சனி, 27 ஜனவரி, 2018
பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் 30-வது தென்மண்டல சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து கேட்கிறீர்கள். இதுகுறித்து பரிசீலிக்கப்படும்.
சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் 30-வது தென்மண்டல சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து கேட்கிறீர்கள். இதுகுறித்து பரிசீலிக்கப்படும்.
தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் அவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க முதல்கட்டமாக 100 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு பயிற்சி பெறுவதற்காக 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வுசெய்யப்பட்டு பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன்கூறினார்.
வெள்ளி, 26 ஜனவரி, 2018
மாணவர்களிடம் உரையாற்றிட பள்ளி ஆசிரியர்களுக்கான 69-வது குடியரசு தின விழா உரை
இந்த வருடம் 69-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டுகிறது. இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும்.
ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.
1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார்.
அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்திய தலைநகர் தில்லியில் குடியரசு நாளன்று குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும். நாட்டின் தலைநகர் தில்லியில் இந்தியப் பிரதமர், மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுகிறார். நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படுகின்றன.
மாநிலங்களில் மாநில ஆளுநர் கொடியேற்றுவதுடன் காவலர் அணிவகுப்பையும், அரசுத்துறை மிதவைகளையும், பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார். சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
குடியரசு தினத்திற்கான "தேசபக்தி மற்றும் MARCH PAST" பாடல்
SONGS
- CLICK HERE - JANA GANA MANA
- CLICK HERE - தமிழ்த்தாய் வாழ்த்து
- CLICK HERE - கொடிப்பாடல்
- CLICK HERE - MARCH PAST SONG
- CLICK HERE - தேசிய கீதம்(AR.RAHMAN)
- CLICK HERE - வந்தே மாதரம் (ORIGINAL)
- CLICK HERE - வந்தே மாதரம் (LATA MAGESHKAR)
- CLICK HERE - ஒவ்வொரு பூக்களுமே
- CLICK HERE - அச்சம் அச்சம் இல்லை
- CLICK HERE - இந்திய நாடு என் நாடு
- CLICK HERE - VAZHIYA SENTHAMIL
அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த பொருள்கள்: மாத இறுதிக்குள் புதுப்பிக்க அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாத நாற்காலி, மேசை, 'பெஞ்ச்-டெஸ்க்' போன்ற பொருள்களை இந்த மாத இறுதிக்குள் பழுது நீக்கிப் பயன்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நாற்காலி, மேசை, பெஞ்ச், 'டெஸ்க்' போன்றவை உபரியாக இருந்தால், அவற்றை தலைமையாசிரியரின் ஒப்புதலுடன் தேவைப்படும் வேறு அரசுப் பள்ளிகளுக்கு மாற்றி வழங்குதல் வேண்டும்; இது தொடர்பாக இருப்புப் பதிவேட்டில் இரண்டு பள்ளிகளுமே பதிவு மேற்கொள்ள வேண்டும். இதற்கான உத்தரவினை முதன்மைக் கல்வி அலுவலர்களே வழங்கலாம்.
பயன்பாட்டில் இல்லாமல் பழுதடைந்த நிலையில் உள்ள மேசை-நாற்காலி, மாணவர்கள் அமரும் 'பெஞ்ச்- டெஸ்க்' உள்ளிட்ட பொருள்களை பழுது நீக்கம் செய்து பயன்படுத்தலாம். இதற்கான செலவினத்தை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி அல்லது அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பள்ளி மானிய நிதியிலிருந்து (நஸ்ரீட்ர்ர்ப் எழ்ஹய்ற்) மேற்கொள்ளலாம்.
ஏலம் மூலம் விற்பனை செய்யலாம்: முற்றிலும் பழுது நீக்கம் செய்தாலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பொருள்களைப் பிரித்தெடுத்து பள்ளித் தலைமை ஆசிரியர், உதவித் தலைமை ஆசிரியர் அல்லது மூத்த ஆசிரியர் கொண்ட குழு ஒன்றை அமைத்து அந்தப் பொருள்களை அரசு விதிகளின்படி குறைந்தபட்ச விற்பனை மதிப்பை நிர்ணயம் செய்து அதற்கு குறையாத வகையில் ஏல முறையில் விற்பனை செய்து அரசுக் கணக்கில் செலுத்தலாம்.
இந்த நடைமுறையைப் பின்பற்றி பள்ளியில் வகுப்பறை, வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் இந்தப் பணியினை ஜனவரி மாதத்துக்குள் முடிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
நேர்மை அதிகாரி திரு.உதயச்சந்திரன் - 45 (இந்திய ஆட்சிப் பணி)
#நேர்மை #அதிகாரி
திரு.உதயச்சந்திரன் - 45 (இந்திய ஆட்சிப் பணி)
மக்களே அக்கறை கொண்ட அரிய வகை அதிகாரி. ``டென்டர் நேரத்தில் இவர் இருந்தால், எதுவுமே செய்ய முடியாது. இவரை மாற்றிவிடுங்கள்’’ என ஊழல் அரசியல்வாதிகளை அலறவைத்த துணிச்சல்காரர். பள்ளிக்கல்வித் துறைச் செயலாளராக, பழைய மோசடிகளைத் தோண்டி எடுத்து முறைகேடுகளைக் களைந்து `பளிச்’ என மாற்றிய மிஸ்டர் க்ளீன். இவரை மாற்றப்போகிறார்கள் என்கிற வதந்திக்கே நெட்டிசன்கள் இணைந்து ஹேஷ்டேக் உருவாக்கி ஆதரவுக் குரல்கொடுத்ததே உதயச்சந்திரனின் நேர்மை சொல்லும் நிகழ்காலப்பதிவு. பத்தாம்வகுப்பு மற்றும் ப்ளஸ்டூ தேர்வில் குதிரைப்பந்தய ரேங்க் முறையை ஒழித்தது, பள்ளிப்பாடத் திட்டங்களில் நவீன மாற்றங்களைப் புகுத்தியது, நீட் தேர்வுக்காகச் சிறப்புப் பயிற்சி மையங்கள் அறிவிப்பு, பல ஆண்டுகளுக்குப் பிறகு நூலகங்களுக்குப் புதிதாக நூல்களை வாங்கியது என உதயச்சந்திரன் எடுத்ததெல்லாம் அவசிய மாற்றங்கள்!
வெல்லும் அறம்
வாழ்த்துக்கள் அய்யா....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)