>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 14 அக்டோபர், 2017

₹437 கோடிசெலவில் அனைத்து பள்ளிகளும் கம்ப்யூட்டர் மயம்: செங்கோட்டையன் உறுதி

கோபியில் நேற்று நடந்த ஒரு விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  பேசியதாவது:
கோபியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் 32 மாவட்ட தலைநகரங்களிலும், அரசின் சார்பில் ₹2 கோடியே 17 லட்சம் செலவில் உயர் கல்வி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் தொடங்கப்படும்.    பாடத்திட்ட மாற்றத்தினால், பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம் கிடைக்கும். 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்படும். ₹437 கோடி செலவில் அனைத்து பள்ளிகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.
இந்த பயிற்சி மையத்தில் வாரத்திற்கு இரண்டு நாள் பயிற்சி வழங்கப்படும். அதன் பின் பயிற்சி பெறுபவர்கள் தேவையான பயிற்சியை வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கல்வி மாற்றத்தினால், பிற மாநிலங்களில் இருந்து அதிகமான மாணவர்கள் தமிழகத்திற்கு கல்வி கற்க வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இதைத்தொடர்ந்து நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்தஅமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, கற்கும் பாரத திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் வரவில்லை என்பது எனது பார்வைக்கு இப்போதுதான் வந்துள்ளது. உடனடியாக அவர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

JACTTO-GEO : இடைநிலை ஆசிரியர் ஊதியம் & 21 மாத நிலுவையை வழங்க அக்.23 வரை அரசிற்குக் கெடு

நேற்று (13.10.17) சென்னையில் கூடிய JACTTO-GEO உயர்மட்டக்குழுவின் அவசரக் கூட்டத்தில் 'தமிழக அரசின் ஊதிய மாற்ற அறிவிப்பு 2017' பற்றி விவாதிக்கப்பட்டது. 

☀JACTTO-GEO-வின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றான, 
☀இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு நீங்கிய ஊதிய மாற்றத்தை நடைமுறைப்படுத்துதல் பற்றிய கோரிக்கையை அரசு பொருட்படுத்தாது,
☀21 மாத ஊதிய நிலுவையை வழங்காமல் ஊழியர்களின் ஊதியத்தைப் பறித்துக் கொண்ட ஏமாற்று வேலையைக் கண்டித்து, 
*☀அக்டோபர் 20 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் ஊதியக்குழு முரண்பாடுகள் & அரசின் ஏமாற்றுக் குணத்தை விளக்கிக் கண்டனக் கூட்டம்* நடத்துதல் என்றும், 
☀அடுத்தகட்ட நீதி மன்ற விசாரணை நாளுக்குள் ( *23.10.2017-ற்குள்* ), 
*☀இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண் உட்பட அனைத்து முரண்பாடுகளையும் நீக்கி* 
*☀21 மாத ஊதிய நிலுவையை வழங்காவிட்டால்,*
*☀24.10.2017-ல்* நடைபெறும் ஜேக்டோ-ஜியோவின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் *அடுத்த கட்டப் போராட்ட நடவடிக்கை*யை இறுதி செய்வது என்றும் முடிவாற்றப்பட்டுள்ளது. 

SCERT-தமிழகபள்ளிக்கலைத்திருவிழா (கலையருவி திட்டம் ) - 2017 - 18 ஆம் கல்வி ஆண்டு முதலாக போட்டிகளை பல்வேறு நிலைகளில் நடத்துதல் - அரசாணை மற்றும் நெறிமுறைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு!!



வெள்ளி, 13 அக்டோபர், 2017

கணினி ஆசிரியர்கள் காலியிடங்களை சேகரிக்கும் கல்வித்துறை : விரைவில் பணி நியமனம் செய்யப்பட வாய்ப்பு...

G.O No. 302 Dt: October 11, 2017-Ad-hoc Increase – CONSOLIDATED PAY / FIXED PAY / HONORARIUM – Employees drawing revised Consolidated Pay / Fixed Pay / Honorarium - Ad-hoc Increase from 01.07.2017 - Orders - Issued


TNTET - 2013 இல் காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு பணி - Video

புதன், 11 அக்டோபர், 2017

ஒரு நாள் பள்ளிக்கு வந்தால் 100 ரூபாய் உதவித்தொகை!!!

இலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களினால் பள்ளிக்கூடம் செல்லாத 
மாணவர்களுக்கு மாதம்தோறும் சிறப்பு கொடுப்பணவு வழங்குவது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் கவனம் செலுத்தி வருகின்றது.
அடுத்த வருடம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் ஊடாக மாணவர்கள் இடை விலகல் தடுக்கப்படுவது மட்டுமன்றி, அவர்களின் கல்வி ஆர்வத்தையும் அதிகரிக்க முடியும் என கல்வி அமைச்சகம் எதிர்பார்க்கின்றது.
இந்தத் திட்டத்தின் கீழ் பள்ளிக்கூடத்திற்கு சமூகமளிக்கும் நாளொன்றுக்கு ரூபாய் 100 வீதம் மாதந்திரக் கொடுப்பணவு வழங்குவது தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறுகின்றார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கையில் தற்போது 5 முதல்17 வரை பள்ளிக் கல்வி பெறுவதற்கான வயதாகும். அடுத்த ஆண்டு 5 முதல் 19 வரை வயதை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் அரச மற்றும் தனியார் பள்ளிகளில் சுமார் 45 லட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் இலவசப் பாட நூல்கள், சீருடை, சத்துணவு மற்றும் மருத்துவக் காப்புறுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்த வசதிகள் மற்றும் சலுகைகள் கிடைத்தும் பள்ளி செல்லக்கூடிய வயதுடைய 4,52,661 பேர் பள்ளிக்கூடம் செல்வதில்லை என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 51,249 பேர் இதுவரை ஒரு நாள் கூட பள்ளிக்கூடம் செல்லாதவர்கள் என கூறப்படுகின்றது.
கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் " மாணவர் வரவுக்கு ரூபாய் 100 என்ற இந்த யோசனை அவசியமற்றது" என கூறுகின்றது.
"அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தல்களை மையப்படுத்திய இந்த யோசனை முன் வைக்கப்படுகின்றது" என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் குற்றம் சாட்டுகின்றார்.
இலங்கையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 45 இலட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்
"கல்வியில் சம வாயப்பு மற்றும் பாகுபாடு இன்றி பள்ளிக்கூடங்கள் அபிவிருத்தி செய்யப்படுவது பற்றித்தான் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.
இந்த யோசனையை "மாணவர்களின் வரவுக்கு கொடுக்கும் லஞ்சம் "என விமர்சிக்கின்றார் ஓய்வு பெற்ற பள்ளிக்கூட அதிபரான சிதம்பரபிள்ளை நவரெத்தினம்.
"இந்த யோசனை பாடசாலை நிர்வாகத்தையும் பெற்றோரையும் தவறாக வழி நடத்தும். பெற்றோர் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவது போன்று அனுப்புவார்கள். மாணவர்கள் வரவு பதிவு செய்யும் சந்தர்ப்பத்தில் பள்ளிக்கூடங்களில் நிர்வாக முறைகேடுகளுக்கும் வாய்ப்பு உண்டு" என்று அவர் கூறுகிறார்.
"இடை விலகல் மற்றும் பாடசாலை செல்லாத மாணவர்களை இனம் கண்டு இணைத்துக் கொள்வதற்காக பிரதேச ரீதியாக சிறப்புப் பாடசாலைகள் அமைக்கப்பட்டு இலவச உணவு மற்றும் தங்குமிட வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுப்பது தான் பொருத்தமான தீர்வாக இருக்கும்" என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

முழு உடல் பரிசோதனை செய்தால் Income tax ல் 80D ல் 5000 க்கு மிகாமல் கழித்து கொள்ளலாம்.Source தினமணி

தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு!!

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 20-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. 25-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும்.இவ்வாண்டு கந்த சஷ்டி விழா அக்.20-ம் தேதி தொடங்குகிறது. 
அன்று காலை 6 மணிக்கு யாகசாலைக்குஅருள்மிகு ஜெயந்திநாதர் எழுந்தருள்கிறார். தொடர்ந்து யாகசாலை பூஜை தொடங்குகிறது. 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படும். 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.இக்கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
அக்டோபர் 26-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு சுவாமி, அம்பாள் மாலை மாற்று விழாவும், இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு வரும் 25ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

இன்ஜி., கல்லூரி அங்கீகாரம் : நவம்பரில் புதிய விதிகள்

இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் வழங்குவது தொடர்பான புதிய விதிகள், நவம்பரில் வெளியாக உள்ளன. மத்திய அரசின், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., கட்டுப்பாட்டில், இன்ஜி., கல்லுாரிகள் செயல்படுகின்றன.
கல்லுாரிகளின் உட்கட்டமைப்பு, நுாலக, ஆய்வக வசதிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, கல்வித்தகுதி, கல்லுாரிகளின் இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில், அங்கீகாரம் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும், இன்ஜி., கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் புதுப்பிக்கப்பட வேண்டியது கட்டாயம். என்.பி.ஏ., எனப்படும், தேசிய தர அமைப்பின் அனுமதி பெற்ற கல்லுாரிகள் மட்டும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, அங்கீகாரத்தை புதுப்பிக்கலாம். இந்நிலையில், வரும் கல்வியாண்டில், இன்ஜி., கல்லுாரிகளின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கான விதிகள், நவ., இறுதியில் அல்லது டிச., முதல் வாரத்தில், ஏ.ஐ.சி.டி.இ.,யால் வெளியிடப்பட உள்ளன. அடுத்த ஆண்டுக்கான விதிகளில், பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ஒவ்வொரு கல்லுாரியும், தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையம் ஏற்படுத்த வேண்டும்; தொழிலக பயிற்சியை அதிகப்படுத்த வேண்டும்; திறன்சார் பயிற்சிகளை, மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் போன்ற விதிகள் இருக்கலாம். புதிய விதிகள் குறித்து, உயர்மட்டக் குழு இறுதி ஆய்வு செய்வதாக, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர், அனில் தத்தாத்ரேயா சகஸ்ரபுதே தெரிவித்து உள்ளார்.

டெங்கு குறித்த அச்சம் அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' என, கோரிக்கை

மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் மாணவ - மாணவியர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக, சுகாதார துறை எடுத்த கணக்கெடுப்பில், தெரிய வந்துள்ளது.தமிழகத்தில், 'டெங்கு' காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், டெங்குவால் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் சிகிச்சையில் உள்ளனர். அதில், 5௦ சதவீதம் மாணவ - மாணவியர். அதனால், பள்ளிகளில், டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.அப்போது, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், பள்ளிக்கு வராமல் இருந்தது தெரிய வந்துள்ளது. ஒரு பள்ளிக்கு சராசரியாக, இரண்டு பேர் வீதம், ஒரு லட்சம் பேர் வரை, காய்ச்சல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அதனால், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலை, உள்ளாட்சி அமைப்புகள் சேகரிக்க, மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டு உள்ளன. அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை :
'டெங்கு குறித்த அச்சம் அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.காய்ச்சல் காரணமாக, பள்ளி, கல்லுாரிக்கு வரும் மாணவ - மாணவியரின் எண்ணிக்கை சரிந்துள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், 10 முதல், 40 சதவீதம் மாணவ - மாணவியரும், கல்லுாரிகளில், 10 முதல், 20 சதவீத மாணவ - மாணவியரும் விடுப்பு எடுத்துள்ளனர்.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால், ஒரு வாரம் அல்லது, 10 நாள் வரை, மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. பள்ளி சென்று, காய்ச்சலுடன் ஓரிரு மாணவர்கள் வீடு திரும்பினால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், அந்த பயத்தில், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. ஆயினும், பள்ளியில் பாடம் நடத்துவதை தள்ளிப் போட முடியாது. பள்ளிக்கு வராதவர்கள், பாடத்தை கவனிக்க முடியாமல் போகிறது.
இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.'தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் தாக்கம் நாளுக்கு நாள்அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரின் நலன் கருதி, விடுமுறை அறிவிக்க அரசு முன்வர வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

செவ்வாய், 3 அக்டோபர், 2017

தமிழகத்தில் 20 லட்சம் மாணவர்களுக்கு கற்றலில் குறைபாடு'

தமிழகத்தில் 20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கற்றலில் குறைபாட்டால் (டிஸ்லெக்ஸியா) பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சிறப்புப் பயிற்சியாளர் ஹரிணி மோகன் கூறினார்.
மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கம் மற்றும் சென்னை தெற்கு ரோட்டரி சங்கம் இணைந்து கற்றலில் குறைபாடு வார விழாவை திங்கள்கிழமை தொடங்கின. அக். 7-ஆம் தேதி வரை நடைபெறும் நிகழ்வுகளில் கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்கான ஓவியம், நெருப்பில்லாத சமையல், கோலம், கழிவுப் பொருள்களில் இருந்து கலை, நாடகம், இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. இரண்டாவது ஆண்டாக இந்நிகழ்வுகள் சென்னை, கோவை, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றன. 
இது தொடர்பாக மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தைச் சேர்ந்த கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சியாளர் ஹரிணி மோகன் கூறியது: தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் 2 கோடி மாணவர்களில் சுமார் 20 லட்சம் பேருக்கு கற்றலில் குறைபாடு காணப்படும் வாய்ப்புள்ளது. அதாவது 40 பள்ளி மாணவர்கள் உள்ள வகுப்பில் 4 அல்லது 5 பேருக்கு இந்தக் குறைபாடு காணப்படும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிகளில் இடைநிற்றல் அதிகமாவதற்கு கற்றலில் குறைபாடும் முக்கியக் காரணமாகும் என்றார் அவர்.
மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத் தலைவர் டி.சந்திரசேகர் கூறியது: கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு புத்திக்கூர்மை அதிகமாகக் காணப்படும். ஆனால் வாசித்தல், எழுதுதல், கணக்குப் போடுதல் போன்ற விஷயங்களில் சிரமப்பட்டாலும், இசை, ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட பிற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். ஆனால் படிப்பில் மதிப்பெண் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக பிற துறைகளில் அவர்களுக்கு உள்ள திறமை ஊக்குவிக்கப்படுவதில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் அந்தக் குழந்தைகளின் திறமைகளை வெளியே கொண்டு வருவதற்கு வாய்ப்பாக அமையும்.

1,600 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலையாக தரம் உயர்வு

அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 1,600 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், முதுநிலை பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டுஉள்ளன.தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அடிப்படையில், மாணவர்கள், ஆசிரியர் விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது.

இதன்படி, ஆகஸ்ட், ௩௧, நிலவரப்படி, அரசு உயர்நிலை பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், ௧,௬௦௦ பட்டதாரி ஆசிரியர் இடங்கள் உபரியாக கண்டறியப்பட்டு உள்ளன. எனவே, உபரியாகஉள்ள இந்த ஆசிரியர்கள், தேவைப்படும் மேல்நிலை பள்ளிகளுக்கு முதுநிலை பணியிடங்களில் நிரப்பப்பட உள்ளனர். இதற்காக, 1,600 புதிய முதுநிலை பணியிடங்கள்உருவாக்கப்பட்டுள்ளன.இதன்படி, தமிழ், 180; கணிதம், 121; இயற்பியல், 241; வேதியியல், 247; உயிரியல், 33; தாவரவியல், 96; வரலாறு, 91; பொருளியல், 208; வணிகவியல், 383 இடங்கள் என, 1,600 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் மாண்புமிகு தமிழகத் துணை முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து -மனு

மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,

மாண்புமிகு அமைச்சர்  திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள்,
பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு மற்றும்
இளைஞர் நலத்துறை அமைச்சர்
தமிழ்நாடு.
தமிழக அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை சர்வதேச கல்வித் தரத்திற்கு இணையாக கொண்டு செல்லும் முழு முயற்சியாக கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பக் கல்வியை 3 முதல் 10 வகுப்பு வரை கொண்டு வருவதாக அரசின் கொள்கை முடிவில் கூறப்பட்டுள்ளது. 
இதனைக் கொண்டுவந்தமைக்காக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் , உயர்திரு பள்ளிக்கல்வி செயலாளர் அவர்கள், பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் அவர்களுக்கும், 40,000-கும் மேற்பட்ட பி.எட்., கணினி ஆசிரியர்கள் சார்பிலும், தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பிலும்,  அரசு பள்ளிகளில் பயிலும் கோடிக்கணக்கான ஏழை, எளிய மாணவர்களின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
வாழ்வாதார கோரிக்கைகள்...
1) அண்டை மாநிலங்களில் உள்ளது போல், அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நிகழ் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே ஆறாவது கட்டாயப் பாடமாக பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
2) புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகும் கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு முறையாக பயிற்றுவிக்க பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும்.

 3) கணினி இன்றியமையாத இன்றைய சூழலில் தொடக்க (1-5), நடுநிலை (6-8), உயர்நிலை (9-10), மேல்நிலை (11-12) பள்ளிகளுக்கு குறைந்தது ஒரு பி.எட். படித்த கணினி ஆசிரியரை தமிழக அரசு நியமனம் செய்திட வேண்டும்.
 அரசு பள்ளிகளில் கணினி  அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால், தமிழகத்தில் வாழும் கோடிக்கணக்கான கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவதுடன், கணினி அறிவியலில் பி.எட்., பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கான வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெறுவர்.
கணினி அறிவியலின் முன்னேற்றத்திற்காக நீண்ட வருடங்களாக போராடிக்கொண்டிருக்கும் எங்களுடைய வாழ்வாதாரக் கோரிக்கைகளை தாங்கள் கனிவுடன் பரிசீலனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
வெ.குமரேசன்,
9626545446 ,
மாநிலப் பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.

திருவண்ணாமலை மாவட்ட அனைத்து தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளிகளும் முதல் பருவ திருத்திய விடைத்தாளை அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவு

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

புது முக முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!

அக்டோபர் 3 ம் தேதி பள்ளி செல்லும் போது கையில் வைத்துக் கொள்ளுங்கள்

1. வங்கி கணக்கு புத்தகம் மற்றும் நகல்
2. பாஸ்போர்ட் போட்டோ   4  copies
(CPS நம்பர்   Online la apply செய்வதற்கு,
பணிப்பதிவேட்டிற்கு,
Health Fund apply செய்வதற்கு)
3. ஆதார் கார்டு மற்றும் நகல்
4. குடும்பத்தினர் பாஸ்போர்ட் போட்டோ
5.  பான் கார்டு மற்றும் நகல்
6. பணிப் பதிவேடு  (Binding செய்தால் மிக நல்லது )
7.அனைத்து ஒரிஜினல் படிப்புச் சான்றிதழ்கள் மற்றும் நகல்கள்
Offline னில்   செப்டம்பர் மாதத்தில் 9 நாட்கள் ஊதியத்தை அக்டோபர் 15 ம் தேதிக்குள் பெறலாம்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டுபிடிக்க ஆன்லைனில் தேர்வுத்துறை வசதி

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சான்றிதழ்களில் போலியை கண்டுபிடிக்க, அரசு தேர்வுத்துறை புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும், ௪௫ ஆயிரம் பள்ளிகளில், ௩.௫௦ லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ௧௦ ஆண்டுகளுக்கு முன், பலர் போலி சான்றிதழ்களை கொடுத்து, பணியில் சேர்ந்ததை, பள்ளிக் கல்வித் துறை, ஓராண்டுக்கு முன் கண்டுபிடித்தது.
இதையடுத்து, பணியில் உள்ளோர், புதிதாக சேரும் ஆசிரியர்கள், ஊழியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணி துவங்கியது. மாவட்ட அலுவலகங்களில் இருந்து, சான்றிதழ் நகல்கள், சென்னையில் உள்ள தேர்வுத்துறைக்கு அனுப்பப்படும். தேர்வுத்துறை அதிகாரிகள், அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்குவர்.
இந்த நடைமுறையால், லட்சக்கணக்கான ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதில் இழுபறி நிலை உள்ளது. கால தாமதத்தை தவிர்க்கும் வகையில், சான்றிதழ்களின் விபரங்கள், ஆன்லைனில் தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதற்கான பயன்பாட்டாளர் அடையாள எண் மற்றும் ரகசிய குறியீடு எண், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்த குறியீட்டை பயன்படுத்தி, மாவட்ட அதிகாரிகள் அலுவலகத்திலேயே, சான்றிதழ்களை சரிபார்த்து கொள்ளலாம் என, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவுறுத்தி உள்ளார். 
இந்த புதிய முறையால், மாவட்ட வாரியாக, போலி சான்றிதழ் காட்டி பணிக்கு வந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு 
உள்ளது