>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 4 ஜூலை, 2018

புதிய பாடத் திட்டம்: ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சிப் புத்தகம்....




புதிய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்த பயிற்சி புத்தகம் ஆசிரியர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் 1, 6, 9, பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கான பாடத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டத்திலான பாடநூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் மாவட்ட வாரியாக 40,000 ஆசிரியர்களுக்கு ஜூலை 9-ஆம் தேதி முதல் ஜூலை 21 ஆம் தேதிவரை பயிற்சி அளிக்கவுள்ளனர்.
இதற்கிடையே, புதிய பாடத் திட்டத்தின் படி இனி எப்படி பாடங்களை நடத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சிப் புத்தகம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதில், புதிய பாடத் திட்டங்களுக்கு மாணவர்களை எவ்வாறு தயார் செய்வது, புரியும் வகையில் எப்படி பாடங்களை நடத்துவது, பயிற்சிகளை எவ்வாறு அளிப்பது உள்ளிட்ட தீவிரமான ஆலோசனைகள், அறிவுரைகள் இருக்கும். அரசு பள்ளி ஆசிரியர்கள் முறையான வழிமுறைகளில் பாடங்களை மாணவர்களுக்கு நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கையேடு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது மாநில வழிக் கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்கள் முறைப்படி கற்பிக்க உதவியாக இருக்கும். 
பாடங்களை திட்டமிடல், வரைபடத்துடன் விளக்குதல், வகுப்புகளில் தேர்வுகள் நடத்துதல் உள்ளிட்டவற்றை சிறப்பாகச் செய்யும் வகையிலான தகவல்கள் இந்தப் பயிற்சி புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக, இயற்பியல் பாடத்தை பெயரளவுக்கு நடத்தி விட்டுச் செல்லாமல், அதை தொழில்நுட்பரீதியாக புரொஜெக்டர் மூலம் நடத்தும்போது மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும். அவ்வாறு செய்வது எப்படி என்று இதில் கொடுக்கப்பட்டிருக்கும்.
கல்வித் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களால் எழுதப்பட்ட கையேடு என்பதால், ஆசிரியர்கள் திறன் மிகுந்த வகையில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கவும் பல்வேறு நவீன புத்தாக்க முறையில் பாடங்களை நடத்தவும் உதவியாக இருக்கும். ஆசிரியர்களுக்கான பயிற்சிப் புத்தகத்தை புதிய பாடத் திட்ட பயிற்சியின்போது வழங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏன் ஏற்கக் கூடாது?: அரசியல் கட்சிகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி....



தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் அரசியல் கட்சியினர், படிப்பில் சிறந்து விளங்கும் 10 ஏழை மருத்துவ மாணவர்களின் கல்விச் செலவை ஏன் ஏற்கக் கூடாது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி விக்நயா உள்ளிட்ட 7 பேர் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவில், எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையின்போது தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பிற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் போலியான இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து சேர்க்கை பெற்றுள்ளனர். இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழக மாணவர்களுக்கே தமிழகத்தில் உள்ள மருத்துவ இடங்களை ஒதுக்க உத்தரவிட வேண்டும். தரவரிசைப் பட்டியலையும் ரத்து செய்து புதிதாக வெளியிட வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில், தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள், பிற மாநிலங்களிலும் மருத்துவ சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ளனரா என்பது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்றும் உத்தரவிட்டிருந்தார். 
இந்த வழக்கு மீண்டும் நீதிபதி என்.கிருபாகரன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்காக நடப்பாண்டில் 1250-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் எத்தனை பேர் பிற மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்ற விவரங்கள் எதுவும் இல்லை.
இரட்டை இருப்பிடச் சான்றிதழ் விவகாரத்தால் தமிழக மாணவர்களின் உரிமை பறிபோகின்றது. எனவே மத்திய அரசு, கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுச்சேரியைச் சேர்ந்த எத்தனை மாணவர்கள் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். தற்போது எத்தனை பேர் பிற மாநிலங்களில் விண்ணப்பித்துள்ளனர் என்ற விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். 
அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், நீட் தேர்வால் இடம் கிடைக்காத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும், இடம் கிடைத்தும் கட்டணத்தைச் செலுத்த முடியாத காரணத்தால் மாணவர்கள் தவித்து வருவதாகவும் தெரிவித்தார். தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் அரசியல் கட்சியனர், படிப்பில் சிறந்து விளங்கும் 10 ஏழை மருத்துவ மாணவர்களின் கல்விச் செலவை ஏன் ஏற்கக் கூடாது என கேள்வி எழுப்பினார். மேலும், வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பி.இ. கல்விக் கட்டண நிர்ணய ஆய்வுக்குழு: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைமுறை


பொறியியல் கல்விக் கட்டண ஆய்வுக் குழுவை மீண்டும் நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

2015-ஆம் ஆண்டுக்குப் பின் முடங்கியிருந்த இந்த ஆய்வுக் குழு, இப்போது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த தொடர் புகார்களைத் தொடர்ந்து,


பிளஸ் 1 பொதுத்தேர்வு: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு


கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வை எழுதி மறுகூட்டல், மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.

இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் பட்டியல் scan.tndge.in என்ற இணையதளத்தில் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. அந்தப் பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்குப் பின் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. 
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் புதன்கிழமை (ஜூலை 4) பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்துக்குச் சென்று தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டி.எல்.எட்., தேர்வு தேர்ச்சி: ஆசிரியைகளுக்கு சிக்கல்....

தேசிய அளவில் தனியார் பள்ளிகளில் பி.எட்., தகுதி இல்லாத ஆசிரியர் மத்திய அரசின் தேசிய திறந்த வெளி கல்வி நிறுவனத்தின் (தி நேஷனல் ஓபன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கூலிங் – என்.ஐ.ஓ.எஸ்.,) டி.எல்.எட்., (ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு) கல்வி தகுதி பெற வேண்டும், என மத்திய அரசு உத்தரவிட்டது.

டி.எல்.எட்., தகுதியை 2019க்குள் பெற வேண்டும் என்ற நிபந்தனையால் உடல் ரீதியான மற்றும் மகப்பேறு காலங்கள் போன்ற காரணங்களால் ஆசிரியைகள் பலர் இத்தகுதி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 – 8 ம் வகுப்பு கற்பிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் தங்கள் பணியாற்றும் பள்ளியில் இருந்து என்.ஐ.ஓ.எஸ்., மூலம் விண்ணப்பித்து முதலாம் ஆண்டு தேர்வு எழுதினர்.தற்போது இரண்டாம் ஆண்டு பாடத்திட்டங்கள் சனி, ஞாயிறு அன்று ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட பயிற்சி மையங்களில் நடத்தப்படுகிறது. ஓராண்டு நிறைவு செய்த நிலையில் ஆசிரியைகள் பலர் மகப்பேறு காலத்தை சந்திக்க நேர்ந்ததால் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டி.எல்.எட்., தகுதி இல்லாமல் பள்ளியில் பணியை தொடர முடியுமா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு இத்தேர்வை முதன் முறையாக கொண்டு வந்துள்ளது. தற்போது வரை முதலாம் ஆண்டு வரையான வழிகாட்டுதல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

மகப்பேறு காலம் மற்றும் வேறு பள்ளிக்கு மாறிச் செல்லுதல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் தடை படும் படிப்பை எவ்வாறு முடிக்க வேண்டும் என்ற வழிமுறை குறித்து தெளிவுபடுத்தவில்லை. இச்சர்ச்சைக்கு பின் ஏதாவது வழிகாட்டுதலை மனித வள மேம்பாட்டு துறை வெளியிட வாய்ப்புள்ளது, என்றார்

தகுதித்தேர்வில் விலக்கு கிடைக்குமா ? காத்திருக்கும் 5,500 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்...

தமிழகம் முழுவதும் 5,500 பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் நிரந்தர பணி இல்லாத பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 5,500 பேர் உள்ளனர்.

மத்திய இடைநிலை கல்வி வாரிய உத்தரவின்படி, பணியில் தொடர ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.ஆனால், மாநிலங்கள் தமது கொள்கைக்கு ஏற்றபடி குறிப்பிட்ட நாட்களை தேர்வு செய்து, அதற்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி கேரள அரசு, 2012 மார்ச் 31க்கு முன் பணியில் சேர்ந்த பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. கர்நாடகா 2012 ஜூலை 28-வரை விலக்கு அளித்துள்ளது.அதுபோல் தமிழகத்தில் முன் தேதியிட்டு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன், துறை செயலாளரிடம் 5,500 ஆசிரியர்கள் மனு அளித்தனர். சென்னையில் நடந்த ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இதனை வலியுறுத்தினர்.ஆனால் இதுவரை அதற்கான உத்தரவு வராததால் 5,500 ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்

School Morning Prayer Activities - 04.07.2018




பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் :

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

உரை:

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

பழமொழி :

A contended mind is a continual feet

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

பொன்மொழி:

தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம். -சிம்மன்ஸ்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்?
 9
மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது ?
மியான்மர்.

நீதிக்கதை :

புத்திசாலி புலவரும் நெல்மணிகளும்
அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

சில மாதங்களுக்கு பிறகு, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது மேலும் இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று புலவர் யோசித்துக்கொண்டு இருந்தார்.

 புலவரின் நிலையைப் பார்த்த அந்த கிராமத்தின் தலைவர் புலவரிடம் சென்று, "நம் நாட்டின் அரசரை புகழ்ந்து பாடும் புலவருக்கு கேட்கும் பரிசினை கொடுக்கிறார். அந்த பரிசினைப் பெறுவதற்கு நீயும் முயற்சிக்கலமே" என்று கூறினார்.

இது சரியான தருணம் என்று கருதிய புலவரும் மன்னரை பார்க்க அரண்மனை நோக்கி பயணித்தார்.

மன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக சென்ற புலவர் அரண்மனையை  அடைந்தார். மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் புகழ்ந்து பாடினார்.

புகழ்ந்து பாடிய புலவரின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவனிடம், "உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்" என கூறினார்.

புலவரும் இதுபோன்ற வறுமை எப்பொழுதும் என் குடும்பத்தை பாதிக்கக் கூடாதென்று யோசித்தார். பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்க பலகை இருப்பதைப் பார்த்தார். "அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் அங்கே சதுரங்க பலகை ஒன்று இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைத்த பின் ஓவ்வொரு கட்டத்திற்கும் அதனை இரட்டிப்பாகினால் அதை தக்க பரிசாக ஏற்றுகொள்வேன்" என்று கூறினார்.

மன்னர் புலவரைப்பார்த்து, "நெல்மணிகள் போதுமா? தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா?" என்று கேட்டார்.

புலவரோ "அரசே எனக்கு நெல்மணிகள் மட்டும் போதும்" என்று கூறிவிட்டார்.

பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என கூறிவிட்டார்.

பின்னர் அரசர் அரண்மனை சேவகர்களிடம், "புலவர் கேட்ட நெல்மணிகளை எடுத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார். சேவகர்களும் சதுரங்கப் பலகையில் புலவர் கூறியபடியே நெல்மணிகளை சதுரங்க பலகையின் மேல் அடுக்கினர்.

1ம் கட்டத்தில் 1, 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 4, 4ம் கட்டத்தில் 8 என நெல்மணிகளை அடுக்கினர்.

10ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 512 என ஆனது.

20ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 5,24,288 என அதிகரித்தது.

பாதி தூரம் அதாவது 32வது கட்டத்தை அடைந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 214,74,83,648 ஆக பெருகியது.

விரைவில் நெல்மணிகளின் எண்ணிக்கை கோடனகோடிகளை தாண்டியது. இதனால் அரசன் தன் ராஜ்ஜியம் முழுவதையும் அந்த புத்திசாலி புலவரிடம் இழக்கும் நிலை ஏற்பட்டது.

புலவரின் புத்தி சாதுரியத்தையும், தான் செய்த தவறை உணர்ந்த அரசர் புலவரிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு என்னைவிட இந்த புலவருக்கு அதிக திறமை உள்ளது என்று சபை முன் கூறிவிட்டு அரசர் பதவியை புலவரிடம் ஒப்படைத்தார்.

நீதி:
கூட்டுப்பலனின் பெருக்கும் சக்தியை எப்பொழுதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

இன்றைய செய்தி துளிகள் : 

1. பிளஸ் 1 பொதுத்தேர்வு: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு
2.ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

3.மனிதவளத்துறை சார்பில் துவங்கப்பட்டுள்ள இணையவழி நூலகத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு: ஸ்டாலின் கண்டனம்

4.அனைத்து ஆட்டோக்களிலும் பிரிண்டர், அபாய ஒலி எழுப்பும் பட்டன் கூடிய நவீன மீட்டர் விரைவில் அமைக்கப்படும் : போக்குவரத்துத் துறை அறிவிப்பு

5.சட்டத்தை யாரும் கையில் எடுக்காமல் தடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை: உச்சநீதிமன்றம்

6.உலகக்கோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்வீடன்

7.இங்கிலாந்தில் நடைபெற்ற முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

புதன், 27 ஜூன், 2018

பள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு வாரம் கெடு

அனைத்து பள்ளிகளின் கழிப்பறைகளையும், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், துாய்மைப்படுத்தி, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில், அமைச்சர், செங்கோட்டையன், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். நிர்வாக சீர்திருத்தம், பள்ளிகளை தரம் உயர்த்துவது, ஆசிரியர்களின் பணி நிர்வாகத்தை சீரமைப்பது, கல்வி தரத்தை உயர்த்துவது என, பல்வேறு திட்டங்கள் அமலுக்கு வந்து உள்ளன.தற்போது, பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அவற்றில் சிறப்பு கவனம் செலுத்த, அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனர்களுக்கு, அமைச்சர், செங்கோட்டை யன், கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.கடித விபரம்:தமிழகத்தில் உள்ள, நர்சரி, பிரைமரி பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், வளாகத்தின் துாய்மையை மேம்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் குப்பை, கூளங்களை அகற்றி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு, குடிநீர் மற்றும் பயன்பாட்டுக்கான நீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.பள்ளி வளாகத்திலுள்ள, இரு பாலின கழிப்பறைகளையும் முழுமையாக துாய்மைப்படுத்தி, மாணவர்கள் தயக்கமின்றி பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கையை, ஒரு வாரத்தில் முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

'ஓவர்டைம்' படி ரத்து : மத்திய அரசு அதிரடி.........

புதுடில்லி: அரசு ஊழியர்களுக்கு, 'ஓவர் டைம்' எனப்படும், பணி நேரத்தை விட கூடுதலான நேரம் பணியாற்று வோருக்கான, படி வழங்குவதை நிறுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சமீபத்தில், ஏழாவது சம்பள கமிஷன் அளித்துள்ள பரிந்துரை அறிக்கையில், 'ஆப்ரேஷனல் ஸ்டாப் எனப்படும், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தவிர, மற்றவர்களுக்கு, 'ஓவர் டைம்' படிகள் வழங்குவதை நிறுத்தலாம்' என, கூறப்பட்டுள்ளது.சில ஆண்டுகளில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக அதிகரித்துள்ளதால், இந்த பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.இந்த பரிந்துரையை, மத்திய பணியாளர் துறை அமைச்சகம் ஏற்று, பணி நேரத்துக்கு கூடுதலான நேரத்தில் வேலை செய்வதற்கு வழங்கப்படும் படிகளை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது. இதையடுத்து, எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் பணிகளில் ஈடுபடுவோர் உள்ளிட்ட ஊழியர்கள் பட்டியலை தயாரிக்கும்படி, மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்


School Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் :

21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள்

28/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள்

4/8/18 - சனிக்கிழமை CRC பயிற்சி நாள்
...................................................................................................

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் PLASTIC பொருட்களுக்கு தடை - இயக்குனர் உத்தரவு

ஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை தாமதமின்றி அனுமதிக்க வேண்டும் - கருவூல அதிகாரி உத்தரவு

BRC NEWS: District Assessment Survey test for all 8th std students


District Assessment Survey test for all 8th std students in Math and Science is to be conducted as per Respected District Collector's Initiative on 29.6.18. Math from 10-11.30 am Science 1.30-3.00 pm. Separate question papers for Tamil medium and English medium students. Question papers for High and Hr Sec Schools will be sent by mail on 28th afternoon . Each school must make copies for each of their students. For middle schools mail will be sent to the blocks. Blocks must give one copy of em and tm qp to each school. Middle schools must make copies for each student. Kindly be prepared. Proceeding follows.

10th std Social Science June 2018 test

ஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை உரிய முறையில் பெற்றுத் தர பள்ளிக்கல்வி செயலாளர் உத்தரவு!

ஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை  உரிய முறையில் பெற்றுத் தர வேண்டும் -பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள நிர்வாக மாறுதல்க்ளை அடுத்து பள்ளிக்கல்வி செயலாளர் உத்தரவு - ஆணை

மாவட்ட கல்வி அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு விரைவாக ஜூன் மாத ஊதியம் வழங்கிட அரசு கருவூலத் துறைக்கு ஆணை



வட்டாட்சியர்களை பதவி உயர்வு மூலம் தற்காலிக துணை ஆட்சியர்களாக பணி நியமனம்-ஆணை 26-06-2018

பள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு வாரம் கெடு

அனைத்து பள்ளிகளின் கழிப்பறைகளையும், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், துாய்மைப்படுத்தி, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.


  தமிழக பள்ளிக்கல்வித் துறையில், அமைச்சர், செங்கோட்டையன், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். நிர்வாக சீர்திருத்தம், பள்ளிகளை தரம் உயர்த்துவது, ஆசிரியர்களின் பணி நிர்வாகத்தை சீரமைப்பது, கல்வி தரத்தை உயர்த்துவது என, பல்வேறு திட்டங்கள் அமலுக்கு வந்து உள்ளன.தற்போது, பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அவற்றில் சிறப்பு கவனம் செலுத்த, அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனர்களுக்கு, அமைச்சர், செங்கோட்டை யன், கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.கடித விபரம்:தமிழகத்தில் உள்ள, நர்சரி, பிரைமரி பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், வளாகத்தின் துாய்மையை மேம்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் குப்பை, கூளங்களை அகற்றி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு, குடிநீர் மற்றும் பயன்பாட்டுக்கான நீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.பள்ளி வளாகத்திலுள்ள, இரு பாலின கழிப்பறைகளையும் முழுமையாக துாய்மைப்படுத்தி, மாணவர்கள் தயக்கமின்றி பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கையை, ஒரு வாரத்தில் முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

செவ்வாய், 26 ஜூன், 2018

மருத்துவ படிப்பில் கூடுதல் இடங்கள்....

சென்னை: அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 3,355; தனியார் கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 517 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.
அதேபோல, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,095; தனியார் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 690 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள, 5,657 மருத்துவ இடங்களுக்கு, 43 ஆயிரத்து, 935 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இதற்கான தரவரிசை பட்டியல், வரும், 28ல் வெளியிடப்படுகிறது. முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 5ம் தேதி வரை நடைபெறுகிறது.மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீதமாக இருந்த ஒதுக்கீடு, 5 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு, ஏழு, எம்.பி.பி.எஸ்., - ஒரு, பி.டி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, ஐந்து, எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்

பட்டு வந்தன. நடப்பாண்டில், 10, எம்.பி.பி.எஸ்., - ஒரு, பி.டி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதிதாக 264 பாடப்பிரிவுகள் அரசு கல்லூரிகளில் துவக்கம்

சென்னை: தமிழகத்தில், 61 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், நடப்பாண்டு, 264 புதிய பாடப்பிரிவுகளை துவக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி, சட்டசபையில், 110 விதியின் கீழ், '2018 - 19ம் கல்வியாண்டில், கல்லுாரிகளில், 264 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும். இவற்றை கையாள, 683 உதவி பேராசிரியர்கள் பணியிடம் உருவாக்கப்படும்' என, ஏற்கனவே அறிவித்தார்.அதன்படி, நடப்பு கல்வியாண்டில், 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.பில்., 71 பிஎச்.டி., என, 264 புதிய பாடப்பிரிவுகளை துவக்கவும், அவற்றை கையாள, 683 உதவி பேராசிரியர் பணியிடங்களில், முதலாம் ஆண்டு, 270 உதவி பேராசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கி, ஜூன், 22ல், அரசாணை வெளியிடப்பட்டது.புதிய பாடப்பிரிவுகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள், நாளை முதல், அரசாணையில் குறிப்பிடப்பட்ட கல்லுாரிகளில் வழங்கப்படும். அவற்றை பூர்த்தி செய்து, ஜூலை, 9க்குள், கல்லுாரியில் சமர்ப்பிக்க வேண்டும். புதிய பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கல்லுாரிகள் விபரம் அடங்கிய அரசாணையை, தமிழக அரசின், www.tn.gov.in என்ற இணையதளத்தில், உயர் கல்வித்துறை பக்கத்தில் பார்க்கலாம்.