>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 17 மே, 2017

ஆசிரியர்களுக்கு வெயிலில் பயிற்சி

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் விளையாட்டு ஆசிரியர்களுக்கு(பிஇடி) 3 நாள் பயிற்சியை நடத்த முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் நடத்த உத்தரவிட்டுள்ளார். இதன்படி நேற்று முதல் 18ம் தேதி வரை இந்த பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சிக்காக அந்தந்த மாவட்டத்தில் உள்ள விளையாட்டு ஆசிரியர்களுக்கு செல்போன் மூலம் அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. 
நேற்று காலை மாவட்ட அலுவலகங்களில் குவிந்த விளையாட்டு ஆசிரியர்களுக்கு திறந்தவெளி மைதானத்தில் புதிய விளையாட்டுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதாவது, பீச் வாலிபால், உள்ளிட்ட விளையாட்டுகள் பயிற்சி அளிக்கப்பட்டது. கோடையில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் விளையாட்டு ஆசிரியர்கள் வெயிலில் பயிற்சி எடுத்து அவதிப்பட்டனர். இது குறித்து பள்ளிக்் கல்வி இயக்குநருக்கு புகார்கள் அனுப்பியும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என விளையாட்டு ஆசிரியர்கள் புலம்புகின்றனர். மேலும், இந்த பயிற்சியை பள்ளி திறந்த பிறகு அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். 

கால்நடை மருத்துவப் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

கால்நடை மருத்துவப் படிப்பு களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது தொடங்கியது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி,ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 320 இடங்கள் இருக்கின்றன.கால்நடை மருத்துவப் படிப்பு களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. வரும்31-ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றிதழ்களுடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை-600 051 என்ற முகவரிக்கு ஜூன் 7-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.இரண்டு படிப்புகளுக்கு விண் ணப்பிப்பவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தரவரிசைப் பட்டியல் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்படும். ஜூலை 19, 20, 21-ம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கும்.இத்தகவல்களை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.திலகர் தெரிவித்தார்.

+2 மாவட்ட வாரியாக 100% தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகள்

11ஆம் வகுப்புக்கு மாநில அளவில் பொதுத்தேர்வு - தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு........

பிளஸ் 1 மாணவர்களுக்கு இனி பொதுத்தேர்வு… செங்கோட்டையன் தகவல்
பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
'தமிழகத்தில், அடுத்த ஆண்டு முதல் ப்ளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும்' என்று சென்னையில் பேட்டி அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதிவரும் நிலையில், அடுத்த ஆண்டு முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களும் பொதுத்தேர்வு எழுதுவார்கள்.
அண்மையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னர், பொதுத் தேர்வுகளுக்கு இனி ரேங்க்கிங் முறை இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி இந்த ஆண்டு முதல் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் இந்த முடிவுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே நல்ல வரவேற்புக் கிடைத்தது. இந்நிலையில் தற்போது 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்னும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் செங்கோட்டையன்!

பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பதை குறித்து பரிசீலிக்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

வெயில் அதிகமாக உள்ளதால் பள்ளி திறப்பு தள்ளிவைக்கப்படுமா என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் 
"இதுகுறித்து பெற்றோர், நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து தேவைபட்டால் பள்ளி திறப்பு தள்ளிவைப்பது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என கூறினார். 

மாணவ்ர் சேர்க்கையில் சதமடிக்கப்போகும் துவக்கப்பள்ளி.

ஈரோடு மாவட்டம் , அம்மாபேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த குருவரெட்டியூர் துவக்கப் பள்ளிதான் இச்சாதனையை செய்யப்போகின்றது.
16-05-2017 வரை 90 மாணவர்களை முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சேர்க்க விண்ணப்பம் பெற்றோரிடம் இருந்து பெறப்பட்டு உள்ளது. இன்னும் 10 மாணவ்ர்களைச் சேர்த்து 100(சதம்) ஆக்க ஆசிரியர்கள் களப்பணி ஆற்றிக்கொண்டு உள்ளனர்.
சாத்தியமானது எப்படி !?
பள்ளி விடுமுறை அறிவித்தவுடன் இப்பள்ளியின் ஆசிரிய ஆசிரியர்கள்
1)உள்ளூர் மக்களின் உதவியோடு 16 ப்ளக்ஸ் அடித்து பள்ளியின் அருகாமை ஊர்களில் முக்கிய இடங்களில் வைத்தனர்.
2) பள்ளியின் சிறப்புகள் குறிப்பிட்டு மாணவர் சேர்க்கைக்கு 1000 நோட்டீஸ் அடித்து பள்ளியினைச் சுற்றி உள்ள அனைத்து ஊர்களிலும் (10கி.மீ சுற்றளவிற்கு) தெருத் தெருவாக, வீடு வீடாக, காடு காடாகச்  சென்று பெற்றோர்களிடத்தில் வழங்கி அனைத்து ஆசிரிய ஆசிரியைகளும்  சென்று பள்ளியின் சிறப்புகளை விளக்கிக் கூறினர்.
3) அனைத்து பகுதிகளிலும் நோட்டீஸ் வழங்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு வீடாக திரும்பச்  சென்று பள்ளியில் சேர்க்க விருப்பம் தெரிவித்த பெற்றோர்களிடம் இருந்து சேர்க்கை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டது.
இவ்வாறு திட்டமிட்டு களப்பணி மேற்கொண்டதால் 16-05-2017 காலை வரை 90 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
மாணவர் சேர்க்கையின் போது ஆசிரியர்கள் காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மதிய உணவு இன்றி, பள்ளிகளுக்கு  விடுமுறை அறிவித்த  நாட்களில் இருந்து களப்பணி ஆற்றி உள்ளனர்.
இந்தக் கிராமப்புறப் பள்ளியின் சென்ற ஆண்டு மாணவ்ர்கள் எண்ணிக்கை 183.ஐந்தாம் வகுப்பு முடிந்து இவ்வாண்டு 44 மாணவர்கள் மேல் வகுப்பில் சேர உள்ளனர். இவ்வாண்டு 139 +90 புதிய மாணவர்களோடு சேர்த்து இன்று வரை 229 மாணவ்ர்கள் உள்ளனர்.
இப்பள்ளி ஆசிரிய ஆசிரியைகளின் உழைப்பிற்கு மக்களின் நம்பிக்கை, அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பதற்கு சாட்சியே புதிய 90 மாணவர்களின் சேர்க்கையாகும்.

கல்விக்கு உயிரரூட்டும் அரசு பள்ளிகள்

சாதனை பள்ளிகள் விபரம் பள்ளிக்கல்வி துறை வெளியீடு

பிளஸ் 2 பொதுத்தேர்வில், 'ரேங்கிங்' முறை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, தேர்வில் சாதித்த பள்ளிகளின் பட்டியலை, முதன் முதலாக, பள்ளிக் கல்வித்துறைவெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், பிளஸ் 2 தேர்வு முடிவில், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பட்டியல் வெளியாகும். குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, பெற்றோர், உறவினர்களால் கண்டிப்புகள் இருக்கும். இதனால்,பல மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவதுடன், விரும்பத்தகாத சம்பவங்களும் நடக்கும்.
இதற்கு, இந்த ஆண்டு பள்ளிக்கல்வித் துறை முற்றுப்புள்ளிவைத்துள்ளது; 'ரேங்கிங்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மாணவர்களின் மதிப்பெண்ணை வைத்து, வணிக ரீதியில் செயல்படும் பள்ளிகளுக்கும், 'செக்' வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பதிலாக, சாதித்த பள்ளிகளின் விபரங்களை, தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், எந்த குறிப்பிட்ட பள்ளிக்கும் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.தேர்வில் பங்கேற்ற, 6,700 பள்ளிகளிலும் தேர்வு எழுதிய மாணவர் எண்ணிக்கை; பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்கள்; 'சென்டம்' பெற்றவர்கள்எண்ணிக்கை; பள்ளியின் சராசரி தேர்ச்சி ஆகியன இடம் பெற்றுள்ளன.
இதன் மூலம், எந்த பள்ளியில் மாணவர்கள், அதிக அளவில் மதிப்பெண் பெற்றுள்ளனர்; குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளனர்; தேர்ச்சி பெற்றவர்கள் யார்; நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எவை என, அனைத்து விபரங்களும், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் மிகப்பெரும் தேர்வான ஒருங்கிணைந்த பட்டதாரிகள் தேர்வுக்கான(CGL 2017) அறிவிக்கை வெளியானது.


TNPSC - VAO பணியிடங்களுக்கு 19 -இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (மே 19) சென்னையில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலர் எம்.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காலியாக உள்ள 147 விஏஓ பணியிடங்களுக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மே 19 -ஆம் தேதி நடைபெறும்.
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளோரின் விவரங்கள், தரவரிசை அடங்கிய கால அட்டவணைப் பட்டியல் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதம் விரைவு அஞ்சல் மூலம் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதத்தை தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாகவும் இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறைக்கு வெளிச்சம் பாய்ச்சும் உதயசந்திரன்!


கல்வித்துறைக்கு வெளிச்சம் பாய்ச்சும் உதயசந்திரன்!
எப்பொழுது வரும், எப்பொழுது வருமென்று விடியலுக்காய் ஏங்கித் தவம் கிடந்தவா்களுக்கு, பள்ளிக் கல்விச் செயலராய் பொறுப்பேற்ற நாள் முதல் நன்னம்பிக்கை முனையாக  நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சி வருகிறார்.  உயா்திரு. த.உதயசந்திரன் இ.ஆ.பஅவா்கள்.
            பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு இம் மேமாதத்தில் தலைசிறந்த எழுத்தாளா்கள், கல்வியாளா்கள், சிந்தனையாளர்கள் போன்ற ஆளுமைகளைக் கொண்டு பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகளைப் பயனுற வழங்குதல், தமிழ் விக்கிப் பீடியாவை முன்னெடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளுதல், பாடத்திட்டம் மாற்றப் பரிசீலனை, ஆசிரியா்கள் சங்கப்  பொறுப்பாளா்களுடன் கலந்துரையாடல், தினந்தோறும் பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டம் நிகழ்த்த வலியுறுத்தல், ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் தனித்தனியே பத்திரிகைகளைத் துவக்குதல், பொதுத் தோ்வு முடிவுகளில் தரவரிசை ஒழிப்பு, அரசுப் பள்ளிகளின் தரமுயா்த்துவதில் சிறப்புக் கவனம் செலுத்துதல், கல்வி அதிகாரிகளைத் தானே நேரடியாகக் கண்காணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தல் போன்ற பல்வேறு ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகள் மூலம் வரும் கல்வியாண்டை வளமான கல்வியாண்டாக வளா்ச்சிப் பாதையில் செலுத்திட செயல்திட்டங்களை வகுத்து வருகிறார்..
            “எவ்வழி நல்லவா் ஆடவா்
            அவ்வழி நல்லை வாழிய நிலனே” (புறம்.187)
என்று சங்ககால ஔவையார் பாடுவது போல் எங்கு, எந்தப் பொறுப்பு வகித்தாலும் அத்துறைக்கும்,  பொறுப்பிற்கும் சிறப்பு சேர்ப்பதோடு பணியில் நோ்மை, பழகுதற்கு இனிமை, சிந்தையில் சீா்மை, செயலில் கூா்மை, கல்வித் துறையின் உயரதிகாரிகளிலிருந்து கடைக்கோடி கிராமத்து ஆசிரியா் வரை ஆலோசனைகளுக்கு செவிசாய்த்து செயல்படுத்தும் மாண்பு போன்ற நற்பண்புகளின் கூட்டுருவாகத் திகழும் மதிப்புறு உதயசந்திரன் இ.ஆ.ப அவா்களால் பள்ளிக் கல்விச் செயலா் பொறுப்பிற்கும் மதிப்பு உயா்வது உறுதி.
            ‘மருளும் இருளும் விலகி மகிழ்ச்சி ஒளி பரவட்டும்’

SCERT - மாநிலக் கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் -தேசிய அளவிலான யோகாஒலிம்பியாட் போட்டிகள் பள்ளி மாணவ /மாணவியருக்கு -மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்துதல் சார்ந்த செயல்முறைகள்!!

இணைய உலகை அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்’ வைரஸ்: செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ன??

சமீபத்தில் உலகம் முழுவதும் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை சர்வர்களை பதம்பார்த்துள்ள ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழி முறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் ‘டூல்’களை
(கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால், இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷியா என கிட்டத்தட்ட 100 நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இங்கிலாந்தில் மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘மால்வேர் டெக்’ என்னும் பாதுகாப்பு அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள், ஓரளவு இந்த வைரஸ் தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதே நேரத்தில் இன்னுமொரு இணைய தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். அந்த தாக்குதல் அனேகமாக இன்று நடைபெறலாம் எனவும் அவர்கள் யூகித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதில்,
1. கணினியின் இயங்கு தளமான (ஆபரேடிங் சிஸ்டம்) விண்டோஸ் பழைய வெர்சனாக இருந்தால் அதை தற்போது உள்ள புதிய வெர்சனுக்கு (விண்டோஸ் 10) ஏற்றது போல அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
2. ஒருவேளை நீங்கள் பழைய ஆபரேடிங் சிஸ்டமை (விண்டோஸ் XP, 7, விஸ்டா) பயன்படுத்தி வந்தால், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் அதற்கான அவசர பாதுகாப்பு இணைப்பை உருவாக்கியுள்ளது. அதை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
3. கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் உள்ளிட்ட முக்கிய சாப்ட்வேர்களை தற்போது வரை சரியான அப்டேட்களை செய்து கொள்ள வேண்டும்.
4. கணினியில் இணைய வசதிகளை கொண்டிருக்கும் பட்சத்தில் முக்கியமாக பயர்வால் (firewall) வசதியை கண்டிப்பாக ஆக்டிவ் செய்ய வேண்டும். ஆக்டிவாக இருந்தாலும் இணைய வழி ஊடுருவலை தடுக்கும் வகையில் பயர்வால் அமைப்புகளை (setting) மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
5. சர்வரில் இருந்து தகவல்களை அனுப்பும் அமைப்பை தற்காலிகமாக செயலிழக்க செய்யுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
6. கணினியில் உள்ள தேவையான தகவல்களை பேக்அப் (Backup) செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தகவல்கல் இழப்பை தடுக்கலாம்.
7. முன் அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் இ-மெயில் தகவல்களை திறந்து வாசிக்க முயற்சிக்க வேண்டாம். விளம்பரம் உள்ளிட்ட தேவையற்ற இ-மெயில்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.
கணினியை ஆன் செய்வதற்கு முன்பாக செய்ய வேண்டியவை:
1. கணினியின் சர்வர் மற்றும் நெட்வொர்க் ஸ்விட்சுகளின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
2. வை-பை இணைப்பு, லேன் (LAN) இணைப்பு, ரூட்டர்கள் ஆகியவற்றை துண்டித்து ஆப் செய்து வைக்க வேண்டும்.
3. ஸ்மார்ட் டி.வி, டேப்லட், மொபைல் போன்கள் ஆகியவற்றையும் ஆப் செய்து வைக்க வேண்டும்.
4. கணினி, மொபைல் ஆகியவற்றில் ப்ளூ டூத், ஹாட்ஸ்பாட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம்.
5. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிறிது நாட்களுக்கு இணைய இணைப்பை பயன்படுத்தாமல் இருக்கலாம்.
மேற்கண்ட அனைத்தையும் செய்யாமல் உங்களது மொபைல், கணினி, ஸ்மார்ட் டி.வி, டேப்லட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

பள்ளி பதிவேடுகளில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான வழி

பள்ளி பதிவேடுகளில் பெயர் மாற்றம் / திருத்தம் செய்வது எப்படி? அரிய தகவல்கள் :
பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோரும் விண்ணப்பங்கள் பரிந்துரை செய்வது தொடர்பாக அரசு கீழ்க்கண்ட விளக்கங்களை அளித்துள்ளது.
மாணவரின் பெற்றோரால் சரியாக விவரங்கள் கொடுக்கப்பட்டு பள்ளி பதிவின்போது பள்ளி நிர்வாகத்தால் தவறு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது காலண்டரில் இல்லாத தேதி பிறந்த தேதியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு பிறந்த தேதியை திருத்தம் செய்யுமாறு உரிமையியல் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்திருந்தாலோ பள்ளிப்படிப்பை முடித்து மதிப்பெண் சான்றுகளையும் பெற்றுக் கொண்ட பின் பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் மேற்கொள்வது என்பது பிரிவு 5 ன்படி ஏற்கத்தக்கதல்ல.
பத்தாம் வகுப்பு அரசு தேர்விற்கு பெயர்ப்பட்டியல் அனுப்பப்படுவதற்கு முன்னர் உரிய சான்றுகளின் அடிப்படையில் பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தங்களை செய்வதற்கு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிப்படிப்பை முடித்து மதிப்பெண் சான்றுகளையும் பெற்றுக் கொண்ட பின் தந்தை பெயர் மற்றும் முகப்பெழுத்து திருத்தம் கோரி தொடரப்பட்ட வழக்கில் (வழக்கு எண் - W. P. NO - 25677/2010 in M. P. NO - 1 & 2 /2011, R. Yoga Priya Vs Director of School Education) சென்னை உயர்நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.
"Since the petitioner has already published her name change in the Govt. Gazette as stated Supra, the name is sufficient for all purposes ans everybody is bound to accept the same as the changed name of the petitioner. Hence there is no error in the order passed by the respondent i. e) Director of School education refusing top carry our the name (or) Initial Change in the Certificates in the Certificates as requested by the petitioner ".
சாதித் திருத்தம் கோரும் நிகழ்வுகளில் முதலில் தவறான சாதி குறிப்பிடப்பட்டு பின்னர் வருவாய்த்துறை வழங்கும் சாதிச் சான்றிதழின் படி திருத்தம் கோரப்பட்டால் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் அவ்வாறான திருத்தம் மேற்கொள்ளப்படாது. ஏனெனில் வருவாய்த்துறை வழங்கும் சாதிச் சான்றிதழே இறுதியானதும், ஏற்றுக்கொள்ளதக்கதும் ஆகும்.
பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோருவோர் கல்வித்துறையில் பணிபுரிபவர்கள் என்றால் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்குள் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதர அரசு துறைகளில் மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோர் பிறந்த தேதி /தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோரி தங்கள் நியமன அலுவலர் மூலம் வருவாய் நிர்வாக அலுவலர், பேரிடர் மேலாண்மை, சேப்பாக்கம், சென்னை - 600005 மூலம் நேரடியாக அரசு தேர்வுத்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறைக்கு கருத்துக்கள் அனுப்பக்கூடாது.
உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளின் அடிப்படையில் பிறந்த தேதி /தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோருவோர் இருதரப்பு வாதங்களின் அடிப்படையிலான தீர்ப்பின் அசல் மற்றும் அசல் கல்விச் சான்றுகளுடன் அன்னார் 10 ஆம் வகுப்பு பயின்ற பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கருத்துக்களை பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.
ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது என்பதால், அத்தகைய தீர்ப்புகள் பெறப்பட்டால் சார்ந்த மேல்முறையீட்டு மனு உடன் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ஒருதலைப்பட்ச தீர்ப்பின் அடிப்படையில் திருத்தம் கோரும் கருத்துக்களை பரிந்துரைக்கக்கூடாது.
வழக்குகளில் தலைமைச் செயலாளர் / கல்வித்துறை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஒரு தரப்பினராக இருந்தால் (One of the Department) அவர்களை நீக்கம் செய்திட (Deletion) மனு செய்திட வேண்டும். ஏனெனில் கல்விச் சான்றுகளில் திருத்தம் செய்யும் அதிகாரம் பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் இதர துணைத்தலைவர்களின் பரிந்துரையின் பேரில் அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு மட்டுமே உள்ளது.
பள்ளி நிர்வாகத்தால் தவறு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது காலண்டரில் இல்லாத தேதி பிறந்த தேதியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு பிறந்த தேதியை திருத்தம் செய்யுமாறு உரிமையியல் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்திருந்தாலோ கீழ் குறிப்பிட்ட ஆவணங்களுடன் மாணவர் 10 ஆம் வகுப்பு பயின்ற பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கருத்துக்களை பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.
மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பயின்றவர்கள் சார்ந்த மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் / ஆங்கிலோ இந்திய பள்ளி ஆய்வாளர் மூலம் மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர் மூலம் அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். ஆதிதிராவிடர் பள்ளிகளில் பயின்றவர் என்றால் ஆதிதிராவிட இயக்குனருக்கு அனுப்பக்கூடாது. இத்தகைய கருத்துக்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கக்கூடாது.
முற்றிலும் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள் நேரிடையாக அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவர்களது கருத்துக்களையும் முதன்மை கல்வி அலுவலர்கள் / மாவட்ட கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கக்கூடாது.

செவ்வாய், 16 மே, 2017

தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 30.06.2017 அன்றைய நிலையில் 3 ஆண்டுகள் நிறைவுப்பெற்ற உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு

DEO அதனையொத்த பணி மாறுதல் ஆணை

அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 17/05/17 அன்று நடைபெறும்

38 உயர் / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு DEO ஆக பதவி உயர்வு

தொடக்க கல்வித்துறை மாறுதல் கலந்தாய்வு எவ்வித தடையின்றி நடைபெறும்

28.04.2017 அன்று பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியராக பதவிஉயர்வு  பெறுவதற்கு தடையாணை பெற்றதை ஊடகத்தில்  மூலம் நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிந்து, 02.05.2017 அன்று பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையிலான ஆசிரியர் பிரதிநிதிகள் கூட்டத்தில் அனைவரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.
பின் 05.05.2017 அன்று அத்தடையாணை மற்றும் AFFIDAVIT  நகல்கள் இரண்டினையும் பெற்று தொடக்ககல்வி இணை இயக்குனர் , பள்ளிக்கல்வி அமைச்சர் ஆகியோரிடம் வழங்கி தடையாணை நீக்க நடவடிக்கை எடுக்க  செய்தோம்.
தொடக்க கல்வி இணைஇயக்குனர் அவர்களும் தடையாணை நீக்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன என்றும் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தடையாணை ரத்து செய்யப்பட்டுவிடும் என இன்று நமது மாநில பொறுப்பாளர்களிடம் தெரிவித்தார்
மேலும் தொடக்க கல்வித்துறை மாறுதல் கலந்தாய்வு எவ்வித தடையின்றி நடைபெறும் எனவும்  இன்று சென்னையில் தம்மை சந்தித்த தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொறுப்பாளர்களிடம் இணை இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார்

திங்கள், 15 மே, 2017

தமிழக அரசுப் பள்ளிகளில் வருகிறது இலவச வைஃபை!

தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வைஃபைவசதி வழங்க முடிவுசெய்துள்ளதாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அண்மையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னர், பொதுத் தேர்வுகளுக்கு இனி ரேங்க்கிங் முறை இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி இந்த ஆண்டு முதல் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் இந்த முடிவுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.
இந்நிலையில், நேற்று எல்லப்பம்பாளையம் கிராமத்தில் ஒரு விழாவில் பேசிய செங்கோட்டையன்,  பொதுத் தேர்வுகளின் ரேங்க்கிங் முறையை ரத்துசெய்ததுகுறித்துப் பேசினார். அப்போது, ‘10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடுவதால், மாணவர்கள் மத்தியில் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.
குறைந்த மதிப்பெண் எடுப்பவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்’, என்றார்.மேலும் பேசிய செங்கோட்டையன்,’ அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் இருந்து கம்ப்யூட்டர் பாடம் கற்றுக்கொடுக்கப்படும். அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் வைஃபை வசதி வழங்கப்பட உள்ளது. ஆண்டு விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட உடன், மாணவர்களுக்கு ஒரே வாரத்தில் லேப்டாப் வழங்கப்படும்’ என்று அவர் உறுதி அளித்துள்ளார்.