>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 7 மே, 2017

3-5-17 ல் நடைபெற்ற மாறுதல் கலந்தாய்வு கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்.


சனி, 6 மே, 2017

அறிவோம் அறிவியல் சகதியில் டிராக்டர் ஓடுவது எப்படி?

சகதியில் இரு சக்கர வாகனத்தை ஓட்ட முடியுமா? ஓர் அடி சகதியில்கூட ஓட்ட முடியாது. சகதியில் மாட்டிக் கொள்ளும் இல்லையா? ஆனால், வயல்களில் இரண்டு அடிக்கும் அதிகமான ஆழமுள்ள சகதியில் அவ்வளவு பெரிய டிராக்டர் சர்வ சாதாரணமாகச் சுற்றிச்சுற்றி வருவது எப்படி? டிராக்டர் ஏன் சகதியில் சிக்கிக் கொள்வதில்லை?
பத்துக் காகிதங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றை ஒன்றாகச் சேர்த்து வைத்துக்கொண்டு கை விரல்களால் துளையைப் போடுங்கள். துளையைப் போட முடிகிறதா? இல்லை அல்லவா? ஆனால், அதே பத்துக் காகிதங்களை, ஏன் இன்னும் பத்துக் காகிதங்களைக்கூடச் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். சிறு ஊசியால் துளையைப் போடுங்கள். துளையைப் போட முடிகிறது அல்லவா? எப்படி?!
ஊசியின் முனை கூர்மையாக இருப்பதால் அதைக் கொண்டு எளிமையாக ஓட்டை போட முடிகிறது. ஊசி மாதிரி நம் கை விரல்கள் கூர்மையாக இல்லை என்றுதானே நினைக்கிறீர்கள்? சரிதான், கூர்மையாக இருப்பதால்தான் துளையிட முடிகிறது. கூர்மையாக இருப்பதால் எப்படி துளையிட முடிகிறது?
இதற்குக் காரணம் அழுத்தமும், பரப்பளவும்தான். இதற்கு மட்டுமல்ல, ஊசியால் துணிகளைத் தைப்பது, ஊசியால் தைப்பது, டிராக்டர் சகதியில் உழவு செய்வது போன்றவற்றுக்கும் இதுதான் காரணம்.
முதலில் ஊசி எப்படி, கடினமான துணிகளையும், தாள்களையும் தைக்கிறது என்று பார்ப்போம். ஊசியைக் கொண்டு தாள்களைத் தைக்கும்போது நாம் ஊசி மீது கொடுக்கும் முழு அழுத்தமும், அந்த ஊசியின் கூர் முனை வழியே இறங்குகிறது. நாம் செலுத்தும் முழு விசையும் பரப்பளவும் மிகவும் குறைந்த பகுதி வழியே செல்கிறது. அதிக அழுத்தம் குறைந்த பரப்பின் வழியே செலுத்தப்படுவதால் அது தாக்கும் பொருளைத் துளையிட்டுச் செல்கிறது.
சாகுபடி வயல்களில் உழவு செய்யும் டிராக்டர்களின் அழுத்தம், அதன் பெரிய சக்கரங்களின் வழியே பகிர்ந்து அளிக்கப்படுகிறது. மிக அதிகமான அழுத்தமாக இருந்தாலும்கூட அது செலுத்தப்படும் பரப்பு அதிகம். அதனால், தரையின் மீது குறைந்த அழுத்தத்தையே அது தருகிறது. செயல், ஆற்றல், அழுத்தம், விசை ஒரு பொருளின் மீது செலுத்தப்படும்போது அது அமிழ்வதோ அல்லது மிதப்பதோ, அது செலுத்தப்படும் பரப்பளவைப் பொறுத்தே அமைகிறது.
மூன்று டன் எடையுள்ள டிராக்டர், ஒரு சதுர சென்டி மீட்டர் மீது சுமாராக 250 கிராம் அழுத்தத்தையே தருகிறது. இதன் காரணமாகத்தான் டிராக்டர் மணற்பாங்கான இடங்களில் எளிதாகப் பயணம் செய்கிறது.
இதேபோல பனிச்சறுக்கு விளையாட்டுகளின்போது ‘சறுக்கு மட்டைகள்’பயன்படுத்துவதைப் பார்த்திருப்பிர்கள். இதிலும்கூட இந்தத் தத்துவமே பயன்படுகிறது. பனி(ச்சறுக்கு) மலைகளில் நாம் தனியாக வெறும் கால்களில் நடந்தால் சதுப்பு நிலங்களில் கால்கள் உள்வாங்குவது போல அமிழ்ந்து மாட்டிக்கொள்வோம்.
ஆனால், பனிச்சறுக்கு மட்டைகளில் நாம் செலுத்தும் அழுத்தம், மட்டை முழுவதும் பரவலாகப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எனவே நாம் எளிதாகச் சறுக்கிச் செல்ல முடிகிறது.
குறைவான பரப்பின் மீது அதிக அழுத்தம் பயன்படுத்துகிற தத்துவத்தின் அடிப்படையில் ஊசிகள், கத்திகள் மரம் அறுக்கப் பயன்படும் அரம், கோடரிகள், அரிவாள் போன்ற கருவிகள் செய்யப்படுகின்றன.
அதிகப் பரப்பின் மீது, அதிக அழுத்தத்தைப் பரவலாக்கி மிதக்கச் செய்கிற தத்துவத்தின் அடிப்படையில் பல்வேறு வாகனங்களும் ( ராணுவ டாங்கிகள் உள்ளிட்ட) தயார் செய்யப்படுகின்றன. நாம் அன்றாடம் பார்க்கிற லாரிகள், பேருந்துகள், ரயில்கள் போன்றவைகூட இந்தத் தத்துவத்திலேயே இயங்குகின்றன.
(காரணங்களை அலசுவோம்)
நன்றி : தி இந்து

அக்னி - 5 ஏவுகணை சோதனைக்குத் தயாராகும் இந்தியா

புதுடில்லி : கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை சோதனையை நடத்த இந்தியா தயாராகி வருகிறது.
சோதனைக்கு தயார் :


அக்னி 5 ஏவுகணை வடக்கு சீனா வரை சென்று தாக்கும் திறனுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னி - 5 ஏவுகணையின் இறுதிக்கட்டப் பணிகள் ஒடிசா மாநிலம் வீலர் தீவில் நடைபெற்று வருவதாகவும், அதன் பேட்டரி மற்றும் உள்கட்டமைப்பில் சிறு மாறுதல்கள் மட்டுமே செய்ய வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னி - 5 ஏவுகணையை செலுத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் இந்த மாத இறுதியிலோ அல்லது ஜனவரி மாதத் தொடக்கத்திலோ ஏவப்பட வாய்ப்பிருப்பதாக பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவை குறிவைக்கும் இந்தியா :


அக்னி 1, 2 மற்றும் 3 ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு எதிரான பாதுகாப்பு நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட நிலையில் அக்னி 4 மற்றும் 5 ஆகியவை சீனாவுக்கு எதிரான பாதுகாப்பு நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அக்னி 5 ஏவுகணை சோதனை 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், 2013 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் நடத்தப்பட்டது. இந்த ஏவுகணையின் 3வது சோதனை 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் நடத்தப்பட்டுள்ளது. 
சூப்பர் பவராகும் இந்தியா :


அக்னி 5 ஏவுகணை 5000 முதல் 5500 கி.மீ.,க்கும் அதிகமான தொலைவில் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும். அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதனை செய்யும் பட்சத்தில் 'சூப்பர் எக்ஸ்க்ளூசிவ் கிளப்' நாடுகளின் பட்டியலில் சேர வாய்ப்புள்ளது. இதற்கு முன் அதிக தொலைவில் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமே உள்ளன.

2,000 பட்டதாரிகளுக்கு அரசு வேலை; மாதிரி வினா - விடை வெளியிடுகிறது ’தினமலர்’

Image result for TNPSC IMAGE

தமிழக அரசில், காலியாக உள்ள, 2,000 பணியிடங்களுக்கான, ’குரூப் - 2 ஏ’ தேர்வுக்கான (நேர்முகத் தேர்வு அல்லாதது) அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.


என்னென்ன பதவிகள்

தலைமை செயலகத்தில் பெர்சனல் கிளார்க், சட்டசபையில் ஸ்டெனோ டைப்பிஸ்ட், வருவாய் துறையில் உதவியாளர், கருவூலம் மற்றும் அக்கவுன்டன்ட், சிறைத்துறை, பதிவுத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மீன்வளத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை உதவியாளர்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி பிரிவு, விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்பு, ஸ்டேஷனரி அண்டு பிரின்டிங் துறையில் உதவியாளர், அமைச்சகம் சார்ந்த பிரிவுகள், சட்டம் தொடர்புடைய பிரிவுகளின் உதவியாளர், நிதித்துறை, சட்டசபை மற்றும் லோயர் டிவிஷன் கிளார்க், தமிழ்நாடு பாடநுால் நிறுவனத்தில் உதவியாளர் போன்ற பதவிகளில் மொத்தம் 1,148 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

இது தவிர, கூடுதலாக பிற துறை காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. வயது: 1.7.2017 அடிப்படையில், விண்ணப்பதாரர்கள், 18 - 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., / எஸ்.டி., உள்ளிட்ட பிரிவினர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. 

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். சில பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு, அத்துறை தொடர்புடைய பிரிவில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். முழுமையான விபரங்களை அறிய டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை 

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://tnpscexams.net/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

கடைசி தேதி: மே, 26. தேர்வு தேதி: ஆக., 6.

பாடத்திட்டம்

வினாத்தாள் 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 

1) தமிழ் மொழியை தேர்வு செய்பவர்களுக்கு, பொதுத்தமிழ் பிரிவில், 100 கேள்விகள், பொது அறிவு பிரிவில் (பொது அறிவு 75 + திறனறிவு தேர்வு 25), 100 கேள்விகள் என, 200 கேள்விகள் இடம் பெறும். 

2) ஆங்கிலம் தேர்வு செய்பவர்களுக்கு தமிழுக்கு பதிலாக, பொது ஆங்கிலம் பிரிவில், 100 கேள்விகள் இடம்பெறும். 
வினாக்கள் கொள்குறி அடிப்படையில் கேட்கப்படும். மொத்த கேள்விகள், 200; மதிப்பெண்கள், 300; ஒரு கேள்விக்கு, 1.5 மதிப்பெண் வழங்கப்படும். நெகடிவ் மதிப்பெண் கிடையாது. தேர்வு, 3 மணி நேரம் நடக்கும். 

தேர்ச்சி முறை

எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு கிடையாது என்பதால், தேர்வை நன்றாக எழுதினால் வேலை கிடைப்பது உறுதி. விண்ணப்பதாரர்கள் பயன் பெறும் வகையில், ’தினமலர்’ நாளிதழ், நாளை முதல் மாதிரி வினா - விடை வெளியிடுகிறது.

TN - GOVT LEAVE RULES FOR TEACHERS..


TN - GOVT LEAVE RULES FOR TEACHERS 

2017 MARCH & APRIL MONTH CURRENT AFFAIRS MATERIAL

சுருக்கெழுத்து பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தின் கீழ் மாணவர்களுக்கு சுருக்கெழுத்து பயிற்சி அளிக்க,சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுதொடர்பாக தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம், குறிப்பிட்ட பிரிவினர்களுக்காக பல்வேறு இலவச வேலைவாய்ப்புக்கான பயிற்சிகளை அளித்து வருகிறது.
இதன்படி, சுருக்கெழுத்துப் பயிற்சியை அளிக்க விரும்பும் நிறுவனங்கள், பயிற்சிக்கான உட்கட்டமைப்பு, இடம் போன்ற அடிப்படை வசதிகளை கொண்டிருக்க வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்கள் ஆங்கிலம், பொது விழிப்புணர்வு, எண்ணியல் திறன், தட்டச்சு, சுருக்கெழுத்து, அடிப்படை கணிணி பயிற்சி ஆகிய பயிற்சிகளை படித்துவிட்டு வேலை தேடும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த 60 மாணவர்களுக்கு அளிக்கும்.

தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனத்திற்கு தொழில்முறை கட்டணமாக ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் தலா ரூ.800 அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் 'துணை பிராந்திய வேலைவாய்ப்பு அலுவலர், தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம், குடிசை மாற்று வாரியக் கட்டடம், 56 மூன்றாவது மாடி, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை-600 004' என்ற முகவரியை அல்லது 044-2461 5112 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம். விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் ஜூன் 2 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Smart Ration Card - எந்த குறியீட்டிற்கு என்ன அர்த்தம்

❁ தமிழகம் முழுவதும் தற்போது பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. பழைய ரேஷன் கார்டுகளில் முன் பக்கத்தில் எந்த வகையைச் சேர்ந்த கார்டு இது என்று குறிப்பிடப்பட்டு இருக்கும்.

❁ அதேபோன்று தற்போது புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் என்று இங்கு பார்ப்போம். 
எப்படி கண்டறிவது? 

www.tnpds.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று பயனர் நுழைவு பகுதிக்குச் சென்று, பதிவுசெய்யப்பட்ட பயனாளர் என்ற இடத்தில் உங்களது கார்டுக்கு நீங்கள் அளித்த மொபைல் எண்ணை உள்ளிட்டு கடவுச்சொல்லை அனுப்பு என்ற தெரிவை தேர்வு செய்யவும். 

கடவுச்சொல் பெறும் முறை : 

❁ நீங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணிற்கு 7 இலக்க எண் குறுந்தகவலாக வருவதை அங்கீகாரம் என்ற இடத்தில் உள்ளிட்டுப் பதிவுசெய் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு அதிகபட்ச நேரம் 300 வினாடிகள் வரை எடுக்கும். ஒரு வேலை உங்களுக்குக் கடவுச்சொல் வரவில்லை என்றால் 1967 or 18004255901 என்ற வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகலாம். 

ஸ்மார்ட் ரேஷன் கார்டு வகையை கண்டறிவது எப்படி? 

❁ கடவுச்சொல்லை உள்ளிட்டு உள் சென்ற பிறகு ஸ்மார்ட் கார்டு செயலாக்கம் என்பதைத் தேர்வு செய்த பிறகு உங்களது ஸ்மார்ட் கார்டின் விவரங்கள் அனைத்தையும் காண முடியும். அதில் வலது பக்கத்தில் என்எப்எஸ்எ அட்டை வகை என்று குறியிடப்பட்டு இருக்கும். அங்கு உங்களது அட்டை வகை என்ன என்பதை நீங்கள் கண்டறிய முடியும். அங்கு காண்பிக்கப்படும் அட்டை வகைகளின் விளக்கம் என்னவென்று நாம் அடுத்துப் பார்ப்போம். 

குறியீட்டின் வகைகள் : 

PHHRICE : அரசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட ரேஷன் கடைகளில் அளிக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் நீங்கள் வாங்க முடியும். 

PHAA:35 கிலோ அரிசி மற்றும் அனைத்துப் பொருட்களும் கிடைக்கும். 

NPHH: NPHH அல்லது NPHH-L என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களும் கிடைக்கும். 

NPHHS : சர்க்கரை மட்டும் கிடைக்கும். 

NPHHNC : எந்தப் பொருட்களும் கிடையாது. ஒரு அடையாள அட்டையாக மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு வகை எவ்வாறு பிரிக்கப்பட்டது :
❁ ஸ்மார்ட் ரேஷன் கார்டு வகை அனைத்தும்
டிஎன்பிடிஎஸ் (வுNPனுளு) அதிகாரிகள் மூலமாக நீங்கள் பெறும் சம்பளத்தை வைத்து முடிவு செய்யப்படுகின்றது.
குறிப்பு :
❁ இதில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளை தொடர்பு கொள்ளலாம். அல்லது
அரசு உதவி மையம் எண்கள் 1967 or 18004255901-ஐ தொடர்பு கொள்ளலாம்.

ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்கும் வழிமுறை

Adhaar card and Pan linking option now 

activated on income tax website whereby

 now, name as per Adhaar card also to be 

given. Both get linked even if there is difference

 in name.

‘நீட்’ மதிப்பெண் கணக்கீடு மருத்துவ கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு மதிப் பெண்ணுடன் பிளஸ் 2 மதிப் பெண்ணையும் சேர்த்து கணக் கிட வேண்டும் என்ற கோரிக் கையை 3 வாரங்களில் பரிசீலித்து முடிவு எடுக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத் தில் ராமச்சந்திரன் என்ற மருத்து வர் தாக்கல் செய்த மனு: இந்திய மருத்துவ கவுன்சிலின் 2010 அறிவிக்கையில், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவித்துள் ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மட்டுமே நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும். எனவே, தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாண வர்களும் பயன் பெறும் வகை யில், நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுடன், பிளஸ் 2 மதிப்பெண்ணையும் சேர்த்து கணக்கிட உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் அடங்கிய அமர் வில் இந்த மனு மீதான விசா ரணை நேற்று நடந்தது. அப் போது நீதிபதிகள், ‘‘மனுதார ரின் கோரிக்கை குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் 3 வாரங்க ளுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்றுஉத்தரவிட்டு, விசார ணையை கோடை விடுமுறைக் குப் பிறகு தள்ளிவைத்தனர்.

'நீட்' தேர்வு: மூக்குத்தி, மோதிரம், பைஜாமாவுக்கு தடை

மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு நாளை நடக்கிறது.
இந்தத் தேர்வில் பங்கேற்போர், மூக்குத்தி, மோதிரம் போன்ற ஆபரணங்களும், குர்தா, பைஜாமா போன்ற உடைகளும் அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, இந்த ஆண்டு முதல், 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்நிலையில், 'நீட்' தேர்வு நாடு முழுவதும், நாளை நடக்கிறது. தமிழகத்தில், 80 ஆயிரம் பேர் உட்பட, நாடு முழுவதும், 11.35 லட்சம் பேர், இந்தத் தேர்வை எழுத உள்ளனர். தமிழகத்தில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நாமக்கல், வேலுார், திருநெல்வேலி உட்பட, நாடு முழுவதும், 103 நகரங்களில், 'நீட்' தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


 காலை, 10:00 மணிக்கு தேர்வு துவங்கி, பகல், 1:00 மணிக்கு முடியும்; 9:30 மணி வரை மட்டுமே, தேர்வறைக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். தாமதமாக வருவோருக்கு அனுமதி இல்லை. தேர்வு மைய வாசலில், 'நீட்' இணையதள நேரப்படி இயங்கும் கடிகாரம் இருக்கும். அந்த நேரப்படியே தேர்வுகள் நடக்கும்

 தேர்வறைக்குள், பாஸ்போர்ட் வடிவில் புகைப்படம் ஒட்டப்பட்ட, ஹால் டிக்கெட்; போஸ்ட்கார்டு வடிவில் புகைப்படம் ஒட்டப்பட்ட, 'புரோபர்மா' படிவம் மற்றும் தேர்வறையில் பதிவேட்டில் ஒட்டுவதற்கு, ஒரு பாஸ்போர்ட் வடிவ புகைப்படம் மட்டுமே அனுமதிக்கப்படும். தேர்வறையில் பேனா வழங்கப்படும்

 காலை, 7:30 மணி முதல், 9:30 மணி வரை, தேர்வறையில் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். 9:30 முதல், 9:45 மணி வரை, ஹால் டிக்கெட் சோதனை நடக்கும். 9:45க்கு வினா, விடைத்தாள் உறை வழங்கப்படும். 9:55க்கு உறையை பிரித்து, 10:00 மணிக்கு தேர்வை எழுதலாம்

 தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி, அசாமி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில், வினாத்தாள்கள் வழங்கப்படும். எந்த மொழிக்கு,

தேர்வர்கள்

விண்ணப்பித்தார்களோ, அதில் வினாத்தாள் வழங்கப்படும்; அதே மொழியில் பதில்

எழுதலாம்.

 பேனா, பென்சில், எழுத்தை அழிக்கும் ரப்பர், எந்த விதமான வெற்று அல்லது எழுத்துகள் கொண்ட காகிதம், புத்தகம், பேனா பவுச், லாக் டேபிள், எலக்ட்ரானிக் பென், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள். மொபைல்போன், பேஜர், இயர்போன், ஹெல்த் பேண்ட் உள்ளிட்ட மின்னணு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை

 தொப்பி, கைப்பை, தோள் பை, பெல்ட், கேமரா, வாட்ச், பிரேஸ்லெட், மோதிரம், காது வளையம், மூக்குத்தி, செயின், நெக்லஸ், ஜிமிக்கி உள்ளிட்ட அனைத்து வகை ஆபரணங்கள், தண்ணீர் பாட்டில், உணவு பொருட்கள், பாக்கெட் வகை நொறுக்கு தீனி போன்றவற்றையும் கொண்டு செல்லக்கூடாது

 'ஹாப் ஸ்லீவ்ஸ்' என்ற, அரை கை உடைய, மெல்லிய ஆடைகளை அணிந்து வர வேண்டும். பெரிய பொத்தான், பேட்ஜ், பூ போன்ற சிறப்பு அலங்காரம் கூடாது. சல்வார் மற்றும் பேன்ட் அணிந்து வர வேண்டும். ஹீல்ஸ் அதிகம் இல்லாத சாதாரண வகை, செருப்புகள் மட்டுமே அணிந்திருக்க வேண்டும். ஷூ, சாக்ஸுக்கு

அனுமதி கிடையாது.


அடையாள அட்டை அவசியம் : 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தோரில் சிலர், புகைப்படம் மற்றும் கையெழுத்தை மாற்றி பதிவேற்றியுள்ளனர். எனவே, ஹால் டிக்கெட்டில் புகைப்படம் மாறி வந்த தேர்வர்கள், தங்களின் அசல் ஆதார் அட்டை அல்லது அரசு வழங்கிய ஏதாவது ஒரு அடையாள அட்டையை, தேர்வு மையத்துக்கு கட்டாயம் எடுத்து வரவேண்டும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

♻750 PP FLASH NEWS ♻. தனி ஊதியம் பதவி உயர்வில் அடிப்படை ஊதியத்தோடு சேர்த்து வழங்கியது தவறு என மறு ஊதிய நிர்ணய ஆணை!!








மாணவர்களின் விபரங்களை நேரில் ஒப்படைக்க உத்தரவு !!