>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

NMMS Exam - 2017 : MAT - SAT | Tentative Answer Key [New]

தேசிய மனித உரிமை ஆணையத்தில் காலிப்பணியிடங்கள் !!

தேசிய மனித உரிமை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி, உதவி பதிவாளர் மற்றும் முதுகலை ஆராய்ச்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாநில அளவிலான மனித வள கருத்தரங்கு!

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் வொர்க் ( madras school of social work, MSSW)
மனிதவள படிப்புக்கான மிக பிரபலமான கல்லூரி. இக்கல்லூரி இந்தியாவிலேயே மனித வள படிப்புக்கான பிரபலமான கல்லூரிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்து சிறந்து விளங்குகிறது மற்றும் தமிழ்நாட்டின் முதல்நிலை கல்லூரியாகவும் திகழ்கிறது. இது 1952ஆம் ஆண்டு மேரிக்லுப் வாலாஜதாவ்
என்பவரால் தொடங்கப்பட்டது. சென்னை காசாமேஜர் சாலை, எழும்பூரில் அமைந்திருக்கும் இக்கல்லூரியில் எம்.எஸ்.டபிள்யு (MSW), பி.எஸ்.டபிள்யு (BSW), எம்.ஏ.எச்ஆர்எம் (M.A HRM), இளங்கலைஉளவியல் ( B.sc., psychology), முதுகலை உளவியல் (M.sc., psychology), எம்எச்ஆர்எம் (MHRM) & ஓடி (OD), டிஎம் (DM) போன்ற பாடத்துறைகள் உள்ளன. ராஜா சாமுவேல் இக்கல்லூரியின் முதல்வராக இருக்கிறார்.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான மனிதவள கருத்தரங்கு நடைபெறும். இதில் மனிதவளத் துறையைச் சேர்ந்த தமிழ்நாட்டு மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக பல முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களைச் சார்ந்த மனிதவள ஆர்வலர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு துறைசார்ந்த பல நுட்பங்களை கற்றுத் தருகிறார்கள். இந்தக் கருத்தரங்கில், மனிதவளத் துறை தலைவி டாக்டர்.ஜெயந்தி பீட்டர் தலைமையில் பல முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களின் மனிதவள நிபுணர்களான வினோத் செல்லம் பத்தோடி (founder& chairman – bactrak Pvt ltd), குருபரன் சுவாமிநாதன் (chennai HR head-TCS BPS) சந்திரசேகர் (AVP CUMS), சுரேஷ்பாபு (Head India HR, Bonfiglioli), வீராசுவாமி (IR Head, ITC ltd) விஜய்குமார் (Plant Head HR, Pfizer), சார்லஸ் காட்வின் (Global BP HR, MNC) ஏஞ்சலின் ஜெயசீலன் (Asso. Director HR, CSC) ஜோசப் ஆப்ரகாம் (CEO and founder, Skillingly) சுஜித்குமார் (President, NHRD & HR Business leader, INFOSYS) ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சி அண்ணா சாலையில் உள்ள ரெயின்ட்டிரீ ஹோட்டலில், காலை 9.30 மணியளவில் தொடங்கி மாலை 5.30 மணியளவில் நிறைவடைந்தது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இக்கருத்தரங்கில் பயன்பெற்றவர்கள், பல்வேறு முன்னணி நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டுத் துறை நிபுணர்களாக உருப்பெறுகின்றனர் என்றால் அது மிகையாகாது

வெளிநாட்டு குளிர்பானங்களை புறக்கணிக்கும் மக்கள்: சமூக ஊடகங்கள் மூலம் பெருகும் விழிப்புணர்வு

பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
 தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த விலங்குகள் நல வாரிய அமைப்பான பீட்டாவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தன்னார்வ அமைப்பு தமிழகத்தின் பாரம்பரியம், கலாசாரம் சார்ந்த விளையாட்டு நடைபெறுவதற்கு பெரும் சவாலாகவும், தடையாகவும் இருந்து வருகிறது. எனவே அமெரிக்கா உள்பட வெளிநாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களை வாங்கக் கூடாது போன்ற வாசகங்கள் சமூக வலைதளங்களில் இளைஞர்களால் அதிகம் பகிரப்பட்டது. இதே வாசகங்களை ஜல்லிக்கட்டு போராட்ட பாதாகைகளிலும் பரவலாக காண முடிந்தது.
 வெளிநாட்டு குளிர்பானங்களாக பெப்சி, கோக் ஆகியவற்றின் விற்பனையை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றது. இதைத் தொடர்ந்து இளைஞர்கள், பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஜனவரி 26 முதல் அவற்றை விற்க மாட்டோம் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையனும், மார்ச் 1-ஆம் தேதி முதல் விற்க மாட்டோம் என வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஏ.விக்கிரமாராஜாவும் கடந்த 23-ஆம் தேதி தெரிவித்தனர்.
 5 நாள்களில் ஏற்பட்ட விழிப்புணர்வு: இந்தநிலையில் சென்னையில் திருவல்லிக்கேணி, கே.கே.நகர், அடையாறு, ஆவடி உள்பட நகரில் முக்கியப் பகுதிகளில் உள்ள குளிர்பான விற்பனைக் கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகளில் கடந்த 5 நாள்களாக பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.
 இது குறித்து சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த குளிர்பான மொத்த வியாபாரி வி.பி.மணி, ஆவடி பேருந்து நிலையத்தில் குளிர்பான கடை வைத்திருக்கும் வி.அய்யாதுரை ஆகியோர் உள்பட சென்னையைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள் கூறியது:
 வழக்கமாக எங்களது கடைகளில் தினமும் 15 முதல் 25 பெட்டிகள் அதாவது 250 முதல் 500 பாட்டில்கள் வரை பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனையாகும்.
 ஆனால் கடந்த சில நாள்களாக நாளொன்றுக்கு இரண்டு பெட்டிகள் (48 பாட்டில்கள்) விற்பதே அரிதாக உள்ளது. 200 மி.லி. கொண்ட சிறிய பாட்டில்கள், டின் முதல் 2 லிட்டர் பாட்டில் வரை உள்ள வெளிநாட்டு குளிர்பானங்கள் அதிகளவில் தேக்கமடைந்து விட்டன.
 வாங்க மறுத்த மாணவர்கள்...: குறிப்பாக மாணவர்கள் பெப்சி, கோக் வாங்குவதை அடியோடு நிறுத்தி விட்டனர். அவர்களிடம் கேட்டால் அந்த குளிர்பானங்கள் உடலுக்கு நல்லதல்ல. அவற்றை வாங்க வேண்டாம் என ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்று கூறுகின்றனர். அதேபோன்று எங்கள் குழந்தைகள் இவற்றை விரும்புவதில்லை என்று கூறி பெற்றோரும் வாங்குவதில்லை. மாறாக உள்ளூர் நிறுவனங்களைச் சேர்ந்த சோடா, கலர், குளிர்பானங்களை வாங்கிச் செல்கின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டம், சமூக ஊடகங்கள் மூலம் அதிவிரைவாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வே இந்த மாற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டு குளிர்பானங்களை குடிக்க மாட்டோம் என்ற இளைஞர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.
 அந்த குளிர்பானங்கள் மூலம் கிடைக்கும் லாபத்தைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஏனெனில் உடலுக்கு கேடு விளைவிக்காத உள்ளூரைச் சேர்ந்த தரமான குளிர்பானங்களை விற்றாலும் நல்ல லாபம் கிடைக்கும். மார்ச் 1-ஆம் தேதி வரை எங்களுக்கு அவகாசம் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் புறக்கணித்ததால் அடுத்த முறை பெப்சி, கோக் குளிர்பானம் எங்களுக்கு வேண்டாம் என விநியோகஸ்தர்களிடம் உறுதிபடத் தெரிவித்து விட்டோம்.
 அரசின் ஆதரவு அவசியம்: வெளிநாட்டு குளிர்பானங்களை வாங்கக் கூடாது என்பதில் மக்கள் மிகுந்த உறுதியுடன் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம், நிலம், தண்ணீர் எடுக்கும் அனுமதி ஆகியற்றை அரசு ரத்து செய்வதோடு உள்ளூர் குளிர்பான உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
 இது குறித்து குளிர்பான விநியோகஸ்தர்கள் ராஜா, சதீஷ் ஆகியோர் கூறுகையில், சென்னையின் பல்வேறு கடைகளில் எஞ்சியுள்ள வெளிநாட்டு குளிர்பானங்களை திரும்ப பெற்றுக் கொள்ளும்படி கடை உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். உள்ளூரைக் காட்டிலும் வெளிநாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களே இங்கு விற்பனையாகும். இதனால் எங்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்றாலும், மக்களின் உணர்வை வரவேற்கிறோம் என்றனர்.
"முழுமையாக வெற்றி பெறுவோம்'
வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பதுடன் அதில் முழுமையான வெற்றி காண்போம் என வணிக சங்கங்களின் மாநில தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
 தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் த.வெள்ளையன்: வெளிநாட்டு குளிர்பானங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் இவ்வளவு விரைவாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதைப் பார்க்கும்போது பெருமையாக உள்ளது.
 இது இளைஞர்கள், பொதுமக்கள், வியாபாரிகளின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி. முழுமையாக வெற்றி பெறும் வரை விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.
 சில்லறை வணிகத்தைப் பாதிக்கும் வெளிநாட்டு குளிர்பானங்களை வாங்க மறுக்கும் மக்களுக்கும், எங்களது கோரிக்கையை ஏற்ற வியாபாரிகளுக்கும் நன்றி. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா: சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை அடியோடு நிறுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். பொதுமக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த தன்னெழுச்சியால் வெளிநாட்டு பொருள்களின் மீதுள்ள மோகம் குறைந்து உள்நாட்டு பொருள்களின் மீதான மதிப்பு அதிகரிக்கும்.
 உள்ளூர் குளிர்பான வியாபாரிகளின் உற்பத்தி மேம்படுத்துவதற்கான சலுகைகளை அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.

- தினமணி

7 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: திட்டத்தைத் தொடங்கி வைத்தார் குடியரசுத் தலைவர்

இந்தியாவில் 5 வயதுக்குள்பட்ட 17 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான திட்டத்தை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
 போலியோவை முற்றிலுமாக ஒழித்துள்ள இந்தியா, அந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கும் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது.
 நடப்பு ஆண்டுக்கான இந்தத் திட்டத்தை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தில்லியில் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
 தேசிய நோய் எதிர்ப்பு தினத்தையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளித்து அவர் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
 இந்த நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, இணையமைச்சர்கள் அனுப்ரியா படேல், ஃபக்கன் சிங் குலஸ்தே ஆகியோர் பங்கேற்றனர்.
 நிகழ்ச்சியில் ஜே.பி. நட்டா பேசியதாவது: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளில் போலியோ நோய் ஒழிக்கப்படாமல், அந்த வைரஸ் இன்னமும் வலம் வந்துகொண்டிருக்கிறது.
 இந்தச் சூழலில், முற்றிலும் போலியோ ஒழிக்கப்பட்ட இந்தியாவுக்குள் அந்த நோய் மீண்டும் நுழைவதைத் தடுக்கும் வகையில், வரும் முன் காக்கும் தடுப்பு மருந்துத் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது. தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் போலியோ நோய் கண்காணிப்பு தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் நோய்த் தடுப்பு மருந்துகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
 விரைவில், தட்டம்மை - மணல்வாரியம்மை நோய்களுக்கான தடுப்பு மருந்தும், வயிற்றுப்போக்கு, விஷக் காய்ச்சல் (நிமோனியா), மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களுக்கான தடுப்பு மருந்தும் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு வழங்கும் திட்டம் பல கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் என்றார் நட்டா

முதல் பரிசு பெற்று பார்வையாளர்களை கவர்ந்த அவ்வூர் தொடக்கப்பள்ளி மாணவர்களின் பறை இசை நடனம்

கல்வியாளர்கள் சங்கமம்

*கல்வியாளர்கள் சங்கமம்*
ஒரு வாட்ஸ் அப் குழுவாகத் தொடங்கப்பட்டு இன்று அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பாக உயர்ந்திருக்கிறது எனச் சொன்னால் அதற்கு முழுக்காரணமும் தன் பணிமீதும் மாணவர்கள் நலன்மீதும் அக்கறை கொண்டு
புதிதாய் கற்கவேண்டும், என்னவெல்லாம் முடியுமோ அது அத்தனையும் செய்யவேண்டும்...
வருங்கால தலைமுறை நலமாய் வாழ நம்மால் இயன்றதைச் செய்வோம் இயன்றவரை என கரம்கோர்த்து ஒன்றுகூடிய ஆசிரியப்பெருமக்களே காரணமாகும்...
ஆசிரியர்கள் என்றால் பணிக்காலத்தில் கூட பணி செய்யமாட்டார்கள், ஒரு ரூபாயை நல்ல நோக்கத்திற்காக செலவு செய்ய மாட்டார்கள் என போலி மாயையினை உடைத்து தமது சொந்தப்பணத்தை செலவு செய்து விடுமுறைக்காலங்களிலும் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஒன்றுகூடி கல்விமுன்னேற்றத்திற்காக பாடுபடுவார்கள் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம்
*கல்வியாளர்கள் சங்கமம்*
2016 ஜுலை 9, 10 ல் காரைக்குடியில் சங்கமித்தோம்...
2016 அக்டோபர் 1,2 ல்
கரூரில் சங்கமித்தோம்....
இப்பொழுது 2017
பிப்ரவரி 11,12ல் கடலூரில்
சங்கமிக்கபோகிறோம்...
*மாற்றங்களை உருவாக்குவோம்*
மாற்றங்களை உருவாக்கிய
உருவாக்க நினைக்கும்
ஆசிரியர்களின் அனுபவப் பகிர்வு
*வலைப்பூக்கள்*
தனி வலைத்தளம்
இணையதளம் மூலம் அளப்பரிய சேவைகள் செய்துவரும் ஆசிரியர்களின் பங்கேற்பு
*கலைச்சிற்பிகள்*
தனித்திறன்கள் மூலம் தனித்துவத்துடன் திகழும் பல்துறை வித்தகர்களாகத் திகழும் ஆசிரியர்களின் அனுபவப் பகிர்வு
*இவ்வளவுதான் தொழில்நுட்பம்*
*ஆசிர்* சாரின் அசத்தலான தகவல் தொழில்நுட்ப வகுப்பு
*பாரம்பரியம் காப்போம்*
தமிழரின் அடையாளம் காக்கும் விளையாட்டுக்களும், கலைகளும் ஒரு பார்வை
*உள்ளங்கையில் உலகம்*
ஸ்மார்ட் போன்...மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும்..ஒரு வியப்புப் பார்வை
*நில் கவனி செல்*
அன்றாடச் செயல்பாடுகளில் அசத்தும் அறிவியல் ஒரு புரிதல்
*பளிச் வகுப்பறை*
வண்ணமயமான வகுப்பறையை நம் எண்ணங்களைக் கொண்டு எளிதாக மாற்றும் கலையை வசப்படுத்தும் வகுப்பு
*எல்லோரும் கொண்டாடுவோம்*
சப்தமில்லாமல் சாதித்த நம் சமீபத்திய சாதனையாளர்கள்
உங்கள் பார்வைக்கு...
*பொம்மை பொம்மை பொம்மை பார்*
பொம்மலாட்ட மன்னன் *தாமஸ் ஆண்டனியின்* செய்முறை வகுப்பு
*புத்தம் புதுபூமி வேண்டும்*
தமிழகத்தையே நம்மை திரும்பிப் பார்க்க வைக்கும்
ஓர் உன்னதப் பயணம் கடலூர் சங்கமத்தில் தொடங்கப்போகிறோம்
இவைகளுடன்...
*சன் டிவி* புகழ்
*சொல்லரசி*
அன்னபாரதியின்
*புன்னகை மலர்கள்*
முனைவர். மணிமேகலையின்
*பெண்கல்வியும் பாதுகாப்பும்*
சாகித்ய அகாடமியின் மேனாள் ஆலோசனைக்குழு உறுப்பினர்
கவிஞர் தங்கம் மூர்த்தியின்
*தமிழா தமிழால் தரணி ஆள்வாய்* 
*புதிய தலைமுறை* ஆசிரியர்
எம்.பி.உதயசூரியனின்
*வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை*
அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வழிகாட்டும் உரைவீச்சு
அத்துடன் அசத்தலாய் ஒரு பட்டிமன்றம்
*ஈகோ! வரமா!! சாபமா!!!*
வரவேற்கிறேன்....
சி.சதிஷ்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
9994119002
கடலூர் சங்கமத்தில் பங்கேற்க...
பங்கேற்புக் கட்டணம்
ரூ.1200
கீழ்காணும் ஏதெனும் ஒரு வங்கிக் கணக்கில் செலுத்தவும்...
State Bank of India
villupuram
D.NADANASIGAMANI
SB.  A/C No 11053221835
IFSC Code SBIN0000949
E.Rajalakshmi.
  state bank of india.
  Block 2.Neiveli
A/C NO. 10895182485.
IFSC CODE NO SBINO000958
பங்கேற்க அழைக்கிறேன்.... பிறரும் பங்கேற்க
பகிர்ந்துகொள்ளுங்கள்..
நன்றி

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அம்மா கிட்ஸ் வழங்கப்படும்.

தமிழக அரசின் சார்பில் மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி தண்டையார்பேட்டையில் உள்ள முருகதனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார்.
தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு சுமார் 800 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர். இதையடுத்து நிருபர்களிடம் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறியதாவது:
‘‘இன்னும் ஒரு சில மாதங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11, 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் அனைவருக்கும் அம்மா கிட்ஸ் எனப்படும் கணிதம் மற்றும் அறிவியலுக்கான உபகரணங்கள் வழங்கப்படும். காமராஜருக்கு அடுத்து ஜெயலலிதா ஆட்சியில்தான் 99 சதவிகிதம் அரசு உதவி பெறும் பள்ளிகளைஉருவாக்கி இதுபோன்ற உதவிகள் செய்யப்படுகிறது.இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் பள்ளி கோடை விடுமுறை நேரத்தில் தானா..?

தள்ளி போகும் உள்ளாட்சி தேர்தல் கமிஷனருக்கு பதவி நீட்டிப்பு உண்டா?
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகும் இத்தருணத்தில், மாநில தேர்தல் கமிஷனர் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போட, ஆளும் தலைமை விரும்புகிறது. மேலும் பள்ளித் தேர்வுகள் நெருங்கி விட்டதால் தேர்தலை நடத்த முடியாத நிலை, மாநில தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டு உள்ளது. பள்ளி கோடை விடுமுறை நேரத்தில் தான்,உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என கூறப்படுகிறது.
தற்போது, தனி அதிகாரிகளால், உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், மாநில தேர்தல் கமிஷனர் சீதாராமனின் பதவிக்காலம், மார்ச் 21ல் முடிகிறது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, தேர்தல் கமிஷன் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
கடந்த, 2011ல், அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், சோ.அய்யர், மாநில தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்; அதே ஆண்டு, தேர்தலை நடத்தி முடித்தார். அவரது பதவிக் காலம், 2013ல் முடிந்த பின், இரண்டு ஆண்டுகள் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இது, 2015 மார்ச்சில் முடிவுக்கு வந்ததால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால், புதிய தேர்தல் கமிஷனராக சீதாராமன் நியமிக்கப்
பட்டார். அவர், இரண்டு ஆண்டு பதவியில் தொடர்வார் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, அவரது பதவிக்காலம், வரும் மார்ச் 21ல் முடிகிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவரே செய்துள்ளார். வழக்கு விவகாரங்களையும் கவனித்து
வருகிறார்.
எனவே, தேர்தல் நடத்தப்படும் வரை அவரே பதவியில் நீடிப்பாார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கமிஷனர் பதவியை பிடிக்க, சில ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், போயஸ் தோட்டத்தில் காய் நகர்த்த துவங்கி விட்டனர்.
இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சனி, 28 ஜனவரி, 2017

ஜி.எஸ்.எல்.வி., மார்க்-3 ராக்கெட் இன்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ


பெங்களூரு: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இஸ்ரோ மையம் வெளியிட்டுள்ள செய்தியில், " கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி
ஜி.எஸ்.எல்.வி.,-3 ராக்கெட் திட்டத்தில் ஒரு மைல்கல். இந்த ஆண்டு இறுதியில் ஜி.எஸ்.எல்.வி-3 ராக்கெட் விண்ணில் ஏவப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NMMS STUDY MATERIALS & OLD QUESTION PAPERS

NMMS ALL NEW  MODEL QUESTION PAPERS


SAT MODEL QUESTION PAPERS




NMMS - MAT STUDY MATERIALS



NMMS IMPORTANT INSTRUCTIONS



    NMMS STUDY MATERIALS


        Thanks:Asiriyar.com.

    IT FORM VERSION 2017.1 DOWNLOAD

    சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட                     IT FORM VERSION 2017.1..... இப்போது உங்களுக்காக... உடனே                    பதிவிறக்கம் செய்யுங்கள்..

    மதுரையில் 'நீட்' தேர்வு கருத்தரங்கு தினமலர் நாளை நடத்துகிறது

    மதுரையில் தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில் மருத்துவ படிப்பிற்கான 'நீட் 2017' நுழைவுத் தேர்வு கருத்தரங்கு, பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நாளை (ஜன.,29) நடக்கிறது.
    வளமான மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் வகையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்க க்கு 'ஜெயித்துக்காட்டுவோம்', உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள ஆலோசனைகள் வழங்கும் 'வழிகாட்டி' உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் தினமலர்
    நடத்துகிறது. இந்த வகையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்பிற்கான 'நீட்' எனும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு குறித்து மாணவர் தெரிந்துகொள்ளும் வகையிலும், அதற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்தும், இந்தாண்டு முதல் முறையாக மதுரையில் தினமலர் இக்கருத்தரங்கை நடத்துகிறது.கருத்தரங்கு காலை 9:30 மணிக்கு துவங்கி மதியம் 12:30 மணி வரை நடக்கும். இதில் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரையான முழு விவரங்கள், தேர்வுக்குரிய பாடங்கள் எவை என்பது குறித்து வல்லுனர்கள் வழிகாட்ட உள்ளனர்.கருத்தரங்கில் மாதிரி வினாத்தாள் அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்படும். அனுமதி இலவசம். மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம்.
    நிகழ்ச்சியை நிகிதா இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் ஸ்டடீஸ் (சி.பி.எஸ்.இ.,) மற்றும் டைம் மேனேஜ்மென்ட் எஜூகேஷன் பிரைவேட் லிமிடெட் ஆகியன இணைந்து வழங்குகின்றன.

    பேராசிரியர் பணிக்கான 'செட்' தேர்வுக்கு புதிய கமிட்டி

    உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதி தேர்வை நடத்த, புதிய கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அதன் தலைவராக, தெரசா பல்கலை துணைவேந்தர் வள்ளி நியமிக்கப்பட்டு உள்ளார்.
    அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக சேர, முதுநிலை பட்டம் முடித்தவர்கள், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்திருக்க வேண்டும். இல்லையென்றால், மத்திய அரசின், 'நெட்' தகுதி தேர்வு அல்லது மாநில அரசுகள் நடத்தும், 'செட்' தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெற்றால், நாடு முழுவதும் உள்ள எந்த கல்லுாரி, பல்கலையிலும், உதவி பேராசிரியராக பணியில் சேரலாம். மாநில அரசு நடத்தும் செட் தேர்வு, ஆங்கிலம் மற்றும் மாநில மொழியில் நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெற்றால், அந்தந்த மாநிலங்களில் மட்டுமே உதவி பேராசிரியராக சேர முடியும். கடந்த ஆண்டு செட் தேர்வை, அரசின் சார்பில், கொடைக்கானல் தெரசா பல்கலை நடத்தியது. ஜன., 20ல் அறிவிப்பு வெளியிட்டு, பிப்., 22ல் தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், அக்டோபரில் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு செட் தேர்வை நடத்துவதற்கு, தெரசா பல்கலை துணை வேந்தர் வள்ளி தலைமையில், புதிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
    உறுப்பினர் செயலராக, தெரசா பல்கலை பதிவாளர் கீதா, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக விமலா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். உறுப்பினர்களாக, சேலம் பெரியார் பல்கலை துணை வேந்தர் சுவாமிநாதன் மற்றும் திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் முருகன் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டுக்கான செட் தேர்வு தேதி, பிப்., முதல் வாரத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

    சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

    சென்னை பல்கலை முதுநிலை பட்ட படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து, பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
    'சென்னை பல்கலையின் முதுநிலை பட்ட மாணவர்களின், நவ., தேர்வுக்கான முடிவுகள், பல்கலை இணையதளத்தில் நாளை வெளியிடப்படும். மறு மதிப்பீடுக்கு, வரும், 31 முதல், பிப்., 6க்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.

    'மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி பாதுகாப்பானது'

    'தமிழகம் முழுவதும், பிப்., முதல் வாரத்தில், மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் துவங்கும். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது; வதந்திகளை நம்ப வேண்டாம்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    தமிழகம் முழுவதும், பிப்., முதல் வாரத்தில், 'மீசில்ஸ் ரூபெல்லா' தடுப்பூசிக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த தடுப்பூசி தொடர்பாக, விஷமிகள் சிலர், 'வாட்ஸ் ஆப்' மூலம், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
    இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கம்: ஐ.நா.,வின் உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து, தமிழக அரசின் மீது வைத்த நம்பிக்கையால், 'மீசில்ஸ் ரூபெல்லா' தடுப்பூசி திட்டத்தில், தமிழகம் முதற்கட்டத்திலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    ஒன்பது மாதம் முதல், 15 வயது குழந்தைகள் வரை, அனைவருக்கும், மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி போடும் திட்டம், பிப்., முதல் வாரம் துவங்கி, ஒரு மாதம் நடக்கிறது. வழக்கமாக, 10 முதல் 12 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு, முதல் தவணையும், 16 முதல், 24 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு, இரண்டாம் தவணையும் தடுப்பூசி போடப்படுகிறது. ஏற்கனவே தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், இத்திட்டத்தில் தடுப்பூசி போடப்படும். எந்த குழந்தையும் விடுபடாத வகையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இத்திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படும். மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய் வராமல் தடுக்கும்.
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    இது தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ''மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசியால், குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அது குழந்தை களுக்கு கொடிய நோய்களை வராமல் தடுக்கும்,'' என்றார்.
    உயிருக்கே ஆபத்தாகும் :
    மீசில்ஸ் என்பது தட்டம்மை நோய். இது காய்ச்சல், உடல் வலியை ஏற்படுத்தி, உடல் முழுவதும் தடிமனை உருவாக்கும். நோய் வீரியமானால், நிமோனியா ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகும்
    ரூபெல்லா என்பது கர்ப்பிணிகளை தாக்கினால், பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் உறுப்பில் ஊனம் ஏற்படும்; கருக்கலைப்புக்கு காரணமாகும். உலக சுகாதார நிறுவன ஆய்வுப்படி, உலகில் ஆண்டு தோறும், ஒரு லட்சம் குழந்தைகள், ரூபெல்லா பாதிப்புடன் பிறக்கின்றன. இதைத் தடுக்க, தடுப்பூசியே ஒரே வழி.

    உள்ளாட்சி தேர்தல் எப்போது நடக்கும்?

    தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் எப்போது நடக்கும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தேர்தல் தேதி விபரங்களை, 31ம் தேதி தெரிவிக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
    உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், 2016 அக்., 17, 19ம் தேதிகளில் நடத்தப்படும் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதையடுத்து, 'உள்ளாட்சி அமைப்புகளில், பழங்குடியினருக்கு முறையான ஒதுக்கீடு செய்யப்படவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., பிரமுகர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன், முறைப்படி தேர்தல் அறிவிப்பு வெளியிடவில்லை எனக்கூறி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தார். கடந்த, 2016 டிசம்பருக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும், புதிய அறிவிப்பை வெளியிடவும், மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த, டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.
    இந்நிலையில், இவ்வழக்கு, நீதிபதிகள் நுாட்டி ராமமோகன் ராவ், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை, எப்போது வெளியிடப்படும் என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் குமார், ஏப்ரலுக்குள் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதை ஏற்க, நீதிபதிகள் மறுத்து விட்டனர். உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்த முடியும் என்பதை, தேர்தல் ஆணையம் தெரிவிக்கும்படி, டிவிஷன் பெஞ்ச்
    உத்தரவிட்டு, விசாரணையை, ஜன., 31க்கு தள்ளி வைத்தது.

    சி.பி.எஸ்.இ., தேர்வு தேதியில் மாற்றம்

    சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டு உள்ளன.
    சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, மார்ச் 9ல், பொதுத்தேர்வு துவங்குகிறது.
    இதில், 10ம் வகுப்புக்கு, தமிழ், என்.சி.சி., போன்ற பாடங்களுக்கும், பிளஸ் 2வில், உடற்கல்வி, சமூகவியல் உட்பட, ஐந்து பாடங்களுக்கும், தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான பட்டியல், சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.