>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 11 ஜூலை, 2018

EMIS Latest News - மாணவர்களின் மொத்த சேர்க்கையினை வகுப்பு வாரியாக முதல் பக்கத்தில் பதிவு செய்யவும்!


















EMIS இல் உடனடியாக செய்ய வேண்டியது

அனைத்து தலைமையாசிரியர்கள் பார்வைக்கு......

தங்கள் பள்ளியின் EMIS WEB PAGEல் LOGIN செய்து....
தற்போது கோரப்பட்டுள்ள ENROLLMENT ABSTRACT ஐ 
பூர்த்தி செய்து SAVE கொடுக்கவும்.....

புதிய தலைமையாசிரியர்கள் மாறுதல் பெற்று வந்திருப்பின் 
அவர்களது பள்ளியின் emis pageல் உள்ள பழைய
 தலைமையாசிரியர் MOBILE NOஐ மாற்றி தங்களது 
 MOBILE NOஐ ENTRY செய்து SAVE செய்யவும்.....

தொடக்கப்பள்ளிகள் 1 முதல் 5 வரையிலும்....
நடுநிலைப்பள்ளிகள்1 முதல் 8 வரையிலும்....

 தற்போதுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை
 வகுப்பு வாரியாக பூர்த்தி செய்யவும்....

மற்ற வகுப்புகளுக்கு 0 என பூர்த்தி செய்து SAVE செய்யவும்....
............................................................................................................................................

சனி, 7 ஜூலை, 2018

ஊரக பகுதி மாணவ / மாணவியருக்கான தேசிய திறனாய்வு தேர்வு 2018 அறிவிப்பு மற்றும் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் வெளியீடு!!!



DIKSHA - New Syllabus QR code - Downloading Video - All Guide & Tutorial


QR GUIDE PPT DIRECT MOBILE VIEW LINKS



3. SCREEN CAST MOBILE - PROJECTOR - HOW?









QR CODE SCANNING YOUTUBE VIDEO PLAYLIST


SYSTEM DOWNLOAD - DRIVE LINKS

6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி 09.07.2018 முதல் நடைபெறுதல் – பாட ஆசிரியர்களை விடுவித்தல் மற்றும் பயிற்சி நடைபெறும் இடம், Training time 9 am to 5.30 pm




NMMS -STUDY MATERIAL - SCIENCE TM

வெள்ளி, 6 ஜூலை, 2018

தேர்வுக்கான பாடப்பகுதிகள் என்ன? பிளஸ் 1 மாணவர்கள் குழப்பம்...

பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தில், காலாண்டு, அரையாண்டு தேர்விற்கான பாடப்பகுதிகளை வெளியிடாததால், மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

பாடத்திட்டம் மாற்றம்
தமிழக பள்ளிக்கல்வித்துறையில், பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழக பாடத்திட்ட மாணவர்கள் நுழைவு தேர்வை எதிர்கொள்ளும் வகையில், பிளஸ் 1ல், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பொதுத்தேர்வு வினாத்தாளில், 20 சதவீத அளவுக்கு, மாணவர்களின் சிந்தனை திறனை பரிசோதிக்கும் கேள்விகள் இடம் பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுத்தேர்வுக்கான, வினாத்தாள் கட்டமைப்பு என்ற, 'ப்ளூ பிரின்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நுழைவு தேர்வுகளுக்கு ஏற்ப, பாடத்திட்டங்களும் மாற்றப்பட்டுள்ளன.

இதன்படி, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம், இந்த ஆண்டு முதல் அறிமுகமாகி உள்ளது. இந்த பாடத்திட்டப்படி, பாடம் நடத்தும் முறைகள் குறித்து, சமீபத்தில் தான், கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோரிக்கை
இந்த கருத்தாளர்கள், வரும் வாரங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர். இதுவரை பயிற்சி இல்லாததால், பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதனிடையே, புதிய பாடத்திட்டத்தில், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கான பாடப்பகுதிகள் என்னவென்று, பள்ளி கல்வித்துறை இன்னும் அறிவிக்கவில்லை.அதனால், சரியான வழிகாட்டுதல் இல்லாமல், எந்த பாடங்கள் வரையிலும் தேர்வுகள் நடத்தப்படும்; அதற்கான வினாக்கள் எப்படி இருக்கும் என, மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

எனவே, புதிய பாடத்திட்டத்தில், பருவ தேர்வுகளுக்கான பாடப்பகுதிகளை, பள்ளிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என, மாணவர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

பள்ளி வந்ததும் தோப்புக்கரணம் மாணவருக்கு சூப்பர் பயிற்சி

கோபி:வகுப்பறையில் சுறுசுறுப்பாக இருக்க, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, தோப்புக்கரணம் போட்டு, பயிற்சி அளிக்கப் படுகிறது.

ஈரோடு, கோபி கல்வி மாவட்டத்தில், வேங்கம்மையார் நகரவை உயர்நிலைப் பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியை அலமேலு தலைமையில், எட்டு ஆசிரியர்கள் உள்ளனர். 6 - 10ம் வகுப்பு வரை, 155 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
காலை, 9:30 மணிக்கு, பள்ளி துவங்கியதும், மாணவர்கள் சுறுசுறுப்பாக இருக்க, தோப்புக்கரணம் பயிற்சி அளிக்கின்றனர். ஒவ்வொரு மாணவரும், 10 தோப்புக்கரணம் போடுகின்றனர்.ஆசிரியர்கள் கூறியதாவது:அனைத்து பயிற்சிக்கும் முன்னோடியாக, தோப்புக்கரணம் திகழ்கிறது. இதை செய்வதால், அனைத்து நரம்பு மண்டலத்துக்கும், சீரான ரத்த ஓட்டம் கிடைத்து, மாணவர்கள் சுறுசுறுப்படைவர். காதை பிடித்து, உட்கார்ந்து எழும்போது, மூளை நரம்புகள் துாண்டப்படும்.இதனால், மூளை செயல்பாட்டை ஒருநிலைப்படுத்த முடியும். ஆட்டிசம் குறைபாடு தவிர்க்கப்படும்; கற்றல் குறைபாடு நிவர்த்திஆகும். 
தொடர் பயிற்சியால், வகுப்பு துவங்கும் முன்பே, அவரவர் வகுப்பறையில், மாணவர்கள், தாங்களாகவே ஆர்வமாக தோப்புக்கரணம் போடுகின்றனர். உடல்நிலை சரியில்லாவிடில், கட்டாயப் படுத்துவதில்லை. இதேபோல், நகம் வெட்டுதல், கைகளை சுத்தமாக கழுவுதல், என சுகாதாரத்துக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறோம். இதனால், எங்கள் மாணவர்களுக்கு, தலைவலி, வயிற்றுவலி மற்றும் காய்ச்சல் அறிகுறி ஏற்படுவதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்டில் பாடங்கள்; கற்பிக்கும் ஆசிரியர் பயிற்றுனர்



ராமநாதபுரம் : அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர் ஒருவர், தனது சொந்த செலவில் ஸ்மார்ட் போர்டு வாங்கி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கிறார். 

ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தை சேர்ந்தவர் உலகராஜ். அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனரான இவர், வில்லுப்பாட்டு, நாட்டுப்புற இசை மூலம் மாணவர்களை கவரும் வகையில் ஏற்கனவே பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். 

தற்போது, தனியார் பள்ளிகளில் பயன்படுத்துவது போன்ற ஸ்மார்ட் போர்டு கல்வியை அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்கி வருகிறார். 'இன்ராக்டிவ்' என்ற கருவி மூலம், புரஜெக்டர் உதவியுடன் ஸ்மார்ட் போர்டு மூலம் பாடம் நடத்தி வருகிறார். இதில், பென் டிரைவ் பயன்படுத்தியும் பாடங்கள் நடத்தலாம்.

இதே முறையில் வேலுார் மாவட்டம் வாணியம்பாடியில் ஆசிரியர் அருண்குமார் மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார். இதை அறிந்த உலகராஜ் அவரிடம் சென்று இதனை கற்று வந்துள்ளார். இதற்காக ரூ.80 ஆயிரம் சொந்த செலவில், புரஜெக்டர், லேப்டாப் , இன்ட்ராக்டிவ் கருவி, ஸ்பீக்கர், ஸ்கிரீன் உள்ளிட்ட உபகரணங்கள் என வாங்கியுள்ளார். 

ஒவ்வொரு அரசுப் பள்ளிகளுக்கும் சென்று இந்த முறையில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று ஸ்மார்ட் போர்டில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். லேசர் பேனாவை மாணவர் கையில் கொடுத்து ஸ்கிரீனில் எழுதப்படும் ஆங்கில வார்த்தையை அப்படியே எழுத வேண்டும். அந்த மாணவர் சரியாக எழுதும் வரை கற்றுக்கொடுக்கப்படுகிறது.


இதனால், கூடுதல் பயிற்சி கிடைக்கும். சரியாக எழுதியதும் வாழ்த்துக்கள், சிறப்பு, நன்று, என அறிவிப்பு வருவதுடன், மத்தாப்பு கொளுத்துவது போல், கைதட்டல், கை கொடுப்பது, டாடா காட்டுவது போல் திரையில் வரும். இதை பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாணவர்கள் எளிதல் உற்சாகத்துடனும், கற்றலில் ஈடுபாட்டுடன் கல்வி கற்க முடிகிறது, என்றார் உலகராஜ்.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் அரசு தேர்வுகள் தனியாரிடம் ஒப்படைப்பு...

 டிஎன்பிஎஸ்சி நடத்தும் அரசு தேர்வு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க  நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் ஆன்லைனில் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் தேர்வர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மாநில அளவில் நிர்வாகத்தில் மாவட்ட துணை கலெக்டர், காவல்துறை துணை கண்காணிப்பாளர்(டிஎஸ்பி), வணிக வரித்துறை உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அதிகாரி உள்ளிட்ட குரூப் 1 பதவியையும், குரூப் 2, குரூப் 4, வி.ஏ.ஓ., உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது.

முதலில் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு வந்தது. அந்த முறை மாற்றப்பட்டு ஆன்லைன் மூலம் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்கும் புதிய முறை கொண்டுவரப்பட்டது. தற்போது அனைத்து தேர்வுகளும் ஓஎம்ஆர் தாளில் கொள்குறி (டிக் அடிக்கும் முறை) வகையில் தேர்வர்கள் எழுதி வருகின்றனர். 

இந்த நிலையில் அதிரடியாக எழுத்து தேர்வை கணினி மூலம் நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான முயற்சியில் டிஎன்பிஎஸ்சி மும்முரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தேர்வு நடத்தும் பணிகளை தனியாரிடம் அளிக்க டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.

கணினி மூலம் நடத்தப்படும் தேர்வுகளை நடத்துவதற்காக தனியாரிடம் ஒப்பந்த புள்ளியை டிஎன்பிஎஸ்சி கோரியுள்ளது. ஒப்பந்தபுள்ளியை ஆகஸ்ட் 2ம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். டெண்டர் குறித்த விவரங்களை www.tenders.tn.gov.in, www.tnpsc.gov.inல் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சியின் இந்த அறிவிப்புக்கு தேர்வு எழுதுவோர் மற்றும் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்விலும் அதிகரித்து வருகிறது. குறைந்தப்பட்சம் ஒவ்வொரு தேர்வுக்கும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.



ஒரு பதவிக்கே சுமார் 250 பேர் போட்டியிடும் சூழ்நிலை நிலவி வருகிறது. எப்படியாவது அரசு பணியை பிடித்து விட வேண்டும் என்ற எண்ணமே ஒவ்வொரு தேர்வுக்கும் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காட்டி வருகிறது. இந்த நிலையில் தனியாரிடம் ஒப்படைப்பது முறைகேடுக்கு வழிக்கும்.

அப்படி தனியாரிடம் ஒப்படைத்தால் தேர்வு எழுதி அரசு பதவியை பெற நினைப்பவர்களின் எண்ணம் கானல் நீராக போய் விடும் என்றும் சமூக ஆர்வலர்கள், தேர்வு எழுதுபவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, தேர்வு நடத்தும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்று டிஎன்பிஎஸ்சிக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கிராமப்புற மாணவர்களுக்கு சிக்கல்: டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களில் 20 முதல் 30 சதவீதம் பேருக்கு மட்டுமே கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வழக்கம் ெகாண்டவர்கள். கிராமங்கள், புறநகர்களில் இந்த வசதி இல்லை. எனவே, கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்கள் இதற்காக பல ஆயிரங்களை செலவழித்து தேர்வு எழுத வேண்டியிருக்கும். காரணம் சில நூறு ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கவே முடியாதநிலையில்தான் பல மாணவர்கள் தேர்வில் தோல்வி தழுவும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. முழு அளவில் கம்ப்யூட்டர் அறிவு இல்லாத மாநிலமான தமிழகத்தில் இதுபோன்ற திடீர் அறிவிப்புகள் மாணவர்கள், தேர்வர்கள், போட்டியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

என்ன விபரீதம் நடக்கும்?

வட மாநிலங்களில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான வினா தாள்கள் நெட் சென்டர்களில் சர்வசாதாரணமாக விற்கப்படுகிறது. குறிப்பாக மத்திய அரசு பணிகளான ரயில்வே, ஐசிஎப், தபால் துறை பணிகளுக்கான வினாத்தாள்கள் ெடல்லியில் உள்ள சில இன்டர்நெட் சென்டர்களில் விற்கப்படுகிறது. சமீபத்தில் கூட சென்னையில் நடந்த தபால் துறை தேர்வில் பீகார் மாணவர்கள் தமிழில் 100 சதவித மதிப்பெண் ெபற்றனர்.

ஆனால் தமிழகத்தை சேர்ந்த தமிழை தாய் மொழியாக கொண்ட தேர்வர்களால் இந்த மதிப்பெண்ணை பெற முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் சில தனியார் இன்டர்நெட் மையங்கள் ேதர்வு நடத்தும் மையங்களில் உள்ள ஊழியர்களிடம் ரகசிய கூட்டணி வைத்து வினாத்தாள்களை லீக் செய்வதுதான். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த தனியாரிடம் ஒப்படைத்தால் வினாத்தாள் எளிதாக லீக்காகும் வாய்ப்பு உள்ளது

"SAKSHAM"NATIONAL COMPETITIONS - 2018 Essay, Painting and Quiz - Bumper Prizes to be won - worth over Rs 2 Crores.

பிளஸ்1 வகுப்புக்கு 3 விதமான கம்ப்யூட்டர் புத்தகம் அறிமுகம் பணிச்சுமையால் ஆசிரியர்கள் அதிருப்தி


*🔴பிளஸ்1 வகுப்புக்கு 3 விதமான கம்ப்யூட்டர் புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பணிச்சுமை அதிகரிப்பால் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்*

*🔴தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ்1 வகுப்புகளுக்கு புதிய பாடதிட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது*

*🔴ஒவ்வொரு பாடத்தின், புதிய பாடதிட்ட புத்தகங்கள் அதிக பக்கங்களை கொண்டதாகவும், தரமாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறி வருகின்றனர்*

*🔴அதன்படி பிளஸ்1 வகுப்புக்கு இந்த ஆண்டு 3 விதமான கம்ப்யூட்டர் பாடபுத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது*

*🔴கணிதம், கம்ப்யூட்டர் பிரிவுக்கு கம்ப்யூட்டர் அறிவியல் தொடர்பான பாடங்கள், கலைப்பிரிவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடுகள், தொழிற்கல்வி பிரிவுக்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தொடர்பான பாடங்களும் இடம்பெற்ற புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது*

*🔴இதற்கு முன் பிளஸ்1, பிளஸ்2 வகுப்புக்கு ஒரே மாதிரியான புத்தகங்கள் தான் இருந்தது*

*🔴தற்போது அது 3 ஆக மாற்றப்பட்டுள்ளது. தொழிற்கல்வி பிரிவில் உள்ள 2 செய்முறை பாடத்தில் ஒரு பாடம் நீக்கப்பட்டு, அதற்கு பதில் கம்ப்யூட்டர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்*தெரிவித்தனர*

வியாழன், 5 ஜூலை, 2018

VIDEO LESSON STD 5 TERM - I LESSON -2 DWELING PLACES OF ANIMALS





VIDEO LESSON STD 5 TERM - I LESSON -2 DWELING PLACES OF ANIMALS





1st to 5th - Month Wise Syllabus - 2018 - 19

Science Experiments For Primary & Upper Primary

பைக்கில் செல்லும் இருவரும் கண்டிப்பாக ஹெல்மேட் போட வேண்டும்: உயர்நீதிமன்றம் அதிரடி


இருசக்கர வாகனங்களில் இருவர் சென்றால் கட்டாயமாக ஹெல்மேட் அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாலை விபத்துகளை தடுக்க காரில் சீட் பெல்ட் அணிவதும், இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவதும் கட்டாயம் என்பது தொடர்பான வழக்கை இன்று விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இந்த தீர்ப்பில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும் என்றும், காரில் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் அதிரடியாக கூறியுள்ளது. இந்த விதிமுறைகளை வரும் 27ம் தேதிக்குள் கட்டாயமாக்கி சட்டம் பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை உறுதி செய்யவும். இருசக்கர வாகனங்களில் பகல் நேரங்களில் எல்இடி விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

  1. BE - கவுன்சிலிங் நாளை துவக்கம்!

  2. இன்ஜினியரிங் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, சிறப்பு பிரிவினருக்கான ஒற்றை சாளர கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. தகுதி பெற்ற மாணவர்கள், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கு நேரில் வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


  3.   இது குறித்து, அண்ணா பல்கலையின், இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, ஜூலை, 6ல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. தகுதியுள்ள மாணவர்கள், அன்று சென்னைக்கு வந்து, கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.இதற்கான தகவல்கள், மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்கள், ஜூலை, 7ல் நடக்கும் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு, ஜூலை, 8ல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

  4. சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதி பெற்றவர்கள், சென்னைக்கு வந்து கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். காலை, 9:00 மணி, 10:30 மணி மற்றும் நண்பகல், 12:00 மணி என, மூன்று கட்டங்களாக, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இதற்கான தகவல்கள், மாணவர்களுக்கு, இ - மெயில், எஸ்.எம்.எஸ்., வழியே அனுப்பப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.'ஆன்லைன்' கவுன்சிலிங் எச்சரிக்கைபொது பிரிவு மாணவர்கள், தங்களின் விருப்ப பாடப்பிரிவு மற்றும் விருப்ப கல்லுாரியை பதிவு செய்யும் நடவடிக்கைகளை, https://www.tnea.ac.in மற்றும் https://www.annauniv.edu ஆகிய இணையதளங்களில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என, இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் அறிவித்துள்ளார்.

  5. மேலும், ஆன்லைன் கவுன்சிலிங்கின்நடைமுறைகளும், இன்ஜி., மாணவர் சேர்க்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

புதன், 4 ஜூலை, 2018

CPS-ஏற்கனவே பிடித்தம் செய்திட்ட எண்ணில் உள்ள தொகையை புதிதாகப்பெற்ற கணக்கு எண்ணுக்கு மாற்றம் செய்வது எவ்வாறு வழிகாட்டல் RTI கடிதம்