ஞாயிறு, 30 ஜூலை, 2017
Mobile Learning | ICT Resources | Android Based Mobile Applications - LSRW---ENGLISH.
CLICK HERE TO DOWNLOAD - Mobile Learning | ICT Resources | Android Based Mobile Applications - LSRW SKILL BASED MOBILE APP
Thanks:-Mr.Vijayakumar,
ICT NATIONAL AWARDEE,
B.T.ASST,G.H.S.S.Somandarkudi
VILLUPPURAM District.
Thanks:-Mr.Vijayakumar,
ICT NATIONAL AWARDEE,
B.T.ASST,G.H.S.S.Somandarkudi
VILLUPPURAM District.
சென்னையில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்...
சென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
''சென்னை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தில் அங்கன்வாடி பணியாளர் (443 காலி பணியிடங்கள்), குறு அங்கன்வாடி பணியாளர் (158 காலி பணியிடங்கள்), அங்கன்வாடி உதவியாளர் 643 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வயது 25 முதல் 35 வயது வரையும், அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்துக்கு 20 வயது முதல் 40 வயதுடன் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.தகுதி வாய்ந்த உள்ளூர் மகளிர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு உரிய விண்ணப்பங்களை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இணையதளமான www.icds.tn.nic.in-ல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், அந்தந்த பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்களை ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் அல்லது ‘மாவட்ட திட்ட அலுவலர், 2/124, தியாகராயா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18’ என்ற முகவரியில் அணுகலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...
பள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி திருவண்ணாமலையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பள்ளில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.அதற்குப் பிறகு அவர் பேசுகையில், ''மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் திட்டம் ஒரு மாதத்தில் தொடங்கப்படும். மாணவ மாணவிகளுக்கு விபத்துக் காப்பீடுகள் வழங்கப்படும்.பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று மாணவர்கள் தேர்ச்சி பெற, 54 ஆயிரம் வினா மற்றும் விடைத் தாள் அடங்கிய பதிப்புகள் வெளியிடப்படும்.
பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து வினாத்தாள் மாதிரி வெளியிடப்படும். மேலும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களின் அச்சம் நீங்கி, எந்த தேர்வையும் எதிர்கொள்ள திறமை மாணவர்களுக்கு ஏற்படும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
GPF வட்டி குறைப்பு!
GPF வட்டி குறைப்பு!
வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை குறைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும், வருங்கால வைப்பு நிதிக்கு, ஏப்., 1 முதல், ஜூன், 30 வரை, 7.9 சதவீதம் வட்டி அளிக்கப்பட்டது. ஜூலை, 1 முதல், செப்., 30 வரை, வருங்கால வைப்பு நிதிக்கு, 7.8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, மத்தியஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை பின்பற்றி, தமிழகஅரசும், 7.8 சதவீதம் வட்டி நிர்ணயித்து, உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பாடப்புத்தகங்கள் ( கணக்கு நீங்கலாக ) வீடியோ வடிவில்..... புதுப்பொலிவுடன்.....
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பாடப்புத்தகங்கள் ( கணக்கு நீங்கலாக ) வீடியோ வடிவில்..... புதுப்பொலிவுடன்.....
ஆங்கில வழிக் கல்வியில் பாடங்களை கற்பிப்பதும், புரிந்துகொள்வதும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கடினம். அவற்றை
இந்த வீடியோ பாடங்கள் மூலம் எளிதாக விளக்கலாம். திருச்சி மாவட்டம் , தொட்டியம் ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரியும்
இரா. குருமூர்த்தி ஆகிய நான் மாணவர்களின் பாடப்பொருள் அறிவை மேலும் வலுவூட்டும் வண்ணம் பாடங்களை காணொளிகளாக உருவாக்கியுள்ளேன்.
ஒவ்வொரு வகுப்புகளுக்குமான பாடங்கள் தனித்தனி குறுந்தகடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. DVD பெற விரும்புவோர் 9791440155 என்ற எண்ணுக்குத் தொடர்புகொள்ளவும். நன்றி.
NO PAY COMISSION IN FUTURE !!
The central government is mulling not to form any
Pay Commission for increasing salaries and allowances of central government employees and and pensioners in future.
Pay Commission for increasing salaries and allowances of central government employees and and pensioners in future.
The report of inflation would be submitted to the Finance Minister Arun Jaitley once every three years.
No new commission may be formed in future for increasing salaries of central government employees, a senior Finance Ministry official told The Sen Times on condition of anonymity.
“The government is going to take a policy decision in this regard,” official told our reporters after cabinet nod of the 7th Pay Commission allowances.
Presenting an idea about an alternative arrangement, he said that the 7th Pay Commission Chairman Justice A K Mathur had earlier told The Financial Express in an interview, “The government should review the salary of central government employees every year looking into the data available to it and based on the price index.”
The 7th Pay Commission recommended that the pay matrix may be reviewed periodically without waiting for the long period of ten years. It can be reviewed and revised on the basis of the Aykroyd formula which takes into consideration the changes prices of the commodities that constitute a common man’s basket, which the Labour Bureau at Shimla reviews periodically.
The Pay Commission also suggested that this should be made the basis for revision of that pay matrix periodically without waiting for another Pay Commission.
So, it will not be necessary to form a new pay Commission after every 10 years for central government employees and pensioners and whether any change is required regarding pay and allowances would be made considering inflation.
Accordingly, the central government is to follow this proposal of the Pay Commission and to discontinue the practice of appointing pay commissions in future to suggest salary structure and other perks for all central government employees and pensioners, the official gave his views.
The official said the report of inflation would be submitted to the Finance Minister Arun Jaitley once every three years.
He added the changes regarding pay and allowance would be made considering inflation,,....
என்சிஇஆர்டி புத்தகங்களையே வாங்க வேண்டும் என்ற மத்திய கல்வி வாரியத்தின் உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை....
கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்(என்சிஇஆர்டி) மற்றும் மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆகியவற்றைக் தவிர்த்து தனியார் வெளியீட்டாளர்களால் தயாரிக்கப்படும் விலையுயர்ந்த பாடப்புத்தகங்களை வாங்கச்சொல்லி மாணவர்களைக் கட்டாய படுத்தக்கூடாது என்று சிபிஎஸ்இ கடந்த ஏப்ரல் மாதம் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.
இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள 287 சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் 2014 பிப்ரவரியில், தனியார் பதிப்பகப் புத்தகங்கள் வாங்க அனுமதித்த சிபிஎஸ்இ, இப்போது வாங்கக் கூடாது என்று உத்தரவிட்டிருப்பது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தச் சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று ஜூலை-28 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி சிபிஎஸ்இ-யின் இந்த உத்தரவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டார். பின்னர் அடுத்த கல்வியாண்டு முதல் தனியார் வெளியீட்டாளர்களால் தயாரிக்கப்படும் விலையுயர்ந்த பாடப்புத்தகங்களை வாங்கக் கூடாது எனவும், தனியார் பதிப்பக புத்தகங்களின் தரம், விலை குறித்து சிபிஎஸ்இ விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் ஒரே மனுவில் 287 பேர் வழக்கு தொடர்ந்துள்ளதால் நீதிமன்றத்துக்கு வரும் ஸ்டாம்ப் கட்டண வருவாய் பாதித்துள்ளது. எனவே 287 பள்ளிகளும் தலா 1000 ரூபாய் வீதம் 2 .87 ஆயிரம் ரூபாயை நீதிமன்ற கட்டணமாக செலுத்தி ஒரு வாரத்தில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் சம்மந்தபட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
சனி, 29 ஜூலை, 2017
PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.07.2017 to 30.09.2017 – Orders – Issued..
CIVIL SERVICES EXAMINATION–II (2017-2018) (NON-INTERVIEW POSTS) (GROUP-II A SERVICES) !!
Memorandum of Admission (Hall Ticket) for the Written Examination (Objective Type) to the Post of COMBINED CIVIL SERVICES EXAMINATION–II (2017-2018)
(NON-INTERVIEW POSTS) (GROUP-II A SERVICES)
....https://www.tnpsconline.com/TNPSCACGRP2ALive/FrmLogin102017.aspx
(NON-INTERVIEW POSTS) (GROUP-II A SERVICES)
....https://www.tnpsconline.com/TNPSCACGRP2ALive/FrmLogin102017.aspx
ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் பேட்டி..
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு ஏற்கனவே யோகா வகுப்பு நடைபெற்று வருகிறது. பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களும் மன அழுத்தம் இன்றி இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் மாணவ-மாணவிகளுக்கு நன்றாக கல்வி கற்பிக்க முடியும். இதை கருத்தில் கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
யோகா பயிற்சி அளிப்பதால் ஆசிரியர்களுக்கு மன நலமும், உடல் நலமும் நன்றாக இருக்கும். இதற்காக யோகாவில் நிபுணத்துவம் பெற்ற சமுதாய சேவை மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 67 கல்வி மாவட்டங்களிலும் தலா 85 ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மொத்தம் 5 ஆயிரத்து 695 ஆசிரியர்கள் பயன் அடைவார்கள். இவர்கள் யோகா பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் ஆக இருக்கவேண்டும். மேலும் விருப்பம் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், சாரண ஆசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர்கள், தேசிய மாணவர் படை ஆசிரியர்கள், தேசிய பசுமைப்படை ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படும். பயிற்சி வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை 2 நாட்கள் நடைபெறும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி நாட்களில் யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அடுத்த (ஆகஸ்டு) மாதம் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் யோகா பயிற்சி முடிவடையும்.
இவ்வாறு கண்ணப்பன் தெரிவித்தார்.
7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல்படுத்தப்படும் அரசு ஊழியர் சங்கம் தகவல்....
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கத்தினர் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். பின்னர் இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு அலுவலர் சங்கங்கள் இணைந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்து பேசினோம். அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம்.
அதில் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வழங்க வேண்டும், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், தொழில் வரி ரத்துசெய்யப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை விரிவாக விவாதித்தோம்.
இடைக்கால நிவாரணம் குறித்து அரசு அதிகாரிகளுடன் பேசி முடிவு செய்வதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும், அதன் அறிக்கையை பெற்ற பிறகு, அந்த திட்டத்தை ரத்துசெய்வதற்கான வழிமுறைகளை தமிழக அரசு ஆராயும் என்று உறுதி அளித்துள்ளார்.
மாநிலத்துக்கான 7-வது ஊதியக்குழு அறிக்கைகளைப் பெற்று செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பரிந்துரைகளை அமல்படுத்துவதாகவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றுபவர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்கள் என அதுபோன்ற அனைத்துவகை பணியாளர்களையும் ஊதியக்குழுவுக்கு உட்படுத்தி அதன் அடிப்படையில் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதாகவும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. விரைவில் இதற்கான அரசாணைகளையும் அவர் பிறப்பிப்பார் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் 16-ந்தேதி எழுத்து தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு...
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆசிரியர் தேர்வு வாரியம் 2017-2018-ம் ஆண்டுக்கான பல்தொழில்நுட்ப (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு 17-6-2017 முதல் 7-7-2017 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, 1 லட்சத்து 34 ஆயிரத்து 982 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான கல்வி தகுதியை எதிர்த்து சிலர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின்படி, கல்வித்தகுதியை திருத்தி அறிவிக்கை வெளியிட தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த தீர்ப்பின் அடிப்படையில், ஏற்கனவே 1,058 விரிவுரையாளர் (பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்கள்) பணியிடங்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிக்கை ரத்து செய்யப்பட்டு, புதிய அறிவிக்கை 28-ந்தேதி (நேற்று) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் இன்று (சனிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 11-ந்தேதி ஆகும். ஏற்கனவே இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்தவர்கள் தற்போது புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை. அவர்கள் பதிவு செய்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த அறிவிக்கையின்படி, எழுத்து தேர்வு செப்டம்பர் 16-ந்தேதி நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)