வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 3
கிரிகோரியன் ஆண்டின் 215 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 216 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 150 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
70 – எருசலேமில் இரண்டாம் கோவில் அழிக்கப்பட்டதை அடுத்துக் கிளம்பிய தீ அணைக்கப்பட்டது.
435 – நெஸ்டோரியனிசத்தை ஆரம்பித்தவர் எனக் கருதப்படும் கான்ஸ்டண்டினோபிலின் ஆயர் நெஸ்டோரியசு பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் எகிப்துக்கு நாடுகடத்தப்பட்டார்.
1057 – பெல்ஜியரான ஒன்பதாம் இசுடீவன் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1492 – கிறித்தோபர் கொலம்பசு எசுப்பானியாவை விட்டுப் புறப்பட்டார்.
1601 – நீண்ட துருக்கியப் போர்: ஆத்திரியா டிரான்சில்வேனியாவைக் கைப்பற்றியது.
1645 – முப்பதாண்டுப் போர்: செருமனியில் நோர்திலிங்கன் சமரில் பிரெஞ்சுப் படைகள் புனித உரோமைப் பேரரசுப் படைகளைத் தாக்கி வெற்றி பெற்றனர்.
1678 – அமெரிக்கப் பேரேரிகளில் முதலாவது கப்பல், லெ கிரிஃபோன் அமைக்கப்பட்டது.
1795 – அமெரிக்காவில் வடமேற்கு இந்தியப் போர் முடிவுக்கு வந்தது.
1858 – இலங்கை தொடருந்து சேவையை ஆளுநர் சேர் என்றி வோர்ட் ஆரம்பித்து வைத்தார்.
1860 – நியூசிலாந்தில் இரண்டாவது மாவோரி போர் ஆரம்பமானது.
1914 – முதலாம் உலகப் போர்: செருமனி பிரான்சுடன் போர் தொடுத்தது.
1936 – உருசியாவின் ரியாசன் மாகாணத்தில் தொழிற்துறைக் குடியிருப்பு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 1,200 பேர் உயிரிழந்தனர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் படையினர் பிரித்தானிய சோமாலிலாந்து மீது போர் தொடுத்தது.
1946 – உலகின் முதலாவது பல வணிக நோக்குடைய கேளிக்கைப் பூங்கா அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
1949 – அமெரிக்காவின் என். பி. ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்) அமைப்பு உருவானது.
1959 – போர்த்துகலின் அரசக் காவல்துறையினர் போர்த்துக்கீச கினியின் பிசாவு நகரில் பணி நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1960 – நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1975 – மொரோக்கோவில் தனியார் விமானம் ஒன்று மலையில் மோதியதில் 188 பேர் உயிரிழந்தனர்.
1976 – காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1990 – காத்தான்குடித் தாக்குதல் 1990: கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் முசுலிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.
1997 – அல்சீரியாவில் இரு கிராமங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 146 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
2005 – மூரித்தானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் மாவோயா ஊல்ட் தாயா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2006 – திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த பொதுமக்கள் 12 பேர் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.
2014 – சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இடம்பெற்ற 6.1 அளவு நிலநடுக்கத்தில் 617 பேர் உயிரிழந்தனர், 2,400 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
1347 – அலாவுதின் பாமன் சா, பாமினிப் பேரரசின் சுல்தான் (இ. 1358)
1856 – ஆல்பிரெட் டிக்கன், ஆத்திரேலியாவின் 2வது பிரதமர் (இ. 1919)
1869 – இவான் இவானோவிச் செகால்கின், உருசியக் கணிதவியலாளர் (இ. 1947)
1884 – நான்காம் கிருட்டிணராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1940)
1886 – மைதிலி சரண் குப்த், இந்தியக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1964)
1890 – ஸ்ரீ பிரகாசா, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1971)
1913 – ஸ்ரீபாத பினாகபாணி, தென்னிந்தியக் கருநாடக இசைப்பாடகர், மருத்துவர் (இ. 2013)
1923 – தோர்ப்சான் சிக்கிலேண்டு, நார்வே வேதியியலாளர் (இ. 2014)
1945 – வாணிஸ்ரீ, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1948 – வே. ம. அருச்சுணன், மலேசியத் தமிழ் எழுத்தாளர்
1950 – ஆறு. இராமநாதன், தமிழக எழுத்தாளர்
1960 – கோபால் சர்மா, இந்தியத் துடுப்பாட்ட வீரர்
1979 – இவாஞ்சலீன் லில்லி, கனடிய நடிகை
1984 – சுனில் சேத்ரி, இந்தியக் கால்பந்தாட்ட வீரர்
1989 – இழூல்சு பியான்கி, பிரெஞ்சு காரோட்ட வீரர் (இ. 2015)
சிறப்பு நாள்
விடுதலை நாள் (நைஜர், பிரான்சிடம் இருந்து 1960)
No comments: