>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 28 மே, 2017

சென்னை பல்கலை தேர்வு தேதி அறிவிப்பு.....

சென்னை பல்கலையின் தொலை நிலை கல்வியில், பட்டப் படிப்புகளுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், பட்டப் படிப்புகளுக்கு, ஜூன், 3 முதல், தேர்வுகள் துவங்க உள்ளன. வாரந்தோறும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தேர்வு நடக்கும். தேர்வு அட்டவணை, இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.டிப்ளமா, சான்றிதழ் படிப்புக்கு,ஜூன், 13ல் தேர்வு துவங்கும். தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'களை, மே, 27 இரவு, 8:00 மணி முதல், இணையதளத்தில்பதிவிறக்கம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பல் மருத்துவ கட்டணம் நிர்ணயம்

நிகர்நிலை பல்கலையில், முதுநிலை பல் மருத்துவப் படிப்பு இடங்களுக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், எட்டு நிகர்நிலை பல்கலைகளில், முதுநிலை பல் மருத்துவப் படிப்பில், 100 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான கவுன்சிலிங், இன்று நடைபெறுகிறது. இதற்கான கல்விக் கட்டணத்தை, மருத்துவக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அதில், மூன்று லட்சம் முதல், அதிகபட்சம், 13 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை பல் மருத்துவப் படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங், நேற்று நடந்தது. அதில், அரசு கல்லுாரிகளில் உள்ள, எட்டு இடங்களும் நிரம்பின. சுயநிதிகல்லுாரிகளில் உள்ள, 110 இடங்களில், 105 இடங்கள் நிரம்பின.

அரசு உதவி கல்லூரிகளில் விதியை மீறி 'அட்மிஷன்'

அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், விதிகளை மீறி, சுயநிதி பாடப்பிரிவுகளுக்கு, முதலில் மாணவர்களை சேர்ப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன.

கலை, அறிவியல் கல்லுாரிகளில், மே முதல் வாரத்தில் விண்ணப்ப வினியோகம் துவங்கியது. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது முதல், 10 நாட்கள் வரை, விண்ணப்பம் வழங்க, அனைத்து கல்லுாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.

அதேபோல், மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டும் விதிகளையும், கல்லுாரி கல்வித் துறை இயக்குனர், மஞ்சுளா வெளியிட்டார். இதில், 'அரசு உதவி பெறும் தனியார் கல்லுாரிகள், முதலில், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் மட்டுமே, மாணவர்களை சேர்க்க வேண்டும். அதன்பின்னரே, சுயநிதி பாடப்பிரிவுகளில் சேர்க்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது.

ஆனால், பெரும்பாலான கல்லுாரிகள், மாலை நேர படிப்பு எனப்படும், சுயநிதி பாடப்பிரிவுகளையே முதலில் நிரப்புவதாக, புகார்கள் எழுந்துள்ளன. அரசின் உதவி பெறும் பாடப்பிரிவுகளில் இடங்கள் இருக்கும் போது, சுயநிதி பிரிவில் சேர்ப்பதால், அதிக கல்வி கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என, மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

முதல் வகுப்புக்கு டிஜிட்டல் கல்வி கேரள மாநில அரசு அசத்தல்.....

திருவனந்தபுரம்:கேரளாவில்,வரும் கல்வியாண்டிலிருந்து, முதல் வகுப்புக்கே, 'டிஜிட்டல்' வழி கல்வி முறையை அறிமுகப் படுத்தப் போவதாக, மாநில அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஐ.சி.டி., எனப்படும், தகவல் மற்றும் தொலைத் தொடர்பு என்ற தொழில்நுட்பம் மூலமாக, அரசு பள்ளிகளில், 8 - 10 வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு, டிஜிட்டல் வழிக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல், 1 - 7ம் வகுப்பு மாணவர்களுக்கும், டிஜிட்டல் வழி கல்வியை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக, கேரள மாநில கல்வி துறை தெரிவித்துள்ளது. இதற்காக, மாணவர்களுக்கான பிரத்யேக இணையதளம் மற்றும் பாடம் குறித்த தகவல்கள் அடங்கிய, 'டிவிடி'யையும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, கேரள மாநில கல்வி துறை அமைச்சர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு இன்று 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை:சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் நடந்தது. 10 ஆயிரத்து, 678 பள்ளிகளைச் சேர்ந்த, 4.60 லட்சம் மாணவியர் உட்பட, 11 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தேர்வில், விலங்கியல் வினாத்தாள் கடினமாக இருந்ததால், கருணை மதிப்பெண் வழங்க, சி.பி.எஸ்.இ., முடிவு செய்தது. ஆனால், கருணை மதிப்பெண் வழங்க, மத்திய மனிதவள அமைச்சகம் தடை விதித்தது. 

அதனால், கருணை மதிப்பெண் இன்றி, தேர்வு முடிவுகளை, 25ல் வெளியிட, சி.பி.எஸ்.இ., முடிவு செய்தது. ஆனால், 'கருணை மதிப்பெண் முறையை, திடீரென ரத்து செய்யக்கூடாது' என, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், தேர்வு முடிவு வெளியிடுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தலைமையில், வாரிய உறுப்பினர்கள் கூடி ஆலோசித்து, மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. 

இதை தொடர்ந்து, 'தேர்வு முடிவுகள், இன்று நண்பகல், 12:00 மணிக்கு முன் வெளியிடப்படும்' என, அதிகாரப்பூர்வமாக, சி.பி.எஸ்.இ., அறிவித்து உள்ளது. தேர்வு முடிவுகளை,
 www.results.nic.in, 
www.cbseresults.nic.in, 
www.cbse.nic.in 
என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்....

வங்கிகளில் கல்வி கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்  ......

இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற, வங்கி வாசலில் மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான பிரத்யேக இணையதளத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

பிரதமரின் கல்வித் திட்டத்தின் கீழ், www.vidyalakshmi.co.in என்ற இணையதளம், 2015 இறுதியில் துவங்கப்பட்டது. இதை, என்.எஸ்.டி.எல்., என்ற மத்திய அரசு நிறுவனம் நிர்வகித்து வருகிறது. 
அந்த இணையதளத்தில் பதிவு செய்தால், அனைத்து வித கல்விக் கடன் மற்றும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். 

இதன் மூலம், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட, 40 பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில் கடன் பெறலாம்.தங்கள் மனுவின் நிலை பற்றியும், மாணவர்கள், இணையதளத்தில் அறியலாம். கடனுக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால், அதையும் பார்க்கலாம். சரியாக ஒத்துழைக்காத, வங்கி அதிகாரிகள் மீது, புகாரும் தரலாம். 

இந்த வசதி பற்றி, பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியவில்லை. அதற்கு காரணம், சில வங்கிகள், வித்யாலட்சுமி இணையதளத்தை சரியாக பயன்படுத்துவதில்லை. இதுபற்றி, மத்திய நிதி அமைச்சகத்திற்கு, புகார்கள் சென்றன. அதை தொடர்ந்து, வங்கிகளுக்கு புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. 

அதில், 'அனைத்து கல்விக் கடன் மனுக்களை, இந்த இணையதளம் வழியாகவே பெற வேண்டும். 'இந்த வசதி பற்றி, கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், 2015 முதல், இதுவரை வழங்கிய கடன் பற்றி, இணையதளத்தில், வங்கிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது. 

12,000 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து வரப்போகும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் முடிவு!

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் 12,000 பேருக்கு சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யும் தீர்மானம் குறித்து விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஓவியம், உடற்கல்வி, கைத்தொழில் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பணிபுரிய தற்காலிக ஆசிரியப் பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் நிரப்பப் பட்டன. அந்த ஆசிரியர்களுக்கு முதலில் நிர்ணயிக்கப் பட்ட சம்பளத் தொகை ரூ.5000 அது பின்னர் 2007 ஆம் ஆண்டில் ரூ.7000 உயர்த்தப் பட்டது.
தற்போது இப்படி தற்காலிகமாக நியமிக்கப் பட்ட ஆசிரியர்களை நிரந்தரமாக்கி அவர்களுக்கும் நிரந்தர ஆசிரியர்களுக்குரிய வகையில் சம்பள உயர்வு, பணியிட மாற்றம், பணிச்சேவை ஊக்கத் தொகைகள் முதலியவற்றைப் பெற்றுத் தரும் வகையில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

தொடக்கப்ப பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்-ஆணை வெளியீடு.

அரசாணை 93-நாள்-12.05.2017-பள்ளிக்கல்வி 2014-15 ஆம் கல்வியாண்டில் SSA இயக்கத்தின் தொடக்கப்பள்ளிகளிலிருந்து நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 42நடுநிலைப் பள்ளிகளின் தொடக்கப்ப பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்-ஆணை வெளியிடப்படுகிறது.

அரசு பஸ்களில் பழைய பாஸ்களில் பள்ளி மாணவர்கள் செல்ல அனுமதி

அரசு பஸ்களில், பழைய பாஸ் பயன்படுத்தி, மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரலாம்' என்று, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, வழக்கம்போல், ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 'கொளுத்தும் வெயில் காரணமாக, ஜூன் 7ல் பள்ளிகள்திறக்கப்படும்' என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்துள்ளார். இந்நிலையில்,ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச பஸ் பாசை பயன்படுத்துவதற்கான காலக்கெடு முடிந்து விட்டது.
இந்நிலையில், இந்த கல்வியாண்டுக்கான பஸ் பாஸ், பள்ளிக்கூடம் திறந்த பின்தான் வழங்கப்படும்.வரும், 7ல் இருந்து பள்ளிக்கு செல்லவுள்ள மாணவர்கள், பழைய பாசில் செல்லலாமா என்பதை அறிவதில் ஆர்வமாக உள்ளனர்.இது குறித்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை, பழைய பாசில், வரும் ஜூலைமாதம் இறுதி வரை சென்று வரலாம்' என்றனர்.

பிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்தரவு.

ஓராண்டுக்கு மேல் பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யாவிட்டாலும், அதற்கான சான்றிதழ் பெற, நீதிமன்றம் செல்லாமல், கோட்டாட்சியர்களான, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வேலுார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த, ஆர்.டி.ஓ.,க்களுக்கு, பிறப்பு, இறப்பு பதிவு செய்வது தொடர்பான, சிறப்பு பயிற்சி முகாம், வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமீபத்தில் நடந்தது.
இது குறித்து, பிறப்பு, இறப்பு கூடுதல் பதிவாளரும், பொது சுகாதாரத் துறை இணை இயக்குனருமான, ஈஸ்வரன் கூறியதாவது: பிறப்பு, இறப்பை ஓராண்டுக்கு மேல் பதிவு செய்யாமல் இருந்தால், நீதிமன்ற அனுமதி பெற்றே, பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.
தற்போது, அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி, நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்.அதை, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்த பின், ஆர்.டி.ஒ., பிறப்பு, இறப்பை பதிவு செய்து, சான்றிதழ் வழங்குவார்.இவ்வாறு அவர் கூறினார்
-கல்விச்சிறகுகள்

முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அத்தனை மாணவர்களும் 30 நாட்களில் தமிழ் எல்லா எழுத்துகளையும் பிழையின்றி ஒலிக்க,எழுத,கற்பிக்க,கற்க SCERT யால் உருவாக்கப்பட்டு வரும் பிரமாண்டமான காணொலி பாடல் முன்னோட்டம்...

அரசுப்பள்ளிகளும் அசத்தலாம்- தலை நிமிர வைத்த தலைமையாசிரியை.......

ஜியோவை மிஞ்சும் ஏர்டெல்.. பிராட்பேண்ட் திட்டங்களில் 1,000 ஜிபி இலவசம்..!

ஏர்டெல் நிறுவனம் ஹோம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு 1000 ஜிபி இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.
      'எக்ஸ்குளுசீவ் வெப் ஆஃபர்' (Exclusive Web Offer) எனும் சலுகையின் கீழ் வழங்கப்படும் இலவச டேட்டா, முதற்கட்டமாக டெல்லி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது. எனினும் மற்ற பகுதிகளில் வழங்கப்படுவது குறித்து எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லை.
    வாடிக்கையாளர்கள் ஏற்கனவே தேர்வு செய்து, பயன்படுத்தி வரும் திட்டங்களுக்கு ஏற்ப 750 ஜிபி முதல் 1000 ஜிபி வரை போனஸ் டேட்டா வழங்குவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது. இதற்கான வேலிடிட்டி ஒரு ஆண்டு என்றும் இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பெற முடியும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
          ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகைகளில் அதிகம் விற்பனையாகும் ஐந்து திட்டங்கள், ரூ.899 முதல் துவங்குகிறது. இவை அனைத்திலும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும் வழங்கப்படுகின்றன. பிராட்பேண்ட் பேஸ் திட்டத்தில் 60 ஜிபி டேட்டா, 16 Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இதற்கான போனஸ் டேட்டா 750 ஜிபி ஆகும்.
      மற்ற திட்டங்களில் 1000 ஜிபி வரை போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரூ.1,099 திட்டத்தில் 40 Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இதில் வழக்கமாக வாடிக்கையாளர்களுக்கு 90 ஜிபி டேட்டா வழங்கப்படும். ஏர்டெல் ரூ.1,299 திட்டத்தில் 100 Mbps வேகத்தில் 125 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோல் ரூ,1,499 மற்றும் ரூ.1,799 திட்டங்களில் 100 Mbps வேகத்தில் முறையே 160 ஜிபி மற்றும் 220 ஜிபி வழங்கப்படுகிறது.
     ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மாதம் 65 ஜிபி / 100 ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படும், இத்துடன் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்த திட்டத்தில் வழங்கப்படும் டேட்டாவும் வழங்கப்படுகிறது. அடிப்படை திட்டத்திற்கான டேட்டா தீர்ந்ததும், இலவச டேட்டா வழங்கப்படும், இதன் டவுன்லோடு வேகம் 512 Kbps வழங்கப்படுகிறது. போனஸ் டேட்டா பயன்படுத்தாத பட்சத்தில் அவை அடுத்த மாதத்திற்கு நீட்டிக்கப்பட மாட்டாது. 
  ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்ட் சலுகைக்கான சோதனைகள் துவங்கியுள்ள நிலையில், ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்களுக்கான போனஸ் டேட்டா சலுகை அரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் வி-ஃபைபர் (V-Fiber) பிராட்பேண்ட் திட்டத்தின் கீழ் 100 சதவிகிதம் கூடுதல் டேட்டா வழங்கப்படும் என அறிவித்தது. ஏர்டெல் வி-ஃபைபர் திட்டத்தில் பிராட்பேண்ட் வேகம் 100 Mbps வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடஒதுக்கீடு வழங்காத பள்ளிகள் மீது புகார் செய்ய ஏற்பாடு

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத் தாத தனியார் சுயநிதி பள்ளிகள் மீது புகார் செய்ய ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. மேலும்,
இடஒதுக் கீடு சேர்க்கை விவரங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடவும் தனியார் பள்ளி களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறு பான்மையினர் பள்ளிகள் நீங்க லாக) சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆகும் செலவினங்களை சம்பந்தப் பட்ட பள்ளிகளுக்கு அரசு வழங்கி விடும்.
அவகாசம் முடிந்தது
இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நேற்றுடன் (26-ம் தேதி) முடிவடைந்தது.
25 சதவீத இடஒதுக்கீட்டில் எத்தனை பேர் சேர்க்கப்பட்டார்கள், எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்பது தொடர்பான விவரங்களை தனியார் பள்ளிகள் வெளியிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு பெற்றோர் மத்தியில் உள்ளது.
இதுதொடர்பாக கேட்டபோது மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்பசாமி கூறியதாவது:
66 ஆயிரம் விண்ணப்பங்கள்
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள 9 ஆயிரம் தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மை பள்ளி கள் தவிர) நுழைவுநிலை வகுப்பு களில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 126 இடங்கள் உள்ளன. 25-ம் தேதி மதியம் நிலவரப்படி, 66 ஆயிரத்து 436 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இடங்களை ஒதுக்கீடு செய்வதற் கான குலுக்கல் மே 31-ம் தேதி நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கை முடிந்து ஒரு வாரத்துக் குள் சேர்க்கை தொடர்பான விவ ரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
எஸ்எம்எஸ் மூலம் தகவல்
தேர்வு செய்யப்பட்ட மாண வர்களுக்கு செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரி விக்கப்படும். 25 சதவீத இடஒதுக் கீட்டின் கீழ் வரும் இடங்களை நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக் கீடு செய்ய வேண்டியது தனியார் பள்ளிகளின் கடமையாகும். இந்த ஒதுக்கீடு சரியாக பின் பற்றப்படவில்லை என்றால் புகார் செய்யலாம். நர்சரி, பிரைமரி பள்ளிகளாக இருப்பின் சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரியிடமும், மெட்ரிக் பள்ளி களாக இருந்தால் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளரிடமும் (ஐஎம்எஸ்) புகார் செய்ய வேண் டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
25 சதவீத இடஒதுக்கீடு தொடர் பான விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெற முடியுமா என்று கேட்டபோது அவர் கூறியதாவது:
25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விச் செலவினங்களை சம்பந்தப் பட்ட பள்ளிகளுக்கு அரசு வழங்கி விடுகிறது.
ரூ.124 கோடி வழங்க ஏற்பாடு
அந்த வகையில், 2015-16ம் கல்வி ஆண்டுக்கான கட்டணம் ரூ.124 கோடியை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைவில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின் றன. 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் எத்தனை இடங்கள், அதில் எத்தனை பேர் சேர்க்கப்பட்டார்கள், காலியிடங்கள் எவ்வளவு என்பது குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முடியும். இதற்கு மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் தகவல் வழங் கும் அதிகாரிகளாகவும், மெட்ரிக் பள்ளிகள் இயக்கக இணை இயக்குநர் மேல்முறை யீட்டு அதிகாரியாகவும் செயல் படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
விண்ணப்பத்தில் இடம்பெறவில்லையா?
பெற்றோர் தங்கள் குழந்தைகளை குறிப்பிட்ட தனியார் பள்ளியில் சேர்க்க விரும்பும்போது ஆன்லைன் விண்ணப்பத்தில் அந்த பள்ளி இடம்பெறவில்லை என்றால், அப்பள்ளி சிறுபான்மை பள்ளி அல்ல என்பதை உறுதிசெய்துகொண்டு, சம்பந்தப்பட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளரை அணுகி தங்கள் குழந்தையை அந்தப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம்.

2017-18 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா நலத்திட்ட பொருள்கள் மாவட்ட / ஒன்றியத்திலிருந்து பள்ளிகளுக்கு நேரடியாக கொண்டு செல்ல அனுமதித்து ஆணை வழங்குதல் அனைத்து மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட செலவினத் தொகை பட்டியல்

கணினி ஆசிரியர்களுக்கு பணிவாய்ப்பு?

ஆசிரியர் தேர்வு வாரியம் 19.08.2017 அன்று  1188 சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.
1188 ஆசிரியர்களில் computer instructer பணிவாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.

சனி, 27 மே, 2017

எந்தெந்த பல்கலைக்கழகத்தின் உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் பெறலாம்? RTI மூலம் தகவல் | பல்கலைக்கழக பட்டியல் இணைப்பு.





CPS ல் உள்ளவர்களுக்கு ஓய்வூதியம் மட்டுமல்ல ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி, ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டு திட்டம், பணிக்கொடை உள்ளிட்ட எதுவும் இல்லை - RTI


CPS ரத்து செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை - 7 வது ஊதிய குழு கருத்து கேட்பு குழு தலைவர் அறிவிப்பு

கலங்கடிக்கும் பருவமுறை தேர்வுகள்! : எளிமைப்படுத்துமா கல்வித்துறை

'பள்ளி மாணவர்களை கலங்கடிக்கும் வகையில் உள்ள பருவமுறை தேர்வுகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்' எனகல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக பள்ளிகளில் மெட்ரிக், ஓரியன்டல், ஆங்கிலோ இண்டியன், மாநில பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருந்தன.
இவற்றை நீக்கிய அரசு, 2010 - 11ல் சமச்சீர் கல்வித்திட்டத்தை அமல்படுத்தியது. அதே ஆண்டில் ஒன்றுமற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு வந்தது; அடுத்த ஆண்டில் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை விரிவு படுத்தப்பட்டது.இதையடுத்து, மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க, 2012 - 13ல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி, ஒரு ஆண்டுக்கான பாடங்களை, மூன்று கட்டங்களாக பிரித்து தேர்வுகள் நடந்தன.  2013- 14ல் ஒன்பதாம் வகுப்புக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தொடர்ச்சியாக '2014- 15 கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பிற்கும் இம்முறை அமல்படுத்தப்படும்' என கல்வித்துறை அறிவித்தது; ஆனால், தற்போது வரை நடைமுறைப்படுத்தப் படவில்லை. இதனால் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறையில் தேர்வு எழுதும் மாணவர்கள், பத்தாம் வகுப்பு சென்றவுடன் ஒரு ஆண்டு பாடங்களை படித்து தேர்வு எழுத வேண்டியுள்ளது. தற்போது இதற்கு தீர்வாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதே முறையை சமச்சீர் பாடத்திட்டத்திற்கும் கொண்டு வந்தால் எளிய முறையில் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள முடியும்.
சி.பி.எஸ்.இ.,ல் மாற்றம்
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, இருபருவ முறையில் வரும் கல்விஆண்டு முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, ஆறாம் வகுப்பில் முதல் பருவ பாடத்தின் 10 சதவீத பகுதிகள், இரண்டாம் பருவத் தேர்வில் சேர்க்கப்படும்; ஏழாம் வகுப்பில் முதல் பருவ பகுதியின் 20 சதவீத பாடமும், எட்டாம் வகுப்பில் முதல் பருவ பகுதியின் 30 சதவீத பாடங்களும் இரண்டாம் பருவத் தேர்வில் சேர்க்கப்படும்.மேலும் ஒன்பது, பத்தாம் வகுப்பில் ஓராண்டு பாடங்களை படித்து தேர்வு எழுதும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 'இதே முறையை தமிழக கல்வித்துறையும் பின்பற்றினால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் எளிய முறையில் எதிர்கொள்ள முடியும்' என கல்வியாளர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் முழு பாடங்களையும் படித்து தேர்வு எழுதுவதால் மாணவர்கள் மனதளவில் சிரமப்படுகின்றனர்.சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட தேர்வு முறையில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தை இங்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இருபருவ கல்வி முறையை அமல்படுத்தி இரண்டாம் பருவ தேர்வுகளில், முதல் பருவ முக்கிய பாடங்களை இணைத்து தேர்வு நடத்த வேண்டும். இதன் மூலம் பத்தாம் வகுப்பு தேர்வை எளிமையாக எதிர்கொள்ள முடியும்.இவ்வாறு கூறினார்.