செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018
பள்ளியிலேயே மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவு: தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வி தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக 2011ம் ஆண்டு முதல் நேரடியாக வேலைவாய்ப்பு இணையதளத்தில் (https://tnvelaivaaippu.gov.in) பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தற்போது 2018ம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் வருகிற 16ம் தேதி வழங்கப்பட உள்ளதை அடுத்து 16.8.2018 முதல் 30.8.2018 வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம்.
மேலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது அவர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம்.
ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம்.
TNPSC : GROUP II - 2018 கவனத்தில் கொள்ள வேண்டியவை!
GROUP 2 2018 – கவனத்தில் கொள்ள வேண்டியவை
• இருப்பது 92 நாட்களே... கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்... கண்டிப்பாக முதல்நிலை தேர்வில் வெற்றி பெறும்படி இந்த நாட்களில் தயார் ஆவது மிக எளிது.
• மொத்த காலிப்பணியிடங்கள் 1199 என்பதால் சுமார் 12000 பேர் மட்டுமே மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்
• தோரயமாக
பொதுப்பிரிவினர்—372
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் -318
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்- 240
தாழத்தபட்டோர் -180
முஸ்லிம் -42
அருந்ததியினர் -35
பழங்குடியினர் -12
பேருக்கு பணி கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.... இறுதி மதிப்பெண் பட்டியலில் உங்கள் தரவரிசை உங்கள் இட ஒதுக்கீடு படி இதற்குள் இருந்தால் உங்கள் பணி உறுதி..
சமீப காலமாக போட்டி அதிகம் என்பதால் முதல்நிலைத் தேர்வில் முதல் 12000 பேர் தர வரிசையில் குறைந்தது 158+ கேள்விகள் சரியாக பதில் அளித்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.. கேள்வி எளிது என்றால் இன்னும் அதிகமாக பதில் அளிக்க வேண்டும்.. கடினம் என்றால குறைய வாய்ப்பு இருக்கிறது..
• புதிய புத்தகத்தில் தேவையானதை மட்டும் படித்து மற்றவற்றை புறந்தள்ளி விடலாம்
• முக்கியமாக மொழிப்பாடம்+கணிதம்+நடப்பு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்..ஏனெனில் முதல்நிலை மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ள போவதில்லை
• அதிகமாக பழைய மற்றும் மாதிரி வினாத் தாள்களை பயிற்சி செய்யுங்கள்
• நகராட்சி ஆணையாளர்,சார் பதிவாளர் போன்ற பசையுள்ள பதவிகள் வந்து இருப்பதால் ஏற்கனவே குருப் 2ல் பணி புரிபவர்கள் போட்டியிட்டு போட்டியை அதிகப்படுத்த வாய்ப்புண்டு.. எனவே போட்டியோ போட்டி..போட்டிக்கு எல்லாம் போட்டி தான் இந்த தேர்வு.. மனதில் வைத்துக் கொள்ளவும்
விண்ணப்பதை பிழை இல்லாமல் விண்ணப்பிக்கவும் இந்த அறிவிக்கை க்கு பிறகு குருப் நான்கு,குருப் 2A போன்ற அறிவிக்கை வர குறைந்தது பத்து மாதங்கள் ஆகலாம்..அல்லது ஒரு வருடம் மேலே ஆகலாம்... எனவே இந்த வாய்ப்பை தவறவிட்டால் நீங்கள் வாழ்க்கையை வெறுக்க வேண்டிய சூழ்நிலை வரும்...• மெயின் தேர்வு கண்டிப்பாக இருப்பதால் நீங்கள் படிக் வேண்டியதும் எழுதி பழக வேண்டியதும் கடல் அளவு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்...
By
V Siva Anantha Krishnan
Duty Officer
All India Radio
Tirunelveli
இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் புகார் தெரிவிக்க இலவச எண் அறிவிப்பு - 24 மணி நேரத்தில் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்த புகார்களை தெரிவிக்க 14417 என்ற இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
EMIS website ல் teacher details பதிவேற்றம் செய்வது எப்படி?
Step - 1:
EMIS teacher details பதிவேற்றம்
செய்யும் போது staff details option செல்லவும்.EMIS teacher details பதிவேற்றம்
Step-2 select செய்யவும்.
நம்முடைய பெயரின் மீது கிளிக் செய்யவும்.
Edit option click செய்யவும்.
Enable/ disable option click செய்யவும்.
விவரங்களை பதிவு செய்யவும்.
Step-3 ல் பதிவு செய்ய வேண்டாம்.
நம் பள்ளிக்கு புதிதாகவோ, மாற்றலாகியோ வந்திருந்தால் மட்டும் பதிவு செய்ய வேண்டும்.
ஏற்கெனவே பெயர் உள்ளவர்கள் பதிவு செய்தால் இன்னொரு முறை நம் பள்ளியின் கணக்கில் இரண்டு முறை நம் பெயர் காட்டும்.
..............................................................................................................................................................................
ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018
C & D RECORD ( தமிழ், ஆங்கிலம், கணக்கு) ( PRIMARY & UPPER PRIMARY)
CCE – READ, WRITE AND MATHS BASIC SKILLS FORMAT
Thanks
S.PRABUDOSS*
BT ASSISTANT (MATHS)
PUMS KUNNAPPATTU
THIRUPPORUR UNION
CHENGAI EDUCATIONAL DISTRICT.
THIRUPPORUR UNION
CHENGAI EDUCATIONAL DISTRICT.
EMIS தலைமை ஆசிரியர் உறுதிமொழி printout எடுக்கும் வழிமுறை
EMIS login page ல் நமது UserId மற்றும் password கொடுத்து login செய்த உடன் dashboard ல் student, school போன்ற pictures(box) தெரியும். அதில் இறுதியாக 4 வதாக வரும் HM DECLARATION PICTURE(BOX) ஐ click செய்தால் நமது பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆண்,பெண், மதம் மற்றும் இன வாரியாக page ல் தோன்றும் அந்த விவரம் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.
அவ்வாறு இல்லை எனில் emis - student ல் சென்று தவறாக உள்ள வகுப்பை open செய்து அந்த மாணவர்களின் விபரங்களை திருத்தம் செய்யவேண்டும்.
அதன் பிறகு HM DECLARATION ஐ open செய்து மாணவர்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்தப்பின் right click செய்தால் save as PDF என்ற option ஐ click செய்யவும். பிறகு மாணவர்கள் விவரங்களுக்கு கீழே ACCEPT & SUBMIT ஐ click செய்துவிடவும்.
அதன் பிறகு my computer ல் download folder ல் நாம் save செய்த தலைமை ஆசிரியர் உறுதிமொழி ஐ click செய்து அதனை printout எடுத்து தலைமை ஆசிரியர் கையொப்பமிட(with hm seal)வேண்டும்.
இதை அலுவலகத்தில் நமது அலுவலர்கள் சொல்லும் தருணத்தில் சமர்பிக்கப்படவேண்டும்.
................................................................................................................................................................
95 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாக தரம் உயர்வு...
சென்னை:தமிழகத்தில், 95 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையை, அரசு வெளியிட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக, ஐந்து பள்ளிகளை தரம் உயர்த்த, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மீதமுள்ள, 95 பள்ளிகளையும், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, பள்ளிக் கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ், அரசாணை பிறப்பித்துள்ளார்.
இதை பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.அரசாணைப்படி, அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்படும்.
முதற்கட்டமாக, தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில், தலா, ஒரு முதுகலை ஆசிரியர் பணியிடம், புதிதாக ஏற்படுத்தப்படும்.இந்த பள்ளிகளில், கலை பாடப்பிரிவு துவங்கப்பட்டு, அதில், ஊரகப் பகுதிகளில் இருந்து, 15 மற்றும் நகர் பகுதிகளில் இருந்து, 30 மாணவர்கள் சேர்க்கப்படுவர். அதில், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியலுக்கு, தலா, ஒரு முதுநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு ஒப்புதல் தரப்படும்.
காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், நீலகிரி, பெரம்பலுார், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தலா, 1; அரியலுார், கடலுார், திண்டுக்கல், துாத்துக்குடி, தலா, 2 தரம் உயர்த்தப்படுகின்றன.திருச்சி, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தலா, 3; தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, தலா, 4 ஆகியவை தரம் உயர்த்தப்படுகின்றன.
திருவள்ளூர், விழுப்புரம், மதுரை, கோவை, தலா, 5; வேலுார், 6; சேலம், 7 என, 30 மாவட்டங்களில், மொத்தம், 95 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
95 நடுநிலை பள்ளிகள் உயர்நிலையாக உயர்வு
தமிழகத்தில் செயல்படும், 95 அரசு நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. புதிதாக, ஐந்து பெண்கள் உயர் நிலை பள்ளிகளும் அமைகின்றன.
திண்டுக்கல், அரியலுார், கரூர், நீலகிரி, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், தலா, 2; காஞ்சி புரம், நாகப்பட்டினம், திருவாரூர், வேலுார், விருதுநகர் மாவட்டங்களில், தலா, 3; ஈரோடு, தேனி, துாத்துக்குடி, பெரம்பலுார், கடலுார், ராமநாதபுரம் மாவட்டங்களில், தலா ஒரு நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும், திருவள்ளூர், திருவண்ணாமலை, நாமக்கல், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், தலா, 4; தர்மபுரி மற்றும் மதுரையில், தலா, 5; சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களில், தலா, 6 என, 31 மாவட்டங்களில், மொத்தம், 95 நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இதுதவிர, பெரம்பலுார், பண்ருட்டி, திருப்பூர் - பெருமாநல்லுார், வேலுார் - திருமால்பூர் மற்றும் விழுப்புரம் - ஜீ ஆரியூர் என, ஐந்து இடங்களில், பெண்கள் உயர்நிலை பள்ளிகள் புதிதாக அமைகின்றன. தரம் உயர்த்தப்பட்ட மற்றும் புதிதாக துவக்கப்படும் பள்ளிகளுக்காக, 500 பட்டதாரி பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
முகநூல் பக்கத்தில் இணைய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
பள்ளிக்கல்வித் துறையின் முகநுால் பக்கத்தில் இணையும்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள்அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
பள்ளிக்கல்வித் துறையில், பாடத்திட்டம் மாற்றத்தை தொடர்ந்து, நிர்வாக பணிகள், கற்பித்தல் பணிகள் போன்றவற்றையும், டிஜிட்டல் முறைக்கு மாற்ற, பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.முதற்கட்டமாக, அனைத்து மாணவர்களின் விபரங்களையும், 'எமிஸ்' என்ற, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் இணைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்களை பயன்படுத்தி, போலி மாணவர் பதிவுகளை நீக்கவும், பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
அதேபோல், பாடத்திட்ட மாற்றத்தின்படி, 'வீடியோ' வழி பாடங்கள் நடத்தவும், 'ஸ்மார்ட்' வகுப்புகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதன் ஒரு கட்டமாக, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிெபறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், பள்ளி கல்வியின், 'வொர்க் பிளேஸ்' என்ற, முகநுால் பக்கத்தில் இணைய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதற்காக ஆசிரியர்கள், 'வொர்க் பிளேஸ்' என்ற, முகநுால் பக்கத்திற்கு சென்று, அதிலுள்ள, குரூப்பில் இணைவதற்கான விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.அதிகாரிகள் அவர்களின் விபரங்களை சரி பார்த்து, குரூப்பில் இணைய அனுமதி அளிப்பர். அதன்பின், அவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட குரூப்பில் இணைக்கப்படுவர்.
அதில், ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் முறை, தனித்திறன் உள்ளிட்டவற்றை பதிவு செய்யலாம். அவற்றை மற்ற ஆசிரியர்களும் பார்த்து, தெரிந்து கொள்வர்.ஆசிரியர்களின் புதிய கற்பித்தல் முறைகள், வழிமுறைகள் நன்றாக இருந்தால், அவற்றை மற்ற பள்ளிகளிலும் செயல்படுத்த, அதிகாரிகள் அறிவுறுத்துவர்.எனவே, ஒரு ஆசிரியரின் திறமை, மற்ற பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் வகையில், இந்த திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
.................................................................................................................................................................
Flash News: SSA - BRTEs Transfer to Schools - New GO Published
அரசாணை (1D) எண். 556 Dt: August 09,
2018 பள்ளிக் கல்வி அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், மாநிலமற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வளமையங்களில் பணிபுரியும் 3890 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில்தற்போதைய மாநில காலிப்பணியிட சராசரியான 15சதவிகிதத்தை அனைத்துமாவட்ட மற்றும் வட்டார வள மையங்களுக்கும் பொதுவான காலிப்பணியிடமாக ஒதுக்கிவிட்டு, பொது கலந்தாய்வின் மூலம் பணி நிரவல் செய்துஅனைத்து
click here to download ............அரசாணை (1D) எண். 556 Dt: August 09, 2018
பள்ளிக் கல்வி – அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், மாநில மற்றும்மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில்பணிபுரியும் 3890 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் தற்போதைய மாநிலகாலிப்பணியிட சராசரியான 15சதவிகிதத்தை அனைத்து மாவட்ட மற்றும்வட்டார வள மையங்களுக்கும் பொதுவான காலிப் பணியிடமாகஒதுக்கிவிட்டு, பொது கலந்தாய்வின் மூலம் பணி நிரவல் செய்து அனைத்துமாவட்டங்களுக்கும் மாறுதல் வழங்கி பொதுக் கலந்தாய்வு நடத்த அனுமதி –ஆணை வெளியிடப்படுகிறது.
..........................................................................................................
G.O.NO:-167 Dt: August 07, 2018 -பள்ளிக் கல்வி – தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகள், நிதி உதவி பெறும் அனைத்து வகையான பள்ளிகள் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மற்றும் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் – உரிய அமைப்பிடமிருந்து பள்ளிக் கட்டிட அனுமதி பெறாத பள்ளிகளின் தற்காலிக தொடர் அங்கீகாரம் 31.05.2019 வரை நீட்டித்து – ஆணை வெளியிடப்படுகிறது_*
பள்ளிக் கல்வி – தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகள், நிதி உதவி பெறும் அனைத்து வகையான பள்ளிகள் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மற்றும் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் – உரிய அமைப்பிடமிருந்து பள்ளிக் கட்டிட அனுமதி பெறாத பள்ளிகளின் தற்காலிக தொடர் அங்கீகாரம் 31.05.2019 வரை நீட்டித்து – ஆணை வெளியிடப்படுகிறது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)