>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 9 மே, 2017

கலை கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாக மாநில கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா தெரிவித்தார்.
பூர்த்தி செய்த விண்ணப்பங் களை பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான 10 வேலை நாட் களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் 82 அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், 162 அரசு உதவி பெறும் கலை அறிவி யல் கல்லூரிகளும், 1,400-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில் பிஏ. பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ உள்ளிட்ட கலை, அறிவியல், இலக் கியம் சம்பந்தப்பட்ட இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான விண் ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாண வர் சேர்க்கை ஏற்பாடு குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் பேரா சிரியை ஜெ.மஞ்சுளாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: அரசு கலை அறிவியல் கல்லூரிகளைப் பொருத்தவரையில் ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க் கைக்கென தனி குழு அமைக்கப் பட்டு அதன்மூலமாக சேர்க்கைப்பணிகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில், பல அரசு கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது.விண்ணப்பக் கட்டணம் ரூ.48. கடந்த ஆண்டு ரூ.27 வசூலிக்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான 10 வேலை நாட்களுக்குள் அந்தந்த கல்லூரிகளில் சமர்ப்பிக்க வேண் டும். மாணவர்கள்வெவ்வேறு படிப்புகளுக்கு தனித்தனி விண் ணப்பம் போட வேண்டியதில்லை. ஒரு விண்ணப்பம் போட்டால் போதும். வெளிப்படையான கலந் தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
குறிப்பிட்ட சில படிப்புகளுக்கு (பிபிஏ, பிகாம், பிசிஏ) அதிக தேவை இருக்கலாம். அத்தகைய படிப்புகளுக்கு ஏராளமானோர் விண்ணப்பிக்கலாம். அது போன்ற சூழ்நிலையில், தற்காலிக ஏற்பாடாக, கல்லூரி நிர்வாகம், இணைப்பு அங்கீகாரம் அளித் துள்ள பல்கலைக்கழகத்திடம் அனுமதி வாங்கிவிட்டு தேவைக் கேற்ப இடங்களை அதிகரித்துக் கொள்ளலாம்.இவ்வாறு மஞ்சுளா கூறினார்.

பொறியியல் சேர்க்கை: ஒரு வாரத்தில் 33,769 மாணவர்கள் பதிவு.

பொறியியல் படிப்பில் சேருவதற் காக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 33,769 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து உள்ளனர்.தமிழகத்தில் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள்உள்ளன.
இவற்றில் சுமார் 2 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்கான ஆன்லைன் பதிவு கடந்த மே 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.முதல் நாளிலேயே 4,786 பேர் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 2-வது நாளில் 6,860 பேரும், 3-வது நாளில் 6,608 பேர், 4-வது நாளன்று 5,150 பேர், 5-வது நாளில் 4,262 பேர், 6-வது நாளில் 4,265 பேர், 7-வது நாளில் 1,838 பேர் என கடந்த ஒரு வாரத்தில் மொத்தம் 33,769 பேர் பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.ஆன்லைன் பதிவு மே 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்கள், தேவையான ஆவணங்களுடன் ஜுன் 3-ம் தேதிக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை சென்றடைய வேண்டும்.
இதைத்தொடர்ந்து, மாணவர் களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டு ஜுன் 20-ம் தேதி அவர்களுக்கு ஆன்லைனில் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். அதன்பிறகு ஜுன் 22-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 27-ம் தேதி முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கும்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கோடை பயிற்சி ஒத்திவைப்பு.

தமிழகத்தில் பட்டதாரிகளுக்கு கோடை விடுமுறையில் நடத்தப்படவிருந்த அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.)பயிற்சி இடைக்காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் (ஆர்.எம்.எஸ்.ஏ.) சார்பில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இந்தப் பயிற்சி திங்கள்கிழமை (மே 8) முதல் மே 12-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கொளுத்தும் வெயில், குடும்பத்துடன் கோடை விடுமுறையைக் கொண்டாட இயலாத நிலை ஏற்படும் உள்ளிட்ட காரணங்களைக் கூறி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழக தமிழாசிரியர் கழகம், ஆசிரியர் முன்னேற்றசங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதைத் தொடர்ந்து அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம், தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி மற்றும்ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து இந்தப் பயிற்சி இடைக்காலமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பிச்சையெடுக்கும் குழந்தைகளை மீட்க தமிழகம் முழுவதும் சோதனை: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி

தமிழகம் முழுவதும் பிச்சையெடுக்கும் குழந்தைகள், சட்டத்தை மீறி பணியில் அமர்த்தப்படும் குழந்தைகளை மீட்க தொடர் சோதனைகள் நடத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி அளித்துள்ளது.
சென்னையில் பிராட்வே பகுதியில் தெரு வோரம் தூங்கிய 2 குழந்தைகள் கடந்த ஆண்டு கடத்தப்பட்டன. இந்த குழந்தை களை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி எக்ஸ்னோரா அமைப்பைச் சேர்ந்த நிர்மல் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் கே.சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் குழந்தைகளை மீட்பது தொடர்பாக கூட்டம் நடைபெற்றது. அதில், போலீஸ் உயர் அதிகாரிகள், குழந்தைகள் நல குழும உறுப்பினர்கள், சமூக பாதுகாப்புத்துறை அதிகாரி, தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், 47 குழுக்கள் அமைக்கப்பட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 94 குழந்தைகள் மீட்கப்பட்டனர். அதில், 21 குழந்தைகளின் பெற்றோர் அடையாளம் காணப்பட்டனர். மீதமுள்ளவர்கள் குழந்தைகள் நல குழுமத்தின் உத்தரவுப்படி சிறார் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும், சிறார் நீதி சட்டப்பிரிவு 76-ன் கீழ் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல கோவை மாநகர ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில்,”கோவையில் நடத்தப்பட்ட சோதனையில் 91 குழந்தைகள் மீட்கப்பட்டனர்” என தெரிவிக்கப்பட்டது.போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தர வில் கூறியிருப்பதாவது: சட்டத்தை மீறி குழந்தைகளை பணியில் அமர்த்தப்படும் குழந்தைகள், பிச்சையெடுக்கும் குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதை தமிழக டிஜிபி உறுதி செய்வார் என நாங்கள் நம்புகிறோம்.
அடுத்த விசாரணை தேதியின்போது மற்ற குழந்தைகளும் மீட்கப்பட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுமம் முன்பு ஆஜர்படுத்தப்படுவார்கள் என நாங்கள் நம்புகிறோம். எனவே, இதுதொடர்பாக நிலை அறிக்கையை மாவட்ட குழந்தைகள் நல குழுமம் வரும் ஜூன் 9-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.

அறிவியல் ஆர்வத்திற்கு கிடைத்த பரிசு,ஜப்பான் செல்லும் அரசுப்பள்ளி மாணவி

G.O.No.125 Dt: 8th May 2017 PENSION – Contributory Pension Scheme - Employees contribution and Government contribution - Rate of interest for the period from 1st April 2017 to 30th June 2017- Orders - Issued.



பள்ளிக்கல்வி - 01.01.2017 அன்றைய நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்விற்கான திருத்திய (REVISED)தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு



வெளியானது முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு அறிவிப்பு

Date of Notification : 09.05.2017 
Commencement of submission of application through online mode : 10.05.2017
Last date for submission of application through online mode : 30.05.2017 | 
Date of Written Examination : 02.07.2017

திங்கள், 8 மே, 2017

6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்குஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க அமைச்சரிடம் கோரிக்கை

6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு , ஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க அமைச்சரிடம் கோரிக்கை .....

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு இலவச வகுப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ போட்டித் தேர்வுக்கு சென்னை பெருங்குடியில் நடைபெறும் கட்டணமில்லா 3 மாத சிறப்பு பயிற்சி வகுப்புக்கு தேர்வர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
தமிழக அரசின் 41 துறைகளில் உள்ள 1953 காலிப்பணியிடங் களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு நடக்கிறது. நேர்முகத் தேர்வு இல்லாத இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 26-ம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 6-ம்தேதி தேர்வு நடக்கிறது.இந்த போட்டித் தேர்வுக்காக சென்னையில் நீர்வழி அமைப்பின் சார்பில் கட்டணமில்லா சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 291, பர்மா காலனி 4-வது பிரதான சாலை, பெருங்குடி, சென்னை என்ற முகவரியில் நேற்று முதல் இந்த வகுப்புகள் தொடங்கின.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும். தொடர்ந்து 3 மாதங் களுக்கு நடைபெறும் இந்த கட்ட ணமில்லா வகுப்பில் ஆர்வமுள்ள தேர்வர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 94444 53588, 8056176788, 9840089865, 9543322147 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

TNTET PAPER 1 &2 OFFICIAL ANS KEY PUBLISHED NOW (COMMING SOON) click here to direct link

Image result for tntet official ans key image



  • TNTET PAPER 1& 2 TENTATIVE PRIVATE  ANS KEY - CLICK HERE

திட்டமிட்டபடி மே 12-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் உயிரி - விலங்கியல் பாடத்தில் பி வகை வினா 16, ஏ வகை வினா 14 ஆகியவற்றை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என இரு தேர்வர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அனைத்து மாணவர்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும், மதிப்பிடும் பணி முடிந்திருந்தால் மறு கணக்கீடு செய்து மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இந்த தீர்ப்புக்கு தடையாணை வழங்கியுள்ளது. எனவே, ஏற்கெனவே திட்டமிட்டபடி மே 12-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும்.

மீன்வள படிப்பில் சேர மே 10 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மீன்வள படிப்புகளில் சேர மே 10-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக மீன்வள பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்குழுதலைவர் இன்று வெளியிட்ட ஓர் அறிவிப்பில்,
''தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் இளநிலை மீன்வள அறிவியல் (பிஎப்எஸ்சி) படிப்பில் 110 இடங்களும், இளநிலை மீன்வள பொறியியல் படிப்பில் (பிஇ) 20 இடங்களும் உள்ளன. இந்த படிப்புகளில் 2017-18-ம் கல்வி ஆண்டில் சேர ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பதாரர்கள் மீன்வளப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை (www.tnfu.ac.in) பயன்படுத்தி மே 10 முதல்ஜுன் 10-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்திவிட வேண்டும். அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்படாது.
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜுன் 10-ம் தேதி ஆகும். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய 04365-240558 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'நீட்' தேர்வில் பிளஸ் 1 பாடத்தில் 50 சதவீத கேள்விகள்

'நீட்' நுழைவு தேர்வில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களில், சம அளவுக்கு கேள்விகள் இடம் பெற்றிருந்தன. தேர்வுக்கு தயாரானவர்களுக்கு, வினாக்கள் எளிதாக இருந்தன. மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நேற்று நடந்தது. இதில், நாடு முழுவதும், 11.35 லட்சம் பேர் எழுதினர். 
தமிழகத்தில், 88 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்துக்கும், 'நீட்' தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்ட பின், நடக்கும் முதல் தேர்வு என்பதால், மாணவர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. வினாத்தாள் எளிமையாக இருந்ததாக, பெரும்பாலான, சென்னை மாணவர்கள் தெரிவித்தனர். பிற மாவட்ட மாணவர்களில், பலர் தேர்வு கடினமாக இருந்ததாக கூறினர்.
பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களை புரிந்து படித்தும், பாடங்களை எழுதி பயிற்சி பெற்றவர்களுக்கு வினாத்தாள் எளிதாக இருந்தது. திடீரென, 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்து, எந்த பயிற்சியும் இல்லாதவர்களுக்கு, வினாத்தாள் கடினமாக இருந்தது. நேற்றைய வினாத்தாள், முந்தைய ஆண்டை விட எளிதாக இருந்த தாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். 
வினாத்தாள் குறித்து, போட்டி தேர்வுக்கு பயிற்சி அளிக்கும், 'டாப்பர்' நிறுவனத்தின் துணை தலைவர், ராஜசேகர் ராட்ரே கூறியதாவது: 'நீட்' தேர்வில், இயற்பியல், வேதியியலில் தலா, 45 கேள்விகள்; உயிரியலில், 90 கேள்விகள் இடம் பெற்றன. பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களிலிருந்து, சம அளவில் கேள்விகள் இடம் பெற்றன.பெரும்பாலான கேள்விகள், சிந்தித்து, புரிந்து பதில் எழுதும் வகையில் இருந்தன. வேதியியல் கொஞ்சம் கடினமாக இருந்தது. வேதியியலில், 87வது கேள்விக்கு, 'ஆர்' பிரிவு கேள்விக்கு வழங்கப்பட்ட விடை குறிப்புகளில், சரியான விடை இல்லை. இந்த ஆண்டு, 720 மதிப்பெண்களுக்கு, 180 கேள்விகள் இடம்பெற்றன. 380 முதல், 410 மதிப்பெண் வரை, 'கட் ஆப்' வர வாய்ப்புஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மனப்பாட கல்வியால் கடினமான தேர்வு
தேர்வு எழுதிய மாணவர்கள் கூறுகையில், 'சமச்சீர் பாடத்திட்டத்தில் மனப்பாடம் செய்து, தேர்வுக்கு வந்ததால், கடினமாக இருந்தது. கேள்விகள் குழப்பமாக இருந்தன. பாடங்களை முழுமையாக படித்திருந்தால், எளிமையாக இருந்திருக்கும். வேதியியல், இயற்பியல் பாடங்களிலிருந்து கடினமான கேள்விகள் இடம் பெற்றன. சமச்சீர் பாடத்திட்டத்தில் படித்ததால், தேர்வில் இடம் பெற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க திணறினோம்' என்றனர்.

அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் நவீன கழிப்பறை - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

அரசுப் பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் கட்டித்தர உத்தரவிட்டுள்ளேன் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

வரும் ஜூன் முதல்வாரத்தில் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்படுகின்றன. அதையொட்டி, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் மதுரையில் நடந்தது. இந்த பயிற்சி வகுப்ப்புக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசும்போது, தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசுப் பள்ளிகளையும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்துவேன் எனக் கூறினார்.
மேலும், கிராமப்புற பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நவீன கழிப்பறைகளைக் கட்டித் தர ஏற்பாடு செய்வேன் என செங்கோட்டையன் கூறினார்.
தமிழக அரசுப்பள்ளிகளில்நவீன அக்ழிப்பறைகளைக் கட்டினாலும் அவற்றுக்கு நீர் வசதி செய்து தரப்படாத கரணத்தால் பெரும்பாலான் அபள்ளிகளில் கழிப்பறைகள மூடியே கிடக்கின்றன.
மேலும் கழிப்பறைகளை சுத்தம் செய்ய சில பள்ளிகள் மாணவர்களையே பயன்படுத்துகின்றன என்பது துய்ரம் நிறைந்த நடைமுறை.முழுமையான சுகாதரத்தை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்
காமராஜரைப் பற்றிய 111 தகவல்கள்

1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச் சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம் ஞாபகசக்தி மிகுந்திருந்தது.

2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.

3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி, நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.
4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் சொல்லி இருக்கிறார்..

5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநில தலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில் காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்து போய் இருக்கிறார்கள்.

6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான், திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனி கட்டி போல கரைந்து மறைந்து விடும்.

7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில் உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாக சொல்லி ஆச்சரியப்படுத்துவார்.

8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காக ரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப் பெரிய தொகையாகும்.

9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல் காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி. எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக் கொள்வார்.

11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.

12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால் பெரிய கேக் கொண்டு வந்து வெட்ட சொன்னால், " என்னய்யா... இது?'' என்பார். கொஞ்சம் வெட்கத்துடன்தான் "கேக்'' வெட்டுவார்.

13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காமராஜர், "மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் தொழில்களை நிறைய தொடங்க வேண்டும்'' என்றார். இந்த உரைதான் இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது.

14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்து வந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும் "காமராசர்'' என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.

15. காமராஜருக்கு "பச்சைத்தமிழன்'' என்ற பெயரை சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.

16.காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும் அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டு விட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக் கொள்வார்.

17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர் ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்.

18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலை ஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.

19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது. அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234 பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில் பேசும் போதெல்லாம், "மக்கள் தலைவர்'' என்றே கூறினார்.

21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில் 8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தே காமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளை வைத்திருந்ததாக சொல்வார்கள்.

22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார். இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு அத்துப்படியாக இருந்தது.

23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன் முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார்.

24. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர் சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றி இருக்கிறார்.

25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர் ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரி சபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.

26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நல திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை. "மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள் இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.

27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்க காமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மா காந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின் இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது குறிப்பிடத்தக்கது.

28. காமராஜர் எப்போதும் "முக்கால் கை'' வைத்த கதர்ச் சட்டையும், 4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.

29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக் கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்து போட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம் பேனா வாங்கி கையெழுத்திடுவார்.

30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதிய உணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையே பயன்படுத்தினார்.

31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையே போட்டுக் கொள்வார்.

32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது. `எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம் இருந்ததில்லை' என்று நேரு குறிப்பிட்டதுண்டு.

33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை பற்றி மக்களுடன் விவாதிப்பார்.

34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள், இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக் ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர் சாவி ஆச்சரியப்பட்டார்.

35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து விட மாட்டார். நிதானமாக யோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்த செயலை எக்காரணம் கொண்டும் செய்து முடிக்காமல் விட மாட்டார்.

36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால் கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான் தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரண கிராமத்தான் போலவே பேசுவார்.

37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனார்.

38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.

39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி' என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி' என்றால் `கறுப்பு காந்தி' என்று அர்த்தம்.

40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை காமராஜரையே சேரும்.

41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.

42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டார்.

43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டு விட்டார்.

44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும், ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு விருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுத்தன.

45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச் சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.

46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும் காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள் முழுவதும் இருந்தார்கள்.

47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழை மாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக 1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால் ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள `ஓட்டல் எவரெஸ்ட்'டில் தான் தங்குவது வழக்கம். ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.

49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக் கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும் தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.

50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோ வரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகா வென்றெழுந்து பார் யுகப் புரட்சி' என்ற பாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப் பெற்றார்.

51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ கோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசி ஆச்சரியப்படுத்தினார்.

52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி, குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.

53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.

54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித் தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.

55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களை கொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப் போவதுமில்லை.

56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒரு பொறியல் அல்லது கீரை இவ்வளவுதான் சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில் ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால் விரும்பி சாப்பிடுவார்

57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும் எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொரு வேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்', `ஆகட்டும் பார்க்கலாம்' என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.

58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்பு டிரங்குப் பெட்டிதான்.

59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ். சீட் கேட்டு சிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர் `மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க' என அனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்.-ல் சேர்ந்தார்.

60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின் உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில் காமராஜரும் கலந்து கொண்டார்.

61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படி பேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார்.

62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல் நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராக இருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.

63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக் காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகிய மூவரும்தான்.

64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால் 1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.

65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள் அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதை செயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப் பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான் ஏற்படுத்தப்பட்டது.

67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும் பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது.

68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொரு பெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள் திறந்து வைத்து சாதனை படைத்தார்.

69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில், செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும் தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.

70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமே இரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும், தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.

71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது. விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே முதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.

72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ் மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சி காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.

73. பெருந்தலைவர் காமராஜருக்கு "பாரத ரத்னா" எனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது.

74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில்தான். 1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்ட போது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கிய செயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது, 3). நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது.

75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காக எதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும் நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப் பேசுவார்.

76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம் செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர் பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி, முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான்.

77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறிய போதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர் காமராஜர்.

78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர் ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்கு இலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள் கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும்.

80. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில் காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார்.
81. பெருந்தலைவர்காமராஜரின் முதலாம்ஆண்டு நினைவு நாளன்று15.7.1976-ல் இந்திய அரசு 25காசு தபால் தலையைவெளியிட்டது.

82. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெருந்தலைவர்காமராஜரின் திருவுருவப்படம்அப்போதைய குடியரசுதலைவர் என். சஞ்சீவிரெட்டியால் 1977-ம் ஆண்டுதிறந்து வைக்கப்பட்டது.

83. டெல்லியில் காமராஜரின்திரு உருவச் சிலைஅமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்ற மெரினாகடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்று தமிழக அரசால் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்' என்றுபெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் காமராஜர் நினைவாலயம்,அமைக்கப்பட்டுள்ளது.

85. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தை அவரதுநினைவுச் சின்னமாக தமிழக அரசு மாற்றியது.

86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர் மற்றவர்களுடையபணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான்.

87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், `கொஞ்சம்நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியைமோசமாகப் பேசினால், `அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!

88. மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம்கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச்சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!

89. சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!

90. பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன்அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். `நான்உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க' என்றுகமென்ட் அடித்தார்!

91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்துலால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது. தீர்க்கமான அரசியல் நோக்கு,தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவை செய்கிற ஆசை இருந்தது.

93. ஆட்சியில் இல்லாதவர்களின் குறுக்கீட்டை அவர் ஒரு போதும்அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்து விடுவார்.

94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களை சட்டவிஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்கமுற்படுவதையோ அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது.

95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாக எடுத்துக்கொள்கிற மனப்பக்குவம் கொண்டவர் காமராஜர்.

96.அவர் `ஆகட்டும் பார்க்கலாம்' என்றாலே காரியம் முடிந்து விட்டது என்றுஅர்த்தம். தன்னால் முடியாவிட்டால் `முடியாது போ' என்று முகத்துக்குநேராகவே சொல்லி அனுப்பி விடுவார்.

97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு எப்போதும்மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப் பார்ப்பதில்லை. அவர்கள்சொல்வதைக் கவனமுடன் கேட்டு ஆவண செய்வார்.

98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்க முடியும். யார்வேண்டுமானாலும் அவரிடம் நேரில் சென்று விண்ணப் பங்களைக்கொடுக்க முடிந்தது.

99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவே பிடிக்காது அவருக்கு.

100. சொற்களை வீணாகச் செலவழிக்க மாட்டார். ரொம்பச்சுருக்கமாகத்தான் எதையும் சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவேஅனாவசிய செலவையும் அவர் அனுமதிப்பதில்லை.

101. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார். ஆனால்'எல்லாம் எனக்கு தெரியும்' என்கிற மனோபவம் ஒரு போதும் அவரிடம்இருந்ததில்லை.

102. மாநிலத்தில் எங்கே எந்த ஆறு ஓடுகிறது. எந்த ஊரில் என்ன தொழில்நடக்கிறது. எந்த ஊரில் யார் முக்கியமானவர் என்பதெல்லாம் அவருக்குத்தெரியும்.

103. அரசுக் கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார். தேவைப்பட்டால்அவற்றில் திருத்தங்கள் செய்யத் தயங்குவதில்லை.

104. சொல்லும் செயலும் ஒன்றாக இல்லாவிட்டால் அவருக்குக் கோபம்வந்து விடும். உண்மையில்லாதவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டார்.

105. ஒரு தலைவனுக்குரிய எல்லாப் பண்புகளையும் அவர் முழுமையாகப்பெற்றிருந்தார். அதனால்தான்அவரால் கட்சியை ஆட்சியை மக்களைச்சிறப்பாக வழிநடத்த முடிந்தது.

106. சிலசமயம் இரவு படுக்கை இரண்டு மணிகூட ஆகி விடும்.முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதங்கள் அதிகாலை ஐந்துமணிவரையும் நீடிப்பதுண்டு. எத்தனை மணிக்குப்படுத்தாலும் காலைஏழுமணிக்கு விழித்துக் கொண்டு விடுவார் அவர்.

107. காமராஜ் மக்களுக்காகத் தீட்டிய ஒவ்வொரு திட்டமும் ஒரு மகத்தானகுறிக் கோளாகவே இருந்தது.

108. காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஆனால் ஒருமுறைகூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள் எழவிலை. கறைபடாதகரங்களுக்குச் சொந்தக்காரர் அவர்.

109. பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம். தம்முடையகருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில் இன்றளவும் நிலைத்துநிற்கிறார் காமராஜர்.

110. காமராஜர் எந்த வேலையை யும் தள்ளிப் போட்டதில்லை. அன்றையவேலைகளை அன்றே முடித்து விட்டு மறு நாளுக்கான வேலைத்திட்டத்தையும் ஒழுங்கு செய்து கொண்டு விடுவார்.

111. காமராஜருக்கு தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம் உண்டு. ஏதாவதுஒரு புத்தகத்தைப் படித்த பின்பே உறங்கச் செல்வார்.

பயிற்சிக்கு வர மறுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

பள்ளிகளில் ஒழுங்காக பாடம் நடத்தாத, பயிற்சிக்கும் வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டங்கள் மூலம், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. ஆண்டுதோறும், வார விடுமுறை நாட்களில், இந்த பயிற்சி அளிக்கப்படும். 
இதன்படி, கணிதம், அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, இலவச உணவு, இருப்பிடத்துடன், குறிப்பிட்ட மாவட்டங்களில், ஐந்து நாள் பயிற்சி இன்று துவங்குகிறது. மாவட்ட வாரியாக, 55 பேர் பங்கேற்க உள்ளனர். இந்த பயிற்சியில், தானாக முன்வந்து பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கோடை வெயில், தண்ணீர் தட்டுப்பாடு, பெண்களால் அலைய முடியாது என, பல காரணங்களை கூறி, 'பயிற்சிக்கு வர மாட்டோம்' என, பல ஆசிரியர்கள் அடம் பிடித்துள்ளனர். பயிற்சி திட்டத்தை கைவிடும்படி, ஆசிரியர்கள் சங்கங்கள் மூலம், அதிகாரிகளுக்கு நெருக்கடியும் கொடுத்துள்ளனர். 
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: அரசு பள்ளிகள் இருந்தால், ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கும். தரமான கல்வியை வழங்கினால் தான், அரசு பள்ளிகளும் இருக்கும். 
அதற்கு, ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி கள் அவசியம். அந்த பயிற்சியை, உணவு, இருப்பிடம், போக்குவரத்து செலவுடன், அரசே தருகிறது. தனியார் பள்ளிகளில், குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள், விடுப்பு நாட்களிலும், பள்ளிகளில் பணியாற்றுகின்றனர். தங்கள் சொந்த பணத்தில், வெளியே உள்ள மையங்களில் சிறப்பு பயிற்சி பெற்று, தரமான பாடம் நடத்துகின்றனர். 
ஆனால், அரசு பள்ளி ஆசிரியர்கள், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இடமாறுதல் போன்றவற்றில் மட்டுமே அக்கறையாக உள்ளனர். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள், 'பயிற்சிக்கும் வரமாட்டேன்; பாடம் நடத்தவும் மாட்டேன்' என, அடம் பிடிக்கக்கூடாது. அரசுக்கு ஒத்துழைப்பு தராவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஞாயிறு, 7 மே, 2017

SGT & SPL TEACHER TO BT PROMOTION PANEL 2017...

2012-2013 அனைவருக்கும் கல்வி இயக்கம் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி மையக் கட்டகம் (முதல் பருவம் 6,7,8 வகுப்புகளுக்குறியது)

VIம்  வகுப்பு மாணவர்களுக்கான MODULE பாடவாரியாக......

தமிழ்                                 பதிவிறக்கம் செய்ய ..........
ஆங்கிலம்                      பதிவிறக்கம் செய்ய ..........
கணக்கு                           பதிவிறக்கம் செய்ய ..........
அறிவியல்                     பதிவிறக்கம் செய்ய ..........
சமூக அறிவியல்        பதிவிறக்கம் செய்ய ..........

VIIம் வகுப்பு மாணவர்களுக்கான MODULE பாடவாரியாக......


தமிழ்                                 பதிவிறக்கம் செய்ய ..........
ஆங்கிலம்                      பதிவிறக்கம் செய்ய ..........
கணக்கு                           பதிவிறக்கம் செய்ய ..........
அறிவியல்                     பதிவிறக்கம் செய்ய ..........
சமூக அறிவியல்        பதிவிறக்கம் செய்ய ..........

VIIIம்  வகுப்பு மாணவர்களுக்கான MODULE பாடவாரியாக......

தமிழ்                                 பதிவிறக்கம் செய்ய ..........
ஆங்கிலம்                      பதிவிறக்கம் செய்ய ..........
கணக்கு                           பதிவிறக்கம் செய்ய ..........
அறிவியல்                     பதிவிறக்கம் செய்ய ..........
சமூக அறிவியல்        பதிவிறக்கம் செய்ய ..........

NEET-UG 2017: Download Answer Key, Question Paper & Solution

NEET-paper-download
EET-UG (National Eligibility cum Entrance Test) 2016 is a single entrance exam for MBBS and BDS Course in India, from next year it will be also replacing state entrance exam for AYUSH Courses. NEET-UG 2017 has been conducted in single phase on 7th May,2016. This year total 11,35,104 candidates will be appearing for exam, there has been 41.42% increase in the number of candidates from last year which registered overall 8,02,594 candidates. NEET-UG paper duration is of 3 hours and a total of 180 multiple choice questions are asked from Biology, Physics and Chemistry.

CLICK HERE - NEET 2017 QUES PAPER - "A/B/C/D" SERIES - P SERIES QUESTION PAPERS
CLICK HERE - NEET 2017 QUES PAPER - "P/Q/R/S" SERIES - B SERIES QUESTION PAPERS.

NEET 2017 TENATIVE ANSWER KEY

CLICK HERE - QUESTION PAPER CODE - B  RAO IIT ACADEMY
CLICK HERE - QUESTION PAPER CODE - R  RAO IIT ACADEMY
CLICK HERE - QUESTION PAPER CODE - S RAO IIT ACADEMY
CLICK HERE - QUESTION PAPER CODE - P AKSASH IIT ACADEMY
CLICK HERE - QUESTION PAPER CODE - P/Q/R/S BRILLIANT COACHING CENTRE