திங்கள், 12 ஜூன், 2017
இனி தபால் நிலையத்திலும் ஆதார் பதிவு செய்யலாம் - ஜூலை முதல் நடைமுறை!
ஆதார் விவரங்களை பதிவு செய்ய ஆதார் மையத்துக்கு தேடி அலைந்து கொண்டு இருக்கிறோம். வரும் ஜூலை மாதத்தில் இருந்து அப்படி அலையத் தேவையில்லை, தபால் நிலையத்திலேயே ஆதார் விவரங்களை பதிவுசெய்யும் முறை நடைமுறைக்கு வர இருக்கிறது.
இதற்காக மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட தபால் நிலையங்களை அடையாளம் காணும் பணியில் தபால் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த குறிப்பிட்ட தபால் நிலையங்களில் ஆதார் விவரங்களை பதிவு செய்யலாம், ஆதார் தொடர்பான விவரங்களையும் “அப்டேட்” செய்து கொள்ளலாம்.
முதல் கட்டமாக தபால் நிலையத்தில் ஆதார் விவரங்களை பதிவு செய்யும் முறையை 12 நகரங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, புதுச்சேரி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்ட தலைநகரில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படலாம்.
இந்த குறிப்பிட்ட தபால் நிலையங்களில் அந்தந்த மாவட்ட மக்கள், தங்களின் ஆதார் தொடர்பான விவரங்களை அதாவது செல்போன் எண், முகவரி மாற்றம், மின்அஞ்சல் மாற்றம் போன்றவற்றை “அப்டேட்” செய்யலாம், புதிதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கும் மக்களும் தங்கள் விவரங்களை பதிவுசெய்யலாம்.
சென்னை மண்டலத்துக்கான தபால்நிலைய மேலாளர் ஜே.டி. வெங்கடேஸ்வரலு கூறுகையில், “ மாநிலம் முழுவதும் தபால் நிலையங்களில் ஆதார் கார்டுகள் பதிவு செய்யவும், ஆதார் விவரங்களை அப்டேட் செய்யவும், 12 தலைமைத் தபால்நிலையங்கள், 2 ஆயிரத்து 515 துணை தபால் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தபால் நிலையங்களில் ஆதார் தொடர்பான சேவைகளை மக்கள் பெறலாம். கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் ஆதார் கார்டுகள் புதிதாக பதிவு செய்ய தபால் நிலையத்துக்கு எளிதாக வந்து செல்லும் வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தபால் நிலையத்துக்கு 2 பணியாளர்கள் வீதம் ஒதுக்கப்பட்டு, இந்த பணிகள் நடைபெறும். இதற்காக 100 ஊழியர்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்து இருக்கிறோம். அவர்கள் சென்று மற்ற ஊழியர்களுக்கு இது தொடர்பாக பயிற்சி அளிப்பார்கள். ஆதார் விவரங்களை பதிவு செய்யும் கருவிகளும், வாங்கப்பட்டு, அந்தந்த தபால் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்காக ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் ஆதார் விவரங்களை பதிவுசெய்ய ஒதுக்கப்படலாம்” எனத் தெரிவித்தார்.
நோட்டரி பப்ளிக் அட்டஸ்டேஷன் தேவையில்லை என்பதை அறிவீர்களா?
பள்ளி, கல்லூரி, வேலை வாய்ப்பு என எதற்கு விண்ணப்பித்தாலும், சான்றிதழ் நகல்களுக்கு அட்டஸ்டேஷன் (சான்றொப்பம்) பெற்று அனுப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். விண்ணப்பத்தைப் பெறுபவர்களுக்கு அட்டஸ்டேஷன் அவசியம் என்கிறார்கள். இதைக் காலம் காலமாகக் கடைப்பிடித்து வரும் வழக்கம் என்றாலும், சட்டப்படி அட்டஸ்டேஷன் அவசியமில்லை. இந்த விவரத்தைப் பிரதமரின் அலுவலக இணையத்தளத்திலேயே வெளியிட்டு இருக்கிறார்கள்.
அட்டஸ்டேஷன்
பெற்றோர்களும், பிள்ளைகளும் அட்டஸ்டேஷன் வாங்குவதற்குப் பல அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்கி அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரை (Gazetted Officer) தேடி அலைய வேண்டி இருக்கிறது. பெரும்பாலும், கிராமப்புறங்களில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்கள் இருக்க மாட்டார்கள். நகரப்பகுதியில்தான் இருப்பார்கள். சிலர் அட்டஸ்டேஷன் போடுவதற்கு நூறு ரூபாயில் இருந்து ஐந்நூறு ரூபாய் வரை வாங்குகிறார்கள். ஆனால், அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம்தான் அட்டஸ்டேஷன் வாங்குகிறோம் என்பதற்கான எந்த நடைமுறையும் இல்லை. இப்போது அரசு அலுவலகங்களில் ஒய்வுப்பெற்றவர்கள் கூட அட்டஸ்டேஷன் போடுகிறார்கள். ‘உண்மையில் அட்டஸ்டேஷன் அவசியமா?’ என்ற கேள்வியோடு வருமானவரித் துறையின் மூத்த அதிகாரியான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி சந்தித்தோம்.
"ஜெராக்ஸ் மிஷின் வருவதற்கு முன்பு, சான்றிதழ்களின் விவரங்களை டைப்ரைட்டிங் செய்து அதனை விண்ணப்பத்துடன் இணைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது டைப்ரைட்டிங் செய்ததில் எந்தப் பிழையும் இல்லை என்பதற்கான சான்றொப்பமிடும் பழக்கம் இருந்தது. ஆனால், தற்போது ஜெராக்ஸ் மிஷின் மூலச் சான்றிதழை அப்படியே நகலேடுத்து தருகிறது. ஆனால் இன்னமும் டைப்ரைட்டிங் காலத்தில்தான் இருக்கிறோம்.
அரசிதழில் இடம்பெற்ற அலுவலர்களைத்தான் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்கள் (Gazetted Officer) என்று அழைப்பார்கள். மத்திய அரசு அலுவலகங்களில் 'குரூப் பி' நிலையில் இருக்கும் அதிகாரிகள் அட்டஸ்டேஷன் செய்யலாம். கிராமப்புறங்களில் போஸ்ட் மாஸ்டர், வங்கி கிளை மேலாளர் என எல்லோரும் சான்றொப்பம் இடுவார்கள். ஆனால் அவர்கள் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்கள் கிடையாது. அவர்களுக்குத் தெரியாமல் சான்றொப்பம் செய்து வருகிறார்கள்.
அட்டஸ்டேஷன் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியாரோ ஒருவர் சான்றொப்பமிடுவதை நம்பும் அலுவலகங்கள் விண்ணப்பிக்கும் நபர் சான்றொப்பமிடுவதை நம்ப மறுப்பது அபத்தமாக இருக்கிறது. பள்ளியில் சேரும்போதோ அல்லது வேலைக்குச் சேரும்போதோ மூலச்சான்றிதழை (Original Certificates) பார்த்துவிட்டுதான் சேர்த்துக்கொள்கிறார்கள். இவ்வாறு இருக்கும்போது பிரயோசனமே இல்லாத விஷயத்தை வைத்துக்கொண்டு மக்களைக் கஷ்டப்படுத்துகிறார்கள். இதனால் அலைச்சலும், பண விரயமும் ஏற்படுகிறது. ஒரு ஜனநாயக நாட்டில் சான்றிதழ்களைப் பார்த்து சான்றொப்பமிடுவதற்கு கைகட்டி நிற்பதும், அதற்கு பணம் கொடுப்பதும் தேவையற்றது.
இதனை உணர்ந்த பிரதமர் 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 'சான்றொப்பமிடும் வழக்கத்தையும், நோட்டரி பப்ளிக்-யிடம் உறுதிமொழி பத்திரங்கள் (Affidavits) பெறுவதையும் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சுயசான்றொப்பமிடும் (Self Attestation) வழக்கத்தைக் கொண்டு வாருங்கள்' என்று அறிவுறுத்தினார். பிரதமரின் ஆலோசனையை ஏற்று மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை அனைத்து மாநில தலைமைச்செயலாளர்கள், துறைச்செயலர்கள் அனைவருக்கும் அட்டஸ்டேஷன் மற்றும் நோட்டரி பப்ளிக் உறுதிமொழி பத்திரங்கள் தேவையில்லை. சுயசான்றொப்பம் போதுமானது' என்று சுற்றறிக்கையை அனுப்பியது. ஆனால், இன்னமும் அட்டஸ்டேஷன் மற்றும் நோட்டரி பப்ளிக் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
ஒருவர் மூலச்சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை மறைத்தால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம். இதை நிர்வாக சீர்திருத்தக்குழுவும் வலியுறுத்தி இருக்கிறது.விண்ணப்பம் பெறுபவர்கள் பொதுமக்களின் கஷ்டங்களை உணர்ந்தும், தேவையில்லாத வழக்கத்தைக் கைவிடுவது நல்லது" என்கிறார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
நாம் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தாலும் இன்னமும் பழைய முறையைக் கண்மூடித்தனமாக பின்பற்றுவது முன்னேற்றாமல் இருப்பதையே சுட்டிக்காட்டுகிறது. இளைஞர்களே, விண்ணப்பிக்கும் போது சுயசான்றொப்பமிடும் (Self Attestation) மட்டும் வழக்கத்தில் கொள்ளுங்கள்.
அரசு பள்ளிகளுக்கு இணையதளம் கல்வி மேம்பாட்டுக்கு திட்டம்....
அரசு பள்ளிகளின் செயல்பாட்டை, பொதுமக்கள் அறியும் நோக்கில், பிரத்யேக இணையதளம் உருவாக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில், பல அதிரடி மாற்றங்கள் நடக்கின்றன.
மத்திய அரசு நிதியில், 'ஸ்மார்ட் கிளாஸ் ரூம்' அமைக்கவும், கல்வித் துறை முனைப்பு காட்டி வருகிறது. அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., சார்பில், அரசு பள்ளிகளுக்கு பிரத்யேகஇணைய தளம் உருவாக்கவும், உயர் கல்வி குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தவும், நிதி ஒதுக்கி, மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை சாதகமாக்கி, அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முதல்கட்டமாக, மாவட்ட வாரியாக உள்ள, பழமை வாய்ந்த, அதிக தேர்ச்சி விகிதம் கொண்ட பள்ளிகளுக்கு, முன்னுரிமை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆர்.எம்.எஸ்.ஏ., உதவி திட்ட அலுவலர் ஒருவர் கூறியதாவது:மத்திய அரசின் நிதியை முழுமையாக பயன்படுத்தி, அரசு பள்ளிகளை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வாரியாக பிரத்யேக இணையதளம் உருவாக்கும் போது, கல்வி சார் செயல்பாடுகளை எளிதில் விளம்பரப்படுத்தலாம். மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும் இத்திட்டம் உதவி புரியும்.
பள்ளிக் கல்வித் துறையில், பல அதிரடி மாற்றங்கள் நடக்கின்றன.
மத்திய அரசு நிதியில், 'ஸ்மார்ட் கிளாஸ் ரூம்' அமைக்கவும், கல்வித் துறை முனைப்பு காட்டி வருகிறது. அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., சார்பில், அரசு பள்ளிகளுக்கு பிரத்யேகஇணைய தளம் உருவாக்கவும், உயர் கல்வி குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தவும், நிதி ஒதுக்கி, மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை சாதகமாக்கி, அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முதல்கட்டமாக, மாவட்ட வாரியாக உள்ள, பழமை வாய்ந்த, அதிக தேர்ச்சி விகிதம் கொண்ட பள்ளிகளுக்கு, முன்னுரிமை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆர்.எம்.எஸ்.ஏ., உதவி திட்ட அலுவலர் ஒருவர் கூறியதாவது:மத்திய அரசின் நிதியை முழுமையாக பயன்படுத்தி, அரசு பள்ளிகளை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வாரியாக பிரத்யேக இணையதளம் உருவாக்கும் போது, கல்வி சார் செயல்பாடுகளை எளிதில் விளம்பரப்படுத்தலாம். மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும் இத்திட்டம் உதவி புரியும்.
மேலும், நலத்திட்ட பொருட்கள் வினியோகம், பொதுத் தேர்வு பட்டியல் தயாரிக்க, மாணவர்களின் விபரங்கள் திரட்டுவதிலும் சிக்கல் இருக்காது. இதற்கான முதற்கட்ட பணிகள், விரைவில் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஜே.இ.இ., தேர்வில் ஹரியானா மாணவர் முதலிடம் : மண்டல அளவில் கேரள மாணவர் சாதனை..
.கேரள மாணவர், தென் மண்டல அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐ.ஐ.டி.,யில் படிக்க, ஜே.இ.இ., பிரதான நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற, பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு, மே, 21ல் நடத்தப்பட்டது. சென்னை - ஐ.ஐ.டி., நடத்திய, இந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகின. மொத்தம், 1.72 லட்சம் பேர் விண்ணப்பித்து,1.59 லட்சம் பேர், தேர்வில் பங்கேற்றனர். அவர்களில், 50 ஆயிரத்து, 455 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவை சேர்ந்த மாணவர் சர்வேஷ் மேத்தானி, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
ஐ.ஐ.டி.,யில் படிக்க, ஜே.இ.இ., பிரதான நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற, பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு, மே, 21ல் நடத்தப்பட்டது. சென்னை - ஐ.ஐ.டி., நடத்திய, இந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகின. மொத்தம், 1.72 லட்சம் பேர் விண்ணப்பித்து,1.59 லட்சம் பேர், தேர்வில் பங்கேற்றனர். அவர்களில், 50 ஆயிரத்து, 455 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவை சேர்ந்த மாணவர் சர்வேஷ் மேத்தானி, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
ஐ.ஐ.டி.,யின் மண்டல அளவில், தென் மண்டலமான சென்னை ஐ.ஐ.டி.,யில் பதிவு செய்த மாணவர்களில், கேரள மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்த, ஷகில் மாஹின், தேசிய அளவில் நான்காம் இடமும், மண்டல அளவில் முதலிடமும் பிடித்துள்ளார். பெண்கள் பிரிவில், ஐதராபாத்தை சேர்ந்த ரம்யா நாராயணசாமி என்ற மாணவி, பொது பட்டியலில் தேசிய அளவில், 35ம் இடத்தையும், பெண்கள் பிரிவில், தேசிய அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
தேர்ச்சி விபரங்கள் வருமாறு:
● ஐ.ஐ.டி.,யின் ஏழு மண்டலங்களில், சென்னை - ஐ.ஐ.டி., மண்டலத்தில் அதிகபட்சம், 10 ஆயிரத்து, 240 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 90 சதவீதத்திற்குமேற்பட்டோர், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள்
● ஐ.ஐ.டி., - மும்பை மண்டலத்தில், 9,893 பேர் தேர்ச்சி பெற்று, இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். ஐ.ஐ.டி., - டில்லி, 9,207; ஐ.ஐ.டி.,- கான்பூர், 6,809; கரக்பூர், 6,138; ரூர்க்கி, 5,050;குவகாத்தி, 3,118 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
● 'டாப் - 10' பட்டியலில், 10 பேர்; 'டாப் - 100'ல், 100 பேர்; 'டாப் - 500'ல், 500 பேர்; இடம் பெற்றுள்ளனர்.
● ஐ.ஐ.டி., - மும்பை மண்டலத்தில், 9,893 பேர் தேர்ச்சி பெற்று, இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். ஐ.ஐ.டி., - டில்லி, 9,207; ஐ.ஐ.டி.,- கான்பூர், 6,809; கரக்பூர், 6,138; ரூர்க்கி, 5,050;குவகாத்தி, 3,118 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
● 'டாப் - 10' பட்டியலில், 10 பேர்; 'டாப் - 100'ல், 100 பேர்; 'டாப் - 500'ல், 500 பேர்; இடம் பெற்றுள்ளனர்.
தலித் மாணவர்கள் 'டாப்'
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வில், ஜாதி வாரியான இட ஒதுக்கீட்டின் படி, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுஉள்ளது. தேர்ச்சி சதவீதத்தில், ஆதிதிராவிட மாணவர்கள்,54 சதவீதம் தேர்ச்சி பெற்று, முதலிடத்தில் உள்ளனர். பழங்குடியினர், 47 சதவீதத்துடன் இரண்டாம் இடம்; பொதுப்பிரிவினர், 34 சதவீதத்துடன் மூன்றாம் இடம் மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்டோரில், 15 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தில் உள்ளனர். எண்ணிக்கை அடிப்படையில், பொதுப்பிரிவு மாணவர்கள், 23 ஆயிரத்து, 390 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆதிதிராவிட மாணவர்கள், 13 ஆயிரத்து, 312 பேர் தேர்ச்சி பெற்று, இரண்டாம் இடத்தில் உள்ளனர். பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், 9,043 பேர் தேர்ச்சி பெற்று, மூன்றாம் இடத்திலும், பழங்குடியின மாணவர்கள்,4,710 பேர் தேர்ச்சி பெற்று, நான்காம் இடத்திலும் உள்ளனர்.
சென்னை டி.பி.ஐ வளாகத்தில் தீ விபத்து!...
சென்னையில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 15 பழைய வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது டி.பி.ஐ வளாகம். இங்கு கல்வித் துறை அலுவலகங்கள் மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே இன்று சென்னை டி.பி.ஐ வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15 பழைய வண்டிகள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தற்போது தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டதால், மாணவர்களுக்கு வழங்கவேண்டிய புத்தகங்கள் சேதமின்றி காப்பற்றப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஜி.எஸ்.டி வரி: 66 பொருள்களின் விலை குறைகிறது!..
ஜி.எஸ்.டி வரி வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கும் நிலையில் நேற்று நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் சில பரிசீலனைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்தக் கூட்டத்தில் 66 பொருள்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மொத்தம் 133 பொருள்களுக்கான பரிசீலனை கருத்துக்கள் பெறப்பட்டன. அவை குறித்து ஆலோசனை நடத்திய பின்னர் 66 பொருள்கள் மீதான வரிவிகிதங்களைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இன்சுலின் போன்ற முக்கியமான பொருள்கள் அவற்றில் அடக்கம்.
இந்தக் கூட்டத்தில் மொத்தம் 133 பொருள்களுக்கான பரிசீலனை கருத்துக்கள் பெறப்பட்டன. அவை குறித்து ஆலோசனை நடத்திய பின்னர் 66 பொருள்கள் மீதான வரிவிகிதங்களைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இன்சுலின் போன்ற முக்கியமான பொருள்கள் அவற்றில் அடக்கம்.
குறிப்பாக சினிமாவுக்கான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு சினிமாக்களூக்கு 28 சதவிகித வரி விதிக்கப்பட்டது. இது சினிமா துறையினர் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தக் கூட்டத்தில் ரூ.100-க்கும் அதிகம் உள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கு 28% வரியும், அதற்கும் கீழே உள்ள டிக்கெட்டுகளுக்கு 18% வரி என்று குறைக்கப்பட்டிருக்கிறது.
ஜி.எஸ்.டி அமல்படுத்துவதினால் பொருள்களின் விலை குறைகிறதா இல்லையா என்பது ஜூலை 1 அன்று தெரிந்துவிடும்.
38,000 மரங்கள் நட்ட கோவை நடத்துனர்... சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை....
கோவை: கோவையைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துனர் யோகநாதன் 38,000 மரங்களை நட்டதற்காக, சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
யோகநாதன், கோவை மாநகரப் பேருந்து கழகத்திற்கு உள்பட்ட மருதமலை - காந்திபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் தடம் எண் 70 பேருந்தில், நடத்துனராகப் பணிபுரிகிறார்.
யோகநாதன், கோவை மாநகரப் பேருந்து கழகத்திற்கு உள்பட்ட மருதமலை - காந்திபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் தடம் எண் 70 பேருந்தில், நடத்துனராகப் பணிபுரிகிறார்.
கடந்த 28 ஆண்டுகளாக, நடத்துனர் வேலை பார்க்கும் யோகநாதன், தனது இளம் வயதில் தொடங்கி, கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக, மரம் நடும் வேலையில் தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
வன உயிரினங்கள், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், அதற்காகவே இந்த மரம் நடும் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்து வருவதாகக் கூறுகிறார் யோகநாதன்.
சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில், ' யோகநாதன் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசுப் பேருந்து நடத்துனர். தனி ஒருவனாக, கடந்த 28 ஆண்டுகளில் 38,000 மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளார்.
வன உயிரின பாதுகாப்பு பற்றி இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவர் இந்த செயலை செய்து வருகிறார்,' என்று குறிப்பிட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம்... இல்லாவிட்டால் சம்பளம் கிடையாதாம்.....
உத்தரப்பிரதேசத்தில் அரசு பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் ஜூலை மாதம் முதல் கண்டிப்பாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும், அவ்வாறு ஆதார் அட்டை இல்லாத ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத் வந்தபின் பல அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறார். கல்வித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவர பள்ளி விடுமுறை நாட்களைக் குறைத்து, வேலை நாட்களை நீட்டித்தார். தலைவர்களின் பிறந்த, மறைந்த நாட்களில் விடுமுறையை ரத்து செய்து, அந்த நாட்களில் அந்த தலைவர்கள் குறித்து அறியும் வகையில் பள்ளி நடத்த உத்தரவிட்டார்.
உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத் வந்தபின் பல அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறார். கல்வித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவர பள்ளி விடுமுறை நாட்களைக் குறைத்து, வேலை நாட்களை நீட்டித்தார். தலைவர்களின் பிறந்த, மறைந்த நாட்களில் விடுமுறையை ரத்து செய்து, அந்த நாட்களில் அந்த தலைவர்கள் குறித்து அறியும் வகையில் பள்ளி நடத்த உத்தரவிட்டார்.
இந்நிலையில், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும், வருகைப்பதிவு சரியாக இருக்க வேண்டும் என்ற திட்டமிட்டு, அனைத்து ஆசிரியர்களும் ஆதார் அட்டை பெறுவதை முதல்வர் ஆதித்யநாத் கட்டாயமாக்கியுள்ளார்.
இது குறித்து கல்வித்துறை அமைச்சர் அனுபமா ஜெய்ஸ்வால் சனிக்கிழமை அதிகாரிகளுடன் லக்னோ நகரில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.அப்போது அவர் கூறுகையில், “
அரசு தொடக்க பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் மட்டும் 4.95 லட்சம் ஆசிரியர்கள் 1.68 லட்சம் பள்ளிகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஆதார் அட்டையை ஜூலை மாதத்துக்குள் பெற்று, இதை வங்கிக் கணக்கோடு இணைத்து இருப்பது கட்டமயாகும். இந்த ஆதார் அட்டைதான் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டையாகவும் பயன்படப்போகிறது.
அவ்வாறு ஆதார் அட்டையை பெறாமல், ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்காமல் இருக்கும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படாது. ஆசிரியர்கள் மத்தியில் வெளிப்படைத்தன்மை, பள்ளிக்கு சரியாக வருகை தருகிறார்களா என்பதை கண்டறிய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஆசிரியர்களுக்கு ஆதார் எண் வைத்திருப்பார்கள், அவ்வாறு இல்லாதவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம் நடத்தப்படும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு, அது பள்ளியுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் 1.78 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 30 சதவீதம் மாணவர்களுக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது. புறநகர் மற்றும் தகவல் தொடர்பில்லாத பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆதார் அட்டை பெறுவதில் சிரமங்கள் உள்ளன. அவர்களுக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் சாதித்துக் காட்டிய சமோசா விற்பவரின் மகன்!....
நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் இந்திய தொழில்நுட்ப கழகமான ஐ.ஐ.டியில் சேர்ந்து படிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜெ.இ.இ (JEE) தேர்வுகள் நடத்தப்படும். இந்த ஆண்டு நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த சமோசா விற்கும் சுப்பா ராவ்வின் மகன் மோகன் அப்யாஸ், அகில இந்திய அளவில் 64-வது இடத்தைப் பிடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
இதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த சமோசா விற்கும் சுப்பா ராவ்வின் மகன் மோகன் அப்யாஸ், அகில இந்திய அளவில் 64-வது இடத்தைப் பிடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
இது குறித்து அப்யாஸ், 'நான் முதல் 50 இடங்களுக்குள் வந்துவிடுவேன் என்று நினைத்தேன். அதனால், முடிவுகள் வெளியானவுடன் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால், இப்போது கொஞ்சம் சந்தோஷமாகவே உணர்கிறேன். என் ஆதர்ச நாயகன் அப்துல்கலாம்தான்' என்று பெருமை ததும்ப பேசும் இந்த சாதனை நாயகன் தன் வெற்றிக்குக் காரணம் பெற்றோர்களும் ஆசிரியர்களுமே என்கிறார்.
இது குறித்து அப்யாஸின் தந்தை ராவ், 'எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவன் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வரை படிப்பான். அவன் 10-வது வகுப்பில் படிக்கும் வரை விற்பனைக்குத் தேவையான சமோசாக்களை செய்வதற்கு உதவியாக இருப்பான்.' என்று நெகிழ்ச்சியாக தன் மகனின் வெற்றி குறித்து பேசினார்.
மாறுமா பள்ளி நேரம்?
அன்று காலை வழக்கம்போல் என் மகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு வீட்டிலிருந்து திடீரென சிறுவன் ஒருவன் கணநேரத்தில் சாலையை கடந்தான். அவனுக்கோ, அவனின் பெற்றோருக்கோ சாலையின் இருபுறமும் வந்து கொண்டிருந்த வாகனங்களை பற்றியோ, சாலை விதிகள் பற்றியோ எந்தவித அக்கறையும் இருந்ததாக தெரியவில்லை.
தனது வீட்டுக்கு எதிரே ஒலி எழுப்பியபடி நின்று கொண்டிருந்த பள்ளி வேனில் மேலும் தாமதிக்காமல் ஏறிவிட வேண்டும் என்பது மட்டுமே அந்தச் சிறுவனின் இலக்காக இருந்தது.
ஒரு பூனைக்குட்டி சாலையின் குறுக்கே ஓடுவதைப் போன்று சட்டென அந்தச் சிறுவன் எனது வாகனத்தின் முன் எதிர்ப்பட்டான். இருப்பினும், நான் உடனே வாகனத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அன்றாடம் காலை வேளையில் பள்ளி வேனை பிடிக்க, பிள்ளைகள் அவசர அவசரமாக கிளம்புவதும், கேட் மூடப்படும் கடைசி நிமிடத்திற்குள்ளாவது தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டுமென்ற முனைப்பில், அவர்களது பெற்றோர் இருசக்கர வாகனத்தில் பந்தய குதிரைகளாய் பறந்து, சாலையில் விழுந்து எழுவதும் சென்னை போன்ற பெருநகரங்களில் அன்றாடம் அரங்கேறும் காட்சிகளாக உள்ளன.
பெருநகரங்கள் தொடங்கி நகரங்கள், சிறுநகரங்கள், கிராமங்கள் வரை, இன்றும் அரசுப் பள்ளிகளில் காலை ஒன்பது மணியளவில் இறை வணக்கம் முடிந்த பிறகு, ஒன்பதரை மணிக்குதான் வகுப்புகள் ஆரம்பிக்கின்றன.
இதனால், இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் காலை பள்ளிப் பாடங்களை படித்துவிட்டு, ஆற அமர சிற்றுண்டி சுவைத்துவிட்டு பதற்றமின்றி பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்களோ? அவசர கதியில் பள்ளிக்கு கிளம்ப வேண்டிய அவஸ்தையை தினமும் அனுபவித்து வருகின்றனர்.
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் காலை 8.30 மணிக்கே வகுப்புகள் ஆரம்பித்துவிடுவதுதான் மாணவர்களின் இந்த அவதிக்கு காரணம். இதற்கு மாநகரங்களில் பீக் -ஹவர்ஸ் நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பள்ளிகளில் மாலை நேரத்தில் நடத்தப்படும் தனி வகுப்புகள் ஆகியவை காரணங்களாக கூறப்படுகின்றன.
காலையில் சீக்கிரம் பள்ளிக்கு வரும் மாணவர்கள், மாலையில் 3, 3.30 மணிக்கே வீடு திரும்பி விடுகின்றனரே என்று நாம் சமாதானம் சொல்லலாம்.
தினமும் காலை பள்ளிக்குச் செல்ல வேண்டிய நேரம் இதுதான் என்பது தெரிந்தும், அதற்கு தகுந்தாற்போல் திட்டமிட்டு புறப்படாமல், அடித்துப் பிடித்து பள்ளிக்கு சென்றால் அது யார் தவறு என சிலர் புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கலாம்.
ஆனால், பள்ளிக்கு அனுப்புகிறோம் என்ற பெயரில், ஆரம்ப கல்வி பயிலும் பிள்ளைகளை தினமும் அதிகாலையில் எழுப்பி, காலை கடன்களை முடித்தும் முடிக்காமல், அவர்களுக்கு காக்கை குளியல் போட்டுவிட்டு, அந்த வேளையில் அவர்களால் சிற்றுண்டி உண்ண முடிகிறதோ இல்லையோ, பெயருக்கு உணவை ஊட்டிவிட்டு, 7.30 மணிக்கே அந்த பிஞ்சுகளை பள்ளி வேன்களில் அடைப்பதும்கூட குழந்தைகள் மீது அன்றாடம் செலுத்தப்படும் ஒருவித வன்முறைதான்.
இரவு உணவுக்கு பிறகு அடுத்த வேளை உணவுக்கு நீண்ட இடைவேளை இருப்பதால் காலை சிற்றுண்டியை தவிர்க்கக்கூடாது என மருத்துவ உலகம் அறிவுறுத்தி கொண்டே இருக்கிறது.
மேலும், குழந்தைப் பருவம் தொடங்கி, வளர் இளம் பருவம் (டீன் ஏஜ்) வரை மனிதனின் உடல் வளர்ச்சியில் மிக முக்கியமான காலகட்டம். இந்த காலக்கட்டத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தருவது அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால், பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் இன்றைய தலைமுறை குழந்தைகளில் பெரும்பாலோருக்கு, காலை சிற்றுண்டியை முறையாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை.
காலை ஏழு மணிக்கு என்ன சாப்பிட முடியும்? சரி முடிந்தவரை சாப்பிடு எனக் கூறி, பிஸ்கட், பழத்துடன் ஒரு டம்ளர் பாலை பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு, காலை சிற்றுண்டி முடிந்துவிட்டதாக பெற்றோரும் சமாதானம் அடைந்துவிடுகின்றனர்.
இந்தப் போக்கு தொடரும்போது, நாளடைவில் பிள்ளைகளுக்கு வயிற்று புண் (அல்சர்) ஏற்படுவதுடன், அஜீரணம், நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற உடல் உபாதைகளுக்கும் அவர்கள் ஆளாக நேரிடுகிறது. உடல் வளர்ச்சி பாதிக்கும் அபாயமும் உள்ளது.
அடுத்து, மாலை, இரவு நேரங்களில் பள்ளிப் பாடங்களை படிப்பதைவிட, அதிகாலையில் படிக்கும்போது, நாம் படிப்பது மனதில் ஆழமாக பதியும் என்பது படிப்பாளிகள் பலரின் கருத்து.
ஆனால், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு காலை எழுந்ததும் பள்ளிக்கு புறப்படவே நேரம் சரியாக இருப்பதால், இந்த வேளையில் பள்ளிப் பாடங்களை படிக்கும் வாய்ப்பை இவர்கள் இழந்துவிடுகின்றனர்.
மேலும், அன்றாட வீட்டுப் பாடங்களை இரவு உறங்குவதற்கு முன்பே முடித்துவிட வேண்டிய கட்டாயமும் இவர்களுக்கு உள்ளது. இதனால், மாலையில் விளையாடுவதற்கான நேரத்தையும் இவர்கள் படிப்புக்கே செலவிட வேண்டியதாகிறது. இதன் காரணமாக, "காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுவதும் விளையாட்டு' என்ற வரிகள் இவர்களுக்கு பொருந்தாது.
பள்ளி மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, தனியார் பள்ளிகளின் நேரத்தை மாற்றியமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.
குறைந்தபட்சம் ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பிக்கும் நேரத்தையாவது காலை 10 மணிக்கு மாற்ற அரசு உத்தரவிட வேண்டும்.
ஜூலை முதல் வாரத்தில் TET தேர்வு முடிவுகள்
ஆசிரியர் தகுதிக்கான, ‘டெட்’ தேர்வு விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம் துவங்குகிறது. தமிழகம் முழுவதும், மூன்று ஆண்டுகளுக்கு பின், ஏப்., 29, 30ல், ‘டெட்’ தேர்வு நடந்தது. இதில், முதல் தாளில், இரண்டு லட்சத்து, 37 ஆயிரம் பேரும், இரண்டாம் தாளில், ஐந்து லட்சத்து, மூன்றாயிரம் பேரும் பங்கேற்றனர்.
கொள்குறி என்ற, ‘அப்ஜெக்டிவ்’ வகை, வினாத் தாள் அடிப்படையில் தேர்வு நடந்தது. தேர்வுக்கான விடைக்குறிப்புகள், இரு வாரங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டு, தோராய விடைக்குறிப்பு வெளியானது. இதில், விடைகள் குறித்து சந்தேகம் அடைந்தவர்கள், சரியான விடைக் குறிப் புகளை கூறி, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, கடிதம் எழுதினர்.
இந்த கடிதங்களை, ஆசி ரியர் தேர்வு வாரியம் ஆய்வு செய்ததில், வாரியம் அளித்த பல விடைக்குறிப்புகள் தவறா கவும், சிலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் இருந்த தும் தெரிய வந்தது. இதை யடுத்து, இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கும் பணி முடிந்துள்ளது. ஒரு வாரத்தில், விடைத்தாள் திருத்தம் துவங்குகிறது.
ஜூலை முதல் வாரத்தில், முடிவுகள் வெளியாகும் என, கல்வித் துறை தெரிவித்துள்ளது
NEET தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி! மாநில உயர்நீதிமன்றங்கள் விசாரிக்கத் தடை...
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட, உச்சநீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ள உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இடைக்காலத் தடையை நீக்கியுள்ளது. மேலும், மாநில உயர்நீதிமன்றங்கள் நீட் தேர்வு வழக்குகளை விசாரிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத்தேர்வு, சமீபத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வை எழுதினார்கள். இதனிடையே நீட் தேர்வில் வினாத்தாள்கள் வெவ்வேறு மாதிரியாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. தமிழ் மொழி வினாத்தாளிலும் ஆங்கில மொழி வினாத்தாளிலும் மாறுபட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக, தமிழக மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதேபோல பெங்காலியிலும் மாறுதல்கள் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், ஒரே மாதிரியான வினாத்தாள்களுடன் தேர்வு நடத்தப்பட வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்து, கடந்த மாதம் 24-ம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்தத் தடையை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தது. மேலும், தடை காரணமாக ஒட்டுமொத்த மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையும் பாதிக்கப்படுவதால், சென்னை உயர்நீதிமன்றத்தின் தடைக்கு, தடை விதிக்க வேண்டுமென சிபிஎஸ்இ மனு அளித்திருந்தது.
இந்த மனுவின் விசாரணை, இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், நீட் முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால், நீட் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
40 ஆயிரம் பி.எட் கணினி பட்டதாரி ஆசிரியர்கள் வேலையின்றி தவிப்பு......
சென்னை: தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் பி.எட் படித்த கணினி ஆசிரியர்கள், பகுதி நேரம் கூட வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்...
பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு புரட்சி அறிவிப்புகளை அறிவிக்கும் கல்வியமைச்சர் கனிவோடு எங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு புரட்சி அறிவிப்புகளை அறிவிக்கும் கல்வியமைச்சர் கனிவோடு எங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
பிளஸ்-1 மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்.
பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களை அரசு வெளியிடும் முன்பே தனியார் வெளியீட்டாளர்கள் வழி காட்டி புத்தகங்களை (கைடு) விற் பனைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
கைடுகளில் உள்ள வினாத்தாள் முறை அதிகாரப்பூர்வமானதா என பெற்றோர், ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கைடுகளில் உள்ள வினாத்தாள் முறை அதிகாரப்பூர்வமானதா என பெற்றோர், ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன், துறைச் செயலராக உதயசந்திரன் பொறுப்பேற்ற பிறகு பள்ளிக் கல்வியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் பிளஸ் 1 வகுப்புக்கு மொத்தம் 600 மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத னால் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ்-2 என மூன்று பொதுத் தேர்வுகளை மாணவர்கள் சந்திக்க உள்ளனர்.
பிளஸ் 1 அரசு பொதுத் தேர் வுக்கான புதிய மாதிரி வினாத் தாள்கள் இதுவரை வெளியிடப் படவில்லை. இதற்கான கமிட் டியை பள்ளிக் கல்வித் துறை அமைத்துள்ளது. காலாண்டுத் தேர்வுக்கு முன்பாக மாதிரி வினாத்தாள் வெளியாகலாம் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், பிளஸ்1 பொதுத் தேர்வுக்கான புதிய வினாத்தாள்கள் வடிவில், கைடுகளை தனியார் நிறுவனங்கள் விற்பனை செய் வது மாணவர்களுக்கு குழப் பத்தை ஏற்படுத்தும் என பெற் றோர், கல்வியாளர்கள் தெரிவித் துள்ளனர்.
இதுகுறித்து பள்ளிப் பாடப் புத்தகங்கள் விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் தனியார் கைடுகளை, 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெளியிடு கின்றன. இவை அரசுப் பாடப் புத்தகங்களைப் பின்பற்றியே கைடு களை தயாரிக்கின்றன. பிளஸ் 1 வகுப்புக்கு 600 மதிப்பெண் களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப் படும் என அறிவித்த நிலையில், அதற்கான மாதிரி வினாத் தாள்களை அரசு இதுவரை வெளி யிடவில்லை. அதற்குள் பிளஸ் 1 பாடங்களுக்கான கைடுகளை சில தனியார் வெளியீட்டாளர்கள் விற்பனைக்கு கொண்டு வந் துள்ளனர்.
காலாண்டுத் தேர்வின்போது தான் பிளஸ்1 பொதுத் தேர்வுக் கான புதிய வினாத்தாள் முறை தெரியவரும். அதற்குள் யூகத்தின் அடிப்படையில் கைடு களை தயாரித்து விற்பது மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். சில மாவட்டங்களில் மாணவர்களுக்கு வழங்கும் இலவச பாடப் புத்தகங்களே பற்றாக் குறையாக இருக்கும் சூழலில், பாடப் புத்தகங்களை சில புத்தக விற்பனையாளர்கள் நகல் எடுத்து கூடுதல் விலைக்கு விற்கின்றனர். ரூ.100-க்கு நகல் எடுக்கப்படும் புத்தகம் ரூ.1,200 வரை விற்கப் படுகிறது.
சிபிஎஸ்சி புத்தகங்களுக்கு என்சிஆர்டி (தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம்) பதிப்புரிமை இருப்பதுபோல், தமிழக பாடநூல் நிறுவனம் வெளியிடும் புத்தகங்களுக்கு எஸ்சிஆர்டி (மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம்) அமைப்பு உள்ளது. என்சிஆர்டி அனுமதியைப் பெற்று தனியார் வெளியீட்டாளர்கள் கைடுகளை வெளியிட்டால் அரசுக்கு கணிச மான வருவாய் கிடைக்கும்.
அனைத்து துறைகளுக்கும் தணிக்கைக் குழு இருப்பது போன்று, பள்ளிப் பாடப் புத்தக கைடுகளுக்கும் தணிக்கைக் குழு தேவை. அரசு வெளியிடும் புத்தகங் களைப் பயன்படுத்தி கைடுகளை வெளியிடுவோர், அரசிடம் முறை யான அனுமதியைப் பெறும் முறையை கொண்டு வரவேண்டும். பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும் பள்ளிக் கல்வித் துறை, தனியார் கைடுகளை முறைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
தமிழ்நாடு முதுகலைப் பட்ட தாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறிய தாவது: மாவட்ட வாரியாக பிளஸ் 1 புதிய தேர்வு முறை வினாத்தாள் வடிவமைப்புக் குழு அமைக்கப்படுகிறது. இக்குழு காலாண்டுத் தேர்வுக்கு முன்பாக, வினாத்தாள் மாதிரியை பள்ளிக் கல்வித் துறையிடம் சமர்ப்பிக்கும். ஆகஸ்டு, செப்டம்பரில் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் வெளியாகும்.
இம்முறை பிளஸ் 1-க்கு பருவமுறைத் தேர்வு ரத்து செய் யப்பட்டு, மாதிரி தேர்வுகளுடன் நேரடியாக காலாண்டுத் தேர்வு நடக்க வாய்ப்பு உள்ளது. பிளஸ் 1-க்கு பாடத்திட்டம் மாற வில்லை. எனவே, முன்கூட்டியே கைடுகளை வெளியிடுவதன் மூலம் மாணவர்களை தேர்வுக்குத் தயார் படுத்த உதவும். இதனால் வினாக் கள் எப்படி அமைந்தாலும், மாண வர்களால் விடையளிக்க முடியும்.
கைடுகளை வெளியிடுவோர் வியாபார நோக்கில் செயல்படு கின்றனர். குழப்பத்தை தவிர்க்க, தாமதமின்றி முன்கூட்டியே புதிய தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வடிவமைப்பை அரசு வெளி யிட்டிருக்க வேண்டும் என்றார்.
ஒரு வாரத்தில் வெளியாகும்
பிளஸ் 1 வகுப்புக்கு தனியார் கைடுகள் விற்கப்படுவது குறித்து பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "பிளஸ்-1 வகுப்புக்கு முதல் முறையாக இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்பட இருப்பதால், கேள்வித்தாள் எப்படி இருக்குமோ என்று மாணவர்களுக்கு அச்சம் ஏற்படலாம். இதைப் போக்கும் வகையில் பிளஸ்-1 மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும். இதைப் பார்த்து கேள்விகள் எந்த முறையில் கேட்கப்படும் என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்" என்றார்.
ஞாயிறு, 11 ஜூன், 2017
பிளஸ் 1க்கு 'அட்மிஷன் கவுன்சிலிங்' : பள்ளிக்கல்வியின் அடுத்த அதிரடி.....
இன்ஜி., - மருத்துவ கல்லுாரிகள் போன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மதிப்பெண் அடிப்படையில், விரும்பிய பாடப்பிரிவில் சேர, பிளஸ் 1 வகுப்புக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங் முறை கொண்டு வரப்படுகிறது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் கூட்டணி, பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. பொதுத் தேர்வுகளுக்கான, ரேங்கிங் முறை ஒழிப்பு; பிளஸ் 1க்கு கட்டாய தேர்வு; பள்ளி திறக்கும் நாளிலேயே பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு உள்ளிட்ட, பல மாற்றங்களை அறிவித்துள்ளது.பாடத்திட்டத்தை மாற்ற புதிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட உள்ளது. நுழைவு மற்றும் போட்டி தேர்வுகளுக்கு பள்ளிகளில், சிறப்பு பயிற்சி அறிமுகமாகிறது.
இந்த வரிசையில், பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கையில், கவுன்சிலிங் முறை அமலுக்கு வர உள்ளது; விரைவில் இதற்கான அறிவிப்பு ெவளியாகும்.
பள்ளிக்கல்வி அதிகாரிகள், இத்திட்டம் நடைமுறையில் உள்ள கேரளா சென்று, அது பற்றிய விபரங்களை சேகரித்து வந்துள்ளனர். இதன்படி, வரும் கல்வி ஆண்டில் ஒற்றை சாளர கவுன்சிலிங் முறை, அறிமுகமாகிறது.
10ம் வகுப்பில் மாணவர் பெறும் மதிப்பெண் அடிப்படையில், எந்தெந்த பாடப்பிரிவில் சேர வேண்டும் என்பதற்கு விதிகள் உருவாக்கப்படும்.இன்ஜி., மற்றும் மருத்துவ கல்லுாரிகள் போன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகளின், பிளஸ் 1 இடங்கள் மற்றும் பாடப்பிரிவுகள் பட்டியலிடப்படும். ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெற்று, மதிப்பெண் அடிப்படையில், பாடப்பிரிவு ஒதுக்கீட்டு பட்டியல் தயாரிக்கப்படும்.
இதில், மாணவர் எந்த பள்ளியில் சேர விரும்புகிறாரோ, அந்த பள்ளியில் மதிப்பெண் அடிப்படையில் சேரலாம். தனியார் பள்ளிகள், 50 சதவீத இடங்களை, நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க வழி வகை செய்யப்படும்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
SABL Files - FOR TERM 1 FA(A) மற்றும் FA(B) க்கான முக்கிய பதிவேடுகள் ....
- Tamil SABL Achievement (Standard 1 to 4)
- English SABL Achievement (Standard 1 to 4)
- Maths SABL Achievement (Standard 1 to 4)
- Science SABL Achievement (Standard 1 to 4)
- Social Science SABL Achievement (Standard 1 to 4)
- FA(a) All Subjects SABL Achievement (Standard 1 to 4)
- FA(b) All Subjects SABL Achievement (Standard 1 to 4)
- Explanation For SABL Achievement (Standard 1 to 4)
Thanks to Mr. ப.சரவணன் MA.B.ED; Ph.D; NET; HDCA
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)