>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 22 டிசம்பர், 2017

8ம் வகுப்பு வரை கணினி வழி தேர்வு : அரசு பள்ளிகளில் அறிமுகம்!!!

அரசு பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு
, கணினி வழி தேர்வு மற்றும் மதிப்பீடு முறை அறிமுகமாகிறது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, பள்ளிகளில் தொழில்நுட்ப வசதி ஏற்படுத்துதல் என, பல புதிய திட்டங்களுக்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது.
இதற்காக, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், புதிய வசதிகள் செய்து தரப்படுகின்றன. இந்த வரிசையில், தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், கணினி வழியில் தேர்வும், மதிப்பீடும் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில், எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகம் இறங்கிஉள்ளது. முதல் கட்டமாக, 800 பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகளுடன், கணினி வழி தேர்வுக்கான வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.
மேலும், வினாத்தாளில் கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகையிலான, கேள்விகளும், பதிலுக்கான குறிப்புகளும் இடம்பெறும். கேள்விகளுடன், படங்கள், வண்ண குறிப்புகள் இருக்கும். இந்த வினாத்தாள், 'ஸ்மார்ட்' வகுப்பில் கணினி வழியாக வெளியிடப்பட்டு, அதற்கான பதில்களை தேர்வு செய்ய, மாணவர்கள் அறிவுறுத்தப்படுவர்.
மேலும், மாணவர்களின் விடைத்தாள்களை, 'ஸ்கேன்' செய்து, கணினி மூலமாக திருத்தவும், பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான மாதிரி தேர்வு, ௨௦௧௮ மார்ச்சில் நடக்கும் என, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு

தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலீவால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுஇருப்பதாவது:–
10–ம் வகுப்பு, பிளஸ்–2 ஆகிய வகுப்புகளில் தேர்ச்சி பெற்றபிறகு பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் சேர்ந்து இளங்கலை மற்றும் முதுகலைபட்டப்படிப்பு படித்து பட்டம் பெறலாம். பின்னர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேரடி முறையில் சேர்ந்து, முழுநேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ எம்.பில்., பி.எச்டி. ஆகிய படிப்புகள் படித்து பட்டங்கள் பெறுபவர்களுக்கு, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிநியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கலாம் என அங்கீகரித்து ஆணையிடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரேஷன் கடை வேலைக்கு இன்ஜினியர்கள் விண்ணப்பம்

ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு, இன்ஜினியரிங் பட்டதாரிகளும் விண்ணப்பித்து உள்ளனர். தமிழக ரேஷன் கடைகளை, கூட்டுறவு சங்கங்களும், நுகர்பொருள் வாணிப கழகமும் நடத்துகின்றன.
தற்போது, கூட்டுறவு சங்கங்கள் நடத்தும், 32 ஆயிரத்து, 500 ரேஷன் கடைகளில், விற்பனையாளர், எடையாளர் பணிக்கு, 4,000 ஊழியர்களை தேர்வு செய்யும் பணி துவங்கிஉள்ளது.அதற்கான விண்ணப்பம் அளித்தல், நேர்காணல் போன்ற பணிகள்,மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகத்தில் நடக்கின்றன. ரேஷன் ஊழியருக்கு, பணியில் சேர்ந்தநாளில்இருந்து, ஓராண்டு வரை தொகுப்பு ஊதியமாக, மாதம், 5,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஓராண்டிற்கு பின், அதிகபட்சமாக, 12 ஆயிரம் ரூபாயும், அதனுடன் ஆண்டுக்கு, 2.5 சதவீதம் ஊதிய உயர்வும் அளிக்கப்பட இருக்கிறது.
இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கடை விற்பனையாளர் பதவிக்கு, பிளஸ் 2தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி இருந்தால்போதும். அவருக்கு, அரசு ஊழியருக்கு இணையான சம்பளம் கிடையாது. ஆனால், தற்போது, பல மாவட்டங்களில், ரேஷன் வேலைக்கு வந்துள்ள விண்ணப்பங்களில், இன்ஜினியரிங் பட்டதாரிகளும் விண்ணப்பித்து உள்ளதாக, மாவட்ட இணை பதிவாளர் அலுவலகங்களில் இருந்து, தகவல் கிடைத்துஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

வரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.

முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான 'உடற்கல்வி ஆசிரியர் கையேடு'- 3 பருவத்திற்கும்.

EMIS STUDENTS I'D CARD | REG STATE COORDINATOR ANNOUNCEMENT

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு வணக்கம்,
அரசு மற்றும் நிதியுதவி பள்ளி மாணவர்களுக்கு "அடையாள அட்டை" வழங்குதல் சார்பாக மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய "Emis android application" வெளியிடப்பட்டுள்ளது.
1.இணையதளத்தில் பதிவு செய்துள்ள மாணவர்களின் பெயர்கள் மட்டுமே ஆண்ட்ராய்ட் செயலியில் காட்டப்படும்.இணையதளத்தில் இல்லாத மாணவர்களின் பெயர்கள் ஆண்ட்ராய்ட் செயலியில் இருக்காது.
2.ஆண்ட்ராய்டு செயலியை பயன்படுத்தி புகைப்படம்,இரத்தவகை, ஆதார் எண் போன்றவற்றை பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும்.
3.அடையாள அட்டை அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதால் தனியார் பள்ளிகள் இந்த செயலியை பயன்படுத்த தேவை இல்லை.
4.Student id செயலியை அடையாள அட்டைக்கான தகவல்கள் பதிவேற்றம் செய்ய மட்டுமே பயன்படுத்த இயலும்.புதிய பதிவு,சேர்த்தல், நீக்கல் செய்ய இயலாது.
5.வருகைப்பதிவேட்டில் உள்ள மாணவர் பெயர்களும், இணையதளத்தில் உள்ள மாணவர் பெயர்களும் சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
6.செயலியை பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல்!!!


Read more ..
Click here ... 
CLICK HERE-TO DOWNLOAD HIGH SCHOOL HMS PANEL 

உதவி இயக்குனர் தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை: வணிக உதவி இயக்குனர்
பதவிக்கான, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு தொழில் மற்றும் வணிக உதவி இயக்குனர் பதவிக்கான எழுத்துத் தேர்வு, ஜூலை, 16ல் நடந்தது. இதில், 1,035 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகளை நேற்று, டி.என்.பி.எஸ்.சி.,வெளியிட்டது. விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்வானவர்களுக்கு, ஜன., 4ல் நேர்காணல் நடைபெற உள்ளது.

கல்லூரி, பல்கலையில் 'குரூப் - 4' தேர்வு மையம் : 'குரூப் - 4' தேர்வுக்கு ஏற்பாடு

தமிழக அரசு அலுவலகங்களில், குரூப் - 4 பதவிகளில் காலியாக உள்ள,
9,351 இடங்களை நிரப்ப, பிப்., 11ல், போட்டி தேர்வு நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இந்தத் தேர்வை நடத்துகிறது. தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, நேற்று முன்தினம் முடிந்தது.
இதில், 20.௮௩ லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில், ௧௧.௩௪ லட்சம் பேர் பெண்கள், ௫௪ பேர் மூன்றாம் பாலினத்தவர். நேற்றுடன், தேர்வு கட்டணம் செலுத்தும் அவகாசமும் முடிந்தது. இதுவரை நடந்த, வி.ஏ.ஓ., என்ற, கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான தனித் தேர்வு, இந்த ஆண்டு முதல், ரத்து செய்யப்பட்டு, குரூப் - 4 தேர்வுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் எந்த தேர்வுக்கும் இல்லாத வகையில், தமிழக, குரூப் - 4 தேர்வில், 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்ததால், தேர்வுக்கான மையங்களை இரட்டிப்பாக்க, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. இதுவரை, அதிகபட்சம், 15 லட்சம் பேருக்கு, 4,500 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இம்முறை வழக்கத்தை விட, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதிகமாக விண்ணப்பித்து உள்ளதால், கூடுதலாக, 1,500 மையங்கள் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசு, தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்லைகளிலும், தேர்வு மையங்கள் அமைக்க, டி.என்.பி.எஸ்.சி., திட்டமிட்டுள்ளது.
'விண்ணப்பங்களின் நிலையை, www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் அறிவித்துள்ளார்.

TNOU - தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை கழகத்தில் B.Ed., படிப்பிற்காக விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.17...


வியாழன், 21 டிசம்பர், 2017

மார்ச் 16ம் தேதி தொடங்கவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் மாற்றம் : அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் 16ம் தேதி தொடங்கவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை மாற்றி அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2018-2019ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகிறது.
இதில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 16ம் தேதி தொடங்குகிறது. வழக்கமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு காலை 9.15 மணிக்கு மாணவர்கள் தேர்வு அறையில் அனுமதிக்கப்படுவர். அவர்கள் வினாத்தாளை படிப்பதற்கு 10 நிமிடமும், தங்களது விவரங்களை பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடமும் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். தேர்வு அறைக்கு ஆசிரியர்களும், மாணவர்களும் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வரவேண்டும். இதனால் தொலை தூரத்தில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் சிரமமடைந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் உட்பட அனைத்து தரப்பினரும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை மாற்றம் செய்யவேண்டும். பிளஸ் 2 வகுப்பு போல் 10ம் வகுப்பிற்கும் காலை 10 மணிக்கு தேர்வு தொடங்க வேண்டும் என்று தேர்வு இயக்குனரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, அரசின் ஒப்புதல் பெறப்பட்டு தற்போது 2018-2019ம் கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு மாணவர்களை தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். 10.10 மணிக்கு மாணவர்களிடம் வினாத்தாள் வழங்கப்படும்.
அதை மாணவர்கள் படித்து பார்க்க வேண்டும். பின்னர் 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளில் மாணவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்யவேண்டும். 10.15 மணிக்கு தேர்வு எழுத தொடங்க வேண்டும். மதியம் 12.45 மணிக்குள் மாணவர்கள் தேர்வு எழுதி முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அரசாணை மற்றும் சுற்றறிக்கை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
       www.kalvicikaram.blogspot.in   or  www.kalvicikaram.com

DSE - இணையதளம் வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளதால் ஆசிரியர் விபரம் மற்றும் காலிப்பணியிட விபரம் online-ல் 26.12.2017 முதல் பதிவு செய்ய பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. கடிதம் நாள்: 21.12.2017

Flash News : EMIS Official Mobile App Published Now

பழைய App download செய்திருந்தால் delete செய்துவிட்டு download செய்யவும்.

TNPSC குரூப் 7 - செயல் அதிகாரி: தேர்வு முடிவு வெளியீடு....

அறநிலையத் துறை செயல் அதிகாரி பணியில், நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.தமிழக இந்து சமய அறநிலையத்துறையில்,
'குரூப் - 7'ல் அடங்கிய, செயல் அதிகாரி பதவிக்கு, இந்த ஆண்டு, ஜூனில் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. அதில், 37 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.தேர்வில், தேர்வர்கள் எடுத்த மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு விதியின் படி, தகுதியானவர்களுக்கு, நேர்முக தேர்வு நடத்தப்பட உள்ளது.
தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பட்டியல், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஜன., 3ல், நேர்முக தேர்வு நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் அறிவித்துள்ளார்.

TET - சுயநிதி பள்ளிகளுக்கு TET தேர்ச்சி கட்டாயம் இயக்குனர் ஆணை!

புதன், 20 டிசம்பர், 2017

தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை தமிழாசிரியர் காலிப் பணியிடங்கள் எத்தனை? CM CELL Reply

TNPSC குரூப் 7 - செயல் அதிகாரி: தேர்வு முடிவு வெளியீடு....

அறநிலையத் துறை செயல் அதிகாரி பணியில், நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.தமிழக இந்து சமய அறநிலையத்துறையில்,
'குரூப் - 7'ல் அடங்கிய, செயல் அதிகாரி பதவிக்கு, இந்த ஆண்டு, ஜூனில் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. அதில், 37 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.தேர்வில், தேர்வர்கள் எடுத்த மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு விதியின் படி, தகுதியானவர்களுக்கு, நேர்முக தேர்வு நடத்தப்பட உள்ளது.
தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பட்டியல், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஜன., 3ல், நேர்முக தேர்வு நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் அறிவித்துள்ளார்.

826 பள்ளிகளில் "டிஜிட்டல்" முறையில் தேர்வு

இனி மாற்றிய புதிய பாடத்திட்டத்தில் அரசுப் பணியாளர்களுக்கு துறைத் தேர்வுகள் நடக்கும்--TNPSC அறிவிப்பு.