செவ்வாய், 4 ஜூலை, 2017
NEET தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது - உச்சநீதிமன்றம்....
"NO NEET EXEMPTION FOR TAMILNADU - SUPREME COURT"
'நீட்' தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முருகவேல் என்பவர், சமீபத்தில் நடந்த நீட் தேர்வு கடினமாக இருந்தது., எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையை, நீட் தேர்வு அடிப்படையில் நடத்தாமல், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சி.பி.எஸ்.இ., பாட திட்டம் கடினமாக உள்ளது என தமிழக மாணவர்கள் எதிர்ப்பது ஏன். மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள்ள நடைமுறை குறித்து விழிப்புணர்வு நமக்கு அவசியம் எனக்கூறியுள்ளது.
நோட்டீஸ்:
இதனிடையே, நீட் தேர்வில் பங்கேற்ற தமிழக பள்ளி பாட திட்ட மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது
TET - 2017' தகுதி தேர்வில் 4.64 சதவீதம் தேர்ச்சி - தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்....
ஆசிரியர் பணிக்கான 'டெட்' தகுதி தேர்வு எழுதிய 7.53 லட்சம் பேரில், 4.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி குறைந்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கான 'டெட்' தகுதி தேர்வு ஏப்ரல் 29,30ல் நடந்தது. இதில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தனித்தனியாக தேர்வு நடந்தது. முதல் தாளில் 2.41 லட்சம் பேரும்; இரண்டாம் தாளில் 5.12 லட்சம் பேரும் பங்கேற்றனர். அவர்களில் 4.64 சதவீதமான 34 ஆயிரத்து, 979 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கான 'டெட்' தகுதி தேர்வு ஏப்ரல் 29,30ல் நடந்தது. இதில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தனித்தனியாக தேர்வு நடந்தது. முதல் தாளில் 2.41 லட்சம் பேரும்; இரண்டாம் தாளில் 5.12 லட்சம் பேரும் பங்கேற்றனர். அவர்களில் 4.64 சதவீதமான 34 ஆயிரத்து, 979 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதாவது முதல் தாள் எழுதியவர்களில் 6.71 சதவீதத்தினரும்; இரண்டாம் தாள் எழுதியவர்களில் 3.66 சதவீதத்தினரும் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.குறிப்பிட்ட பாடங்களில் தேர்வு எழுதியோரில் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை தேர்வுசெய்தவர்களில் 2.72 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழகத்தில் 2012ல், 'டெட்' தேர்வு அறிமுகமான போது 7.14 லட்சம் தேர்வு எழுதி 2.448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதனால் கேள்வித்தாள் மிக கடினமாக இருப்பதாக மறு தேர்வுக்கு பட்டதாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து எளிமையாக்கப்பட்ட வினாத்தாளுடன் துணை தேர்வு நடத்தப்பட்டது. இதில் 2.99 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.பின் 2013ல் நடந்த தேர்வில் இரண்டு தாள்களிலும் சேர்த்து 6.62 லட்சம் பேர் பங்கேற்றதில் 4.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு நடந்த தேர்வில், தேர்ச்சி சதவீதம் 4.64 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்துக: ஸ்டாலின்...
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ''தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யும் கமிட்டிக்கு, மேலும் மூன்று மாத காலம் அவகாசம் வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது.
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்கெனவே தாமதமாகிவிட்டதால். எனவே, அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிப் பாடத்திட்டம் மாறுகிறது: 10 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசாணை வெளியீடு....
தமிழகத்தில் பள்ளிகளில் தற்போதுள்ள கல்விமுறையை மேம்படுத்தி புதிய பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களைப் புதிதாக உருவாக்கவும் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீட்டில் ரேங்க் முறை ரத்து என தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், தமிழகத்தில் பள்ளிகளில் தற்போதுள்ள கல்விமுறையை மேம்படுத்த 10 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்தக் குழுவுக்கு ஐஐடி கான்பூர் முன்னாள் தலைவரும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீட்டில் ரேங்க் முறை ரத்து என தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், தமிழகத்தில் பள்ளிகளில் தற்போதுள்ள கல்விமுறையை மேம்படுத்த 10 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்தக் குழுவுக்கு ஐஐடி கான்பூர் முன்னாள் தலைவரும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குழுவினர் விவரம்:
குழுவில், முனைவர் ஆர்.ராமானுஜம், பேராசிரியர், கணித அறிவியல் நிறுவனம், தரமணி, சென்னை, முனைவர் ஈ.சுந்தரமூர்த்தி, முன்னாள் துணை வேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முனைவர்.கு.ராமசாமி, துணைவேந்தர், வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை, சு.தியோடர் பாஸ்கரன், எழுத்தாளர் மற்றும் சூழலியல் ஆய்வாளர், பெங்களூரு, முனைவர் சுல்தான் அஹமது இஸ்மாயில், முன்னாள் துறைத் தலைவர், உயிர் தொழில்நுட்பவியல் துறை, புதுக் கல்லூரி, முனைவர் ஆர்.பாலசுப்பிரமணியன், பேராசிரியர், சென்னை, கலாவிஜயகுமார், கல்வியாளர், சென்னை,டிராட்ஸ்கி - மருது, ஓவியர் அகியோர் உறுப்பினர்களாகவும்.சென்னை, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசாணை விவரம்:
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்:"கல்வி முறையில் உள்ள குறைகளைக் கண்டறிவதற்காக பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.தரமான கல்வி என்னும் இலக்கு நோக்கி உலக அளவில் வளர்ந்து வரும் அறிவியல், சமூக பொருளாதார வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டி உள்ளதாலும், தொழிற்கல்விப் பிரிவுகளில் பயிலும் மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்லவும், ஏற்ற வேலைவாய்ப்பினைப் பெறவும், வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவர்கள் தகவல் தொழில்நுட்பவியல் / கணினிப் பாடத்தை அறிவியல் பாடத்திடன் இணைத்துக் கற்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, புதிய பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தங்களைப் புதிதாக உருவாக்கவும் அவ்வாறு உருவாக்கும்போது கற்றல், படைப்பின் பாதையில் இனிமையாக அமையவும் தமிழர்தம் தொன்மை, வரலாறு பண்பாடு மற்றும் கலை இலக்கிய உணர்வுடன் அறிவுத் தேடலுக்கு வழிவகுப்பதாக புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் அமையவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PGTRB - ஆழப் படித்தால் அசத்தல் மதிப்பெண் : 'சுற்றலில்' விட்ட டி.ஆர்.பி., தேர்வு...
'கடின உழைப்புடன் பாடங்களை ஆழமாக படித்தவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையில் டி.ஆர்.பி., தேர்வு அமைந்திருந்தது' என தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கான தேர்வு டி.ஆர்.பி., எனும் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நேற்று நடந்தது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு உட்பட 10 பாடங்களுக்கு நடந்த இத்தேர்வில் மொத்தம் 150 மதிப்பெண்ணிற்கு வினாக்கள் கேட்கப்பட்டன. முக்கிய பாடங்களில் 110, உளவியல் 30, பொது அறிவு பகுதியில் 10 வினாக்கள் என 150 வினாக்கள் கேட்கப்பட்டன. முக்கிய பாடங்களில் சற்று கடினமாகவும், ஆழமாக படித்தவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையிலும் வினாக்கள் கேட்கப்பட்டன.
மதுரையில் தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது:
* கந்த அஞ்சுகம் (ஆங்கிலம்): முக்கிய பாடங்களில் இடம் பெற்ற 110 வினாக்களும், பாடங்களுக்கு உள்ளே இருந்துதான் அதிகம் கேட்கப்பட்டன. செய்யுள் பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள், பாடலுக்குள் உள்ள வரிகளை குறிப்பிட்டு அதை எழுதியவர் உட்பட கிளை வினாக்கள் கேட்கப்பட்டன. உளவியல் பகுதியும் கொஞ்சம் கடினமாக இருந்தது.
* அன்புச்செல்வி (கணிதம்): இதுவரை நடந்த தேர்வுகளில் உள்ளதை விட, விதியை பின்பற்றி விடையளிக்கும் வகையிலான வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டன. ஒரே வினாவில் இரு விதிகளை ஒப்பிடும் வகையிலும் கேட்கப்பட்டன. கடின பகுதியான இயற்கணிதம், பகுமுறை, பகுத்தாய்வு பகுதிகளில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்பட்டன. உளவியல், பொது அறிவு பகுதி எளிதாக இருந்தது.
* அபிராமி (வரலாறு): வினாக்களை நேரடியாக கேட்காமல் காரணம் அறிதல், இக்கூற்று உண்மை, இவ்வினாவிற்கு உள்ள தொடர்பு என்ன... என்ற வகையில் தேர்வர்களை குழப்பும் வகையில் கேட்கப்பட்டன. விடை தெரிந்திருந்தாலும் யோசித்த பின் தான் எழுத வேண்டிய நிலை இருந்தது. உளவியல் மற்றும் பொது அறிவு பகுதி வினாக்கள் எளிது.
* ஜெயக்குமார் (பொருளியல்): நேரடியாக விடை தெரிந்த வினாக்கள் கூட, குழப்பும் வகையில் இடம் பெற்றன. ஒரே வினாவிற்கு மூன்று விடைகள் தெரிந்தால் மட்டுமே விடை எழுதும் வகையில் இருந்தன. உளவியல் பகுதியிலும் கடின வினாக்கள் இடம் பெற்றன. பொது அறிவு பகுதி எளிதாக இருந்தது.
* இந்து (வணிகவியல்): எளிதான வினாக்களும் குழப்பும் வகையில் கேட்கப்பட்டிருந்தன. 30 சதவீத வினாக்கள் யோசித்து எழுதும் வகையில் அமைந்திருந்தன. உளவியல் மற்றும் கல்வி மேம்பாடு பகுதியில் இருந்த கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்தன. பி.எட்., பாடத்திட்டத்தில் இல்லாத சில வினாக்களும் இடம் பெற்றன.
இவ்வாறு கூறினர்.
TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பு இழந்தவர்களுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் வாய்ப்பிழந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்.....
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு வற்புறுத்தாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று கோபிசெட்டிப்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க தமிழக அரசு கட்டாயப்படுத்தாது.பள்ளிக் கல்வித்துறையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களே தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பார்கள்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பு இழந்தவர்களுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் வாய்ப்பிழந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நீட் தேர்வு வேண்டாம் என்ற தமிழக அரசின் கொள்கை முடிவில் எவ்விதமான மாற்றமும் இல்லை. மத்திய அரசிடம் நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக அரசின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது'' என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.
TNTET - Paper 1 & 2 - New weightage கணக்கிடும் முறை !!
*Paper 2 Calculation*
முதலில் உங்களின் +2 மதிப்பெண் உதாரணமாக 1050,
முதலில் உங்களின் +2 மதிப்பெண் உதாரணமாக 1050,
Plus 2
1050/1200*100=87.5 87.5/100*10=8.75
Degree
52% so 52/100*15=7.8
52% so 52/100*15=7.8
BEd
86% 86/100*15=12.9
86% 86/100*15=12.9
TET 102 102/150*100=68 68/100*60=40.80
TOTAL Weightage: 70.25.
*Paper 1 - க்கான வழிமுறை*
+2 - மதிப்பெண் 1050
1050/1200*100=87.5 87.5/100*15=13.25
DTEd
86% 86/100*25=21.5
TET 91 91/150*60=36.4
TOTAL 71.15
பள்ளிகளில் உபரியாக உள்ள 5,000 ஆசிரியர்களை வட மாவட்டங்களுக்கு மாற்ற பள்ளி கல்வித்துறை முடிவு
தென் மாவட்ட அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 5,000 பட்டதாரி ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும் கவுன்சிலிங் மூலம், அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவர். ஆனால், 2011க்கு பின், பள்ளிகள் திறந்த பின், ஜூலையில், இந்த கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
இதனால், பாதி பாடங்களை ஒரு ஆசிரியரும், மீதி பாடத்தை மற்றொருஆசிரியரும் நடத்தும் நிலை ஏற்பட்டது; மாணவர்களுக்கு கற்பித்தலில் சிக்கல் ஏற்பட்டது.இதற்கு தீர்வு காண, இந்தாண்டு, பள்ளிகள் திறக்கும் முன், மே மாதமேஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப் பட்டது. இதில், 10 ஆயிரம் பேர் வரை, இட மாறுதல் பெற்றனர்.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங் களிலும், வேலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரியலுார், பெரம்பலுார் போன்ற மாவட் டங்களிலும், போதிய மாணவர்கள் இருந்தும், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகஉள்ளன. அதேநேரத்தில், தென் மாவட்டங்களில், 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாக, பள்ளி கல்விதுறை கண்டறிந்துள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகளில், தற்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது; ஆக., 31க்குள், மாணவர்சேர்க்கையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அவர்களின் விகிதத்தை விட அதிகமாக உள்ள உபரி ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
ஞாயிறு, 2 ஜூலை, 2017
குழந்தைகள் விரும்பும் பள்ளிகள் எப்படி இருக்க வேண்டும்...?
அன்று வேண்டா வெறுப்பாகத்தான் அந்த பள்ளிக்கு சென்றேன். மரங்கள் சூழ, லாரி பேக்கர் ( உலகம் கொண்டாடும் கட்டட கலைஞர் ) கட்டட அமைப்பில் கட்டப்பட்டிருந்த, குழந்தைகள் முகத்தில் எந்த வெறுப்பும் இல்லாமல் சந்தோஷமாக பட்டாம்பூச்சியை துரத்தி சென்று கொண்டிருந்த அந்த பள்ளிக்கு நான் அன்று வேண்டா வெறுப்பாகத்தான் சென்றேன்.
தருமபுரி மாவட்டத்தின் முன்னாள் தொடக்க கல்வி அலுவலர், அலுவல் நிமித்தமாக தருமபுரி மாவட்டத்தில் காடுகள் சூழ இருக்கும் நாகர்கூடல் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்றதாகவும், அந்த பள்ளி பயிற்றுவிக்கும் முறை, கட்டட அமைப்பு வித்தியாசமாக இருந்ததாகவும், முக்கியமான அந்த பள்ளியின் தாளாளர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், நான் அந்த பள்ளியை ஒரு முறையேனும் நேரில் பார்வையிட வேண்டும் என்றும் அவர் சொல்லிய போது, எந்த சுவாரஸ்யமும் இல்லாமல், நான் வேண்டா வெறுப்பாகத்தான் அந்த பள்ளிக்கு சென்றேன்.
அரசின் பங்களிப்பில்லாமல் இயங்கும் பள்ளிகள் அனைத்தும், பெரும்பாலும் பணத்தை நோக்கமாக கொண்டது என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை. அதனால்தான் அந்த பள்ளிக்கு வேண்டா வெறுப்பாக சென்றேன். மாணவர்கள் மற்றும் தாளாளருடான அந்த நெடிய உரையாடல் அந்த எண்ணத்தை மாற்றியது. நாம் பார்க்காவிட்டாலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக மாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை புரிய வைத்தது.
இவ்வளவு தீமைகளுக்கு பின்பும் இவ்வுலகம் எப்படி இயங்கி கொண்டிருக்கிறது என்று என்னுள் அவ்வப்போது எழும் கேள்விக்கு... ‘இன்னும் இவர்களால்தான் இவ்வுலகம் சிறிதேனும் அறத்துடன் இயங்கி கொண்டிருக்கிறது' என்று புரிய வைத்தது...’
பீடிகை போதும், வாருங்கள் பள்ளிக்கு போவோம்...
அந்த பள்ளியில் நான் இருந்த சில மணி நேரங்களில் பெற்ற அனுபவத்தை, அடைந்த பரவசத்தை, உங்களுக்கு அப்படியே கடத்தும் சொல் ஆளுமை எனக்கில்லை. இருந்தாலும் முயல்கிறேன்...
புவிதம் - காட்டுப் பள்ளி:
புவிதம், இது அந்த பள்ளியின் பெயர். ஏன் புவிதம்...? அதை பின்பு காண்போம். நான் ஏன் அதை காட்டுப் பள்ளி என்கிறேன்...? நிச்சயம் அது காடுகள் சூழ இருப்பதால் மட்டும் அல்ல. காடுகளில் எப்படி மரங்கள் அதன் இயல்பில் வளருமோ, அது போல்தான் இங்கும் குழந்தைகள் அதன் இயல்பில் வளர்கிறார்கள். குழந்தைகள் மீது எந்த ரசாயனங்களும் தெளிக்கப்படுவதில்லை (ரசாயனங்கள் என்று நான் குறிப்பிடுவது, நம் விருப்பங்கள், பணம் சார்ந்து நமக்குள் இருக்கும் மதிப்பீடுகள், சக மனிதனை போட்டியாளராக கருத வைக்கும் நம் கருத்துகள்). இவை எதுவும் அங்கு மாணவர்கள் மீது திணிக்கப்படுவதில்லை. அதனால்தான் அதை காட்டு பள்ளி என்கிறேன்.
நான் அந்த பள்ளிக்கு சென்றது ஒரு வெண்மேகம், தன் ஒளிக்கீற்றை பரப்பிய ஒரு காலை வேளையில். குழந்தைகள், கைகளில் குடம், களை கொத்தியுடன் பரபரப்பாக அங்கு இங்கும் சென்று கொண்டிருந்தார்கள். “பசங்களா... எங்கடா போறீங்க... ?” என்று ஒரு மாணவனை இடைமறித்து கேட்டபோது, “அண்ணா.... நாங்க பள்ளி தோட்டத்தில காய்கறிகள் விதைத்து இருக்கோம்னா... அதுக்கு தண்ணி ஊத்தப் போறோம்...?” என்று சொல்லிவிட்டு குடுகுடுவென ஓடினான்.
அவனை பின் தொடர்ந்து சென்றபோது, மாணவர்கள் பள்ளியின் பின் புறம் உண்டாக்கி உள்ள காய்கறி வனத்தை அடைந்தேன். முதிர்ந்த விவசாயிகள் போல், ஒரு ஒருங்கிணைந்த பண்ணையையே அந்த மாணவர்கள் உண்டாக்கி இருந்தார்கள்.
அவர்களுடன் பேச்சு கொடுத்தேன்.
“அண்ணா... நாங்க கீரை, உருளைக் கிழங்கு, சுரைக்காய், பீர்க்கை எல்லாம் போட்டு இருக்கோம்னா.... எட்டாவது படிக்கிற அண்ணன் எல்லாம் சேர்ந்து, சோளம் போட்டு இருக்காங்க...” என்றாள் நான்காம் வகுப்பு படிக்கும் தமிழ்ச்செல்வி.
பள்ளி மணி ஒலிக்கிறது. மாணவர்கள் உற்சாகமாக கை கால்களை கழுவிவிட்டு வகுப்பிற்கு செல்கிறார்கள்.
“மிஸ்... கிளாசுக்குள் வேண்டாம்... இன்னைக்கு மரத்தடியில் வகுப்பெடுங்க...” என்கிறான் ஐந்தாம் வகுப்பு மாணவன். மற்ற மாணவர்கள் எல்லாம் அவனை வழிமொழிகிறார்கள். அன்றைய வகுப்பு மர நிழலில் நடக்கிறது. அதே வகுப்பை சேர்ந்த இன்னொரு மாணவன், “மிஸ் எனக்கு இன்னைக்கு ரொம்ப சலிப்பா இருக்கு... நான் ஓவியம் வரையட்டுமா..” என்கிறான். அவனை அந்த ஆசிரியர் அனுமதிக்கிறார்.
மாணவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள். இப்படியாகதான் இருக்கிறது புவிதம் பள்ளி.
அமைதிக்கான ஒரு தேடல்...
உங்களுக்கு அந்த பள்ளியின் தாளாளர் மீனாட்சியை பற்றி கூறிவிடுகிறேன். அப்போதுதான், அந்த பள்ளியை பற்றி புரிந்து கொள்ள சுலபமாக இருக்கும்.
மீனாட்சி, உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். புனேவில் கட்டடக்கலை படித்தவர். உலகம் கொண்டாடும் கட்டட கலை கலைஞரான லாரி பேக்கரின் நேரடி மாணவர். புனேவில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளால் மனம் வாடி, அமைதியை தேடி 1992-ம் ஆண்டு தமிழகம் வந்தவர். தான் விரும்பும் அமைதியான இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை, கிராமங்களில்தான் இருக்கிறது என்று உணர்ந்து தருமபுரி மாவட்டம், நாகர் கூடல் பகுதியில் கணவர் உமேசுடன் குடியேறியவர்.
'நாம் பள்ளிகளில் வன்முறையை பயிற்றுவிக்கிறோம்...'
இனி, மீனாட்சியுடனான உரையாடல்...
உங்களுடன் பேச நிறைய இருக்கிறது. முதலில், உங்கள் பள்ளியின் பெயரில் இருந்தே தொடங்குகிறேன். ஏன் பள்ளிக்கு புவிதம் என்று பெயர்...?
"நாங்கள் நேரத்திற்கு பின்னால் ஓடுவதில்லை. நாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்" என்று சோளக்கூழைத் தந்துவிட்டு பேச துவங்குகிறார். "நான் இந்த புவிக்கு சுமையாக இருக்க கூடாது, அதனுடன் இயைந்து வாழ வேண்டும் என்று விரும்புபவள். அதனால்தான் பள்ளிக்கு அப்படியொரு பெயர் வைத்தேன்."
புரியவில்லையே...?
"புவிதம் = புவி + இதம். அதாவது புவிக்கு இதமாக இருப்பது. எங்கள் பள்ளி அப்படிதான் இயங்குகிறது."
தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கும் எங்களுக்கே, தமிழ் தகராறாக இருக்கிறது. ஆனால், ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட உங்கள் மொழி அறிவு வியக்க வைக்கிறதே...?
"அப்படியெல்லாம் இல்லை. நான் தமிழகம் வந்து ஏறத்தாழ 25 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனால், நான் இன்னும் தமிழ் மாணவிதான். இன்னும் தமிழ் பயின்று கொண்டுதான் இருக்கிறேன்."
சரி. மீண்டும் விஷயத்திற்கு வருவோம். மறைமுகமாக இல்லாமல் நேரடியாக கேட்கிறேன். நீங்கள் பள்ளி துவங்கியதற்கான நோக்கம் என்ன...? நீங்கள் மாணவர்களிடமிருந்து கட்டணமும் வாங்குவது இல்லை என்று அறிகிறேன்... கல்வி பணம் ஆகிவிட்ட சூழலில், உங்கள் நோக்கம்தான் என்ன...?
"இந்த பள்ளி என் சுயநலத்தின் நீட்சி. இங்கு குடிபெயர்ந்தவுடன், என் வீட்டில் இந்த கிராம குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் டியூசன் எடுக்க துவங்கினேன். எங்கள் மகள் கயாவும் வளரத் தொடங்கினாள். குழந்தைகள் மீது வன்முறையை திணிக்கும் பள்ளிகளில் என் மகளை சேர்க்க விருப்பமில்லை. அதே நேரம் மாலை நேரத்தில் என்னிடம் பயிலும் மாணவர்களும், முழு நேரமாக இங்கு படிக்க விரும்பினார்கள். என் மகளுக்காகவும், அந்த குழந்தைகளுக்காகவும்தான் இந்த பள்ளியை துவங்கினேன்."
'வன்முறையை திணிக்கும் பள்ளிகள்’. நீங்கள் வன்முறை என்று எதனை குறிப்பிடுகிறீர்கள்...?
"ஆம். வன்முறைதான். குழந்தைகள் அனைவரும் எட்டு மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்று நினைப்பது, அவர்களை அமர்ந்திருக்க வைப்பது வன்முறை இல்லையா...?. அவர்கள் எவ்வளவு இறுக்கமாக இருப்பார்கள், அதை நீங்கள் உணரவில்லையா... சரி.. மற்றவர்களை விடுங்கள்... நீங்கள் எவ்வளவு இறுக்கமாக இருந்திருப்பீர்கள்...? இந்த இறுக்கம் அவர்கள் சுயமாக சிந்திப்பதை தடுக்கிறது. அவர்கள் சுயத்தை அழிக்கிறது. அவர்கள் தன்னம்பிக்கையை சிதைக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிட வேண்டும். ஒப்பீட்டளவில், அரசாங்க பள்ளிகள் மிகவும் சுதந்திரமானது. அங்கு பயிலும் மாணவர்கள்தான் அதிக தன்னம்பிக்கை உடையவராக காணப்படுகிறார்கள்."
பள்ளிகள் மாறவேண்டும் என்கிறீர்கள். ஆனால், பாடத்திட்டமே மோசமாகதானே இருக்கிறது...?
"சமச்சீர் கல்வி எவ்வளவோ பரவாயில்லை. அது மாணவர்களை சிந்திக்க தூண்டுகிறது. அதிலும் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. ஆனால், நாங்கள் பயிற்றுவிக்கும் முறை மூலம் அதை இலகுவாக்குகிறோம். அதாவது சிறு கதைகள், பாடல்களை நாங்களே உண்டாக்குகிறோம். அதில் பாடத்திட்டத்தில் உள்ள விஷயங்களை கொண்டு வருகிறோம். அது கற்றலை சுலபமாக்குகிறது.
மேலும், இங்கு Ranking முறை இல்லை... இங்கு நடக்கும் தேர்வானது, மாணவர்களின் அறியாமையை அளக்கும் அளவுகோலாக இருப்பதில்லை; மாணவர்களை சிந்திக்க தூண்டுவதாக இருக்கிறது. இங்கு bilingual ஆக தமிழிலும், ஆங்கிலத்திலும் பாடம் நடத்துகிறோம். அதனால் அவர்கள் மொழி அறிவும் சிறப்பாக இருக்கிறது.
அதே நேரம், உங்களுக்கு இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன். மாற்றத்தை விரும்பும் நாங்கள் சிறு குழு. எங்களுக்கென்று சில வரம்புகள் உண்டு. அதில்தான் நாங்கள் வேலை செய்ய முடியும்."
எனக்கு நன்றாக புரிகிறது. சரி, பெற்றோர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது. அவர்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளியில் தோட்ட வேலை செய்ய எப்படி அனுமதிக்கிறார்கள்...?
"பெற்றோர்களின் மனநிலையும் நிச்சயம் மாற வேண்டும். சிலர், பள்ளி என்பதை பாடத்திட்டத்தை கற்பிக்கும் இடமாக மட்டும்தான் பார்க்கிறார்கள். எங்களை பொறுத்தவரை பள்ளி என்பது வாழ்வியலை பயிற்றுவிக்கும் இடம். மாணவர்கள் விவசாயத்தையும் கற்க வேண்டும். அப்போதுதான் நாளை அவர்கள் அரசு அதிகாரிகளாக அல்லது அரசு கொள்கைகளை வடிவமைக்கும் இடத்திற்கு செல்லும்போது, மக்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு கொள்கைகளை வடிவமைப்பார்கள். நாங்கள் விவசாயம் மட்டும் சொல்லித் தரவில்லை, நெசவு தொழில், கட்டடக் கலையையும் சொல்லிக் கொடுக்கிறோம்.அதாவது மாணவர்கள் சுயச்சார்புடன் இருக்க பயிற்றுவிக்கிறோம்.
மேலும், இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளை அவர்களுக்கு மதிய நேரத்தில் வேக வைத்து தருகிறோம். ரசாயனம் இல்லாமல் இயற்கை முறையில் அவர்களே வளர்த்த காய்கறிகளை அவர்கள் உண்ணுகிறார்கள்."
ஹூம். கட்டட கலை என்றவுடன்தான் நினைவிற்கு வருகிறது, பள்ளிகளின் கட்டடம் வித்தியாசமாக உள்ளதே...?
"லாரி பேக்கர் முறையில் கட்டப்பட்ட கட்டடங்கள் இவை. அதாவது, மாணவர்களுக்கு இயற்கையை சுரண்டக் கூடாது என்று நாம் கற்று தரும்போது, அவர்களின் சூழலும் அது மாதிரிதானே இருக்க வேண்டும். இந்த கட்டடங்களில் அதிக அளவில் சிமெண்ட் பயன்படுத்தப்படவில்லை. இயற்கையை சுரண்டி கட்டவில்லை. இந்த இடத்தில் என்ன பொருள் கிடைக்கிறதோ, அதை கொண்டு கட்டி உள்ளோம். மேலும், பகலில் இந்த கட்டடங்களில் தேவையான அளவிற்கு வெளிச்சமும், காற்றும் இருக்கும். அதனால், மின்விசிறியும், விளக்கும் தேவையில்லை. குழந்தைகளிடம், அணு உலையால், அனல் மின் நிலையத்தால் சூழல் கேடு என்று பயிற்றுவிக்கும் முன், மின்சாரத்தை விரயமாக்காமல் இருக்கவும் சொல்லிக் கொடுக்க வேண்டும்."
நீங்கள் புனேவில் சமூக ஏற்றத்தாழ்வுகள் பொறுக்காமல் தமிழகம் வந்தீர்கள். உங்கள் மாணவர்களிடம் அந்த சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசி உள்ளீர்களா...?
"நிச்சயமாக. அனைவரையும் சமமாக மதிக்க கற்றுத் தருகிறோம். பணம் மட்டுமே பிரதானம் இல்லை என்கிறோம். இந்த புவி நமக்கு மட்டுமானது இல்லை, அனைத்து ஜீவராசிகளுக்குமானது என்று சொல்லி தருகிறோம். இதையெல்லாம் வெறும் வார்த்தைகளில் மட்டும் சொல்லி தராமல், அது போல் வாழவும் பயிற்றுவிக்கிறோம்."
எல்லாம் மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனால், உங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரைதான் உள்ளது. மேல் படிப்பிற்கு மீண்டும் வழக்கமான பள்ளிகளுக்குதான் செல்ல வேண்டும். அதை எப்படி உங்கள் மாணவர்கள் எதிர் கொள்கிறார்கள்...?
"ஆம். ஆனால் நான் முன்பே கூறியது போல், எங்களால் எல்லாவற்றையும் மாற்ற முடியாது. வழக்கமான பள்ளிகளுக்கு இங்கிருந்து செல்லும் மாணவர்கள், அதில் தங்களை பொறுத்திக் கொள்ள சில காலம் எடுக்கிறது. ஆனால், அடித்தளம் சிறப்பாக உள்ளதால் அதிலும் நல்ல மதிப்பெண்களையே எடுக்கிறார்கள். புரிந்து கொண்டு பயில்கிறார்கள்." என்று சொன்ன மீனாட்சி, பேட்டியின் முடிவில் ஒரு விஷயத்தை சொன்னார். அதுவே இந்த கட்டுரைக்கும் சிறந்த முடிவுரையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
“மனிதர்கள் தங்கள் வாழ்வின் முக்கியமான ஒரு பெரும் பகுதியை பள்ளிகளில் கழிக்கிறார்கள். அதனால், அந்த இடம் அவர்களுக்கு பிடித்தமான இடமாக இருக்க வேண்டும். அவர்கள் விரும்பி கற்க வேண்டும். இறுக்கமான சூழல் இருக்க கூடாது. நாம் மோசமான முறையில் அவர்கள் மீது ஒன்றை திணிக்கும் போது, மோசமான ஒன்றைதான் அறுவடை செய்ய முடியும். நாம் அன்பையும், அறத்தையும் நல்ல சூழலில் விதைத்தால், இந்த பிரபஞ்சம் பூக்களால் நிறையும்.”
ஆம். புவிதம் முழுவதும் பூக்கள் பூத்து குலுங்குகிறது
சனி, 1 ஜூலை, 2017
PGTRB Exam Tips
முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு இன்னும் 2 நாட்களில்... இதோ உங்களுக்கான டிப்ஸ்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு ஜூலை 2ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது. தேர்வினை எதிர்கொள்ளவிருக்கும் உங்கள் அனைவருக்கும் எளிய டிப்ஸ் இதோ
1663 முதுகலைபட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வு ஜூலை 2ந் தேதி நடைபெறும். இந்த தேர்விற்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வு 32 மாவட்டங்களில் உள்ள 601 மையங்களில் நடைபெற இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
முக்கிய பாடத்தில் இருந்து 110 கேள்விகளும், கல்வி பயிற்று முறையில் இருந்து 30 கேள்விகளும், பொது அறிவில் இருந்து 10 கேள்விகளும் என்று மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்படும்.
1. தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கும் நீங்கள் கடைசி இரண்டு நாட்களில் புதிதாக எதையும் படிக்காதீர்கள். இதுவரை படித்தவற்றை திரும்ப ஞாகப்படுத்திக் கொள்ள மட்டும் செய்யுங்கள்.
2. ஒரு சிலர் கடைசி இரண்டு நாட்கள் மட்டும்தான் படிப்பார்கள். நீங்க எப்படி? படித்துவிட்டீர்களா? அல்லது இனிதான் படிக்கனுமா? கடைசி நாட்களில் புதிதாக படிப்பவர்கள் முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களை படிப்பது நல்லது.
3. கடைசி இரண்டு நாளாவது படிக்குமே என நினைப்பவர்கள் ஒரு பெரிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு அதில் எவ்வளவு படிக்க முடியுமோ அதைப்படிக்கலாம் என நினைக்காதீர்கள். முடிந்த அளவிற்கு மாதிரி வினாத்தாள்களை மட்டுமே கடைசி நாட்களில் படிப்பது நல்லது.
4. மாதிரி வினாத்தாளில் எல்லாப் பாடங்கள் சம்பந்தப்பட்ட கேள்விகளும் இருக்கும். அதனால் மாதிரி வினாத்தாள்களை நன்றாக படியுங்கள். படிப்பதை தெளிவாகப் படியுங்கள். மனதில் நிலைத்து இருக்கும் படி அனுதின நடைமுறை சம்பவங்களோடு இணைத்து படியுங்கள்.
5. முறையாக டிஆர்பி தேர்விற்கு தயாராகி வருபவர்கள். கடைசி இரண்டு நாட்களில் படித்தவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். புதிதாக எதையும் படிக்காதீர்கள். மாதிரி வினாத்தாள்களை வைத்துப் படித்து உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
6. தேர்வு நெருங்க நெருங்க தேவையில்லாத பயம் வரும். அந்த பயத்தை முதலில் துரத்துங்கள். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
7. நாளைக்கு தேர்வு என்றால் பெரும்பாலானோர் செய்யும் பெரிய தவறு முந்தைய நாள் ரொம்ப நேரம் கண்விழித்து படிப்பதுதான். தயவு செய்து அந்த தவற்றை நீங்கள் செய்யாதீர்கள். தேர்வுக்கு முந்தைய நாள் போதுமான அளவிற்கு தூங்கி எழுந்து செல்லும் போதுதான் உடலும், மூளையும் தெளிவாக இருக்கும்.
8. தேர்வு நாள் அன்று தேர்வறைக்கு குறித்த நேரத்திற்கு முன்னதாகவே சென்று விடுங்கள். காலை உணவைக் கட்டாயம் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லுங்கள்.
9. தேர்வு எழுதும் போது படித்தவற்றை நிதானமாகச் சிந்தித்து விடையளிக்க வேண்டும். பதட்டம் இல்லாமல் நிதானமாகச் சிந்திக்கும் போது உங்களுக்கு படித்தவைகள் எளிதில் நினைவுக்கு வரும். பதறிய காரியம் சிதறும். பதறாமல் நிதனமாக தேர்வில் செயல்படுவது அவசியம்.
10. ஒரு வினாவிற்கான விடை நினைவில் வராமல் போனால் அதையே நினைத்துக் கொண்டு அதனுடனே போராடிக் கொண்டிருக்கக் கூடாது. அந்த நேரத்தில் அதைவிட்டு விட்டு மற்ற விடைகளை எழுத வேண்டும். கடைசியாக அந்த கேள்விக்கு யோசித்து விடையளிக்க வேண்டும்
தேர்வு என்பது நம் வாழ்வில் நாம் அடுத்த நிலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதாகும். தேர்ந்தெடுக்கப்படும் வரை முயற்சியை கைவிடக்கூடாது.
"முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்"
CPS : ஓய்வூதியம் என்பதின் வரையறைகள்
CPSஐ நடைமுறைக்கு கொண்டு வந்ததில் மத்திய அரசின் செயல்பாடுகள்
மத்திய அரசின் 2001-2002 பொது பட்ஜெட்டில் ஓய்வூதியம் வழங்கும் சுமையை
கருத்தில் கொண்டு எதிகாலத்தில் ஓய்வூதியம் வழங்கும் முறையில்
சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அரசின் கொள்கை முடிவாக
முதன்முதலில் பாராளுமன்றத்தில் அறிவித்தது.மேலும் புதிய ஓய்வூதிய திட்டம்
2002-2003 ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் அக்டோபர் 2003 முதல் பணியில்
சேரும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத்
திட்டம் நடைமறைப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.இந்த
அறிவிப்பினை தொடர்ந்து பாதுகாப்பு துறையில் (இராணுவம்) பணிபுரிபவர்களின்
கடும் எதிர்ப்பு காரணமாக பாதுகாப்புத் துறையில் பணிபுரிபவர்களுக்கு
மட்டும் cpsயிலிருந்து விதிவிலக்கு அளித்து மத்திய அரசு உத்திரவிட்டது.
புதிய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும் அந்த நிதியை
கையாள்வதற்காகவும்,ஆகஸ்ட் 23,2003 இல் ஓய்வுதிய நிதி ஒழுங்குப்படுத்துதல்
மற்றும் மேம்படுத்துதல் ஆணையம் (pension fund regulatory and development
authority PFRDA) என்ற அமைப்பு ஒன்றை மத்திய அரசு
எற்ப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களின் நிதியினையும்
கையாள்வதே இதன் பணியாகும்.
இதனை தொடர்ந்து 22.12.2003 இல் வெளியிட்ட மத்திய அரசின் நிதித் துறை
அறிவிப்பின் மூலம் 01.01.2004 முதல் மத்திய அரசு பணியில் சேரும் அனைத்து
வகை பணியாளர்களுக்கும் (பாதுகாப்பு படையை தவிர) CPSதிட்டத்தினை மத்திய
அரசு அவசர சட்டமாக நடைமுறைக்கு கொண்டு வந்தது.இதனால் டிசம்பர் 22ஆம் நாளை
CPSயில் உள்ளவர்களுக்கு கறுப்பு தினம் என்பதே சொல்லலாம்.மேலும்
29.12.2004 அன்று மத்திய அரசு PFRDA அவசர சட்டத்தை நிறைவேற்றியது..
2004 ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அமைந்த புதிய மத்திய
அரசும் CPS திட்டத்தினை முழுமனதார ஏற்று சட்டமாக்க துடித்தது.மேலும்
14வது பாராளுமன்றத்தில் அன்றைய நிதியமைச்சர் அவர்கள் 12.02.2005 அன்று
CPSஇன் PFRDA மசோதாவினை மக்களவையில் தாக்கல் செய்தார். இம்மசோதாவினை
ஆராய்வதற்காக பார்லிமென்ட் நிலைக் குழுவிற்கு அனுப்பட்டது. அதில் சில
மாற்றங்களை செய்து 14.11.2008 அன்று மக்களவையில் தாக்கல் செய்தார்
இடதுசாரி கட்சிகளின் கடும் எதிர்ப்பால் நிறைவேறாததால்,அந்த மசோதா
காலவதியாகிவிட்டது.
2010 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அமைந்த அதே மத்திய அரசு
மீண்டும் CPS இன் PFRDA மசோதாவினை அன்றைய நிதியமைச்சர் அவர்கள்
18.03.2011 இல் மக்களவையில் தாக்கல் செய்தார். பலகட்ட விவாதங்களுக்கு
பின்னர் மக்களவையில் 04.09.2013 அன்று CPS மசோதா நிறைவேற்றப்பட்டது.
04.09.2013 அன்று மக்களவையில் தாக்கல் செய்த cps மசோதாவில் இடம்பெற்றுள்ள
சில தகவல்கள்
Cps மசோதாவானது மொத்தம் 513 பக்கங்களை கொண்டுள்ளது. அதில் 135 முதல் 140
வரையுள்ள பக்கங்களில், இதில் இணைந்துள்ள மாநிலங்களை பற்றி கூறுகிறது.
04.09.2013 அன்று இத்திட்டத்தில் 26 மாநிலங்கள் இணைந்துள்ளது.
136வது பக்கத்தின் 2வது பத்தியில் கூறியுருப்பதாவது
The state governments here not obliged to join.they joined
voluntarily. only for the central government employes,it is mandatory
from 1.1.2004.
இதன் தமிழாக்கம்
நாங்கள் எந்த ஒரு மாநில அரசையும் CPS திட்டத்தை அமுல்படுத்த நிர்பந்தம்
செய்யவில்லை. அவர்களின் விருப்பத்தை பொறுத்ததே.இது மத்திய அரசு
ஊழியர்களூக்கு மட்டுமே.அது 01.01.2004 முதல் நடைமுறைக்கு வந்தது.
மசோதாவில் உள்ள தமிழக அரசை பற்றிய வரிகள்
I want to remind him that tamil nade also by a notification made on
6th August 2003, joined the new pension scheme with effect from
1.4.2003.
மசோதாவில் உள்ள மற்ற பக்கங்களில், இணைந்துள்ள சந்தாதாரர்களின்
எண்ணிக்கை, அவர்களிடம் பிடித்த தொகை, காப்பீடு செய்யும் நிறுவனங்கள்
மற்றும் காப்பீட்டின் வகைகளை பற்றி கூறுகிறது.
மக்களவையில் நிறைவேறியதை தொடர்ந்து 06.09.2013 இல் மாநிலங்களவையில் CPS
மசோதா நிறைவேற்றப்பட்டு,குடியரசு தலைவரால் 18.09.2013 அன்று ஒப்புதல்
வழங்கி 19.09.2013 ல் மத்திய அரசின் கெஜட்டில் ஓய்வூதியத் துறையால்
வெளியிடப்பட்டு CPS திட்டத்தை சட்டமாக்கப்பட்டுள்ளது.
CPS மசோதா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மக்களவையில் தாக்கல்
செய்யப்பட்டும் சட்டமாக்கப்படாமாலேயே பாராளுமன்ற நெறிமுறைகளுக்கு
மாறாகவும் மக்களாட்சிக்கு எதிராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டது.என்பது
தான் இதில் முக்கியமான விசயமாகும்.
நிதி தொடர்பான அனைத்து ம்சோதாக்களும் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட
பின்னர் தான் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.ஆனால் CPSயானது
சட்டமில்லாமலே நடைமுறையில் இருந்தது.
இந்த CPSதிட்டமானது 2013ம் ஆண்டு வரை கேரளா,திரிபுரா,மேற்கு வங்காளம்
போன்ற மாநிலங்களில் அமுல்படுத்தவிலை.ஆயினும் இறுதியாக 1.4.2013 முதல்
கேரளாவிலும் இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர்.மற்ற இரு
மாநிலங்களும் GPF நடைமுறையில் தான் இருக்கிறது.
இந்த திட்டத்தால் முழுக்க முழுக்க கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே
இலாபம். அரசு ஊழியர்களுக்கு வேதனைகளும் ஏமாற்றமும் தான் மிஞ்சும்.
மத்திய அரசு CPS கணக்குகளை நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்களை கொண்டு
பராமரிக்கப்படுகிறது. ஆனாலும் திட்டத்தால் ஊழியர்களுக்கு எந்த வித பலனும்
இல்லை......
இவன்
அ.ஜெயப்பிரகாஷ்
அரூர் ஒன்றியம். தருமபுரி
மாணவர்களின் சிகை அலங்கரிக்கும் அன்பு ஆசிரியை
"தொடர்ந்து கஷ்டங்களை மட்டுமே வாழ்க்கையில் சந்திச்ச வலிகளோடு இருந்தவள் நான். டீச்சரானப் பிறகு என் மாணவர்களின் புன்னகைதான், என்னோட எல்லாக் கஷ்டங்களுக்கும் மருந்தாக அமைஞ்சது. இவங்கதான் என் சொந்தங்கள். என் பிள்ளைகளாக, தம்பி - தங்கைகளாகப் பார்க்கிறேன்" எனச் சொல்லும்போதே ஆசிரியை மகாலட்சுமியின் குரல் நெகிழ்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் ஆசிரியை. பள்ளி மாணவர்களுக்கு முடி வெட்டிவிடுவது, குளிப்பாட்டுவது, சாப்பாடு ஊட்டிவிடுவது என கல்வியைத் தாண்டி, அவரது ஒவ்வொரு செயலிலும் தாயுள்ளம் பளிச்சிடுகிறது.
"2006-ம் வருஷம் இந்தப் பள்ளிக்கு வந்தேன். இங்கே மலைவாழ் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் அதிகம் படிக்கிறாங்க. படிப்பின் வாசனையே தெரியாதிருந்த மக்களுக்கு, இந்தக் குழந்தைகள் வழியேதான் கல்வியின் மணத்தை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப் பள்ளிக்கு வந்த புதுசுல, மாசக்கணக்கில் முடிவெட்டாமல், அழுக்கு உடைகளில் இருக்கும் மாணவர்களைப் பார்த்து திகைச்சுப்போனேன்.
'எல்லோரும் முடிவெட்டிகிட்டுதான் ஸ்கூலுக்கு வரணும்'னு கண்டிப்பா சொன்னேன். ஆனால், அடுத்த நாளிலிருந்து நிறையக் குழந்தைங்க ஸ்கூலுக்கு லீவுப் போட ஆரம்பிச்சுட்டாங்க. விசாரிச்சப்போதான், அவங்க முடிவெட்டிக்ககூட காசு இல்லாத நிலையில் இருக்கிறது தெரிஞ்சது. ரொம்பவே துடிச்சுப் போயிட்டேன். நம் குழந்தைகளின் ஆரோக்கியம் முக்கியம், கூச்சம் பார்த்தால் குழந்தைகளின் முகத்தில் புன்னகை மலராதுன்னு நானே முடிவெட்டிவிட ஆரம்பிச்சேன்'' என்று சொன்னதும், நமக்குள் கிடுகிடுவென உயர்ந்து நிற்கிறார் மகாலட்சுமி.
''ஆரம்பத்தில் எனக்குத் தெரிஞ்ச மாதிரி வெட்டிவிடுவேன். ஹேர் ஸ்டைல் கோணலா இருக்கும். அதுக்கும் கூச்சப்பட்டுக்கிட்டு பசங்க லீவு போட்டுடுவாங்க. அதனால், ஒரு சலூன் கடைக்குப்போய் நாள் முழுக்க இருந்து முறையா முடிவெட்டக் கத்துகிட்டேன். அதுக்கு அப்புறம் 'டீச்சர், மறுபடியும் சொதப்பிடுவீங்களோன்னு பயந்தோம். ரொம்ப நல்லா வெட்டிவிட்டுட்டீங்க'னு பசங்க பாராட்டினதும் சந்தோஷப்பட்டேன்.
அப்போ ஆரம்பிச்சு அஞ்சு வருஷமா தினம் மூன்று மாணவர்களுக்கு முடிவெட்டிவிடறேன். ஆரம்பத்தில் ஒரு குழந்தைக்கு முடிவெட்ட அரை மணி நேரம் எடுத்துக்குவேன். இப்போ பத்தே நிமிஷத்துல வெட்டிவிடுற அளவுக்கு எக்ஸ்பீரியன்ஸ் ஆகிட்டேன். நகம் வெட்டிவிடுறது, குளிப்பாட்டிவிடும் செயல்களையும் செய்யறேன். இதெல்லாம் அவங்களை இன்னும் நெருக்கமா உணரவைக்குது" என்கிற மகாலட்சுமி, மாணவர்களுக்கு சாப்பாடு ஊட்டிவிடுவதையும் வழக்கமாகச் செய்துவருகிறார்.
"பள்ளியில் மொத்தம் 300 மாணவர்கள் படிக்கிறாங்க. அதில் பத்து பேரைத் தவிர மத்தவங்க பள்ளியில் இருக்கும் விடுதியில் தங்கிப் படிக்கிறவங்க. பெற்றோரைப் பிரிஞ்சு விடுதியில் இருக்கிறது எவ்வளவு பெரிய கொடுமை. அவங்க உணர்வுகள் எப்படி இருக்கும்னு நினைச்சு வருத்தப்பட்டிருக்கேன். அதனால், அவங்களுக்கு நானே ஊட்டிவிட ஆரம்பிச்சேன். பள்ளி முடிஞ்சதும் மாலை நேரங்களில் அவங்களோடு சேர்ந்து விளையாடுவேன்.
மாணவர்கள் படிப்பு எந்த வகையிலயும் பாதிக்காத வகையில்தான் இந்த அன்பும் அரவணைப்பும் இருக்கும். 'நாம எதுக்குக் குளிக்கணும், சுத்தமா இருக்கணும், நோய் வராமல் இருக்க என்ன செய்யணும், பாடப் புத்தகம் தாண்டிய அறிவுசார்ந்த விஷயங்களை எப்படித் தெரிஞ்சுக்கணும்'னு பல விஷயங்களையும் சொல்லிக் கொடுப்பேன்'' என்று மகாலட்சுமி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மாணவர்கள் ஓடிவந்து அவரைச் சூழ்ந்துகொள்கிறார்கள்.
"பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக முகநூல் நண்பர்கள் வழியே கிடைக்கும் பணத்தில், இப்போ கூடுதலாக ஒரு நபரை நியமிச்சிருக்கிறோம். அவரும் என்னோடு சேர்ந்து இந்தக் குழந்தைகளுக்கு முடிவெட்டிவிடுகிறார். பல கிராமியக் கலைகள் வழியே பாடங்களைச் சொல்லிக்கொடுக்கிறோம். அதனால், மாணவர்கள் மகிழ்ச்சியோடு படிக்க வராங்க. இவங்களோடு என் பையனும் இதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கும் நான்தான் முடிவெட்டிவிடுறேன்" என புன்னகைக்கிறார் மகாலட்சுமி.
அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு நாளை தேர்வு : கைக்குட்டை எடுத்து செல்ல தடை...மேலும் பல்வேறு தகவல்களை வெளியிட்டுஉள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நாளை போட்டி தேர்வு நடக்கிறது. மொத்தம், 2.19 லட்சம் பேர் பங்கேற்கும் இத்தேர்வுக்கு, கைக்குட்டை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - ௧ பதவியில், 1,663 இடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம் போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு, தமிழகம் முழுவதும், 601 மையங்களில் நாளை நடக்கிறது. மொத்தம், 2.19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சென்னையில், 41 மையங்களில், 15 ஆயிரத்து, 105 பேர் பங்கேற்கின்றனர். காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கும். தேர்வர்கள், காலை, 9:00 மணிக்கே, தேர்வு மையங்களுக்குள் செல்ல வேண்டும்; அதற்கு மேல் அனுமதி கிடையாது. தேர்வறைக்குள், இரண்டு, 'பால் பாய்ண்ட்' பேனா, ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. தேர்வு மையத்திற்குள் வரும் தேர்வர்களை, கல்வித்துறை பணியாளர்களும், போலீசாரும் சோதனையிடுவர்.
சோதனை முடித்து, 9:30 மணி முதல் தேர்வு துவங்கும் வரை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான காத்திருப்பு அறையில் இருக்க வேண்டும். தேர்வர்கள், கணினி, கால்குலேட்டர், மொபைல்போன், மின்னணு கடிகாரம், கைக்குட்டை உட்பட எந்த பொருளையும், தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. ஹால் டிக்கெட்டில் புகைப்படம் இல்லாதோர், ஒரு பாஸ்போர்ட் மற்றும் தபால்தலை அளவு புகைப்படம் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், பிற்சேர்க்கை படிவம் - 8-ஐ, www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, சான்றொப்பம் பெற்று எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நாளை போட்டி தேர்வு நடக்கிறது. மொத்தம், 2.19 லட்சம் பேர் பங்கேற்கும் இத்தேர்வுக்கு, கைக்குட்டை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - ௧ பதவியில், 1,663 இடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம் போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு, தமிழகம் முழுவதும், 601 மையங்களில் நாளை நடக்கிறது. மொத்தம், 2.19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சென்னையில், 41 மையங்களில், 15 ஆயிரத்து, 105 பேர் பங்கேற்கின்றனர். காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கும். தேர்வர்கள், காலை, 9:00 மணிக்கே, தேர்வு மையங்களுக்குள் செல்ல வேண்டும்; அதற்கு மேல் அனுமதி கிடையாது. தேர்வறைக்குள், இரண்டு, 'பால் பாய்ண்ட்' பேனா, ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. தேர்வு மையத்திற்குள் வரும் தேர்வர்களை, கல்வித்துறை பணியாளர்களும், போலீசாரும் சோதனையிடுவர்.
சோதனை முடித்து, 9:30 மணி முதல் தேர்வு துவங்கும் வரை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான காத்திருப்பு அறையில் இருக்க வேண்டும். தேர்வர்கள், கணினி, கால்குலேட்டர், மொபைல்போன், மின்னணு கடிகாரம், கைக்குட்டை உட்பட எந்த பொருளையும், தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. ஹால் டிக்கெட்டில் புகைப்படம் இல்லாதோர், ஒரு பாஸ்போர்ட் மற்றும் தபால்தலை அளவு புகைப்படம் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், பிற்சேர்க்கை படிவம் - 8-ஐ, www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, சான்றொப்பம் பெற்று எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியடங்களுக்கு நாளை தேர்வு
சென்னை: தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 இடங்களை நிரப்ப, நாளை(ஜூலை 2), தமிழகம் முழுவதும் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த அறிவிப்பு வெளியான பின், கூடுதல் காலி பணியிடங்களில் ஆட்களை நியமிக்க, அரசு அனுமதி அளித்தது. இதற்கான அரசாணை, நேற்று முன்தினம் வெளியானது. இதை தொடர்ந்து, நாளை நடக்கவுள்ள போட்டி தேர்வு மூலம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, 1,663 இடங்களுடன், கூடுதலாக, 1,712 இடங்கள் சேர்த்து, 3,375 பணியிடங்கள் நிரப்பப்படும் என, டி.ஆர்.பி., பொறுப்பு தலைவர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.குரூப் - 1 தேர்வில் முறைகேடு இல்லை டி.என்.பி.எஸ்.சி., விளக்கம்
சென்னை:'குரூப் - 1 முதல்நிலை தேர்வில், எந்த முறைகேடுக்கும் இடம் இல்லை' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
குரூப் - 1, தேர்வு, முறைகேடு, இல்லை, டி.என்.பி.எஸ்.சி., விளக்கம்..
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் - 1 தேர்வில், தேர்வு மையங்கள் தோறும், வினாத்தாள், விடைத்தாள் வழங்குவது, தேர்வு முடிந்த பின் விடைத்தாள்களை கட்டி, பாதுகாப்பாக முத்திரையிட்டு ஒப்படைப்பது வரை, அனைத்தும், வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக, போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படு கின்றனர். விடைத்தாள்களின் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, பின், கலைக்கப்பட்டு, விடைத் தாள்களில், பதிவெண்கள் மறைக்கப்பட்டு, டம்மி எண்கள்இடப்படும்.
எந்த விடைத்தாள், யாருடையது என்பது மிக ரகசியமாக வைக்கப்படுகிறது. விடை திருத்தும் மதிப்பீட்டாளர்களுக்கோ மற்றும் தேர்வாணைய அலுவலர்களுக்கோ, யாருடைய விடைத்தாள் எது என்பது தெரியாது.
அனுபவமிக்க மதிப்பீட்டாளர்களைக் கொண்டு, ஒவ்வொரு விடைத்தாளும், வெவ்வேறு மதிப்பீட்டாளர்களால், இருமுறை மதிப்பீடு செய்யப்படுகின்றன. தேவைப்பட்டால் மூன்றாவது மதிப்பீடும் செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு நிலையிலும், விடைத்தாள் திருத்தும் பணி மிக நம்பகத்தன்மையுடனும், பாதுகாப்புட னும், சந்தேகம், விதி மீறலுக்கு இடமின்றி நடக்கிறது. பின், தகுதி மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.
தேர்வாணைய தலைவர் விடுப்பில் செல்வதற்கும், குரூப்- - 1 தேர்வு முடிவு வெளியிடுவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
வேலையற்ற இளைஞர்களுக்கு, தேர்வாணை யம் நம்பிக்கையூட்டும் நிறுவனமாக விளங்கு கிறது. எனவே, ஆதாரமற்ற செய்திகள், இளைஞர்களின், குறிப்பாக தேர்வர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அவர்கள் மத்தியில் மிகுந்த மன உளைச்சலையும், விரக்தியையும் ஏற்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு
சென்னை: தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, ௧,௬௬௩ முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - ௧ இடங்களை நிரப்ப, நாளை, தமிழகம் முழுவதும் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த அறிவிப்பு வெளியான பின், கூடுதல் காலி பணியிடங்களில் ஆட்களை நியமிக்க, அரசு அனுமதி அளித்தது. இதற்கான அரசாணை, நேற்று முன்தினம் வெளியானது. இதை தொடர்ந்து, நாளை நடக்கவுள்ள போட்டி தேர்வு மூலம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, ௧,௬௬௩ இடங்களுடன், கூடுதலாக, ௧,௭௧௨ இடங்கள் சேர்த்து, ௩,௩௭௫ பணியிடங்கள் நிரப்பப்படும் என, டி.ஆர்.பி., பொறுப்பு தலைவர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)















