>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 10 மார்ச், 2018

ஊதிய உயர்வு வேண்டாம் : இப்படியும் ஒரு கோரிக்கை!!!

கியூபெக்,: 'தேவைக்கு அதிகமாகவே 
வருமானம் ஈட்டுவதால், எங்களுக்கு ஊதிய உயர்வு தேவையில்லை். அந்த பணத்தை, நாட்டின் சுகாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்துங்கள்' என்று கனடா டாக்டர்கள் மனு அளித்து வருகின்றனர்.
வட அமெரிக்க நாடான கனடாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது கியூபெக் நகரம். இங்குள்ள அரசு டாக்டர்களுக்கு, சமீபத்தில், ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது.இதற்கு டாக்டர்கள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.கியூபெக்கில், செவிலியர்கள், மருத்துவமனை அலுவலக ஊழியர்கள் என பலரும், கடினமாக உழைக்கின்றனர்.அதிக பணிச் சுமையில் சிக்கித் தவிக்கும் அவர்களுக்கு, குறைவான ஊதியமே வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.மேலும், செவிலியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவர்கள் கடுமையான மன உளைச்சலுடன் பணியாற்றுவதாக கூறப்பட்டது.இந்நிலையில், 'சக ஊழியர்கள் கஷ்டப்படும்போது, நாங்கள் மட்டும் எப்படி ஊதிய உயர்வை ஏற்க முடியும்' என, டாக்டர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.ஏற்கனவே, 'தேவைக்கு அதிகமாக வருமானம் ஈட்டுவதால், இந்த ஊதிய உயர்வு தேவையில்லை.இந்த பணத்தை, நாட்டின் சுகாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்துங்கள்' என, டாக்டர்கள் சார்பில், அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவு

பள்ளி கோடை விடுமுறை 44 நாட்களாக உயர்வு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 44 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது.தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது; ஏப்., 6ல் முடிகிறது.

மார்ச், 7ல் துவங்கிய, பிளஸ் 1 தேர்வு, ஏப்., 16ல் முடிகிறது. மார்ச், 16ல் துவங்கவுள்ள, 10ம் வகுப்பு தேர்வு, ஏப்., 20ல் முடிகிறது. பொது தேர்வு அல்லாத மற்ற, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்., 20க்குள் தேர்வுகளை முடிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

விடுப்பு நாட்கள்: இதையடுத்து, ஏப்., 21 முதல், பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது. அடுத்த கல்வி ஆண்டு, ஜூன், 1, வெள்ளிக்கிழமை துவங்குகிறது. அன்று வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறு சேர்த்து, கோடை விடுமுறையை, ஜூன், 3 வரை நீட்டிக்க, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி அளித்ததும், முறையான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.வழக்கமாக ஜூன், 1ம் தேதி, வார வேலைநாளாக இருந்தால், அன்றே பள்ளிகள் திறக்கப்படும். இந்த முறை வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறை சேர்த்து, ஜூன், 3 வரை விடுமுறையை நீட்டிக்கப்பட உள்ளது. வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு, 31 நாட்கள் தான் விடுமுறை கிடைக்கும். இந்தாண்டு, 44 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க உள்ளது.கடந்த ஆண்டு வரை, தொடக்க பள்ளிகள், ஏப்ரல், 30 வரை இயங்கின. நடப்பு கல்வி ஆண்டில், தொடக்க பள்ளி வேலை நாட்களை, 220 நாளில் இருந்து, 210 நாட்களாக, தமிழக அரசு குறைத்துள்ளது. இதனால், கூடுதலாக, 10 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

1st - 12 th கணித ஆசிரியர்களுக்கான "ICT4MATHS" ANDROID MOBILE APP

கணித ஆசிரியர்கள் கணினி மற்றும் SMART PHONE போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளைப்  பயன்படுத்தி கணித பாடங்களை மாணவர்கள் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்க தேவையான இலவச மென்பொருட்கள்,  ANDROID செயலிகள் மற்றும் இணைய வளங்களைத் தொகுத்து "ICT4MATHS" என்னும் ஒரு எளிய  ANDROID செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
"ICT4MATHS" என்னும் இந்த  ANDROID செயலி அனைத்து நிலைகளிலும் (ஆரம்ப்பப்பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை) பணி புரியும் கணித ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்தின் உதவியோடு கணிதத்தை  மிக எளிதாக கற்பிக்க உதவும் ஒரு வழிகாட்டியாகும்.
அனைத்து கணித ஆசிரியர்களும் ICT4MATHS" என்னும் இந்த  ANDROID செயலியை தரவிறக்கம் செய்து, பயன்படுத்தி பயனடையவும்.
LINK:
...............................................................................................

TET- அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2018 பணியிடங்களில் விரைவில் ஆசிரியர்கள் நியமனம்

அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வின் மூலம் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.
இப்போதைய நிலையில் சென்னை மாவட்டம் தவிர்த்து 31 மாவட்டங்களில் 3,170 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
  அதேநேரத்தில் சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் 2 ஆயிரத்து 533 பணியிடங்கள் உபரியாக உள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் தெரிய வந்தது. இதில் ஆயிரத்து 992 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 
மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 541 பேர் மட்டுமே பணிபுரிய வேண்டும். அந்த அடிப்படையில் உபரியாக உள்ள ஆயிரத்து 992 ஆசிரியர்கள், காலியாக உள்ள இடங்களில் விரைவில் பணியமர்த்தப்படுவர். அதன்படி 3 ஆயிரத்து 170 பணியிடங்களில் ஆயிரத்து 178 ஆக காலிப்பணியிடங்கள் குறையும். 
அதேபோல் சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் மூலம் 840 புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்தம் 2 ஆயிரத்து 18 பணியிடங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இத்தகவலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளி, 9 மார்ச், 2018

அரசாணை எண் 99:பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுசூழல் மன்றங்களின் செயல்பாடுகளை கவனிக்க உதவி இயக்குநர் மற்றும் 32 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்து பணி நீட்டிப்பு அரசாணை!!!


TNTET - 94 ஆயிரம் பேரின் வாழ்வாதரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

சிந்தனையை சோதிக்கும் கேள்விகள் : பிளஸ் 1ல், 'சென்டம்' பெறுவதில் சிக்கல்!!!

தமிழகத்தில், பிளஸ் 1 பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. இதில், சில வினாக்கள் 
கடினமாக இருந்ததால், 'சென்டம்' கிடைக்க வாய்ப்பில்லை என, மாணவர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 1 வகுப்புக்கு, இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு அறிமுகமாகி உள்ளது. நேற்று துவங்கிய இத்தேர்வில், 8.63 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். நேற்று, தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. அகமதிப்பீட்டுக்கு, 10 மதிப்பெண் ஒதுக்கப்படுவதால், 90 மதிப்பெண்களுக்கு மட்டும் வினாத்தாள் வழங்கப்பட்டது.காலை, 10:00 மணி முதல், 12:45 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுதினர். வினாத்தாளை வாசிக்கவும், சுய விபரங்களை பூர்த்தி செய்யவும், முதல், 15 நிமிடங்கள் வழங்கப்பட்டன; மீதம் உள்ள, 2:30 மணி நேரத்தில், விடை எழுத அவகாசம் தரப்பட்டது. வினாக்களுக்கு உரிய பதிலை எழுத, மாணவர்களுக்கு போதிய நேரம் கிடைத்தது.தேர்வெழுதிய மாணவர்கள் கூறுகையில், '10ம் வகுப்பில், பொது தேர்வை எழுதியுள்ளோம்.'பிளஸ் 1ல் அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகளை, பொது தேர்வு போல் எழுதினோம். அதனால், இந்த தேர்வில், சிரமம் தெரியவில்லை. வினாக்கள் எளிமையாக இருந்தன. சில, ஒரு மதிப்பெண் வினாக்கள், பாடங்களின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளன' என்றனர்.தமிழ் ஆசிரியர்கள் கூறியதாவது:வினாத்தாளில், கடினமான கேள்விகள் இல்லை. ஆனால், மொழிப் பாடம் என்பதால், அவற்றில் முழு மதிப்பெண் வழங்க சில, 'ட்விஸ்ட்' கேள்விகள் இருக்கும்.அப்படித்தான், பிளஸ் 1 தேர்விலும், மாணவர்களின் சிந்தனை மற்றும் புரிந்து படிக்கும் திறனை சோதிக்கும் வகையில், ஐந்துக்கும் மேற்பட்ட, ஒரு மதிப்பெண் கேள்விகள் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

வியாழன், 8 மார்ச், 2018

CLASS ROOM LANGUAGE FOR TEACHERS AND STUDENTS

மத்திய பாடத்திட்டத்தில் மாற்றம்: ஆலோசனைகள் வரவேற்பு!!!

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மத்தியப் பாடத் திட்டத்தை
மாற்றி அமைப்பது தொடர்பாக இணையதளம் மூலம் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புத்தகப் படிப்புடன் வாழ்க்கைத் திறன்கள், அனுபவக் கல்வி, உடற்கல்வி, திறன் உருவாக்கம் ஆகியவையும் அவசியம். மாணவர்களின் மற்ற திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில், பாடச்சுமையை குறைக்கும்படி, தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சிலிடம் (என்சிஇஆர்டி) வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், நிபுணர்கள், பொதுமக்கள், பிரதிநிதிகள் மற்றும் இந்தப் பிரச்னையில் ஆர்வம் கொண்டவர்கள் ஆகியோரிடமிருந்து பாடத்திட்ட மாற்றம் குறித்த ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக மத்திய மனிதள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ஆலோசனைகளை தெரிவிக்க விரும்புவோர், தங்களது கருத்துகளை ட்ற்ற்ல்://164.100.78.75/ஈஐஎஐ என்ற முகவரிக்கு அனுப்பலாம். இதற்கான படிவத்தில் ஆன்லைன் மூலம் ஆலோசனைகளை சுருக்கமாகத் தெரிவிக்கலாம். ஆலோசனைகள் தெரிவிப்போர் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி ஆகியவற்றின் பாடத்திட்ட ஆவணங்களை ட்ற்ற்ல்://ஸ்ரீக்ஷள்ங்ஹஸ்ரீஹக்ங்ம்ண்ஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ஸ்ரீன்ழ்ழ்ண்ஸ்ரீன்ப்ன்ம்.ட்ற்ம்ப் ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ரீங்ழ்ற்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ழ்ண்ஞ்ட்ற்ள்ண்க்ங்/ப்ண்ய்ந்ள்/ள்ஹ்ப்ப்ஹக்ஷன்ள்.ட்ற்ம்ப் ஆகிய இணையதள முகவரிகளில் பார்க்கலாம்.
சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி ஆகியவை வெளியிட்டுள்ள ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பல்வேறு பாடங்கள் தொடர்பான பொருளடக்கத்தை சமநிலை கொண்டதாக மாற்றியமைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 8ல் கோட்டை முற்றுகை: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஆசிரியர் மன்ற பொது செயலாளருமான க.மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதுடன், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோருக்கு உள்ள ஊதிய முரன்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 21 முதல் 24ம் தேதி வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னையில் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து 26ம் தேதி அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் இதுநாள் வரையில் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காத நிலையில், தற்போது தேர்வுகள் துவங்கியுள்ளதால் மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தினை தவிர்த்து வருகிறோம்.
இருப்பினும் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் வரும் 24ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்திட ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது. அதன் பிறகும் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காத நிலையில் மே மாதம் 8ம் தேதி சென்னையில் கோட்டை முன்பாக முற்றுகை போராட்டம் நடத்திட முடிவு செய்துள்ளோம். 

Census E-Register 2018 @ MSK Free Edusoft...

Census E-Register 2018 @ MSK Free Edusoft

தேசிய அளவிலான எந்த தேர்விற்கும் ஆதார் எண் கட்டாயமில்லை : உச்சநீதிமன்றம்

தேசிய அளவிலான எந்த தேர்விற்கும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீட் நுழைவு தேர்வு எழுத ஆதார் கட்டாயம் என்ற சி.பி.எஸ்.இ.யின் அறிவிப்புக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 12ம் தேதி வரை நீட்டிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 12ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில் 12ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஓராண்டு ஊதிய நீட்டிப்பு ஆணை

பள்ளிக்கல்வி மேல்நிலைப்பள்ளிஆசிரியர்களுக்கான ஓராண்டு ஊதிய நீட்டிப்பு ஆணை

100 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான ஓராண்டு  ஊதிய நீட்டிப்பு ஆணை
 click here
அரசாணை எண் 86
193 வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான ஓராண்டு  ஊதிய நீட்டிப்பு ஆணை 
click here 
அரசாணை எண் 87

ஞாயிறு, 4 மார்ச், 2018

பள்ளிகளில் பாதுகாப்பு முதல்வர் உத்தரவு

அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளில், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொட்டிகள், பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும்படி, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்துார் தாலுகா, பெரிய கொளுத்துவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர், மோகன்; இவரது மகன், கீர்த்தீஸ்வரன். அப்பகுதியில் உள்ள பள்ளியில், எல்.கே.ஜி., படித்து வந்தான்.நேற்று முன்தினம், பள்ளி கழிப்பறைக்கு சென்றபோது, அங்கு திறந்து வைக்கப்பட்டிருந்த, கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தான்.இதை அறிந்த முதல்வர், இனி வரும் காலங்களில், இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கும்படிஉத்தரவிட்டுள்ளார்.
அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளில், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொட்டிகள், பாதுகாப்பான முறையில் அமைக்கப்படவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கல்லுாரி கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனர், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோருக்கு, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.மாணவன் கீர்த்தீஸ்வரன் இறந்த சம்பவம் குறித்து, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளிக் கல்வித் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.

Soon, CS to be allied with science ... news:Indian Express.

2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.அதன்படி தாள் 1க்கு 06.10.2018 அன்றும் தாள் 2க்கு 07.10.2018 அன்றும் நடைபெறும்.
இன்று வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய வருடாந்திர கால அட்டவணையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மூன்றாம் பருவ பாடத்திட்டம் முடிவதற்கு முன்பாக பள்ளி மாணவர்களுக்கு பள்ளி விழாக்கள்.,ஆண்டு விழாக்கள் நடத்தக்கூடாது

சனி, 3 மார்ச், 2018

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 5,6,7 தேதியில் அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்...

தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் வரும் 5, 6, 7 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தப்போவதாக தலைமை செயலக ஊழியர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு தலைமை செயலக சங்க செயற்குழு கூட்டம் நேற்று மாலை தலைவர் பீட்டர் அந்தோணிசாமி தலைமையில் நடந்தது. செயலாளர் ஆறுமுகம், இணை செயலாளர்கள் மணிவண்ணன், அருண், பொருளாளர் ெகாளஞ்சிநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தலைவர் பீட்டர் அந்தோணிசாமி கூறியதாவது:
பஐயா ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான வல்லுனர் குழுவின் காலக்கெடுவை மேலும் நீட்டிக்காமல் உடனடியாக இறுதி அறிக்கையை அளித்து, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பதவி உயர்வு பெற்றும் இதுவரை கட்டாய மாவட்ட பயிற்சிக்கு அனுப்பாமல் உள்ள சுமார் 100 பேரை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். 7வது ஊதியக்குழுவில் தலைமை செயலக அனைத்து நிலை பணியாளர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாடுகளை களைந்து, அனைவருக்கும் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் தலைமை செயலக பணியாளர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள கோப்பில் விரைந்து நடவடிக்கை எடுத்து வீட்டுமனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசின் செலவை குறைக்க, அரசு துறைகளில் உள்ள பணியிடங்களை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு மற்றும் அரசாணையை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
தலைமை செயலகத்தில் திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் பட்டம் பெற்று பணியில் உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணி வரன்முறை செய்து, அவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 5, 6 மற்றும் 7ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தலைமை செயலக ஊழியர்கள் பணிக்கு வருவார்கள். வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மதிய உணவு இடைவேளையின்போது நாமக்கல் கவிஞர் மாளிகையின் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார். வருகிற 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது. அந்த மூன்று நாட்களும் தலைமை செயலக ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளது தமிழக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்தில் மாற்றம் வருமா?’ - வலுக்கும் புதிய கோரிக்கை

பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக அரசுப் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவில் தொடந்து 5 நாள்களும் கலவை சாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளியில் படிக்கும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு கலவை சாதங்கள் பிடிக்கவில்லை. அதனால் 90 விழுக்காடு மாணவர்கள் கலவை சாதத்தை உட்கொள்ளாமல் தொட்டியில் கொட்டுகிறார்கள்.
இதனால் கிராமப்புற ஏழை எளியமாணவர்களுக்கு சத்துக் குறைபாடு ஏற்படும் அபாயநிலை உள்ளது. அதனால் தமிழக அரசு இதை ஆய்வு மேற்கொண்டு, அரசு மதிய உணவு திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்'' என்கிறார்கள் தமிழ் சமூக கல்வி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.இதுபற்றி தமிழ்ச் சமூக கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்பாய கூறுகையில், ``2015-க்கு முன்பு தமிழக அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தில் வெள்ளை சாதம், காய்கறி, பருப்பு சாம்பாரோடு, முட்டை சேர்த்து மதிய உணவாக வழங்கப்பட்டு வந்தது. இதைச் சுவையாகச் சமைத்துக் கொடுக்கும்போது மாணவர்கள்நன்றாகச் சாப்பிட்டு வந்தார்கள். அதன்பிறகு, தமிழக முதல்வர் ஜெயலலிதா நல்ல நோக்கத்தோடு சத்துணவில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று 2016-க்குப் பிறகு, அரசுப் பள்ளி செயல்படும் 5 நாள்களும் மதியம் கலவை சாதங்கள் வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதியம் புளி சாதம்,எலுமிச்சைச் சாதம், தக்காளி சாதம், சாம்பார் சாதம், பிஸ்பேலா பாத் போன்ற கலவை சாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை எவ்வளவு சுவையாகக் கொடுத்தாலும் கிராமப்புற மாணவர்கள் விரும்பி சாப்பிடுவதில்லை. காரணம் நம்முடைய தமிழர் நிலத்தின் தட்பவெட்ப நிலையிலும் கலாசார பண்பாட்டாலும் வறட்சியான கலவை உணவுகளைப் பெரும்பாலும் விரும்பி உட்கொள்ள மாட்டோம்.
அதேபோல அரசுப் பள்ளியில் மதியம் வழங்கப்படும் கலவை சாதங்களைக் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பெரும்பாலும் சாப்பிடாமல் தொட்டியில் கொட்டுகிறார்கள். இதுதொடர்பாக 7 பள்ளிகளில் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் விசாரித்தபோது, மதியம் வெள்ளை சாதத்தோடு, சாறு ஊற்றி நன்றாகப் பிசைந்து சாப்பிடுவதையே விரும்புவதாக 90 விழுக்காடு மாணவர்கள் தெரிவித்தார்கள். இது சத்துணவு அமைப்பாளர்களுக்கும் தெரியும். அரிசி செலவு குறைவதால், இதை அவர்கள் கண்டுகொள்வதில்லை.
அரசும் கண்டுகொள்ளாமல் இருந்தால், மாணவர்களுக்கு சத்துக் குறைபாடுகள் ஏற்பட்டு பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு ஆளாவார்கள். அதனால் தமிழக அரசு இதை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தி மதிய உணவு திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்'' என்றார்.

பள்ளி மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த நூலக உறுப்பினர்களாக சேர்க்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

Read More

Quiver videos

வன்முறையில்லாத வகுப்பறைக்கான தீர்வு

பிஏட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்கள் நாற்பதாயிரம் பேர் வேலையற்ற நிலையில் காத்திருப்பு..


பிஏட் படிப்பில் கணினி படித்து முடித்த ஆசிரியர்கள் நாற்பாதாயிரம் ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கின்றனர் . தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின் மூலம் கணினி ஆசிரியர் படிப்புகள் முடித்து 40000 பிஏட் பட்டம் பெற்று ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.

ஆசிரியர் படிப்பு:

தமிழக அரசு அங்கிகரித்து நடவடிக்கை எடுத்தால்தான தனியார் பள்ளிகளிலாவது ஆசிரியராக பணியாற்ற முடியும் . பிஏட் பட்டம் கணினியில் பெற்ற ஆசிரியர்களுக்கும் வேறுஎங்கும் பணி வாய்ப்பற்ற நிலையில் உள்ளனர் .
இவர்களால் பகுதிநேரமாக கூட எங்கும் பணியாற்ற இயலவில்லை. இளங்கலை பட்டத்துடன் பிஏட் மற்றும் முதுகலை பிஏட் பெற்றவர்களே அதிகம் வாய்ப்பு பெறும் நிலையில் அதுவே கட்டாயமான நிலையில்  ஆனால் பிஏட் கணினி முடித்தவர்களுக்கான வாய்ப்பு எனபது துளியும் இல்லை . அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை . இதுவரை அரசு பள்ளி , தனியார் பள்ளிகளில் கணிணி அறிவியல் ஆசிரியர்க்கான எந்த சரியான கல்வித்தகுதியும் நிர்ணயிக்கவில்லை .


அரசு இது குறித்து நடவடிக்கையெடுத்தால்தான படித்து முடித்து காத்திருக்கும் 40 ஆயிரம் பேருக்கும் ஒரு வழிகிடைக்கும் இல்லையெனில் படித்தும் பயணின்றி வேலையற்ற நிலையில் இருக்கும் நிலையே ஏற்டுகின்றது . ஆகவே கணினி ஆசிரியர்கள் படிப்பு முடித்து பிஏட் பட்டம் பெற்றவர்களின் எதிர்காலம் குறித்து அரசு சிந்தித்து அவர்களுக்கான அங்கிகாரம் வேலையில் கிடைக்கபெற முன் வரவேண்டும் . தமிழகத்தில் 2011 முதல் பள்ளிகளில் அச்சிடப்பட்ட கணினி பாடபுத்தகங்கள் குப்பையில் போடும் நிலையில் இருப்பதாக ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது . கணினி அறிவியல் பாடம் கற்றுத்தர நடவடிக்கையெடுத்தும் அரசு அதனை முழுமையாக முடிக்காமல் பாதியிலே கைவிட்டுள்ளது . இதனால் அரசு அச்சடிப்புக்கு செய்த செலவு தான் இறுதியில் நட்டக்கணக்கில் நிற்க்கின்றன. தமிழக அரசு இதுகுறித்து விரைந்து நடவடிக்கையெடுக்க வேண்டி 40ஆயிரம் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.


வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

எய்ம்ஸ்’ நுழைவு தேர்வு 5ம் தேதி பதிவு முடிவு!!!

எய்ம்ஸ்’ மருத்துவ கல்லுாரியில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு, நாளை மறுநாள் பதிவு முடிகிறது. நாடு முழுவதும், அனைத்து அரசு, தனியார்கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., மற்றும் சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளில் சேர, ‘நீட்’ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

ஆனால், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, ‘எய்ம்ஸ்’ மற்றும், ‘ஜிப்மர்’ கல்லுாரிகளில்சேருவதற்கு, தனியாக நுழைவு தேர்வு எழுத வேண்டும். இந்த ஆண்டுக்கான, எய்ம்ஸ் நுழைவு தேர்வு, மே, 26, 27ல் நடக்கிறது. இதற்கான, ‘ஆன்லைன்’ பதிவு, பிப்.,5ல் துவங்கியது. இந்த பதிவு, நாளை மறுநாள் மாலை, 5:00 மணியுடன் முடிவடைகிறது. கூடுதல் விபரங்களை, www.aiimsexams.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்...

TNPSC: May-2018 துறை தேர்வு விண்ணப்பங்கள்  வரவேற்க்கப் பட்டுள்ளன.
விளம்பர எண்: 492
விளம்பர நாள்: 01.03.2018
விண்ணப்பிக்க கடைசி நாள் 16.04.2018
துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
இடைநிலை ஆசிரியர்கள்
1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -
 Higher Secondary / Secondary / Teacher Training and Special School
2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools
3.  124 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
4.152-The Account Test for Executive Officers
5.172 - The Tamil Nadu Government Office Manual Test
பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்
1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .(or)
152.The Account Test for Executive Officers
2 . 172 - The Tamil Nadu Government Office Manual
துறை தேர்வில் மற்ற அலுவலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .
2 . 172 - The Tamil Nadu Government Office Manual

நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி : தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு...

நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளி மாணவர்களின், 'ஆன்லைன்' பதிவுக்கு உதவி செய்ய, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 6ல், நாடுமுழுவதும் நடக்கிறது.இந்த தேர்வில் பங்கேற்க, பிப்., 9ல், ஆன்லைன் பதிவுகள் துவங்கின.தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., அறிவிப்பின்படி, வரும், 9ம் தேதி, நள்ளிரவு, 11:30 மணியுடன், ஆன்லைனில் பதிவுக்கான வசதி நிறுத்தப்படும். தேர்வுக்கான கட்டணத்தை, வரும், 10ம் தேதி நள்ளிரவு, 11:30 மணிக்குள், ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, தனியார் பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளிகள், பயிற்சி மையங்கள்மற்றும் தங்கள் பெற்றோர் உதவியுடன், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அரசு பள்ளிகளில், நீட் தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ளும், மாணவர்களில், பெரும்பாலானோர் இன்னும் விண்ணப்பிக்கவில்லை.அவர்கள்உரிய அவகாசத்திற்குள் விண்ணப்பிக்க, பயிற்சி அளிக்கும் மையமும், பள்ளி தலைமை ஆசிரியர்களும் உதவ வேண்டும் என, அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 2 மார்ச், 2018

24 மணிநேர கல்வி வழிகாட்டி உதவி மைய சேவை தொடக்கம்...


கல்வி வழிகாட்டி உதவி மைய சேவை தொடக்கம்

இந்தியாவிலேயே முதன்முறையாக மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான கல்வி,வேலைவாய்ப்பு மற்றும் இதர கல்வி சார்ந்த துறைகளின் தகவல்கள்,
தெளிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் 14417 வழியாக தொடர்பு கொள்ளும் 24 மணிநேர கல்வி வழிகாட்டி உதவி மைய சேவை தொடக்கம்.

AEEO-நேரடி நியமனம் -57 பதவிகளுக்கான தேர்வு தேதி 15-9-2018 என அறிவிப்பு-Aeeo syllabus


13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு...

அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவி உள்பட, 3,030 காலியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில், 1,058 இடங்களுக்கு, டி.ஆர்.பி., சார்பில், தேர்வு நடத்தப்பட்டது. இதில், முறைகேடு புகார்கள் எழுந்ததால், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின், முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து, டி.ஆர்.பி.,யின் புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கிரிமினல் வழக்கு பதிவு செய்து, எட்டு பேரை கைது செய்தனர். இதில், ஐந்து பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில், கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தேர்வும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வு பட்டியல் குறித்த, ஆண்டு அறிக்கையை, டி.ஆர்.பி., நேற்று அறிவித்தது. அதில், தேர்வுகள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன. சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, மே மாதம் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்டில் நடத்தப்படும்; தேர்வு முடிவுகள், செப்டம்பரில் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.பி.எட்., பட்டதாரிகள் பெரிதும்எதிர்பார்த்துள்ள, அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, டெட் தேர்வு, ஜூலையில் அறிவிக்கப்பட்டு, அக்., 6, 7ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்வு முடிவுகள், நவம்பரில்வெளியாகும்.
ஆசிரியர் பணிக்கு, 13 ஆயிரம் பணியிடங்கள்காலியாக உள்ளன. இதற்கான, டெட் தேர்வில், நான்கு லட்சம்பேர் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதில், தேர்ச்சி பெறுவோருக்கு, அடுத்த ஆண்டில் நடத்தப்படும், புதிய பணி நியமனங்களில், ஆசிரியர் வேலை கிடைக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்வுகள் எப்போது பதவி காலியிடம் அறிவிக்கை தேர்வு நாள்'ரிசல்ட்' நாள்
 வேளாண் பயிற்றுனர் 25 ஏப்.,ஜூலை, 14 ஆக.,
பாலிடெக்னிக் விரிவுரையாளர் 1,065 மே ஆக.,4 செப்.,
கலை கல்லுாரி உதவி பேராசிரியர் 1,883 மே ஜூன், 2ம் வாரம்சான்றிதழ் ஆய்வு
ஜூலை உதவி தொடக்க கல்வி அதிகாரி 57 ஜூன் செப்.,15
அக்.,'டெட்' என்ற ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை அக்.,6, 7 நவ.,
*அட்டவணையில் கூறப்பட்டுள்ள மாதங்களின் முதல் வாரத்தில், அறிவிக்கை வெளியாகும்.

+2 தமிழ் வினாத்தாளில் இதுவரை கேட்கப்படாத கேள்வி!!!

'நாட் ரீச்சபிள்' ஆன கல்வி அதிகாரிகள் : பிளஸ் 2 தேர்வில் முதல் நாள் 'சோதனை'

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு பணிகளில் ஈடுபட்ட தலைமையாசிரியர், அதிகாரிகள் பயன்படுத்திய ஏர்செல் சி.யு.ஜி., அலைபேசி நெட் வொர்க்கின் இடையூறால் பெரும் சிரமம் ஏற்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறையில் இயக்குனர், இணை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர், தலைமையாசிரியர் வரை எளிதிலும், செலவின்றியும் தொடர்புகொள்ள ஏர்செல் அலைபேசியில் சி.யு.ஜி., இணைப்பில் உள்ளனர்.அதிகாரிகள், தலைமையாசிரியர் 'வாட்ஸ்ஆப் குரூப்'கள் ஏற்படுத்தி தகவல்கள், அறிவுறுத்தல், கல்வி செய்தியை பரிமாற்றம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் சில நாட்களாகவே ஏர்செல் அலைபேசி சேவையில் பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில், "நேற்று முதல் (மார்ச் 1) ஏர்செல் அலைபேசி செயல்படாது," என அதன் தென் மாநில தலைவர் சங்கரநாராயணன் அறிவித்தார். இந்நிலையில் சென்னை, மதுரை உட்பட பல இடங்களில் அலைபேசி சேவை செயலிழந்தது. இதனால் அதிகாரிகளால் தேர்வு மையப் பணிகளில் ஈடுபட்டிருந்த தலைமையாசியர்கள், அலுவலர்களை எளிதில் தொடர்புகொள்ள முடியவில்லை.
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:சேவை பாதிப்பால் தேர்வு துவங்கிய முதல் நாளில், பெரும் சிரமம் ஏற்பட்டது. மையங்களுக்கு வினாத்தாள் அனுப்பிய பின் அது சேர்ந்ததா, இல்லையா, தேர்வு துவங்கியதா, ஆப்சென்ட் மாணவர் விவரம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.பறக்கும் படை மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர்கள் பலரின் அலைபேசி 'நாட் ரீச்சபிள்...' ஆகியது. சிலரிடம் மட்டும் அவர்களின் மற்றொரு அலைபேசிஎண்ணை பெற்று தகவல்கள் பெறப்பட்டது. தேர்வுக்கு முன்பே இதுகுறித்து எச்சரிக்கப்பட்டது.
இருப்பினும்,சில இடங்களில் நெட்வொர்க் கிடைத்து இணைப்பு இருந்ததால், அதுகுறித்து கண்டுகொள்ளவில்லை. ஆனால் முதல் நாளில் இந்த சிரமம் ஏற்பட்ட பின் தேர்வு பணியில் ஈடுபடும் முக்கிய அதிகாரிகள், மைய முதன்மை கண்காணிப்பாளர்களின் மற்றொரு அலைபேசி எண்களை கேட்டு பெற்றுள்ளோம், என்றனர்.

TRB & TET - Annual Planner 2018 Published 

வியாழன், 1 மார்ச், 2018

+2 Exam - தமிழ் முதல்தாள் எளிமையாக இருந்தது: மாணவர்கள் மகிழ்ச்சி



பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 66,934 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இன்று தமிழ் முதல் தாள் கேள்விகள் எளிதாகவே இருந்தது என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்!!!

ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடக்கும் என்று ஆசிரியர் 
தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 57 தொடக்கக்கல்வி உதவி அலுவலர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. 1,883 உதவி பேராசிரியார் பணியிடங்களுக்கு ஜூன் 2வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறவுள்ளது.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களுக்கு மீண்டும் அரசுப்பள்ளிகளில் DEPUTATION?

TRB & TET - Annual Planner 2018 Published 

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான 5 நாட்கள் தலைமைப் பண்பு பயிற்சி - 5.3.18 to 9.3.18

ஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்!!!

ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடக்கும் என்று ஆசிரியர் 
தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 57 தொடக்கக்கல்வி உதவி அலுவலர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. 1,883 உதவி பேராசிரியார் பணியிடங்களுக்கு ஜூன் 2வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறவுள்ளது.