TET தாள் 2-ல் தேர்ச்சி பெற்று தகுதிபெற்றுள்ளவர்கள் இணையதளத்தில் சரிபார்த்து திருத்தம்-புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செ.சாந்தி
ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்11-ல் தேர்ச்சி பெற்று தகுதிபெற்றுள்ளவர்கள் வருகிற 20ந்தேதி வரை இணையதளத்தில் சரிபார்த்து திருத்தம் தேவை எனில் இணையதளம் மூலமாகவே திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செ.சாந்தி தகவல்.
புதுக்கோட்டை மார்ச் 11- ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதிபெற்றுள்ளவர்கள் வருகிற 20ந்தேதி வரை இணையதளத்தில் சரிபார்த்து திருத்தம் தேவை எனில் இணையதளம் மூலமாகவே திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என்று பதுக்கோட்டை மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலர் செ.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக்கல்வித்துறையில் 286 பட்டதாரி ஆசிரியர்கள் பின்னடைவுப்பணியிடங்கள்623 மற்றும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின்கீழ் 202பட்டதாரி ஆசிரியர் (IEDSS) பணியிடங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு 2012-2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014-ல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தகுதிபெற்றுள்ள நாடுநர்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளன.
இந்நிலையில் ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் ஏற்கனவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருகை தராதவர்கள் பி.எட் பயின்ற ஆண்டே ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி அந்தக்கல்வி ஆண்டே பி.எட் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் சான்றிதழ் சாரிபார்ப்பின்போது பணித்தேர்வுக்கு உரிய தகுதி பெறாமல் தற்போது தகுதி பெற்றவர்கள் ஆகியோர்கள் மீளவும் வாய்ப்பு வழங்க வேண்டி விண்ணப்பித்து உள்ளார்கள். எனவே ஆசிரியர் தகுதித்தேர்வு 2012-2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014-ல் (தாள்11- ல்) தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி பட்டியல ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.
நாடுநர்கள் மேற்கண்டுள்ள விவரங்களை இணையதள வழி மூலம் (Online) சாரிபார்த்து கொள்ளலாம். ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள்11-ல் பதிவு எண் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். புதிவெண் நினைவில் கொள்ளாதவர்கள் பெயர் மற்றும் பிறந்தநாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். மேற்கண்டுள்ள நாடுநர்கள் தங்களின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
நாடுநர்கள் (candidates) தங்களின் ஒரு சில விவரங்களைத் திருத்தம் மேம்படுத்தவேண்டும் எனில் ஆன்லைனிலேயே அதாவது இணையதளத்திலேயே மேற் கொள்ளலாம். நாடுநர்கள் தங்களது அசல் ஆவணங்களைக் கொண்டு விவரங்களை மீள சரிபார்த்து புகைப்படம் மற்றும் கையொப்பமிட்டு உறுதிச்சான்றினைத் தரவேண்டும். மேற்கண்ட விவரங்களை வருகிற 20-03- 2017 (திங்கட்கிழமை) அன்று இரவு 10.30 மணிவரை இணையதளத்தில் சரிபார்த்து திருத்தம் தேவை எனில் ஆன்லைனிலேயே மேற்கொள்ளலாம். இணையதளம் மூலமாகவே திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். நேரடியாகவோ எழுத்துமூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது. எக்காரணம் கொண்டும் மீளவும் இதுபோன்ற வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது. கால நீட்டிப்பும் செய்யப்பட மாட்டாது.
மேற்கண்டவாறு சாரிபார்க்கப்பட்ட விவரங்களைக் கொண்டு இறுதி தகுதிப்பட்டியல் (Final Merit List) தயார் செய்யப்படும். மேற்கண்ட இறுதி தகுதிப்பட்டியல் கொண்டு தான் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது தெரிவிக்கலாகிறது. இவ்வாறு அவர் செய்திக்குறிப்பினை வெளியிட்டுள்ளார்.