>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 23 மே, 2022

வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ,ஜாதி சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்...

வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ,ஜாதி சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

முக்கியமான தகவல் .....


பள்ளி திறக்க இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் அனைவரும் தன் பிள்ளைகளுக்கு ஜாதி , இருப்பிடம், வருமான போன்ற சான்றிதழ்கள் வாங்க அரசு 


இ_சேவை மையங்களுக்கு மக்கள் அதிகளவில் வருகிறார்கள் ஆனால் அந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க என்னென்ன தேவை என்று அறியாமல் உள்ளனார் அதனால் பல தடவை அலைந்து வருகிறார்கள்


மக்கள் கஷ்டம் அறிந்து இந்த தகவலை இங்கு என்னென்ன தேவை என பதிவு செய்கிறோம்


*முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்*

புகைப்படம்

குடும்ப அட்டை

ஆதார் அட்டை 

மாற்றுச்சான்றிதழ்(TC)

மதிப்பெண் பட்டியல்(10,12)

ஜாதி,வருமானம் சான்றிதழ்

முதல் பட்டதாரி பத்திரம்

குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய தாத்தா பாட்டி உட்பட கல்வி சான்றிதழ்

தொலைப்பேசி(otp வரும் அதனால்)

அனைத்தும் அசல் மற்றும் நகல்


*ஜாதி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்*

குடும்ப அட்டை 

ஆதார் அட்டை

மாற்றுச்சான்றிதழ் (TC)அல்லது தந்தையின் மாற்றிச்சான்றிதழ் (அ) தந்தையின் ஜாதி சான்றிதழ்

புகைப்படம்

தொலைப்பேசி otp வரும் அதனால்

அனைத்தும் அசல் மற்றும் நகல் வேண்டும்.


*வருமான சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்*

குடும்ப அட்டை

ஆதார் அட்டை

வருமான சான்று(payslip) + பான்கார்டு

தொலைப்பேசி otp வரும் அதனால்

புகைப்படம்

அனைத்தும் நகல் மற்றும் அசல் தேவை



*இருப்பிட சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்*

குடும்ப அட்டை

ஆதார் அட்டை

தொலைபேசி otp வரும் அதனால்

புகைப்படம்

அனைத்தும் நகல் மற்றும் அசல்


இந்த செய்தி மற்றவர்களுக்கு பகிர்ந்து மக்களுக்கு உதவுங்கள் மேலும் அந்தந்த ஊர்களிலும் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கம் (society)லும் இந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க முடியும் இதன் மூலம் நீங்கள் உங்களுடைய

அலைச்சல் குறைக்கலாம்.....



***********************************************************

காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்க எப்படி எழுதவேண்டும் முழு விவரம்.....

காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்க எப்படி எழுதவேண்டும் முழு விவரம்.....

 
 0

காவல்நிலையத்தில் புகார் அளிக்க புகார்  எப்படி எழுத வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்


விடுநர்:-


புகார் மனுவில், மனுதாரரின் பெயர், வயது, தந்தையார் அல்லது கணவர் பெயர், முழு முகவரி, தொடர்புக்கான தொலைபேசி எண் ஆகியவை முழுமையாக தரப்பட வேண்டும்.


பெறுநர்:-

பின்னர் புகார் மனுவை எந்த காவல்நிலையத்தி்ல் பதிவு செய்கிறோமோ அந்த காவல் நிலைய அதிகாரியை பெறுநராக குறிப்பிடவேண்டும்.  காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் துறை ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர் மட்டுமே அந்த புகாரை பரிசீலித்து முதல் தகவல் அறிக்கை தயாரிக்க முடியும். எனவே அவர்களை பெறுநராக குறிப்பிட வேண்டும்


புகாரில் குறிப்பிட வேண்டியவை:-

காவல் துறையில் அளிக்கப்படும் புகார் மனு சாதாரண வெள்ளைத் தாளில் கையால் தெளிவாக எழுதப்பட்டு இருந்தாலே போதுமானது.

குற்ற நிகழ்வு நடந்த நாள், இடம், நேரம் ஆகியவற்றுடன் குற்ற நிகழ்வு குறித்த முழுமையான விவரங்கள் புகாரில் இடம் பெற வேண்டும். 

எதிரி மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டியிருந்தால் அதை கட்டாயம் குறிப்பிடவேண்டும்

அதேபோல கொலை மிரட்டலோ வேறு வகை மிரட்டலோ விடுத்திருந்தாலும் அதையும் புகாரில் தெரிவிக்கவேண்டும்

மேலும் எதிரி உங்களை தாக்கி இருந்தால் அந்த தாக்குதல் எவ்வாறு நடந்தது, எந்தப் பொருளால் தாக்குதல் நடந்தது, அதனால் ஏற்பட்ட காயங்கள் என்ன என்றும் புகாரில் கூற வேண்டும். 

திருட்டு, கொள்ளை போன்றவை நடந்திருந்தால் இழப்புகள் குறித்த முழு விவரங்களும் அளிக்கப்பட வேண்டும்.

இவ்வகையான புகார்களில் எதிரிகளை அடையாளம் காட்டுவது, காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கும். நமக்கு முன்பே தெரிந்த நபர்களை அவர்களுடைய பெயர், முகவரியோடு எழுத வேண்டும்.

பெயர் தெரியாத, ஆனால் அடையாளம் காட்டக்கூடி ய நபர்களை “பெயர் தெரியாத, நேரில் அடையாளம் காட்டக்கூடிய நபர்” என்று தெளிவாக எழுதவேண்டும். முற்றிலும் அடையாளம் தெரியாத நபர் என்றால் அடையாளம் தெரியாத நபர் என்று எழுதவேண்டும்

காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரில் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதால் என்ன நடந்தது என்பது பற்றிய துல்லியமான விளக்கத்தை நீங்கள் வழங்க வேண்டும். புகாரில் முழுமையான, உண்மையான தகவல்களை தரவேண்டும்.


புகார் ஏற்க்க மறுத்தால்

சம்பந்தப்பட்ட அதிகாரி புகாரினை ஏற்றுக்கொள்ள மறுத்தால், நீங்கள் உங்கள் புகாரை பதிவு தபால் மூலம் அனுப்பலாம் 

அல்லது மேல் அதிகாரியை சந்தித்து புகார் அளிக்கலாம்

அல்லது ஆன்லைன் புகார்கள் கூட தாக்கல் செய்யலாம்.


புகார் கடிதம் எழுதும் முறை:-  மாதிரி 1

 

அனுப்புனர்:

எம் . சந்தியா  வயது18

த/பெ  மாரிமுத்து

குமரன் தெரு

சென்னை 600456

 

பெறுநர்:

துணை ஆய்வாளர்

காவல் நிலையம்

சென்னை 600456

 

அய்யா

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன் மேலும் நான் கல்லூரி முடித்து வீட்டுக்கு போகும் போது அந்த பகுதியில் சிலர் என்னை கேலி செய்கிறார்கள். மேலும் ஆபாசமாகவும் பேசுகிறார்கள்.நீங்கள் தயவு செய்து தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு இனி இவ்வாறு நடக்காதவாறு தடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்

                                                                                                    இப்படிக்கு

                                                                                                        காவிரி 

சென்னை

மே 20. 2018

புகார் கடிதம் எழுதும் முறை:-  மாதிரி 2

 

விடுநர்:-

குமார் வயது 45

த/பெ கனேசன்

45 மாரியம்மன் கோவில் தெரு,

சென்னை 75

 

பெறுநர்:-

உயர் திரு. சார்பு ஆய்வாளர் அவர்கள்,

XXXX காவல் நிலையம்,

XXXX மாவட்டம்.


பொருள்: வீட்டில் திருடு போனது சம்மந்தமான புகார் மனு


மதிப்பிற்குரிய ஐயா அவர்கள்,

பெரு மதிப்பிற்குரிய காவல் துறை சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு வணக்கம்!

மனுதாரர் ஆகிய நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். மேலும் நான் குடும்பத்துடன் அனைவரும் கடந்த  xxxx தேதி அன்று உறவினர் திருமணத்திற்க்கு சென்றிருந்தோம். இன்று வீட்டிற்க்கு வந்தபோது வீடு பூட்டு உடைத்து திறந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தேன் வீட்டின் உள்ளே பீரோ உடைக்கபட்டு வீட்டில் இருந்த நகை பணம் என  சுமார் 1,50000 மதிப்பு திருடு போயுள்ளது எனவே ஜயா அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து திருடு போன நகை பணம் மீட்டு தரும்படியும் திருடர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்

                                                                                                           இப்படிக்கு,

                                                                                                               குமார்

புகார் கடிதம் எழுதும் முறை:-  மாதிரி 3


விடுநர்:-

குமார் வயது 45

த/பெ கனேசன்

45 மாரியம்மன் கோவில் தெரு,

சென்னை 75

 

பெறுநர்:-

உயர் திரு. சார்பு ஆய்வாளர் அவர்கள்,

XXXX காவல் நிலையம்,

XXXX மாவட்டம்.

வணக்கம் 

நான் இன்று (தேதி) மாலை 6 மணி அளவில் எங்கள் வீட்டு அருகில் உள்ள ஜீவா பூங்காவின் முன்னால் என் ஹீரோ ஹோண்டா பதிவு எண் TN 21  xxxx  கருப்புகலர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றேன்.திரும்பி வந்து பார்த்தபோது என் இருசக்கர வாகனத்தை காணவில்லை.அக்கம் பக்கம் தேடி விசாரித்து பார்த்ததில் எனது வண்டி கிடைக்கவில்லை என் வண்டி திருடு போயுள்ளது எனவே .தயவு செய்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கண்டுபிடித்து எனது இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.நன்றி


                                                                                                                       இப்படிக்கு,

                                                                                                                         குமார்

புகார் கடிதம் எழுதும் முறை:-  மாதிரி 4


விடுநர்:-

குமார் வயது 45

த/பெ கனேசன்

45 மாரியம்மன் கோவில் தெரு,

சென்னை 75

 

பெறுநர்:-

உயர் திரு. சார்பு ஆய்வாளர் அவர்கள்,

XXXX காவல் நிலையம்,

XXXX மாவட்டம்.

ஜயா 

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன் மேலும் இன்று எனது பக்கத்து வீட்டில் உள்ள ஆறுமுகம் என்பவர் மற்றும் அவரது மகன் கண்ணன் இருவரும் எனது வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தார்கள் நான் ஏன் இங்கு நிற்கின்றீர்கள் என கேட்டதற்க்கு இது என்ன உங்க அப்பன் வீட்டு ரோரா உன் வேலையை பாத்து போடா என மரியாதை குறைவாகவும் ஆபாசமாக்வும் பேசி என்னை திட்டினார்கள் நான் ஏன் இது போல் பேசிகின்றீர்கள் என கேட்டதற்க்கு  டேய் இவன் அடங்கமாட்டன் இவனை போட்டு தள்ளிடலாம் என கொலை மிரட்டல் விடுகின்றார்கள் எனவே எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.நன்றி


                                                                                                                       இப்படிக்கு,

                                                                                                                         குமார்

******************-**************************

ஞாயிறு, 22 மே, 2022

விடுமுறை காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த Free Summer Training Workshop..

விடுமுறை காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த Free Summer Training Workshop


💥👉 *கல்வி அமுது இணையதளமும் Medha fun kids YouTube channel -ம் இணைந்து நடத்தும்  Free Summer Training Workshop*

⚫👉  *விடுமுறை காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த Free Summer Training Workshop*

👍👉 உங்கள் மொபைல் வழியே உங்கள் விரல்நுனியில் 

⚡👉 Date : 21.05.2022

⚡👉  Day-4 *Activity -4*

⚡👉 craft work activity  

⚡👉 Spuder man mask 

⚡👉 பாடமும் படைப்பாற்றலும்

⚡👉 Spider உருவாக்ற Silk இரும்பை விட கடினமானதா?

⚡👉சிலந்திக்கு ஆறு கண்களா?

⚡👉 சிலந்தி தண்ணிக்குள்ள நீந்துமா? சுவாசிக்குமா?

⚡👉 சுவாரசிய தகவல்களுடன் சுடச்சுட படைப்பாற்றல் 

⚡👉 5 நிமிடத்தில் அசத்தலான Spider man mask

⚡👉 உங்கள் குழந்தைகளையும் மாணவர்களையும் பார்க்கச் செய்து படைப்பாற்றல் திறனை மேம்படுத்துங்கள்.

கீழுள்ள வீடியோவை Linkயை கிளிக் செய்து உங்களுக்கான செயல்பாட்டை பார்த்து மகிழுங்கள் 



💐 Like ,Subscribe & Share💐

⚡👉  Day-3 *Activity -3*

⚡👉 craft work activity 

⚡👉 Atractive wall hanging

⚡👉 Paper craft ideas

⚡👉 10 நிமிடத்தில் உங்க வீட்டை அழகாக மாற்றும் Wall hanging craft


கீழுள்ள வீடியோவை Linkயை கிளிக் செய்து உங்களுக்கான செயல்பாட்டை பார்த்து மகிழுங்கள் 

⚡👉https://youtu.be/7dqrt2e_eJ4



⚡👉  Day-2 *Activity -2*

⚡👉 glass painting 

⚡👉 water colour painting

⚡👉 magic painting 

⚡👉 இறுதியில் வியக்கவைக்கும் கண்கொள்ளாக்காட்சி 

⚡👉 உங்கள் குழந்தைகளையும் மாணவர்களையும் பார்க்கச் செய்து படைப்பாற்றல் திறனை மேம்படுத்துங்கள்

கீழுள்ள வீடியோவை Linkயை கிளிக் செய்து உங்களுக்கான செயல்பாட்டை பார்த்து மகிழுங்கள் 






⚡👉 Summer Workshop *Activity -1*

⚡👉 PAPER CRAFT 

⚡👉 Honeycomb ball

⚡👉 Summer Workshops in medha fun kids channel 

⚡👉 உங்கள் குழந்தைகளையும் மாணவர்களையும் பார்க்கச் செய்து படைப்பாற்றல் திறனை மேம்படுத்துங்கள்



.*******************************************

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

சனிக்கிழமை நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் அட்டவணை....

*சனிக்கிழமை நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் அட்டவணை....

 சனிக்கிழமை நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் அட்டவணை.




Click here

**********************************************************************************

செவ்வாய், 5 ஏப்ரல், 2022

எண்ணும் எழுத்தும் மூன்றாவது கட்டகம். இன்று முதல் பயிற்சி மேற்கொள்ளலாம்*.....

*எண்ணும் எழுத்தும் மூன்றாவது கட்டகம். இன்று முதல் பயிற்சி மேற்கொள்ளலாம்*.....

எண்ணும் எழுத்தும் மூன்றாவது கட்டகம். இன்று முதல் பயிற்சி மேற்கொள்ளலாம்.




Click here




.......************************************.....