>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018


மாத சம்பளம் பெறுவோரின் வருமான வரி விதிப்பில் மாற்றம் இல்லை: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு...

பாஜக அரசின் 5-வது முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வாங்கினார். அருண் ஜெட்லி இந்தியில் பேசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
சுதந்திர இந்தியாவில் இந்தியில் பேசி பட்ஜெட்டை தாக்கல் செய்வது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் எந்த நிதி அமைச்சரும் இந்தியில் தாக்கல் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:-
* நிர்வாக சீர் திருத்தத்தால் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது.
* கூடுதல் மூலதனத்தால் வங்கிகளின் கடன் வழங்கும் திறன் உயர்வு.
*4 வது காலாண்டில் வளர்ச்சி 7.2%-ல் இருந்து 7.4% ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
*உலகப்பொருளாதாரத்தில் 7 வது இடத்தில்  இருந்து 5 வது இடத்துக்கு இந்தியா முன்னேறும் என்று அருண் ஜெட்லி கூறினார்.
*2022 ஆண்டுக்குள் விவசாயிகள் வருவாயை 2 மடங்காக உயர்த்த செயல் திட்டம்
* ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
* மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும்.
*கிராமங்கள் வேளாண் சந்தைகளை இணைக்கும் சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
*இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* மீனவர்கள், கால்நடை வளர்ப்போருக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும்.
* வேளாண் பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த ரூ.1400 கோடி ஒதுக்கப்படும்.
*கல்வி தரத்தை உயர்த்த மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை
*பயிர் கடனுக்கு ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கபப்ட்டுள்ளது.
மீன்வள மேம்பாடு கால்நடை பெருக்க திட்டத்துக்கு ரூ.10000 கோடி  ஒதுக்கீடு.
*மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
*8 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
*கிராமப்புறங்களில் கூடுதலாக 2 கோடி கழிப்பறைகள் கட்டப்படும்
* தேசிய வாழ்வாதாரத் திட்டத்துக்கு ரூ.5750 கோடி ஒதுக்கீடு.
* குறைந்த விலை வீடுகள் கட்டும் திட்டத்துக்கு தனி நிதியம் அமைக்கப்படும்
*இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு.
* இலவச நோய் பரிசோதனை மையம் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு
* மூங்கில் வளர்ப்பு திட்ட விரிவாக்கத்துக்கு ரூ.1200 கோடி ஒதுக்கீடு.
*குடும்பம் ஒன்றிக்கு ரூ.5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை செலவை அரசு ஏற்கும்
*10 கோடி ஏழை குடும்பங்களுக்கு தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
* புதிதாக 24 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும்.
* புதிதாக 1.5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்

* டெல்லியில் கற்று மாசை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம்  உருவாக்கப்படும்.
* மாவட்ட மருத்துமனைகள், மருத்துவ கல்லூரிகளாக மேம்படுத்தப்படும்.
* தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுக்கு ரூ.56 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
*நடுத்தர, சிறு, குறுந்தொழில்களுக்கு தொழில் கடன் வழங்கும் முறை மேம்படுத்தப்படும்.
*சிறு தொழில்கள் செலுத்த வேண்டிய வங்கி கடன்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*4 கோடி ஏழை வீடுகளுக்கு மின்  இணைப்பு வழங்க ரூ.16,000 கோடி செலவிடப்படும்.
*முழுமையான சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.9975 கோடி ஒதுக்கீடு.
*70 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* 600 பெரிய ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்
*அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.
*அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.
* ரயில்வே  துறையில்  பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும்.
* அனைத்து ரயில்களிலும் வைஃபை, கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.
* 124 விமான நிலையகங்ளில் கூடுதல் பயணிகளை கையாள திட்டம்.
* ரயிலில் பயணிகள் பாதுக்காப்பு அதிகரிக்கப்படும்.
* ரயில்வே துறையில் ரூ.1,48,528  கோடி முதலீடு செய்யப்படும்.
*4000 கிமீ நீளத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.
*5160 ரயில் பெட்டிகள் வாங்கப்படும்.
*3600 கிமீ இரும்பு பாதை புதுப்பிக்கப்படும்.
*பெரம்பூரில் நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்க புதிய ஆலை தொடங்கப்படும்.
* அதிவேக ரயில்களை இயக்க குஜராத்தில் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
* குடியரசு தலைவரின் ஊதியம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.
* துணை குடியரசுத்தலைவரின் ஊதியம் ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.
*ஆளுநர் ஊதியம் ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்படும்.
* காந்தியின் கொள்கைகளை பிரச்சாரம் செய்ய ரூ.150 கோடி ஒதுக்கீடு.
* பயணிகள் விமானத்தின் சேவைகள் 5 மடங்கு உயர்த்தப்படும்.
* பயன்பாட்டில் இல்லாத 31 ஹெலிபேடுகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
*மாத சம்பளம் பெறுவோரின் வருமான வரி விதிப்பில் மாற்றம் இல்லை.
* மீண்டும் ரூ.40000 நிரந்தர கழிவு அனுமதி
* உள்நோயாளிகளுக்கு அளிக்கப்படும் வருமான வரி கழிவு தொடரும்.
*முதியோர் சேமிப்பு வட்டி வருவாய்க்கு ரூ.5000 வரை வரிபிடித்தம் இல்லை.
*ரூ.50 கோடியாக இருந்த விற்றுமுதல் ரூ.250 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

10ம் வகுப்புக்கு தேசிய கற்றல் அடைவுத்தேர்வு : பிப்., 5ல் அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது

10ம் வகுப்புக்கு தேசிய கற்றல் அடைவுத்தேர்வு : பிப்., 5ல் அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது

நாடு முழுவதும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறனைபரிசோதிக்க, தேசிய கற்றல்அடைவுத்தேர்வு, வரும் 5ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் இருந்து, 2,560 பள்ளிகளை 
சேர்ந்த மாணவர்கள், இத்தேர்வில் பங்கேற்கின்றனர்
.
மாநில வாரியாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், மாநில வாரியாக, மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதிக்க, அடைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இத்தேர்வு நடத்தப்படுகிறது. 2015க்கு பின், வரும் 5ம் தேதி, தேசிய கற்றல் அடைவுத்தேர்வு, அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது. மாநில வாரியாக, ஒரு மாவட்டத்துக்கு, தலா, 80 பள்ளிகளில் இருந்து, அதிகபட்சம், 45 மாணவர்கள் மட்டுமே, இத்தேர்வை எழுதுகின்றனர். அனைத்து பாடங்களுக்கும், 'ரேண்டம்' முறையில், மாணவர்களை தேர்ந்தெடுத்து, மூன்று வகையான வினாத்தாள் வினியோகிக்கப்படும். ஒரு பாடத்தில் இருந்து, தலா 60 கேள்விகள் இடம்பெறும். 
குறைவான மதிப்பெண் இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மாநிலத்தின் கல்வி குறியீடு தரவரிசைப்படுத்தப்படும். இதில், அந்தந்த மாநில பாடத்திட்டத்தின் படி, ஒவ்வொரு பாடத்தில் இருந்தும், 'அப்ஜெக்டிவ்' முறையில், 60 கேள்விகள் இடம்பெறும். ஓ.எம்.ஆர்., ஷீட்டில், விடைக்குறிப்புகள் அடையாளப்படுத்த வேண்டும். ஒரு மாணவன், ஒரு பாட வினாத்தாளுக்கு மட்டுமே விடையளிக்க முடியும். தமிழகத்தை பொறுத்தமட்டில், 2015ல், மாணவர்கள் சராசரியை விட, குறை வான மதிப்பெண் பெற்று இருந்தது தெரியவந்துள்ளது. 
மொழிப்பாடங்களில் சராசரியாக, 500க்கு 225 மதிப்பெண் மட்டுமே, மாணவர்கள் பெற்று இருந்தனர். கணிதத்தில், 226; அறிவியலில், 229 மற்றும் சமூக அறிவியலில், 500க்கு, 215 மதிப்பெண், சராசரியாக பெற்றிருந்தனர்.

TAX - RTI : பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை.!!!என தகவல்





பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்க உத்தரவு!!!

தமிழகம் முழுவதும், பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும்படி, 
ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகள், கட்டாயம் பள்ளியில் சேர வேண்டும். இதற்கு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, பள்ளிகளுக்கு, மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது.
அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த, 14 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை, பள்ளியில் சேர்க்க வேண்டும். அதையும் மீறி, சேர்க்கப்படாத குழந்தைகள், பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், படிப்பை பாதியில் முடித்தவர்கள் பற்றிய விபரங்களை கணக்கெடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில் இருந்து, இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு சலுகை திட்டங்கள் : கல்வி முறையை மாற்ற அதிரடி முடிவு!!!

புதுடில்லி: சிறப்பான தேர்ச்சி பெற்ற முதல், 1,000 பி.டெக்., மாணவர்கள்,
முனைவர் பட்டப் படிப்பில் சேர, 'பெல்லொஷிப்' திட்டம், 24 புதிய மருத்துவக் கல்லுாரிகள் கட்டுதல் உட்பட, பல்வேறு கல்வித் திட்டங்கள், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
'ஏகலைவா' பள்ளி : மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், கல்விக்கு, 85,010 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், 35,010 கோடி ரூபாய், உயர் கல்விக்கும், 50 ஆயிரம் கோடி ரூபாய், பள்ளி கல்விக்கும் ஒதுக்கப்பட உள்ளது. வரும், 2022க்குள், கல்வி முறையையும், கல்வி கட்டமைப்பையும் முற்றிலும் மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுஉள்ளதாக, ஜெட்லி கூறினார்.
எஸ்.டி., பிரிவினர், 50 சதவீதத்துக்கு கூடுதலாக வசிக்கும் ஒவ்வொரு பகுதியிலும், குறைந்தபட்சம், 20 ஆயிரம் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலும், நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு நிகராக, 'ஏகலைவா' பள்ளிகள் நிறுவப்படும் என, அவர் தெரிவித்தார்.
சன்மானம் : திட்டம் மற்றும் கட்டடக் கலைக்கென பிரத்யேகமாக இயங்கும், இரு பள்ளிகளை நிறுவப்போவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில் நுட்பக் கழகம், என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றின் கீழ், திட்டம் மற்றும் கட்டடக் கலைக்கென, 18 பள்ளிகள் செயல்பட உள்ளன. பிரதமர் பெல்லோஷிப் திட்டத்தின் கீழ், சிறப்பாக தேர்ச்சி பெற்ற, முதல், 1,000 பி.டெக்., பட்ட மாணவர்கள், ஐ.ஐ.டி., மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் மையத்தில், முனைவர் பட்டப் படிப்பை தொடர வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த மாணவர்களுக்கு, பெருந்தொகை சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிழையில்லாத வினாத்தாள் : தேர்வுத்துறைக்கு அறிவுறுத்தல்....

பொதுத்தேர்வு வினாத்தாள்களில், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள், தவறான கேள்விகள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, தேர்வுத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச்சில் துவங்குகின்றன. அதற்கான ஏற்பாடுகள், இறுதி கட்டத்தில் உள்ளன. வினாத்தாள்கள், அடுத்த வாரம் இறுதி செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பும் பணி துவங்கும்.
கடந்த ஆண்டில், வேதியியல், பொருளியல், உயிரியல், வேளாண் அறிவியல், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான, வினாத்தாள்களில் விடைக்குறிப்புகள் தவறாக இருந்தன. 
இரண்டு வகை விடைக்குறிப்புகள் வழங்கப்பட்டதால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பின், விடைத்தாள் திருத்தத்தின் போது, கருணை மதிப்பெண் வழங்கி, அதை சரிக்கட்டினர்.
எனவே, இந்த ஆண்டு தேர்வுகளில், வினாத்தாள்களில் பிழைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளை தவிர்க்க வேண்டும் என்றும், அரசு தேர்வுத்துறைக்கு, பள்ளிக் கல்வித்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
'கற்பிக்கும் மொழி வாரியாக, சரியான எண்ணிக்கையில் வினாத்தாள்கள் தயாரிக்க வேண்டும். மாணவர்களின் உண்மையான கல்வித் திறனை சோதிக்கும் வகையில், வினாத்தாள்கள் இருக்க வேண்டும். வினாத்தாள்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்' என்றும், ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன.

பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம் : முறைகேடின்றி மதிப்பெண் தர உத்தரவு...

அரசு பொதுத்தேர்வு துவங்க, ஒரு மாதமே உள்ள நிலையில், பிளஸ் 2வுக்கான, செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கின. பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, மார்ச்சில் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. 
பிளஸ் 2வுக்கு, மார்ச், 1; பிளஸ் 1க்கு, மார்ச், 7; 10ம் வகுப்புக்கு, மார்ச், 16லும் பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. இந்நிலையில், பிளஸ் 2வுக்கான செய்முறை தேர்வு நேற்று துவங்கியது. கணிதம், அறிவியல், தொழிற்கல்வி மாணவர்களுக்கு, பள்ளி ஆய்வகங்களில், இந்த தேர்வுகள் நடக்கின்றன. பல பள்ளிகளில் பெயரளவில், செய்முறை தேர்வு நடத்துவது வழக்கமாக உள்ளது.
 சில பள்ளிகளின் ஆய்வகங்களில், உபகரணங்கள் பெயரளவில் தான் உள்ளன. இந்த முறை, அனைத்து பள்ளிகளிலும், உபகரணங்களை முறையாக வாங்கி பயன்படுத்த வேண்டும். அவற்றை, மாணவர்களின் பயன்பாட்டுக்கு வழங்கி, செய்முறை தேர்வை நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுஉள்ளது.
இந்த தேர்வில், மாணவர்களுக்கு தோராய மதிப்பெண் வழங்காமல், சரியான மதிப்பெண் வழங்க வேண்டும். தங்களுக்கு பணிவிடை செய்யும் மாணவர்களுக்கு மட்டும், ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் வழங்குவது போன்ற முறைகேடுகள் இருக்கக் கூடாது என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. செய்முறை தேர்வுகளை, வரும், 13ம் தேதிக்குள் முடிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. 
தனித்தேர்வர்களுக்கு, பிப்., 23 முதல், 25க்குள் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தனித்தேர்வர்களுக்கும், எந்தவித பாகுபாடுமின்றி, பள்ளி மாணவர்களை போன்றே தேர்வை நடத்தி, அவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

IT SOFTWARE 2017-2018



எட்டு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை...! வருகின்ற பட்ஜெட்டிலாவது நிறைவேற்றப்படுமா ?

எட்டு  ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் மடிக்கணினி எல்லாம் கொடுத்து அரசுப்பள்ளி மாணவர்களை ஹைடெக்காகமாற்ற நினைக்கும் அரசு ஆனால்,மாணவர்களுக்கு கணினி கொடுத்த அரசு கணினி அறிவியல் பாடம் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களை நியமிக்காமல்இருப்பது ஏன்? இதனால், கணினி அறிவியல் பாடத்தை போதிக்கும் பல பட்டதாரிஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது இன்று வரை என்று வேதனையுடன் கூறுகிறார்கள் கணினியில்  பி.எட் பயின்ற  ஆசிரியர்கள்.தனியார் பள்ளிகளுக்குநிகராக அரசுப்பள்ளி மாணவர்களும்உயர வேண்டும் என்று சமச்சீர் கல்விமுறையை 2011ஆம் ஆண்டுஅறிமுகப்படுத்திய அரசு.அதில்   கணினி அறிவியல் பாடம் முக்கிய பாடமாக கொண்டுவந்து
புத்தகங்களும ் கோடி கணக்கில் அச்சிடப்பட்டு பின் நிறுத்தப்பட்டது காரணம் எதுவும் இன்றி..
சென்ற ஆண்டில்
புதியபாடத்திட்டம் குறித்து  ஜகோர்ட்டில் அறிக்கை தாக்கல் :
நீதிபதி கிருபாகரன் தலைமையில் விசாரணைக்கு வந்த போது மதிப்புமிகு கல்விச்செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில் மாநிலத்தின் புதியபாடத்திட்டம் சிபிஎஸ் பாடத்திட்டத்தை விட சிறப்பாக அமையும் வகையில் 6ம் வகுப்பிலிருந்து 10வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை இணைத்து புதியபாடத்திட்டம் வகுக்க மாநில கல்வி ஆராய்ச்சிமற்றும் பயிற்சி மையத்திறக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.இதுவும் கூட பொய்த்து போகுமா ?
 அரசுப்பள்ளி மாணவர்களின் புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வர வரைவு அறிக்கை தயார் செய்து 
நீதிபதி கிருபாகரன் ஐயா அவர்களிடம் கல்வித்துறை அதிகாரிகளால் 
வழங்கப்பட்டது.  இந்த அறிக்கையும் கூட  வெற்று அறிக்கையாக போகுமா? இல்லை வருகின்ற பட்ஜெட்டிலாவது நிறைவேற்றப்படுமா?
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில்  28/7/2017 அன்று முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டது அந்த மனுவிற்கு பதில் மனு தந்த முனைவர் K.S.மணி துணை இயக்குநர்  (மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) அவர்கள் கணினி அறிவியல் பாடத்தை 3ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தில் சேர்ப்பதற்க்காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
புதிய  வரைவு பாடத்திட்டத்தில் தமிழக கல்வித்துறை மாற்றத்தை ஏற்படுத்த  கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக அரசுப்பள்ளியில் கொண்டு வர நீண்ட நாள் போராடி வரும்  40000 கணினி ஆசிரியர்களுக்கு இந்த பட்ஜெட்டிலாவது
வாய்ப்பு வழங்குமா மாண்புமிகு தமிழக அரசு.
வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச்செயலாளர்
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655 /2014.

மாணவர்கள் பொது அறிவு மற்றும் மொழித்திறனை வளப்படுத்திட பள்ளிகளுக்கு நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது








தொழிற்கல்விக்கான உதவி ரூ.50 ஆயிரமாக உயர்வு...

தொழிற்கல்வி கற்கும் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும், கல்வி உதவித்தொகை, 25 ஆயிரம்ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசாணை : தொழிற்கல்வி கற்கும்ஏழை மாணவர்கள், தங்கள் படிப்பை தொடர, முதல்வர் பொது நிவாரணநிதியிலிருந்து, நிதியுதவிவழங்கும் திட்டம், 2003ல், துவக்கப்பட்டது. இதன்படி, ஆண்டு தோறும், 100 மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் காலத்தில், ஒரு முறை மட்டும், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. பின், இந்த எண்ணிக்கை, 200 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின், பெற்றோர் ஆண்டு வருமான உச்சவரம்பு, 2015 - 16ல், 50 ஆயிரம் ரூபாயில் இருந்து, 72 ஆயிரம்ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது, மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, 25 ஆயிரம் ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி உத்தரவின்படி, இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வு : முதல் பட்டதாரி சலுகை பெற்றிருந்தும், தொழிற்கல்வி படிக்க முடியாமல், மிகவும் வறிய நிலையில் உள்ளோரும், தொழிற்கல்வி உதவித்தொகை பெறலாம். இந்த உதவித்தொகை, மாவட்ட கலெக்டரால் பரிந்துரைக்கப்பட்டு, சிறப்பினமாக கருதப்படும் நிகழ்வுகளை ஆய்வு செய்து, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, வழங்கப்படும்.

வியாழன், 1 பிப்ரவரி, 2018


வீடு தேடி சென்று மாணவர்களை ஊக்கப்படுத்தும் தலைமையாசிரியர்.


TAX - மீண்டும் வந்தது நிலையான கழிவு(ரூ 40000)... மாத சம்பளம் பெறுவோருக்கு பட்ஜெட்டில் கிடைத்தது இந்த ஒரே சலுகைதான்!

டெல்லி: மாத சம்பளம் பெறுவோருக்கு பெரும் வருமான வரி சலுகை இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஒரே ஒரு சிறு சலுகை மட்டுமே பட்ஜெட் அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதுதான் நிலையான கழிவு என்ற திட்டம். 

நிலையான கழிவு (Standard deduction) என்பது புதிய நடைமுறை கிடையாது. ஏற்கனவே அமலில் இருந்த ஒன்றுதான். 2006-07ம் நிதியாண்டு முதல்தான் இந்த நடைமுறை அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தால் நீக்கப்பட்டது. 
மீண்டும், நிலையான கழிவு திட்டம் மீண்டு(ம்) வந்துள்ளது. 
நீக்கப்பட்டது 
முந்தைய நடைமுறைப்படி மொத்த வருவாயில் அதிகபட்சம் ரூ.30,000 என்பது நிலையான கழிவாக வழங்கப்பட்டது. அதற்கு வருமான வரி கணக்கு காட்ட வேண்டிய தேவை இல்லை. இன்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டுள்ள அறிவிப்புபடி, ரூ.40,000 நிலையான கழிவாக வழங்கப்பட்டுள்ளது. 
ரூ.40,000 கிடைக்கும் 
ஒரு தனி நபரின் சம்பளம் உள்ளிட்ட மொத்த வருவாயில் இருந்து இந்த ரூ.40,000 தொகையை கழித்துக்கொண்டு எஞ்சிய தொகைக்கு வரி செலுத்தினால் போதும். இது குறிப்பாக, மாத சம்பளதாரர்களுக்கு நன்மையளிக்க கூடியது. உதாரணத்திற்கு ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.2.80 லட்சம் என்றால், நிலையான கழிவு தொகை ரூ.40,000த்தை கழித்துவிட்டால் அவரது வருமானம் ரூ.2.40 லட்சம் என்ற அளவுக்கு குறைந்துவிடும். அவர் வரியே செலுத்த வேண்டிய தேவை இருக்காது. 
இன்னொரு உதாரணம். ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.5.30 லட்சம் என்றால், இப்போதுள்ள வரி கட்டமைப்புபடி, அவர் 20 சதவீத வருமான வரி கட்ட வேண்டியுள்ளது. ஆனால், நிலையான கழிவு தொகை ரூ.40,000த்தை தனது மொத்த வருமானத்தில் இருந்து குறைத்துவிட்டால், அவரது ஆண்டு வருமானம் ரூ.4.90 லட்சமாக குறையும். அப்போது அவர் 5 சதவீத வருமான வரி கட்டும் பிரிவுக்குள் வந்துவிடுவார். அதுவும் அவருக்கு லாபம் தரும். 
மெடிக்கல் செலவு ஆதாரம் 
2006ம் ஆண்டுவரை, நிலையான கழிவு தொகைக்கு ஆதாரம் (ப்ரூப்) காட்ட வேண்டிய தேவையில்லை. ஆனால் இப்போது மெடிக்கல் செலவீனத்திற்கான ஆதாரம் அல்லது போக்குவரத்து செலவீன ஆதாரம் காட்ட வேண்டும். உதாரணத்திற்கு, ரூ.40,000த்திற்கான மெடிக்கல் பில் தொகையை காண்பித்து இந்த சலுகையை அனுபவித்துக் கொள்ளலாம். 
வரி கட்டமைப்பில் மாற்றம் இல்லை 
மத்திய அரசு பட்ஜெட்டில் மாத வருவாய் பிரிவினருக்கு கிடைத்த ஒரே சலுகை இதுதான். மற்றபடி வருமான வரி கட்டமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரூ.2.50 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய் பிரிவினருக்கு வரி கிடையாது என்பதும், ரூ.2.50 லட்சம் முதல், ரூ.5 லட்சம் வரையிலான வருவாய் பிரிவினருக்கு 5 சதவீதம் வரி, ரூ.5-10 லட்சம் வரையிலான பிரிவினருக்கு 20 சதவீத வரி, ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட வருவாய் பிரிவினருக்கு 30 சதவீத வரி என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

மூன்றாம் வகுப்பு_ தமிழ். மானின் விடுதலை (கதைப்பாடல்)கனிராஜ்


கட்டளை கிராமத்தில்வானத்திலே திருவிழா நிகழ்ச்சி






மரக்காணம் வட்டாரம் கட்டளை கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், 152 ஆண்டுகளுக்கு பின் தோன்றிய சிறப்பு சந்திர கிரகணத்தை பிரத்யேக பைனாகுலர் மூலம் கண்டு களிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
அரிய நிகழ்வு என்பதாலும், அறிவியல் ஆர்வலர்கள் மட்டுமல்லாது அனைவரும் ஆர்வத்தோடு எதிர்நோக்கிய நிகழ்வென்பதால்...மாணவர்களிடம் மறக்கவியலாத இனிமையான அனுபவம் மற்றும் அறிவியல் உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்நிகழ்வை மாணவர்களோடு சேர்ந்து கண்டுகளிப்பது சிறப்பான ஒன்றாக அமையும் என்ற எண்ணத்தில் கட்டளை கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.இரா.துளசி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி திருமதி. வி.பாரதி மற்றும் கிராம பொதுமக்கள் , மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வானியல் நிகழ்வை கண்டு களித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளர் திரு.ச.சுகதேவ் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தார்....

பெரம்பலூரில் அரசு பள்ளிக்கு ஊர் பொதுமக்கள் சீர்வரிசை செய்யும் விழா வீடியோ


31/01/2018 நேற்று மாலை நிகழ்ந்த சந்திர கிரகணத்தை ( RED BLOOD BLUE MOON ) ஒரு நொடி கூட விடாமல் விண்ணில் நடந்த மாற்றங்களை நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் பிரத்யோக காணொலி

31/01/2018 நேற்று மாலை நிகழ்ந்த சந்திர கிரகணத்தை ( RED BLOOD BLUE MOON ) ஒரு நொடி கூட விடாமல் விண்ணில் நடந்த மாற்றங்களை நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் பிரத்யோக காணொலி நமது சேனலில் 12  பகுதிகாளாக   live stream  ஆக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணில் நிகந்த அதிசியத்தை பார்த்து பயன்பெறவும்.

https://www.youtube.com/playlist?list=PLA5x25C16gdc3D7AxWFvMCSg0FwUrSKAh

BSNL pulls plug on virtual class over bills


மாணவர்களுக்கு சொந்த செலவில் புத்தகம் வழங்கி உதவும் அரசுப்பள்ளி ஆசிரியர் திரு.சரவணன்


ஆசிரியரை வாழ்த்த
9597063944