செவ்வாய், 26 ஜூன், 2018
உதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் அரசுக் கலை கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகளை துவக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2018-19-ல் அரசுக் கலை கல்லூரிகளில் 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.ஃ.பில் , 71 பிஎச்டி படிப்புகளில் புதிய பாடப்பிரிவுகளை துவக்கவும் மற்றும் முதற்கட்டமாக 693 பணியிடத்தில் 270 புதிய உதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்பவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி!
வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி!
வீடுகளில் சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்காக, மானிய விலையில் மேற்கூரை அமைக்கும் திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 1,700 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதியாகும்.இதுகுறித்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்பில்,மின்கட்டமைப்புடன் கூடிய சோலார் மேற்கூரை திட்டத்தின்கீழ், வீடுகளில் சோலார் மேற்கூரை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. வீடுகள், மருத்துவமனைகள், அறக்கட்டளைகள், என்ஜிஓ-க்கள் ஆகியோருக்கும் இச்சலுகை பொருந்தும். ஒரு கிலோவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிக்க ரூ.60,000 செலவாகும்.
இதில், ரூ.18,000 மானியமாக வழங்கப்படும்.ஒரு கிலோவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிக்க தேவையான சோலார் மேற்கூரை அமைக்க குறைந்தபட்சம் 100 சதுர அடி இடம் தேவைப்படும். ஒருகிலோ வாட் மேற்கூரை அமைத்தால் மாதம் ஒன்றுக்கு 250 யூனிட் வரை சோலார் மூலம் மின்னுற்பத்தி செய்ய முடியும்.5 ஆண்டு இலவச பராமரிப்புஇந்த சூரியஒளி மின்சாரத்தைக் கணக்கீடு செய்வதற்காக இருவழி பயன்பாடு மீட்டர் பொருத்தப்படும். சோலார் மேற்கூரை மின் கட்டமைப்புகள் கிரிட்டுடன் இணைக்கப்படும். மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 வரை மின்சார கட்டணம் மிச்சமாகும். அத்துடன், சோலார் மேற்கூரைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் 5 ஆண்டுகள் வரை இலவசமாக பராமரிக்கப்படும்.
இத்திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திட்டத்தின்கீழ், கடந்த 2 மாதங்களில் தமிழகம் முழுவதும் இதுவரை 1,700 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு 12 மெகாவாட் அளவுக்கு சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு, வரும் 30-ம் கடைசி தேதியாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
11ம் வகுப்பு தமிழ் புத்தக அட்டை படத்தில் செங்கீரை மண் குதிரை தேர்வானது எப்படி?
அரிமளம் அருகே உள்ள கிராம கோயில் மண் குதிரை 11ம் வகுப்பு தமிழ்ப்பாட புத்தகத்தில் அட்டைப் படமாக வந்துள்ளது. இது எங்கள் கிராம திருவிழாவுக்கு கிடைத்த அங்கீகாரம் என அப்பகுதி மக்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம், திருமயம் பகுதியைச் சுற்றியுள்ள அரண்மணைபட்டி, விராச்சிலை, பனையப்பட்டி, சாஸ்தார்கோவில், செங்கீரை, ராயவரம், நம்பூரணிபட்டி, கீழாநிலைக்கோட்டை, புதுநிலைப்பட்டி, கே.புதுப்பட்டி, ராயவரம், புலிவலம், மிரட்டுநிலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அய்யனார் கோயில்களில் வருடம் தோறும் குதிரை(புரவி) எடுப்பு திருவிழா நடத்துவது வழக்கம். வருடம் தோறும் குதிரை எடுப்பு திருவிழா நடத்தி இரவு நேரங்களில் கோயில் அருகிலேயே புராண நாடகம், கலை நிகழ்ச்சி நடத்தி அய்யனாரை வழிபட்டு வருகின்றனர்.
இதனிடையே நடப்பு வருடம் தமிழக அரசு 1, 6, 9, 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து புதிய பாடப் புத்தகங்களை வெளியிட்டது. இதில் 11ம் வகுப்பு பொதுத் தமிழ் பாடப் புத்தகத்தில் உள்ள அட்டை படம் அரிமளம் அருகே உள்ள செங்கீரை தலைகுடை அய்யனார் கோயில் மண் குதிரை அச்சிடப்பட்டிருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இது எங்கள் கிராம கோயில் விழாக்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுவதாக அப்பகுதி மக்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர். இது பற்றி செங்கீரையைச் சேர்ந்தவர்களிடம் கேட்டபோது, எங்கள் ஊரில் நடைபெறும் விழாக்களில் ஊர் காவல் தெய்வமான தலைகுடை அய்யனார் கோயில் குதிரை எடுப்பு திருவிழா மிக முக்கியமானது. பெரும்பாலும் திருவிழா வைகாசி மாதம் கடைசி தேதிகளில் நடைபெறும். திருவிழா தொடங்குவதற்கு 2 மாதம் முன்னர் மண் குதிரை செய்யும் வேளார் இனத்தவர்களிடம் அய்யனார் குதிரை செய்து தர வேண்டி பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதன்படி அரண்மனை மற்றும் 5 ஊர் சார்பில் 1 குதிரையும் செய்வதோடு பக்தர்கள் நேர்த்திக்கடனுக்கு ஏற்ப குதிரைகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனை தொடர்ந்து விழாவுக்கு முதல் நாள் ஊரார்கள், பக்தர்கள் வேளார் வீட்டுக்கு சென்று அங்குள்ள குதிரைகளை தோளில் சுமந்து வந்து செல்லாயி அம்மன் மந்தையில் வைத்து புஜை செய்து, சாமியாட்டம் நடைபெறும். அடுத்த நாள் குதிரை எடுப்பு விழா நடைபெறும். அப்போது ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் குதிரைகள் செங்கீரையில் உள்ள தலைகுடை அய்யனார், செல்லாயி அம்மன், முன்னோடி கருப்பர், அடைகலம்காத்தான் ஆகிய கோயில்களுக்கு குதிரைகள் பிரித்து அனுப்பட்டு கோயில் வாசலில் காவலுக்கு வைக்கப்படும். இந்நிலையில் எங்கள் கிராம கோயில் மண் குதிரை தமிழக அரசு பாடப் புத்தகத்தில் வந்தது பெருமையாக உள்ளது என்றனர்.
இதுபற்றி புதுக்கோட்டை கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வனிடம் கேட்டபோது, 11ம் வகுப்பு பொதுத் தமிழ் பாடப் புத்தகத்தில் தமிழர்களின் கலாசாரம், மரபு, பாரம்பரியம், வாழ்க்கை முறைகளை பிரதிபலிக்கும் விதமாக அட்டை படம் இருக்க வேண்டும் என தமிழ்நாடு பாடநூல் துணை இயக்குனர் அருள்முருகன் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடமும் தெரிவித்தார். மேலும் கிராமங்களில் நடைபெறும் முக்கிய திருவிழாவான குதிரை எடுப்பு திருவிழாவில் உள்ள சுட்ட மண் குதிரை படம் இருந்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள சுட்ட மண் குதிரையை போட்டோ எடுத்து அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதனடிப்படையில் திருமயம், அரிமளம் பகுதி கிராமங்களில் அய்யனார் கோயில் வாசலில் உள்ள சுட்ட மண் குதிரைகளை போட்டோ எடுத்து சுமார் 150க்கும் மேற்பட்டவை அனுப்பப்பட்டது. இதில் அரிமளம் அருகே உள்ள செங்கீரை கிராம அய்யனார் கோயில் குதிரை சிலை தேர்வு செய்யப்பட்டு பாடப்புத்தகத்தில் அட்டை படமாக அச்சிடபட்டுள்ளது மகிழ்ச்சி அளித்தது. செங்கீரை அய்யனார் கோயில் குதிரை தேர்வு செய்ததற்கு அதன் ஆபரணம் போன்ற வடிவமைப்பு, வர்ண பூச்சு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர் என்றார்.
சனி, 23 ஜூன், 2018
அரசு பள்ளி மாணவர்களுக்காக சொந்தமாக பள்ளி பேருந்து - அசத்தும் கிராமத்தினர்!
கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளிக்கு நிகராக, அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக, பள்ளி நிர்வாகமும், கிராம மக்களும் இணைந்து சொந்தமாக பஸ் ஒன்றை வாங்கியுள்ளனர்.
இந்த முயற்சிக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில், அரசியல் கட்சி தலைவர்களுக்கும், சினிமா நடிகர்களுக்கும் பேனர், கட்அவுட் வைத்து, பணத்தை வீணாக வாரி இறைக்கும் ரசிகர் மன்றங்களுக்கு இடையே, மாணவர்களின் எதிர்காலத்தையும், அவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, இளைஞர் நற்பணி மன்றம் என்ற பெயரில் நற்பணிகளை மட்டுமே செய்யும் மன்றங்களும், அந்த மன்றங்களில் உள்ளோரின் நடவடிக்கையால் சொந்த கிராமமே பெருமை கொள்ளும் நிகழ்வுகளும் கிருஷ்ணகிரி அருகே நடைபெற்றுள்ளது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலையில், 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கும்மனூர் கிராமம். இந்த கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டு வாழ்கின்றனர். கிராம இளைஞர்கள் ஒருங்கிணைந்து மகாத்மா காந்தி நற்பணி மன்றம் என்ற பெயரில் ஒரு மன்றத்தை தொடங்கியுள்ளனர். இந்த மன்றத்தில், தமிழகத்தில் எங்கும் செய்யாத ஒரு நற்பணியை செய்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளனர். இந்த கும்மனூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கடந்த 20112012ம் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியானது. இப்பள்ளிக்கு, கும்மனூர் மட்டுமின்றி அருகில் உள்ள ராகிமானப்பள்ளி, புலியரசி, மேலூர், கரிக்கல்நத்தம், ஜிஞ்சுப்பள்ளி, மெட்டுப்பாறை, கொண்டேப்பள்ளி, சஜ்ஜலப்பட்டி, தாசரப்பள்ளி, புதூர், கொம்பள்ளி, சின்னராகிமானப்பள்ளி என 5 கிலோ மீட்டர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் படிக்க வருகின்றனர்.
தற்போது பள்ளியில் 106 மாணவிகள், 64 மாணவர்கள் என மொத்தம் 170 பேர் படிக்கின்றனர். ஒரு தலைமை ஆசிரியரும், 7 ஆசிரிய, ஆசிரியைகளும் பணியாற்றி வருகின்றனர். கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு சரிவர போக்குவரத்து வசதியில்லாததால், ஆண்டுதோறும் படிக்கு வரும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை சரிவடைந்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில், கும்மனூர் கிராம மக்கள், மகாத்மா காந்தி இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஒன்று கூடி ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். அப்போது, மாணவ, மாணவிகள் பள்ளிக்கு பாதுகாப்புடன் வந்து செல்ல, தனியார் பள்ளியை போல் நிரந்தர, அதேவேளையில் சொந்தமாக பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தனர். அதைதொடர்ந்து பஸ் வாங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக பொதுமக்கள், தானம் செய்ய முன்வருவோர், மாணவர்கள் மீது அக்கறை கொண்ட நிறுவனத்தினர் என பலரையும் சந்தித்து நன்கொடை பெற்றனர். இதன்மூலம் 5 லட்சம் ரூபாய் வரையில் நிதியுதவி கிடைத்தது.
அதைதொடர்ந்து, மாவட்ட கல்வித்துறை அனுமதியுடன், தலைமை ஆசிரியர் என்ற பெயரில் வாகனம் பதிவு செய்யப்பட்டு தற்போது இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த பஸ் மூலமே பள்ளிக்கு வருகின்றனர். சிரமமின்றி அவர்கள் பள்ளிக்கு சென்று வருவதை கண்டு பெற்றொரும், ஊர் முக்கிய பிரமுகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், மகாத்மா காந்தி இளைஞர் நற்பணி மன்றத்தினருக்கும், பள்ளி நிர்வாகத்தினருக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணன் கூறுகையில், ‘கும்மனூர் அரசு உயர்நிலைப்பள்ளி சிறந்த பள்ளி என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்பள்ளிக்கு கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் பாதுகாப்புடன் வந்து செல்ல ஏதுவாக பஸ் வாங்க முடிவு செய்தோம். அதற்கு தேவையான நிதியை நன்கொடையாக பெற்றோம். அதை கொண்டு பஸ்சை வாங்கி இயக்கி வருகிறோம். நாங்கள் பெற்ற நன்கொடையை வங்கியில் டெபாசிட் செய்து, அதில் இருந்து கிடைக்கும் வட்டியை கொண்டு பஸ்சுக்கான டீசல் செலவை சமாளித்து வருகிறோம். பஸ்சை இயக்க நல்ல மனம் படைத்த தன்னார்வலர்கள் இருவர் முன்வந்துள்ளனர். பள்ளிக்கு நன்கொடை வழங்கி, மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்,’என்றார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய 10 அரசாணைகள்...
G.O's
1. பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278)
2. கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)
3. அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974)
4. அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, நாள்-17.4.1996)
5. மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (அரசு கடித எண்.2290/93-1, நிர்வாகத்துறை, நாள் - 18.6.1993)
6. அரசு ஊழியர் ஒருவர் Private Study பயில்வதற்கு துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும். (G. O. Ms - 362,P&A. R, DT - 4.11.1992)
7. தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர் மாவட்ட அளவிலான உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். (அரசாணை எண். 362, நிர்வாகத்துறை, நாள். 4.11.1992, மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/93,நாள் - 22.6.1993)
8. மாலை நேரக் கல்வி பயில துறைத்தலைவரின் அனுமதி தேவை. (அரசாணை எண் 1341,பொது, நாள் - 27.8.1993 மற்றும் அரசு கடித எண். 98189/84-8, நிர்வாகத்துறை, நாள் - 13.8.1983)
9. அரசு ஊழியர் ஒருவர் மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondence Course) பயில அனுமதி கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம். (அரசாணை எண். 200,நிர்வாக சீர்திருத்ததுறை, நாள் - 19.4.1996)
10. பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும். (அரசாணை எண். 7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை, நாள் - 14.5.1985)
மகப்பேறு விடுப்பு அரசு புது உத்தரவு..
சென்னை,:'இரட்டைக் குழந்தை பெற்ற, அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, இரண்டாவது மகப்பேறுக்கும் விடுமுறை வழங்கலாம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய பாட திட்டம் - ஜூலை முதல் வாரத்தில் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி...
புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பாடங்களை நடத்துவதற்காக 9 ஆயிரம்
ஆசிரியர்களுக்கு ஜூலை முதல் வாரத்தில் பயிற்சி தொடங்க உள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக பள்ளிக் கல்வியில் பாடத்திட்டங்கள் மாற்றம் ெசய்யப்படாமல் இருந்தது. இதையடுத்துமுதற்கட்டமாக 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, அதையொட்டி புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு தற்போது பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த பாடங்களை நடத்துவதற்கான வழி முறைகளையும் ஒவ்வொரு பாடத்தின் முகப்பு மற்றும் பின் பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவற்றை ஆசிரியர்கள் புரிந்து கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை முதல் வாரத்தில் இந்த பயிற்சி தொடங்க உள்ளது.
1, 6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடம் நடத்த உள்ள சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும். பகுதி வாரியாகவும், மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலமும் இந்த பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செவ்வாய், 19 ஜூன், 2018
AIIMS MBBS Result: நிஷிதா புரோஹித் இந்தியா அளவில் முதலிடம்!
AIIMS MBBS Result: நிஷிதா புரோஹித் இந்தியா அளவில் முதலிடம்!
குஜராத்தை சேர்ந்த நிஷிதா புரோஹித் என்ற மாணவி இந்திய அளவில் 100 சதவிகித தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளார்! எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிலையங்களில் எம்.பி.பி.எஸ். பயிலுவதற்கான நுழைவுத்தேர்வு நாடுமுழுவதும் கடந்த மே மாதம் 26 மற்றும் 27-ம் தேதிகளில் ஆன் லைன் மூலம் இரண்டு சிப்ட்களில் நடைபெற்றது. இத் தேர்வை 2 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில், தற்போது நுளைவுதேர்வுகளுக்கான முடிவுகள் aiims exams.org என்ற இணையதளத்தில்...
தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்ப தேதி அறிவிப்பு
சென்னை: 'தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே, விண்ணப்பிக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியுள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மத்திய அரசுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். விருது பெற விரும்புவோர், மத்திய மனிதவள அமைச்சகத்தின், www.nationalawardtoteachers.com என்ற இணையதளத்தில், வரும், 30க்குள், விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள, வழிகாட்டு நெறிகளை பின்பற்றி, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.
Flash News : CTET - :ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்ப பதிவு ஒத்திவைப்பு!
சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கை:
வரும் 22ம் தேதி துவங்குவதாக இருந்த மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது.
விண்ணப்ப பதிவு மீண்டும் எப்போது துவங்கும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)