>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 2 டிசம்பர், 2017

உயர் கல்வி நிறுவனங்களுக்கு மாநில தரவரிசை பட்டியல் : முதன்மை செயலர் சுனில் பாலிவால் தகவல்!!!

'தேசிய தரவரிசை பட்டியலை போல, உயர் கல்வி நிறுவனங்களுக்கு 
அங்கீகாரம் வழங்க, மாநில அளவிலும், தரவரிசை பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது,'' என, உயர் கல்வித் துறை முதன்மை செயலர், சுனில் பாலிவால் தெரிவித்தார்.
கருத்தரங்கு : கோவையில், இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், தேசிய உயர் கல்வி வளர்ச்சி குறித்த கருத்தரங்கு, நேற்று துவங்கியது; இன்றுடன் நிறைவடைகிறது.
மாநாட்டை துவக்கி வைத்து, உயர் கல்வித்துறை முதன்மை செயலர், சுனில் பாலிவால் பேசியதாவது:தமிழகத்தில், உயர் கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கை, 44.3 சதவீதமாக உள்ளது. இது, சர்வதேச விகிதத்துக்கு இணையானது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்ட, தேசிய தரவரிசை பட்டியலில், சிறந்த, 100 பல்கலைக் கழகங்கள் பட்டியலில், தமிழகத்தில் இருந்து, 10 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்று உள்ளன. இதில், அண்ணா பல்கலை, ஆறாவது இடத்தை பிடித்திருப்பது, பெருமைக்குரிய விஷயம். முதல், 10 இடங்களில் உள்ள பல்கலைக் கழங்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு, 1,000 கோடி ரூபாய், மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதோடு, 100 சிறந்த கல்லுாரிகளின் பட்டியலில், தமிழகத்தில் இருந்து, 37 கலை, அறிவியல் கல்லுாரி கள் இடம் பெற்றுள்ளன. கோவை, பாரதியார் பல்கலை, சென்னை பல்கலைக் கழகம், வரும் கல்வியாண்டுகளில், தரவரிசை பட்டியலில், முதல், 10 இடங்களுக்கு முன்னேறி செல்ல, திட்டங்கள் வகுக்கப்படும். மேலும், பல்கலை நிர்வாகப் பணிகள் சிறப்பாக நடக்கும் வகையில், தகுதியான துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவர்.
இதற்கான பணிகள், துணைவேந்தர் பணிக்காலம் முடிவதற்கு, ஆறு மாதங்களுக்கு முன்பே துவங்கப்படும். குறிப்பாக, அழகப்பா பல்கலை துணைவேந்தர் பதவிக்காலம், ஜூன் மாதத்துடனும், அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் பதவிக்காலம், மே மாதத்துடனும் முடிவதால், புதிய துணைவேந்தர் தேர்வு செய்யும் பணிகள் துவங்கி உள்ளன.
வெளியிட திட்டம் : தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கென, பிரத்யேகமாக மாநில தரவரிசை பட்டியல், அடுத்த எட்டு மாதங்களில், வெளியிட திட்டமிட்டு உள்ளோம். கற்பித்தல், ஆய்வு, வேலை வாய்ப்பு என, ஐந்து பிரிவுகளில், இப்பட்டியல் வெளியாகும். ஒவ்வொரு பிரிவிலும், 20 உட்பிரிவுகள் வகுக்கப்பட்டு, மதிப்பீடு செய்யப்படும். 'நாக்' எனப்படும், தேசிய தர நிர்ணயக் குழு, அனைத்து கல்வி நிறுவனங்களையும் ஆய்வு செய்து, அங்கீகாரம் அளிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்விண்ணப்பதாரர்களின் வசதிக்காக, அவர்களது விண்ணப்பம்சமர்ப்பிப்பதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு எளிதில் விடைபெறும் பொருட்டு பதிலளிக்கபுதிதாக ஐந்து தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தி உள்ளது. 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்விண்ணப்பதாரர்களின் வசதிக்காக, அவர்களது விண்ணப்பம்சமர்ப்பிப்பதில் ஏற்படும்
சந்தேகங்களுக்கு எளிதில் விடைபெறும் பொருட்டு பதிலளிக்கபுதிதாக ஐந்து தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தி உள்ளது. 

அதாவது, 25300336, 25300337, 25300338, 25300339 மற்றும் 25300340 
அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணைப்புகள் தவிர, 25332833, 25338855 மற்றும்
 கட்டணமில்லா தொலைபேசி இணைப்பான 
1800 425 1002
 ஆகிய எண்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 ஒருங்கிணைந்தசார்நிலைப்பணியாளர் தேர்வு 4 (தொகுதி 4 மற்றும் கிராம நிர்வாகஅலுவலர்)
 தேர்விற்கு விண்ணப்பித்தல் தொடர்பான ஐயப்பாடுகளுக்கு
 விண்ணப்பதாரர்கள் இந்த தொலைபேசி
எண்களை
 பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு 
அறிவிப்பில்கூறப்பட்டுள்ளது.

SSA - STATE TEAM VISIT - DHARMAPURI DIST REVIEW REPORT & INSTRUCTIONS...

பள்ளி, கல்லூரிகளில் கண்காட்சிக்கு தடை: மாணவன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில், அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி, பொருட்காட்சி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தை சேர்ந்த கதிர்வேல் என்ற மாணவன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வரும் 3-ஆம் தேதி திருப்பூரில் உள்ள சிக்கன்னா அரசு கலை கல்லூரியில் 45 நாட்கள் அரசு கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரியில் கண்காட்சி நடத்தினால் வகுப்புகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், கண்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று வெள்ளிக்கிழமை நீதிபதி கிருபாகரன் தலைமையினா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கண்காட்சி நடத்துவதற்கு 90 சதவீத ஏற்பாடுகள் முடிவடைந்துவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ப்பட்டுள்ளதால் திருப்பூர் சிக்கன்னா அரசு கலை கல்லூரியில் கண்காட்சி நடத்த தடை விதிக்க முடியாது.
மேலும் வரும் காலங்களில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொருட்காட்சி மற்றும் கண்காட்சி நடத்த தடை விதிப்பதாக அறிவித்த நீதிபதி, இதுகுறித்து அரசு விதிமுறைகள் வகுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் பதவி நியமனம் சார்பான வழக்கு- மறுஉத்தரவு வரும் வரை பதவி உயர்வை நிறுத்த வைக்க.மதுரை நீதிமன்றம் ஆணை!


Tamilnadu Open University-B.Ed & B.Ed (SE) Examination December 2017 Hall Tickets Published


கணினி அறிவியல் பாடம் 6வது தனி பாடமாக கொண்டுவர தமிழக அரசு SCERT மற்றும் பாடத்திட்டக் குழுக்கு பரிந்துரை!

கனமழை - 8 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு ( 01.12.2017)

* சென்னை மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* தேனி மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* தூத்துக்குடி மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
* நெல்லை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
* கன்னியாகுமரி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
*விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

வெள்ளி, 1 டிசம்பர், 2017

திறன் வளர்க்கும் கல்வியே வேண்டும்!!

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் சிறப்பு தற்செயல் விடுப்புக்கான அரசாணை.

டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு - அரசாணை


TET - அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு TETலிருந்து விலக்கு தர தமிழக அரசிடம் கோரிக்கை.

அரசு பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்தது போல பாரபட்சம் இல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் TETலிருந்து விலக்கு தர தமிழக அரசிடம் கோரிக்கை.

23/08/2010 க்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக முறையான கல்வித் தகுதிகளுடன் பல ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் அவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற நிபந்தனையும் தமிழகத்தில் சற்றே தாமதமாக வெளிவந்தது.
 RTE விதிப்படி அமைந்த அரசாணை 181 தமிழகத்தில் 15/11/2011 ல் வெளியிடப்பட்டது.
ஆசிரியர்கள் பணி நியமனம் மற்றும் TET கட்டாயம் ஆக்கப்படுதல் தொடர்பாக தாமதமாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும் செயல்முறைகள் அனுப்பப்பட்டு பின்னர் சம்மந்தப்பட்ட பள்ளிகள் வழியாக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆசிரியர்களுக்கும் பகிரப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை தமிழகம் முழுவதும் நான்கு TET தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டு உள்ளன.
இந்த இடைப்பட்ட காலங்களில் நீதிமன்றங்கள் வாயிலாகவும், அரசு உத்தரவு  வாயிலாகவும் பல ஆசிரியர்கள் TET லிருந்து முழு விலக்கு பெற்றனர்.
 அவர்களில்
1) 2010 மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து பணி நியமனம் பெற்றவர்கள்
2) 15/11/2011 க்கு முன்பு பணி நியமனம் பெற்றவர்கள்
3) அனைத்து வகை சிறுபான்மையினர் பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்கள் 
4) 15/11/2011 க்கு முன்பு CV முடித்து பிறகு பணி நியமனம் பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள்
-- உள்ளிட்ட 90% ஆசிரியர்களுக்கு TNTET லிருந்து முழுவதும் விலக்கு கொடுக்கப்பட்டு விட்டன. 
தற்போது மிகக் குறைந்த அளவிலான (சுமார் 10%) TET நிபந்தனை ஆசிரியர்கள் மட்டுமே தமிழகத்தில் மீதம் உள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு வேலைவாய்ப்பக பரிந்துரை, நாளிதழ் விளம்பரம், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்கள், பள்ளி நிர்வாக தகுதித் தேர்வுகள், இன சுழற்சி,  அரசின் அனுமதி போன்ற பலதரப்பட்ட நிலைகளைக் கடந்து வென்று பள்ளி நிர்வாகம் வாயிலாக பணி நியமனம் பெற்றவர்கள் ஆவர்.
இவர்களின் TET முழு விலக்கு தொடர்பாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுத்து இருந்தனர்.
பல்வேறு ஊடகங்கள் இவர்களின் துயரங்களை எடுத்துக் காட்டின.
இந்த நிலைக்கு தீர்வு கேட்டு பல முறை தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு கோரிக்கைகளை விடுத்தனர்.
இந்நிலையில் கடைசியாக TET நிபந்தனை ஆசிரியர்கள் ஒன்று கூடி மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சரை ஈரோடு மாவட்டம் சென்று மனு கொடுத்து உள்ளனர். அப்போது இது சார்ந்த கோப்புகள் ஏற்கெனவே மாண்புமிகு அமைச்சரின் கவனத்தில் உள்ளதாகவும், விரைவில் இதற்கு நல்ல தீர்வு கிடைக்க வழி செய்யப்படும் என கல்வி அமைச்சர் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
வளரூதியம், ஊக்க ஊதியம், பணிப்பதிவேடு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, பதவி உயர்வு போன்ற பல்வேறு தடைகளும் இந்த TET நிபந்தனைகளைக் காரணம் காட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்ட கல்வி அதிகாரிகள் நிறுத்தம் செய்துள்ளார்கள்.
தற்போது பரிந்துரைக்கப்பட்ட ஊதியக் குழுவில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்த இந்த வகை ஆசிரியர்களின் பணிபுரிந்த காலத்தை கருத்தில் எடுக்காமல் இந்த மாதம் பணியில் புதிதாக சேருபவர்களுக்கு தரப்படும் ஊதியம் மட்டுமே கொடுக்க தன்னிச்சையாக கல்வி அதிகாரிகள் முடிவுகள் எடுத்து செயல்படுத்தி உள்ளனர்.  இது இவர்களை மேலும் காயப்படுத்தும் செயலாக அமைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
அரசு பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளின் TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு முழுவதும் விலக்கு கொடுத்தது போல்  பாரபட்சமற்று அரசு உதவிபெறும் பள்ளி TET  நிபந்தனை ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு TET லிருந்து விலக்கு அளிக்கும் பட்சத்தில் (சுமார் 300 ஆசிரியர்கள் ) இவர்களின் வாழ்க்கை சிறக்கும் என்பது உண்மை.

பள்ளிக்கல்வி - பள்ளியின் மூத்த ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை - இயக்குனர் செயல்முறைகள்

கனமழை - 9 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு ( 01.12.2017)

* சென்னை மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* தேனி மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* தூத்துக்குடி மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
* நெல்லை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
* கன்னியாகுமரி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
*விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

DSE PROCEEDINGS - உலக எய்ட்ஸ் நாள் டிசம்பர் 1- பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உறுதிமொழி ஏற்கவும் இயக்குநர் செயல்முறைகள்

1330 திருக்குறளை ஒப்புவிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10000/- பரிசு - CEO செயல்முறைகள்..

DECEMBER 2017 | DIARY....

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு உரியது.
3.12.17- உலக இயலாக் குழந்தைகள் தினம்,
5.12.17- உலக மண் தினம்,
9.12.17- குறை தீர்க்கும் நாள்,
11.12.17- உலக மலைகள் தினம்,
18.12.17- முதல் 23.12.17 வரை,இரண்டாம் பருவத் தேர்வு .
24.12.17 முதல் 1.1.18 வரை - இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறை.
2.1.18- இரண்டாம் பருவத் தேர்வு முடிந்து மீண்டும் பள்ளி திறப்பு.

சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுத் தேர்வு வகுப்பில் 25% இட ஒதுக்கீடு கோரும் விண்ணப்பம்


வியாழன், 30 நவம்பர், 2017

இரண்டு நாட்கள் வான்வெளி அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி- ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கு பெற வாய்ப்பு

நேற்று 28-11-2017 இந்தியாவில் முதல்முறையாக Space Science technology gallery,  VITM Bangalore ல் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை மற்றும் கலை பண்பாட்டுத்துறையின் மூலம் திறந்து வைக்கப்பட்டது. இது குறித்த இரண்டு நாட்கள் வான்வெளி அறிவியல் தொழில்நுட்பம் குறித்த (Space Science and technology) Bangalore exposure education (BEE ) என்ற program Activity Educator நிறுவனம் மூலம் முதலில் பதிவு செய்யும் 20 கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சமுதாய நோக்கோடு, வணிக நோக்கம் இல்லாமல் செயல்படுத்த முன்வந்துள்ளது.
இந்த நிகழ்வின் மூலம் மாணவர்கள் அடையும் பயன்:
1. வான் அறிவியல் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச அளவிலான அறிவை பெற இயலும்
2. உலக அளவில் அதிக வேலை வாய்ப்பு, அதிக சம்பளம்,  மற்றும் மதிப்பு வாய்ந்த தங்களது மேற்படிப்பை Space Science and technology , Aviation, Astronant, Aerospace, Astronomy, Aeronautical, Astro Physics,  போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற உந்துதல் அடிப்படை அறிவு மற்றும் ஆர்வத்தை உண்டாக்கும்
3. கற்றலுக்கான சிறந்த விழிப்புணர்வு நிகழ்வாக இருக்கும்
4. சுய கற்றல் ஆர்வத்தை மேம்படுத்தும்
5ஆராய்ச்சி அறிவை ஊக்கப்படுத்தும்.
கல்வி நிறுவனங்கள் பெறும் பயன்:
1, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையுடன் தங்களது கல்வி நிறுவனத்தை இணைத்துக் கொள்ள முறையான பயிற்சிகள் வழங்கப்படும்
2. தங்களது கல்வி நிறுவனத்தில் அறிவியல் வள மையம் துவங்கி அதன் மூலம் தங்கள் பகுதியில் அறிவியல் விழிப்புணர்வு களப்பணி செயல் திட்டத்திற்கு மத்திய அரசின் அங்கீகார சான்று பெறுவதற்கும் தொடர்பணிக்கும் செயல் திட்டங்கள் கொடுப்பதன் மூலம் தங்களது நிறுவனம் நற்பெயர் ஈட்டும்
3 .உலகளாவிய அறிவியல் தொழில்நுட்பத்திற்கான அறிவு வளங்களை பகிர்ந்து கொள்ளும் அமைப்பாக செயல்பட வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள இயலும்.
4. மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பம், அறிவியல் பரப்புதல், அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இவற்றிற்காக தேசிய விருது பெறும் வாய்ப்பு உள்ளது.
பதிவு செய்ய விரும்பும் கல்வி நிறுவனங்கள் கீழ்கண்ட முகநூல் பக்கத்தில் இது குறித்த விபரங்களை காணலாம்.
www facebook.com/groups/ISCOPE
Email முகவரி indiaiscope@gmail.com
கைபேசி எண்: 7892898919

ஸ்டாம்ப்' சேகரித்தால், 'ஸ்காலர்ஷிப்'

'ஸ்டாம்ப்' சேகரிப்பில் ஆர்வமுள்ள, 40 மாணவர்களுக்கு, அஞ்சல் துறை சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு, டிச., 12க்குள்விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசின், 'தீன்தயாள் ஸ்பேர்ஸ் யோஜனா' திட்டத்தின் கீழ், அஞ்சல் துறை சார்பில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது.
இதன்படி, இந்தியா முழுவதும், அஞ்சல் தலை சேகரிப்பில் ஆர்வமுள்ள, ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில், 920 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு, மாதம், 500 ரூபாய் வீதம், ஆண்டிற்கு, 6,000 ரூபாய், உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதில், தமிழக மாணவர்கள், 40 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு, அஞ்சல் தலை சேகரிப்பு கணக்கு வைத்துமாணவர்கள், டிச., 12க்குள் விண்ணப்பிக்கலாம்.
இதையடுத்து, எழுத்து தேர்வு நடத்தப்படும். அதில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு, மற்றொரு, செயல் திட்டம் தரப்படும். அதை சிறப்பாக செயல்படுத்தும் மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படுவர். மேலும் விபரங்களை, tamilnadupost.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, தமிழக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

Flash News : கனமழை - 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ( 30.11.2017)

* புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.

* தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.
* திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.
* தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.
* நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.
கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.