>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
ஆதார் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆதார் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

ஆதார் எண் இணைக்கப்படாத சிம் கார்டுகள், வரும் 2018 பிப்ரவரி மாதத்துக்குப் பின் செயலிழப்பு செய்யப்படும்: மத்திய அரசு அறிவிப்பு.

செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படாத சிம் கார்டுகள், வரும் 2018 பிப்ரவரி மாதத்துக்குப் பின் செயலிழப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வங்கி கணக்கு, எரிவாயு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் உட்பட பல விஷயங்களில் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. இதேபோல, செல்போன் எண்ணையும் ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அப்படி இணைக்கபடாத சிம் கார்டுகள் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின் படி 2018 பிப்ரவரியில் செயலிழப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 30 ஆகஸ்ட், 2017

ஆதார் - பான்' இணைக்க நாளை கடைசி நாள்..

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வோர், 'ஆதார்' எண்ணை, 'பான் கார்டு' எண்ணுடன் இணைப்பதற்கான, அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.நடப்பு ஆண்டில், ஜூலை, 1 முதல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணுடன், 'பான்' எண்ணை, கட்டாயமாக இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது.
வருமான வரி இணையதளத்தில், அதற்கான வசதிகள் செய்யப்பட்டன. ஒரே நேரத்தில், ஏராளமானோர் இணைக்க முயன்றபோது, இணையதளம் முடங்கியது. அதனால், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான, ஜூலை, 31க்குள், பலர் அதை செய்ய முடியவில்லை.
அதைத் தொடர்ந்து, இரு எண்களையும் இணைப்பதற்கான அவகாசம், ஆக., 31 வரை நீட்டிக்கப்பட்டது. அது, நாளையுடன் நிறைவடைகிறது. அதன்பின், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.
என்ன செய்யலாம்? : இதுவரை இணைக்காதோர், 'income taxindiaefiling.gov.in' என்ற இணையதளத்தில், 'linkaadhaar' என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில், 'கிளிக்' செய்து, அதில் கூறப்பட்டுள்ள வகையில், இரு எண்களை இணைக்க முடியும்.
இதுபோல், மொபைல் போனில், UIDPAN என முதலில், 'டைப்' செய்து, சிறிது இடைவெளி விட்டு, ஆதார் எண், மீண்டும் இடை வெளிவிட்டு, பான் எண் ஆகியவற்றை, 'டைப்' செய்து, 567678 அல்லது, 56161 ஆகிய எண்களுக்கு அனுப்பினால், இணைக்க முடியும்.

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... ஆகஸ்ட் 31 கெடு


பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்தக் கெடு தேதி இன்னும் ஓரிரு நாளில் முடிவடைய உள்ளது.
நம் நாட்டில் வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டைப் பெறலாம்.இந்த நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு முதலில் ஜூன் 30-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்தக் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை பெறவில்லை. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நேரடி வரிவிதிப்பு கழகமும் நீட்டித்தது.
இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கானகால அவகாசம் ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், உங்களுடைய வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாது மட்டுமல்லை, அரசின் எந்த ஒரு சமூக நலன் சார்ந்த திட்டங்களின் பலன்களையும் பெற முடியாது.

How to link PAN card with Aadhaar online...

If you want to link your Aadhaar with PAN card, head over to the Income Tax e-filing portal and follow the steps below:
1.On the website, click on the link on the left saying Link Aadhaar.
2.Now, enter your PAN number, Aadhaar number, name as per Aadhaar, and the Captcha, and then click on Link Aadhaar.

3.This should link the PAN and Aadhaar, but if there is any discrepancy in your details, you'll receive an Aadhaar OTP to confirm the linkage. 
4.Enter the OTP and click on Save to continue.
5. You can also link the details after logging in to the income tax website. 
Log in as you normally would and then click on Profile Settings in the top menu.
6. Next, find Link Aadhaar.
7.Enter your Aadhaar number and click on Save to continue.


This will only work if the details on the PAN and the Aadhaar card match. In case of any discrepancies, you can upload a scan of your PAN card, or register via OTP on your linked mobile number as mentioned above.

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

திருடவே முடியாது: ஆதார் திட்டவட்டம்...


புதுடில்லி:யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையம்,
ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக வந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நாடு முழுவதும், 115 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள், அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.,வால் திருடப்படுவதாக, சமீபத்தில் அதிர்ச்சி தகவல் வெளியானது.இதை, ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து உள்ளது.
இதுகுறித்து, ஆதார் ஆணையம் வெளியிட்ட அறிக்கை விபரம்:
'பயோமெட்ரிக்' முறையில் தகவல் சேகரிக்கும் தொழில் நுட்பம், இந்தியாவில், பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில், கடுமையான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தொழில் நுட்பத்தில், மக்களிடம் சேகரிக்கப்படும் தகவல்கள், மிகவும் பாதுகாப்பாக உள்ளன.
இந்த தகவல்கள் திருடப்படுவதாக கூறப்படுவதில் உண்மை கிடையாது. இத்தகைய தகவல், உள்நோக்கத்துடன் பரப்பப்பட்டு வருகிறது. ஆதார் தகவல் சேகரிப்புக்காக, பயோமெட்ரிக் சாதனங்களை பயன்படுத்தும் முன், முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றன.
இதற்கு, எஸ்.டி.கியு.சி., எனப்படும், தர பரிசோதனை முறை பயன்படுத்தப்பட்டு, சான்றிதழ் அளிக்கப்படுகிறது. இதைத் தவிர, மேலும் பல பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கப்படுவதால், தனிநபர்களின் தகவல்களை, யாரும், எந்த வகையிலும், திருடவே முடியாது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

புதன், 16 ஆகஸ்ட், 2017

பொது தேர்விற்கும் இனி ஆதார் எண்.. பள்ளிக் கல்வி துறை அதிரடி உத்தரவு.....

பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களின் ஆதார் எண்ணைச் சேகரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது பள்ளிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வு முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, தேர்வு எழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இந்தாண்டு தேர்வு தொடங்குவதற்கு முன்னரே தேர்வு தொடங்கும் தேதி, முடியும் தேதி, முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவற்றைப் பள்ளி கல்வித் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதையடுத்து தேர்வுக்கான முன்னேற்பாடுகளில் பள்ளி கல்வித் துறை ஈடுபட்டுள்ளது. இதற்காக பிரத்யேக படிவம் ஒன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை நிரப்பி பள்ளிகளில் வழங்க மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் படிவத்தில் ஆதார் எண், தந்தையின் செல்போன் நம்பர், மாற்றுத் திறனாளிகள் மாணவர் பற்றிய கேள்விகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் பள்ளி கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டு அவை கம்யூட்டரில் ஏற்றப்பட உள்ளன. இதனால் நடைமுறை சிக்கல் வெகுமாக குறைவதாகத் தேர்வு துறையினர் தெரிவிக்கின்றனர்.

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

சர்வர் முடக்கம்: ஆதார் - பான் இணைப்பில் சிக்கல்....

ஆதாருடன், பான் கார்டு எண்ணை இணைக்க ஏராளமானோர் முயன்றதால், வருமான வரித்துறை இணையதள, 'சர்வர்' முடங்கியது. வருமான வரி அலுவலகத்தில், காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, ஜூலை, 31, கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, காலக்கெடு, ஆக., 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


ஏமாற்றம் : முன்னதாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், பான் கார்டு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என, மத்திய அரசு அறிவித்தது.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில், ஆதார் - பான் எண்களை இணைக்க, நேற்று, கவுன்டரில், கூட்டம் குவிந்தது. எனினும், ஒரே நேரத்தில், பலரும் வருமான வரித்துறை இணையதளத்தில் நுழைந்ததால், 'சர்வர்' பல மணி நேரம் செயல் இழந்தது.
இதனால், வெகு தொலைவில் இருந்து வந்தவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ஆதார் - பான் இணைப்பதில், பலருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, சென்னை, வருமான வரி தலைமை அலுவல கத்தில், 'பயோ மெட்ரிக்' கருவி வைக்கப்பட்டுள்ளது.

அதிக கூட்டம் : இணையதளத்தில், ஆதார் - பான் அட்டைகளை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், 'பயோ மெட்ரிக்' கருவியை பயன்படுத்தலாம். இதில், கைவிரலை பதித்தால், அது, ஆதார் அட்டையின் போது, பதித்த ரேகையுடன் ஒப்பிட்டு, உடனே, இரு எண்களையும் இணைத்து விடுகிறது. அதனால், இங்கும் அதிக கூட்டம் குவிகிறது.

How to link PAN card with Aadhaar online..

If you want to link your Aadhaar with PAN card, head over to the Income Tax e-filing portal and follow the steps below:
On the website, click on the link on the left saying Link Aadhaar.Now, enter your PAN number, Aadhaar number, name as per Aadhaar, and the Captcha, and then click on Link Aadhaar.This should link the PAN and Aadhaar, but if there is any discrepancy in your details, you'll receive an Aadhaar OTP to confirm the linkage. Enter the OTP and click on Save to continue.You can also link the details after logging in to the income tax website. Log in as you normally would and then click on Profile Settings in the top menu.Next, find Link Aadhaar.Enter your Aadhaar number and click on Save to continue.
This will only work if the details on the PAN and the Aadhaar card match. In case of any discrepancies, you can upload a scan of your PAN card, or register via OTP on your linked mobile number as mentioned above.

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி வரை காலக்கெடு: மத்திய அரசு..

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை
ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு காலக்கெடு நீட்டித்துள்ளது.

ஆதார் எண்ணை இணைத்த பிறகே வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும் என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் அட்டை ரத்து செய்யப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், வருமான வரித் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவசாகம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பான் எண் வைத்திருக்கும் ஏராளமானோர், இதுவரை ஆதார் எண்ணை இணைக்காததால், கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது....

செவ்வாய், 25 ஜூலை, 2017

'பாஸ்போர்ட் பெற பான் கார்டு, ஆதார் போதும்'




புதுடில்லி: ''பாஸ்போர்ட் பெறுவதற்கு, பிறப்பு சான்றிதழ் கட்டாயமில்லை; ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்,
'' என, வெளியுறவுத் துறை இணையமைச்சர், வி.கே.சிங் தெரிவித்தார்.பார்லிமென்டில், இது குறித்து, மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, வி.கே.சிங் கூறியதாவது: பாஸ்போர்ட் பெறும் முறையை எளிமையாக்கும் வகையில், பாஸ்போர்ட் சட்டத்தில், சமீபத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை. ஆதார் கார்டு, பான் கார்டு, பள்ளி - கல்லுாரி சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை, பிறந்த தேதிக்கான ஆதாரமாக கொடுத்தால் போதும். அதே போல், திருமண சான்றிதழ், விவாகரத்து சான்றிதழ் போன்ற ஆவணங்களும் தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

வியாழன், 20 ஜூலை, 2017

இனி செல்போனிலேயே ஆதார் - வந்துவிட்டது புதிய 'ஆப்'!!

ஆதார் அட்டை என்று தனியாக எடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.ஸ்மார்போனிலேயே ஆதாரை எப்போதும் வைத்து இருக்கும் வகையில் மொபைல்ஆப்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசின் சலுகைகளைப் பெற ஆதார் அட்டையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அனைவரும் ஆதார் எண் எடுக்கவும் வலியுறுத்தி வருகிறது. இதுவரை 80 கோடி பேர் வரை ஆதார் எண் பெற்றுள்ளனர்.மக்களுக்கும் இன்னும் கூடுதல் வசதி அளிக்கும் வகையில், ஆதார் வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு, புதிய ஆப்ஸ்(செயலி) வெளியிட்டுள்ளது. அந்த செயலி மூலம் ஒருவர் தனது ஆதாரை பதவிறக்கம் செய்து கொண்டு தேவைப்படும் போது அதை ஆவணமாக பயன்படுத்தலாம்.
இந்த ஆப்ஸ் தற்போது, ஆன்ட்ராய்ட் இயங்கு தளத்தில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனால் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வைத்து இருப்பவர்கள் கூகுள் ப்ளேஸ்டோரில் சென்று, ‘எம்.ஆதார்’ என்ற ஆப்ஸைபதவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.இந்த ஆப்ஸை பதிவிறக்கம் செய்தபின், அதில் ஒருவர் தன்னுடைய ஆதார் எண்ணை பதிவு செய்தபின், நாம் ஆதார் எண்ணில் கொடுத்த செல்போன்எண்ணுக்கு ஒரு ஓ.டி.பி. பாஸ்வேர்ட் வரும்.
அந்த பாஸ்வேர்டை பதவு செய்தால், ஆதார் குறித்த விவரங்களை காண முடியும். மேலும், இந்த செயலியில் இருந்து ஆதார் தொடர்பான விவரங்களை மற்றவர்களுக்கும் அனுப்பவும் முடியும்.இந்த செயலியை யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு பீட்டா தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால்,இதை பயன்படுத்துவதில் சில பிரச்சினைகள் ஏற்படுத்துவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். அதை சரிசெய்து தற்போது நவீனமாக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 14 ஜூலை, 2017

ஆதார் கார்டு தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஆதார் கார்டு தவிர மற்ற எதை வாங்க வேண்டுமென்றாலும் அதற்கு ஆதார் தேவை என்றாகிவிட்டது. ஆம்புலன்ஸ் தொடங்கி அத்தனை அத்தியாவச தேவைகளுக்கும் ஆதார் எண் தேவை. அப்படியென்றால், ஆதார் கார்டு எப்போது நமக்குத் தேவைப்படும்
என்பதை சொல்லவே முடியாது. எந்த நேரமும் என்கையில் இருக்க வேண்டும். ஒருவேளை ஆதார் தொலைந்துப் போனால்? லைசென்ஸ், பாஸ்போர்ட்டுடன் ஒப்பிடும்போது டூப்ளிகேட் ஆதார் கார்டு வாங்குவது எளிமையான ஒன்று என்பதுதான் இதில்ஒரே ஆறுதலான விஷயம். ஆதார் எண் அல்லது பதிவு எண்(Enrollment number) ஆகியவைதான் முக்கியம். அதனால், இப்போதே உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் எண்ணை பத்திரமாக எங்கேயாவது குறித்து வைத்துக்கொள்ளவும். ஒரு வேளை ஆதார் எண் நினைவில் இல்லையென்றாலும் பரவாயில்லை. ஆதார் வாங்குவதற்காகக் கொடுத்த மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தெரிந்தால் போதும். அவற்றை வைத்து ஆதார் எண்ணை மீட்டெடுக்கலாம். முதலில், ஆதார் இணையதளத்தை புக்மார்க் செய்துகொள்ளுங்கள். www.uidai.gov.in காணாமல் போன ஆதார் கார்டுக்குப் பதிலாக டூப்ளிகேட் பிரின்ட்எடுக்க நினைப்பவர்கள் “Retrieve Lost UID/EID” என்ற லிங்கினை க்ளிக் செய்யவும்.

அந்தப் பக்கத்தில் உங்களுக்குவேண்டியது ஆதார் எண்ணா அல்லது பதிவு எண்ணா என்பதைக் குறிப்பிட வேண்டும். பின் பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றைக் குறிப்பிடவும். ஆதார் வாங்கும்போது கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணைத்தான் இங்கேயும் குறிப்பிட வேண்டும். அந்த மொபைல் எண்ணுக்கு வரும் OTPஐ அடுத்த பகுதியில் குறிப்பிட வேண்டும்.

பொதுவாகவே, ஆதார் எண் தொடர்பான பிராசஸில் OTP உடனே வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. எனவே, 15 நிமிடங்கள் வரை பொறுமையாக இருக்கவும். அதன் பின்னும் OTP வரவில்லையென்றால் மட்டுமே மீண்டும் சப்மிட் கொடுக்கவும். OTP-யை சரிபார்க்கும் சிஸ்டம், அந்த எண் சரியாக இருந்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணுக்கு உங்கள் ஆதார் எண் அல்லது பதிவு எண்ணைஅனுப்பி வைக்கும். அந்த எண்ணை வைத்து பிரின்ட்எடுத்துக் கொள்ளலாம். பிரின்ட்எடுக்க:

மொபைல் எண்ணுக்கு ஆதார் எண்ணைஅனுப்பியிருப்பதாக வரும் செய்திக்கு கீழே, ஆதார் பிரின்ட்எடுக்க உதவும் லின்க் இருக்கும். ”Download Aadhaar" என்ற அந்தலிங்கை க்ளிக் செய்யவும்.

ஆதார் மீம்ஸ் பார்க்க அந்தப் பக்கத்தில் ஆதார் எண், பதிவு எண்(Enrollment number),முழுப் பெயர், பின் கோடு, மொபைல் எண் ஆகியவற்றை கொடுக்கவும். மீண்டும் ஒரு OTP மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். அதையும் என்டர் செய்தால், டவுன்லோடு லிங்க் கிடைக்கும். டவுன்லோடு ஆதார் கார்டு, பாஸ்வேர்டால் பாதுகாக்கப்பட்ட PDF formல் இருக்கும். உங்கள்பின்கோடுதான் அதன் பாஸ்வேர்டு. மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவைசிலருக்குத்தவறு என மெஸெஜ் கூடவரலாம். அவர்கள் ”Verify Email/ Mobile Number” என்ற லிங்கில் சென்று அவற்றை சரிப்பார்த்துக் கொள்ளலாம். ஆதார் கார்டு டூப்ளிகேட் என இதைச்சொன்னாலும், உண்மையில் அது டூப்ளிகேட் அல்ல. ஆதார் எண்தான் முக்கியம். அதை எத்தனை முறை பிரின்ட்எடுத்தாலும் அது ஒரிஜினல்தான்.

புதன், 12 ஜூலை, 2017

பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலம் இணைக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு...

பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலமும் இணைக்கலாம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவது நிகழும் பணப்பரிமாற்றங்களை ஒழுங்கு செய்ய பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதற்காக பல்வேறு வழிமுறைகளும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை எஸ்.எம்.எஸ் மூலமும் இணைக்கலாம் என்று மத்திய அரசு இன்று புதிய அறிவிப்பு ஒற்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி 567678 மற்றும் 56161 ஆகிய இரு எண்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலம் பயனாளர்கள். தங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
அதற்கு முதலில் UIDAI என்று டைப் செய்து இடைவெளி விட்டு முதலில் முதலில் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து, மீண்டும் ஒரு இடைவெளி விட்டு பின்னர் 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து மேலே குறிப்பிட்ட எண்களில் ஏதாவது ஒன்றுக்கு அனுப்பலாம்.
இவ்வாறு மத்திய அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வெள்ளி, 30 ஜூன், 2017

ஜூலை1-க்குள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் எஸ்எம்எஸ் மூலமாக எப்படி இணைப்பது?

ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைப்பதை மேலும் எளிமையாக்கும் விதமாக வருமான வரித்துறை எஸ்எம்எஸ் மூலமாக இணைக்கும் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.

 அதற்கு முக்கியமாகப் பான் கார்டு எண், ஆதார் கார்டு எண் போன்றவற்றைக் கையில் வைத்து இருக்க வேண்டும்.
எஸ்எம்எஸ் மூலமாக எப்படி இணைப்பது?
எஸ்எம்எஸ் மூலமாக ஆதார் மற்றும் பான் கார்டினை இணைக்க ‘UIDPAN space 12 digit Aadhaar Space 10 digit PAN' வடிவத்தில் தகவலை உருவாக்கி 567678 அல்லது 56161 எண்ணிற்கு அனுப்புவதன் மூலமாக எளிதாக இணைத்துவிடலாம்.
முக்கியக் குறிப்பு:
எஸ்எம்எஸ் மூலமாக இணைக்கும் போது ஆதார் மற்றும் பான் கார்டில் உள்ள பெயர்கள் இரண்டும் சரியாகப் பொருந்த வேண்டும். இல்லை என்றால் இணைப்புச் செய்ய முடியாது.
 இணையதளம்:
இணையதளம் மூலமாக ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்கப் புதிய இரண்டு இணைப்புகளை வருமான வரி இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருத்தம்:
ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்கள் சரியாகப் பொருந்தவில்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்யும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளைப் பயன்படுத்தித் திருத்தவும் செய்யலாம்.
 சரிபார்ப்பு:
இணைப்பிற்கான படிகளைச் செய்த பிறகு உங்களது மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் குறுந்தகவலுக்கு Y என்று பதில் அளிப்பதன் மூலம் எளிதாக இணைப்பைச் சரிபார்க்க முடியும்.

ஞாயிறு, 18 ஜூன், 2017

ஆதார் இணைக்காத 1 லட்சம் பேருக்கு பென்ஷன் நிறுத்தம் : பிஎப் அதிகாரிகள் தகவல்

தமிழகம் முழுவதும் ஓய்வூதியர்களுக்கு உயிர்வாழ் சான்றுடன் ஆதார் எண் இணைக்காத 1 லட்சம் பேருக்கு மே மாதம் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 
காஸ் மானியம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கான தொகையை வங்கி கணக்கு மூலம் நேரடியாக வழங்கும் முறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு அனைவருக்கும் வங்கிக்கணக்கை இலக்காக கொண்டு தொடங்கப்பட்ட ஜன்தன் திட்டத்தை பயன்படுத்திக் கொண்டது. இதுதவிர மத்திய அரசின் 19 அமைச்சகங்களின் 92 திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 நூறு நாள் வேலை உறுதி திட்டம், உணவு மானியம், பள்ளிகளில் இலவச மதிய உணவு, விவசாயிகள் பயிர்க்காப்பீடு மற்றும் இழப்பீடு தொகையை பெறுவதற்கு, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச சமையல் காஸ் பெறுதல், அரசின் மானிய உதவிகளை பெறுதல், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான மத்திய அரசின் பீம் ஆப்பில் வங்கிக் கணக்கை இணைத்து பணம் அனுப்புதல் போன்றவை ஆதார் அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
 இதுதவிர வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், அடையாளச்சான்று, முகவரிச்சான்று என எண்ணற்ற வகையில் ஆதார் பயன்பாடு உள்ளது. ஜூலை 1க்கு பிறகு புதிய பான் கார்டு விண்ணப்பிக்கவும், ஆதார் வைத்திருப்பவர்கள் பான் அட்டையுடன் இணைத்து ரிட்டர்ன் தாக்கல் செய்யவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திட்ட பயன்கள் உரியவருக்கு சென்று சேர வேண்டும், போலி பயனாளிகளை ஒழிக்க வேண்டும், மானியச்சுமையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே ஆதாரை கட்டாயப்படுத்தி வருகிறது மத்திய அரசு.
 இதே வரிசையில், ஓய்வூதியர்கள் ஆதார் மூலம் உயிர்ச்சான்று சமர்ப்பிக்கலாம். ஜீவன் பிரமாண் இணையதளம் மூலம் அல்லது பொது சேவை மையங்களில் சம்பந்தப்பட்ட வங்கி, கருவூலத்துக்கு செல்லாமலேயே இருந்த இடத்தில் இருந்தே எளிதாக உயிர்ச்சான்று சமர்ப்பிக்க ஜீவன் பிரமாண் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோல் அரசு ஓய்வூதிய தாரர்கள் மட்டுமின்றி, பிஎப் ஓய்வூதியம் பெறுவோரும் ஆதாரை இணைக்க வேண்டும். பி.எப் திட்டத்தில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் மத்திய அரசாங்கத்திடம் இருந்து மானியம் பெறும் தகுதி படைத்தவர்கள். இதில், ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் எண் கட்டாயமாகிறது. ஆதாரை கட்டாயமாக்குவதை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
 ஓய்வூதியம் பெறுவோர் ஆதார் எண் மற்றும் தங்களது டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழினை (டிஜிட்டல் ஜீவன் பிரமாண் பத்திரம்) சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதுவரை உயிர்வாழ் சான்றிதழை அதற்குரிய படிவத்தில் வங்கியில் சமர்ப்பித்த ஓய்வூதியதாரர்களும் இந்த ஆதார் முகாமில் பதிவு செய்து கொள்ளலாம். அங்கு ஆதார் எண் மற்றும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறலாம்.
ஏப்ரல் 17ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டபோது அந்தந்த பி.எப் அலுவலகங்கள் மற்றும் இ-சேவை மையங்களில் இணைக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில் ஆதார் எண் இணைக்க தவறியவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 தமிழகத்தில் சுமார் 1 லட்சம் பேருக்கு ேம மாதம் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் உடனடியாக அருகில் உள்ள பிஎப் அலுவலகத்துக்கு சென்று உயிர்வாழ் சான்றிதழுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
அரசின் 19 அமைச்சகங்களின் 92 திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு  முதல் வங்கி கணக்கு வரை ஆதார் முக்கியமாகி விட்டது.
ஆதார் இணைக்காவிட்டால் வங்கி கணக்கு ரத்தாகும்
காஸ் மானியம் உட்பட பல்வேறு மானியங்கள் பெற ஆதார் வேண்டும். 
பிஎப் பென்ஷனுக்கு ஆதார் எண் இணைக்க அவகாசம் முடிந்து விட்டது.
ஆதார் இணைக்காவிட்டால் பென்ஷன் நின்று விடும் ஆபத்து உள்ளது.

சனி, 17 ஜூன், 2017

31 டிசம்பர் 2017 க்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்....

     தற்போது வங்கி கணக்கு வைத்து உள்ளவர்கள் 31 டிசம்பர் 2017 க்குள் தனது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்,தவறும் பட்சத்தில் அவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படும். - மத்திய அரசு எச்சரிக்கை.

🔹 புதிய வங்கி கணக்கு துவக்கவும், ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் பணப்பரிமாற்றம் செய்ய ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

🔸 தற்போது வங்கி கணக்கு வைத்துள்ளவர்களும் வரும் டிசம்பர் 31 ம் தேதிக்குள் ஆதார் எண் இணைக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அந்த வங்கிக்கணக்கு செல்லாது எனவும் எச்சரித்துள்ளது.

திங்கள், 12 ஜூன், 2017

இனி தபால் நிலையத்திலும் ஆதார் பதிவு செய்யலாம் - ஜூலை முதல் நடைமுறை!

ஆதார் விவரங்களை பதிவு செய்ய ஆதார் மையத்துக்கு தேடி அலைந்து கொண்டு இருக்கிறோம். வரும் ஜூலை மாதத்தில் இருந்து அப்படி அலையத் தேவையில்லை, தபால் நிலையத்திலேயே ஆதார் விவரங்களை பதிவுசெய்யும் முறை நடைமுறைக்கு வர இருக்கிறது.
இதற்காக மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட தபால் நிலையங்களை அடையாளம் காணும் பணியில் தபால் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த குறிப்பிட்ட தபால் நிலையங்களில் ஆதார் விவரங்களை பதிவு செய்யலாம், ஆதார் தொடர்பான விவரங்களையும் “அப்டேட்” செய்து கொள்ளலாம்.
முதல் கட்டமாக தபால் நிலையத்தில் ஆதார் விவரங்களை பதிவு செய்யும் முறையை 12 நகரங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, புதுச்சேரி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்ட தலைநகரில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படலாம்.
இந்த குறிப்பிட்ட தபால் நிலையங்களில் அந்தந்த மாவட்ட மக்கள், தங்களின் ஆதார் தொடர்பான விவரங்களை அதாவது செல்போன் எண், முகவரி மாற்றம், மின்அஞ்சல் மாற்றம் போன்றவற்றை “அப்டேட்” செய்யலாம், புதிதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கும் மக்களும் தங்கள் விவரங்களை பதிவுசெய்யலாம்.
சென்னை மண்டலத்துக்கான தபால்நிலைய மேலாளர் ஜே.டி. வெங்கடேஸ்வரலு கூறுகையில், “ மாநிலம் முழுவதும் தபால் நிலையங்களில் ஆதார் கார்டுகள் பதிவு செய்யவும், ஆதார் விவரங்களை அப்டேட் செய்யவும், 12 தலைமைத் தபால்நிலையங்கள்,  2 ஆயிரத்து 515 துணை தபால் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தபால் நிலையங்களில் ஆதார் தொடர்பான சேவைகளை மக்கள் பெறலாம். கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் ஆதார் கார்டுகள் புதிதாக பதிவு செய்ய தபால் நிலையத்துக்கு எளிதாக வந்து செல்லும் வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தபால் நிலையத்துக்கு 2 பணியாளர்கள் வீதம் ஒதுக்கப்பட்டு, இந்த பணிகள் நடைபெறும். இதற்காக 100 ஊழியர்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்து இருக்கிறோம். அவர்கள் சென்று மற்ற ஊழியர்களுக்கு இது தொடர்பாக பயிற்சி அளிப்பார்கள். ஆதார் விவரங்களை பதிவு செய்யும் கருவிகளும், வாங்கப்பட்டு, அந்தந்த தபால் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்காக ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் ஆதார் விவரங்களை பதிவுசெய்ய ஒதுக்கப்படலாம்” எனத் தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம்... இல்லாவிட்டால் சம்பளம் கிடையாதாம்.....

உத்தரப்பிரதேசத்தில் அரசு பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் ஜூலை மாதம் முதல் கண்டிப்பாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும், அவ்வாறு ஆதார் அட்டை இல்லாத ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத் வந்தபின் பல அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறார். கல்வித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவர பள்ளி விடுமுறை நாட்களைக் குறைத்து, வேலை நாட்களை நீட்டித்தார். தலைவர்களின் பிறந்த, மறைந்த நாட்களில் விடுமுறையை ரத்து செய்து, அந்த நாட்களில் அந்த தலைவர்கள் குறித்து அறியும் வகையில் பள்ளி நடத்த உத்தரவிட்டார்.
இந்நிலையில், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும், வருகைப்பதிவு சரியாக இருக்க வேண்டும் என்ற திட்டமிட்டு, அனைத்து ஆசிரியர்களும் ஆதார் அட்டை பெறுவதை முதல்வர் ஆதித்யநாத் கட்டாயமாக்கியுள்ளார்.
இது குறித்து கல்வித்துறை அமைச்சர் அனுபமா ஜெய்ஸ்வால்  சனிக்கிழமை அதிகாரிகளுடன் லக்னோ நகரில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.அப்போது அவர் கூறுகையில், “
அரசு தொடக்க பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் மட்டும் 4.95 லட்சம் ஆசிரியர்கள் 1.68 லட்சம் பள்ளிகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஆதார் அட்டையை ஜூலை மாதத்துக்குள் பெற்று, இதை வங்கிக் கணக்கோடு இணைத்து இருப்பது கட்டமயாகும். இந்த ஆதார் அட்டைதான் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டையாகவும் பயன்படப்போகிறது.
அவ்வாறு ஆதார் அட்டையை பெறாமல், ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்காமல் இருக்கும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படாது. ஆசிரியர்கள் மத்தியில் வெளிப்படைத்தன்மை, பள்ளிக்கு சரியாக வருகை தருகிறார்களா என்பதை கண்டறிய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஆசிரியர்களுக்கு ஆதார் எண் வைத்திருப்பார்கள், அவ்வாறு இல்லாதவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம் நடத்தப்படும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு, அது பள்ளியுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் 1.78 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 30 சதவீதம் மாணவர்களுக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது. புறநகர் மற்றும் தகவல் தொடர்பில்லாத பகுதிகளில் பயிலும்  மாணவர்களுக்கு ஆதார் அட்டை பெறுவதில் சிரமங்கள் உள்ளன. அவர்களுக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.  

சனி, 10 ஜூன், 2017

வருமான வரி கணக்கு தாக்கல், பான் எண் பெற ஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை....

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மற்றும் பான் எண் பெற ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
வரும் ஜூலை மாதம் முதல் வருமான வரித் தாக்கல் செய்யவும், பான் எண் பெறவும் ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
வருமான வரிக் கணக்குகளை சமர்ப்பிக்கவும், பான் அட்டை கோருவதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
வருமான வரிச் சட்டத்தில் 139ஏஏ என்ற பிரிவானது கடந்த மத்திய பட்ஜெட் மூலமும் 2017-நிதிச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவு, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்கவும், நிரந்தரக் கணக்கு எண் (பான்) அட்டை கோரி விண்ணப்பிக்கவும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்த இந்தச் சட்டப் பிரிவை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் பினய் விஸ்வம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அவர்கள் தங்கள் மனுக்களில் "ஆதார் எண் என்பது கட்டாயமாக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2015-இல் பிறப்பித்த உத்தரவை சிறுமைப்படுத்த முடியாது. உச்ச நீதிமன்றம் அவ்வாறு உத்தரவிட்ட பிறகு, வருமான வரிச் சட்டத்தில் 139ஏஏ பிரிவை மத்திய அரசு சேர்த்திருக்கக் கூடாது. எனவே, அந்தப் பிரிவை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரியிருந்தனர்.
எனினும், இந்த வாதத்துக்கு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்த பதிலில் 'பயங்கரவாதத்துக்கு நிதியளிக்கவும், கருப்புப் பணப் புழக்கத்துக்கும் போலி பான் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதைத் தடுக்கவே பான் அட்டை கோரி விண்ணப்பிப்பதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்திருந்தது.
அரசுத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, 'போலி பான் அட்டைகளை உருவாக்க முடியும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், ஆதார் அட்டைகளில் எந்தக் குளறுபடியும் செய்ய முடியாது. ஆதார் அமலாக்கத்தின் மூலம் ஏழைகளுக்குப் பலனளிக்கும் பல்வேறு திட்டங்களில் ரூ.50,000 கோடியை மத்திய ஆரசால் சேமிக்க முடிந்துள்ளது. அதனால்தான் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது' என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கண்ட மனுக்கள் மீதான தீர்ப்பை, கடந்த மே மாதம் 4-ஆம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவும், பான் எண் பெறவும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெள்ளி, 2 ஜூன், 2017

பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்து, வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு, இதுபோன்ற விபரங்கள் அடங்கிய, மாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய மாற்று சான்றிதழில், 18 விதமான விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. முதல்முறையாக, ஆண், பெண் இனத்துடன், மூன்றாம் பாலினம் சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர், பெற்றோர், பாதுகாவலர் பெயர், படித்த பள்ளி, முந்தைய வகுப்பு போன்ற, பல விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.
அதேபோல, ஏதாவது சலுகை கட்டணத்தில் சேர்ந்தவரா; கல்வி உதவித் தொகை பெற்றவரா என்ற, அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், மாணவரின் ஆதார் எண், அந்த மாணவன் கடைசியாக படித்த வகுப்பில், பள்ளிக்கு வருகை தந்த நாட்களின் சதவீதத்தை குறிப்பிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், குறைந்த நாட்கள் வந்திருந்தால், அந்த மாணவர்களுக்கு, மற்ற பள்ளியில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.