வெள்ளி, 29 டிசம்பர், 2017
கற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் தமிழக மாணவ மாணவர்களுக்கு பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
கற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் தமிழக மாணவ மாணவர்களுக்கு ரூ 2.7 கோடியில் பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகம் முழுவது 100 மையங்களில் 75,000 மாணவர்களுக்கு கான்பிரன்ஸ் மூலம் போட்டித்தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.
2018 ஆம் அண்டில் ஒரு லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.
பொதுத்தேர்வு பயிற்சி மையங்களை நடத்த போதிய நிதி இல்லை
பொதுத்தேர்வு பயிற்சி மையங்களை நடத்த போதிய நிதி இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார். 100 மையங்களில் தமிழக அரசால் பொதுத்தேர்வு பயிற்சி நடைபெற்று வருகிறது என்றும் செங்கோட்டையன் தெரிவிட்டுள்ளார். மேலும் 312 இடங்களில் பயிற்சி மையங்கள் நடத்த தமிழக அரசிடம் போதிய நிதி இல்லை என்று கூறியுள்ளார்
பொதுத்தேர்வு பயிற்சி மையங்களை நடத்த போதிய நிதி இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார். 100 மையங்களில் தமிழக அரசால் பொதுத்தேர்வு பயிற்சி நடைபெற்று வருகிறது என்றும் செங்கோட்டையன் தெரிவிட்டுள்ளார். மேலும் 312 இடங்களில் பயிற்சி மையங்கள் நடத்த தமிழக அரசிடம் போதிய நிதி இல்லை என்று கூறியுள்ளார்
ஜனவரி 8-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!
ஜனவரி 8-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை செயலாளர் பூபதி இதனை அறிவித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் உரையாற்றுகிறார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடைசியாக, கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதிவரை நடந்தது. அதன்பின், பேரவைக் கூட்டத்தை முடித்து வைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். இந்நிலையில், அக்.6-ம் தேதி புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றார். வழக்கமாக ஒரு சட்டப்பேரவை கூட்டம் முடிந்தால், அது முடிந்த தேதியில் இருந்து அடுத்த 6 மாதத்துக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், ஜன. 18-ம் தேதிக்குள் அடுத்த கூட்டத்தை நடத்த வேண்டும்.
இந்நிலையில் ஜனவரி 8-ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்க உள்ளது. ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அதிகப்பட்சமாக 3 அல்லது 4 நாட்கள் நடைபெறலாம். ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு நன்றி தெரிவித்து இறுதிநாள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவார். அதைத்தொடர்ந்து, பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து மார்ச் மாதம் 2018-19ம் ஆண்டுக்கான தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை கிளப்ப முடிவு செய்துள்ளன.
குறிப்பாக ஓகி புயல் பாதிப்பு, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேடு, போக்குவரத்து, மின்வாரிய ஊழியர் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகளை எழுப்பி பேசுவார்கள். இதனால் ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது. அதேநேரத்தில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனும் முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் செல்கிறார். இதனால், அவரது வருகையும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி ஆண்டு விழாக்களில் அரசியல்வாதிகளுக்கு அனுமதி....
பள்ளி ஆண்டு விழாக்களில், அரசியல்வாதிகள் பங்கேற்க, பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுவதற்கான வழிமுறைகளை, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், நந்தகுமார், சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.
அதன் விபரம்: பள்ளி ஆண்டு விழாக்களில், மாணவர்களின் தனித்திறன், ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள் இடம் பெற வேண்டும். வகுப்பு சுவர்களில் வண்ண சித்திரங்கள் வரையலாம்.
பெண் கல்வி, கட்டாய கல்வி உரிமை சட்டம் போன்றவை குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும். பேச்சு, ஓவியம், கட்டுரை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசு வழங்க வேண்டும்.
விழா ஏற்பாட்டில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களை ஈடுபடுத்த வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் போன்ற பொறுப்பில் உள்ள கட்சியினர், முக்கிய விருந்தினராக பங்கேற்கலாம். மாணவர்களின் பெற்றோரையும், கண்டிப்பாக நிகழ்ச்சிக்கு வரவழைக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
*EMIS APP தற்போது இயங்கும் நிலையில் உள்ளது*
🌟 அந்தந்த மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் EMIS தளம் பயன்பாட்டில் இருக்கும் அந்த நாட்களில் பயன்படுத்திக்கொண்டு பதிவேற்றம் செய்யவும்.
🌟 மொபைலில் EMIS TAMILNADU என் Play store-ல் பதிவிறக்கம் செய்து
தங்கள் பள்ளியின் மாணவர்களின் பதிவுகள் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை எடுத்து வைத்து கொள்ளவும்.
🌟 *STUDENT ID CARD*- ற்கு சென்றால் அதில் *DATA APPROVAL* மற்றும் *STUDENT ID CARD* என்று இரண்டுதலைப்பு இருக்கும்.
🌟 முதலில் *DATA APPOROVAL* ற்கு சென்று அதில் தங்கள் பள்ளியில் வகுப்பை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
🌟 அதனுள் சென்றால் ஒரு மாணவனின் பெயரை தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் தகவல் விடுபட்டு இருந்தால் மேலே *EDIT* என்பதை கிளிக் செய்து விடுப்பட்டதை பதிவு செய்து கொள்ளவும்.
🌟 Photo பதிவேற்றம் செய்ய CAMERA வை தொட்டால்
🌟 GALLERY *(ஏற்கனவே எடுத்த வைத்த புகைப்படத்தை தேர்ந்தெடுக்க )*
🌟 Camera *( போட்டோ உடனே எடுத்து அப்போதே பதிவேற்றம் செய்து கொள்ள நினைப்பவர்கள் )*தங்களுக்கு தகுந்தவாறு தேர்வு செய்து புகைப்படம் *UPLOAD* செய்து கொள்ளவும்.
🌟 பின் *DATA APPROVAL* கொடுக்கவும். அதன் பின் வெளியே வந்து *ID CARD APPROVAL* ற்கு சென்று செய்ததை சரிபார்த்து கொண்டு *APPROVAL*கொடுத்தால் அது *ID CARD* அடிக்க ஏற்றுக்கொள்ளப்படும்.
🌟 இறுதியாக ID APPROVAL கொடுப்பதற்கு முன் சரிபார்த்து கொடுக்கவும்.
🌟 கொடுத்த எண்ணிக்கையை சரிபார்த்து கொள்ளவும்.
🌟 பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள link யை உபயோகப்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
🌟 EMIS APP Download link 👇👇👇
TOUCH HEAR
https://play.google.com/store/apps/details?id=com.emis.schooleducation
வியாழன், 28 டிசம்பர், 2017
EMIS APP now working (Updated in google Play store)..
*EMIS APPS*
*Now Updated Your EMIS Apps in Google play Store*
*Then Login with Your Dise Code & Password*
*(Login on- Ur District Scheduled Days)*
*Bug fixed and Improved performance*
*Gallery & File manager mode enabled*
*Crop option enabled in camera mode*
*EMIS APP now working*
ICT MATERIALS AND HANDBOOK
Click here
Hand book ICT CLICK HERE..
https://drive.google.com/file/d/1WBs-iLdkuedhylAfXg63guWMQg_0d_2E/view?usp=drivesdk
BASIC ICT ..CLICK HERE..
ROLE ICT PAPER CLICK HERE....
இனி பேஸ்புக் பயன்படுத்தவும் ஆதார் கட்டாயம்!!!
புதுடில்லி : இந்தியாவில் இனி பேஸ்புக்
பயன்படுத்துவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட உள்ளது.
இந்தியாவில் 24.1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் பேஸ்புக் பயன்பாட்டில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள பேஸ்புக் கணக்குகளில் ஏராளமானவை போலியானவை என தெரிய வந்துள்ளது. இத்தகைய போலி கணக்குகள் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக, பேஸ்புக் பயன்படுத்துவோரின் ஆதார் எண்ணை வைத்து, அவர் உண்மையான பெயரில் தான் கணக்கு வைத்துள்ளாரா என பேஸ்புக் சரிபார்க்க முடிவு செய்துள்ளது.
மொபைல் பேஸ்புக் இணையதளத்தில் இது சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, புதிதாக பேஸ்புக் கணக்கு துவங்பவர்களிடம் ஆதார் அட்டையில் உள்ளது போன்று உங்களின் பெயரை பதிவு செய்யுங்கள். அது உங்களை அடையாளம் காண உங்கள் நண்பர்களுக்கு எளிதாக என தெரிவிக்கப்பட உள்ளது. ரெட்டிட், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.
அதே சமயம், அனைவரும் இதனை செயல்படுத்த அவசியமில்லை. புதிதாக கணக்கு துவங்குபவர்களுக்கு மட்டுமே இந்த முறை அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் மொபைல் மூலம் பேஸ்புக் பயன்படுத்துவோர் மிகக் குறைவு. அதனால் தங்களின் உண்மையான பெயர்களை பயன்படுத்த விரும்புபவர்கள், ஆதார் அட்டையில் உள்ளபடி தங்களின் பெயர்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். மற்றபடி கட்டாயமில்லை என பேஸ்புக் தெரிவித்துள்ளது.
அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் - தமிழக அரசு
தமிழ் வழியில் பயின்று பொதுத்தேர்வில்
அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும்
மாவட்டம் தோறும் 30 மாணவர்களை தேர்ந்தெடுத்து தமிழகம் முழுவதும் 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு
மாவட்டந்தோறும் 30 மாணவர்கள் என 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படுகிறது - அமைச்சர் செங்கோட்டையன்
* 10, +2 மாணவர்களுக்கு தலா ரூ 10,000 மற்றும் ரூ 20,000 வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
* அறிவியல், கலை, தொழில்நுட்பம், இலக்கியம் போன்ற பாடப்பிரிவுகளிலிருந்து தலா 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி பயணம் அழைத்து செல்லப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்
* 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)