செவ்வாய், 26 டிசம்பர், 2017
மாணவர்களின் புரிதலுக்காக நாடகம் வாயிலாக கணிதம் கற்பித்தல்: கோட்டுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியரின் புதுமை முயற்சி
மாணவர்களின் புரிதலுக்காக நாடகம் வாயிலாக கணிதம் கற்பித்தல்: கோட்டுச்சேரி அரசுப் பள்ளி
ஆசிரியரின் புதுமை முயற்சி
பெரும்பாலான மாணவர்களால் கடினம் எனக் கருதப்படும் கணிதப் பாடத்தை மாணவர்களுக்கு எளிமையாக புரிய வைக்க வேண்டும் என்பதற்காக கோட்டுச்சேரி வ.உ.சிதம்பரனார் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், நாடகம் மூலம் கணிதம் கற்பிக்கும் முயற்சியை கையாண்டு வருகிறார்.
கணிதப்பாடம் இன்றும் பல மாணவர்களுக்கு புரியாத ஒன்றாகவே உள்ள நிலையில், கணிதக் கருத்துகளை (Mathametical concepts) காட்சி மற்றும் செயல் வடிவத்தைக் கொண்டு கற்பிக்கும்போது மாணவர்கள் புரிதலுடன் கற்கிறார்கள் என்று கூறுகிறார் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி வ.உ.சிதம்பரனார் அரசு மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி கணித ஆசிரியர் சு.சுரேஷ்.
மாணவர்களுக்கு கணிதப் பாடத்தில் நாட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கணித ஓவியப் போட்டி, கணித பாட்டுப் போட்டி, கணிதக் கண்காட்சி, கணிதப் பட்டறை, பெருக்கல் வாய்ப்பாடு ஒப்பிக்கும் போட்டி என பலவித முறைகளை தனது கற்பிக்கும் முறையில் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இவர், தற்போது நாடகம் வாயிலாக கணிதம் கற்பிக்கும் முயற்சியை புதிதாக மேற்கொண்டுள்ளார்.
அண்மையில் கோட்டுச்சேரி வ.உ.சிதம்பரனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் இவர் தனது முயற்சியில், கணித நாடகப் போட்டியை மாணவர்கள் பங்கேற்புடன் நடத்தினார்.
இதுகுறித்து அவர் கூறியது: மாணவர்களுக்கு அனுபவப்பூர்வமாக, எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் கணிதப் பாடத்தை நடத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். அதன் ஒரு பகுதியாக நாடகம் வாயிலாக கணிதம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக இருந்துவந்தது.
அதை நடைமுறைப்படுத்தும்போது, மற்றவர்களால் கேலி செய்யப்படுமோ என்ற அச்சம் இருந்தது. ஆனாலும், அதற்கான தயாரிப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தேன். தற்போது அவ்வப்போது மாணவர்களுக்கு நாடகம் வாயிலாக கணிதம் கற்பிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறேன்.
நாடகத்தின் கதையையும், காட்சியமைப்பையும் நானே உருவாக்குகிறேன். மாணவர்கள் அதற்கேற்ற வகையில் தயாராகி நடிக்கிறார்கள். கடையில் சென்று காய், கறிகள், மளிகைப் பொருட்கள் வாங்குவது, வீடுகளில் தளத்தில் டைல்ஸ் போடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது, தச்சு வேலைகள் மூலம் சில பொருட்களை உருவாக்குவது போன்ற கருத்தாக்கங்களுடன் காட்சிகள் அமைக்கப்படும்.
இதில் மாணவர்கள் பங்கேற்று நடிக்கும்போது நிறுத்தல் அளவு, பரப்பளவு, கொள்ளளவு, நீளம், அகலம், கூட்டல், பெருக்கல் உள்ளிட்டவற்றை அனுபவப்பூர்வமாக தெரிந்து கொள்கிறார்கள். அவர்களாகவே அளவீடுகள் குறித்து நேரிடையாக உணர்ந்து பேசிக்கொள்கிறார்கள். இது எளிதில் மனதில் பதிவதாக உள்ளது.
மேலும், பொருட்களின் விலை உள்ளிட்ட அன்றாட பொருளாதார நடைமுறைகளையும் தெரிந்து கொள்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் கணிதத்தின் பயன்பாடு உள்ளது என்பதை அறிந்துகொண்டு, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கணிதப் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என உணர்கிறார்கள். 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் இவ்வாறு கணிதத்தை கற்பிக்கிறேன். வழக்கமான வகுப்பறை கட்டுப்பாடுகளின்றி சற்று ரிலாக்ஸ் ஆக, எளிதாக கற்றுக்கொள்ள முடிவதால் மாணவர்கள் இதை ஆர்வத்துடன் வரவேற்கிறார்கள். ஆசிரியர்களும் இதனை ஊக்குவிக்கின்றனர் என்றார்.
TRB - சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து
சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
முறைகேடுகளை யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். முறைகேடுகள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முறைகேடுகளை யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். முறைகேடுகள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாடத்திட்டங்கள் குறித்த கருத்துகள் பரிசீலித்து வரப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார். சமூக பணிகள் மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் பாடத்துடன் நற்பண்புகளை கற்பிக்க ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பள்ளிக் கல்வித்துறையில் கனவு ஆசிரியர் விருது அறிமுகம் – செங்கோட்டையன்
தமிழகம் முழுவதும் 192 ஆசிரியர்களை தேர்வு செய்து கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழுடன், 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கூறினார்.
டிசம்பர் 31-க்கு பின் இந்த மாடல்களில் சேவை கிடையாது : வாட்ஸ்அப் அதிரடி
நடப்பாண்டின் இறுதி நாளான டிசம்பர் 31-க்குப் பிறகு சில மொபைல்
மாடல்களில் தங்களின் சேவை நிறுத்தப்பட உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி பிளாக்பெரி ஓ.எஸ், பிளாக்பெரி 10 மற்றும் விண்டோஸ் போன் 8.0 உள்ளிட்ட இயங்குதள மொபைல் சாதனங்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட உள்ளது. இதனால் பிளாக்பெரி மற்றும் வின்டோஸ் இயங்குதள மொபைல் போன் பயன்படுத்துவோர் தங்களது சாதனங்களில் 2018 ஜனவரி 1 முதல் வாட்ஸ்அப் பயன்படுத்த இயலாது. இது குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் நிறுவனம், மேற்கண்ட மொபைல் மாடல்களில் கடந்த 2016 டிசம்பர் 31 முதல் வாட்ஸ் ஆப் செயல்படாது என முதலில் அறிவிக்கப்பட்டது.
மாடல்களில் தங்களின் சேவை நிறுத்தப்பட உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி பிளாக்பெரி ஓ.எஸ், பிளாக்பெரி 10 மற்றும் விண்டோஸ் போன் 8.0 உள்ளிட்ட இயங்குதள மொபைல் சாதனங்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட உள்ளது. இதனால் பிளாக்பெரி மற்றும் வின்டோஸ் இயங்குதள மொபைல் போன் பயன்படுத்துவோர் தங்களது சாதனங்களில் 2018 ஜனவரி 1 முதல் வாட்ஸ்அப் பயன்படுத்த இயலாது. இது குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் நிறுவனம், மேற்கண்ட மொபைல் மாடல்களில் கடந்த 2016 டிசம்பர் 31 முதல் வாட்ஸ் ஆப் செயல்படாது என முதலில் அறிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கினங்க இதற்கான காலக்கெடு 2017 ஜூன்-30 வரை நீடிக்கப்பட்டது. மேலும் இது 2017டிசம்பர் வரையிலும் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. ஆனால் மேற்கண்ட மென்பொருள் கொண்ட மொபைல் போன்களில் இனியும் தங்களால் தொடர்ந்து சேவையை வழங்க முடியாது என கூறியுள்ளது. தங்களது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் விருப்பமானவர்களுடன் தொடர்பு கொள்ள தங்களது முடிவால் பாதிக்கப்படுபவர்கள் நவீன வகை மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இதே போல 2020 பிப்ரவரி 1-ம் தேதிக்கு பின் ஆன்ட்ராய்ட் 2.3.7 மற்றும் அதற்கு முந்தைய மாடல்களிலும் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
EMIS - video conference on 27th Dec 2017 @ 3.00 PM regarding - SPD PROCEEDINGS!
1.Aadhaar data seeding for students,
2..EMIS students data entry and ID card module in EMIS.
3. U-DISE data entry status
All District Chief Educational Officer, Computer programmers of SSA office, EMIS district coordinators CEO office and U-DISE coordinators SSA are requested to join the video conference
திங்கள், 25 டிசம்பர், 2017
திருவண்ணாமலைமாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி மாணவிக்கு அளித்த பாராட்டு.....
நேற்று செய்யார் சிப்காட் லோட்டஸ் நிறுவனம் சார்பில் கல்வி துறைக்கு பல நலதிட்டங்கள் மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி அவர்களது தலைமையில் வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் சிறந்த கல்வி பணி ஆற்றிவரும் முதன்மை கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார் அவர்களும் கலந்து கொண்டார்.
விழாவில் செய்யார் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி மோனிஷா 10ஆம் வகுப்பில் 491 மதிப்பெண் பெற்றதை பாராட்டி கல்வி உதவி தொகை மாவட்ட ஆட்சியர் மூலம் மாணவிக்கு வழங்கப்பட்டது.
அந்த மாணவி மோனிஷா மாவட்ட ஆட்சியரிடம் " நான் படித்து உங்களை போல மாவட்ட ஆட்சியர் ஆக போகிறேன்" என்றார்.
உடனே நம் மதிப்புமிகு ஆட்சியர் " வாழ்த்துக்கள் மோனிஷா! என் காரில் என் இருக்கையில் உட்கார்ந்து கொள்" என கூறி யாரும் எதிர்பாராத நிலையில் அந்த மாணவியை சற்று நேரம் ஆட்சியரின் சைரன் பொருத்திய அரசு காரில் தன் இருக்கையில் அமர வைத்து தான் நின்று கொண்டு அந்த மாணவியை புகைப்படம் எடுக்க சொன்னார்.
பின்னர் அந்த மாணவியிடம், " இந்த புகைப்படத்தை நீ பார்க்கும் போதெல்லாம் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற உத்வேகம் எப்போதும் இருக்கும்.
நானும் உன்னை போல்தான் அரசு பள்ளியில் படித்துதான் மாவட்ட ஆட்சியராக உயர்ந்தேன்" என்றார்.
நானும் உன்னை போல்தான் அரசு பள்ளியில் படித்துதான் மாவட்ட ஆட்சியராக உயர்ந்தேன்" என்றார்.
இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கல்விக்காக பல பணியாற்றி வருகிறார்.
அவருடன் இணைந்து முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களும் மாவட்ட கல்வி முன்னேற பாடுபட்டு வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கல்விக்காக பல பணியாற்றி வருகிறார்.
அவருடன் இணைந்து முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களும் மாவட்ட கல்வி முன்னேற பாடுபட்டு வருகிறார்.
மாவட்ட ஆட்சியர் அளித்து வரும் ஊக்கத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டம் இந்த ஆண்டில் மாபெரும் வெற்றி பெறும்.
மேற்காண் இந்த நிகழ்வு மாணவர்களுக்கு ஊக்கத்தை அளித்தது.
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் ......
வாழ்த்துக்கள்.....
வாழ்த்துக்கள்.....
கற்பித்தலில் சிறப்பாக செயல்படும் பள்ளிக்கு புதுமை பள்ளி விருது!மாவட்டத்தில் கல்வி அதிகாரிகள் குழு அமைப்பு
கற்பித்தல் முதல் கட்டமைப்பு வரை, சிறப்பாக செயல்படும் அரசுப்பள்ளிக்கு, 'புதுமைப்பள்ளி', விருது வழங்க, திருப்பூர் மாவட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதிலும், மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில், நடப்பாண்டில், 'புதுமைப்பள்ளி' விருது வழங்கும் திட்டத்தையும் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர் எண்ணிக்கையை ஆண்டுதோறும் அதிகரிப்பது, கற்பித்தலில் புதுமை, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துதல், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளை செய்வது என சிறப்பாக செயல்படும் அரசுப்பள்ளிக்கு, 'புதுமைப் பள்ளி', விருது வழங்கப்படுகிறது.
அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதிலும், மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில், நடப்பாண்டில், 'புதுமைப்பள்ளி' விருது வழங்கும் திட்டத்தையும் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர் எண்ணிக்கையை ஆண்டுதோறும் அதிகரிப்பது, கற்பித்தலில் புதுமை, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துதல், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளை செய்வது என சிறப்பாக செயல்படும் அரசுப்பள்ளிக்கு, 'புதுமைப் பள்ளி', விருது வழங்கப்படுகிறது.
ஆய்வுப்பணிகள் துவக்கம்
ஒவ்வொரு மாவட்டத்திலும், துவக்கம் முதல் மேல்நிலை வரை, நான்கு நிலைகளிலும் தலா ஒரு பள்ளி தேர்ந்தெடுக்கப்படுகிறது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கு, தலா ஒரு லட்சம் ரூபாயும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு, தலா நான்கு லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது.மாநில அளவில் ஒரு குழுவும், மாவட்ட அளவில் ஒரு குழுவும், பள்ளிகளை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில், முதன்மைக் கல்வி அலுவலர் தலைவராகவும், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்,மாவட்டக்கல்வி அலுவலர்கள், தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், கல்வியாளர்களை உறுப்பினர்களாகக்கொண்ட குழு, அமைக்கப்படுகிறது.
மாநில அளவிலான குழுவிற்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் தலைவராகவும், தொடக்கக்கல்வி இயக்குனர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (இடைநிலை) ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுவினர், பள்ளியின் கட்டமைப்பு, செயல்பாடுகள், மாணவர் சேர்க்கை, அடிப்படை வசதிகள் குறித்து, ஆய்வு செய்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில், புதுமைப்பள்ளி தேர்வுக்கான ஆய்வுப்பணிகள் துவங்கியுள்ளன.
தேர்ந்தெடுப்பது எப்படி?
புதுமைப்பள்ளி விருதுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒவ்வொரு நிலையிலும், தலா மூன்று பள்ளிகளை தேர்வு செய்து, மாவட்ட ஆய்வுக்குழுவினர், மாநிலகல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும். மாநில ஆய்வு குழுவினர், அதில் ஒரு மாவட்டத்துக்கு, ஒவ்வொரு நிலையிலும் சிறந்த ஒரு பள்ளியை தேர்ந்தெடுக்கின்றனர்.புதுமைப்பள்ளி விருதாக பெறும் பரிசுத்தொகையை, பள்ளிகளில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறைகளை மேம்படுத்தி நவீனப்படுத்துதல், வகுப்பறைகளுக்கு வண்ணம் தீட்டுதல், ஆங்கில வாசிப்பு பயிற்சி, யோகா பயிற்சி வழங்குதல், கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்குதல், பள்ளி நுாலகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு மட்டுமேபயன்படுத்த வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளி பட்டியல் தயாரிப்பு
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிறப்பாக செயல்படும் பள்ளிகளை, அவ்வப்போது பட்டியல் எடுத்து வருகிறோம். மேலும், அடிப்படை வசதிகள் முதல், மாணவர் சேர்க்கை வரை, உள்ள பள்ளிகளையும் கண்காணித்து வருகிறோம். அரசுப்பள்ளிகளுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தவே, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விருதுக்கு உரிய பள்ளியை தேர்ந்தெடுப்பதற்கான பட்டியல் தயாரித்துள்ளோம். இதைத்தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)























