>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 26 மே, 2017

பிளஸ் 1ல் 'ஆல் பாஸ்' - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

இந்த ஆண்டு, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களை, 'ஆல் பாஸ்' செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலை பரிந்துரைப்படி, தமிழகத்தில், பிளஸ் 1 பாடத்துக்கு கட்டாய பொதுத் தேர்வு, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 
தேர்வு நேரம், மதிப்பெண் முறையிலும், மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, 'ஆல் பாஸ்' வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
'இந்த ஆண்டு, மார்ச்சில் தேர்வு எழுதிய, பிளஸ் 1 மாணவர்களில், யாராவது தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, துணைத் தேர்வு மூலம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும்' என்றும், தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

PGTRB - தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வக்கீல் நம்புராஜன் என்பவர், நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: 
தமிழகத்தில் காலியாக உள்ள 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 9ம் தேதி தமிழக அரசு தேர்வு நடத்த அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதில், மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 3 சதவீதம் என்று அறிவித்துள்ளது. 
 மேலும், அதில், 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரையுள்ள மாற்றுத்திறனாளிகள் மட்டுமே இட ஒதுக்கீட்டில் அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.  
தமிழக அரசு அந்த சட்டத்தை மீறி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் 3 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதால் 18 பேருக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கும். அதுவே 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் 67 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும். 
எனவே, தமிழக அரசு இந்த அறிவிப்பாணையை மத்திய அரசு இடஒதுக்கீட்டின்படி அறிவிக்க வேண்டும். அதேபோன்று, 40 முதல் 70 சதவீதம் மட்டும் மாற்றுத்திறனாளிகளாக உள்ளவர்களுக்கு மட்டும் இந்த இடஒதுக்கீடு என்ற கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து தமிழக அரசு, ஆசிரியர் தேர்வு வாரியம், வரும் ஜூன் 2ம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டனர்.....

இ .நி .ஆசிரியர்களின் மத்திய அரசுக்கு இணையான ஊதியக் கனவு நிறைவேற ஒரே தீர்வு

ஆறாவது ஊதியக் குழு அமல்படுத்திய நாளிலிருந்து 2800 தர ஊதியத்தை 4200 ஆக மாற்றி அதனை தற்பொழுது வரை கருத்தியலாக கணக்கிட்டு, பிறகு 7வது ஊதியக் குழு பரிந்துரைக்கும் ஊதியத்தில் நிர்ணயம் செய்தலே சிறந்த தீர்வு.
75 % சதவிகித ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு.
இதனை நோக்கியே அனைத்து சங்கங்களையும் பயணிக்க வைப்போம்.
அறிவித்த பிறகு எதுவும் செய்ய முடியாது.
     அரசின் கஜானா காலி என்ற காரணத்திற்கும் இம் முடிவு நிச்சயம் தீர்வாக அமையும்.
      நாம் தற்பொழுது பெற்று வரும் ஊதியத்திற்கு 2.62 முறையில் கணக்கிட்டால் - 7 வது ஊதியக் குழுவில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்றாகி விடும். இதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?
      6 வது ஊதியக் குழுவில் திருத்தம் செய்து  மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெற்ற பிறகு, புதிய ஊதியம் நிர்ணயம் செய்தலே இ.நி.ஆசிரியர்களின் ஊதியம் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்திற்கு சமமாகும்.
      ஜுன் 5 க்குள் ஆசிரியர், ஊழியர் சங்கங்களின் ஊதிய நிர்ணய கோரிக்கைகளை அரசு கேட்டுள்ளது. ஜுன் 30க்குள் அரசு புதிய ஊதியக் குழு விற்கு இறுதி வடிவம் கொடுத்து விட முடிவாற்றியுள்ளது. அதற்குள் இக்கோரிக்கை அனைத்து ஆசிரியர் சங்கங்களின் உறுதி வடிவமாக்கி அரசுக்கு அனுப்பி வைக்க ஒன்றிணைந்து செயல்படுவோம். இறுதி வெற்றி நமதாக இருக்கட்டும்...

பள்ளிகள் திறப்பதை 2 வாரம் தள்ளிவையுங்கள் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை

 'வெயில் வாட்டி வதைப்பதால், பள்ளிகள் திறப்பை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
குழுவின் ஒருங்கிணைப்பாளர் இளமாறன் மற்றும் நிர்வாகிகள், நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையனிடம் கொடுத்த மனு: தமிழகத்தில், வரலாறு காணாத வகையில், வெயில் இருப்பதால், சிறுவர் முதல், பெரியவர் வரை, வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. ௨௦க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், வெயில் சதத்தை தாண்டி உள்ளது.
கற்றல் - கற்பித்தல் பணி என்பது, உடலும், உள்ளமும் சீராக இருந்தால் மட்டுமே, சிறப்பாக அமையும். எனவே, மாணவர்கள் உடல் நலன் கருதி, ஜூன், 1ல் பள்ளிகளை திறக்காமல், வெயிலின் அளவு குறையும் வரையோ அல்லது இரண்டு வாரங்களோ தள்ளி திறக்க 
வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தருமபுரி, விழுப்புரம், ராமநாதபுரத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரிகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

தமிழகத்தில் 6.81 கோடி ரூபாய் செலவில் தருமபுரி, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் புதிதாக அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.2017-18 கல்வியாண்டு முதலே இந்த சட்டக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழகத்தில் உயர் தரத்துடன் கூடியசட்டக் கல்வியை அளித்திடும் வகையில், தெற்காசியாவிலேயே முதன் முதலாக சட்டக் கல்விக்கென தனியாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தை முதல்வராக இருந்த ஜெயலலிதா நிறுவினார்.இப்பல்கலைக்கழகத்தின் கீழ் தற்போது 7 அரசு சட்டக் கல்லூரிகளும், ஒரு தனியார் சுயநிதி சட்டக் கல்லூரியும் இயங்கி வருகின்றன. அதுமட்டுமின்றி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்து, சட்டக் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில், குறைந்த செலவில் தரமான சட்டக் கல்வியை மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு வழங்கிட ஏதுவாக, தமிழகத்தில் படிப்படியாகபோதிய எண்ணிகையிலான அரசு சட்டக் கல்லூரிகளை நிறுவுவதற்கு தமிழக அரசு தீர்மானித்துள்ளது.அதன் அடிப்படையில், விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதன் அருகாமையிலுள்ள பிற மாவட்டங்களைச் சேர்ந்த சட்டம் பயில விரும்பும் மாணவர்களுக்கு சட்டம் பயில அரசு சட்டக் கல்லூரி ஏதுவும்இல்லையென்பதால், இம்மாவட்டங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த மாணவர்கள் சட்டம் பயில்வதற்கு ஏதுவாக விழுப்புரம், தருமபுரி மற்றும் ராமநாதபுரத்தில் புதிதாகஒரு அரசு சட்டக் கல்லூரி 2017-18ஆம் கல்வியாண்டு முதல்துவங்கப்படும்.
விழுப்புரம், தருமபுரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் துவக்கப்படும் இப்புதிய அரசு சட்டக் கல்லூரிகளில் 2017-18ஆம் கல்வியாண்டு முதல் 3 ஆண்டு சட்டப் படிப்பிற்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களுடனும், 5 ஆண்டு சட்டப் படிப்பிற்கு முதலாம்ஆண்டில் 80 மாணவர்களுடனும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.இப்புதிய அரசு சட்டக்கல்லூரிகள் நிறுவுவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு தனி அலுவலர் ஒவ்வொரு கல்லூரிக்கும் நியமிக்கப்படுவார்கள்.
மேற்குறிப்பிட்ட மூன்று புதிய அரசு சட்டக் கல்லூரிக்கு தேவையான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்கள், நூலகப் புத்தகங்கள், அறைகலன்கள் மற்றும் இதர தேவைகளுக்கு தலா ஒரு சட்டக் கல்லூரிக்கு 2 கோடியே 27 லட்சம் ரூபாய் வீதம், 3 அரசு சட்டக் கல்லூரிக்கு, மொத்தம் 6 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவீனம் ஏற்படும்'' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

IGNOU மாணவர் சேர்க்கை அறிவிப்பு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையான, இக்னோவில், மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, இக்னோ மண்டல இயக்குனர், எஸ்.கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இக்னோ பல்கலையில், ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள், பணியில் இருப்போர், இல்லத்தரசிகள் போன்றோர், இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேரலாம்.  
சென்னை, நந்தனம் அண்ணா சாலையில், ஜி.ஆர்.காம்ப்ளக்ஸ், மூன்றாவது மாடியில் இயங்கும், இக்னோ மண்டல அலுவலகத்திலும், கல்வி மையங்களிலும் விண்ணப்பங்களை பெறலாம்.www.onlineadmission.ignou.ac.in இணையதளத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
சி.ஏ., - ஐ.சி.டபிள்யு.ஏ., - ஏ.சி.எஸ்., படிக்கும் மாணவர்களுக்கு, சிறப்பு பி.காம்., படிப்பும் நடத்தப்படுகிறது. இது குறித்த விபரங்களை, 044 - 2431 2766 என்ற தொலைபேசி எண்ணில் தெரிந்து
கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 25 மே, 2017

FIRST TERM - SYLLABUS ( CLASS - 8 )

8 ஆம் வகுப்பு முதல் பருவம் பாடத்திட்டம் 


CLASSROOM MANUAL GUIDE - 2017 - 18



வகுப்பறைக் கையேடு - 2017 - 18

இனி ஆசிரியர்களுக்கும் 'பொது நுழைவு தேர்வு' - மத்திய மனித வள அமைச்சகம் திட்டம்.....


ஆசிரியராக வர விருப்பம் உள்ளவர்களுக்காக பொது நுழைவுத் தேர்வு அல்லது தகுதித்தேர்வு கொண்டு வர மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ்  உள்ள பள்ளி கல்வி மற்றும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
பள்ளிகல்வி செயலாளர்
மேற்கு வங்கமாநிலம் கொல்கத்தாவில் பள்ளிக் கல்வி துறை சார்பில் ஒரு கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில் மத்திய பள்ளி கல்வி மற்றும் கல்வித்துறை செயலாளர் அணில் ஸ்வரூப் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியின் இடையே நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-

தகுதித்தேர்வு
ஆசிரியராக வர விரும்பும்  பெண்கள், ஆண்களுக்காக மத்திய அரசு சார்பில் மதிப்பீடு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, சி.ஏ.டி. அல்லது எஸ்.ஏ.டி. தேர்வு போன்று இது இருக்கும். ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வுக்கான அடித்தளமாக உருவாக்க இருக்கிறோம்.

ஆலோசனை
இந்த தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்வாகும் பெண்கள், ஆண்களுக்கு ஆசிரியராவதற்கான ஒரு தகுதி கிடைக்கும். இது குறித்து மாநில அரசுகளிடம் ஆலோசனை நடத்தி உள்ளோம். இந்த திட்டத்தை அந்தந்த மாநிலங்கள் விருப்பம் போல் செயல்படுத்த உரிமை உண்டு.  இது தொடர்பாக அனைத்து தரப்பினரிடத்திலும் பேச்சு நடத்தியபின், பணியமர்த்தும் நிறுவனங்கள் முடிவு செய்யும்.

சோதனை திட்டம்
ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் வருகை உறுதிசெய்யப்பட வேண்டும். இதற்காக ஜி.பி.எஸ். இணைக்கப்பட்ட, பயோ-மெட்ரிக் வருகை பதிவேடு ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்படும். இந்த திட்டத்தை சோதனை முயற்சியாக சட்டீஸ்கரில்கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செயல்படுத்தி வருகிறோம். படிப்படியாக அனைத்து மாநிலங்களுக்கும் விரைவில் நடைமுறைப்படுத்துவோம் என நம்புகிறேன்.
சட்டீஸ்கரைத் தொடர்ந்து ஜார்க்கண்ட், ஆந்திரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களும் இந்த திட்டதை செயல்படுத்த ஆர்வம் காட்டியுள்ளன. ஆசிரியர்களின் வருகைபதிவேடு ஒழுங்குபடுத்தப்பட்டவுடன் அது சம்பள கணக்குடன் இணைக்கப்படும்.

பி.எட்.கல்லூரிகள்
பி.எட். கல்லூரிகளில் மோசமான உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதால், 40 சதவீதம் கல்லூரிகளை நாங்கள் தகுதிநீக்கம் செய்ய முடிவு செய்து இருக்கறோம். இது தொடர்பாக அளிக்கப்பட்ட நோட்டீஸ்களுக்கு 40 சதவீத கல்லூரிகள் இன்னும் பதில்அளிக்கவில்ைல. உள்கட்டமைப்பு விதிமுறைப்படி இல்லாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

"+1 தேர்வு மாற்றம்... காலத்தின் தேவையா? நீட் தந்த நிர்பந்தமா? | காலத்தின் குரல்" - Watch on YouTube...

"பிளஸ் ஒன் தேர்வு மாற்றம்... காலத்தின் தேவையா? நீட் தந்த நிர்பந்தமா? | காலத்தின் குரல்" - Watch on YouTube...


8 ஆம் வகுப்பு முதல் பருவம் பாடத்திட்டம் EXCEL FORMAT

8 ஆம் வகுப்பு முதல் பருவம் பாடத்திட்டம் EXCEL FORMAT 

பருவம் 1 நான்காம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழி   பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்திலுள்ள கலைச்சொற்கள்.....

நன்றி
ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி
காஞ்சிபுரம் ஒன்றியம்
காஞ்சிபுரம் மாவட்டம்.
பருவம் 1
தமிழ் மற்றும் ஆங்கில வழி
பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்திலுள்ள கலைச்சொற்கள் .
பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.
உங்கள் தேவையான பாடங்களை கீழே உள்ள link யை கிளிக் செய்து
<<<<<<<<<
தேவையெனில் கீழே 
Click செய்யவும் 
>>>>>>>>>>
-----------*-----------------*----------------------*--------------------*----------------------
----------*------------------*-------------------------*--------------------*-------------------
-------------*-----------------*------------------------*---------------------*-----------------

'கிரேஸ் மார்க்' பிரச்னையால் சி.பி.எஸ்.இ., 'ரிசல்ட்' நிறுத்தம்

'கருணை மதிப்பெண் திட்டத்தை ரத்து செய்யக் கூடாது' என, நீதிமன்றம் உத்தரவிட்டதால், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் நடந்தது. இதில், 18 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த, 11 லட்சம் பேர் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், கணிதம் கடினமாக இருந்ததால், இந்த ஆண்டும், கடினமாக இருக்குமோ என்ற அச்சத்தில், மாணவர்கள் இருந்தனர். 
ஆனால், கணிதம் எளிதாகவும், விலங்கியல் கடினமாகவும் இருந்தது. எனவே, விலங்கியல் வினாத்தாளை ஆய்வு செய்து, 'கிரேஸ் மார்க்' எனப்படும் கருணை மதிப்பெண் வழங்க, சி.பி.எஸ்.இ., முடிவு செய்தது.ஆனால், கிரேஸ் மதிப்பெண், போனஸ் மதிப்பெண் போன்ற முறைகளை கையாளக் கூடாது என, மத்திய மனிதவள அமைச்சகம், ஏப்., 27ல் உத்தரவிட்டது. 

உயர் நீதிமன்றம் உத்தரவு : இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவை, நேற்று வெளியிடுவதற்கு, சி.பி.எஸ்.இ., வாரியம் முடிவு செய்திருந்தது. நேற்று முன்தினம் மாலை, டில்லி உயர் நீதிமன்றம், கிரேஸ் மதிப்பெண் தொடர்பாக, ஒரு உத்தரவு பிறப்பித்தது.அதில் கூறப்பட்டு
உள்ளதாவது:தேர்வு அறிவித்து, அதன் நடைமுறைகளை மாணவர்களுக்கு தெரிவித்த பின், தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரக்கூடாது. கிரேஸ் மார்க் இருப்பதால், மாணவர்கள் பலர், பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி, வெளிநாட்டு பல்கலைகளில், உயர் படிப்புக்கு இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர். 

நிதி நெருக்கடி : தற்போது, திடீரென மதிப்பெண் முறையில் மாற்றம் செய்தால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், நிதி நெருக்கடியும் ஏற்படும். எனவே, இந்த ஆண்டு மதிப்பெண் கொள்கையில் மாற்றம் கொண்டு வரக்கூடாது.இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனால், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடுவதை, சி.பி.எஸ்.இ., திடீரென நிறுத்தி 
வைத்துள்ளது. இதுகுறித்து, வாரிய உறுப்பினர்கள் கூடி முடிவு செய்த பின், மதிப்பெண் மாற்றுவதா அல்லது ஏற்கனவே தயாரான மதிப்பெண் பட்டியலை வெளியிடுவதா என, முடிவு செய்யப்பட உள்ளது.

கலை கல்லூரியில் சேர்ந்தாலும் இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்!


'கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்களும், இன்ஜி., 'கவுன்சிலிங்'கில் பங்கேற்க முடியும்' என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேருவதற்கான கவுன்சிலிங், அண்ணா பல்கலை சார்பில் நடத்தப்படுகிறது. ஜூன், 27 முதல் கவுன்சிலிங் நடத்த, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. இன்ஜி., கவுன்சிலிங்கில், விரும்பிய பாடம், கல்லுாரி கிடைக்காமல் போனால், என்ன செய்வது என, பயந்த மாணவர்கள், கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்ந்து வருகின்றனர். அவர்களிடம், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ்களை பெற்று, கல்லுாரிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

இந்நிலையில், கலை, அறிவியல் கல்லுாரிகளில் சான்றிதழ்களை கொடுத்துவிட்டால், இன்ஜி., கவுன்சிலிங்கில் சான்றிதழ்களை எப்படி சமர்ப்பிப்பது என, மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.இது குறித்து, கவுன்சிலிங் அதிகாரிகள் கூறியதாவது: கவுன்சிலிங்கில் பங்கேற்கும் முன், கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்வதால், மாணவர்களுக்கு, எந்த பிரச்னையும் இல்லை. 'கட் - ஆப்' மதிப்பெண்ணின்படி, அவர்களுக்கான கவுன்சிலிங் நடக்கும் நாளில், சான்றிதழ்களின் நகல்களை எடுத்து வர வேண்டும்.

மேலும், எந்த கல்லுாரியில் சேர்ந்தனரோ, அந்த கல்லுாரி முதல்வர் அல்லது முதன்மை நிர்வாகியிடம், அசல் சான்றிதழ்கள் தங்களிடம் உள்ளதாக, கடிதம் பெற்று வர வேண்டும்.அந்த சான்றிதழ்களின் நகல்களில், கல்லுாரி முதல்வரின் சான்றொப்பம் இருக்க வேண்டும். 

கவுன்சிலிங் நாள் வரைக்கும், மாணவர்கள் காத்திருக்காமல், தற்போதே வாங்கி வைத்து கொள்வது நல்லது. கடிதம் மற்றும் நகல்களை காட்டினால், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.ஆனால், இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட உத்தரவு, மாணவரிடம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்படும். அந்த மாணவர், அசல் சான்றிதழ்களை வாங்கி வந்தவுடன், இட ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்படும்.

ஆசிரியர் கலந்தாய்வு தொடர்பாக இயக்குநரின் சுற்றறிக்கை -5


ஆசிரியர் பணியிட மாறுதலில் உடல் ஊனமுற்ற  மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 2 இட முன்னுரிமையை 6 ஆம் இடத்திற்கு இந்த ஆண்டு தள்ளப்பட்டது.    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்

பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மே-13 அன்று சென்னையில் நடைபெற்ற  மாற்றுத்திறன் ஆசிரியர்கள் கோரிக்கை மாநாட்டில், முன்னுரிமை பட்டியலில் மீண்டும் பழைய முன்னுரிமையை வழங்க கோரி தீர்மானம் இயற்றப்பட்டதோடு, தலைமை செயலகத்தை முற்றகையிடும் போராட்டமும் அறிவிக்கப்பட்டது..

இதனையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலர் சார்பில் பள்ளிக்கல்வி இயக்குனர் ஆர்.இளங்கோவன்  மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் எஸ், கார்மேகம் ஆகியோர் மே-16 மற்றும் 17 ஆம் தேதிகளில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க  நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர்.

பேச்சுவார்த்தை அடிப்படையில் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 256-ல் திருத்தம் செய்ய உடன்பாடு ஏற்பட்டது.  அதன்படி, தற்போது  மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிற ஆசிரியர் பணியிட மாறுதலில் பிண்கண்ட அடிப்படையில் முன்னுரிமை வழங்க  மே-22 தேதியிட்ட பள்ளிக்கல்வித்துறையின் திருத்தப்பட்ட அரசாணை (எண்.318) தற்போது  வெளியிடப்பட்டுள்ளது.

முன்னுரிமை விபரம்
-------------------------------

1. முற்றிலும் பார்வையற்றவர்கள்

2. இருதயம், சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தவர்கள்

3. கடும் புற்றுநோய் பாதித்தவர்கள்

4. 50% மற்றும் அதற்கு மேல் பாதித்த உடல் ஊனமுற்றவர்கள்

5. 5 வருடங்களுக்கு மேல் ஆசிரியர் பணியாற்றிய ராணுவ வீரர்களின் மனைவியர்

6. விதவையர் மற்றும் மணமாகாத முதிர்கன்னியர்

7. 50% க்கு கீழ் பாதித்த உடல் ஊனமுற்றோர்

8. 5 வருடங்களுக்கு கீழ் ஆசிரியர் பணியாற்றும் ராணுவ வீரர்களின் மனைவியர்

9.  மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ள பெற்றோர் ஆசிரியர்களாக இருப்பவர்

10. ஒரே இடத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் பணியாற்றிய ஆசிரியர்கள்

என்ற அடிப்படையில் முன்னுரிமை வழங்க திருத்தப்பட்ட புதிய அரசாணையில் வகை செய்யப்பட்டுள்ளது.

FLASH NEWS : NEET தேர்வு முடிவுகளை வெளியிட தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

தமிழ் மற்றும் ஆங்கில வழித் தேர்வுகளில் வினாக்கள் மாறுபட்டு இருந்ததால்
மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

இலவச கல்வி விண்ணப்ப பதிவு இன்றுடன்  முடிகிறது

தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை, இலவச கல்வி வழங்கும் திட்டத்தில் சேர, இன்றுடன் விண்ணப்ப பதிவு முடிகிறது.

மத்திய அரசின், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டம் - 2009 ன் படி, தமிழகத்தில் உள்ள, தனியார் மெட்ரிக் பள்ளி களில் உள்ள, எல்.கே.ஜி., வகுப்பில், 25 சதவீத இடங்களில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த திட்டத்தில், மாணவர்களை இலவசமாக சேர்க்க, இந்த ஆண்டு முதல், ஆன்லைன் பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
ஏப்., 18ல், ஆன்லைன் பதிவு துவங்கியது. மே, 20ல் முடிவதாக இருந்தது. ஆனால், பெற்றோர் கோரிக்கையை ஏற்று, அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கூடுதல் அவகாசம் இன்று முடிகிறது. இதுவரை, பதிவு செய்யாதோர், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவு செய்யலாம். 
மேலும் சந்தேகங்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் தேசிய தகவலியல் மையங்கள், உதவி தொடக்க கல்வி அதிகாரி மற்றும் மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். இ - சேவை மையங்களிலும், இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

மின் வசதி இல்லாத பள்ளிகள்: அறிக்கை கேட்கிறது மத்திய அரசு.......

கிராமங்களில், மின் வசதி இல்லாத பள்ளிகள் குறித்த அறிக்கை வழங்குமாறு, தமிழக அரசை, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசு, நாடு முழுவதும், தடையில்லாமல் மின்சாரம் வழங்க, தீன்தயாள் மற்றும் ஒருங்கிணைந்த மின் திட்டங்களை துவக்கியுள்ளது. 


உத்தேச அறிக்கை : அதன்படி, தீன்தயாள் திட்ட பணிகள், கிராமங்களிலும், ஒருங்கிணைந்த திட்ட பணிகள், நகரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல மாநிலங்களில் உள்ள பள்ளிகளில், மின் வசதி இல்லாததால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து, அவை தொடர்பான விபரத்தை வழங்குமாறு, தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளை, மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. 

இது குறித்து, மத்திய மின் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தீன்தயாள் திட்டத்தின் கீழ், கிராமங்களில் உள்ள பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகம், சமூக நலக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு, 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டு
உள்ளது. ஆனால், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கிய, 2015 - 16 உத்தேச அறிக்கையின் படி, இந்திய கிராமங்களில் உள்ள, 12.37 லட்சம் தொடக்கப்பள்ளிகளில், 7.07 லட்சம் பள்ளிகளில் மட்டும் மின் வசதி உள்ளது. தமிழகத்தில், 439 தொடக்கப் பள்ளி உட்பட, நாடு முழுவதும், 5.29 லட்சம் பள்ளிகளில், மின் வசதி கிடையாது என்ற, தகவல் கிடைத்துள்ளது. 

நடவடிக்கை : எனவே, தற்போதைய நிலவரப்படி, கிராம பள்ளி களில் உள்ள மின் வசதி குறித்து, அறிக்கை தருமாறு, தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு, கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில், அனைத்து பள்ளிகளுக்கும், மின் வசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில் மின் வசதி இல்லாத கிராமங்களும் இல்லை; பள்ளிகளும் இல்லை. அந்த விபரம், தமிழக அரசு சார்பில், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றார்.

கல்வி அமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக புத்தக கட்டு சுமந்த ஆசிரியர்கள்


 'இலவசங்களை அரசே வினியோகிக்கும்' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறிய நிலையில், மீண்டும் ஆசிரியர்களையே புத்தகத்தை சுமக்க வைத்துள்ளனர்.

 தமிழகத்தில், 2011 முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 14 இலவச திட்டங்கள் மூலம், பாடப் புத்தகம், நோட்டு புத்தகம், வண்ண பென்சில்கள் போன்றவை, பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் மூலம் வினியோகிக்கப்படும். விடுமுறை காலத்தில், ஆசிரியர்கள் புத்தக கட்டுகளை சுமந்து செல்வது வழக்கம்.

'இந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். 'இந்த ஆண்டே, இலவச திட்டங்களுக்காக, ஆசிரியர்களை அழைக்க மாட்டோம்' என, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். 

ஆனால், அமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக, இலவச திட்டங்களை வினியோகிக்க, அனைத்து பள்ளிகளில் இருந்தும், ஆசிரியர்கள் அழைக்கப்பட்டனர். அதனால், விடுமுறையில் இருந்த ஆசிரியர்கள், முக்கிய பள்ளிகளுக்கு வந்து, புத்தக கட்டுகளை சுமந்து செல்லும் பணியில் திடீரென ஈடுபடுத்தப்பட்டதால், அதிர்ச்சி அடைந்தனர்.