திங்கள், 18 டிசம்பர், 2017
மேல்படிப்புக்கு ஊக்க ஊதியம் : ஆசிரியர்கள் கோரிக்கை
தொழிற்கல்வி மட்டுமின்றி, வேறு பாடங்களில் உயர்கல்வி படித்தால், அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்' என, அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, தொழிற்கல்வி பாடம் கற்பிக்கின்றனர். மற்ற பாட ஆசிரியர்களுக்கு, அவர்களின் உயர்கல்வி தகுதி, அனுபவத்துக்கு ஏற்ப பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, இந்த சலுகைகள் வழங்கப்படுவதில்லை.இந்நிலையில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் கூட்டமைப்பின், மாநில அமைப்பாளர், ஜனார்த்தன் தலைமையில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினர்.தொழிற்கல்வி ஆசிரியர்களின் தொகுப்பூதிய பணிக்காலத்தில், 50 சதவீதத்தை கணக்கிட்டு ஓய்வூதியம்வழங்க வேண்டும்.
பதவி உயர்வு இல்லாத பணியிடங்களுக்கு, தேர்வு நிலை தர ஊதியம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், மற்ற ஆசிரியர்களை போல, வெவ்வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றிருந்தால், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும், இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும், வலியுறுத்தி உள்ளனர்.
EMIS - Official Android App Published Now- EMIS
student ID card தயாரிக்க அரசின் அதிகாரப்பூர்வ
செயலி இன்று வெளியிடப்பட்டுள்ளது
EMIS - Official Android App Published Now
EMIS student ID card தயாரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செயலி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
செயலியை தரவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட இணைப்பை தொடவும்
புதிதாக மாணவர்களை சேர்க்கும் வசதி இதில் இல்லை. Student id card தயாரிக்க photo update செய்யவும், இரத்த வகை சேர்க்கவும் பிற விவரங்களை சரிபார்க்க மட்டுமே முடியும்.
ஞாயிறு, 17 டிசம்பர், 2017
தொலைநிலை படிப்புக்கு டிச., 30 வரை அவகாசம்!!!
சென்னை: சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில்
சேர, வரும், 30 வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வி யில், இளநிலை, முதுநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்பில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இதற்கான, விண்ணப்ப பதிவு, www.ideunom.ac.in என்ற இணையதளத்தில், 'ஆன்லைன்' வழியாகவும், நேரடியாக பல்கலையின், ஒற்றை சாளர மையம் வழியாகவும் நடக்கிறது. 'இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, வரும், 30 வரை விண்ணப்பிக்கலாம்' என, சென்னை பல்கலையின் பதிவாளர், சீனிவாசன் அறிவித்துள்ளார். சனி, ஞாயிற்று கிழமை களிலும், தொலைநிலை கல்வியின், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மையம் செயல்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியர்கள் இடமாற்றம்!
அரசு உதவிபெறும் பள்ளிகளில்,
மாணவர்களே இல்லாமல், சம்பளம் மட்டும் பெறும் ஆசிரியர்களை, அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய, உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 6,600 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 1,800 உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும், அரசின் நிதியுதவி பெறும், தனியார் பள்ளிகளாக செயல்படுகின்றன.
இந்த பள்ளிகளுக்கு, மத்திய, மாநில அரசின் திட்டங்களின் படி, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுகின்றன. மாணவர்களுக்கு, அரசின் இலவச திட்டங்களின்படி, புத்தகம், சைக்கிள், 'லேப் - டாப்' போன்றவை வழங்கப்படுகின்றன. அதேபோல், ஆசிரியர்களுக்கும், அரசால் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.ஆனால், அரசு உதவி பெறும் பல பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்துள்ள நிலையில், போலி மாணவர்களை கணக்கு காட்டி, திட்ட பலன்களை பெறுவதாக, புகார் எழுந்தது. இது குறித்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளில், அதிகாரிகள் ஆய்வு நடத்தி, முறைகேடுகளை கண்டுபிடித்துள்ளனர்.மேலும், மாணவர் எண்ணிக்கை விகிதத்தை விட, ஆசிரியர் எண்ணிக்கை அதிகம் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனால், போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாத பள்ளிகளில், 'ஓபி' அடிக்கும் ஆசிரியர்களுக்கு, அரசின் நிதியில் இருந்து, வீணாக சம்பளம் வழங்கப்படுவதாக, அதிகாரிகள் அறிக்கை அளித்து உள்ளனர்.இதை தொடர்ந்து, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், கூடுதலாக இருந்த, 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளி களுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல், தொடக்கப் பள்ளிகளிலும், 'ஓபி' அடிக்கும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய முடிவாகியுள்ளது. அதற்காக, மாணவர் எண்ணிக்கை, கூடுதல் ஆசிரியர்கள் பணியிட விபரங்களை, இயக்குனரகத்துக்கு அனுப்பும்படி, தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.இந்த பட்டியலின் படி, கூடுதலாக உள்ள ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, அரசு பள்ளிகளுக்கு மாற்றப்பட உள்ளனர்

மீண்டும், 'ரேங்கிங்' : சி.பி.எஸ்.இ., அறிமுகம்!!!
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில்,
இந்த ஆண்டு முதல், தேசிய அளவில், 'ரேங்கிங்' முறை அறிமுகமாகிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவில், அதிக மதிப்பெண் பெறும் மூன்று மாணவர்கள், தேசிய அளவில், முதல் மூன்று, 'ரேங்க்' பெறுவர்.
இந்நிலையில், 2009 முதல், 10ம் வகுப்புக்கு, பொது தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது.
அதாவது, சி.சி.இ., எனப்படும், தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டு, பள்ளிகளிலேயே ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்பட்டது. அதனால், மாணவர்களுக்கு, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டு, படிநிலை என்ற, 'கிரேடு' முறை அறிமுகம் ஆனது. இதற்கிடையில், பொது தேர்வு இல்லாததால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், தேர்வில் பின்தங்கும் மாணவர்களுக்கும் அதிக மதிப்பெண் வழங்கி, பிளஸ் 1க்கு தேர்ச்சி பெற வைப்பதாக, புகார் எழுந்தது. அதனால், கல்வித் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இது குறித்து, மத்திய அரசின் சார்பில், நிபுணர் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு நடந்தது.ஆய்வு அறிக்கையின்படி, 10ம் வகுப்புக்கு, மீண்டும் தேசிய அளவில் பொது தேர்வு வந்துள்ளது. இந்த ஆண்டு, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், வரும் மார்ச்சில், பொது தேர்வை எழுத வேண்டும். அதன் முடிவுகள், மே மாதம் வெளியாகும். இந்த முடிவுகளில், மீண்டும் மதிப்பெண் முறையும், தரவரிசை என்ற, 'ரேங்கிங்' முறையும் வர உள்ளது.

ஆசிரியருக்காகப் போராடிய மாணவர்கள்!
தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி
தங்கள் பள்ளியிலேயே பணியாற்ற வேண்டும் எனக் கோரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்த தமிழ்ச்செல்வி, பணியிலிருந்து ஓய்வுபெறும் தன் முடிவை மாற்றிக்கொண்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் கோ.ஆதனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாகத் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வி. இவரைக் குறித்து கல்வி அலுவலரிடம் அப்பள்ளியில் பணிபுரியும் இரண்டு ஆசிரியர்கள் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் (டிசம்பர் 13) விசாரணைக்கு வந்த கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்திய விதம் தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறி விருப்ப ஓய்வு கொடுத்து விட்டுச் சென்றுவிட்டார்.
இதையறிந்த மாணவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்கள். தலைமையாசிரியை மீது முகுந்த அன்பும் மதிப்பு வைத்திருந்த அவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தலைமையாசிரியர் பள்ளிக்கு வராததால் மனமுடைந்த மாணவர்கள் நேற்று (டிசம்பர் 14) தங்கள் பெற்றோருடன் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்தால்தான் போராட்டத்தை நிறுத்துவோம் என மாணவர்கள் கூறியுள்ளனர். “எங்களுக்கு இதுபோன்ற ஒரு ஆசிரியர் உலகத்தில் எங்குத் தேடினாலும் கிடைக்க மாட்டார். அவர் மீண்டும் பள்ளிக்கு வர வேண்டும். அவர்களுக்காக எங்கள் உயிரையும் கொடுப்போம்” என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, தமிழ்ச்செல்வி சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவர்களைக் கட்டி அணைத்துக்கொண்டார். அவர்களை சமாதானம் செய்து பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அவரை அதே பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனப் பெற்றோர்களும் பொதுமக்களும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி கூறுகையில், “ ஜாதியைச் சொல்லித் திட்டுவதாக என் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அடிக்கடி விசாரணை என்ற பெயரில் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினர். எனவே, பணி ஓய்வு பெறுவதாகத் தெரிவித்தேன். ஆனால், மாணவர்கள் என் மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை இப்போதுதான் நேரடியாகக் கண்டேன். என் மாணவர்களுக்காக விருப்ப ஓய்வைத் திரும்பப்பெறுவதாக மாவட்டக் கல்வி அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டேன். அவர்களும் என் முடிவை வரவேற்றனர். தற்போது மீண்டும் பணிக்குத் திரும்புகிறேன்” எனக் கூறினார்.
விலகியது ஏன்?
விருப்ப ஓய்வுக் கடிதம் கொடுத்த டிசம்பர் 13ஆம் தேதி அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், “தோழர்களே, தொடர்ந்து 28 ஆண்டுகளாக அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். எனது பணிக்காலத்தை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்தியுள்ளேன். இதில் மூன்றரை ஆண்டுக் காலம் தலைமையாசிரியர் பணி. தலைமையாசிரியராகப் பணியாற்றிய இரண்டு பள்ளிகளையும் எனது சொந்த செலவிலும் நண்பர்கள் உதவியோடும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக வளப்படுத்தியுள்ளேன்.
கல்வித் தரத்தில் தனியார் பள்ளிகளையும் மிஞ்சும் விதத்தில் வளர்த்தெடுத்துள்ளேன்.
கடந்த ஆண்டு எமது பள்ளி மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிக்கான விருதினை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற்றது.
ஒரு ஆசிரியராக மட்டுமின்றி தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு படைப்பாளியாக முக்கியமான பங்களிப்புகளை செய்திருக்கிறேன். முக்கியமான விருதுகளை, வாசக அபிமானத்தைப் பெற்றிருக்கிறேன்.
இந்நிலையில் இரண்டுமுறை மாவட்ட அளவிலான அதிகாரிகளின் விசாரணையை எதிர்கொண்டேன். இவற்றின் விளைவாக எனக்கான நீதி மறுக்கப்பட்டதை எண்ணி மனம் வருந்தினேன்.
அரசு, அதிகாரம் என்பது ஒரு இறுகிய பாறை. நான் ஒரு சிட்டுக்குருவி. பாறையோடு மோதி என் தலையை உடைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதிகாரத்தின் நிழலில் அமர்ந்து நீதியை, அறத்தைப் பேச முடியாது என்பதை உணர்ந்த தருணமிது. நேற்று ஒரு விசாரணைக்காக வந்திருந்த மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலரின் முன்னிலையில் எனது விருப்ப ஓய்வுக் கடிதத்தினைக் கொடுத்துவிட்டேன். விட்டு விடுதலையான சிறு பறவையாக இப்போது என்னை உணர்கிறேன்.
இனி... ஒரு படைப்பாளியாக படைப்புகள் வாயிலாகவும் இலக்கிய அரங்குகள் வாயிலாகவும் உங்களோடு உரையாடுவேன்” எனப் பதிவிட்டிருந்தார்.
இன்று (டிசம்பர் 15) அவர் மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளது மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)