வெள்ளி, 22 டிசம்பர், 2017
100 நாள் திட்ட பணியாளர்களை கொண்டு பள்ளிகளில் தூய்மை பணி : அமைச்சர் செங்கோட்டையன்.....
100 நாள் வேலைதிட்ட பணியாளர்களை கொண்டு பள்ளிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
வெயிட்டேஜ் முறையால் பணியை இழந்தவர்களுக்காக குழு அமைக்கப்பட்டு பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்க பள்ளிகளில் பயிற்சி : செங்கோட்டையன்....
மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்க மாதம் ஒருமுறை பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரியில் வெளியாகும் புதிய பாடத்திட்டம் வரலாறு படைக்கும் பாடத்திட்டமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். புதிய பாடத்திட்டம் சிபிஎஸ்இ-க்கு மேலாகவும் நாடே வியக்கும் வகையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அரசு துறைத் தேர்வுகள்: 23-இல் தொடக்கம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் டிசம்பர் 23 முதல் 31-ஆம் தேதி வரை அரசு துறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதுகுறித்து
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை: மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத் திட்டத்தின்படி, அரசு துறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
கொள்குறி தேர்வு முறை, விரிவாக விடை எழுதும் முறை மற்றும் கொள்குறியுடன் விரிவாக விடை எழுதும் முறை என மூன்று வகைகளில் மொத்தம் 147 தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட OMR தாள் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகள், கால அட்டவணை, நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் ஆகிய விவரங்களை www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
8ம் வகுப்பு வரை கணினி வழி தேர்வு : அரசு பள்ளிகளில் அறிமுகம்!!!
அரசு பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு
, கணினி வழி தேர்வு மற்றும் மதிப்பீடு முறை அறிமுகமாகிறது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, பள்ளிகளில் தொழில்நுட்ப வசதி ஏற்படுத்துதல் என, பல புதிய திட்டங்களுக்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது.
இதற்காக, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், புதிய வசதிகள் செய்து தரப்படுகின்றன. இந்த வரிசையில், தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், கணினி வழியில் தேர்வும், மதிப்பீடும் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில், எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகம் இறங்கிஉள்ளது. முதல் கட்டமாக, 800 பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகளுடன், கணினி வழி தேர்வுக்கான வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.
மேலும், வினாத்தாளில் கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகையிலான, கேள்விகளும், பதிலுக்கான குறிப்புகளும் இடம்பெறும். கேள்விகளுடன், படங்கள், வண்ண குறிப்புகள் இருக்கும். இந்த வினாத்தாள், 'ஸ்மார்ட்' வகுப்பில் கணினி வழியாக வெளியிடப்பட்டு, அதற்கான பதில்களை தேர்வு செய்ய, மாணவர்கள் அறிவுறுத்தப்படுவர்.
மேலும், மாணவர்களின் விடைத்தாள்களை, 'ஸ்கேன்' செய்து, கணினி மூலமாக திருத்தவும், பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான மாதிரி தேர்வு, ௨௦௧௮ மார்ச்சில் நடக்கும் என, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு
தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலீவால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுஇருப்பதாவது:–
10–ம் வகுப்பு, பிளஸ்–2 ஆகிய வகுப்புகளில் தேர்ச்சி பெற்றபிறகு பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் சேர்ந்து இளங்கலை மற்றும் முதுகலைபட்டப்படிப்பு படித்து பட்டம் பெறலாம். பின்னர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேரடி முறையில் சேர்ந்து, முழுநேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ எம்.பில்., பி.எச்டி. ஆகிய படிப்புகள் படித்து பட்டங்கள் பெறுபவர்களுக்கு, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிநியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கலாம் என அங்கீகரித்து ஆணையிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரேஷன் கடை வேலைக்கு இன்ஜினியர்கள் விண்ணப்பம்
ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு, இன்ஜினியரிங் பட்டதாரிகளும் விண்ணப்பித்து உள்ளனர். தமிழக ரேஷன் கடைகளை, கூட்டுறவு சங்கங்களும், நுகர்பொருள் வாணிப கழகமும் நடத்துகின்றன.
தற்போது, கூட்டுறவு சங்கங்கள் நடத்தும், 32 ஆயிரத்து, 500 ரேஷன் கடைகளில், விற்பனையாளர், எடையாளர் பணிக்கு, 4,000 ஊழியர்களை தேர்வு செய்யும் பணி துவங்கிஉள்ளது.அதற்கான விண்ணப்பம் அளித்தல், நேர்காணல் போன்ற பணிகள்,மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகத்தில் நடக்கின்றன. ரேஷன் ஊழியருக்கு, பணியில் சேர்ந்தநாளில்இருந்து, ஓராண்டு வரை தொகுப்பு ஊதியமாக, மாதம், 5,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஓராண்டிற்கு பின், அதிகபட்சமாக, 12 ஆயிரம் ரூபாயும், அதனுடன் ஆண்டுக்கு, 2.5 சதவீதம் ஊதிய உயர்வும் அளிக்கப்பட இருக்கிறது.

இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கடை விற்பனையாளர் பதவிக்கு, பிளஸ் 2தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி இருந்தால்போதும். அவருக்கு, அரசு ஊழியருக்கு இணையான சம்பளம் கிடையாது. ஆனால், தற்போது, பல மாவட்டங்களில், ரேஷன் வேலைக்கு வந்துள்ள விண்ணப்பங்களில், இன்ஜினியரிங் பட்டதாரிகளும் விண்ணப்பித்து உள்ளதாக, மாவட்ட இணை பதிவாளர் அலுவலகங்களில் இருந்து, தகவல் கிடைத்துஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)