>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 29 நவம்பர், 2017

CPS ACCOUNT SLIP – PUBLISHED ONLINE

JUST TYPE YOUR CPS NUMBER AND DATE OF BIRTH

( Date of Birth must have 10 Characters in the format dd/mm/yyyy eg. 18/06/1953. )

மாணவிகளின் தற்கொலை எண்ணத்தை போக்க புதிய முயற்சி

வேலூர் மாவட்டம் பணப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்த 4 மாணவிகள் சமீபத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்கிவிட்டது.
ஆனால் மாணவ–மாணவிகள் தற்கொலைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை கண்டாக வேண்டும் என்ற முழு உத்வேகத்தில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான திட்டங்களை வகுப்பதில் இந்த ஆணையத்தின் தலைவர் எம்.பி.நிர்மலா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:–
பள்ளி, கல்லூரி மாணவப் பருவத்தில் ஏதோ ஒரு வகையில் அவமானம் அடைந்தாலும் அதைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் மாணவர்களுக்கு இருப்பதில்லை. பெற்றோர் திட்டுவதைக்கூட அவமானமாகக் கருதி பிள்ளைகள் தற்கொலை செய்வதுண்டு. மற்றவர்கள் முன்னால் கண்டிக்கப்படுவதைத்தான் பெரும்பாலான குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.
தவறு செய்யும் குழந்தையை பெற்றோரோ அல்லது ஆசிரியர்களோ, தனியாக அழைத்து கண்டித்தால் அவர்களுக்கு அவமான உணர்ச்சி, தற்கொலை செய்யும் அளவுக்கு எழாது. மேலும் அவர்களை கண்டிக்கும் வார்த்தைகளிலும் ஆசிரியர், பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். மாணவ, மாணவிகள் செய்த தவறுக்கு ஏற்ற வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தி கண்டித்துவிட்டு, இறுதியில் அவர்களை சமாதானம் செய்து சிரித்து அனுப்பவேண்டும்.
நல்ல படிப்பும், அதிக மதிப்பெண்ணும் மட்டுமே குழந்தைகளின் எதிர்காலம் இல்லை. நன்றாகப் படித்தால் மட்டும்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதெல்லாம் நிச்சயம் இல்லை. படிக்காத எத்தனையோ பேர் படித்தவர்களைவிட முன்னேறிச் சென்றுள்ளனர். படிக்காமலேயே உயர்ந்த இடத்துக்கு சென்றவர்களுக்கான உதாரணங்களும் போதும் போதும் என்ற அளவுக்கு உள்ளன.
ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு தனித்தன்மை இருக்கும். அதைக் கண்டறிந்து அந்த வழியில் அவர்களை நடத்தினாலே போதும். பள்ளிக்கூட தேர்வில் தோற்றுவிட்டால் உலகத்தில் வாழவே முடியாது என்பதெல்லாம் இல்லை. எனவே தோல்வி அடையும் குழந்தைகளை ஆசிரியர் மற்றும் பெற்றோரே தேற்றுவதுதான் முறை.
இவ்வாறு பள்ளி மாணவ–மாணவிகளை கையாளும் விதம் பற்றி சில புதிய பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அளிக்க பள்ளிக் கல்வித் துறையிடம் பேசி வருகிறோம். குழந்தைகளுக்கு புரியும்படி படிப்பை சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர்களை இலவச கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது.
பொதுவாக, குழந்தைகள் ஏதாவது தவறு செய்துவிட்டால், அதைக் கண்டித்து பெற்றோரிடம் சொல்வேன் என்று ஆசிரியர்கள் கூறுவது வழக்கம். இது அந்த மாணவ–மாணவிகளிடம் மிகுந்த பயத்தையும், மனபாரத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. பெற்றோரிடமும் சொல்லி நிவாரணம் தேடும் மனநிலை அந்தக் குழந்தைகளுக்கு அப்போது இருக்காது.
எனவே இதற்கு நிவாரணம் பெறுவதற்காக ‘1098’ என்ற இலவச தொலைபேசி எண்ணை நாங்கள் அறிவித்து இருக்கிறோம். இந்த எண்ணை பயன்படுத்தி மாணவ–மாணவிகள் தீர்வு பெறலாம். பெற்றோரோ அல்லது ஆசிரியரோ கண்டித்து அவமானப்படுத்திவிட்டால், தற்கொலையை நாடாமல் முதலில் இந்த எண்ணுக்கு அழைக்க வேண்டும். அதற்கு பதிலளிக்க 24 மணிநேரமும் ஆட்கள் இருப்பார்கள்.
படிப்பு, நட்பு என்று எந்த விதமான பிரச்சினையாக இருந்தாலும் சரி, எங்களிடம் சம்பந்தப்பட்ட குழந்தைகள் நேரடியாகச் சொல்லிவிட்டால், அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்து, அவமான உணர்ச்சியை நீக்குவதுடன், தேவையான பாதுகாப்பும் அளிப்போம்.
எனவே நல்ல தீர்வு எங்களிடம் இருக்கும்போது, தற்கொலையை எந்த காரணத்தைக் கொண்டும் குழந்தைகள் நாடிவிடக் கூடாது. தற்கொலை என்பது தீர்வே அல்ல. அது தங்கள் குடும்பத்துக்கு காலங்காலமாக அவமானத்தை ஏற்படுத்தும் செயல் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிகளில் புகார் பெட்டி : ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்
, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான புகார் பெட்டி இல்லாவிட்டால், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
50 லட்சம் : தமிழகத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பல பள்ளிகளில், ஆசிரியர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை; பாடம் நடத்துவதில்லை; கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை; ஆசிரியர் - மாணவர் மோதல் என, பல புகார்கள் உள்ளன.இவை குறித்து, பெற்றோர் - ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவான, எஸ்.எம்.சி., ஆகியவை, ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், எந்த பள்ளியிலும், ஆய்வுகள் நடத்தி, தீர்வு காண்பதில்லை.
உத்தரவு : அதனால் ஆசிரியர்களுக்கு, மாணவர்களால் பிரச்னை ஏற்பட்டாலும், மாணவர்களுக்கு, ஆசிரியர்களால் பிரச்னை ஏற்பட்டாலும், தீர்வு காண்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பயன்படுத்தும் வகையில், புகார் பெட்டி வைக்க வேண்டும் என்ற விதியை, தலைமை ஆசிரியர்கள் பின்பற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நடவடிக்கை : புகார் பெட்டிகளை உடனடியாக அமைத்து, அதில் வரும் புகார்களை, எந்தவித பாரபட்சமும் இன்றி விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். பின், அது தொடர்பாக, உயர் அதிகாரிகளுக்கு, அறிக்கை அளிக்க வேண்டும் என, பள்ளிகளுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்

அரசு ஊழியர்கள் விபரம் : புதுச்சேரி கவர்னர் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள, அரசு ஊழியர்
பற்றிய விபரங்களை முழுமையாக கம்ப்யூட்டரில் பதிவு செய்ய, கவர்னர், கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான, பி.டி.ஆர்.சி.,யில் பணியாற்றும், 37 டிரைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகளுக்கு சர்வீஸ் 'பிளேஸ்மென்ட்' அடிப்படையில், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, கேள்வி எழுப்பியுள்ள கவர்னர் கிரண்பேடி, அரசு ஊழியர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என, புதிய தலைமை செயலர் அஸ்வனி குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் பற்றிய விபரங்களை, கணினியில் பதிவு செய்ய வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, சமூக வலைதளத்தில் கிரண்பேடி கூறியுள்ளதாவது:
அரசு ஊழியர்களின் வேலைகள் பற்றிய பதிவுகள், கணினி மயமாக்குவதன் மூலம், பதவி உயர்வு மற்றும் பிற தொடர்புடைய பிரச்னைகளும் அதில் இருக்கும். எதற்காக தேர்வு செய்யப்பட்டனர், எங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்ற விபரமும் இருக்க வேண்டும்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், வெளிப்படைத் தன்மை இருக்கும். இதை, அனைத்து துறை செயலர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். தலைமை செயலர் மற்றும் செயலர்களுடன் கூட்டத்தில் இதுவும் விவாதிக்கப்பட்டுள்ளது. இப்பணியை வேகப்படுத்தி, அடுத்த மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 28 நவம்பர், 2017

வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்தவர்கள் தமிழகத்துக்கு மீண்டும் வருபவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கட்டாயம் இல்லை

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு இடம் பெயர்ந்து வந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக படிக்க வேண்டியதில்லை என்று அரசுஉத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கற்பது கட்டாயம் என கடந்த 2006ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் கட்டாயமாகிறது என்றும், முதற்கட்டமாக 2006-2007ம் கல்வி ஆண்டில் முதல் வகுப்பில் இது நடைமுறைக்கு வரும், 2007-2008ம் ஆண்டில் இரண்டாம் வகுப்புக்கும் அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் தமிழ் கட்டாயமாக்கப்படும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் பகுதி ஒன்றில் தமிழ் கட்டாய பாடமாக படிக்க வேண்டும். பகுதி இரண்டில் ஆங்கிலம், பகுதி 3ல் மற்ற பாடங்கள் பகுதி நான்கில் விருப்ப மொழி படிக்கலாம். இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழை கட்டாய பாடமாக எழுத முடியாது என்றும் அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணி காரணமாக வேறு மாநிங்களுக்கு சென்று பின்னர் திரும்ப தமிழகம் வரும்ேபாது அவர்களின் குழந்தைகள் தமிழை கட்டாயமாக படிப்பதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று நீதி மன்றம் தெரிவித்தது.
இதை அடிப்படையாக கொண்டு பள்ளிக் கல்வி இயக்குநரும் அரசுக்கு கடிதம் எழுதினார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்றுக் கொண்ட அரசு, அரசு மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிமித்தமாக வெளி மாநிலங்களுக்கு சென்று பின்னர் தமிழகத்துக்கு திரும்ப இடம் பெயர்ந்து வந்தால் அவர்களின் குழந்தைகள், தமிழக பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பில் சேரும் போது தமிழை கட்டாய பாடமாக படிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

"கதை வண்டி" -சிறுவர்களுக்காக, சிறுவர்களே கதை எழுதும் பயணம்

தமிழில் சிறுவர்களுக்கான கதைகளை அவர்களே எழுதும்போது அவை இன்னும் உயிர்ப்போடு இருக்கும். அதற்கான ஒரு முயற்சியே இந்த ‘கதை வண்டி’ பயணம்.
தமிழில் கதைகள் எழுத ஆர்வமாக இருக்கும் 20 சிறுவர்களுடன் நேரிலும், அஞ்சல் மற்றும் தொலைபேசி வழியாகவும் ஒரு வருடம் பயணிக்க இருக்கிறோம். பயணத்தின் முடிவின் ஒவ்வொருவரின் கதைகளையும் தனித்தனிப் புத்தகமாக்கி, சிறப்பான விழாவில் வெளியிடவும் இருக்கிறோம்.
செய்யவேண்டியது:
உங்கள் வீட்டில்/பள்ளியில் கதை எழுத ஆர்வமாக இருக்கும் பிள்ளைகள் இருப்பின், அவர்களே சொந்தமாக எழுதிய கதையை அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும். தங்களைப் பற்றிய சுய அறிமுகக் குறிப்பை (பெயர், பெற்றோர், படிக்கும் வகுப்பு/பள்ளி, தொடர்பு எண், முகவரி உள்ளிட்டவை) அத்துடன் இணைக்கவும்.
வயது : 9 வயது முதல் 14 வயது வரை
தேர்ந்து எடுக்கப்படும் 20 குழந்தைகளுடன் ஒரு வருடம் நாங்கள் பயணிப்போம். அதில் அவர்களுக்குள் இருக்கும் கதை எழுதும் ஆற்றலை வெளிக்கொணர உதவுவோம்.
கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : டிசம்பர் 28- 2017
மின்னஞ்சல் - kathaivandi@gmail.com
அஞ்சல் முகவரி -
விழியன், 2A, சாந்தமாள் தெரு, சிவன் நகர், துண்டலம், சென்னை - 600077
தொடர்பு எண்: 9094009092
ஒருங்கிணைப்பு:
விழியன் & வித்யா
விஷ்ணுபுரம் சரவணன்
வெற்றிச்செழியன்

INCOME TAX FORM 2017 - 2018 (NEW)

IT FORM - வருமான வரி கணக்கிடும் படிவம்...




🌟 வருமான வரி கணக்கிடும் படிவம் (மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை உள்ள காலம்)


⚡ நிதி ஆண்டு 2017-2018,

⚡ மதிப்பீடு ஆண்டு 2018-2019.



🌟 வருமான வரி கணக்கீடு (60 வயதிற்குள் உள்ளவர்களுக்கான வருமான வரி கணக்கீடு)


⚡ ரூ.250000 வரை - வரி இல்லை,

⚡ ரூ.250000 க்கு மேல் ரூ.500000 வரை இருந்தால் - நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.250000 கழித்து வரும் வருமானத்தில் 5% வரி,

⚡ ரூ.500000 க்கு மேல் ரூ.1000000 வரை இருந்தால் - நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.500000 கழித்து வரும் வருமானத்தில் 20% வரி + ரூ.12500,

⚡ ரூ.1000000 கற்கும் மேல் இருந்தால் - நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.1000000 கழித்து வரும் வருமானத்தில் 30% வரி + ரூ.112500.


🌟 படிவம் 12BB - ஊழியரின் வருமான வரி விலக்கு பெறும் விவரங்கள் மற்றும் சான்று பிரிவு 192 வருமான வரிச் சட்டம்.


🌟 நிதி ஆண்டு 2017-2018 பெறப்பட்ட வருமான விவரங்கள் படிவம்.


🌟 பிரிவு 80C முதல் 80U வரையுள்ள கழிவுகளை பற்றிய விரிவான தகவல்கள்.


🌟 மேலும் வருமான வரி கணக்கீடு சம்பந்தமான தகவல்களுடன் வருமான வரி கணக்கீடு படிவங்கள் jpg மற்றும் PDF வடிவிலான கோப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.
Click Here

திண்டுக்கல் CEO - ஆசிரியர்கள் CELL PHONE பயன்படுத்துகிறார்களா என தலைமை ஆசிரியர்கள் அடிக்கடி வகுப்பறையில் பார்வையிட வேண்டும் - செயல்முறைகள்

DEEO - பணிப்பதிவேடுகாணாமல் போனால் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் (AEEO'S) மேல் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாணவர் சேர்க்கை அதிகப்படுத்திய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் மாதிரி சான்றிதழ்


மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்? - ஆனந்த விகடன்

வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ள பனப்பாக்கம் அரசுப் பள்ளி மாணவிகள் நான்கு பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தமிழக அளவில் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
அங்கும், இங்குமாகப் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது பள்ளி ஆசிரியர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்களின் இதுபோன்ற செயல்பாட்டுக்கு என்ன காரணம் என்று கல்வியாளர்களிடம் பேசினோம். 
மனித உரிமை ஆர்வலரும், கல்லூரிப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவருமான கல்யாணி "பள்ளி மாணவர் தற்கொலை, மாணவிகள் தற்கொலை எனத் தொடர்ந்து செய்தியாக வருவது பரிதாபமாக இருக்கிறது. ஆசிரியர்கள், பள்ளி மாணவிகளிடம் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வரச் சொன்னதற்காக தற்கொலை செய்துகொண்டார்கள் என்று கேட்கிறபோது மாணவர்களின் மனவலிமை குறைந்து வருவதைத்தான் காட்டுகிறது. 
மாணவர்கள், படிப்பு... படிப்பு என்று மதிப்பெண்ணை மட்டுமே வாழ்க்கை என்று நோக்கி நகரும்போது மனவலிமையை இழக்கிறார்கள். பள்ளிக்கூடங்களும் மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டாமல் மதிப்பெண் பெறுவதை மட்டுமே வாழ்க்கை என்று வழிகாட்டுகிறார்கள். இதனால் பள்ளிகளில் கல்விசாரா திறனை மேம்படுத்துவதற்கான (ExtraCurricular activities) வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன. இதற்கான வாய்ப்புகள் இருந்திருந்தால் கல்வி ஆர்வம் குறைந்தாலும் இதர திறமைகளை வளர்ப்பதில் அதிகளவில் கவனம் செலுத்தி மாணவர்கள் முன்னேறுவார்கள், தற்கொலை போன்ற எண்ணங்கள் மனதில் வளர இடங்கொடுக்க மாட்டார்கள். 
பள்ளியில் ஓவிய ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருப்பதில்லை. கல்வி என்பதே ஆளுமையை வளர்க்க வேண்டும் என்பதே. ஒவ்வொரு மாணவர்களிடமும் தனி ஆளுமைத் திறன்கள் இருக்கின்றன. அதனை ஆசிரியர்கள் அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தி மேம்படுத்திட வேண்டும். ஆனால், ஆசிரியர்களுக்குத் தேர்ச்சி என்பதை மட்டுமே வைத்துச் செயல்படச் சொல்வதால் இதர விஷயங்களில் கவனம் செலுத்த முடிவதில்லை. 
பல பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பைப் பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலும், பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தை பதினொன்றாம் வகுப்பிலும் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களை மதிப்பெண்ணை நோக்கித் தள்ளும்போது கல்வியில் ஈடுபாடு இல்லாமல் போகிறது. தனியார் பள்ளிகளில்தான் இவ்வளவு சதவிகிதம்பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள், 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை இவ்வளவு பேர் என விளம்பரம் செய்துகொண்டிருந்தார்கள். தற்போது அரசுப் பள்ளிகளிலும் இந்த விளம்பர யுக்தி பரவியிருக்கிறது. 
மாணவர்களிடம் மென்மையாக நடந்துகொள்ளவேண்டும். தவறு செய்தாலும் அனைவரின் முன்னிலையில் திட்டாமலும் அவமானப்படுத்தாமலும் தனியே அழைத்துப் பேசவேண்டும். மாணவர்களை ஊக்குவிக்கவேண்டும். வகுப்பறையில் எல்லா மாணவர்களுக்கும் சம வாய்ப்பை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் வந்தால் மாணவர்கள் பயப்படவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.
பள்ளியிலும், வகுப்பிலும் கட்டுப்பாடு அதிகமாகும்போதே மாணவர்கள் திசை திரும்புகின்றனர். வகுப்பில் இயல்பாகவும், ஜாலியாகவும், மகிழ்ச்சியாகவும் பாடத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும். இதன்மூலம் தடம்மாறும் பிள்ளைகள் மனம்மாறி கற்றலில் கவனத்தை செலுத்த ஆரம்பிப்பார்கள். 
கல்வி வாழ்க்கையில் நல்ல தைரியம் மிக்கவர்களை உருவாக்க வேண்டுமே தவிர, மதிப்பெண் மதிப்பெண் எனத் தைரியமில்லாத பிள்ளைகளை உருவாக்கக் கூடாது. இப்போது அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியிருப்பதாலும் மாணவர்களின் கற்றல் திறனும், படைப்பாற்றல் திறனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனைப் பெற்றோர்கள் கருத்தில்கொண்டு பள்ளியில் சேர்க்க வேண்டும்" என்று கோரிக்கை வைக்கிறார் பேராசிரியர் கல்யாணி. 
தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அமைப்பின் ஆலோசகரும், கல்வியாளருமான சுவாமிநாதன் "தற்போது எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று இருக்கிறது. ஒன்பதாம் வகுப்பில் நுழைந்துவிட்டால் போதும். எளிதான தேர்வு முறையினால் பத்தாம் வகுப்பிலும் எளிதில் தேர்ச்சி பெற்றுவிடலாம். மாணவர்கள் பதினொன்றாம் வகுப்புக்கு வரும்போது மட்டுமே தடுமாற்றத்தை சந்திக்கிறார்கள். கல்விக்கும் இவர்களுக்கும் ஏதோ முரண்பாடு இருப்பதுபோல் உணர்கிறார்கள். பதினொன்றாம் வகுப்பில் சேரும்முன்பே மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும். 
மாணவர்கள் மேல்நிலை வகுப்பில் குரூப்-1 மற்றும் குரூப்-2 எடுத்துத் தடுமாறும்போது தங்களது பிரிவை மாற்றிக்கொள்ளும்வசதியும் இல்லை. மேலும், பெற்றோர்கள் குரூப்-1 அல்லது குரூப்-2-வில்தான் தன்னுடைய பிள்ளை படிக்க வேண்டும் என்று நெருக்குதலைத் தருகிறார்கள். இதுவும் பிள்ளைகளுக்குக் கல்வியின் மீது கசப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.
கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளியில் அதிக தேர்ச்சி விகிதத்தைத் தரும்போது ஏன் அரசுப் பள்ளியில் தர முடிவதில்லை என்று கேட்டு, ஆசிரியர்களுக்குக் கூடுதல் அழுத்தத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்துகின்றனர். இதனால் ஆசிரியர்கள், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தைக் கூட்டவேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்படுவதால் கண்டிப்புடன் நடந்துகொள்கின்றனர். 
தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் செயல்பாடுகளிலும், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் செயல்பாடுகளிலும் வேறுபாடு இருப்பதை உணரலாம். பல தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால், அரசுப் பள்ளியில் இதுபோன்ற நடைமுறைகள் எதுவும் இல்லை.
அரசுப் பள்ளிகளிலும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகமும் செயல்படாமல் இருக்கின்றன. இனியாவது, இதனைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும். கல்வி அதிகாரிகள் இதனைக் கண்காணிக்க வேண்டும். கல்வி அதிகாரிகள் அடிக்கடி பள்ளிகளுக்கு  விசிட் செய்ய வேண்டும்.
பள்ளிகளில் நீண்ட காலமாக நன்னெறி வகுப்புகள், கை வேலைப்பாடு, ஓவியப்பயிற்சி, உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. இதற்கான ஆசிரியர்கள் இடங்கள் காலியிடங்களாகவே இருக்கின்றன. இதனையும் கவனத்தில்கொள்ள வேண்டும். உயர்கல்வி அதிகாரிகள் தலைமையாசிரியர்களை மட்டும் வைத்து மீட்டிங் நடத்துகிறார்கள். ஆனால், ஆசிரியர்களையும் அழைத்து கூட்டங்களை நடத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.
மாணவர்களின் நன்னடத்தை தவறுதலுக்கு என்னமாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்பதுகுறித்து வழிகாட்டுதல் நெறிமுறையை உருவாக்கிடவேண்டும். கல்வித்துறை ரிசல்ட்டை முதன்மை கொள்ளாமல் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தினால் இதுபோன்ற பிரச்னை வருவதற்கு வாய்ப்பில்லை.
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், சைக்கிள், பாடப்புத்தகங்கள், உடை என நிறையவே செலவு செய்கிறது. இந்தச் சூழ்நிலையில் மாணவர்களுக்கும் பொறுப்பு உணர்வு அதிகமாக இருக்க வேண்டும் என்பதையும் உணர வேண்டும்" என்கிறார். 
நான்கு மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட வேலூர் மாவட்டத்தில் மேல்நிலை பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியரிடம் பேசியபோது "மேல்நிலை வகுப்பில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். வகுப்பில் அதிக மாணவர்கள் உள்ளதால் முழு கவனத்தையும் செலுத்த முடிவதில்லை. தற்போது மாணவர்களுக்கு பயந்துதான் வகுப்பு எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. ஏதேனும் ஒரு பகுதியில் நிகழும் சம்பவம் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் குற்றம்சாட்டுவது தவறானது" என்கிறார்.
பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க களமிறங்கி இருக்கும் தமிழகப் பள்ளி கல்வித்துறை மாணவர்களின் பிரச்னை குறித்தும் கவனம் செலுத்திட வேண்டும். 
நன்றி- ஆனந்த விகடன்

திங்கள், 27 நவம்பர், 2017

அரசு பள்ளிகளில் சமூக விரோதிகளை விரட்ட ஒத்துழைப்பு அவசியம்!பெற்றோருக்கு கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்...

அரசுப்பள்ளிகளில் அத்துமீறும் சமூக விரோதிகளை விரட்ட, பெற்றோரின் ஒத்துழைப்பும் அவசியம் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்தில் மொத்தமாக, 29 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
நான்கு பள்ளிகளைத் தவிர மீதமுள்ள அனைத்து பள்ளிகளும் கிராமப்புற பள்ளிகள்தான்.
தேவனுார்புதுார், திருமூர்த்திநகர், ஜல்லிபட்டி உள்ளிட்ட பகுதி பள்ளிகளின் சுற்றுச்சுவர் சிதிலமடைந்து உள்ளது. அரசின் சார்பில், பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கென, அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் இடைநிலை கல்வி இயக்ககம் சார்பில் கல்வியாண்டு தோறும், நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக, அதற்கென தனியான நிதி ஒதுக்கீடு இல்லை.அத்துமீறல் தொடர்கிறதுஇதனால், பல அரசுப்பள்ளிகளும், மாலை நேரத்தில் சமூக விரோதிகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. பள்ளிகளில்அத்துமீறி நுழைவதும், மது அருந்துவதற்கு, வகுப்பறைகளை பயன்படுத்தும் அவலங்கள் தொடர்ந்து வருகின்றன.இதனால், பள்ளிக்குழந்தைகள் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை அறிந்தும், அரசு இதுவரை எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது பெற்றோரின் அதிருப்தியாக உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாததால், வெளியாட்கள் பள்ளிக்குள் எளிதாக நுழைந்து பொருட்களை சேதப்படுத்துகின்றனர்.கிராமப்புற பள்ளிகளில்தான் இப்பிரச்னை தொடர்ந்து நடக்கிறது. இதற்கு, தீர்வு காண்பதால் மட்டுமே, குழந்தைகள் நிம்மதியாக படிக்க முடியும் என பள்ளி மேலாண்மை வளர்ச்சி திட்டக் குழு கூட்டத்தில் பெற்றோர் ஆவேசமடைந்தனர்.
அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககத்தின் மூலம், கல்வியாண்டு தோறும், இக்கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், உதவி தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவில் உள்ள பெற்றோர்கள் என மொத்தம் ஒரு பள்ளியை சேர்ந்து ஐந்துபேர் பங்கேற்கின்றனர்.பள்ளிகளில், உள்ள பிரச்னைகளை கேட்டறிந்து, அதற்கான நடவடிக்கைகள் குறித்தும், பள்ளியின் வளர்ச்சிக்கான தேவைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியங்களில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த குழுவினருக்கு, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி, உதவி தலைமையாசிரியர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கக திட்ட அலுவலர் கணேஷ்வரி, பெற்றோர் மற்றும் தலைமையாசிரியர்களிடம் கலந்துரையாடினார். கூட்டத்தில் பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லாததால். குழந்தைகளின் பாதுகாப்புக்கு உறுதி இல்லை, என பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
சுற்றுச்சுவர் அமைக்கவில்லை
தேவனுார்புதுார் மேல்நிலைப்பள்ளி மாணவியர் மட்டுமே படிக்கும் பள்ளி. இப்பள்ளியிலும், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு, சுற்றுச்சுவர் அமைப்பதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.இதனால் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினாலும், அச்சத்துடனேயே இருக்க வேண்டியுள்ளது. அரசுப்பள்ளிகளின் சுற்றுச்சுவர் இல்லாதது முக்கிய பிரச்னையாக இருந்தும் அரசு அலட்சியமாக இருப்பதுதான் வேதனையளிக்கிறது என கூட்டத்தில் பெற்றோர் தெரிவித்தனர்.
அரசிடம் புகார் தெரிவிப்பு
திட்ட அலுவலர் கணேஷ்வரி கூறியதாவது: சுற்றுச்சுவர் அமைப்பது குறித்து, அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககம் மூலம் தொடர்ந்து பரிந்துரை செய்து வருகிறோம். இதனால், பள்ளிகளில் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் அரசிடம் புகார் தெரிவிக்கப்படுகிறது. அரசுப்பள்ளிகளை பாதுகாக்க, அரசை மட்டுமே நம்பி இல்லாமல், பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும்.
தங்கள் குழந்தைகள் படிக்கும் இடத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் பொறுப்பு பெற்றோருக்கும் உள்ளது. சமூக விரோதிகளாக வருபவர்கள், அந்தந்த ஊரிலேயே இருப்பவர்கள்தான். அதனால், பள்ளிகளில் சமூக விரோத செயல்கள் நடக்காமல், பெற்றோரும் கண்காணிக்க வேண்டும். பள்ளிகளுக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் தேவை, அதற்கு எவ்வாறு நடவடிக்கை எடுக்கலாம் என முயற்சி செய்யலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

ஜே.இ.இ., பிரதான தேர்வு டிச.,1 முதல் பதிவு துவக்கம்

தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு
உள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற, உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிக்க, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வுக்கு பின், உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., என்ற, பிரதான நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டு
உள்ளது. இதை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., - பி.பிளான் ஆகிய படிப்புகளில் சேர, இரண்டு தாள்களுக்கு, ஏப்., 8ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது.
கணினி வழி தேர்வு, ஏப்., 15, 16ல் நடக்க உள்ளது. இரண்டில், ஏதாவது ஒரு வகை தேர்வில் பங்கேற்க வேண்டும். இதற்கான ஆன்-லைன் பதிவு, டிச., 1ல் துவங்கி, ஜன., 1ல் முடிகிறது. கூடுதல் விபரங்களை, https://jeemain.nic.in என்ற
இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அண்ணா பல்கலை தேர்வு தேதி மாற்றம்

மிலாது நபி விடுமுறை நாள் மாற்றத்தால், அண்ணா பல்கலையில், தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.முகமது நபியின் பிறந்த நாளான, மிலாதுன் நபி நாள், டிச., 1க்கு பதில், டிச., 2க்கு மாற்றப்பட்டுள்ளது.
எனவே, டிச., 2ல் நடக்கவிருந்த தேர்வுகள், டிச., 5ல் நடக்கும் என, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, அறிவித்து உள்ளார்.

English Spelling Rules ! (முக்கிய ஆங்கில உச்சரிப்பு விதிகள் )


NCERT பாடத்திட்டத்தில் திருவள்ளுவர் வரலாறு சேர்ப்பு...


''தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத் திட்டத்தில், திருவள்ளுவர்
வாழ்க்கை வரலாறு இடம் பெறவுள்ளது,'' என, பா.ஜ., முன்னாள், எம்.பி.,யும், திருவள்ளுவர் இளம் மாணவர் பேரவை தலைவருமான தருண் விஜய் தெரிவித்தார்.
மதுரையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில், 23வது தேசிய சகோதாயா மாநாடு நேற்று துவங்கியது.நிகழ்ச்சியை துவக்கி வைத்து தருண் விஜய் பேசியதாவது:திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை, மீனாட்சி அம்மன் கோவிலில் தான் முதன் முதலில் இறைவனிடம் சமர்ப்பித்தார் என்று கூறப்படுகிறது.
நம் வரலாறு, கலாசாரத்துடன் திருக்குறளின் ஆழ்ந்த கருத்துக்களையும் உலக அளவில் நாம் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு ஆங்கிலேயர் வகுத்து தந்த கல்வி முறையில் இருந்து நாம் வெளியேற வேண்டும். நம் நாகரிகம், கலாசாரம், பண்பாடு சார்ந்த பாடத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்களை குறிப்பிடாமல், இந்திய வரலாறு முழுமை பெறாது. சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களில், வட மாநிலம் தொடர்பான வரலாறு அதிகம் இடம் பெற்றுள்ளது.குறிப்பாக ராஜராஜசோழன் ஆட்சி, கம்போடியா, வியட்நாம் வரை விரிந்து கிடந்தது என்கின்றனர். இதுகுறித்த விழிப்புணர்வு வேண்டும்.ஜெர்மன், பிரெஞ்ச் மொழிகளை நாம் இங்கு விருப்ப மொழியாக படிக்கும்போது, வட மாநிலங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் விருப்ப பாடமாக இடம் பெறச்செய்ய வேண்டும்.
வள்ளுவரின் திருக்குறள் உலகத்திற்கே பொதுவானது. அதில் எந்த சூழலுக்கும் ஏற்ற கருத்துக்கள் உள்ளன. திருக்குறள் மற்றும் வள்ளு வரின் வரலாறு குறித்த, என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டத்தில் இடம்பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினேன். அதற்கு அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் சேர்க்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

National Symbols of India.....

வெள்ளை பலகையை interactive smart kit மூலம் ஸ்மார்டு போர்டாக மாற்றி பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ராஜீவ் குமார்





காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், குண்ணவாக்கம் நடுநிலைப்ப பள்ளியின் ஆசிரியர் ராஜீவ் குமார் அவர்கள், அவரின் பள்ளி நண்பர் திரு.ம.சீனிவாசன் M.E (U.S.A)அவர்களின் நிதி உதவியாலும், பள்ளி ஆசிரியர்கள் அனைவரின் ஆலோசனைகள் மூலமாக *தொடுதிரை வசதி கொண்ட INTERACTIVE SMART BOARD* ஒன்றை அமைத்துள்ளார்.

சாதாரண 6 x 4 என்ற அளவு கொண்ட வெள்ளை பலகையை interactive smart kit மூலம் ஸ்மார்டு போர்டாக மாற்றி பாடம் கற்பிக்கின்றனர்.
இதன் மூலம் நாம் மொபைலில் பயன்படுத்தும் அனைத்து educational app மூலம் விளையாட்டு முறையில் கற்பிப்பதால் மாணவர்கள் ஆர்வமாக, கவனச் சிதறல் அடையாமல் கற்கின்றனர்.
இதில் உள்ள மென்பொருள் மூலம் கணித வடிவியல் கற்பித்தல், அறிவியலில் பட விளக்கங்கள் சார்ந்தவை மிக எளிதாக மாணவர்களுக்கு புரியும் வண்ணம் ஸ்மார்டு போர்டை பயன்படுத்தி கற்கின்றனர்.
ஸ்மார்டு போர்டில் மாணவர்கள் பல வண்ணங்களில் எழுதி ஆர்வமாக கற்கின்றனர்.

ஆசிரியரை தொடர்புகொள்ள 9751521976

Videos





SABL பின்பற்றுவதில் இடர்பாடுகள் உள்ள ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு அவ்வாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்... RTI தகவல்...