வியாழன், 22 மார்ச், 2018
அரசுப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய குறும்படம் :
கனவுப்பள்ளி பூங்குளம் மாணவர்களின் உலக நீர் தின சிறப்பு பாடல்கள்
அரிய முயற்சி. பாராட்டி பகிர்ந்து ஊக்குவியுங்கள்.
கல்விச்சிகரம் www.kalvicikaram.blogspot.in பாராட்டுக்கிறது............
கோடைகால (உணவு) குறிப்புகள் - 2018
காலை எழுந்தவுடன் சாப்பிட வேண்டியவைகள்
பழைய சாத தண்ணீர் ( வாரம் 2 நாட்கள் )
ஊற வைத்த வெந்தயம் ( வாரம் 2 நாட்கள் )
பழங்கள் ( மாதுளை, தர்ப்பூசணி, பன்னீர் திராட்சை, கொய்யா, பப்பாளி - இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது கலந்தும் சாப்பிடலாம் )
( வாரம் 2 - 3 நாட்கள் )
காலை எழுந்தவுடன் தாக உணர்வை கவனித்து, அதற்கேற்ப தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். முக்கியமாக பெருங்குடலின் நேரமாகிய 5 மணி முதல் 7 மணி வரைஇருக்கும் தாக உணர்வு மிக முக்கியமானது. அப்போது நாம் குடிக்கக்கூடிய தண்ணீர் நமது குடல்களை சுத்தப்படுத்தி நல்ல பசி உணர்வை கொடுக்கும். நல்ல ஜீரணத்துக்கும் உதவிசெய்யும். இதனால் மலச்சிக்கல் நீங்குவதோடு உடல் உஷ்ணமும் கட்டுக்குள் இருக்கும்.
காலை உணவாக கம்மங்கூழ், பழைய சாதம், கேழ்வரகு கூழ் போன்றவற்றை வாரம் 2 நாட்கள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம். உடன் சிறிய வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம். மேலும்அதற்கு கொத்தமல்லி மற்றும் புதினா துவையல்களையும் தொட்டுக்கொள்ளலாம்.
பழைய சாதத்தை இரவு மண் பாத்திரத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்துவிட வேண்டும். பழைய சாத தண்ணீர் குடிக்கும் போதோ சாதமாக சாப்பிடும் போதோ, மண்பாத்திரத்தில் ஊற வைக்கப்பட்டிருந்தால் அது சுவையாகவும், குளிர்ச்சி தரும் வகையிலும் அமையும்.
முடிந்தவரை காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே தண்ணீரை தவிர ( முறையான தாகம் இருந்தால் மட்டும் ) எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
மதிய உணவு சாப்பிட போவதற்கு முன்னர் சிறிதளவு தண்ணீர் குடித்துவிட்டு அதன்பின்னர் 15 நிமிடங்கள் கழித்து சாப்பிடலாம். இதன் மூலம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதுஇடையில் தண்ணீர் தேவைப்படுவதை தவிர்க்க முடியும். இது நல்ல தரமான ஜீரணத்தை உறுதி செய்யும்.
மதிய உணவில் நீர்க்காய்கள் நிறைய சேர்த்துக்கொள்ளலாம். ( புடலங்காய், பூசணிக்காய், சுரைக்காய், வாழைத்தண்டு, பீர்க்கங்காய் முக்கியமானவை ). .
மதிய உணவில் வாரம் 3 - 4 நாட்களாவது மோர் சேர்த்துக்கொள்வது நல்லது. மோரை கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி போட்டு ஊறவைத்து பயன்படுத்தலாம். மோரை தாளித்துபயன்படுத்துவது அதன் புளிப்பு தன்மையை குறைப்பதாக அமையும்.
அசைவ உணவுகள் சாப்பிடுவதாக இருந்தால் மதிய வேளைகளில் எடுத்துக்கொள்ளுங்கள். இரவு எடுத்துக்கொள்வதாக இருந்தால் 8 மணிக்கு முன்னதாகவே சாப்பிட்டுமுடித்துவிடுங்கள். அசைவத்தில் காரமும் மசாலாக்களும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது மிக முக்கியம். அசைவ உணவுகளில் ஆட்டு இறைச்சியின் மார்பெலும்பில் சூப் வைத்துகுடிப்பது உடல் உஷ்ணத்தை குறைக்கும் ஒரு அற்புத உணவாகும்.
மாலை வேளைகளில் தேவைப்பட்டால் பழ ரசங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
நாள் முழுக்கவே தாக உணர்வை நன்கு கவனித்து அதற்கேற்ற வகையில் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான தண்ணீர் குடிக்க கூடாது என்பதையும்மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தான் இன்றைக்கு நாம் பெரும்பாலும் குடிக்கின்றோம். அந்த தண்ணீரை ஒரு மண் பானையில் ஊற்றி வைத்து அதனோடு வெட்டி வேர் சேர்த்து தண்ணீர்குடிக்கலாம். குறைவான நீரில் முழுமையாக தாகம் நீங்க இது பெரும் உதவியாக இருக்கும். ( 30 லிட்டர் தண்ணீருக்கு 3 வெட்டி வேர்கள் )
எப்போதுமே அமர்ந்த நிலையில் வாய் வைத்து தண்ணீர் குடிப்பதே நல்லது.
ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்துவிட்டு வந்த பின்னரும் சிறிதளவு நீர் குடிக்க வேண்டும். ( தாகம் இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை )
குளிர்சாதன அறைகளில் தூங்குபவர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். குளிர்சாதன வசதி என்பது நிச்சயமாக நமது உடல் நலனுக்கு உகந்தது அல்ல. அதேநேரத்தில் அதிக சூட்டில் இரவு தூக்கம் வராமலும் கஷ்டப்பட வேண்டாம். எனவே ஏசி யின் பயன்பாட்டு அளவை முடிந்த வரை குறைத்து கொள்ள திட்டமிட வேண்டும்.
உதாரணம்: அதிகாலை 3 மணிக்கு மேல் ஏசி-யை அனைத்து விட வேண்டும். 3 மணிக்கு மேல் நமது நுரையீரலின் பிரத்யேக நேரமாகும். இந்த நேரத்தில் தூய்மையான ஆக்சிஜன்காற்றில் பரவிக்கிடக்கும். எனவே 3 மணிக்கு மேல் ஜன்னல்களை திறந்து விட்டு காற்றோட்டமான சூழலில் உறங்குவது ஏசி யின் பாதிப்புகளில் இருந்து நம்மை ஓரளவு காக்கும்.
பழங்களை பொறுத்தவரை தர்பூசனியும், மாதுளையும், கிர்ணியும் கோடை காலத்தில் நமது உடலின் நீர் சமநிலையை பாதுகாக்க உதவும் முக்கிய பழங்களாகும். எனவே ஒருநாளைக்குஅவற்றில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக சாப்பிட்டு விட வேண்டும்.
தினமும் தலைக்கு குளிப்பதை கட்டாயமாக்க வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத பட்சத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட தலைக்கு குளித்து நல்லது. மேலும் அதிக நேரம்குளிப்பதும் உடல் உஷ்ணத்தை குறைக்கும் மற்றும் சமநிலையில் வைக்கும்.
அதேபோல, வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்து நல்லது. தலை
குளித்து நல்லது. தலைக்கு தேய்ப்பது மட்டுமல்லாமல் உடல் முழுக்கவே தேய்த்து இளங்காலை வெயிலில் ( 6 முதல் 7.30மணி வரை ) ஒரு 30 முதல் 40 நிமிடங்கள் வரை கண்கள் மூடி அமர்ந்துவிட்டு பின்னர் இதமான நீரில் குளித்து விடுவது நமது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
அவ்வப்போது இளநீர் குடிப்பதும், எலுமிச்சை ஜூஸ் குடிப்பதும், வெள்ளரிக்காய் சாப்பிடுவதும் நமது நீர் சக்தியின் தரத்தை உறுதி செய்யும். ஒவ்வொரு முறை இளநீர் குடிக்கும் போதும்அதன் வழுக்கையையும் சாப்பிட வேண்டும்.
கோடை காலத்தில் இரவு உணவாக தோசை, பரோட்டா, பிரியாணி, ஃபிரைடு ரைஸ் போன்ற உணவுகளை தவிர்த்து விட்டு, ஆவியில் வேக வைத்த உணவுகளையும், களி உள்ளிட்டஉணவுகளையும் சாப்பிடுவதே நல்லது.
கோடை காலத்தில் இரண்டு முறை உள்ளாடைகளை மாற்றும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல இரவு உறங்க செல்லும் முன் நமது இடுப்பு பகுதிகள் உள்ளிட்டபிறப்புறுப்பு பகுதிகளை நன்கு கழுவிவிட்டு உறங்க செல்வது சுத்த தன்மையை ஏற்படுத்துவதோடு, நமது சிறுநீரக பகுதிகளை குளிர்ச்சிப்படுத்தும் விதமாகவும் அமையும்.
கோடைகாலங்களில் வியர்வை மூலமாக நடைபெறும் கழிவு நீக்கம் முழு அளவில் இருக்கும். எனவே நமது வியர்வை துவாரங்களில் தடையில்லா திறந்த நிலையை நாம் ஏற்படுத்தவேண்டும். எனவே சோப் உபயோகங்களை குறைத்துவிட்டு இயற்கையான குளியல் பொடிகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் சோப்களின் ரசாயனங்கள் நமது வியர்வைதுவாரங்களை அடைக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். பொதுவாகவே அனைத்து காலங்களிலுமே சோப் பயன்படுத்தாமல் குளியல் பொடியை பயன்படுத்துவதே நல்லது. அப்படியேசோப் பயன்படுத்தினாலும் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். சோப் தேய்த்து விட்டு, வெறும் கையாலோ அல்லது நார் போன்ற பொருட்களாலோ நமது வெறும்உடலை தேய்த்துவிடுவதன் மூலம் சோப்களின் ரசாயனங்கள் நமது வியர்வை துவாரங்களை அடிப்பதை தடுக்க முடியும்.
பொதுவாகவே கோடை காலங்களில் அதிகாலை நாம் சீக்கிரம் எழுந்து கொள்ள முடியும். எனவே இரவு உணவை சீக்கிரம் முடித்துவிட்டு சீக்கிரம் தூங்க சென்றுவிடுவது தான் நல்லது.அதுதான் போதுமான தூக்க நேரத்தை உறுதி செய்யும்.
கூடுமானவரை 9 மணிக்கு மேல் மொபைல், டிவி, கணிப்பொறி பயன்பாடுகளை நிறுத்திவிட்டு உறங்க சென்றுவிடுவது மிக மிக நல்ல பலன்களை நமக்கு ஏற்படுத்தும்.
கோடைகாலங்களில் மொட்டை மாடியில் படுக்கும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கும். இதில் எந்தவித பாதகங்களும் இல்லை. இருந்தாலும், உறங்க செல்வதற்கு 4 மணி நேரத்திற்குமுன்பாக அந்த இடத்தை தண்ணீர் ஊற்றி குளிர்ச்சிப்படுத்த வேண்டியது மிக முக்கியம்.
ஃபோம் மெத்தைகளில் படுத்து உறங்குவதை தவிர்த்துவிட்டு தரையில் பாய்விரித்து அதன் மீது ஜமுக்காளம் அலல்து போர்வை விரித்து உறங்குவது மிக நல்லது. வெறும் தரையில்படுக்க வேண்டாம்.
வீட்டில் முழுமையான காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதுவே நமது வீட்டினுள் உறையும் உஷ்ணத்தை வெளியேற்றிவிடும்.
ஜீன்ஸ் உள்ளிட்ட மிக இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்த்துக்கொள்வது நல்லது.
IT துறைகளில் பணியாற்றுபவர்கள் நாள் முழுக்கவே ஏசி அறையில் இருக்க வேண்டிய சூழல் இருப்பதால் அவர்கள் இரவு உணவாக பழங்கள் மட்டும் சாப்பிடுவது அவர்களின் உடல்உஷ்ணத்தை குறைக்கும். மேலும் அதுபோன்ற சூழலில் அவர்கள் மாலை சிற்றுண்டியை சற்றே அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது இரவு உணவாக பழங்களே போதுமானதாகஇருக்கும்.
தூய்மையான பசும்பால் கிடைத்தால் இரவு உணவாகவோ அல்லது இரவு உணவுக்கு பின்னரோ சிறிதளவு எடுத்துக்கொள்வது நல்லது. ஜீரண குறைபாடுகள் இருப்பவர்கள் பாலைதவிர்த்து விடுவது நல்லது.
மார்க்கெட்டிங் துறைகளில் பணிபுரிபவர்கள், வியாபாரம் காரணமாக வெயிலில் வெளியில் அலையக்கூடிய சூழலில் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை முகம் கழுவிக்கொள்ளுங்கள். முகம்கழுவும் போது பின் கழுத்தையும், காதுகளின் உட்புறத்தையும், கழுத்து பகுதிகளையும் தண்ணீரால் நனைப்பது மிகவும் முக்கியம்.
பெண்களுக்கு பொதுவாகவே நீரின் தேவை அதிகம் இருக்கும். எனவே குறிப்பாக பெண்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இல்லத்தரசிகளும், பணிபுரியும் பெண்களும்தங்களுக்கு அருகில் கண்டிப்பாக ஒரு தண்ணீர் குவளையை வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தாகம் எடுத்த மறுநொடி நீர் அருந்திவிட்டு தான் அடுத்த வேலையை பார்க்க வேண்டும்.
குழந்தைகள் பொதுவாகவே நீரின் தேவையை உணராதவர்களாகவும் அறியாதவர்களாகவுமே இருப்பார்கள். எனவே அவர்களை அவ்வப்போது தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும்.
இவைகளெல்லாம் போக நமது வீட்டில் உள்ள பெரியவர்களின் அனுபவங்கள் சொல்லும் கோடைகால குறிப்புகளையும் கவனத்தில் கொண்டு கடைபிடிக்கலாம்.
கோடை காலம் என்பது நமது இதயமும், சிறுகுடலும் அதிக வேளை பளுவுக்கு ஆளாகக்கூடிய காலமாகும். எனவே அந்த உறுப்புகளை சரியான சக்தி நிலையில் பராமரிக்கவேண்டுமானால் மேற்சொன்ன அனைத்து குறிப்புகளையும் கடைபிடிப்பது நன்மையான விளைவுகளை ஏற்படுத்தும்.
பல்வேறு பருவ காலங்களின் தன்மையை சரியாக அறிந்து கொண்டு அதற்கேற்ற சரியான உணவு மற்றும் வாழ்வியல் முறைகளை கடைபிடிக்கும் போது அக்காலமானது சுகமானஅனுபவங்களை தருவதாக அமையும். முக்கியமாக கோடை காலத்தில் நாம் செய்யக்கூடிய இந்த உணவு முறை ஒழுக்கங்கள் அடுத்தடுத்த பருவ காலங்களுக்கு உகந்த உடல் சூழலைஉருவாக்கி தந்து ஒரு முழுமையான ஆரோக்கிய வாழ்வை நமக்கு வழங்கும்.
குறிப்பு: மேற்சொன்ன குறிப்புகள் அனைத்தும்பொதுவான கோடை கால உணவுக் குறிப்புகளே. இந்தக் ஒன்றோ பலவோ நீங்கள் ஏற்கனவேஎடுத்துக்கொண்டிருக்கும் மற்ற மருத்துவத்துத்துக்கும்அல்லது மருந்துகளுக்கும் முரண்பட்டாலோ அல்லதுசந்தேகங்கள் இருந்தாலோ, அவற்றை உங்களுடையமருத்துவ ஆலோசகரின் அறிவுரைப்படிபின்பற்றிக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது
ALL INDIA ENTRANCE EXAMS FOR HIGHER STUDIES - AFTER 12th
உங்க வீட்டில் யாரேனும் இந்த ஆண்டு +2 முடிக்கிறார்களா...? அப்படியெனில் இது உங்களுக்கு மிக உபயோகமான Message..
ALL INDIA ENTRANCE EXAMS FOR HIGHER STUDIES - AFTER 12th
1.JEE main (Joint entrance examination main) Written Exam B.E/B.Tech /B.Arch http://jeemain.nic.in for NIT’S and IIIT’S.
2 JEE ADVANCE (Indian Institute of Technology Joint Entrance Exam) Written Exam B.E/B.Tech in IIT www.advance.nic.in
3 NEET Written Exam M.B.B.S/ B.D.S in India www.aipmt.nic.in now this exam is replaced by NEET.
4 AFMC- (Armed Forces Medical College Entrance Exam Written Exam M.B.B.S(Should Serve 7 Years in Armed Forces) www.afmc.nic.in
5 NID NEED(Nation al Entrance Exam for Design Written Exam National Institute of Design and other Design Institutes www.nid.edu
6 CLAT- (Common Law Admission Written Exam National Law Universities www.clat.ac.in Test)
7 BITSAT(Birla Institute of Technology Science Admission Test) Online Exam B.E in Pilani , Hyderabad and Goa www.bits-pilani.ac.in
8 NCHMCT(Na tional Council for Hotel Management Catering Technology Joint Entrance Exam) Written Exam B.Sc in Hospitality and Hotel Administration www.nchm.nic.in/
9 NDA and NA( National Defense Academy and Naval Academy) Written Exam Conducted by UPSC 3 Years Training for entry into ARMY/NAVY/AIRFORCE www.nda.nic.in
10 NEETUG ( National Eligibility Entrance Exam for Under Graduate)AIP MT to be Replaced Written Exam M.B.B.S/ B.D.S www.cbscneet.nic.in
11 AIMNET(All India Merchant Navy Entrance Written Exam by Bharat Shipping Ltd B.Tech Marine Engineering/ B.Sc Nautical Science/B.Tech Navel Architecture and Ship Building www.aim.net.co.in Test)
12 IIST( Indian Institute of Space Technology) Thiruvananth apuram Written Exam B.Tech- Avionics/ Aerospace Engineering/ Physical Science www.iist.ac.in
13 JNU(Jawahar lal Nehru University)NE W DELHI Written Exam B.A Foreign Language www.jnu.ac.in
14 CIEFL( Centr al Institute of English and foreign languages HYDERABA D written Exam B.A. English &Mass communication with specialization in Arabic/French German/Japanese/Russian/Spanish. www.efluniversity.ac.in/
15 Indian Statistical Institute (ISI) KOLKATTA Bengaluru Written Exam (Indian National Maths Olympiad awardees are exempted) B Sc Statistics (Kolkata ) and B Sc Mathematics(Bengaluru ) www.isical.ac.in/
16 Indian Institutes of Science Education and Research Pune, Bhopal, Kolkata, Mohali and Thiruvananth apuram Written Exam 5-year BS-MS dual degree in Biology, Chemistry, Mathematics and Physics / IISER Kolkata offers major in Earth Sciences www.iiserpune.ac.in/ (IISER)
17 The National Aptitude Test in Architecture (NATA) Computer Based Test B.Arch www.nata.in/
18 Indian Institute of Science Bangalore Written Exam 4 year Bachelor in science www.iisc.ernet.in/
19 All India PreVeterinary Test AIPVT Written Exam to 5 year B.V.Sc and AH www.vci.nic.in
20 AIIMS MBBS Entrance Test Written Exam MBBS www.aiimsexams.org/
21 All India Entrance Examination for B.Sc in Agriculture and allied sciences at Agriculture Universities AIEEA - Indian Council of Agricultural Research ICAR Written Exam Bachelor degree in Agriculture , Horticulture , Fisheries, Forestry , Home Science, Sericulture , Biotechnology, Agriculture engineering, Dairy Technology, Food Science and Agricultural marketing www.icar.org.in
22 AIIMS Written Exam B.Sc Hons Nursing and Para Medical courses www.aiimsexams.org/
23 UCEED 2015 Written Exam B Design program Product Design, IDC IIT Bombay 2015 Communication Design, Interaction Design, Mobility Design and Animation Design www.uceed.in/
24 Footwear Design and Development Institute ( FDDI All India Selection Test( AIST 2015 Computer Based Entrance Test Footwear Design www.fddiindia.com/
25 NEST 2015 The National National Institute of Science Education and Research (NISER) Written Exam 5 year integrated M Sc. Course in Biology, Chemistry, Mathematics and Physics www.niser.ac.in/
26 Regional Institute of Education RIE CEE Written Exam B.Sc. B.Ed. / BA B.Ed 4 Year / M Sc B Ed www.rieajmer.raj.nic.in/
27 Central Universities Common Entrance Test (CUCET) Written Exam Integrated UG / PG and Research Programs ( BA B.Ed, BSc B Ed, BA LLB, Integrated MA, /MA, MSc, MSc B Ed, Integrated M Sc in 10 Central Universities www.cucet2015.co.in
28 Humanities and social Sciences Written Exam 5 year integrated MA Course in Developmental Studies and MA in English Studies offered by IIT www.hsee.iitm.ac.in Entrance exam HSEE Madras
29 Tata Institute of Social sciences TISS BA Hons Social Work Written Exam 3 year BA Course in Social Work with specialization in Rural Development and for BA and MA integrated program www.tiss.edu.in
30 NIFT- (National Institute of Fashion Technology) Written Exam Fashion Technology / Design Management www.nift.ac.in/
31 CA programme Common Proficiency Test (CPT) CA www.icai.org
32 CS Programme - Institute of Company Secretaries of India (ICSI) 2½ years (after graduation), 3½ years (after Class 12) Written Exam CS www.icsi.ed
33.BHU - ALL Courses
34.ICI - Indian Chemical Technology.
35. ICAR - Agriculture
36.Jipmer - pondy MBBS
37.IISER - Indian Institute Science Education and Research.
38. Manipal - MUOET.

பிளஸ்-1 கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுமா? என்பதற்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் பதில்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கணித தேர்வு நடைபெற்றது. மாணவ-மாணவிகள் வினாத்தாளை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். வினாக்கள் அவர்கள் படித்ததாகவோ, எதிர்பார்த்ததாகவோ இல்லை. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமபட்டு தேர்வு எழுதினார்கள்.
தேர்வு எழுதிய மாணவிகள் பலர் அழுதுகொண்டே வெளியே வந்தனர். தேர்ச்சி பெறுவோமா? என்பதே சந்தேகமாக இருப்பதாக மாணவர்கள் சிலர் தெரிவித்தனர். கருணை மதிப்பெண் வழங்கினால் தான் தேர்ச்சி அடைய முடியும் என்றும் மாணவர்கள் கூறினார்கள்.
பிளஸ்-1 கணித தேர்வு கடினமாக இருந்ததால் கருணை மதிப்பெண் வழங்கப்படுமா? என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
கேள்விகள் சரியாகத்தான் கேட்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பிளஸ்-1 தேர்வில் கணித பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் இருக்காது. 90-க்கு 90 மதிப்பெண்கள் எடுப்பது தான் சிரமம்.
பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், வினாத்தாள் எளிமையாக இருந்ததால், முதல் தாளின் மதிப்பெண் இழப்பை ஈடு செய்யலாம் என, மாணவர்கள் மகிழ்ச்சி.......
பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், வினாத்தாள் எளிமையாக
இருந்ததால், முதல் தாளின் மதிப்பெண் இழப்பை ஈடு செய்யலாம் என, மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 16ல் பொது தேர்வு துவங்கியது.
இந்த ஆண்டு பொது தேர்வுகளில், வினாத்தாள்முறை மாறியிருப்பதால், மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் தேர்வுக்கு சென்றனர். அதேபோல், முதல் தாள் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்தது. இதுவரை மொழிப்பாடங்ளின் வினாத்தாள்களை பார்த்து, பெரும்பாலும், மாணவர்கள் அச்சப்படுவதில்லை. ஆனால், இந்த முறை, தமிழ் தேர்விலேயே, மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த அதிர்ச்சியுடன், நேற்று இரண்டாம் தாள் தேர்வுக்கு, மாணவர்கள் சென்றனர். ஆனால், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல், வினாத்தாள் எளிமையாக இருந்தது. அதுவும் மாணவர்கள் பெரிதும் நம்பும், சரியான விடையை தேர்வு செய்யும், ஒரு மதிப்பெண் வினாக்கள், முழுமையாக எளிமையாக இருந்தன. வினாத்தாள் குறித்து, சிவகங்கை, கே.ஆர்.மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர், நீ.இளங்கோ கூறியதாவது: முதல் தாளில், மாணவர்கள் தவறவிட்ட மதிப்பெண்களை மீட்டு எடுக்கும் வகையில், இரண்டாம் தாள் எளிதாக இருந்தது. இதில், நகர்ப்புற மாணவர்கள் மட்டுமின்றி, கிராமப்புற மாணவர்களும், தடுமாற்றமின்றி எழுதியுள்ளனர். ஒரு மதிப்பெண் பகுதி, கவிதை, பா நயம், கட்டுரை எழுதுதல் என அனைத்து பகுதிகளும், மாணவர்கள் பயிற்சி பெற்றவையாக இருந்தன. தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு குறித்த கேள்வி மட்டும், கொஞ்சம் யோசிக்க வைப் பதாக இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்

பிளஸ் 1 வினாத்தாள் கடினம் குறித்து ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வி துறையில் நிபுணர் கமிட்டி..
பிளஸ் 1 வினாத்தாள் கடினம் குறித்து ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வி
துறையில் நிபுணர் கமிட்டி அமைக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.தமிழக மாணவர்கள், 'நீட்' போன்ற நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ளவும், அதற்கேற்ப அவர்களை தயார்படுத்தவும்,
பிளஸ் 1 வகுப்புக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1 பொது தேர்வில், மாணவர்கள் சிந்தித்து பதில் எழுதும் வகையில், வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கல்வியாளர்களும், மிகவும் தரமான வினாத்தாள்கள் என, பாராட்டியுள்ளனர்.ஆனால், மனப்பாட பயிற்சி மேற்கொண்ட மாணவர்கள், சிந்தித்து பதில் அளிக்க, சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், போனஸ்; கருணை மதிப்பெண் வேண்டும் என, பெற்றோர், மாணவர்கள் கோரியுள்ளனர்.இந்நிலையில், பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் ஆலோசனைப்படி, பிளஸ் 1 வினாத்தாளின் கடினத்தன்மை குறித்து ஆராய, நிபுணர் கமிட்டி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கமிட்டியில், பேராசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், தேர்வுத்துறை அதிகாரிகள் இடம் பெறுவர் என, தெரிகிறது.பொது தேர்வுகள் முடிந்த பின், பிளஸ் 1 விடைத்தாள்கள், மே மாதம் திருத்தப்படும். அப்போது, மாணவர்கள் பெறும் அதிக பட்ச மதிப்பெண்ணை பொறுத்து, நிபுணர் கமிட்டி முடிவுகளை மேற்கொள்ளும். அதற்கு முன், எத்தனை கேள்விகள், மாணவர்களின் நுண்ணறிவை துாண்டின; எந்த கேள்வி களுக்கு பதில் எழுத, மாணவர்கள் திணறினர் என்பது உட்பட, பல்வேறு வகையில், ஆய்வு செய்யப்படும்.பின், மாணவர்களில் பெரும்பாலானோர், சரியாக பதில் எழுதாத கேள்விகள் அடையாளம் காணப்பட்டு, அந்த கேள்விகளுக்கு, கருணை; போனஸ் அல்லது சமநிலை மதிப்பெண் வழங்க, முடிவு செய்யப்படும் என, பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பள்ளிகளில் ஏ.சி. வகுப்பறைகள் அமைக்கப்படுவது தேவைதானா? ஓர் அலசல்.....
மாணவர்களை ஈர்க்க, தங்கள் பள்ளியில் பல்வேறு வசதிகள் இருக்கிறது என தனியார் பள்ளிகள், பல காலமாக விளம்பரம் செய்கின்றன. சமீபமாக, அரசுப் பள்ளிகள் பலவும், தங்கள் பள்ளியில் ஏ.சி. வகுப்பறைகள் அமைக்கப்பட்டிப்பதாகச் சொல்லும் செய்தியைக் காணமுடிகிறது. ஒரு மாணவர், சிறப்பாகக் கல்வி கற்பதற்கு வகுப்பறைச் சூழலும் முக்கியம். அதனால் இவ்வாறு அமைக்கப்படுகிறது எனச் சொல்லப்பட்டாலும், இதற்கு மாற்றுக் கருத்துகளும் எழுகின்றன. இதுகுறித்து ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டோம்.
வசந்த், கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, கடலூர்:
''நான் பணிபுரிந்த பள்ளியில், வகுப்பறைக்கு ஏ.சி அமைத்தேன். அது ஸ்மார்ட் கிளாஸ் ரூம். அதில் முப்பதுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களும் இன்வெர்ட்டரும் இருக்கும். அதற்கான பாதுகாப்புக்காகவும் அது பயன்பட்டது. மற்றபடி, வகுப்பறைகளில் ஏ.சி தேவையில்லை என்பதே என் கருத்து. பெற்றோரைக் கவர்வதற்காக ஏ.சி வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன என்று சொன்னாலும், பல கிராமங்களில் ஏ.சி இயங்குவதற்கான மின்சார வசதியே இல்லை. இன்வெர்ட்டர் வைத்து இயக்கும் சூழலும் இல்லை. பொதுவாக, அரசுப் பள்ளியின் வகுப்பறைகள் பெரியதாக இருக்கும். அதற்கு ஏ.சி செய்ய, பல்வேறு ஏற்பாடுகளுக்கும் சேர்த்து ஒரு லட்சத்துக்கும் மேல் செலவாகும். அந்தத் தொகையில் மாணவர்களுக்குத் தேவையான கழிப்பறை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித் தரலாமே.''
பிராங்க்ளின், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, கோயம்புத்தூர்:
''ஏ.சி வகுப்பறைகள் என்பது, அந்தச் சூழலை மாணவர்கள் தெரிந்துகொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் உதவும். நான் முன்பு வேலை பார்த்த ராமர்பாளையத்தில் ஏ.சி. வகுப்பறைகள் இருந்தன. ஆனாலும், இந்த வசதி ஏற்படுத்துவதாலே பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகமாகும் என்பதில் உடன்பாடில்லை. ஆசிரியர்கள் திறமையாகப் பாடம் நடத்துவதும், அது பொதுமக்களிடம் பேசப்படுவதாலுமே மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும்.''
சதீஷ்குமார், ஆசிரியர், புதுக்கோட்டை:
''அரசுப் பள்ளிகளில் ஏ.சி. வகுப்பறைகள் அமைப்பது நான்கு பலன்களைத் தருகிறது.
1.தனியார் பள்ளிகள்போல அரசுப் பள்ளியிலும் ஏ.சி வகுப்பறை இருக்கும் விஷயம் பெற்றோர்களை ஈர்க்கிறது. இதனால் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.
2. மற்ற பள்ளிகளிடமிருந்து ஏ.சி வகுப்பறைகள் அமைத்த பள்ளியைத் தரம் உயர்த்திக் காட்ட உதவுகிறது.
3. ஒரு மாவட்டத்தில் இரண்டு அல்லது மூன்று பள்ளிகளில் மட்டுமே ஏ.சி. வகுப்பறைகள் அமைக்கப்பட்டிருக்கும். அது, கல்வி அதிகாரிகள் கவனத்தை சட்டென்று ஈர்க்கவைக்கிறது.
4. ஊடகத்தின் கவனத்தால் இதுபோன்ற பள்ளிகள் ஈர்க்கப்பட்டு, செய்திகள் வெளிவருகின்றன. அதுவும், மாணவர் சேர்க்கைக்கு மிகவும் உதவுகிறது.''
சசிகலா, சன்னதி உயர்நிலைப் பள்ளி, வந்தவாசி:
''பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்குத் தேவையானது சுத்தமான குடிநீர், தூய்மையான கழிவறை, பாதுகாப்பான சுற்றுச்சுவர் போன்றவையே. அதுவே மாணவர் கல்வி கற்பதற்கான மகிழ்ச்சியான சூழலாக அமையும். சரியான உடைகள் உடுத்தாமல் வரும் மாணவர்கள் இருக்கும் நிலையில், ஏ.சி. வகுப்பறைகள் அவசியமற்றவை என்பதே என் கருத்து. ஏனெனில், எட்டு மணி நேரம் ஏ.சி.யில் இருக்கும் மாணவர் வீட்டிலும் அதை எதிர்பார்க்கும் மனநிலையும் வரும். அவர்களில் யாரேனும் ஒரு பெற்றோர், தன் வீட்டில் ஏ.சி வாங்கிப் பொருத்திவிட்டால், மற்ற பிள்ளைகள் ஏங்கிப் போவார்கள். இருக்கும் சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்வதைக் கற்றுக்கொடுப்பதும் கல்வியில் ஓர் அங்கம்தானே. ஏ.சி வகுப்பறைகள் தேவைதான். அது எப்போது என்றால், மாணவர்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிய பிறகே. அதை முதலில் செய்வோம்.''
..................................................................................................................................................
மார்ச் 22 இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்..
இன்று உலக தண்ணீர் தினம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. ‘வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப்’ என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர். கடந்த 1992ம் ஆண்டு ஐ.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரைதான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான்.
உலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுக்க தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரியாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது.
நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். ‘தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம். நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம்’ என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்.
அங்கன்வாடி மையங்களில் முருங்கை மரம் மற்றும் பப்பாளிச்செடி வளர்க்கப்பட உள்ளதாக கலெக்டர் அறிவிப்பு...
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் முருங்கை மரம் மற்றும் பப்பாளிச்செடி வளர்க்கப்பட உள்ளதாக சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் வெளியிட்ட செய்தி குறிப்பு: தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் தோட்டக்கலை சாராத நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தோட்டக்கலையை ஊக்கப்படுத்தும் நோக்கத்துக்காக 25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மரக்கன்றுகள், வணிக மலர்ச் செடிகள் 40 சதவீதம் மானியத்தில் நடவு செய்து வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து சமூகநலத்துறையின் கீழ் நிர்வகிக்கப்படும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளும், பழங்களும் கிடைக்கும் வகையில் முருங்கை, பப்பாளி செடிகளை நடவு செய்து வளர்க்க இடம் வசதியுள்ள அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதற்காக, அனைத்து அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களுக்கும் முருங்கை மற்றும் பப்பாளிச் செடிகள் வழங்குவதற்காக அரசு தோட்டக்கலை பண்ணைகளில் இச்செடிகளின் உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 42,795 சத்துணவு மையங்களுக்கு 78,347 பப்பாளி மற்றும் 73,527 முருங்கை கன்றுகள் விநியோகிக்கப்பட உள்ளன. எனவே முருங்கை மற்றும் பப்பாளி வளர்ப்பதற்கு இடவசதியுள்ள அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையயங்கள் அந்தந்த மாவட்ட சமூகநலத்துறையின் வழியாக மாவட்ட தோட்டக்கலை இணை, துணை இயக்குனரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
புதன், 21 மார்ச், 2018
'பாடத்திட்டம் குறைக்கும் திட்டம் மாநிலங்கள் முடிவு செய்யட்டும்'
புதுடில்லி: மாணவர்களின் கல்வி சுமையை குறைக்கும் வகையில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதை ஏற்பது குறித்து மாநிலங்களே முடிவு செய்யும் என, லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது.லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர், உபேந்திர குஷ்வாஹா அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:திறன் மேம்பாடுதற்போதைய கல்வி முறையானது, மாணவர்களை, தகவல்களை சேகரிப்பவர்களாகவே மாற்றுகிறது. வாழ்க்கைக்கு உகந்த வகையில், அதில் மாற்றம் செய்து, உடற்பயிற்சி கல்வி, திறன் மேம்பாடு, ஒழுக்க நெறி பாடங்கள் போன்றவை சேர்க்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.மாணவர்களின் கல்விச் சுமையை, 50 சதவீதம் வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.முடிவுகல்வி என்பது பொது அதிகாரப் பட்டியலில் உள்ளது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மாநிலங்களில் உள்ளதால், புதிய பாடத்திட்டங்களை ஏற்பது குறித்து, அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யட்டும்.இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.கே.வி.,க்களுக்கு தரவரிசையா?லோக்சபாவில் மற்றொரு கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, 'பல்கலைகள், கல்லுாரிகளைப் போல, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளையும் தரத்தின் அடிப்படையில் பட்டியலிடும் திட்டம் ஏதும் இல்லை' என்றார்.இயற்பியல், பொருளியலில் கேள்விகள் கடினம் : பிளஸ் 2 மாணவர்கள், 'சென்டம்' பெற முடியுமா?
பிளஸ் 2 இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வில், ஐந்து கேள்விகளை தவிர, மற்ற கேள்விகள் எளிமையாக இருந்தன என, மாணவர்களும், ஆசிரியர்களும் தெரி வித்தனர். அதே நேரம், 'சென்டம்' எண்ணிக்கை பெருமளவு குறையும் என, கூறப்படுகிறது.பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, நேற்று இயற்பியல் தேர்வும், வணிகவியல் மாணவர்களுக்கு பொருளியல் தேர்வும் நடந்தது.
கையேடு : இதில், இயற்பியலில், பாடத்தின் பின்பக்கத்தில் உள்ள உதாரண கேள்விகளே, வினாத்தாளில் அதிகமாக இடம் பெற்று இருந்தன. அதேபோல், தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட, குறைந்தபட்ச கற்றல் கையேடு என்ற புத்தகத்தில் இருந்தும், 65 சதவீத கேள்விகள் இடம் பெற்றிருந்தன. பொருளியல் தேர்வில், பிரிவு, 'அ' வை தவிர, மற்ற அனைத்து பிரிவுகளிலும், எளிமையான வினாக்கள் இருந்தன. பிரிவு, 'அ' வில், ஒரு மதிப்பெண் கேள்விகள், மாணவர்களை நீண்ட நேரம் யோசிக்க வைத்தன. இதனால், அப்பிரிவில், ஐந்து கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க முடியவில்லை என்றனர்.பொருளியல் தேர்வு குறித்து, சென்னையில் உள்ள, ஏ.பி.பரேக் குஜராத்தி வித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளி, பொருளியல் ஆசிரியர், ஏ.பி.பழனி கூறியதாவது:கல்வித்துறை, 'ப்ளூ பிரின்ட்'டில் இருந்து, மாறாமல் வினாத்தாள் அமைக்கப்பட்டிருந்தது.
சோதனை : ஒன்று, 10, 11, 13 மற்றும், 14வது கேள்விகள், மாணவர்களின் சிந்தனைத் திறனை சோதிக்கும் வகையில் இருந்தன. தேர்வு விதிகளின்படி, விடை திருத்தத்தில், 'சென்டம்' வழங்கும் முன், மாணவர்களின் கல்வித்தரத்தை சோதிக்க, சில சிக்கலான கேள்விகள் இடம் பெறும்.அதேபோல, சில, 'டுவிஸ்ட்' கேள்விகள் இருந்தன. மேலும், பாடத்தின் பின்பக்கத்தில் உள்ள உதாரண கேள்விகளும், அதிகமாக இடம் பெற்றதால், மாணவர்களின் தேர்ச்சிக்கு எந்த பிரச்னையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
முதல் கேள்விக்கு, 'இரண்டு' விடை
பொருளியல் தேர்வில், ஒன்றாம் எண்ணில் இடம் பெற்ற, 'பொருளியல் குறிப்பிடுவது...' என்ற, ஒரு மதிப்பெண் கேள்விக்கு, சரியான விடையை கண்டுபிடிக்க, நான்கு குறிப்புகள் தரப்பட்டிருந்தன. அவற்றில், மனித விருப்பமும், நிறைவடைதலும் என்ற குறிப்பும், செல்வத்திற்கும் சேமிப்பிற்கும் உள்ள தொடர்பு என்ற குறிப்பும், சரியான விடையாக இருந்ததாக, ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிவித்தனர். எனவே, இந்த இரண்டில், எந்த பதிலை எழுதினாலும், மதிப்பெண் தர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
காப்பியடித்த 44 பேர் சிக்கினர் : இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வில், காப்பி அடித்ததாக, நேற்று மாநிலம் முழுவதும், 44 பேர் சிக்கினர். இதில், மதுரை, 5; கோவை, 3; கிருஷ்ணகிரி, 1; திருச்சி, 4; விழுப்புரம், 8; திருவண்ணாமலையில், 5 பேர் என, 26 பேர் பிடிபட்டனர். வேலுார், 3; திருவண்ணாமலை, 11; விழுப்புரம், 3; மதுரையில், 1 என, 18 தனித்தேர்வர்கள் உட்பட, மொத்தம், 44 பேர் காப்பியடித்து, சிக்கினர். இந்த ஆண்டு, இதுவரை நடந்த தேர்வுகளில், நேற்று தான் அதிக மாணவர்கள் காப்பியடித்து சிக்கியுள்ளனர்.
'நோட்டீஸ்' அனுமதியின்றி உயர் கல்வி படித்தது எப்படி ? 8,000 ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்'
தமிழக பள்ளி கல்வித்துறையின் அனுமதி பெறாமல், உயர்கல்வி படித்த, 8,000 பேர் விளக்கம் அளிக்கும்படி, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.
அனுமதியின்றி உயர் கல்வி படித்தது எப்படி ? 8,000 ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்'
தமிழக பணியாளர் சீர்திருத்தம் மற்றும் அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியில் இருக்கும் போது, உயர்கல்வி படிக்கவும், சொத்துக்கள் வாங்கவும், வெளிநாடு செல்லவும், தங்கள் துறையின் முன் அனுமதி பெற வேண்டும்.
அனுமதி பெறாவிட்டால், விதிமீறலாக கருதப்பட்டு, துறை ரீதியாக ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில்,
அனுமதி பெற்று, உயர்கல்வி படித்து முடித்தால், அவர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்கப்படும்.
அனுமதி பெறாமல்
இந்நிலையில், இந்த ஆண்டு, உயர்கல்வி ஊக்க ஊதியம்கேட்டு, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறைக்கு, ஆசிரியர்கள் பலர் கடிதம் அனுப்பினர். அவற்றை பரிசீலித்த போது, பெரும்பாலானவர்கள், தங்கள் துறை தலைவர்களிடம் அனுமதி பெறாமல், உயர்கல்வி படித்துள்ளது தெரிய வந்தது.இதையடுத்து, முன் அனுமதி பெறாமல், உயர்கல்வி படித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். இதை பின்பற்றி, அனைத்து மாவட்டங்களிலும், முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும்மாவட்ட கல்வி அதிகாரிகள் வாயிலாக, அனுமதி பெறாமல் படித்தவர்களுக்கு, விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
படித்தது எப்படி;
மாநிலம் முழுவதும், 8,000 பேரிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக
Advertisement
கூறப்படுகிறது.உயர்கல்வி படித்தது எப்படி; படிக்க சென்ற போது, பணியின் நேரம் கைவிடப்பட்டதா; உயர்கல்வி படித்த காலம் எப்போது; துறை தலைமைக்கு தெரியாமல், உயர்கல்வி படித்த காரணம் என்ன என, பல்வேறு வகையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சரியாக விளக்கம் தராதவர்கள் மீது, '17 - பி' என்ற விதிமீறல் குற்றச்சாட்டில், 'மெமோ' கொடுக்கவும், பதவி உயர்வை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
மூலிகைப் பண்ணை, ஐந்து லட்சம் ரூபாயில் `கல்விச்சீர்'... அசத்தும் க.பரமத்தி அரசுப் பள்ளி
இந்தப் பள்ளியின் ஆண்டுவிழா சமீபத்தில் நடந்தது. இருநூறுக்கும் மேற்பட்ட கிராம மக்களும், பெற்றோர்களும் பள்ளிக்குத் தேவையான சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களைச் சுமந்தபடி `கல்விச்சீர்' வழங்க ஊர்வலமாக வந்தனர். அந்தக் கல்விச்சீரில் 90 ஆயிரம் மதிப்பிலான லிங்கோபோன் என்கிற ஆங்கிலம் எளிதாகக் கற்றுக்கொள்ள பயன்படும் மெட்டீரியல்ஸ், 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 25 தொகுதிகள்கொண்ட என்சைக்ளோபீடியா, பீரோக்கள், 48 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புரஜெக்டர் உள்ளிட்ட, பள்ளிக்குத் தேவையான பொருள்கள் அடங்கியிருந்தன. அத்தனை பொருள்களையும் பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் க.பரமத்தி அரசுத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன் உள்ளிட்ட ஆசிரியர்களிடம் வழங்க, மாணவர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
அதன் பிறகு, ஆண்டுவிழா தொடங்கியது. `நிரல்' என்ற திரைப்படத்தை இயக்கிய திரைப்பட இயக்குநர் ஹேம்நாத், இந்தப் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை வைத்து எடுக்கப்பட்ட `வெளிச்சம்' என்ற குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. அதில், அரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்தால் என்ன நன்மை என்பதையும், தனியார் பள்ளிகளில் சேர்த்தால் தாயின் தாலி முதற்கொண்டு அடகுக்கடைக்குப் போவதோடு, பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் எவ்வாறு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் பதிவுசெய்திருந்தார். விழாவில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
"இந்தியாவில் உள்ள ஒவ்வோர் அரசுப் பள்ளியும் இப்படி மாறிவிட்டால், இந்தியா சீக்கிரம் வல்லரசாகிவிடும். இந்தப் பள்ளியில் படிக்க,
நான் மாணவனாக மாற முடியவில்லையே என்று ஏங்குகிறேன்" என்று தன் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.
இந்தச் சீர்மிகு மாற்றங்களுக்குக் காரணமான க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணனிடம் பேசினோம்.
``பத்து வருடங்களுக்கு முன்னர், நான் இந்தப் பள்ளிப் பணிக்கு வந்தபோது, மாணவர்களின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது மாணவர்களின் எண்ணிக்கை 193. இந்த மாற்றத்துக்குக் காரணம், சக ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், ஊர் இளைஞர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகம் என்று எல்லாத் தரப்பின் கூட்டு முயற்சிதான். முதலில், நல்ல கல்வியைத் தர ஆரம்பித்தோம். ஆங்கிலத்தை, தனியார் பள்ளிகளைவிட மாணவர்களுக்குச் சிறப்பாக போதித்தோம். ஸ்மார்ட் க்ளாஸ்ரூம்கள், இசை, கராத்தே, யோகா உள்ளிட்ட இலவசப் பயிற்சி வகுப்புகள் என, எல்லா வகைகளிலும் மாணவர்களை மேம்படுத்தினோம். இதனால், தனியார் பள்ளிகளில் படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளையும் பெற்றோர்கள் இங்கே சேர்த்தார்கள்.
வெளியூரைச் சேர்ந்த பல பெற்றோர்கள், எங்கள் பள்ளியில் பிள்ளைகளைப் படிக்கவைப்பதற்காக இங்கே வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருக்கும் அதிசயமும் நடந்திருக்கிறது. பிறகு, கிராம மக்களே கடந்த நான்கு வருடங்களாக பள்ளிக்குத் தேவையான பொருள்களை பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கிவந்து `கல்விச்சீர்' என வழங்கி வருகிறார்கள். இந்த வருடம் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் கல்விச்சீர் கொடுத்திருக்கிறார்கள். பள்ளியில் இப்படி விலை உயர்ந்த பல பொருள்கள் இருப்பதால், அதைப் பாதுகாக்க ஒரு லட்சம் ரூபாய் செலவில் எட்டு சி.சி.டி.வி கேமராக்கள் வாங்கிப் பொருத்தியுள்ளோம். பள்ளி வளாகம் முழுக்க மரங்களை வளர்த்து, இயற்கையான காற்றோட்டத்தையும் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளோம். வகுப்பறைதோறும் டைல்ஸ், ஃபேன், நாட்டுநடப்புகளைத் தெரிந்துகொள்ள டிவி என வசதி செய்துள்ளோம். மாணவர்களுக்குத் தரமான சீருடைகளை ஸ்பான்சரின் செலவில் வழங்கியுள்ளோம்.
சுத்தமான குடிநீர் வசதியை உருவாக்கியுள்ளோம். இதனால், எங்கள் பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழும், ஒரு மாதத்துக்கு முன்னர் புனேவில் உள்ள ஓர் அமைப்பு தந்த `5s' விருதையும் பெற்றுள்ளோம். இந்திய அளவில் இந்த `5s' விருதை வாங்கிய ஒரே அரசுப் பள்ளி, எங்களுடையதுதான். அதேபோல், பள்ளி வளாகத்தில் கரிசலாங்கண்ணி, கருந்துளசி, ஆடாதொடை, சர்க்கரைக்கொல்லி உள்ளிட்ட 30 வகையான மூலிகைச்செடிகளை மாணவர்களைகொண்டே நடவுசெய்து வளர்த்துவருகிறோம். அந்த மூலிகைக் காற்று, மாணவர்களை நோயிலிருந்து காக்கிறது.
`அரசுப் பள்ளிகள்தான், சிறந்த கல்வியை போதிக்கும் போதிமரங்கள்' என கரூர் மாவட்ட மக்கள் அனைவரையும் சொல்லவைக்கும் வரை, எங்க முயற்சிகள் தொடரும்" என்றார் முத்தாய்ப்பாக!......................................
.........................................................................................................................................................................................................................
போர்டபிலிட்டி வழிமுறை மாற்றம்? டிராய் புது அறிவிப்பு..
தொலைத்தொடர்பு துறையில் ஒரு நெட்வொர்க் வாடிக்கையாளர் மற்ற நெட்வொர்க் நிறுவனத்திற்கு தனது மொபைல் எண்ணை மாற்றுவதற்கு போர்ட் செய்ய வேண்டும் அதற்கு சில வழிமுறைகள் உள்ளது.
இந்த வழிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கு தற்போது டிராய் முடிவு செய்துள்ளதாம். இது குறித்த ஆலோசனை கடிதம் விரைவில் வழங்கபப்டும் எனவும் தெரிகிறது. இது குறித்து தர்போது வெளியாகியுள்ள செய்திகள் பின்வருமாறு... இந்தியாவில் மொபைல் நம்பர் போர்டபிலிட்டிக்கான கால அவகாசம் அதிகமாக உள்ளது, எனவே இதன் நேரம் குறைக்கப்படுவதோடு, வழிமுறைகளும் மாற்றப்படும். இதுவரை மொபைல் நம்பர் போர்டபிலிட்டி செய்வதற்கான கட்டணம் ரூ.19 ஆக இருந்த நிலையில், இவை ரூ.4 என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மொபைல் நம்பர் போர்டபிலிட்டி புதிய வழிமுறைகள் மற்றும் அதிக பாதுக்காப்புடன் மாற்றுவது குறித்து டிராய் விவாதித்து வருகிறது. புதிய வழிமுறைகள் மிகவும் நேர்த்தியாகவும், வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பிழையும் இல்லாதபடி மேற்கொள்வதை உறுதி செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.நீட் தேர்வுப் பயிற்சிக்குப் புதிய செயலி!...
LETS ACT
சென்னையில் நீட் தேர்வுப் பயிற்சிக்காகத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.
தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி மையங்களை அரசு நடத்திவருகிறது. அது போன்று, தனியார் பயிற்சி மையங்களும் செயல்பட்டுவருகின்றன.
இந்நிலையில், தன்னார்வத் தொண்டு நிறுவனத் தலைவர் ராம் பிரகாஷ், காணொளி மூலம் நீட் தேர்வுப் பயிற்சிக்கான புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளார். அரசு நீட் பயிற்சி வகுப்புகளை நடத்திவந்தாலும், கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு சரியாகக் கிடைப்பதில்லை.
ஆனால், அனைத்துப் பகுதிகளிலும் தனியார் பயிற்சி மையங்கள் இருக்கின்றன. அங்கே சேருவதற்கான விண்ணப்பத்தை ரூ.1400 கொடுத்து வாங்க முடியாத பொருளாதார நெருக்கடியில்தான் அதிக மாணவர்கள் உள்ளனர்.
அதனால், அனைத்து மாணவர்களும் எளிதில் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற LETS ACT என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகப்படுத்துகிறோம்; அது மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறினார் ராம் பிரகாஷ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)