திங்கள், 24 ஜூலை, 2017
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தக பைகளுக்கு கட்டுப்பாடு அரசின் நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் வரவேற்பு...
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தக பைகளுக்கு கட்டுப்பாடு அரசின் நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் வரவேற்பு தெலுங்கானாவில்
1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள்
கொண்டுவரும் புத்தக பைகளுக்கு மாநில அரசு கடந்த சில தினங்களுக்கு முன் கட்டுப்பாடு விதித்து அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டது.
1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு 1.5 கிலோவையும், 3,4 மற்றும் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2-3 கிலோவையும், 6 மற்றும் 7 ம் வகுப்பு மாணவர்களுக்கு 4 கிலோவையும், 8 மற்றும் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு 4.5 கிலோவையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 5 கிலோவையும் தாண்டக்கூடாது அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அறிவுறத்தப்பட்டது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
இந்த நிலையில் கல்வித்துறையின் இத்தகைய நடவடிக்கைக்கு ஆசியர்கள், பெற்றோர்கள் மாணவ மாணவிகள் தரப்பில் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
TNPSC-TamilNadu Public Service Commission VAO EXAM 2017
About TNPSC
As mandated by the constitution of india, the tamil nadu public service commission consistently aims at creating and nurturing a public service which is independent, impartial, ethical, effective and being capable and enough to meet the new challenges faced by the government and responsive to the growing expectations of the public at large and marginalized sections in particular.
Job CategoryTamilnadu Govt JobsImportant dateOnline newspaper official Advertisement date: 31-05-2017
Apply ONLINE from 05.08.2017 to 30.08.2017 (Expected)
Last Date for Payment of Application Fees (State Bank of India/Indian
Bank): -
Written Exam Date: 17.09.2017 (10.00 A.M.to 01.00 P.M.) October 2017Total Vacancies494 (Expecting 800 post)Education QualificationMust have passed S.S.L.C Public Examination or its equivalent with
eligibility for admission to Higher Secondary Courses of Studies (or)
to College Courses of studies and refer pdf for more details Age LimitSCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs and DWs of all castes- Min - 21 Years, Max- 40 Years Refer Pdf file more detailsSalaryRs.5,200-20,200/- (PB2) + 2,800/- Grade PayExp. RequiredFreshers/ExperiencedInterview ProcessWritten exam- (Preliminary Exam), Final Interview for certificate verificationApplication FeeOne time Registration - Rs.150/-
For One Time Registration (Revised with effect from 01.03.2017 vide
G.O.(Ms).No. 32, Personnel and Administrative Reforms Department,
dated 01.03.2017)
Preliminary Examination Fee (BC/MBC)- Rs.100/-
SC/ST/PWD- NILWritten Exam locationVarious Location in TamilnaduHow to applyApply via online at
Apply ONLINE from 05.08.2017 to 30.08.2017 (Expected)
Last Date for Payment of Application Fees (State Bank of India/Indian
Bank): -
Written Exam Date: 17.09.2017 (10.00 A.M.to 01.00 P.M.) October 2017Total Vacancies494 (Expecting 800 post)Education QualificationMust have passed S.S.L.C Public Examination or its equivalent with
eligibility for admission to Higher Secondary Courses of Studies (or)
to College Courses of studies and refer pdf for more details Age LimitSCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs and DWs of all castes- Min - 21 Years, Max- 40 Years Refer Pdf file more detailsSalaryRs.5,200-20,200/- (PB2) + 2,800/- Grade PayExp. RequiredFreshers/ExperiencedInterview ProcessWritten exam- (Preliminary Exam), Final Interview for certificate verificationApplication FeeOne time Registration - Rs.150/-
For One Time Registration (Revised with effect from 01.03.2017 vide
G.O.(Ms).No. 32, Personnel and Administrative Reforms Department,
dated 01.03.2017)
Preliminary Examination Fee (BC/MBC)- Rs.100/-
SC/ST/PWD- NILWritten Exam locationVarious Location in TamilnaduHow to applyApply via online at
99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணம் நாசா பொதுமக்களுக்கு அறிவுரை
99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணத்தை பார்க்கும் பொதுமக்களுக்கு நாசா சில பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கி உள்ளது.
99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணம் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி தோன்ற உள்ளது, இந்நிலையில் இது குறித்து பொதுமக்களுக்கு நாசா சில அறிவுரைகளை கூறியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
சூரிய கிரகணம் நிகழும் போது சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும்.இதனை வெறும் கண்களால் பார்க்ககூடாது. பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளித் தடுப்புக் கண்ணாடிகளால் மட்டுமே காண வேண்டும். சூரியனின் மைய பகுதியை முழுமையாக நிலா மறைக்கிறது. இந்த சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களால் இந்த கிரகணத்தை பார்க்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது.
ஊழியர்களின் பணிப்பதிவேடு 'டிஜிட்டல்' ஆக்கும் பணி முடிந்தவுடன், புதிய 'இ-பேரோல்' செயல்படுத்தப்படும் !!
அரசு ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய நடைமுறைப்படி 'இ-பேரோல்' மென்பொருளில் ஊழியர்களின் ஊதியம், பணப்பலன் பட்டியல் பதிவு செய்யப்பட்டு,கருவூலத்திற்கு சி.டி.,யாகவும், 'பிரின்ட்' படிவமாகவும் அனுப்பப்பட்டு வருகிறது.
இதில், தாமதம் ஏற்படுவதோடு, காகித பயன்பாடும் அதிகமாக உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் புதிய 'இ-பேரோல்' மென்பொருள் கொண்டு வரப்பட உள்ளது. இதில் ஊதியம், பணப்பலன் பட்டியல் தயாரித்து 'ஆன்லைன்' மூலமே கருவூலத்திற்கு அனுப்பப்படும்.
இதற்காக வரைவு அலுவலர்கள், இளநிலை உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது மென்பொருளை கம்ப்யூட்டரில் ஏற்றுவதற்காக கருவூலகங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. பெரும்பாலான கம்ப்யூட்டர்கள் பழையதாகவும், 'மெமரி' குறைவானதாகவும் உள்ளன. இதனால் அவற்றில் புதிய மென்பொருளை ஏற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கருவூல அதிகாரி ஒருவர் கூறியதாவது: வரைவு அலுவலர், பட்டியல் தயாரிக்கும் ஊழியர்களுக்கு தனித்தனியாக இரண்டு கம்ப்யூட்டர்கள் வேண்டும். மேலும் புதிய 'இ-பேரோல்' மென்பொருள் இயங்குவதற்கு 4 ஜி.பி., 'ரேம்' வேண்டும். இதனால் பழைய கம்ப்யூட்டர்களை மாற்றிவிட்டு, புதிதாக வாங்க அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஊழியர்களின் பணிப்பதிவேடு 'டிஜிட்டல்' ஆக்கும் பணி முடிந்தவுடன், புதிய 'இ-பேரோல்' செயல்படுத்தப்படும் என்றார்.
240 அரசு பள்ளிகளில் கணினி அறிவியல்
தமிழகத்தில், 240 அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாடப்பிரிவு துவங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில், 540 அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாடப்பிரிவு செயல்படுகிறது. இவற்றுக்கு புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அதே போல, இன்னும், 240 அரசு பள்ளிகளில் புதிதாக, கணினி அறிவியல் பிரிவு துவங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக, அனைத்து பள்ளிகளிலும், பிளஸ் 1ல் உள்ள பாடப்பிரிவுகளின் பட்டியலை அனுப்ப, பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் மாதம் முதல் BIO-METRIC வருகைப்பதிவு

தமிழக அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகை வருகைப்பதிவு முறை டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், அலுவலகத்துக்கு வரும் நேரத்தை கண்காணிக்க விரல் ரேகைபதிவு அமலில் உள்ளது.
தமிழகத்தை பொறுத்த வரை தலைமைச் செயலகம் உள்ளிட்ட எந்த அரசு அலுவலகங்களிலும் இந்த வருகை பதிவு முறை நடைமுறையில் இல்லை.அரசு ஊழியர்கள் காலை 9.45 மணி முதல் 10 மணிக்குள் வேலைக்கு வரவேண்டும். மாலை 5.45 மணி வரை பணியாற்ற வேண்டும்.
இவர்களுக்கு காலையில் 10.10 மணிவரை வேலைக்கு வர சலுகையும் உள்ளது மாதம் 2 நாட்கள் தலா 1 மணி நேரம் ‘பெர்மிஷன்’ கொடுக்கப்படுகிறது. காலம் தாழ்த்தி வந்தால் பெர்மிஷனில் கழித்துக் கொள்ளலாம். அல்லது அரை நாள் தற்செயல் விடுப்பில் சென்றுவிடும்.ஆசிரியர்களை பொறுத்த வரை காலை 9.20 மணி முதல் 4.10 மணிவரை பணி நேரம் உண்டு. ஆனால் சில ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வேலைக்கு வருவதில்லை என்ற தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. தினசரி நேரம் கடந்து வருபவர்கள் மீது பள்ளி கல்வித்துறை சிலநடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆனாலும் இன்னும்‘லெட்ஜரில்’ கையெழுத்திடும் முறைதான் செயல்பாட்டில் உள்ளது.
இப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வருகை பதிவேடு, ஊதியம் சர்வீஸ் பைல், ஓய்வு விவரம் உள்ளிட்ட சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக பிரத்யேக மென்பொருள் தயாரிக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைமுறைபடுத்த முதற்கட்ட பணிகள் துவங்கி உள்ளது. இதைசெயல்படுத்தும் ஒருங்கிணைப்பாளராக விப்ரோ நிறுவனம் உள்ளது. இந்த புதிய முறையின் படி டிஜிட்டல் கையொப்பம், விரல் ரேகை பதிவு மூலம் வருகைப் பதிவை உறுதி செய்தல் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்படுகிறது.
இதில் விரல் ரேகை வருகைப்பதிவு டிசம்பர் முதல் தமிழகஅரசு ஊழியர்களுக்கு அமலாகிறது. தமிழகம் முழுவதும இந்த முறையை ஒரே சமயத்தில் நடைமுறைபடுத்துவது சற்று சிரமம் ஆனாலும் படிப்படியாக அனைத்து அலுவலகங்களுக்கும் இதை கொண்டு வந்து செயல்படுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே ‘நீட்’ கேள்வித்தாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்!!!
நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை
சேர்ப்பதற்காக, ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு கடந்த மே 7–ந்தேதி நடத்தப்பட்டது. இந்தி, ஆங்கிலம் மற்றும் 10 மாநில மொழிகளில் கேள்வித்தாள்கள் இருந்தன. தேர்வு எழுத வந்த மாணவ–மாணவிகளிடம் நிறைய கெடுபிடிகள் காட்டப்பட்டதால், ஏற்கனவே இந்த தேர்வு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தி, ஆங்கிலம் கேள்வித்தாளை விட மாநில மொழி கேள்வித்தாள்கள் கடினமாக இருந்ததாக, மாநில மொழிகளில் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலரும், பாட நிபுணர்களும் விமர்சித்தனர்.
இதுதொடர்பாக மாணவர்கள் சிலர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரை நேரில் சந்தித்து முறையிட்டனர். இந்த சர்ச்சை குறித்து, ‘நீட்’ தேர்வை நடத்திய மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.யிடம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம் கேட்டது. இதற்கிடையே நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாளை தயாரித்து நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. ஆனால் நடைபெறவில்லை.
இந்நிலையில் நாடு முழுவதும் ஒரே ‘நீட்’ கேள்வித்தாள் முறை கொண்டுவரப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
மேற்கு வங்காள கல்வித்துறை அமைச்சர் தரப்பிலும் இந்தி மற்றும் ஆங்கில மொழி கேள்வித்தாள்களைவிட பிரந்திய மொழி கேள்வித்தாள்கள் மிகவும் கடினமாக இருந்தது என குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் கேள்வி எழுப்பிய போது, இனி பிராந்திய மொழி கேள்வித்தாள்கள் ஆங்கில மொழி கேள்வித்தாள்களின் மொழிபெயர்ப்பாக இருக்கும் என்றார். இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் ஒரே மாதிரியான கேள்வித்தாளே இடம்பெற உள்ளது. பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இவ்விவகாரம் தொடர்பாக நாங்கள் அழைப்பு விடுக்கவேண்டியது உள்ளது. இவ்விவகாரம் ஆலோசனை மட்டத்தில் இப்போது உள்ளது, என கூறிஉள்ளார்.
2019 மார்சுக்குள் குறைந்தபட்ச கல்வித் தகுதி 8.5 லட்சம் ஆசிரியர்களுக்கு கெடு....
நாடு முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 8.5 லட்சம் ஆசிரியர்கள் வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெற வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
இதுதொடர்பான சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. கல்வி உரிமை சட்டத் திருத்த மசோதா 2017 குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மக்களவையில் நேற்று கூறியதாவது: கடந்த 2009-ம்ஆண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தச் சட்டம் கடந்த 2010 ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி 14 வயதுக்கு உட்பட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி கட்டாயமாக்கப்பட்டது. மேலும் இச்சட்டத்தின்படி ஆசிரியருக் கான கல்வித் தகுதியைப் பெறாதவர்கள் 5 ஆண்டுகளுக்குள் குறைந்தபட்ச கல்வித் தகுதியை பெற வேண்டும் என்று கெடு நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்களுக்கான கல்வித் தகுதி கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் சுமார் 6 லட்சம் ஆசிரியர்களும் அரசு பள்ளிகளில் 2.5 லட்சம் ஆசிரியர்களும் போதிய கல்வித் தகுதி இல்லாமல் பணியாற்றுகின்றனர்.
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள கல்வி உரிமைச் சட்டத் திருத்த மசோதா 2017-ன்படி வரும் 2019-ம் ஆண்டுக்குள் அவர்கள் அனைவரும் ஆசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் - அடிப்படை வசதிகள் மேற்கொள்ள எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியினை பெற்றிட முயற்சி மேற்கொள்ள வேண்டும்....
தமிழகத்தில் 2017- -2018ம் ஆண்டில் 150 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி பள்ளி கல்வி செயலர் உதயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒன்பது ஆசிரியர்கள் வீதம் 900 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் 1:40 என்ற ஆசிரியர்- மாணவர் விகிதம் பின்பற்றப்படும். அங்கு அடிப்படை வசதிகள் செய்திட எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியினை பெற்றிட முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு அறிவிப்பு....
அண்ணா பல்கலைகழகத்தில் பி.ஆர்க் மாணவர் சேர்க்கைகக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பி.ஆர்க் படிப்புக்கு மாணவர் சேர்க்கை மத்திய அரசின் நாட்டா தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைகழக தரப்பில் அறிவிக்கப்பட்டது.
பி.ஆர்க் கலந்தாய்வில் ஜே.இ.இ நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்களும் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கு ஜே.இ.இ, நாட்டா தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அண்ணா பல்கலைகழகத்தில் பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஜே.இ.இ, நாட்டா தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ள இடங்கள் நீங்கலாக மீதமுள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு நடத்த அண்ணா பல்கலைகழக தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
அதுதொடர்பாக அண்ணா பல்கலைகழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகம் முழுவதும் 6 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் ஆகஸ்ட் 12ம் தேதி பி.ஆர்க் நுழைவுத்தேர்வு நடக்கிறது. இதற்காக எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி பிரிவு மாணவர்கள் 1,000 பிற பிரிவு மாணவர்கள் 2,000 இணையதளம் மூலம் செலுத்த வேண்டும்.
இதுதொடர்பாக அறிவிக்கை ஜூலை 24ம் தேதி வெளியிடப்படும். அன்று முதல் ஆன்லைன் பதிவு தொடங்கும். ஜூலை 31ம் தேதி, ஆன்லைன் பதிவு செய்ய கடைசி நாளாகும். ஆகஸ்ட் 7ம் தேதி ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். ஆகஸ்ட் 12ம் தேதி நுழைவுத்தேர்வு நடக்கும். ஆகஸ்ட் 18ம் தேதி நுழைவுத்தேர்வு மதிப்பெண் வெளியிடப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பொது தேர்வு!!!
5 மற்றும் 8 வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறை, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் விரைவில் ரத்து செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வி தொடர்பான விவாதக் கூட்டத்தில், அவர் மேலும் பேசியதாவது:
5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மே மாதத்தில் மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்விலும், தோல்வியடையும் மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியாது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு 25 மாநிலங்கள் ஒப்புதல் அளித்து விட்டன. 8-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், 9-ஆம் வகுப்புக்குச் செல்வதை அனுமதிக்க முடியாது. 5 மற்றும் 8-ஆம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களை, அதே வகுப்பில் நிறுத்தி வைப்பதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.
இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படும்.
இதற்காக, அனைத்து மாநிலங்களின் கல்வித் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வி உரிமைச் சட்டப்படி, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை எந்த மாணவரையும் தேர்ச்சிபெறவில்லை என்று கூறி நிறுத்தி வைக்க முடியாது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்த முடிவால் மாணவர்களின் கல்வித் தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை தேர்வுகளே நடத்தப்படுவதில்லை. கிட்டத்தட்ட மதிய உணவு பள்ளிகளாகவே அவை இயங்குகின்றன. காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள், மதிய உணவு சாப்பிட்ட பிறகு வீட்டுக்குச் சென்று விடுகிறார்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கச் செய்யும் வகையில் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
மத்திய அரசைப் பொருத்தவரை கல்வி என்பது தேசியக் கொள்கையாகும். அதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்....
சான்றிதழ்களின் உண்மைத்தன்மையின் காலதாமதத்தை தவிர்க்க Online முறை அறிமுகம்!
அரசுத் தேர்வுத் துறையில் உண்மைத் தன்மை (geniuness) பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் வகையில் online முறை கொண்டுவரப்பட உள்ளது.
அந்தந்த Drawing officers தங்களது password மூலம் download செய்து கொள்ளலாம்.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
பள்ளி ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்புவதும், நடனங்களுக்கு ஆடச் சொல்வதும் "ஒழுக்கத்தை சீரழிக்கும்" - கல்வித்துறை செயலாளர்..
பள்ளி ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்புவதும்,
நடனங்களுக்கு ஆடச் சொல்வதும் "ஒழுக்கத்தை சீரழிக்கும்" என கல்வித்துறை செயலாளர் திருமிகு உதயச்சந்திரன் இ.ஆ.ப சாடியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)