிரண்ட்ஸ் ஹோம். உற்சாகமும் மனிதநேயமுள்ள குழந்தைகளின் உலகை இந்தத் திரைப்படம் பிரிதிபலிப்பதாய் அமைந்துள்ளது. தன் சக பள்ளி தோழனின் வீட்டு பாட ஏட்டினைக் கொடுக்க பக்கத்து மலைக்கிராமத்துக்கு பயணிக்கும் சிறுவன் அஹ்மத் மற்றும் அவனின் நண்பன் ரிடா நமட்ஸதேவை கதையின் மையமாய் வைத்து காட்சி படைப்பில் எதார்த்த பாணியில் எடுக்கப்பட்டது இத்திரைப்படம். தன் நண்பனின் வீட்டை தேடி பல மலைக்கிராமமாக அலைந்தும் அதை கண்டுப்பிடிக்க முடியாத அஹ்மத், தானே தன் நண்பனுக்கான வீட்டு பாடத்தை எழுதி ஆசிரியரிடம் தன் நண்பனுக்கு நல்ல பெயர் வாங்கி தரும் அஹமத், குழந்தைகளின் நட்பு மற்றும் மனிதாபிமானதை பறைசாற்றும் படமாக உள்ளது.

தி ஒயிட் பலூன் (THE WHITE BALLOON)

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு, ஈரான் தயாராகி வரும் வேளையில், கடைத்தெருவிற்கு தன் அம்மாவுடன் செல்லும் ஏழு வயது ரசியா, கடையில் விற்கப்படும் தங்கமீனை வாங்கித் தரும்படி தன் அம்மாவிடம் கேட்கிறாள். பணம் காரணமாக முதலில் அதை மறுக்கும் அம்மாவை, தன் அண்ணன் அலி மூலமாக, அம்மாவிடம் பணம் பெற்று, தன் ஆசையை நிறைவேற்ற கடைத்தெருவுக்கு ஓடும் ரசியா, போகும் வழியில் பணத்தைத் தொலைக்கிறாள், பூட்டிய கடை வாசலில் சிக்கிக் கொள்கிறது பணம்! அதை எடுக்கப் போராடும் ரசியாவுக்கு, அண்ணன் அலி உதவ வருகிறான். பணதை மீட்கப் போராடும் குழந்தைகளுக்கு, ஒற்றை வெள்ளை பலூனோடு இருக்கும் குச்சியின் துணை கொண்டு, அப்பணத்தை மீட்க உதவி செய்வான், பலூன் விற்கும் சிறுவன் ஒருவன்! குழந்தைகள் அன்பை பரிமாற்றத்தை அழகாக காட்டும் திரைப்படம்.

ஸ்பிரிடட் அவே (Spirited Away)

சின்ன உயிரினங்களும் உயிர்கள்தான் அவற்றுக்கும் உணர்வுகள் உண்டு என்பதைச் சொல்லும் புதுமையான ஃபேன்டஸி அனிமேசன் திரைப்படம் ஸ்பிரிடட் அவே. மனிதன் மட்டுமே மேம்பட்டவன் அல்ல, இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் மதிப்பு வாய்ந்தது, அன்பினால் மட்டுமே அத்தனை உயிர்களையும் வெல்லமுடியும் என்பதை கவிதை நயத்துடன் சொல்லும் திரைப்படம். குழந்தைகள் படம் போன்று தெரிந்தாலும், இதனை நிச்சயம் பெரியவர்கள் பார்க்கவும்.

தி ரெட் பலூன் (The Red Balloon)

ஒரு சிறுவனுக்கும், சிகப்பு வண்ண பலூனுக்கும் இடையேயான நட்பைப் பேசுகிறது இந்தப் படம். சிறுவனுக்கும் பலூனுக்கும் இடையில் நடக்கிற காட்சிகள் குழந்தைகளை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும், அதே நேரத்தில் முற்றிலும் இயந்திரமாய் மாறிப்போன இன்றைய வாழ்க்கைச் சூழலில் இப்படத்தைப் பார்க்கும்போது நாமும் இழந்துவிட்ட குழந்தைப் பருவத்தை நிச்சயம் பெறுவோம் என்று உறுதியாகச் சொல்ல முடியும். 1956 இல் வெளியான இக்குறும்படம் 34 நிமிடங்களே ஓடக்கூடியது. கேன்ஸ் ,ஆஸ்கர் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இக்குறும்படத்தை இயக்கியவர் ஆல்பர்ட் லாமோரைஸ்.

கலர் ஆஃப் பாரடைஸ்' (Color of Paradise)

கலர் ஆஃப் பாரடைஸ் எனும் ஈரானிய திரைப்படத்தை மஜித் மஜிதி இயக்கியிருந்தார். தன் தாயையும், கண்பார்வையும் இழந்த மொஹமத் எனும் சிறுவன் டெஹ்ரானில் உள்ள ஒரு சிறப்புப் பள்ளியில் படித்துக்கொண்டிருகிறான். விடுமுறையில் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே வந்து தன் தந்தை வருகைக்காக ஒரு தோட்டத்தில் அவன் காத்திருக்கும்போது  ஒரு சிட்டுக்குருவியின் குஞ்சு கூட்டிலிருந்து கீழே விழுந்துவிடுகிறது. இதை ஓசையால் அறிந்த மொஹமத்  மெல்லமெல்ல தட்டுத்தடுமாறி சென்று அந்த குருவிக்குஞ்சை தனது சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டு மரத்தில் ஏறி குருவிக்குஞ்சை எடுத்து குருவிக்கூட்டில் வைக்கும்போது அவனது விரல்களை குருவி கவ்வுவதை ரசிக்கும் கண்பார்வையற்ற மொஹமதை பார்க்கும் அனைவருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் அன்பு உள்ளம் புரிய வரும். கண்பார்வை இல்லாததால் தன் தந்தையால் நேசிக்கப்படாத ஒரு குழந்தையைப் பற்றியது இந்தத் திரைப்படம்.

சில்ரன் ஆப் ஹெவன் (Children of Heaven)

சொர்க்கத்தின் குழந்தைகள் 1997 ஆம் ஆண்டு ஈரான் நாட்டிலிருந்து பாரசீக மொழியில் வெளிவந்த திரைப்படம் ஆகும். சிறந்த பிற மொழித் திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இப்படத்தினை மஜித் மஜிதி எழுதி இயக்கியிருந்தார்.
தன் தங்கை சாராவின் காலணிகளைத் தவறவிட்டுவிடும் அலி என்ற சிறுவன், வீடு வந்ததும், செருப்பைக் கேட்கும் தன் தங்கையிடம் அழுதுகொண்டே விவரத்தைக் கூறுகிறான். பெற்றோரின் ஏழ்மையைப் புரிந்துகொள்ளும் சாரா, அலியிடம் உள்ள காலணிகளையே தான் பள்ளிக்குச் செல்லும்போது பயன்படுத்துகிறாள், இதனால் தினமும் பள்ளிக்கு தாமதமாய் செல்கின்றான் அலி, இதற்கிடையில் தொலைந்த தன் காலணிகளை வைத்திற்க்கும் ஒரு சிறுமியை பின்தொடர்ந்து செல்லும் சாராவும், அலியும், தங்களை விட வறுமையில் வாடும் கண்பார்வை இல்லாத  அந்த சிறுமியின் தந்தையை கண்டதும், இரக்கம் கொண்டு தாங்கள் தேடி வந்த காலனிகளைக் கண்டுபிடித்தும், அதை திருப்பித்தர கேட்காமல் அமைதியாய் திரும்பும் காட்சிகளில் இக்குழந்தைகள் சொர்கத்தின் குழந்தைகளாய் தோன்றுவார்கள். இறுதி காட்சிகளில் காலணிகளுக்காக போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அலியின் ஓடிப் படிந்த ரணங்களை எல்லாம் வருடி முத்தம் தர வரும் மீன்களை கொண்டு காட்சியில் கவிதை படைத்திருப்பார் இயக்குநர்.


தி வே ஹோம் ( the way home)

கிராமத்தில் வாழும் பாட்டிக்கும், நகரத்தில் வாழ்ந்த பேரனுக்கும் இடையேயான உறவையும், நிபந்தனையற்ற அன்பின் வலிமையையும் உணர்வு பூர்வமாக சித்தரிக்கிறது இந்தப் படம். எந்த திரைக்கதை யுக்திகளயும்  புகுத்தாமல், எளிய நடையில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பார்ப்பவர் நெஞ்சை உருக்க கூடிய வல்லமை பெற்றது. ஒரு வார்த்தைகூட பேசாத, வெகுவாக முகபாவங்களைக் கூட மாறாத பாட்டியின் பாசம், பார்ப்போரின் கண்களில் கண்ணீர் வரவழைத்து விடும்.
இந்தப் படத்தைப் பார்க்கும் குழந்தைகள் நிச்சயம் பாட்டியின் அருமையை புரிந்துகொள்வார்கள். 2002 ல் கொரிய மொழியில் வெளியான இப்படத்தை இயக்கியவர் ஹியாங் லீ என்ற பெண்.

ஹயாத் (Hayat)

மாட்ரிட் குழந்தைகள் திரைப்பட விழா, இசுத்தான்புல் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா, அர்ஜெண்டினா குழந்தைகள் திரைப்பட விழா, உருகுவே குழந்தைகள் திரைப்பட விழா,
பெலாரஸ் குழந்தைகள் மற்றும் சர்வதேச திரைப்பட விழா மற்றும் பல திரைப்பட விழாக்களில் விருதுகள்பெற்ற ஹையாத் (Hayat ) எனும் பாரசீக மொழித் திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியானது. இந்தத் திரைப்படத்தினை ஈரானிய இயக்குனர் கோலாம் ரேஸா ரமீஸானி (Gholam Reza Ramezani) இயக்கியுள்ளார். ஹயாத், 12 வயது சிறுமி. ஈரானின் கிராமம் ஒன்றில் வசிக்கிறார். மிகக் கடினமாக பள்ளித் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறாள். தேர்வுக்கு முதல் நாள் இரவில் அவளது தந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். வீட்டில் இருக்கும் கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஹையாத்துக்கு. ஆனால் ஹையாத் தேர்வு எழுதவே விரும்புகிறார். மிகக் கடின போராட்டத்திற்குப் பிறகு சற்று தாமதமாக தேர்வு எழுதச் செல்கிறார் ஹையாத். ஹையாத் எனும் பாரசீகச் சொல்லுக்கு வாழ்க்கை என்று பொருள்.

குழந்தைகள் தினத்தில் சிறந்த பரிசாக இந்தப் படங்களின் குறுந்தகடுகளை உங்கள் குழந்தைகளுக்கு வாங்கித் தரலாம். குழந்தைகள் மட்டுமல்ல... அவர்களை நேசிக்கும் பெற்றோர்களும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படங்கள் இவை.

............................

திங்கள், 11 நவம்பர், 2019

குழந்தைகள் தின வாழ்த்துப் பாடல்..

வியாழன், 7 நவம்பர், 2019

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

கல்வி தொலைக்காட்சிக்கான பிரத்தியோகமான இணையதம் தொடக்கம் ( Kalvi TV Website)



2017-18 ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது சட்டமன்றப் பேரவையில் அறிவித்தபடி தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் மையப்படுத்தப்பட்ட படப்பதிவு நிலையமாக கல்வித் தொலைக்காட்சி மிக நவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது.

1. மனித வளம் உயர்ந்தோங்க
நாளைய சமுதாயம் நிறைவடைய
தொலைகாட்சிகளில் முன்னோடியாக
உலகளவில் முதன்முறையாக கல்வித் துறை கல்வியாளர்கள் உருவாக்கிய
கல்விக்கென சிறப்பு தொலைக்காட்சி
தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி.

2. தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின் டிஜிட்டல் வழி- கல்விக்கான கல்வி, புரட்சி கல்வித் தொலைக்காட்சி.

3. மழலையர் முதல் முதல்நிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குகிறது கல்வித் தொலைக்காட்சி

4. வல்லுநர்கள், கல்வியாளர்கள், மனிதவள வளர்ச்சியில் சிறந்து விளங்கும் முன்னோடிகள் அனைவரும் ஒருங்கிணைந்து, பாடத்திட்டம் சார்ந்த கருத்துக்களையும், போட்டித் தேர்வுகளுக்கான விளக்கங்ளையும் மனித மேம்பாட்டிற்கான வாழ்க்கை வழிகாட்டிகளையும் ஆழமான புரிந்துணர்தலையும் ஏற்படுத்தும் வகையில் மிகச் சிறப்பாக கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன.

5. தமிழக அரசு, பாடத்திட்டம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு 50 சதவிகிதமும், NEET, JEE போன்ற போட்டித் தேர்வுகள் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தேர்வுகள் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு 10 சதவிகிதமும் மனிதம் வளர்க்கும் நல்லொழுக்கம், மனிதநேய நிலைத்தன்மை, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு 40 சதவிகிதமும் ஒதுக்கப்பட்டு நிகழ்ச்சி தயாரிப்பு நடைபெறுகிறது.

6. இக்கல்வித் தொலைக்காட்சி நிலையம் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 8-வது தளத்தில் நிறுவப்பட்டுள்ளது.

7. கற்றலை இனிமையாக்கி இடைநிற்றலைத் தவிர்க்கும் வகையிலும் கல்வி நிகழ்ச்சிகள் அனைத்தும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர் குழுவால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

8. கல்வியும் கலையும் கல்வித் தொலைக்காட்சியின் சீரிய குறிக்கோள் கல்வியோடு ஒழுக்கம், பெரியோர்களை மதித்தல், நேரம் தவறாமை, நாட்டுப்பற்று போன்ற நற்பண்புகளைக் கதைகளாகவும், குறும்படங்களாகவும் தயாரித்து ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

9. தமிழ் செய்யுள் பகுதிகள் மற்றும் ஆங்கில மனப்பாடப் பகுதிகள் போன்றவை மனதைக் கவரும் இசை மற்றும் நடனப் பாடல்களாக, கற்றலை இனிமையாகவும், எளிமையாகவும் மாற்றும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

10. தமிழகத்தின் அனைத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவரின் நல் ஆதரவுடன் கல்வியின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழக அரசின் இக்கல்வித் தொலைக்காட்சி இந்தியா மட்டுமல்லாது, இந்த உலகிற்கே மிகப் பெரிய முன்னோடித் திட்டமாக உருவெடுத்துள்ளது.

CLIK HEAR
http://kalvitholaikatchi.com/about.php


............................

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

பள்ளிக்கல்வி- 20.08.2019 அன்று காலை 11 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் மதநல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்விச்செயலர் கடிதம்



 

சனி, 17 ஆகஸ்ட், 2019

இன்று (17.08.2019)
 பள்ளிகளுக்கு வேலை நாளா? விடுமுறை நாளா?

கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப்பில், 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான வேலை நாட்கள் - விடுமுறை நாட்கள் பட்டியல் உலா வருகிறது.

2019-20 ஆம் கல்வியாண்டிற்கான வேலை நாட்கள் - விடுமுறை நாட்கள் மற்றும் ஆண்டு செயல் திட்ட அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை இன்று வரை வெளியிட வில்லை.

*வாட்ஸ் அப்பில் உலா வரும் வேலை நாட்கள் - விடுமுறை நாட்கள் பட்டியலில் கல்வித் துறையைச் சார்ந்த எந்த உயர் அலுவலரும் கையொப்பம் இட்டதாக தெரியவில்லை.*

ஆகவே வாட்ஸ் அப்பில் உலா வரும் 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான, பள்ளி வேலை நாட்கள் - விடுமுறை நாட்கள் பட்டியல் நம்பகத் தன்மை இல்லாததாக உள்ளது.

ஒரு சில மாவட் டங்களில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 17.08.2019 அன்று வேலை நாள் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். இது அந்தந்த  மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மற்ற மாவட்டங்களுக்கு பொருந்தாது.

எனவே பள்ளிக் கல்வித் துறை 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான வேலை நாட்கள் - விடுமுறை நாட்கள் பட்டியலை வெளியிட்ட பின், அதன் அடிப்படையில் சனிக் கிழமைகளில் பள்ளி செயல் படுவது நல்லது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 17.08.2019 அன்று பள்ளி வேலை நாள் என சுற்றறிக்கை அனுப்பியிருந்தால், இந்த உத்தரவின் அடிப்படையில், அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மட்டுமே நாளை முழு வேலை நாளாக செயல்பட வேண்டும்.

பிற மாவட்டப் பள்ளிகள் அவரவர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் எழுத்துப் பூர்வ அறிவிப்பின் படி செயல்படுவது நல்லது.

நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு, 01.01.2019 முதல் 31.12.2019 வரையான காலத்தில், பள்ளி வேலை நாட்கள் 210 என்று தான் அரசாணை உள்ளது.

ஒரு சிலர் மேற்கண்ட காலத்திற்கு 220  நாட்கள், நிதி உதவி பெறும் பள்ளிகள் வேலை செய்ய வேண்டும் என்ற புரளியை கிளப்பி விடுகின்றனர்.

 ஆகவே நிதி உதவி பெறும் பள்ளிகள் 01.01.2019 முதல் 31.12.2019 வரை உள்ள காலத்தில், 210 நாட்களுக்கு குறைவு படாமல் வேலை செய்தாலே போதும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

வாட்ஸ் அப்பில் தேவையற்ற வதந்திகளை தவிர்த்திடுவோம்! ஆசிரியர் நலன் காப்போம்!!

..........................................................

வெள்ளி, 26 ஜூலை, 2019

பள்ளி பார்வையின் போது அலுவலர்கள் பார்க்கும் விபரங்கள் (Quality Interventions - District Level Team Visit Regarding)


Friday, July 26, 2019




District level Team visit will be held from august 2019 in all the schools of all blocks in our perambalur and ariyalur district.

The following items are to be viewed during the district level team visit in a school
1. Students learning performance ( Reading, writing & basic arithmetic skills) in Tamil , English and mathematics
2. Teaching and learning methodology form 1st standard to 8th standard in all primary and upper primary schools
3. Usage of teaching and learning materials for making learning atmosphere as easiest way
4. Keeping on lesson plan of teachers
5. Checking of all the steps which are in ALM & SALM
6. Checking of trays which is keeping in SALM
7. Usage of all kits (language, science, maths kits) and dictionary which are given by samagra shiksha and school education
8. Usage of QR code and Tab
9. Checking of home work note book, two and four line notebook
10. Following of CCE activities
11. Following of New Pedagogy classroom transaction and classroom activities (Panthal, health chart, whether chart and self attendance)
12. Keeping on cleanliness in toilets and school campus
13. Hanging on learning outcome posters/ calendars
14. Keeping learning outcome books in the classroom
15. Usage of T.V/ DVD/ computer/ Laptop/ projectors
16. Keeping on periodical assessment test papers (Phase II 2018 - 2019) and grading list of students in the classrooms

All supervisors and BRTEs are intimated that we are going to be conducted on district level team visit from the month of august 2019 in all the schools of all blocks in our district under quality intervention of our district. One school for each BRTE will be covered in the district level team visit.



--
Sir / Madam
Kindly see the attachment file.

by
CEO SSA
.........................

வியாழன், 23 மே, 2019

கல்வி டிவி': சோதனை ஒளிபரப்பு

தமிழக பள்ளி கல்வி துறையின் சார்பில்
புதிதாக 'டிவி' சேனல் துவக்கப்பட்டுள்ளது. 'கல்வி சோலை' என அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.இந்த சேனலை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நிர்வகிக்க உள்ளது.மாணவர்களுக்கான நன்னெறி கதைகள் எளிதாக கணக்கு பாடம் கற்றல் பள்ளி செயல்பாடுகள் சிறந்த பரிசு பெற்ற பள்ளிகளின் செயல் திட்டம் கற்பித்தலில் சிறந்த ஆசிரியர்களின் செயல்பாடுகள் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள்போன்றவை தொடர்பான நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.இதற்காக தொழில்நுட்ப ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.இந்த தொலைக்காட்சிக்கு தமிழக அரசின் கேபிள் 'டிவி' நிறுவனத்தில் 200ம் எண் ஒதுக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு மாதமாக சோதனை ஒளிபரப்பு நடந்து வருகிறது.ஆனால் இரு தினங்களாக பெரும்பாலான கேபிள் ஆப்பரேட்டர்களின் 'செட் டாப் பாக்ஸ்'களில் கல்வி சோலை சேனல் சேர்க்கப்பட்டு சோதனை ஒளிபரப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.ஜூன் 3 முதல் முழு நேர ஒளிபரப்பை துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக 55 ஆயிரம் பள்ளிகளுக்கு புதிய 'டிவி'க்கள் வாங்கப்பட உள்ளன.

கொளுத்தும் வெயில்: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது தாமதமாகும்?

தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத வெயில் காரணமாக,
பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றப்படலாம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 3-ம் தேதி திறக்கப்படும் என நேற்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுப்பு வெளியாகி இருந்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்தது.
கொளுத்தும் வெயிலில் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும், அதனால் பள்ளி திறப்பதை தாமதப்படுத்த வேண்டும் என்றும் சமூக வலைதளங்களிலும் ஏராளமானோர் அரசு வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதுபோல ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர் பெற்றோர் கழகத்தினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படு கிறது. மே இறுதி வாரத்தில் வர இருக்கும் பருவ நிலையைப் பொறுத்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி முடிவு செய்யலாம் என அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்துள்ளதாகவும், இதன் காரண மாக பள்ளிகள் திறப்பது ஜூன் 2-வது வாரத்துக்கு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவும் பள்ளிக் கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிறு, 12 மே, 2019

HOW TO APPLY LEAVE ON BIOMETRIC ATTENDANCE SYSTEM - VIDEO TUTORIAL

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை கொண்டுவர உள்ள பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையில் ஆசிரியர்கள் தங்களுக்கு தேவையான விடுப்புகளை எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றிய வீடியோ தொகுப்பு.

1. How to create own account for teacher

2.How to apply leave in biometric attendance system in TN education department

3.How to view teachers leave details

4.How to update your own information



வியாழன், 21 மார்ச், 2019

திங்கள், 18 மார்ச், 2019

School Morning Prayer Activities - 18.03.2019 ( Kalviseithi's Daily Updates... )



பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 152

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.

உரை:

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

பழமொழி:

Might is right

வல்லன் வகுத்ததே சட்டம்

பொன்மொழி:

கஷ்டங்கள், நஷ்டங்கள் அடைந்த பின் மனிதர் அதிக அடக்கத்தையும் அறிவையும் பெறுகின்றனர்.

-பிராங்க்ளின்

இரண்டொழுக்க பண்பாடு :

1) எனது நோட்டில் உள்ள காகிதம் அல்லது பேப்பர் கிழிக்க மாட்டேன்.

2) காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொது அறிவு :

1) கால்நடை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

இந்தியா

2) தைராய்டு நோய்களை குணப்படுத்தும் உலோகம் எது?

டெலுரியம்



நீதிக்கதை :

ராமுவும் மாரியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. இது போதாதென்று ராமுவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மாரியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர்.

ஒரு நாள் அவர்களுக்குச் சிறிது தொலைவில் உள்ள மற்றொரு ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். மாரி சலிப்புடன் சொன்னான்” “என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. இந்த லட்சணத்தில் நமக்கு ஏன் இந்த ஆசை?”

ராமு சிறிது நேரம் தீவிரமாக யோசித்து விட்டுச் சொன்னான்: “நண்பா! யோசித்துப் பார். உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக் கொள். எனக்கு வழியைச் சொல்லிக் கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரமுடியும்”

ராமுவும் மாரியும் திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்!!

இன்றைய செய்தி துளிகள் : 

1) அரசு பள்ளி மாணவி ஆசிய அளவிலான இளைஞர் தடகளப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை!

2) தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை

3) ட்விட்டரில் காவலர் நரேந்திர மோடி என பெயரை மாற்றினார் பிரதமர் மோடி

4) செய்தி சேனல்களை சிறையில் ஒளிபரப்பக் கூடாது: சிறைத்துறை தலைவர் உத்தரவு

5) கோடைக்கால ஒலிம்பிக் போட்டி: ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

...............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

ஞாயிறு, 17 மார்ச், 2019

கண்தான விழிப்புணர்வில் அசத்தும் அரசுப்பள்ளி




மேலூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு மேற்கொண்டதன் பயனாக இதுவரை 33 பேர் கண்தானம் செய்து அசத்தியுள்ளனர்.

மேலூர் அருகே வடக்கு வலையபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.இங்கு பயிலும் மாணவர்கள் நீர் மேலாண்மை, மரக்கன்று நடுதல், கருவேல மரங்களை அகற்றுதல், நூலக பயன்பாடு என சமூகம் சார்ந்த பல செயல்பாடுகளில் மக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.மேலும் மாணவர்கள் கடந்த 2 ஆண்டாக மேற்கொண்ட கண்தான விழிப்புணர்வால் இக்கிராமத்தில் மட்டும்33 பேர் கண்தானம் செய்து அசத்தியுள்ளனர். இதற்குஆசிரியர் சதீஷ்குமார் வழிகாட்டியாக இருந்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ‘முதலில் கிராமமக்களின் கண்தான விழிப்புணர்வு பற்றி கூறியபோது யாருமே ஆர்வம் காட்டவில்லை. மாறாக கண்தானம் என்றால் கண்ணை பிடுங்கி எடுப்பார்கள் என அச்சப்பட்டனர்.

அதன்பின் தான் கண் இல்லாதவர்களின் வாழ்க்கை முறை, அவர்களுக்கு கண் கிடைத்தால் வாழ்க்கை முறை மாற்றம், மகிழ்ச்சி குறித்து விவரிக்கப்பட்டது.இதற்கு முன்மாதிரியாக இப்பள்ளியில் பணியாற்றும்7 ஆசிரியர்கள் தங்கள் கண்களை தானம் செய்தனர்.அதன்பின் இவ்வூரை சேர்ந்த வளர்மதி என்ற பெண் முதன்முதலில் தனது கண்ணை தானம் செய்ய முன் வந்தார்.தொடர்ந்து மாணவர்களின் கண்தான விழிப்புணர்வு கிராமத்தில் பரவ துவங்கி இதுவரை 33 பேர் கண்தானம் தந்துள்ளனர்.

கல்வி மட்டுமல்லாது சமூக செயல்பாடுகளுக்கும் முழு ஆதரவு அளித்து எங்களை ஊக்கப்படுத்தி வரும் தலைமையாசிரியை சத்தியபாமாவுக்கே இந்த பெருமை சேரும்’ என்றார்.அரசு பள்ளி என்றால் பெயருக்கு பாடங்கள் நடத்தி, மாணவர்களை தேர்வு எழுத வைக்கும் மத்தியில் இப்பள்ளி முன்மாதிரியாக செயல்படுவதை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும்.