ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்க ‘அம்மா கல்வியகம்’ இணையதளம்: ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், ‘அம்மா கல்வியகம்’ எனும் இலவச கல்வி இணையதளத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்தார். விரைவில் ‘நீட்’ தேர்வுக் கான பயிற்சியும் இந்த கல்வி இணைய தளத்தில் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார்.
அதிமுகவில் சசிகலா தலை மையை எதிர்த்து தனி அணியாக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார். அவரது அணியில், அதிமுக தொழில்நுட்ப பிரிவு முன்னாள் செயலாளர் ஆஸ்பயர் சுவாமிநாதன் தற்போது பணியாற்றி வருகிறார். அவரது பிரிவினர் இந்த ‘அம்மா கல்வியகம்’ இணையதளத்தை உருவாக்கியுள்ளனர். ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் இந்த இணையதள தொடக்க விழா நடந்தது. அப்போது, இணையதளம் தொடர்பாக ஆஸ்பயர் சுவாமிநாதன் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு மார்ச் மாதம், அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம், இந்த திட்டம் தொடர்பாக விவரித்தேன். அப்போது அவர் நிதியமைச்சராக இருந்த ஓபிஎஸ்ஸிடம் அனுமதி பெறுமாறு கூறினார். அன்று முதல் ஓராண்டாக எடுக்கப்பட்ட முயற்சியின் இறுதியில் ‘அம்மா கல்வியகம்’ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எங்கிருந்தாலும் மடிக்கணினி மற்றும் இணைய இணைப்பு இருந்தால், அம்மா கல்வியகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில்,‘‘இந்த கல்வியகத்தில் ஐஐடியில் இணைவதற்கான நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கூடுதலாக 10 மதிப்பெண்கள் பெறும் பயிற்சி, டிஎன்பிஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் தொடர்பான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. 10 லட்சம் பேர் ஒன்றாக இணையதளத்தில் நுழைந்தாலும் தாங்கும் அளவுக்கு இதன் சர்வர் திறன் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.இதையடுத்து, ‘அம்மா கல்வியகம்’ இணையதளத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
அப்போதுஅவர் பேசிய தாவது:ஜெயலலிதா ஆட்சி காலத்தில், மாநிலத்தின் சொந்த வருமானமான ரூ. 86 ஆயிரம் கோடியில் ரூ.27 ஆயிரம் கோடியை உயர்கல்வி, பள்ளிக் கல்விக்கு ஒதுக்கினார். இதன் மூலம், ஏழை மாணவர்களுக்காக 16 வகை யான உபகரணங்கள், மடிக்கணினி உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கினார். அவர் ஆட்சியில் 53 கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டன. ஐஐடி நிறுவன நுழைவுத்தேர்வில் தமிழகத் தில் உள்ள மெட்ரிக், மாநில கல்வித் திட்டங்களில் கேள்விகள் கேட்கப்படுவதில்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில்தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புறத்தில் லட்சக் கணக்கில் செலவு செய்து பயிற்சி பெறும் நிலை உள்ளது. இந்த கல்வியகத்தின் மூலம் அந்த பயிற்சியை இலவசமாக பெற முடியும். தொடர்ந்து ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியும் இந்த கல்வியகத்தின் மூலம் வழங்க உள்ளோம். கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் இலவசமாக வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாணவர்கள், ‘www.amma kalviyagam.in’ என்ற இணையதள முகவரியில் இந்த கல்வியகத்தின் பயனைப் பெறலாம்.