>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 29 மே, 2017

DEE - தீவிர மாணவர் சேர்க்கை -பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்தல் -அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்த அறிவுரைகள் வழங்குதல்.....




DEE - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் -பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பு!


தேர்ச்சி இலக்கு நீக்கத்தால் தலைமை ஆசிரியர்கள் நிம்மதி -அரசு பள்ளிகள் கற்பித்தலில் கவனம் செலுத்த உத்தரவு.......

கல்வி கடன் வேண்டுமா? 'பான் கார்டு' வாங்குங்க!.....

கல்வி கடன் பெற, 'பான் கார்டு' அவசியம்' என, வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 
பிளஸ் 2 தேர்வு முடிந்து, உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்கள், கல்வி கடனுக்காக, வங்கிகளை அணுக துவங்கியுள்ளனர். அவ்வாறு அணுகுவோருக்கு, சில அடிப்படை விஷயங்கள் தெரிவதில்லை என, வங்கி அலுவலர்கள் கூறுகின்றனர். முக்கியமாக, மாணவர்கள், வருமான வரித்துறை வழங்கும் பான் கார்டு வைத்திருக்க வேண்டும். பெற்றோரின் பான் கார்டும் தேவை.
பான் கார்டு இல்லாத பெற்றோர் மற்றும் மாணவர்கள், உடனடியாக அதற்கு விண்ணப்பித்தால், ஒரு மாதத்திற்குள் கிடைத்து விடும் என, ஸ்டேட் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கருணை மதிப்பெண் தரலாமா? : அமைச்சர் ஜாவடேகர் விளக்கம்....

 ''சி.பி.எஸ்.இ., பாடத்தேர்வில், கருணை மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பான நடவடிக்கையில் மத்திய அரசு தலையிடாது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.
பள்ளித் தேர்வில் மிகக் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டால், கருணை மதிப்பெண்கள் வழங்கும் நடவடிக்கையை கைவிடுவதென, சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட, 32 பள்ளி தேர்வு வாரியங்கள், கடந்த மாதம், ஒரு மனதாக தீர்மானித்தன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, டில்லி ஐகோர்ட், கருணை மதிப்பெண் வழங்கும் நடைமுறையை தொடரும்படி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், சி.பி.எஸ்.இ., மேல் முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்வு முடிவுகள் மேலும் தாமதம் ஆகும் என்பதால், மேல் முறையீடு செய்யும் யோசனை கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2, தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகின.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கும் கொள்கையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தலையிடாது. எந்த மாற்றத்தையும், கல்வி ஆண்டுக்கு இடையில், திடீரென அமல்படுத்தக் கூடாது. இதுதொடர்பாக, கல்வி வாரியங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை : 'வாட்ஸ் ஆப்'பில் விழிப்புணர்வு

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, வாட்ஸ் ஆப், கேபிள், 'டிவி' மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளி களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள,  ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், பல லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். 
இந்த பள்ளிகளில், இன்னும், 50 சதவீத மாணவர்கள் படிக்கும் வகையில், உள் கட்டமைப்பு வசதியும், ஆசிரியர்கள் எண்ணிக்கையும் உள்ளது. ஆனால், ஆங்கில மொழி திறன் வளர்ச்சி, முன்னேறிய கற்பித்தல் முறை இல்லாததால், பெற்றோர், பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு முதல், தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவர் சேர்க்கையை உயர்த்தவும், கற்பித்தல் முறையை முன்னேற்றவும், பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, தொடக்க பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆட்டோ விளம்பரம் செய்யவும், அரசு பள்ளிகள் தரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும், பாடல்கள், குறும்படங்களை ஒளிபரப்பவும், வாட்ஸ் ஆப், கேபிள், 'டிவி' மற்றும் தியேட்டர்களில் விளம்பரம் செய்யவும், தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான பாட புத்தகங்கள் விற்பனை துவக்கம்........


I  முதல், பிளஸ் 2 வகுப்பு வரையிலான, பாடப்புத்தகங்கள் விற்பனை, மே, 26ல், துவங்கி உள்ளது. கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 7ல், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, பாட புத்தகங்கள், நோட்டுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. 

பல தனியார் பள்ளிகள், புத்தகங்களை மாணவர்களே வாங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளன. எனவே, மாணவர்களுக்கு நேரடியாக புத்தகம் விற்பனை செய்யும் பணியை, தமிழ்நாடு பாடநுால் கழகம் துவக்கி உள்ளது. ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அனைத்து பாடப்பிரிவுகளுக்கான புத்தகங்களின் விற்பனையும் துவங்கி உள்ளது.
பாடநுால் கழக விற்பனை மையங்களிலும், மாவட்ட பாடநுால் கழக மண்டல கிடங்குகளிலும், ரொக்க பணம் செலுத்தி, புத்தகங்கள் வாங்கலாம். தமிழ்நாடு பாடநுால் கழகத்தின், www.textbookcorp.tn.nic.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் பதிவு மூலமும், புத்தகங்களை கொள்முதல் செய்யலாம். 
ஆன்லைனில் பதிவு செய்யும் போது, புத்தகங்களுக்கான தொகையை, 'நெட் பேங்கிங்' மூலம் செலுத்த வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள், கூரியர் மூலம், மாணவர்கள் பதிவு செய்த முகவரிக்கு, இரண்டு நாட்களில் அனுப்பப்படும். 
இதுகுறித்து, தமிழ்நாடு பாடநுால் கழக மேலாண் இயக்குனர், ஜெகநாதன் கூறியதாவது:
தற்போது, ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான, முதல் பருவ பாட புத்தகங்களும்; 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான புத்தகங்களும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. எந்த பாடப்பிரிவு புத்தகங்களுக்கும் தட்டுப்பாடு இல்லை. கூடுதல் விலை கொடுத்து, வேறு யாரிடமும் புத்தகங்கள் வாங்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்......

நீட் தேர்வால் தொடரும் குழப்பம் - எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தள்ளிப்போகும் அபாயம்

தமிழகத்தில் கடந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பித்தல் மே 25ம் தேதி தொடங்கியது. நீட் தேர்வு விவகாரத்தால் இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கல்வியாளர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் எம்பிபிஎஸ் பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் குழப்பம் நீடிக்கிறது. 
மே 7ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்தது. அந்த தேர்வு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வாக நடத்தப்படவில்லை. பீகார் மற்றும் உத்திர பிரதேசத்தில் தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் வெளியானாதாக கூறப்படுகிறது.
இதே போல் நீட் தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்துள்ளது. இதுவரை தமிழக அரசின் சட்டமசோதாவுக்கு குடியரசுத் தலைவரிடம் மத்திய அரசு ஒப்புதல் பெற்றுத்தரவில்லை.
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக கல்வியாளர் ஒருவர் கூறியதாவது: தற்போது பெரும்பாலான கலை அறிவியல் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைகழகங்கள், அரசு பல்கலைகழகங்களில் விரைவில் வகுப்புகள் தொடங்க உள்ளன. 
பொறியியல் படிப்பு, கால்நடை மருத்துவ அறிவியலுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆவற்றுக்கான ஆன்லைன் பதிவு நடந்து வருகிறது. ஏராளமான மாணவர்கள் அதற்காக விண்ணப்பித்து வருகின்றனர். 
மருத்துவ மாணவர் சேர்க்கையை பொறுத்தவரை மாநில அரசு இடஒதுக்கீட்டின்கீழ் உள்ள 85 சதவீத இடங்களுக்கு மாநில அரசு தான் கலந்தாய்வு நடத்த வேண்டும். தமிழகத்தில் கடந்த ஆண்டு மே 25ம் தேதி மருத்துவ கலந்தாய்வு விண்ணப்பித்தல் தொடங்கியது. ஆகஸ்ட் 1ம் தேதி எம்பிபிஎஸ் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கியது. 
இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு நீட் தேர்வு வேண்டும் என்கிறது. மாநில அரசு நீட் தேர்வு வேண்டாம் என்றுகிறது. தேர்வு முடிவுகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதால், இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கை, முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம் சில மாதங்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிக் கல்வித் துறையில் நாடே வியக்கும் அளவுக்கு மேலும் புதிய திட்டங்கள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 409 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு 2018 மே மாதம் வரையிலான தற்காலிக அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கி அமைச்சர் செங்கோட்டையன் பேசியபோது, “வரும் கல்வி ஆண்டு முதல் 6-ம்வகுப்பிலேயே கணினிப் பாடம் நடத்தப்படவுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அவர்களது விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் ரூ.2.13 கோடியில் மாவட்டந்தோறும் ஐஏஎஸ் பயிற்சி மையம் ஏற்படுத்தப்படவுள்ளது” என்றார்.நிகழ்ச்சிக்கு ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார்.
மாநில பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன், எம்பி-க்கள் ப.குமார், டி.ரத்தினவேல், சந்திரகாசி, எம்எல்ஏ-க்கள் ஆர்.டி.ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், ராமஜெயலிங்கம், பரமேஸ்வரி, எஸ்ஆர்வி கல்வி நிறுவன செயலாளர் சாமிநாதன், தமிழ்நாடு நர்சரி- பிரைமரி- மெட்ரிகுலேசன்- சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கப் பொதுச் செயலாளர் நந்தகுமார் ஆகியோர் பேசினர்.முன்னதாக, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமிவரவேற்றார். 9 மாவட்டங்களைச் சேர்ந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது: 10 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் நவீன கழிப்பிட வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நிதிநிலைக்கு ஏற்ப பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்படும். வரும் கல்வி மானியக் கோரிக்கையின்போது நாடே வியக்கும் அளவுக்கு கல்வித் துறையில் மேலும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார்

SMS மூலம் இலவசமாக நமது வங்கி இருப்பை தெரிந்து கொள்வது எப்படி?

தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்.
🔴அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது.
🔴 இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
🔴தற்பொழுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
🔴கீழே கொடுக்கப் பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை SMS அனுப்பிவிடுவார்கள்.
🔴உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும்.
1. Axis bank------------------ 09225892258
2. Andra bank------------------ 09223011300
3. Allahabad bank-------------09224150150
4. Bank of baroda-------------09223011311
5. Bhartiya Mahila bank----- 09212438888
6. Dhanlaxmi bank----------- 08067747700
7. IDBI bank-------------------- 09212993399
8. Kotak Mahindra bank--- 18002740110
9. Syndicate bank------------ 09664552255
10. Punjab national bank---18001802222
11. ICICI bank----------------- 02230256767
12. HDFC bank-------------- 18002703333
13. Bank of india------------- 02233598548
14. Canara bank------------- 09289292892
15. Central bank of india-- 09222250000
16. Karnataka bank-------- 18004251445
17. Indian bank-------------- 09289592895
18. union bank of india---- 09223009292
19. UCO bank---------------- 09278792787
20. Vijaya bank--------------- 18002665555
21. Yes bank------------------ 09840909000.
22. State Bank of india- Get the balance via IVR
1800112211 and 18004253800
23. Corporation bank------- 092-688-92688.
24. South Indian Bank--- 092 23 008488 

DEE - SG Asst District Transfer Dates Extended

         ஒரு கோடியே 21 லட்சம் மாணவர்களுக்கு               விபத்து காப்பீடு திட்டம் ,அசர வைக்கும்    பள்ளிகல்வித்துறை !!

வரும் கல்வி ஆண்டில் ஒரு கோடியே 21 லட்சம் மாணவர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். - தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

இடைநிலைஆசிரியர் மாவட்ட மாறுதல் -2017 முன்னுரிமை பட்டியல் வெளியீடு...!!

இடைநிலைஆசிரியர் மாவட்ட மாறுதல் -2017 முன்னுரிமை பட்டியல் வெளியீடு

ஞாயிறு, 28 மே, 2017

பள்ளிக்கல்வி செயல்முறைகள்- பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு அழைக்கப்பட வேண்டியவர்கள் எண்ணிக்கை (அனைத்து பாடங்கள்)



FLASH NEWS:DEE- இடைநிலை ஆசிரியர்- மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு

முதல் வகுப்புக்கு டிஜிட்டல் கல்வி கேரள மாநிலஅரசு அசத்தல்.

கேரளாவில், வரும் கல்வியாண்டிலிருந்து, முதல் வகுப்புக்கே, 'டிஜிட்டல்' வழி கல்வி முறையை அறிமுகப் படுத்தப் போவதாக, மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஐ.சி.டி., எனப்படும், தகவல் மற்றும் தொலைத் தொடர்பு என்ற தொழில்நுட்பம் மூலமாக, அரசு பள்ளிகளில், 8 - 10 வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு, டிஜிட்டல் வழிக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல், 1 - 7ம் வகுப்பு மாணவர்களுக்கும், டிஜிட்டல் வழி கல்வியை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக, கேரள மாநில கல்வி துறை தெரிவித்துள்ளது.
இதற்காக, மாணவர்களுக்கான பிரத்யேக இணையதளம் மற்றும் பாடம் குறித்த தகவல்கள் அடங்கிய, 'டிவிடி'யையும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, கேரள மாநில கல்வி துறை அமைச்சர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

IGNOU June 2017 exam Hall ticket published

பிளஸ் 2 விடைத்தாள் நகல் விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த வாரத் தில் இணையதளத்தில் பதிவேற்றம்.....

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 99 ஆயிரம் மாணவர்கள் விண்ணப் பித்துள்ளனர். அவர்களுக்கான விடைத்தாள் நகல் அடுத்த வாரத் தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 12-ம் தேதி வெளி யிடப்பட்டது. பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள் நகல், மறுகூட்டல், மதிப்பீடு ஆகியவற்றுக்கு மாண வர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் படி, மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கான அடிப்படையான விடைத்தாள் நகல் பெறுவதற்கு விண்ணப்பிக்க மே 12 முதல் 15-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட் டது.
இந்த நிலையில், மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு கால அவகாசம் மே 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 
99 ஆயிரம் பேர் விண்ணப்பம் 
விடைத்தாள் நகல் கோரி 99 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாகவும், அவர்களுக்கான விடைத்தாள் நகல் அடுத்த வாரத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எந்த இணையதளத் தில் இருந்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப் படும்.

கால்நடை மருத்துவ கவுன்சிலிங்

தமிழக கால்நடை அறிவியல் பல்கலையில் கால்நடை இளங்கலை படிப்பு, உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், கோழியின வளர்ப்பு போன்ற படிப்புகள் உள்ளன.
இப்பல்கலையின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் மே 31 வரை கால்நடை படிப்புகளுக்காக 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். பின், அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜூன், 6க்குள் அனுப்ப வேண்டும். ஜூலை துவக்கத்தில், தரவரிசை பட்டியல் வெளியாகும். ஜூலை, 20க்குப் பின் கவுன்சிலிங் நடத்தப்படும்.

வங்கிகளில் கல்வி கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்....

இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற, வங்கி வாசலில் மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான பிரத்யேக இணையதளத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
பிரதமரின் கல்வித் திட்டத்தின் கீழ், www.vidyalakshmi.co.in என்ற இணையதளம், 2015 இறுதியில் துவங்கப்பட்டது. இதை, என்.எஸ்.டி.எல்., என்ற மத்திய அரசு நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
அந்த இணையதளத்தில் பதிவு செய்தால், அனைத்து வித கல்விக் கடன் மற்றும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். 
இதன் மூலம், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட, 40 பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில் கடன் பெறலாம். தங்கள் மனுவின் நிலை பற்றியும், மாணவர்கள், இணையதளத்தில் அறியலாம். கடனுக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால், அதையும் பார்க்கலாம். சரியாக ஒத்துழைக்காத, வங்கி அதிகாரிகள் மீது, புகாரும் தரலாம். 
இந்த வசதி பற்றி, பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியவில்லை. அதற்கு காரணம், சில வங்கிகள், வித்யாலட்சுமி இணையதளத்தை சரியாக பயன்படுத்துவதில்லை. இதுபற்றி, மத்திய நிதி அமைச்சகத்திற்கு, புகார்கள் சென்றன. அதை தொடர்ந்து, வங்கிகளுக்கு புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. 
அதில், 'அனைத்து கல்விக் கடன் மனுக்களை, இந்த இணையதளம் வழியாகவே பெற வேண்டும். 'இந்த வசதி பற்றி, கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், 2015 முதல், இதுவரை வழங்கிய கடன் பற்றி, இணையதளத்தில், வங்கிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.