>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 27 ஜூன், 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.06.19

திருக்குறள்


திருக்குறள்:226

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

விளக்கம்:

வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும். அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

பழமொழி

Brevity is the soul of wit

சுருங்க சொல்லுதல் அறிவின் அடையாளம்.

இரண்டொழுக்க பண்புகள்

1. உள்ளத்தின் நிறைவால் வாய் பேசும் எனவே என் உள்ளத்தில் நல்ல எண்ணங்களை எப்போதும் வளர்த்து கொள்வேன்.

2. நல்ல எண்ணங்கள் வளர்த்து கொள்ள நல்ல புத்தகங்கள் வாசிப்பேன்.

பொன்மொழி

பெருங்கடல்களையும், நீந்திக்கடக்க முடியாத பேராறுகளையும் சிறுபடகில் கடக்க நினைக்கும் தைரியம் , மனக்கலக்கம் வரும்போதும்  இருக்க வேண்டும்.
----வில்லியம் ஜேம்ஸ்

 பொது அறிவு

1. 'அகலிபா' என்ற மருந்து எந்த தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது?

குப்பைமேனி(acalypha Indica)

2. 'மும்மருந்து' எனப்படும் நூல் எது?

திரிகடுகம் (சுக்கு, மிளகு , திப்பிலி போல் நன்மை தரும் மூன்று நீதிகளை கூறும் நூல்)

English words & meanings

1. Nail - a piece of metal sharp at one end, ஆணி, நகம்

2. Native - a place where naturally living beings exist, பிறப்பிடம், இயற்கை வாழ்விடம்

ஆரோக்ய வாழ்வு

கருப்பு கவுணி அரிசி - மன்னர்கள் காலத்தில் உணவாக இருந்த இந்த அரிசியை பயன்படுத்தினால் புற்றுநாேய் வராது, இன்சுலின் சுரப்பு அதிகமாகும்.

Some important  abbreviations for students

Pvt - Private
Ltd - Limited

நீதிக்கதை

ஒரு குறிப்பிட்ட ஊரில் பல சிறப்புகளை கொண்ட சுவையான பழம் ஒன்று கிடைக்கும் என்றும், அதைப் புசித்தால் நெடுநாளைக்கு பசியே எடுக்காது என்றும் முந்தின ஊரில் சூஃபி ஞானிக்கு தகவல் கொடுத்திருந்தார்கள்.

ஆனால், அந்த ஊருக்குப் போன அவருக்கு, காய்கனி சந்தையில் அந்தப் பழம் கண்களில் படவில்லை. தயங்கியபடியே பார்த்துக்கொண்டு வந்தார்.

அவருடைய தயக்கத்தை பார்த்த ஓர் இளைஞன், அவரிடம் வந்தான். “நீங்கள் எதையோ தேடுவதுபோல தெரிகிறது. நான் உங்களுக்கு உதவலாமா?” என்று கேட்டான்.

அவனிடம் “இந்த ஊரில் அபூர்வமான பழம் ஒன்று கிடைக்கும் என்றும், அதை உட்கொண்டால் சில நாட்கள் வரை பசியே எடுக்காது என்றும் சொன்னார்கள். அந்தப் பழம் கிடைத்தால் அல்லது அதன் விதை கிடைத்தால் அதை எடுத்துப் போய் பட்டினியால் வாடும் மக்கள் உள்ள பகுதியில் பயிரிட முயன்று அந்தப் பகுதி மக்களின் பசியைப் போக்க முடியுமா என்று பார்க்கிறேன்” என்று பதில் சொன்னார் ஞானி.

இளைஞன் உடனே பரபரத்தான். “சற்று இருங்கள், வருகிறேன்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனான். சிறிது நேரம் கழித்து வந்தான். அவன் கையில் ஒரு பழம். “நீங்கள் கேட்ட பழம் இதுதான், இந்தாருங்கள்” என்று சொல்லி அதை ஞானியிடம் கொடுத்தான்.

“இந்த ஊரில் இந்தப் பழம் நிறையவே கிடைக்கும் என்று சொன்னார்களே”என்று கேட்டார் ஞானி.
“உண்மைதான். இந்த ஊரில் இந்த பழம் நிறையதான் கிடைத்துக்கொண்டு வந்தது. ஆனால், மக்கள் சுயநலமிகள் ஆகிவிட்டார்கள். தாம் அனுபவிக்கும் பலனை பிற யாரும் அனுபவிக்கக் கூடாது என்ற சுயநல நோக்கில் இந்தப் பழத்தை பதுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதைப் பயிரிடும் முறையையும் மிக ரகசியமாக வைத்துக் கொண்டார்கள். என் வீட்டில் இருந்த ஒரு பழத்தை உங்களுக்காக நான் கொண்டு வந்திருக்கிறேன். பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவுவதற்காக இந்தப் பழத்தை நீங்கள் பயன்படுத்த போவதாக சொன்னதைக் கேட்டதும் உங்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று எனக்கு தோன்றியது” என்று சொன்னான் அந்த இளைஞன்.

அவனுடைய செயலாலும், சொற்களாலும் நெகிழ்ந்த ஞானி, அவனை வாழ்த்தினார்: “உன்னைப் போல பிறருக்காக உதவ முன்வரும் இளைஞர்கள் பெருகினார்களானால், அவர்கள் வாழும் பகுதியில் யாருக்கும் எந்தக் குறையும் இருக்காது.


வியாழன்

அறிவியல் & கணினி

அறிவோம் அறிவியல் - 4

Click here to see the experiment

*ஒரு தட்டில் மெழுகுவத்தியை ஏற்றி வைக்கவும்.
 *பிறகு, தட்டில்  தண்ணீரை நிரப்பவும். ஒரு கண்ணாடிக் குவளையால் மெழுகுவர்த்தியை மூடவும்.
*அப்போது, ஆக்ஸிஜன் தீர்ந்துபோவதால், மெழுகுவர்த்தி அணைந்துவிடும்.

*அதனால் ஏற்படும் வெற்றிடத்தைப் போக்க, நீர் மேலே உறிஞ்சப்படுவதைக் காணலாம்

கணினி சூழ் உலகு

ஆங்கிலம் வாசிப்பில் அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனை உச்சரிப்பு பிழை... இதனை சரிசெய்ய உதவும் ஒரு செயலிதான் Speaking dictionary

இதில் நீங்கள் வார்த்தையை தட்டச்சு செய்து, பின் speaker போன்று இருக்கும் பகுதியை கிளிக் செய்தால் அந்த வார்த்தையானது ஒலியாக கேட்கும். இதன்மூலம் நமது உச்சரிப்பை சரி செய்து கொள்ளலாம்.

Click here to download the app

இன்றைய செய்திகள்

27.06.2019

* போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

* மத்திய நுண்ணறிவுப் பிரிவான ஐ.பி மற்றும் ‘ரா’ அமைப்புகளுக்கு புதிய தலைவர்களை மத்திய அரசு நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மத்திய நுண்ணறிவுப் பிரிவான ஐ.பி தலைவராக அரவிந்த் குமாரும், ரா ’அமைப்பின் தலைவராக சமந்த் கோயலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


*   கல்பனா சாவ்லா விருதுக்கு தகுதியான பெண்கள் வரும், 8ம் தேதிக்குள், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட சமூகநல அலுவலகத்தில், நேரில் வந்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என, சென்னை கலெக்டர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

* விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா வெற்றி பெற்றார்.

* உலக கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Today's Headlines

🌸 The law has been amended to impose additional penalties for MPs and MLAs who drive vehicles in violation of traffic rules.

 🌸The Central Government has announced the appointment of new Heads of IT and IP for the Intelligence Unit. Arvind Kumar has been appointed as the Head of the Intelligence Unit IP and Samant Goel has been appointed as the Head of the RA unit

 🌸Women eligible for the Kalpana Chawla Award may apply in person at the District Social Welfare Office, Chennai Collector's Office, by  8th of September, with the appropriate documents, Chennai Collector Shanmuga Sundaram said.

 🌸Ankita Raina wins
 of the Wimbledon Tennis eligibility Series.

 🌸World Cup Cricket: Pakistani won by 6 wickets against Newzealand.

Prepared by
Covai women ICT_போதிமரம்

...........................................................................................................................................................