திங்கள், 15 மே, 2017
தமிழக அரசுபள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக நிகழ் கல்வியாண்டிலே கொண்டுவர ஆசிரியர் சங்களுக்கு கணினி ஆசிரியர்கள் வேண்டுகோள்
அரசுப்பள்ளி,மற்றும் அங்கு பயிலும் மாணவர்களின் வாழ்க்கைத்தரம், கல்வித் தரத்தை உயர்த்தும் 6அம்ச கோரிக்கை:
1.) அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நிகழ் கல்வியாண்டின் தொடக்கத்திலே ஆறாவது பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும் (தனியார் பள்ளிகளுக்கு மேலாக).
2.) சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடத்தை, மீண்டும் அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காக அச்சிடப்பட்ட (6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வரை) கணினி அறிவியல் பாட புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
3.) கடந்த 11-ஆண்டுகளாக புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லை. அங்கு கணினி அறிவியல் பாடப்பிரிவை தோற்றுவிக்க வேண்டும். மேலும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமிக்க வேண்டும்.
4.) கணினி அறிவியலை பயிற்றுவிக்க ஒப்பந்த ஊழியர்களை தேர்வு செய்யாமல் தகுதிவாய்ந்த பி.எட். பட்டதாரிகளை பணிநியமனம் செய்திட வேண்டும்.
5.) கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க(1-5), நடுநிலை(6-8), உயர்நிலை(9-10), மேல்நிலைப்(11-12) பள்ளிகளுக்கு குறைந்தது ஓர் பி.எட். படித்த கணினி ஆசிரியரை தமிழக அரசு நியமனம் செய்ய வேண்டும்.
6.) அரசு பள்ளிகள் அனைத்திலும் (1ம் வகுப்பு முதல் - 12ம் வகுப்பு வரை)குறைந்த பட்சம் 20முதல் 40வரை கணினிகளைக் கொண்ட அதிநவீன கணினி ஆய்வகங்கள் அமைத்து தர வேண்டும்
*தாய்மை உள்ளம் கொண்ட தாய் ஆசிரியர்கள் சங்கத்தின் உறவுகளே!*
கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளியில் கொண்டு வர அனைத்து சங்கங்களும் தீர்மானம் நிறைவேற்றி பள்ளி கல்வி அமைச்சரிடமும், பள்ளிக்கல்வி செயலாளர்களிடமும் ,முதலமைச்சரிடமும் வலியுறுத்துமாறும் மேலும் அனைத்து அரசு கலைக்கல்லூரி,நிர்வாகம் மற்றும் "தமிழகக் கல்வியாளர்கள்" பேராசிரியர்களும் இதனை அரசுக்கு வலியுறுத்துமாறும் அன்போடு நமது
*தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.*®655/2014.
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர் ,
9626545446.
ஐ.சி.எஸ்.இ., 10ம் வகுப்பு இன்று 'ரிசல்ட்?'
ஐ.சி.எஸ்.இ., என்ற இந்திய இடைநிலை சான்றிதழ் படிப்பில், 10ம் வகுப்பு தேர்வு முடிவு, இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 2,015 பள்ளிகள், நாடு முழுவதும் செயல்படுகின்றன. இந்த ஆண்டு, 2.50 லட்சம் பேர், பொதுத் தேர்வை எழுதினர். அவர்களில், 74 ஆயிரத்து, 544 பேர், 10ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர்.
இவர்களுக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவை, www.cisce.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் தயாரிக்க உத்தரவு
'அனைத்து கலை, அறிவியல் கல்லுாரிகளிலும், இட ஒதுக்கீடுப்படி, தரவரிசை தயாரித்து, மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிந்த நிலையில், அனைத்து கலை, அறிவியல் கல்லுாரிகளிலும், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2 தேர்வு முடிந்து, 10 வேலை நாட்கள் வரை விண்ணப்பம் வழங்கப்பட வேண்டும் என, கல்லுாரிகளுக்கு, உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, 25ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும். அதன்பின், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 10 நாட்களில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.
இது குறித்து, அனைத்து கல்லுாரிகளுக்கும், உயர் கல்வித்துறை சார்பில், கல்லுாரி கல்வி இயக்குனர், மஞ்சுளா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதன் விபரம்:
● கல்லுாரி விண்ணப்பம் மற்றும் தகவல் குறிப்பேட்டில், பாடப் பிரிவுகளின் கட்டண விபரங்கள் இடம்பெற வேண்டும்
● மாணவர் சேர்க்கை கமிட்டி அமைத்து, இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்ற வேண்டும். மதிப்பெண் அடிப்படையில், தரவரிசைப் பட்டியல் தயாரிக்க வேண்டும். இதில், எந்த விதிமீறலும் இருக்க கூடாது
● முதலில், அரசு உதவி பெறும் பாடப் பிரிவுகளுக்கு, மாணவர் சேர்க்கையை முடித்த பிறகே, சுயநிதி பாடப் பிரிவுகளில், மாணவர்களை சேர்க்க வேண்டும்
● சி.பி.எஸ்.இ., போன்ற பிற பாடத் திட்டங்களில், தேர்வு முடிவு வர தாமதமானால், அந்த மாணவர்களுக்கு, கூடுதல் கால அவகாசம் தர வேண்டும்
● பிளஸ் 2 தேர்வு முடிவு, இணையதளத்தில் வெளியான தேதியிலிருந்து, 10 நாட்களுக்குள், மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை பரிசீலித்து, 14 முதல், 20 நாட்களுக்குள், இட ஒதுக்கீடுப்படி, தரவரிசை பட்டியல் தயாரித்து, அதை கல்லுாரியின் தகவல் பலகையில், விண்ணப்பதாரர்களுக்கு தெரியும்படி அறிவிக்க வேண்டும்
● விண்ணப்பத்தில், ஏதேனும் விடுபட்டிருந்தால், மாணவர்களுக்கு தகவல் அளித்து, அதை தாக்கல் செய்ய, அதிகபட்சம், இரண்டு நாட்கள் அவகாசம் தர வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பி.காம்., - பி.எஸ்சி., படிக்க கடும் போட்டி : கலை, அறிவியலுக்கு 6 லட்சம் பேர் முயற்சி
பிளஸ் 2வில், தேர்வானவர்கள் மத்தியில், இன்ஜி., மட்டுமின்றி, கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு முடிவில், அறிவியல் அல்லாத வணிகவியல், வரலாறு, தொழிற்கல்வி போன்ற பாடப்பிரிவுகளில், 3 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், குறைந்தபட்சம், 20 ஆயிரம் தொழிற்கல்வி மாணவர்கள், இன்ஜி., வேளாண் மற்றும் கால்நடை படிப்பில் சேருவர்.
அவர்களை தவிர, மற்ற அனைவரும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் தான் சேர வேண்டிய நிலை உள்ளது. அதேபோல், கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்ற, 5.94 லட்சம் பேரில், இன்ஜி., மற்றும் மருத்துவம் போன்ற படிப்புகளில், அதிகபட்சம், மூன்று லட்சம் மாணவர்களே சேர முடியும்.அதனால், அவர்களில் மீதமுள்ள, மூன்று லட்சம் மாணவர்களையும், கலை, அறிவியல் பிரிவு மாணவர்களையும் சேர்த்து, ஆறு லட்சம் பேர் கலை, அறிவியல், கல்லுாரிகளில் சேர முயற்சிக்கின்றனர்.
ஆனால், தமிழகத்திலுள்ள கலை, அறிவியல் கல்லுாரிகளில், நான்கு லட்சம் இடங்களே உள்ளன. எனவே, மீதமுள்ள இரண்டு லட்சம் பேரில், ஒரு தரப்பினருக்கு, நிகர்நிலை பல்கலைகளில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளிலும், தனியார் கல்லுாரிகளிலும், இடங்களை பெற, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: இந்த ஆண்டு கணிதம், அறிவியல் இல்லாமல், கலை மற்றும் வணிகவியலில் மட்டுமே, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 1,000க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களில், 40 ஆயிரம் பேர் வரை, பி.காம்., படிப்புக்கு போட்டியிட வாய்ப்புள்ளது. அதேபோல், இன்ஜி., படிப்புக்கு நிகராக, கலை, அறிவியல் படிப்பில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும், 1,000க்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள், இன்ஜினியரிங்கில் கடினமாக படிக்க வேண்டும் என்பதால், பெரும்பாலும் கலை, அறிவியல் கல்லுாரிகளை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
RTE : 8ம் வகுப்பு வரை இலவச கல்வி விண்ணப்பிக்க 3 நாளே அவகாசம்
எல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரை, தனியார் பள்ளிகளில் அரசின் செலவில் படிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது. மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தில், ஐந்து வயது முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு, கட்டணமின்றி சேர்க்கப்படுவர்.
அதற்கான கல்வி கட்டணத்தை, மத்திய அரசிடம் பெற்று, மாநில அரசு வழங்கும். தமிழகத்தில், எல்.கே.ஜி., என்ற பள்ளி நுழைவு வகுப்பில், சிறுபான்மை அந்தஸ்து பெறாத, மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தமிழகம் முழுவதும், 10 ஆயிரம் பள்ளிகளில், 1.26 லட்சம் இடங்கள், இந்த திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்டாய கல்வி சட்டத்தில், எல்.கே.ஜி.,யில் சேரும் மாணவர்களுக்கு, 8ம் வகுப்பு வரை, எந்தவித கட்டணமும் கிடையாது. இந்த சிறப்பு சலுகையில், பொருளாதாரத்தில் நலிந்த குடும்பத்தினரின் குழந்தைகளை சேர்க்கலாம்.
இந்த ஆண்டு, இலவச சேர்க்கை திட்டம், 'ஆன்லைனில்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்., 20ல், விண்ணப்ப பதிவு துவங்கியது; இதுவரை, 25 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். 18ம் தேதி, விண்ணப்ப பதிவு முடியும் நிலையில், இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது. ஆனால், ஒரு லட்சம் இடங்களுக்கு, இன்னும் விண்ணப்பங்கள் வரவில்லை. எனவே, இந்த வாய்ப்பை, பெற்றோர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, கல்வித்துறை அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
இன்று பிளஸ் 2 சான்றிதழ் வெளியீடு
பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல் தற்காலிக சான்றிதழ் வழங்கப்படுகிறது. விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். பிளஸ் 2 தேர்வு முடிவுகள், 12ல் வெளியாயின.
இதை தொடர்ந்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம். நாளை மறுநாள் முதல், மாணவர்கள், தங்கள் பள்ளியிலும்; தனித்தேர்வர்கள், தேர்வு மையத்திலும், தற்காலிக சான்றிதழ் பெறலாம். மதிப்பெண் சான்றிதழில், ஆங்கிலத்துடன், தமிழிலும் மாணவர் பெயர் இடம் பெற்றுள்ளது.மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்ப பதிவு, 12ல் துவங்கியது; இன்று கடைசி நாள். பள்ளிகளில், மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு பள்ளிகள் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
சென்னை மாவட்ட பள்ளிகளின் கல்வித்தரத்தை முன்னேற்ற, கல்வித்துறை நிர்வாகத்தை சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.சென்னையை பொறுத்தவரை, தனியார் மெட்ரிக் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மாநகராட்சி பள்ளி என, 439 மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 32 மாநகராட்சி பள்ளிகளும், 21 அரசின் நேரடி பள்ளிகளும் செயல்படுகின்றன.
100 சதவீத தேர்ச்சி
இவற்றில், மாநகராட்சி பள்ளிகளில், 6,423 மாணவர்களும், அரசு பள்ளிகளில், 4,359 மாணவர்களும், பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். இதில், மாநகராட்சியின் இரண்டு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. அரசு பள்ளிகளில், ஒரு பள்ளி கூட, 100 சதவீத தேர்ச்சி பெறவில்லை.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:சென்னை மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில், பொது தேர்வு தேர்ச்சி விகிதம், கடந்த பல ஆண்டுகளாக குறைந்து வருகிறது. இதற்கு, மாவட்ட கல்வித்துறையே முக்கிய காரணம்.
மாநகராட்சி பள்ளிகளுக்கு, தனியாக கல்வி அதிகாரி நியமிக்கப்படுகிறார். இந்த பதவியில் பெரும்பாலும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றனர். அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில், பல்வேறு புதிய திட்டங்கள் வகுத்து, மாநகராட்சி பள்ளிகளில் பாடம் கற்றுத்தரப்படுகிறது. அதேபோல், அரசு பள்ளிகளை விட அதிக அளவில், மாநகராட்சி பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர். அதனால், அங்கு பாடம் கற்பித்தல், தேர்வு நடத்துதல் போன்றவற்றில் தரம் உயர்கிறது.
கல்வி தரம் சரிவு
ஆனால், பள்ளிக்கல்வித்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள அரசு பள்ளிகளை கவனிக்க, நான்கு மாவட்ட கல்வி அதிகாரிகளும், அவர்களுக்கு மேல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ.,வும் உள்ளனர்.ஆனால், அதிகாரிகள் பெரும்பாலும், அரசின் விழாக்கள், கல்வித்துறை கூட்டங்கள் நடத்துவது, அமைச்சரகம், செயலகம் மற்றும் அதிகாரிகளின் பணிகளை கவனிப்பது, தனியார் பள்ளிகளின் பிரச்னைகளை ஆய்வு செய்வது போன்றவற்றுக்கே நேரத்தை செலவிடுகின்றனர். அதனால், கல்வித்தரம் சரிந்து கொண்டே செல்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
குடோனாக பயன்படும் அரசு பள்ளி
சென்னையிலுள்ள, 21 அரசு பள்ளிகளில் அசோக்நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், சூளைமேடு போன்ற இடங்களில் உள்ள மகளிர் பள்ளிகளை தவிர, மற்ற பள்ளிகளில், கல்வித்தரம் குறைவாகவே உள்ளது. அவற்றில் மாணவ, மாணவியர் சேர விரும்புவதில்லை. எழும்பூரிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், அங்குள்ள வகுப்பறைகள், பள்ளிக்கல்வியின் பல்வேறு அலுவலகங்களாக மாற்றப்பட்டு உள்ளன.
இந்த பள்ளியில், ஆறாம் வகுப்பில், ஒரே ஒரு மாணவி மட்டுமே படிக்கிறார். எழும்பூர் மாநில மகளிர் பள்ளியிலும் மாணவியர் சேர்க்கை குறைந்ததால், அங்குள்ள கட்டடங்களும், பள்ளிக்கல்வி அலுவலகங்களாகவும், இலவச சைக்கிள் தயாரிக்கும் மையம் மற்றும் நோட்டு புத்தக குடோன்களாகவும் மாறி விட்டன
மாணவர் மாற்று சான்றிதழ் 'டிஜிட்டல்' மயமாகிறது
பிளஸ் 2 தேர்வில், 'ரேங்கிங்' முறை ரத்து நடவடிக்கையை தொடர்ந்து, அடுத்த அதிரடியாக, அனைத்து பள்ளிகளிலும், இனி மாற்று சான்றிதழை, 'டிஜிட்டல்' ஆவணமாக மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், பள்ளிகளில் மாணவர்களின் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் என அனைத்தும், டிஜிட்டல் மயமாக உள்ளது.
மாணவர்கள், ஒரு பள்ளியிலிருந்து மாற்றலாகி சென்றால், அவர்கள் சேரும் பள்ளிக்கே, ஆன்லைனில் மாற்று சான்றிதழை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், சான்றிதழின் உண்மைத்தன்மையை, பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அதேபோல், மணிக்கணக்கில், சான்றிதழ்களை தேட வேண்டியதும் இல்லை. சான்றிதழ்கள் காணாமல் போகும் பிரச்னைக்கும், முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த விபரங்களும், அந்த பள்ளிகளில், டிஜிட்டல் மயமாகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை நாமே ஒன்று சேர்ந்து சரி செய்து, அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க முன்வந்த கிராம மக்கள் !!
மதுரை, மே 11 (டி.என்.எஸ்) மதுரை மாவட்டம் மேலூரை சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள இளைஞர்கள் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்காமல், அரசு பள்ளிகளில் மட்டுமே சேர்ப்போம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
மேலும், இவர்கள் தங்களது சொந்த செலவிலேயே அப்பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளிக்கு புதிய கட்டிடத்தையும் கட்டிக் கொடுத்துள்ளனர்.
மேலூரை சுற்றியுள்ள பல கிராமங்களில் விவசாயம் மட்டுமே முக்கிய தொழிலாக உள்ளது. வறட்சி காரணமாக விவசாயத்தை கைவிட்ட அப்பகுதி மக்கள் அரபு நாடுகளில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தங்களது பிள்ளைகளின் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இளைஞர்கள், தனியார் பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்ப்பதில்லை என்ற முடிவு எடுத்திருப்பதோடு, அரசு பள்ளிக்கு மக்கள் ஒன்று சேர்ந்து ரூ.7 லட்சம் வரை நிதி திரட்டி அதன் மூலம் புதிய கட்டிடம் ஒன்றை கட்டி கொடுத்துள்ளார்கள.
அரசு நிர்ணயித்த ஆசிரியர்கள் போக கூடுதலாக, ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஆசிரியர் ஒருவரையும் நியமித்துள்ளார்கள். இந்த ஆசிரியருக்கு ஊதியத்தை மக்களே கொடுக்கிறார்கள்.
அரசு நிர்ணயித்த ஆசிரியர்கள் போக கூடுதலாக, ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஆசிரியர் ஒருவரையும் நியமித்துள்ளார்கள். இந்த ஆசிரியருக்கு ஊதியத்தை மக்களே கொடுக்கிறார்கள்.
தனியார் பள்ளிகளு பல ஆயிரங்களை கொடுத்து ஏமாறுவதை விட அரசு பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை நாமே ஒன்று சேர்ந்து சரி செய்து, நமது பிள்ளைகளை அப்பள்ளியிலேயே படிக்க வைக்க வேண்டும் என்ற இவர்களது முயற்சி பல இளைஞர்களை எழுச்சியடை செய்துள்ளது.
மட்டங்கிபட்டி என்ற கிராமத்து இளைஞர்களின் தொடக்கமான இத்தகைய முயற்சி தற்போது மேலூரை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் பரவ தொடங்கியுள்ளது.
ஞாயிறு, 14 மே, 2017
தனியார் கல்லூரி, நிகர்நிலைப் பல்கலை. மருத்துவமேற்படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.
தமிழகத்தில் 21 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் போக மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு (எம்டி, எம்எஸ்) 562 இடங்கள், மருத்துவ பட்டய மேற்படிப்புக்கு (டிப்ளமோ) 200 இடங்கள்உள்ளன.
சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் போக பல் மருத்துவ பட்டமேற்படிப்புக்கு (எம்டிஎஸ்) 19 இடங்கள் உள்ளன.இந்நிலையில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) அடிப்படையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க் கைக்கான முதல்கட்ட கலந் தாய்வு கடந்த 8-ம் தேதி முதல் 11- தேதி வரை நடைபெற்றது.
சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் போக பல் மருத்துவ பட்டமேற்படிப்புக்கு (எம்டிஎஸ்) 19 இடங்கள் உள்ளன.இந்நிலையில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) அடிப்படையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க் கைக்கான முதல்கட்ட கலந் தாய்வு கடந்த 8-ம் தேதி முதல் 11- தேதி வரை நடைபெற்றது.
இதில் மருத்துவப் பட்டமேற்படிப்புகள் மற்றும் பட்டயமேற்படிப்பில் 722 இடங்களும், பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பில் 17 இடங் களும் நிரப்பப்பட்டன. கலந் தாய்வு முடிவில் மருத்துவ பட்ட மேற்படிப்புகள் மற்றும் பட்டய மேற்படிப்பில் 40 இடங்கள், பல் மருத்துவ பட்டமேற்படிப்பில் 2 இடங்கள் காலியாக உள்ளன.மருத்துவ பட்டமேற்படிப்பு களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு அடுத்த வாரம் தொடங்க உள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள 42 இடங்கள், தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு ஒதுக்கீடு இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள் நிரப்பப்படஉள்ளன.
இந்நிலையில் மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) நேற்று வெளியிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக் கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியில் 2,680 பேர் இடம் பெற்றுள்ளனர். நிகர்நிலைப் பல் கலைக்கழகங்களின் இடங் களுக்கான தரவரிசைப் பட்டிய லில் 4,107 பேர் இடம் பிடித் துள்ளனர்.தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியில் 2,680 பேரும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 4,107 பேரும் இடம்பிடித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)