சனி, 12 ஆகஸ்ட், 2017
ஆகஸ்ட் 17ல் எம்பிபிஎஸ் கலந்தாய்வு?... நீட் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையா?
சென்னை : எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இதன காரணமாக பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நீட் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. ஆனால் நீட் தேர்வு கேள்விகளில் தமிழ் மொழியில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் நீட் முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்தது.
தோல்வியில் முடிந்த முயற்சிகள்
ஆனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சிபிஎஸ்இ நீட் முடிவுகளை அறிவித்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தொடர்ந்து தமிழக அரசு மத்திய அரசிடம் மன்றாடி வருகிறது. இதுவரை தமிழகத்திற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. மேலும் மாநில பாடத் திட்டத்தில் படித்தோருக்கான 85 சதவீத் உள் இடஒதுக்கீடு அளித்து பிறப்பித்த அரசாணைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17ல் கலந்தாய்வு?
பொறியியல் கலந்தாய்வு இன்றோடு நடத்தி முடிக்கப்படும் நிலையில் இரண்டாம் கட்ட துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ கலந்தாய்வு ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ கலந்தாய்வை வழக்கமான முறையில் நடத்த அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியைத் தழுவிய நிலையில் நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
தரவரிசைப் பட்டியல்
மருத்துவ மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தரவரிசைப் பட்டியல் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அது தள்ளிப் போனது நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
களக்கத்தில் மாணவர்கள்
நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்துவிடும், தங்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருந்தனர் கிராமப்புற மாணவர்கள். ஆனால் அவர்களது எண்ணத்தில் பேரிடியை இறக்கியுள்ளது இந்தத் தகவல்.
30% கீழ் சேர்க்கை நடைபெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ அதிரடி முடிவு
புதுடெல்லி: 30 சதவகிதத்துக்கும் கீழ் சேர்க்கை நடைபெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் குறைவாக சேர்க்கை நடந்துள்ள கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(ஏஐசிடிஇ) முடிவு செய்துள்ளது
என்று அதன் தலைவர் அனில் டி.சாஸ்ரபுத்தே தகவல் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் மூட முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கான அபராத தொகை குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள 10,361 பொறியியல் கல்லூரிகளில் 27லட்சம் காலியிடங்கள் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்யக் கூடாது: உயர் நீதிமன்றம்..
பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்யக் கூடாது: உயர் நீதிமன்றம்
தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், தமிழக மாநிலப் பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியக்கும் குழுவில் இடம்பெற்றிருக்கும் யாரையும் இடமாற்றம் செய்யக் கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும் வகையில் பல அதிரடி நடவடிக்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் பணியிட மாற்றம் செய்யப்படுவார் என்ற தவல்கள் வெளியான நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
10ம் வகுப்பு மாணவர் ஒருவரின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த பொது நலன் வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராமலிங்கம் தாக்கல் செய்த மனுவில், என் மகன் அடுத்த ஆண்டு 11ம் வகுப்புக்கு செல்லவிருக்கிறார். எனவே அவர் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். அதற்கான முயற்சியாக வலுவான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் வரை பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் குழுக்களை நீதிமன்ற கண்காணிப்பில் இயக்க வேண்டும் என்றும், அதில் இடம்பெறும் யாரையும் பணியிட மாற்றம் செய்யக் கூடாது என உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் விளக்கம் அளிக்கும் வகையில், வழக்கு ஆகஸ்ட் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அப்போது உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கப்பட்ட இரண்டு குழுக்களில் இடம்பெற்றிருக்கும் எந்த அதிகாரியையும் பணியிடமாற்றம் செய்யக் கூடாது என்று கூறினார்.
அப்போது, பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை பணியிட மாற்றம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் குற்றம்சாட்டினார்.
இதைக் கேட்ட நீதிபதி, பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கும் குழுக்கள் அளிக்கும் பரிந்துரையை அவர்தான் செயல்படுத்தும் பொறுப்பில் இருப்பதாகவும், குழுக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வாய்ப்பை செயலருக்கு வழங்கும் வகையில் அரசு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கும் பணி முடியும் வரை அவரை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
தனியார் பள்ளிகளின் அழுத்தம் காரணமாக பள்ளிக் கல்வித் துறை செயலர் பணியிட மாற்றம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், பொது நலன் வழக்கில் இந்த தீர்ப்பு வெளியாகியிருப்பது சமூக ஆர்வலர்களால் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் நவ. 5ல் தேசிய திறனறி தேர்வு...
தமிழகத்தில் நவ. 5ல் தேசிய திறனறி தேர்வு
ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கும், தேசிய திறனறி தேர்வு, தமிழகத்தில், நவ., 5ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு,
மத்திய அரசின் சார்பில் ஆண்டு தோறும், மாநில மற்றும் தேசிய அளவிலான திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய அளவில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.இந்த ஆண்டுக்கான தேர்வு, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், நவ., 5ல் தேர்வு நடக்க உள்ளது. மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, அந்தமான் - நிகோபார் தீவுகள் போன்றவற்றில் மட்டும், நவ., 4ல் தேர்வு நடக்கும் என, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
RTE - இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டணம் நிர்ணயம் அரசாணை வெளியீடு.
RTE - இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டணம் நிர்ணயம் அரசாணை வெளியீடு.
இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009-ன்படி, மலைப்பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும், மற்ற பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் கட்டணச் செலவை நிர்ணயித்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மலைப்பகுதியைச் சேர்ந்த முதல் வகுப்பு குழந்தைகளுக்கு ரூ.25 ஆயிரத்து 385 (மற்ற பகுதியைச் சேர்ந்த முதல் வகுப்பு குழந்தைக்கு ரூ.25 ஆயிரத்து 155) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் வகுப்பில் இருந்து 8-ம் வகுப்பு குழந்தைகள் வரை, ரூ.25 ஆயிரத்து 155-ல் இருந்து ரூ.33 ஆயிரத்து431 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை செயலாளர் டி.உதயச்சந்திரன் பிறப்பித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் விதத்தில் மாணவர்கள் கையேடு (டைரி) வெளியிட்டு அசத்தல்...
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் சாதனை படைக்க முயற்சித்து வருகின்றன.ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 352 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமையாசிரியர், 3 பட்டதாரி ஆசிரியர்கள், 7 இடைநிலை ஆசிரியர்கள், 3 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இப்பள்ளி ஆசிரியர் செந்தில்நாதன் இப்பள்ளியில் பல புதுமைகளை புகுத்தி வருகிறார்.
4 டி தொழில் நுட்பம்: இங்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வழங்கப்பட்டுள்ள லேப்டாப், புரொஜக்டர் மூலம் மாணவர்களுக்கு '4 டி' தொழில் நுட்பத்தில் கல்வி கற்பித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.மாணவர் கையேடு: மெட்ரிக் பள்ளிகளில் வழங்கப்படும் மாணவர் கையேட்டை போன்று இப்பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்தார். இதன் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக மாணவர்களுக்கு கையேடு வழங்கப்பட்டு வருகிறது.
முதலில் கடைகளில் கிடைக்கும் மாணவர்கள் கையேட்டை வழங்கி வந்தனர். தற்போது
பள்ளி விபரங்களுடன் வெளியிட செந்தில் நாதன் முயற்சி எடுத்துள்ளார்.
பெற்றோர் ஒத்துழைப்பு: பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அமீன் மாலிக் உசேன், கிராம கல்விக்குழுத்தலைவர் ஜாஸ்மின் நிஜார் ஆகியோர் பெற்றோர் கழக கூட்டத்தை
கூட்டினர். அதில் மாணவர்களுக்கு கையேடு வழங்குவதற்கான
செலவு தொகையை பெற்றோர் ஏற்பது
என முடிவு செய்யப்பட்டது.
மாணவர் கையேடு: கையேட்டில் பள்ளியில் உள்ள அனைத்து
விபரங்கள், ஆசிரியர்கள், அவர்களது படிப்பு, மாணவர்கள், அவர்களின் செயல்பாடுகள், போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள், சாதனை படைத்த மாணவர்கள், பள்ளிகளின் விதிமுறைகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசின் நலத்திட்ட உதவிகள், தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து, மாணவர்கள் உறுதிமொழி, பெற்றோர்கள் உறுதிமொழி, அவர்களது தொடர்பு அலைபேசி,தொலை பேசி எண்கள் உட்பட அனைத்து விபரங்களும், இடம் பெற்றுள்ளன.
இதில் தினசரி பள்ளி நடவடிக்கை, மாணவர்களின் திறன், வீட்டுப்பாடம் உள்ளிட்ட குறிப்பு பெற்றோருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
ஆசிரியர் செந்தில் நாதன் தெரிவித்ததாவது: எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளிக்கு இணையான கல்வித்தரம், வசதிகளை பெற வேண்டும், என நினைத்தோம். அதற்கு பெற்றோர், தலைமையாசிரியை தமிழரசி, மற்ற ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்கினர். இதன் காரணமாக மாணவர் கையேட்டில் மாணவர்கள் படைப்பு, பள்ளி செயல்பாடு குறித்த ஆண்டு மலர் வெளியிட முயற்சித்து வருகிறேன். இந்த ஆண்டு கண்டிப்பாக வெளியிடப்படும், என்றார்.
தலைமையாசிரியை தமிழரசி தெரிவித்தாவது: பெற்றோர், ஆசிரியர்கள் ஒத்துழைப்போடு கல்வி, வசதிகள், போன்ற வற்றில் தனியார் பள்ளிகளுடன் போட்டி போட்டு எங்கள் பள்ளி வெற்றி நடை போட்டு வருகிறது. தொடர்ந்து இதனை செயல்படுத்தவுள்ளோம், என்றார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைக்கு அனுமதி...
ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, விரைவில் உதவித்தொகை வழங்கும் வகையில், ஆணை வெளியிட, அரசு முடிவு செய்துள்ளது.
தலைமை செயலகத்தில், சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா தலைமையில், நேற்று முன்தினம், மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் அளித்த கோரிக்கைகள் குறித்த, ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் விபரம்:
மாதாந்திர உதவித்தொகையை பெற விரும்பும் பயனாளிகளுக்கு, ஏ.டி.எம்., கார்டு வழங்கப்படும். தனியாக, வங்கிக் கணக்கு துவங்க வலியுறுத்தப்படாது
பல்வேறு மாவட்டங்களில், ஓய்வூதியம் கோரி, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு, விரைவில் உதவித்தொகை அனுமதித்து, ஆணை வழங்கப்படும்
மாதாந்திர ஓய்வூதிய முன்வரிசைப் பட்டியலை, அனைவரும் பார்க்கும் வகையில், ஆன்லைனில் வெளியிடப்படும்
தற்போது, வருவாய் துறையில் உள்ள, உதவித்தொகை அனுமதிக்கும் நடைமுறை எளிதாக்கப்படும்
அனைத்து மாவட்டங்களிலும், வட்டார அளவில், முகாம்கள் நடத்தி, மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும்
அனைத்து மாவட்டங்களிலும், ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், மாதந்தோறும் நடத்தப்படும். 40 - 75 சதவீதத்திற்கு மேல், பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, பராமரிப்பு உதவித்தொகை வழங்குவது குறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்
மாதாந்திர உதவித்தொகை பெற, வருமான உச்ச வரம்பாக, ஐந்து லட்சம் ரூபாய் நிர்ணயிக்கவும், 18 வயதிற்கு கீழ் உள்ள, தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு, உதவித்தொகை வழங்குவது குறித்தும் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
CPS : பங்களிப்பு ஓய்வூதியத்திற்கு 7.8 சதவீத வட்டி...
பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தில், பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, 7.8 சதவீத வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில், ஜூன், 30 வரை, பிடித்தம் செய்யப்பட்டுள்ள தொகைக்கு, ஜூலை, 1 முதல், செப்., 30 வரை, 7.8 சதவீதம் வட்டியை, அரசு நிர்ணயம் செய்து உள்ளது.
9 மற்றும் பிளஸ் 1 வகுப்பில் சேர செப்., 30 வரை அனுமதி....
தமிழகத்தில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1ல், செப்., 30 வரை, மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்பதாம் மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஜூலை, 31 வரை, மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, செப்., 31 வரை, அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர் அல்லது முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதி பெற்று, மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் படி, எட்டாம் வகுப்பு வரை, கல்வியாண்டு முடியும் வரை மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக புதிய பாட திட்டத்தில் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் : பாட திட்ட குழு தலைவர் பேட்டி..
புதிய பாடத்திட்டத்தில் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என புதிய பாடத்திட்டக்குழு தலைவர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார். அகில இந்திய கல்வி நுழைவுத்தேர்வுகள், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடதிட்டங்களை வடிவமைக்கும் பணிைய கல்வித்துறை தொடங்கி உள்ளது.
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான 7 பேர் கொண்ட ஒரு பாட திட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக அனந்தகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு, மண்டல வாரியாக கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. சேலம், ஈரோடு உள்பட 8 மாவட்டத்தை சேர்ந்த கல்வியாளர்கள், பெற்றோர் சங்கத்தினர் என 500 பேர் பங்கேற்றனர். முன்னதாக பாடதிட்டக்குழு தலைவர் அனந்தகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
இன்றைய பாடதிட்டம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரிய ஏமாற்றமாக உள்ளது. கேள்வி, விடையை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் முறையால், மாணவர்களிடம் அடிப்படை அறிவு அறவே இல்லாமல் உள்ளது. இதனை மாற்ற முதலில் மாணவர் தன்னம்பிக்கை, அடிப்படை திறமை வளர்க்க வேண்டும். எதிர்காலத்தில் தொழில்நுட்பம், ெபாருளாதாரம், அரசியல், சமூக உள்ளிட்டவை அடுத்த 10 ஆண்டுகளில் பெரிய மாற்றங்களை வரலாம். இதனை தைாியமாகவும், தன்னம்பிக்கையாகவும் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் அமைய உள்ளது. அதன்படி தமிழ்நாடு, பிற மாநிலம், என்சிஆர்டி, சிபிஎஸ்இ, கேம்பிரிட்ஜ், பிற நாடுகள் பாடதிட்டத்தை தொகுத்து வைத்துள்ளோம். வகுப்புக்கு ஏற்ற திறமை வளர்க்கும் வகையில் பாடதிட்டம் உருவாக்கப்படும். தொழிற்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். அதன்படி அறிவியல் கல்வி, தொழில்கல்வி ஒன்றிணைக்கப்படும். இன்ைறய காலத்திற்கு ஏற்ப நவீன தொழில்நுட்பம் புகுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நீட் தேர்வு அடிப்படையில் 2 நாளில் ரேங்க் லிஸ்ட் வெளியீடு - சுகாதாரத்துறை செயலாளர்
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாடு முழுவதும் மே 7ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. ஆனால், மத்திய அரசு அந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற்று தரவில்ைல. நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில் அந்த அரசாணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். அடுத்தகட்ட நடவடிக்கையாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழக முதல்வரின் வழிகாட்டுதல்படி மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும். நீட் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப்பட்டியல் இரண்டு நாட்களில் வெளியிடப்படும்’’ என்றார்....
வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017
INDEPENDENCE DAY SPEECH & SONGS FOR ALL STUDENTS
TAMIL SPEECH & ESSAY - LEADERS
- CLICK HERE - MAHATMA GANDHI (2 PAGES)
- CLICK HERE - MAHATMA GANDHI (3 PAGES)
- CLICK HERE - JAWAHARLAL NEHRU
- CLICK HERE - NETAJI SUBASH CHANDRA BOSE
- CLICK HERE - BHARATHIYAR
- ENGLISH SPEECH & ESSAY
- INDEPENDENCE DAY SPEECH [200 WORDS] - CLICK HERE
- INDEPENDENCE DAY SPEECH [250 WORDS] - CLICK HERE
- INDEPENDENCE DAY SPEECH [300 WORDS] - CLICK HERE
- INDEPENDENCE DAY SPEECH [400 WORDS] - CLICK HERE
- INDEPENDENCE DAY SPEECH [500 WORDS] - CLICK HERE
- INDEPENDENCE DAY |POEM 1|"சுதந்திர தாகம் " - CLICK HERE
- INDEPENDENCE DAY |POEM 2|"இதுவா சுதந்திரம் " - CLICK HERE
- INDEPENDENCE DAY |POEM 3|"என்ன சுதந்திரம் " - CLICK HERE
- INDEPENDENCE DAY |POEM 4|"சுதந்திரம் மாத்திரம் அல்ல " - CLICK HERE
ESSAY & SPEECH - TAMIL
- INDEPENDENCE DAY | SPEECH 1 - CLICK HERE
- INDEPENDENCE DAY | SPEECH 2 - CLICK HERE
- INDEPENDENCE DAY | SPEECH 3 "MANATHIL URUTHI VENDUM" - CLICK HERE
- INDEPENDENCE DAY | SPEECH 4 "THAYIN MANI KODI PAREER" - CLICK HERE
- CLICK HERE TO DOWNLOAD - INDEPENDENCE DAY | SPEECH
- CLICK HERE TO DOWNLOAD - INDEPENDENCE DAY SONG - 1
- CLICK HERE TO DOWNLOAD - INDEPENDENCE DAY SONG - 2
- CLICK HERE TO DOWNLOAD - INDEPENDENCE DAY SONG - 3
SONGS
- CLICK HERE - JANA GANA MANA
- CLICK HERE - தமிழ்த்தாய் வாழ்த்து
- CLICK HERE - கொடிப்பாடல்
- CLICK HERE - MARCH PAST SONG
- CLICK HERE - தேசிய கீதம்(AR.RAHMAN)
- CLICK HERE - வந்தே மாதரம் (ORIGINAL)
- CLICK HERE - வந்தே மாதரம் (LATA MAGESHKAR)
- CLICK HERE - ஒவ்வொரு பூக்களுமே
- CLICK HERE - அச்சம் அச்சம் இல்லை
- CLICK HERE - இந்திய நாடு என் நாடு
- CLICK HERE - VAZHIYA SENTHAMIL
THANKS:ASIRIYAR.COM.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)