புதன், 1 நவம்பர், 2017
ஆசிரியர் இடமாறுதலுக்கு புதிய கட்டுப்பாடுகள்
தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களை, நிர்வாக காரணங்களில் மாற்றுவதற்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, மே மாதம் கோடை விடுமுறையின்போது, பொது கவுன்சிலிங் முறையில், விருப்ப இடமாறுதல் வழங்கப்படுகிறது.
மற்ற மாதங்களில், விருப்ப இடமாறுதல் வழங்குவது கிடையாது. அதேநேரம், நிர்வாக காரணங்களால், ஆசிரியர்கள் இடம் மாற்றப்படுகின்றனர்.இந்த மாறுதலில், புதிய விதிகள் ஏற்படுத்த, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் ஆகியோர், தமிழக அரசுக்கு கடிதம் எழுதினர்.
மற்ற மாதங்களில், விருப்ப இடமாறுதல் வழங்குவது கிடையாது. அதேநேரம், நிர்வாக காரணங்களால், ஆசிரியர்கள் இடம் மாற்றப்படுகின்றனர்.இந்த மாறுதலில், புதிய விதிகள் ஏற்படுத்த, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் ஆகியோர், தமிழக அரசுக்கு கடிதம் எழுதினர்.
அதை, பள்ளிக் கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் ஏற்று, புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதன்படி, 'நிர்வாக மாறுதல்களை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அல்லது மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.'கடுமையான புகார்கள்,ஒழுங்கு நடவடிக்கை போன்ற நிர்வாக காரணங்களால், மாறுதல் வழங்கலாம்.
நிர்வாக மாறுதல்களை பொறுத்தவரை, முதல் மற்றும் இரண்டாம் பருவ தேர்வு விடுமுறை காலங்களில் மட்டும், வழங்க வேண்டும். மற்ற நேரங்களில் மாற்றினால், மாணவர்களின் கற்றல் பணி பாதிக்கும். இதை, அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும்' என,பள்ளிக் கல்வி முதன்மை செயலர் அறிவித்துள்ளார்.
TNTET - தாள் 2 சான்றிதழ் சரிபார்ப்பில் 292 பேர் பங்கேற்கவில்லை.
மதுரையில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிலும் 292 பேர் பங்கேற்கவில்லை.
ஜூலை 24 முதல் 28 வரை மதுரையில் நடந்த முதற்கட்ட சரிபார்ப்பில் 623 பேர்பங்கேற்கவில்லை. அவர்கள் சான்றிதழை இரண்டாம் கட்டமாகசரிபார்க்க அக்., கடைசி வாரத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதன்படி முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, தொடக்க கல்வி அலுவலர் ஜெயபால் முன்னிலையில் சரிபார்ப்பு பணி நடந்தது. இதில் 331 பேர் மட்டும் பங்கேற்றனர்.
ஜூலை 24 முதல் 28 வரை மதுரையில் நடந்த முதற்கட்ட சரிபார்ப்பில் 623 பேர்பங்கேற்கவில்லை. அவர்கள் சான்றிதழை இரண்டாம் கட்டமாகசரிபார்க்க அக்., கடைசி வாரத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதன்படி முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, தொடக்க கல்வி அலுவலர் ஜெயபால் முன்னிலையில் சரிபார்ப்பு பணி நடந்தது. இதில் 331 பேர் மட்டும் பங்கேற்றனர்.
ஆஹா வந்தாச்சு: வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்!
வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக
எதிர்பார்க்கப்பட்ட, அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் அம்சம் (Delete for Everyone) தற்போது வெளியாகியுள்ளது.
இந்தச் செயலியினை ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஆப்பிளின் ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களுக்கும் இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் ஒரு தனி நபருக்கோ அல்லது குரூப்புக்கோ தவறாக அனுப்பிய மெசேஜ்களை இதன்மூலம் Delete செய்து கொள்ளலாம். இந்தச் சேவையைப் பயன்படுத்த மெசேஜ் அனுப்புபவர் வாட்ஸ்அப்பின் அப்டேட் செய்யப்பட்ட வெர்சனைப் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் GIF, குறுந்தகவல்கள், புகைப்படங்கள், வாய்ஸ் மெசேஜ், லொகேஷன், காண்டாக்ட்ஸ் ஆகியவற்றை உடனடியாக அழித்துக் கொள்ள முடியும்.
இந்த அம்சம் எவ்வாறு வேலை செய்கிறது?
வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜை அழிக்க, அந்த மெசேஜை Long Press செய்ய வேண்டும். அப்போது ‘Delete For Me’, ‘Delete For Everyone’ என்ற Option உங்கள் முன் தோன்றும். அதில் ‘Delete For Everyone’ Option-ஐ Click செய்யும்போது குறிப்பிட்ட மெசேஜ் அழிக்கப்பட்டு, வாட்ஸ்அப் சார்பில் ஃபேக் காப்பி மெசேஜ் மட்டுமே அனுப்புநருக்குச் சென்றடையும். ஆனால் Broadcast பட்டியலில் அனுப்பப்பட்ட மெசேஜ்களை அழிக்க முடியாது.
மெசேஜ் அனுப்பிய 7 நிமிடங்களுக்குள் மட்டுமே இந்த வழிமுறையைப் பயன்படுத்த முடியும். இந்த அம்சம் சிம்பயான் Operating System கொண்டு இயங்கும் சாதனங்களில் வேலை செய்யாது
பிளஸ் 2 துணைத்தேர்வு இன்று,(31..10..2017) 'ரிசல்ட்'
பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகின்றன. அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு, செப்டம்பரில் நடந்த துணை தேர்வு முடிவுகள், இன்று பிற்பகலில் வெளியிடப்படுகின்றன. தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும், நவ.,2 முதல், நவ., 4 வரை, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
TNPSC நடத்திய நான்கு தேர்வுகளுக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு!!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், நான்கு போட்டி
தேர்வுகளுக்கு, நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியில், 24 காலியிடங்களுக்கு, 2013ல் தேர்வு நடந்தது. இதில், 51 பேருக்கு, வரும், 30ம் தேதி நேர்காணல் நடக்க உள்ளதுதடய அறிவியல் துறையில், இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கு, 30 காலியிடங் களுக்கு, 2016ல் தேர்வு நடந்தது. இதில் தேர்வு பெற்ற, 66 பேருக்கு, அக்., 25ல் நேர்காணல் தேர்வு நடக்கும்கைத்தறி துறை உதவி இயக்குனர் பணிக்கு, 14இடங்களுக்கு, இந்த ஆண்டு ஏப்ரலில், தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 12 பேருக்கு, வரும், 26ம் தேதி நேர்காணல் நடக்கும்சிறை அதிகாரி பணியில், ஆறு இடங்களுக்கு, இந்த ஆண்டு ஏப்ரலில் தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி பெற்ற, 18 பேருக்கு, 27ம் தேதி நேர்காணல் நடக்கும்புவியியலாளர், உதவி புவியியலாளர் பணியில், 53 இடங்களுக்கு, 2016 ஜூனில் தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி பெற்ற, 141 பேருக்கு, அடுத்த மாதம், 6,7ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்..
அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதியம்- உத்தரவு
அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், ஊதிய உயர்வை அறிவித்த தமிழக அரசு, அக்டோபர், முதல் நடைமுறைக்கு வரும் என, அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, ஊதிய உயர்வு வழங்குவதற்கான பணிகள் துவங்கின.
இந்நிலையில், நிதித்துறை செயலர், சண்முகம் நேற்று வெளியிட்ட உத்தரவில், 'அரசு ஊழியர்களுக்கு, நவம்பருக்கான ஊதியம், புதிய ஊதிய உயர்வுக்கேற்ப வழங்கப்படும். அத்துடன், அக்டோபருக்கான நிலுவை தொகையை சேர்த்து வழங்க, துறைத்தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
கனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (31.10..2017)விடுமுறை!!
* விழுப்புரம் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை
* சென்னை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை
* திருவள்ளூர் மாவட்டத்திற்கு பள்ளிளுக்கு விடுமுறை
* நாகை மாவட்டத்திற்கு பள்ளிளுக்கு விடுமுறை
* கடலூர் மாவட்டத்தில் ஒன்பது ஒன்றிய பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* காரைக்கால் மற்றும் புதுச்சேரி - அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
* காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
*தஞ்சாவூர் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
*திருவாரூர் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
டெங்கு ஒழிப்பில் அலட்சியம் : தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்'
ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், டெங்கு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கதிரவன், சுகாதாரம் கடைபிடிக்காத பள்ளி தலைமை ஆசிரியையை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், நேற்று காலை, இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி வர தாமதமானதால், முன்னதாக வந்த கலெக்டர் கதிரவன், பள்ளியில் டெங்கு ஒழிப்பு ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளியின் கழிப்பறை, நீர்த்தேக்க தொட்டி மற்றும் மொட்டை மாடியில் ஆய்வு செய்தார். பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால், மாணவ, மாணவியருக்கு டெங்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை இருந்தது.
பள்ளியை சுகாதாரமாக வைக்க தவறிய தலைமை ஆசிரியை லதாவை, சஸ்பெண்ட் செய்யுமாறு, கலெக்டர் உத்தரவிட்டார். இதேபோல், டெங்கு ஒழிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளாத நகராட்சி சுகாதார ஆய்வாளர் சந்திரகுமாரும், கலெக்டர் உத்தரவுப்படி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)