>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 23 ஜனவரி, 2018

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பயண அட்டை தொடர்ந்து வழங்குவது குறித்த போக்குவரத்து துறையின் செய்தி வெளியீடு.

அரசுப்பள்ளி ஆசிரியர் விவரங்களை இணையம் மூலம் 30 ந்தேதிக்குள் முடிக்க வேண்டும்-இயக்குநர் உத்தரவு!!

சனி, 20 ஜனவரி, 2018

G.O Ms.No.16 Dt: January 18, 2018 -PENSION – Contributory Pension Scheme - Accumulations at the credit of subscribers to the Contributory Pension Scheme (both Employees and Employers Contributions) – Rate of interest from 01.01.18 to 31.03.18 is 7.6% – Orders – Issued.


EMIS NEWS

வருகிற 25.1.18 க்குள் EMIS/AADHAAR சேர்ப்பு பணியை முடிக்கும் படி அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர்கள் common pool ல் இல்லை என்றால் student search ல் மாணவனின் EMIS or Date birth & Name ஐ search செய்தால் அந்த மாணவனின் தகவல் சிறிய கட்டத்தில் காண்பிக்கும்.
அதில் வருகிற EMIS Number ஐ click செய்தால் மேலே Release/Request என்ற option வரும்.அதை click செய்தால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு Request செல்லும்.
மூன்று நாளைக்கு பிறகு சம்பந்தப்பட்ட மாணவன் District user மூலமாக common pool க்கு மாற்றப்படுவான். பிறகு நாம் Admit செய்து கொள்ளலாம்.
25.1.18 க்கு பிறகு EMIS Browser முடக்கப்படும் என்ற தகவல் Video conference மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இறுதி வாய்ப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் எண்ணிக்கையும் EMIS பதிவையும் சரிபார்த்து கொள்ளவும்.Double entry இருந்தால் Delete or Transfer செய்து விடுங்கள்.நன்றி.

அம்மா இருசக்கர வாகனத் திட்டம்: வரும் 22 முதல் விண்ணப்பங்கள்- ஆதார்-ஓட்டுநர் உரிமம் அவசியம்! (முழுவிபரம்)

தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், மானியம் பெறுவதற்கானவிண்ணப்பங்கள் வரும் 22-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்கும் போதுஆதார் மற்றும் ஓட்டுநர் உரிம விவரங்களைத் தெரிவிப்பது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மா இருசக்கர வாகனத் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், இருசக்கர வாகனம் பெறுவதற்கான மானியம் அளிக்கப்பட உள்ளது. அதன்படி ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களே தங்களது வாகனத்தைத் தேர்வு செய்யலாம். மேலும், வாகனத்தைப் பெற ரிசர்வ் வங்கியால் அதிகாரம் அளிக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்து கடன் பெறலாம். 125 சி.சி. திறன் வரையிலான வாகனத்தை மட்டுமே வாங்க வேண்டும்.
பணிபுரியும் மகளிர்:
 இருசக்கர வாகனத் திட்டமானது, பணிபுரியும் மகளிருக்கு மட்டுமே அளிக்கப்படும். அமைப்பு மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களில் பதிவு செய்த பெண்கள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுவோர், சுயமாகத் தொழில் செய்யும் பெண்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசுத் திட்டங்களில் பணியாற்றுவோர், மாவட்ட கற்றல் மையம், கிராம வறுமை ஒழிப்புக் குழுக்கள் ஆகியவற்றில்பணியாற்றுவோர் இந்தத் திட்டத்தின் கீழ், இருசக்கர வாகனங்களைப் பெற விண்ணப்பிக்கலாம்.
வயது என்ன?:
இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், மானியம் பெற 18 வயது முதல் 40 வயது வரையில் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களது ஆண்டு வருமான அளவு ரூ.2.5 லட்சத்தைத் தாண்டக் கூடாது. மிகவும் பின்தங்கிய பகுதிகள், மலைப் பகுதிகள், கைவிடப்பட்ட, கணவனை இழந்தோர், மாற்றுத் திறனாளிகள், 35 வயதைத் தாண்டிய திருமணம் ஆகாத பெண்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பங்கள் கிடைக்குமிடம்:
விண்ணப்பங்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. அவற்றை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். கோட்ட அலுவலகங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள், ஆட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள்கிடைக்கும்.சென்னை போன்ற மிகப்பெரிய மாநகராட்சிகள், நகராட்சிகளில் விண்ணப்பங்களை விநியோகிக்கக் கூடுதலாக கவுன்ட்டர்கள் திறக்கப்படும். காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் அளிக்கப்படும்.
விண்ணப்பங்களை வரும் 22-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பிப். 5 கடைசிநாளாகும். மாவட்ட அளவிலான கள ஆய்வுப் பணிகள் பிப்.15-க்குள் முடிக்கப்படும்.தேர்வு செய்யக் குழு:பயனாளிகளைத் தேர்வு செய்ய மாவட்ட அளவில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, கிராப்புறம் மற்றும் நகர்ப்புறம் என்ற அளவில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு குழுக்களுக்கும் மாவட்ட ஆட்சியரே தலைவராக இருப்பார்.சென்னை மாநகராட்சிப் பகுதியில் பயனாளிகளைத் தேர்வு செய்ய தனியாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை மாநகராட்சி ஆணையாளர் தலைவராக இருப்பார். துணைஆணையாளர் (கல்வி) உறுப்பினர் செயலாளராகச் செயல்படுவார். வாகனத்துக்கான மானியமானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும் என்று வழிகாட்டி நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன ஆவணங்கள்?:
 இருசக்கர வாகனத்துக்கான மானியம் பெறுவோர், சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகிறது. அதன்படி, வயதுக்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை இவைகளில் ஏதேனும் ஒன்று), ஓட்டுநர் உரிமம், வருமானச் சான்றிதழ் (வேலை அளிப்பவரிடம் இருந்து பெற வேண்டும்), வேலையின் தன்மை குறித்த சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விக்கான சான்றிதழ் (எட்டாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்), கடவுச் சீட்டு அளவு புகைப்படம், ஜாதிச் சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட-பழங்குடியின வகுப்பினராக இருந்தால்) ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

வெள்ளி, 19 ஜனவரி, 2018

CPS பிடித்தம் உள்ளவர்களின் கவனத்திற்கு..! 80C யில் 1,50,000 போக மீதியுள்ள, Cps தொகையை பின்பக்கம் உள்ள 80CCD(1B) யில் கழித்து கொள்ளலாம் என்பதற்கான order..


இந்த ஆண்டு CPS பிடித்தம் 50,000 க்கு மேலே இருந்தால், 
உதாரணமாக ரூ. 65,000 என வைத்துக் கொண்டால், ரூ. 50,000
CPS தொகையை
80 CCD  ( 1 B )  பிரிவிலும்,
மீதித் தொகை
ரூ. 15,000/= ஐ
80 C
( அதிக பட்ச சேமிப்பு
ரூ. 1,50,000 ) பிரிவிலும்
கழித்துக் கொள்ளலாம்.
80C யில் 1,50,000 போக மீதியுள்ள, Cps தொகையை பின்பக்கம் உள்ள 80CCD(1B) யில் கழித்து கொள்ளலாம் என்பதற்கான order

பெண் அரசு ஊழியர் இரு சக்கர வாகனம் மானிய விலையில் பெறுவதற்கான விண்ணப்பம்!!!


பேருந்து கட்டணம் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

* புதிய பேருந்து கட்டணம் 20.1.18 முதல் அமல் - தமிழக அரசு
* சாதாரண பேருந்து 10.கி.மீட்டருக்கு ரூ.5 ல் இருந்து ரூ.6 ஆக உயர்வு
* விரைவு பேருந்து 30 கி.மீட்டருக்கு ரூ.17ஆக இருந்த கட்டணம் ரூ.24 ஆக உயர்வு
* அதிநவீன சொகுசு பேருந்து 30 கி.மீட்டருக்கு 21 ரூபாயாக இருந்த கட்டணம் ரூ.33 ஆக உயர்வு
* குளிர்சாதன பேருந்து 30 கி.மீட்டருக்கு ரூ.27ல் இருந்து ரூ.42 ஆக உயர்வு.

கனவு ஆசிரியர் 2017 - 18 : தலைமை ஆசிரியர் மற்றும் AEEO வழியாக ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய புதிய விண்ணப்ப படிவம்









வியாழன், 18 ஜனவரி, 2018

8 ஆம் வகுப்பு -3ம் பருவம் அறிவியல் - உயிரினங்களின் பல்வகைத்தன்மை FULL LESSION - POWER POINT

8 ஆம் வகுப்பு உயிரினங்களின்  பல்வகைத்தன்மை FULL LESSION - POWER POINT-CLICK HERE -NEW


செவ்வாய், 16 ஜனவரி, 2018

தரம் உயர்த்தப்பட்ட பாடத் திட்டம்: பள்ளிக் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்'

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் 
வரும் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள தரம் உயர்த்தப்பட்ட புதிய பாடத் திட்டம் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று கல்வியாளர் என்.ராமசுப்ரமணியன் தெரிவித்தார்.
தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் நடேசன் வித்யாசாலா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அவர் மேலும் பேசியது:
தமிழ்நாட்டில் மாணவர்களைவிட பெற்றோரே இன்றைக்கு அதிக குழப்பத்திலும், கலக்கத்திலும் உள்ளனர். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு அவசியம் என்ற நிலை உருவாகி விட்டது.
தங்கள் பிள்ளைகள் உயர்தொழில்நுட்பக் கல்வி பெற பள்ளித் தேர்வில் மட்டுமின்றி, மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்விலும் வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதைப் புரிந்துள்ளனர்.
தமிழக அரசும் பள்ளி கல்வித் தரத்தை உயர்த்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பள்ளிக் கல்வியில் வியக்கத்தக்க மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.
வரும் கல்வி ஆண்டில் 1 முதல் பிளஸ் 2 வரை ஒற்றை இலக்க வகுப்புகளில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய வகுப்புகளில் மேம்படுத்தப்பட்ட புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய பாடத் திட்டம் சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்துக்கு நிகராக உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில், அவர்களை மேம்படுத்தும் பெரும் பொறுப்பை ஆசிரியர்கள் சவாலாக ஏற்று சிறப்பாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றார்.

CPS : வல்லுநர் குழு அறிக்கை எப்போது?

முக அடையாளத்தால் ஆதாரை சரிபார்க்கும் புதிய வசதி... அறிமுகம்! மக்களுக்கு சிரமங்களை போக்குவதில் ஆணையம் உறுதி

முகத்தைக் காட்டி, அதன் அடையாளத்தை வைத்து, ஆதார் விபரத்தை சரிபார்க்கும் புதிய வசதியை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும், 120 கோடி பேருக்கு, ஆதார் அடையாள அட்டைகளை, ஆதார் அடையாள அட்டை ஆணையம் வழங்கி உள்ளது. மத்திய அரசு வழங்கும், பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களைப் பெற, ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கி சேவை, ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி போன்றவற்றுக்கும் ஆதார் முக்கிய தேவையாக மாறி வருகிறது.
பயோ மெட்ரிக்:
மொபைல் போன் சிம் கார்டுகள் வாங்குவதற்கும், ஆதார் மூலம், பயோமெட்ரிக் தகவல்கள் பெறப்பட்டு சரிபார்க்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படுகின்றன. இதனால், வாடிக்கையாளர்களுக்கு சேவை கிடைப்பது எளிதாகிறது. தற்போது, சம்பந்தப்பட்ட நபரின் கைவிரல் ரேகை, கருவிழி ரேகை ஆகியவற்றை வைத்து, அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த அம்சங்களுடன், சம்பந்தப்பட்ட நபரின் முகத்தை படம் பிடித்து, சரிபார்க்கும் வசதியையும், ஆதார் ஆணையம் அனுமதிக்க உள்ளது.
இந்த வசதி, கைவிரல் ரேகை, கருவிழி ரேகை போன்ற பயோமெட்ரிக் பதிவுகளை வைத்து, சம்பந்தப்பட்டவரின் அடையாளத்தை உறுதி செய்வதில் சிரமம் இருப்போருக்கு பெரிய உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து, யு.ஐ.டி.ஏ.ஐ., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வயதாவதாலும், கடுமையான வேலைகள் செய்வதாலும் ஏற்படும் கைவிரல் ரேகை தேய்மானம், கருவிழி ரேகையில் மாற்றம் போன்ற காரணங்களால், அவற்றை வைத்து, சம்பந்தப்பட்ட ஆதார் எண் வைத்திருப்பவரை உறுதி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.
விர்ச்சுவல் ஐ.டி.,:
அத்தகைய சூழலில், அந்த நபரின் முகத்தை படம் பிடித்து, அதை, ஆதார் பயோமெட்ரிக் தகவல்களுடன் சரிபார்க்கும் பணி நடைபெறும். முக அடையாளத்தை, தற்போது நடைமுறையில் உள்ள கைரேகை பதிவு அல்லது கருவிழி ரேகை பதிவு அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு, ஓ.டி.பி., எனப்படும், ஒரு முறை அனுப்பும், 'பாஸ்வேர்டு' ஆகிய இவற்றில் ஏதாவது ஒன்றுடன் சேர்த்து, சம்பந்தப்பட்ட நபரின் அடையாளம் உறுதி செய்யப்படும்.
இத்திட்டம், ஜூலை, 1 முதல் பயன்பாட்டுக்கு வரும். சம்பந்தப்பட்ட நபரின் தேவை அடிப்படையில், இந்த புதிய வசதி பயன்படுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆதார் அடையாள அட்டை ஆணையம், ஆதார் அட்டையில் தரப்படும், 12 இலக்க எண்ணிற்கு பதில், 'விர்ச்சுவல் ஐ.டி.,' எனப்படும் புதிய வசதியை, கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. அந்த வசதி, மார்ச், 1 முதல் பயன்பாட்டுக்கு வரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
'இந்த, ஐ.டி.,யை, டிஜிட்டல் முறையில், 16 இலக்க எண்ணாக உருவாக்கிக் கொள்ளலாம். ஒரு முறை பயன்படுத்திய பின், வேறு புதிய ஐ.டி.,யை உருவாக்கும்போது, பழைய ஐ.டி., எண் ரத்தாகி விடும். 'இதன் மூலம், ஆதார் எண்ணை, யாரிடமும் தெரிவிக்கும் அவசியம் எழாது' என, ஆதார் அடையாள அட்டை ஆணையம் கூறி இருந்தது.
தகவல்களை பாதுகாக்க 'டிஜிட்டல் லாக்' வசதி : ஆதார் தகவல்கள் திருடப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படும் புகார்களை, ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இருப்பினும், ஆதார் தகவல்களுக்கு, பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், 'பயோமெட்ரிக் லாக்' எனப்படும், டிஜிட்டல் பூட்டை, யு.ஐ.டி.ஏ.ஐ., உருவாக்கி உள்ளது. இதை பயன்படுத்தி, ஆதார் தகவல்களை, தேவைப்படும்போது, அதன் உரிமையாளர், 'லாக்' செய்ய முடியும். தேவைப்படும்போது, அதை திறந்து, அதில் உள்ள தகவல்களை, மொபைல் போன் சேவை நிறுவனங்கள், வங்கிகள் போன்ற ஏஜன்சிகள் பார்க்க அனுமதிக்கலாம். பயோமெட்ரிக் லாக்கை, ஆதார் ஆணைய இணையதளத்தில் நுழைந்து, அதற்கான டிஜிட்டல் படிவத்தில், ஆதார் எண்ணை பதிவு செய்து பெறலாம். இந்த வசதியை பெற, ஆதாருடன் பதிவு செய்த, மொபைல் போன் எண் அவசியம்.

திங்கள், 15 ஜனவரி, 2018

3rd term 5th std English Mind Map

DGE-DEE - 2017 - Issuing of Certificates and Scan / Retotal Notifications


KALVICIKARAM  வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!!



ஞாயிறு, 14 ஜனவரி, 2018

MADURAI KAMARAJ UNIVERSITY DIRECTORATE OF DISTANCE EDUCATION APPLICATION FORM FOR B.ED. ADMISSION – 2018 - 2020

MADURAI KAMARAJ UNIVERSITY
DIRECTORATE OF DISTANCE EDUCATION
APPLICATION FORM FOR B.ED. ADMISSION – 2018 - 2020

Cost of Application- RS.1000/-

Programme Fee- RS.18,500/- Per Year

Last date to submit the application - 28.02.2018

www.mkudde.org

Click Here

DGE-DEE - 2017 - Issuing of Certificates and Scan / Retotal Notifications


சனி, 13 ஜனவரி, 2018

2016-17 ஆம் கல்வியாண்டு நிலவரப்படி தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு தொடக்கபள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு?தொடக்க ப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு?-RTI தகவல்