>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 15 ஏப்ரல், 2019

வாக்களிக்க தேவையான அடையாள அட்டைகள் எது தெரியுமா?

*வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 வகையான ஆவணங்களைப் பயன்படுத்தி தேர்தலில் வாக்களிக்கலாம்*
*மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு புகைப்படங்களுடன் கூடிய 11 வகையான ஆவணங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்*
*வாக்காளர்கள், தங்கள் வாக்கை பதிவு செய்யவதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும்*
*வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை இல்லாதவா்கள், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசுத் துறைகளில் பணிக்காக வழங்கப்பட்டுள்ள புகைப்பட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், நிரந்தர வருமானவரி கணக்கு எண் (பான் கார்டு), தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட மின்னணு அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு மின்னணு அட்டை ஆகியவற்றை பயன்படுத்தலாம்*
*மேலும், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், சட்டப்பேரவை மற்றும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம்*
*வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் அச்சுப்பிழைகள், எழுத்துப் பிழைகள் போன்றவற்றை பொருட்படுத்த தேவையில்லை*
*எனவே, வாக்காளர்கள் மேற்கூறிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்து ஏப்.18 ஆம் தேதி தவறாமல் தங்களது வாக்கை பதிவு செய்யலாம்

SBI BANK - ல் 8,653 கிளரிக்கல் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

அனைவராலும் எஸ்பிஐ என அழைக்கப்படும் "ஸ்ட்டே பேங்க் ஆப் இந்தியா"-வில் கிளரிக்கல் எனப்படும் 8,653 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கான தேர்வு அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது*
*💢💢இதில் தமிழகத்திற்கு 421 இடங்களும், புதுச்சேரிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன*
*🎈🎈மொத்த காலியிடங்கள்: 8,653*
*💠💠பணி: Junior Associate (Customer Support & Sales)*
*♦♦தகுதி: 31.08.2019-க்குள் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்*
*💎💎வயதுவரம்பு*
*01.04.2019 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.*
*🔰🔰சம்பளம்: மாதம் ரூ.13,075 - 31,450*
*💎💎தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750, மற்ற பிரிவினர் ரூ.125 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்*
*♦♦தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்*
*முதல்நிலை தேர்வு 3 பிரிவுகளின் கீழ் 100 மதிப்பெண்களுக்கும் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். இதற்கான தேர்வு ஒரு மணி நேரம். முதன்மை தேர்வானது 4 பிரிவுகளின் கீழ் அப்ஜெக்டிவ் முறையில் 200 மதிப்பெண்களுக்கு 190 கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வு 2 மணி நேரம் 40 நிமிடம் நடைபெறும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு*
*🔮🔮விண்ணப்பிக்கும் முறை: https://www.sbi.co.in, https://bank.sbi/careers, https://www.sbi.co.in/careers போன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்*
*மேலும் முழுமையான விவரங்கள் அறிய*
*https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/11042019_SBI_CLERICAL_RECT_ADVERTISEMENT_2019.pdf எ ன்ற லிங்கில் சென்றுதெரிந்துகொள்ளவும்*
*ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.05.2019

தங்கத்துக்கு ஆசைப்படாத அரசுப்பள்ளியில் படிக்கும் அக்கா - தம்பி.


கள்ளக்குறிச்சி : கேட்பாரற்று கிடந்த, ஒரு சவரன் சங்கிலியை ஒப்படைத்த அரசுப் பள்ளியில் படிக்கும், அக்கா - தம்பியை பாராட்டி, எஸ்.பி., ஜெயகுமார் ஊக்கப்பரிசு வழங்கினார்.விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த நத்தகாளியைச் சேர்ந்த தம்பதி சரவணன் - சரோஜா. இவர்களது மகள் ஜோதிகா,13, மகன் சதீஷ், 10. இருவரும், அருகிலுள்ள ஏமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 8, 5ம் வகுப்பு படிக்கின்றனர். நேற்று முன்தினம் காலை, இருவரும் பள்ளிக்கு நடந்து சென்றபோது, சாலையில் கேட்பாரற்று கிடந்த, 1 சவரன் சங்கிலியை கண்டெடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமாரிடம் ஒப்படைத்தனர்.
அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். அதன்படி, அதை தவறவிட்ட ஏமம் அடுத்த நெய்வனை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரனிடம், உரிய விசாரணைக்குப் பின், ஒப்படைக்கப்பட்டது. ஏழ்மை நிலையிலும், நேர்மையாக செயல்பட்ட ஜோதிகா - சதீஷ் இருவரையும், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமார் உட்பட பலரும் பாராட்டினர். தகவலறிந்த விழுப்புரம், எஸ்.பி., ஜெயகுமார், இருவரையும் கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று வரவழைத்தார். அங்கு, அவர்களுக்கு சால்வை அணிவித்து, ஊக்கப்பரிசு கொடுத்து பாராட்டினார்.

EMIS WEB PORTAL மூலம் 2019-20 மாணவர் சேர்க்கை/ தேர்ச்சி/ வேறு பள்ளிக்கு மாற்றம்/ நீக்கம் பதிவுகளை ஏப்ரல் மாதத்தில் செயல்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல்






கோக்கலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் சாதனை.


வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த கோக்கலூர் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டையில் படம் வரைந்து வேறு அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் அனுப்பி பரிசு பெற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு இடையே மகிழ்வித்து மகிழ் சென்னை சிறுதுளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மறைந்த ஆசிரியர். ஜெயா வெங்கட் நினைவாகவும், தஞ்சாவூர் கனவு மெய்ப்பட வேண்டும் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான குழந்தைசாமி, சிவகுருநாதன், தரணிபாய், ஆனந்த் ஆகியோர் ஏற்பாடுகளையும்,நமது முடிவுகளை இரவு பகலும் கண் விழித்து சேகரித்து உதவிய அன்புத்தம்பி கனவு பள்ளி பிரதீப் ஆகியோர் இடைவிடாது ஏற்பாடுகளை
 செய்து அரசு பள்ளிகளுக்கு இடையே அஞ்சல் துறை அஞ்சல் அட்டையை மூலம் அரசு பள்ளிகளுக்கு இடையே வாழ்த்து அட்டைகளை பரிமாறிக் கொள்ளச் செய்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அஞ்சல் அட்டையில் படம் வரைந்து இதர பள்ளிகளுக்கு அனுப்பி இருந்தனர்.

இதில் கோக்கலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் பள்ளி அளவில் ஐந்தாம் வகுப்பு மாணவன் அஜய்  முதல் பரிசையும், ஐந்தாம் வகுப்பு மாணவி ஆஷிகா இரண்டாம் பரிசும், நான்காம் வகுப்பு மாணவன் கிரண்குமார் மூன்றாம் பரிசும் பெற்றனர். சென்னை சிறு துளி மற்றும் கனவு மெய்ப்பட வேண்டும் குழு சார்பாக அனுப்பி வைக்கப்பட்ட சான்றிதழ்,பரிசு மற்றும் பதக்கத்தினை மாணவர்களுக்கு வழிபாட்டு கூட்டத்தில் வழங்கப்பட்டது.

................................................................................................................................................................................

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

தேர்தல் 2019 - PO - களுக்கு தேவையான பூர்த்தி செய்யப்பட்ட மாதிரிஅனைத்து படிவங்கள்   


என்றும் www.kalvicikaram.blogspot.in
www.kalvicikaram.com.
P.M.Elumalai .BT Asst Avalurpet 

Election 2019 - All Filled Model Forms For PO 

Click Here - Election 2019 - All Filled Model Forms For PO (pdf)

................................

கல்விச்சிகரத்தின் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


சனி, 13 ஏப்ரல், 2019






ELECTION - 2019 தேர்தல் பணியில் ஈடுபடும் PO,PO1,PO2,PO3 - அனைத்து பதிவுகளின் தொகுப்பு

அஞ்சல் வாக்கு 

சீட்டு செலுத்துவது 
எப்படி

EVM Seeting instructions - Election - 2019

































வியாழன், 11 ஏப்ரல், 2019

YEAR END FORMS 2018 - 2019 TO BE SUBMITTED TO BEO OFFICE

புதன், 10 ஏப்ரல், 2019

தமிழகத்தில் மொத்த தபால் ஓட்டுக்கள் எத்தனை? இது வரை எத்தனை தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளது அதன் முழு விவரம்.... 09.04.2019

*தமிழகத்தில் 3,27,903 பேருக்கு தபால் வாக்குகள் விநியோகம் செய்யப் பட்டுள்ளது, நேற்று வரை 47,610 தபால் வாக்குகள் பெறப் பட்டுள்ளது - சத்யபிரதா சாஹூ !!!.*

தமிழகத்தில் மொத்த தபால் ஓட்டுக்கள் எத்தனை? இது வரை எத்தனை தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளது அதன் முழு விவரம்....

வாக்குப்பதிவு பொருட்கள்

பாராளுமன்ற தேர்தல் பணிக்காக வேலை செய்ய இருக்கிற நாம் இந்த தொடரில் எப்படி வேலை செய்யனுங்கிறத வழிகாட்டிக் கொண்டிருக்கிறோம்.

மண்டல அலுவலர்கள் வாக்குச்சாவடியில் ஒப்படைத்த பொருட்களை எப்படி சரிபார்க்கிறது என்பதை இந்த பகுதியில பார்க்கப்போகிறோம்.
மண்டல அலுவலர் ஒரு சாக்குப்பையில் கொண்டுவந்து வாக்குப்பதிவு பொருட்களை கொடுக்கும் போதே உங்கள் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கையேடில் annexure 19 ல் உள்ளவாறு ஒரு பட்டியலை கொடுப்பார்.

அந்த பட்டியலை வைத்துக்கொண்டு வாக்குப்பதிவு பொருட்களை நாமசரிபார்க்கனும்.

அதிலே இல்லாத பொருட்களை குறித்து வைத்து அடுத்த முறை மண்டல அலுவலர் வரும்போது பட்டியலை கொடுத்தால் தவறிய பொருட்களை மண்டல அலுவலர் மீண்டும் உங்களிடத்திலே வழங்கிடுவார்.

அது சரிதான்..

வாக்குப்பதிவுக்கான பொருட்களில் எதை எதை எப்படி பார்க்கனும்.

அதை இனி சுருக்கமாக பார்ப்போம்..

மண்டல அலுவலர் வழங்கிய control unit, balloting unit( வாக்காளர் எண்ணிக்கையினை பொறுத்து BU ன் எண்ணிக்கை மாறும்)
பிறகு VVPAT ஆகியவற்றின் வரிசை எண்களை தனியாக குறிப்பேட்டில் பதிவு செய்துகொண்டு  யாரும் எளிதில் எடுக்க முடியாதவாறும், சூரிய ஒளி நேரடியாக படாதவாறும் மறைவிடத்திலும் வைக்க வேண்டும்.

அடுத்தபடியாக படிவங்களில், படிவம் 17 Register of Voters  வாக்காளர் எண்ணிக்கை அளவிற்கு போதுமானதா உள்ளதா எனவும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்தது Marked copy of electoral roll 1 no & working copy of electoral roll  3 No's இருக்கிறதா என பார்ப்பதுடன் அவைகள் பக்க எண்கள் விடுதலின்றி உள்ளதா?
எல்லா இணைப்புகளும் சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளவும்.

அதிலே மிக முக்கியமா கவணிக்க வேண்டியது *வழங்கப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் நீங்க பணிபுரிகிற வாக்குச்சாவடிக்கு உரியது தானானு ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்*

அடுத்தபடியா கவணமாக இருக்கவேண்டியது *Indelible ink*

10 CC அளவிலே இரண்டு பாட்டில்கள் வழங்கப்பட்டிருக்கும் அதில் மை உள்ளதா என்பதை சரிபார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

Green paper seal, strip seal, special tag இவைகளையும் கவணமாக தனியாக எடுத்து வைத்துக்கொள்வதோடு. அவற்றில் உள்ள *வரிசை எண்களை தனியாக குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.*

Distinguishing mark rubber stamp ஐ அது நீங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடிக்கு உரியது தானா என சரிபார்த்து தனியாக *உங்களின் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.*

Tendered votes க்காக சில வாக்குச்சீட்டுகளும் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.

அவற்றையும் அதன் வ.எண்களை குறித்துக்கொண்டு தனியாக எடுத்து உங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளுங்கள்

அடுத்ததாக மெட்டல்சீல்.

இவைகளை தனியாக பாதுகாப்பாக வைத்த பின்னர் வாக்குப்பதிவு பொருட்களுடன் வழங்கப்பட்ட படிவங்களை தனித்தனியாக எடுத்து நன்றாக படித்துப்பார்த்து நீங்கள் அறியும்வண்ணம் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

முதல் நாளில் உங்களை அணுகும் தேர்தல் முகவர்களிடம் வாக்குப்பதிவு நாளில் வாக்குப்பதிவு துவங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே உரிய ஆவணங்களுடன் வந்து வாக்குச்சாவடி முகவர்களாக பதிவு செய்துகொள்ள தெரிவித்து விடுங்கள்.

வாங்கிய பொருட்களை சரிபர்த்து வைத்த
பின்னர் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் Control unit, ballot unit, VVPAT ஆகியவற்றை இணைத்து அதனை ஒருமுறை வாக்குச்சாவடி அலுவலர்களுடன் இணைந்து இயக்கி சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் வழங்கப்பட்ட போஸ்டர்களை வாக்குச்சாவடிக்கு வெளியில் யாரும் கிழித்துவிடாதபடி பதுகாப்பாக ஒட்டிவிட்டு  நீங்கள் உறங்கச் செல்லுங்கள்.

உங்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று பணியாற்றிட போதிய தூக்கமும் அவசியம்...

இப்போ ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

*_தேர்தல் பணிகளை விரும்பிச் செய்வோம்.._*

*_தேர்தல் விதிகளை விளங்கச் சொல்வோம்.._*
 இந்த Appஐ உங்கள் phone ஐ install செய்து கொண்டால் தேர்தல் வீடியோக்கள் அனைத்தும் தமிழில் பார்க்கலாம்.

P.M.ELUMALAI   BT ASSISTANT PUMS KALATHAMPATTU MMR BLOCK VILLUPURAM DT

WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN  &WWW.KALVICIKARAM.COM 


CLIK HEAR
 https://drive.google.com/file/d/1nfT7QLzbabjbhJjzFNRFJqQdOBAuO-C1/view

..........................................................................................................

 மாதிரி வாக்குப்பதிவு-Mock poll

தேர்தல் நடைமுறைகளில் மிக மிக முக்கியமான நிகழ்வு மாதிரி வாக்குப்பதிவு.

இதனை முறையாக  நடத்தாவிடில் ஒட்டு மொத்த வாக்குப்பதிவும் செல்லாததாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே இந்த நடைமுறைகளை கவணமாக கையாளவும்.

Mock poll என்பது வாக்குப்பதிவு எந்திரம் முறையாக வேலை செய்கிறது என வாக்குப்பதிவு அலுவலர்களும், வாக்குச்சாவடி முகவர்களும் அறிந்து கொள்வதற்கான நடைமுறை ஆகும்.

இது வாக்குப்பதிவு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு  முன்பு துவங்கப்பட வேண்டும்.

தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்பாளர்களுக்கு Mock poll வாக்குப்பதிவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்  துவங்குவது குறித்து  தொடர்பான எழுத்துப்பூர்வமாக தெரிவித்திட வேண்டும்.

மாதிரி வாக்குப்பதிவு துவங்கும் போது குறைந்தபட்சம் இரு வேட்பாளர்களுடைய வாக்குச்சாவடி முகவர்கள் கட்டாயமாக இருக்க வேண்டும்.

முகவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பின் அடுத்த 15 நிமிடங்கள் வரை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் காத்திருக்க வேண்டும்.

அவகாசம் அளிக்கப்பட்ட நேரத்திற்கு பின் ஒரு முகவர் மட்டும் வந்திருந்தாலோ அல்லது எவரும் வரவில்லை என்றாலோ வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மாதிரி வாக்குப் பதிவினை தொடர்ந்து நடத்தலாம்.

இந்நிகழ்வில் வாக்குச்சாவடி முகவர்களின் வருகை இன்மை குறித்து மாதிரி வாக்குப்பதிவு சான்றிதழில் Mock poll certificate ல் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் குறிப்பிட வேண்டும்.

மாதிரி வாக்குப்பதிவின் போது ஒரு வாக்குப்பதிவு அலுவலரும் ஒரு முகவரும் வாக்களிப்பதற்கான மறைவிடத்தில் இருக்க வேண்டும்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்கு ஏதும் பதிவாகி இருக்கவில்லை என்பதையும் VVPAT உள்ளே வாக்கு பதிவு செய்யப்பட்ட சீட்டுகள் எதுவும் இல்லை என முகவர்களிடம் காட்டி உறுதி செய்த பின்னர் Ballot பட்டனை அழுத்தி  ஒவ்வொரு முகவரையும் வாக்குப்பதிவு செய்திட அனுமதிக்க    வேண்டும்.

மாதிரி வாக்குப்பதிவில் குறைந்தது 50 வாக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.

எந்த ஒரு வேட்பாளருக்கான தேர்தல் முகவர் இல்லையோ அந்த  வேட்பாளருக்கு பதிலாக வாக்குச்சாவடி அலுவலர்களில் ஒருவரோ அல்லது வருகை தந்திருக்கும் முகவர்களில் ஒருவரோ வாக்களிக்க வேண்டும்.

எல்லா வேட்பாளருக்கும் வாக்களிக்கப்பட்டுள்ளதை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.

நேரமிருப்பின் 50 ற்கும் அதிகமாகவும் வாக்குப்பதிவு செய்திட அனுமதிக்கலாம்.

அனைத்து முகவர்களையும் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட பின் கட்டுப்பாட்டு எந்திரத்தில் Close பட்டனை அழுத்தி Result பட்டனை அழுத்தி பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் விபரம் , வேட்பாளர் வாரியாக பெற்றவாக்குகளின் விபரம் , VVPAT ல் அச்சாகியுள்ள வாக்குகளின் விபரம் ஆகியவற்றை சரிபார்த்து முகவர்களிடம் உறுதி செய்ய வேண்டும்.

வாக்குப்பதிவிற்கு இடையில் VVPAT அல்லது  வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்டாலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்.

மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின் *Clear*  பட்டனை அழுத்தி எந்த வாக்காளர்களுக்கும்  வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை என முகவர்களிடம் காட்டி உறுதி செய்யவும்.

மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் கையேடு Annexure 14 ல் உள்ளவாறு Mock Poll Certificate தயார் செய்து வாக்குச்சாவடி முகவர்கள் ஒப்பம் பெற்று *வாக்குச்சாவடி தலைமை அலுவலர். நேரம் மற்றும் தேதியுடன் ஒப்பமிடவும்*

மாதிரி வாக்குப்பதிவு என்பது சட்டப்பூர்வமான நடைமுறை என்பதை கவணத்தில் வைத்து முறையாக இதனை நடத்துவது வாக்குச்சாவடி தலைமை அலுவலரின்  கடமையாகும்.

Mock Poll முடிச்சாச்சு..

இனி வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு Seal வைப்பது தான்...

நமக்கு வாக்குப்பதிவு பொருள்களோடு வழங்கப்பட்ட  Green paper seal, SPL Tag, Address tag, Strip seal இவைகளை எடுத்துக்கோங்க...

*_தேர்தல் பணிகளை விரும்பிச் செய்வோம்.._*

*_தேர்தல் விதிகளை விளங்கச் சொல்வோம்.._*
.........................................................................................................................................................................................